Everything posted by nunavilan
-
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகப் பகிரப்படும் போலிச்செய்தி!
இவரின் பேரும் போப்புக்கு பரிந்துரைக்கப்பட்டதாக அறிகிறேன். எவ்வளவு தூரம் உண்மை என தெரியவில்லை.
-
சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக உக்ரைன் குற்றசாட்டு - தடைகளையும் விதித்தது
வொலொடிமிர் ஜெலென்ஸ்கி சில சீனர்கள் ட்ரோன்களை ரஸ்யாவில் செய்கிறார்களாம். அதற்கான தொழில் நுட்பத்தை ரஸ்யா சீனாவிடம் இருந்து திருடி உள்ளதாம்.
-
இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை!
இந்த ஆண்டு 26 பேர் சுட்டுக்கொலை! [Thursday 2025-04-24 05:00] http://seithy.com/siteadmin/upload/gun-240425-seithy.jpg இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (22) வரையில் 112 நாட்களில், நாடு முழுவதும் 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த 37 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 23 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 14 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://seithy.com/listAllNews.php?newsID=332400&category=TamilNews&language=tamil
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையான் செய்த தவறு ஒன்றுமட்டுல்ல! http://seithy.com/siteadmin/upload/nalinda-250225-seithy.jpg கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியரை காணாமலாக்கியது மாத்திரமே பிள்ளையான் செய்த ஒரே தவறு என்று தீர்மானம் எடுத்துவிட வேண்டாம். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தடுப்புக்காவலில் வைத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சியினர் வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் மீதான விசாரணைகள் தொடர்பில் எதிர்த்தரப்பிலுள்ளவர்கள் ஏன் இந்தளவு தூரம் அச்சம் கொள்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களமே விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. விசாரணைகளின் அடிப்படையில் சிலர் கைதுசெய்யப்பட்டுமுள்ளனர். சிலரிடம் சாட்சிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பில் எதிர்த்தரப்பினர் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ போன்றோர் பதற்றத்தில் வெவ்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்திருந்தாலும் ஐந்தரை வருடங்கள் வரை விசாரணைகளை மூடிமறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நாங்கள் தற்போது விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளோம். இந்த ஆறு வருடங்களில் முறையான விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் தற்போது இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் உள்ளிட்ட பின்னணியிலுள்ள சகலத் தரப்பினரையும் நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால் கடந்த ஐந்தரை வருடங்களிலும் விசாரணைகளை மூடிமறைப்பதற்காக அமைச்சரவையினூடாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருசில அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்தாமலிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது. விசாரணை அதிகாரிகள் இடமாற்றம் செய்திருந்தார்கள். ஒரு சிலர் இந்த நாட்டில் இருக்க முடியாத நிலையை உருவாக்கியிருந்தார்கள். சாட்சிகளை மூடிமறைத்தார்கள். இந்தக் பின்னணியில் கடந்த ஆறு மாதங்களே விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின்போது ஏற்கனவே மூடிமறைக்கப்பட்ட கண்டுகொள்ளப்படாத விடயங்கள் வெளிப்பட்டுவரும் நிலையில் இவர்கள் அச்சம் கொள்வது மக்களுக்கு புரியுமென்று நம்புகிறோம். எனவே, விசாரணைகள் தொடர்பில் மக்கள் வீண் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பவம் தொடர்பில் புதிதாக சிலர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் அடிப்படையில் மேலும் சிலருக்கு அழைப்பாணை விடுக்கப்படலாம். குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இம்முறை முறையாக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது எதிர்த்தரப்பினரின் வீண் அச்சத்திலிருந்தே தெரிகிறது. கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் மாத்திரமே பிள்ளையான் கைதுசெய்யப்படாத நீங்கள் அறிந்து வைத்திருந்தாலும், அவருக்கு எதிராக மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல்வேறு சாட்சிகளும் கிடைத்து வருகின்றன. விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும். எனவே, பேராசிரியரை காணாமலாக்கியது மாத்திரமே பிள்ளையான் செய்த ஒரே தவறு என்று தீர்மானம் எடுத்துவிட வேண்டாம். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தடுப்புக்காவலில் வைத்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஒருசில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும். ஒருசில குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும். விசாரணைகளுக்கமைய இருவர் கைதுசெய்யப்பட்டும் இருக்கிறார்கள். எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கோரிவந்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினரும் திருப்தியடையக்கூடியவகையில் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விசாரணைகள் முறையாக இடம்பெறுகின்றன என்பதை திட்டவட்டமாக கூறமுடியும். உரிய நேரத்தில் பிரதான சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவோம். உதயகம்மன்பில போன்றவர்கள் அச்சம் கொள்கிறார்கள் என்பதற்காக அரசாங்கம் பதற்றமடையாது. உதய கம்மன்பில பிள்ளை யானை சந்தித்துவிட்டு வெளியிட்ட கருத்தினூடாக எவ்வாறான தகவலை வழங்கினார் என்பது சமூக புரிந்துணர்வுள்ள சகலருக்கும் தெரியும். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எதனையும் கூறவில்லை என்றே கம்மன்பில கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்படுகிறார்கள் என்றால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எதனையும் குறிப்பிடவில்லை என்று கூறுகிறார். கம்மன்பிலவின் அந்த தகவலிலுள்ள ஆழம் என்னவென்பதை குற்றப்புலனாய்வு விசாரணைகள் தொடர்பில் ஓரளவு ஞானம் இருப்பவர்களுக்கு புரியும். அது எங்களுக்கு அவசியமில்லை. இன்னும் சிறிது காலம் செல்லும்போது விசாரணைகளின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தின் பாரதூரம் எவ்வளவு காலத்திலிருந்து திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். அதுதொடர்பில் விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன’’ என்றார். http://seithy.com/breifNews.php?newsID=332402&category=TamilNews&language=tamil
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
எப்படி வாக்கு வீதம் மட்டும் ஏறிக்கொண்டு போகிறார்கள் என்பது ஐபிஎல் முடிவு மாதிரி உள்ளதாக்கும்?
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
ராகுல் கான் ,ஸ்டாலின் கான் இது பற்றி வாய் திறக்கவில்லையே!!!
-
ஜம்மு - காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: கர்நாடகா, ஒடிசா சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் பலி
நரேந்திரமோதி கொலையில் எவ்விதத்தில் குறைந்தவர். குஜராத்தில் முதலமைச்சராக இருந்து கொன்ற முஸ்லிம் மக்கள் எத்தனை? அமெரிக்காவால் ஒரு தடவை அங்கு வர தடை செய்யப்பட்டவர். மதத்தால் மதம் கொண்டு இரு மதங்கள் கொலை செய்து கொல்கிறார்கள் என எடுக்க வேண்டியது தான்.
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
எல்லோரும் முற்போக்காக சித்திப்பார்கள் எனில் உலகம் எங்கோ போயிருக்கும். சமுதாயம் என்பது பலதரப்பட்டவர்களையும் கொண்டது. அனைவரையும் உள்வாங்குபவனே உண்மையான தலைவன். இது பொதுத்தளத்துக்கும் பொருந்தும்.
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
Rajkumar Rajeevkanth யாரின் இறப்பையும் சிரித்துக் கொண்டாட எனக்கு மனது வராது. ஆனால் பலர் டான் ப்ரியசாத்தின் மரணத்தில் சிரிக்கின்றார்கள். 2019இல் இதே காலத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய வன்முறைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் இவர். சிங்களத் தேசிவாத மற்றும் பெளத்த பேரினவாத அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டாளாரக இவர் இருந்தார். காலிமுகத்திடல் போராட்டதின் மீது மே 9 மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி. அதே போல் இங்கு நாம் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம், 83ம் ஆண்டு இனவழிப்பின் நினைவு நாள் மற்றும் அனைத்து தமிழ் சார் நிகழ்வுகளையும் அடியாட்களுடன் வந்து தொடர்ச்சியாக குழப்பும் ஒருவர். நேரடியாக என்னை புxலி என்றும் பயங்கரவாதி என்றும் தொடர்ச்சியாக இவரின் அமைப்பினூடாக அச்சுறுத்திக்கொண்டே இருந்தார்கள். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொலீசை அச்சுறுத்தியமை தொடர்பில் பல குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒருவர். மொட்டுக் கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒருவர். இவருடன் சம்மந்தப்பட்ட வழக்குகளில் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்று தெரியப்படுத்தாமலே இறந்துவிட்டார்
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
அரசியல் கொலை போலுள்ளது.
-
ஈஸ்டர் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்கிறார் விஜயதாச ராஜபக்ஷ
முக்கிய அரசியல் கட்சிகளின் நோக்கம் அதுவல்லவே.
-
என்பிபி ஆட்சியில் இது தான் நடக்கிறது!
ஜே வி பி வடக்கு கிழக்கு உள்ளூராட்சியை கைப்பற்ற பல வேலைகளை பல முனைகளில் செய்கிறது.
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை
ஷோபாசக்தியின் பாலியல் வேட்டையும் பெண்கள் அமைப்பின் எதிர்ப்புக்குரல்களும் ! சில கேள்விகளும் !சோபா சக்தியை சுற்றி ஒரு மாயை கட்டப்பட்டிருந்தது. சோபா சக்தி திட்டமிட்டு பெண்களை காதல் வலையில் சிக்க வைக்கிறாராம்.
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
பிரியங்கா, கோபிநாத் விஜய் தொலைக்காட்சியை விட்டு போகிறார்களாம். விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் தொலைக்காட்சி வாங்க உள்ளதாம்.
-
வல்வெட்டித்துறையை கைப்பற்ற தீவிரமாக உள்ளது ஜேவிபி!
Nadarajah Kuruparan “கல்யாண வீடா இருந்தாலும் நான்தான் மாப்பிள்ளையா இருக்கனும் இழவு வீடாக இருந்தாலும் நான்தான் பிணமாக இருக்கனும்” அனுரவுக்கு முன் – அநுரவுக்கு பின் இலங்கை அரசியல் பகுதி 4. நடிகர் நெப்போலியனின் சினிமா வசனம் ஒன்று ஞாபகம் வருகிறது. “கல்யாண வீடா இருந்தாலும் நான்தான் மாப்பிள்ளையா இருக்கனும் இழவு வீடாக இருந்தாலும் நான்தான் பிணமாக இருக்கனும் எந்த இடமாயிருந்தாலும், மாலையும் மரியாதையும் எனக்கு தான் கிடைக்கனும்” என்ற சுயநல அரசியலில் சிக்கித் தவிக்கிறா்கள் தமிழ் மக்கள்… அநுரகுமார திஸ்ஸநாயக்கா போன்று ஒரு கவர்ச்சிகரமான, ஆளுமையுள்ள வசீகரமான ஒரு தலைவர் (Charisma leadership) தமிழ் மக்களிடம் இருந்து, ஏன் உருவாக முடியவில்லை தெரியுமா? அவ்வாறு உருவாக முற்படுபவர்களை, உருவாகி வருபவர்களை நம்மவர்கள் இழுத்து விழுத்திவிடுவார்கள் என ஒரு நண்பர் சொன்னார். ஹரினி அமரசூரிய பிரதமராக தெரிவான பின்பு அது குறித்த வாதப்பிரதிவாதங்கள் சிங்கள சமூக வலைத் தளங்களில் அனல் பறந்தன. அந்தப் பொறுப்பு விஜதஹேரத் அல்லது பிமல் ரத்னாயக்காவுக்கே கிடைக்க வேண்டியது, அவர்களே JVP யின் நீண்டகால உறுப்பினர்கள் மட்டுமன்றி அக்கட்சிக்காக பல தியாகங்களை செய்தவர்கள் என JVP யின் விசுவாசிகள் பலர் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் JVP யினதும் NPPயினதும் உயர் மட்டங்களின் முடிந்த முடிவாக ஹரினி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அதனை விஜித ஹேரத் உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களும் ஏகமனதாக ஏற்றார்கள். JVP யின் ஆரம்பகால உறுப்பினரும், அதன் தூண்களில் ஒருவர் என கருதப்படுபவரும், அக்கட்சியின் செயலாளருமான ரிவின் சில்வா தேர்தலில் போட்டியிடவோ, தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றில் பிரவேசித்து முக்கிய அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ முனையவில்லை. அனுரவை விடவும் மூத்த பலமான உறுப்பினர்கள் இருந்தும் அவரையே கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதி வேட்பாளராகவும் JVP முன்னிறுத்தியது. 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த JVPயும், அதன் முன்னணியான NPPயும், முன்னைய ஜனாதிபதி தேர்தலில் 5 லட்சங்களுக்கு குறைவான வாக்குகளை பெற்ற அநுரவும், 55 லட்சங்களுக்கு மேற்பட்ட வாக்குகளையும், 159 நாடாளுமன்ற ஆசனங்களையும் எப்படி பெற முடிந்தது? அவர்களின் இடதுசாரித்துவத்தினூடான தொடக்கமும், இடது மைய அரசியலின் ஊடான இன்றைய பயணமும், அதன் வழி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தியாகங்களும், சொந்த நலன்களை விட கட்சி நலனும், மக்கள் நலனும் என சிந்திக்கும் முறைமையுமே இமாலைய வெற்றிக்கு காரணமாயின. அவர்கள் ஏனைய தேசிய இனங்களின் உரிமைகளை மிதிக்கிறார்கள், கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள், நீதிமன்ற சென்று வடகிழக்கை பிரித்தார்கள், சுனாமி நிதியக் கட்டமைப்பை உடைத்தார்கள், தையிட்டி விஹாரை சட்ட விரோதம் என்பதனை ஏற்க மறுக்கிறார்கள் என்ற குற்றச்சா்டுகளை அடுக்கிச் செல்கிறோம் அந்த உண்மையை நான் உட்பட எவரும் மறுக்கமுடியாது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தமிழ் தரப்பிடம் உள்ள அரசியல் என்ன? நடமுறை என்ன? மூலோபாயம் என்ன? தந்திரோபாயம் என்ன? சர்வதேசத்தை கையாள்வதற்கான பொறிமுறை என்ன? தமிழ் மக்களை ஒன்று சேரச் சொல்வதற்கு முன் சுமந்திரனையும் சிறிதரனையும் ஒன்று சேருமாறு ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகிறார். அதனைச் சொல்ல அவருக்கு என்ன அருகதை என ஆதரவாளர்கள் முழங்கலாம். ஆனால் தமிழரசு, சுமந்திரன் – சிறிதரன் என இரண்டாக பிளந்திருக்கிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, கஜேந்திரகுமார் – மணிவண்ணன் என ஏற்கனவே உடைந்து நிற்கிறது. புலிகள், மேதகு, தமிழ்த்தேசியம் என முழங்குபவர்கள், அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சிதைத்து நிற்கிறார்கள். சரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதன் மூலம் அந்தஸ்த்து கௌரவம், வரப்பிரசாதங்களை அனுபவிக்கலாம் என குடுமிச் சண்டை பிடிக்கலாம். அட உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஆவது, ஒரு பொதுவான பலமான ஐக்கிய முன்னணியை உருவாக்கி வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் செய்திருக்கலாம் அல்லவா. நாடு அநுரவோடு ஊர் நம்மோடு என்பதனை அவர்களுக்கு அடித்துச் சொல்லியிருக்க முடியும் அல்லவா. முடிந்ததா? முடியவில்லையே… ஆயின் எப்படி ஊர் உங்களோடு நிற்கும், மக்கள் உங்களோடு நிற்பார்கள்? அவர்கள் எப்படி உங்களை நம்புவார்கள்? நீங்கள் கதைப்பதெல்லாம் போலித் தமிழ்த் தேசியம் என்றல்லோ கருதுகிறார்கள்… யாழ்ப்பாணத்தில் அனுரவுக்கு கைகொடுக்க காத்திருந்த பலரும், 90களிற்கு 2000 ஆண்டுகளுக்கு பின் பிறந்த படித்த, இளந் தலைமுறையினர் எனபதனை தமிழ்த்தேசிய போலிக் காவலர்கள் பார்க்கவில்லையா? 1983ன் பின் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக விளங்கிய முக்கிய மையம் யாழ் பல்கலைக்கழகம். வரலாற்று சிறப்பு மிக்க ஜனநாயகப் போராட்டங்கள் பலவற்றை, யாழ் பல்கலைக்கழகம் முன்னின்று நடத்தியிருக்கிறது. அதன் மாணவர் ஒன்றியங்களுக்கு விசேட சிறப்புகள் இருந்தன. ஆனால் இப்போ அந்தப் பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகள், மாணவர்கள், கல்விசாரா ஊழிய்கள் பலர் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் நிற்கின்றனர். ஏன் அவ்வாறு நிற்கின்றனர்? இவை பற்றி தமிழ் தேசியம் பேசும் போலிகள் உணரவில்லையா? JVPயும் பலமுறை உடைவுகளுக்கு உள்ளானது. றோகனவுக்கு பின் சோமவன்ச அமரசிங்க, ரில்வின் தலைமையில் கட்சி முன்னோக்கிச் நகர்ந்தது. ஆனாலும் கட்சியில் பலமாக இருந்த விமல் வீரவன்ச, நந்தன குணத்திலக, குமார் குணரட்ணம், மாலன், போன்ற பலர் உதிரிகளாகவும், கூட்டாகவும் பிரிந்து சென்று புதிய கட்சிகளை புதிய கூட்டுகளை உருவாக்கினர் அவர்களால் நிலைக்க முடிந்ததா? காரணம் ரில்வின், விஜிதஹேரத், லால்காந்த, அனுர, சுனில் ஹந்தும் நெத்தி, பிமல் ரட்ணயாக்கா, வசந்தசமரசிங்க போன்ற தளம்பலற்ற தலைவர்கள் கட்சியின் கட்டமைப்பை சிதைவடையாமல் காத்தனர். அதற்கு கிரமங்களில், அடிநிலை மக்களிடையே JVPயின் ஊடறுப்பும், இறுக்கான அடித்தளங்களை கொண்டு இருந்தமையும் காரணமாயின. தென்னாசியாவில், பலமான தொழிற்சங்கங்களை, வெகுஜன அமைப்புகளை, பொதுக் கட்டமைப்புகளை கொண்ட முக்கிய கட்சியாக JVP அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. விடுதலைப் போராட்ட இயங்கங்களின் அழிவுகளுக்கு பின் ஜனநாயக வழிக்குள் பிரவேசித்த இயக்கங்களுக்கோ, அன்றி பாரம்பரிய தமிழ் கட்சிகளுக்கோ இத்தகைய வெகுஜன கட்டமைப்புகள் உண்டா? கட்டுக்கோப்பான கட்சிகள் உண்டா? யுத்தத்திற்கு பின்னான தமிழ்த்தேசிய அலை பல தேர்தல்களில் தமிழ் கட்சிகளை காப்பாற்றியிருந்தன. ஆனால் தமிழத் தேசியத்தை பேசுகிறவர்கள், முன்னெடுப்பவர்கள், அதற்கு தலைமை தாங்குபவர்கள் பலர் போலிகள் சுயநலம் மிக்கவர்கள் என்பதை மக்கள் உணரத் தொடங்கிய போது அக்ட்சிகளின் வாங்கு வங்கிகள் வீழத் தொடங்கின. ஏற்கனவே ஆட்சி செய்த தென்னிலங்கை பேரினவாத கட்சிகளை விட அதன் தலைவர்களை விடவும், தமிழ் கட்சிகளை விடவும் அநுரவும், NPPயும் தேறலாம் என மக்கள் சிந்திக்கத் தொடங்கியதன் விளைவே அநுர சுனாமியில் தமிழ் அரசியல் அள்ளுண்டு போகக் காரணம். ஒப்பீட்டளவில், சரி பிழை, விமர்சனங்களுக்கு அப்பால் EPRLFல் இருந்து பிரிந்து சென்ற EPDP கிரமங்களில், அடிநிலை மக்கள் மத்தியில் தனக்கான வாக்குவங்கியை தக்க வைத்திருந்தது. மக்கள் சார்ந்த அமைப்புகள் சிலவற்றுடன் இறுக்காமன தொடர்பை கொண்டிருந்தது. கடந்த 3 தசாப்தத்திற்கும் மேலாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்த தோல்வி அடையாத நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானமைக்கு அடிநிலை மக்களுடன் அவருக்கும் கட்சிக்கும் இருந்த உறவே காரணமானது. தமிழ்த் தேசியக் கட்சிகளால் அவரை தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் ஆளும் அரசாங்கங்களுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியலை முன்னெடுக்கலாம் என்ற அடிப்படையை தவிர கோட்பாட்டு ரீதியான அரசியல் இன்மையால் (மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோசத்தை தவிர) கடந்த தேர்தலில் அவரது வாக்கு வங்கியும் உடைந்து போனது. அவர் ஆதரித்த தென்னிலங்கை அரசியல் கூட்டுக்களின் சிதைவு, மக்களின் நிராகரிப்பு, அவர் ஆகர்சித்த அரசியல் தலைவர்களின் தோல்விகள், அவரது அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருந்தன. அதனால் இனி ஆளும் அரசாங்கங்களுடன் பேச இடைத்தரகர் தேவையில்லை என மக்கள் உணர்ந்த போது டக்ளசின் - EPDPயின் அபிவிருத்தி அரசியலை அநுரவும், NPPயும் கையில் எடுத்த போது அவரது வாக்கு வங்கி சிதறிப் போனது. மறுபுறம் காணி, ஆலயங்கள் வீதி விடுவிப்புகள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பான விசாரணைகள், ஈஸ்டர் குண்டு்தாக்குதல் விவகாரம் என்ற மக்களை கவரும் விடயங்களையும் NPP கையில் எடுத்திருக்கிறது. இவற்றுடன், வடக்கில் இயங்காதிருக்கும் தொழிற்சாலைகளை இயங்க வைத்தல், பாலாலி விமானநிலையத்தை குறுகியகாலத்துள் சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல், மன்னார் ராமேஸ்வரம் படகுச்சேவையை ஆரம்பித்தல், காங்கேசன் துறை துறைமுகத்தினூடான கப்பற் சேவைகளை அதிகரித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி அரசியலையும் கையில் எடுத்திருக்கிறது. இவற்றின் மூலம் தமிழ் தேசிய அரசியலையும் NPP ஆட்டம் காண வைத்திருக்கிறது. ஆக JVP – NPPயின் அரசியலை கேள்விக்கு உட்படுத்துகின்ற ஒரு பலமான அரசியல் செல்நெறியை – பலமான முன்னணியை தமிழ் அரசியல் கொண்டிருக்க வேண்டும். போலித்தனங்களை, பித்தலாட்டங்களை கடந்து, முள்ளிவாய்காகல் பேரவலத்தை, கடந்த கால போராட்டத்தை, போரியல் வரலாற்றை, போரியல் விழுமியங்களை நினைவில் கொள்ளும் அதே நேரம், அந்தக் கடந்தகாலத்தின் துயர் சார் அனுபவங்களை படிப்பினைகளாக்கி நிகழ் காலத்தை செப்பனிட்டு எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். “கல்யாண வீடா இருந்தாலும் நான்தான் மாப்பிள்ளையா இருக்கனும் இழவு வீடாக இருந்தாலும் நான்தான் பிணமாக இருக்கனும் எந்த இடமாயிருந்தாலும் மாலையும் மரியாதையும் எனக்கு தான் கிடைக்கனும்” என்ற சுயலாப சுகபோக அரசியலையும் துறக்க வேண்டும்… தவறினால் மகாண சபையும் JVP – NPPயின் வசம் செல்வதனை கடவுளாலும் தடுத்து நிறுத்த முடியாது. காலத்துக்கு ஏற்ப நான் அரசியல் பேசுவதாக, கண்ணீர் வடிக்கும் தமிழ்தேசிய பற்றாளர்களும், எனக்கு அரசியல் சாயம் பூச துடிப்பவர்களும் நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பதனை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். #ஞாபகங்கள்
-
என்பிபி ஆட்சியில் இது தான் நடக்கிறது!
என்பிபி ஆட்சியில் இது தான் நடக்கிறது! வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பெண் வேட்பாளரின் மகனை பொலிசார், அவரது சாரத்தைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் முகநூலில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள வடமராட்சி கிழக்கு பகுதிக்கான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளராக ஜெகதேஸ்வரன் சற்குணாதேவி உள்ளார். அவர் பருத்தித்துறை பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பாளராகவும் இருந்தார். ஆனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மருதங்கேணி பொலிசாரால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சில நாட்களுக்கு முன்பு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அவர் செல்லவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு பொலிசார் அவரது வீட்டிற்கு வந்து ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டனர். அவர் இனி வேட்பாளர் இல்லை என்று கூறியபோது, கலந்து கொள்ளச் சொன்னால் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி அவரைத் திட்டினர். மேலும் எந்த காரணமும் கூறாமல் அவரது உடல்நிலை சரியில்லாத மகனைக் கைது செய்தனர். சற்குணாதேவியின் வலுவான மற்றும் ஊழலற்ற அரசியல் செயல்பாட்டிற்காக மருதங்கேணி பொலிசாரால் பலமுறை துன்புறுத்தப்பட்டுள்ளார். அவரது கணவர், மகன் மற்றும் எங்கள் கட்சியின் பிற உறுப்பினர்களை பொலிசார் தொடர்ந்து பொய் வழக்குகளில் சிக்க வைத்து விடுவிக்கப்பட்டனர் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முகநூலில் பதிவிட்டுள்ளார். https://seithy.com/breifNews.php?newsID=332359&category=TamilNews&language=tamil
-
ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும்!
ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும்! ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பியினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுகின்றது. அதில் யாழ், மாநகர சபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய பிரமாணத்தில், சத்தியப்பிரமான ஆணையாளரின் ஒப்பம் இல்லை, இளம் வேட்பாளர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிறப்பத்தாட்சி பத்திரங்களின் ஒப்பம் இல்லை உள்ளிட்ட காரணங்களுக்காக எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தோம், எமது வழக்கு உச்ச நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை எமக்கு கூறப்பட்ட காரணங்கள் போன்று, வேறு கட்சிகள் சுயேட்சை குழுக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அவர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றுக்கு சென்றிருந்தார்கள். அவர்களின் வேட்பு மனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. எமக்கு கூறப்பட்ட காரணங்களால் நிராகரிக்கப்பட்ட மனுக்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளமையால், அந்த கட்டளையை மேற்கோள்காட்டி எமது மனுக்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தோம். நீதிமன்ற கட்டளை உள்ள வேட்புமனுக்களையே ஏற்றுக்கொள்வோம். நீங்கள் 20ஆம் திகதிக்கு முன்னர் வழக்கு தொடருங்கள் என அறிவுறுத்தினார்கள். அதன் பிரகாரம் நாம் கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தோம். குறித்த வழக்கு திங்கட்கிழமை (21) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கால தாமதம் என காரணம் கூறி தேர்தல் ஆணைக்குழு மன்றில் எமது மனுக்களை விசாரணைக்கு எடுக்க ஆட்சேபணை தெரிவித்தமையால் எமது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளை வழங்கினால், அதே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடப்பாடு. நீதிமன்ற கட்டளைகள் இருந்தால் மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் என கூறி , எம்மை வழக்கு தொடருமாறு அறிவுறுத்திய பின்னர் நாம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் கால தாமதம் என கூறியுள்ளார்கள். இதனூடாக ஜனநாயகத்தை கேவலப்படுத்தி, அதனை குழி தோண்டி புதைத்துவிட்டு தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடாத்தவுள்ளது. இங்கே தேர்தல் ஆணைக்குழு, நீதியாக, நேர்மையாக,ஜனநாயக ரீதியாக சுயாதீனமாக செயற்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஜே.பி.வியின் காட்டாச்சியை எடுத்துக்காட்டுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே நாம் மக்களை எச்சரித்தோம். ஜே.வி.பியினர் இடதுசாரி கொள்கையை பின்பற்றுபவர்கள், அவர்கள் ஜனநாயகம் என்றால் என்ன விலை என கேட்க கூடியவர்கள். இன்று இடதுசாரி கொள்கையை பின்பற்றி ஆட்சி நடாத்தும் சீனா, கியூபா போன்ற நாடுகளில் என்ன நடக்கின்றது என எல்லோருக்கும் தெரியும். இந்த ஜே.பி.வி ஆட்சியாளர்கள் தேர்தல்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை கூட பாராளுமன்றில் சட்டங்களை இயற்றி செய்ய கூடியவர்கள். எனவே ஜனநாயகத்தை விரும்புவோர் ஜே.வி.பி யினரை மண்ணில் காலூன்ற விடாது துரத்தி அடிக்க வேண்டும் என்றார். https://seithy.com/breifNews.php?newsID=332360&category=TamilNews&language=tamil
-
வல்வெட்டித்துறையை கைப்பற்ற தீவிரமாக உள்ளது ஜேவிபி!
வல்வெட்டித்துறையை கைப்பற்ற தீவிரமாக உள்ளது ஜேவிபி! பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியை நம்பித் தமிழ் மக்களில் கணிசமானோர் வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் ஊரும் நமதே என்று சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று ஜே.வி.பி கடுமையாக முயற்சித்து வருகிறது. உலகில் ஈழத்தமிழினத்தின் முகவரியாக விளங்கும் வல்வெட்டித்துறையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக உள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார். ஜே.வி.பியினர் வல்வை மண்ணில் முகாமிட்டுத் தங்களை நம்புங்கள் கரை சேர்ப்போம் என்று முழங்குகிறார்கள். கப்பலோட்டிய நாங்கள் காகிதக் கப்பல்களில் பயணிக்க மாட்டோம் என்ற பதிலை வல்வெட்டித்துறை மக்கள் இந்தத் தேர்தலில் ஜே.வி.பியிடம் உரத்துச்சொல்ல வேண்டும் என்றும் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வல்வெட்டித்துறை நகரசபையில் போட்டியிடும் தமிழ்த்தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் வைக்கும் வைக்கும் கூட்டம் கடந்த சனிக்கிழமை (19) வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வல்வெட்டித்துறை மக்கள் அறிவுத்திறன் மிக்கவர்கள். தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்திலேயே நூற்றுக்கணக்கான கப்பல்களைக் கட்டித் திரைகடலோடித் திரவியம் தேடியவர்கள். இவர்களது கப்பல்கள்தான் இரண்டாம் உலக யுத்த காலத்தில் உணவுப் பொருட்களைச் சுமந்துவந்து இலங்கை மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்றின. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சிங்களத் தலைவர்களைக் காப்பாற்றித் தலைமறைவாகத் தமிழகம் கொண்டுசென்று சேர்ப்பித்தன. அன்னபூரணி அம்மாள் என்ற கப்பலின் கட்டுமான அழகில் மயங்கிய அமெரிக்கர்கள் அதனை வாங்கி வல்வை மண்ணின் மாலுமிகளின் உதவியோடு அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார்கள். வல்வெட்டித்துறை மக்கள் தொன்றுதொட்டுத் தினந்தினம் கடல் அலைகளோடு போராடி வாழ்ந்தவர்கள். இதனால், இயல்பாகவே திடகாத்திரம் உள்ளவர்களாகவும், மரண பயம் அற்றவர்களாகவும், வீரம் செறிந்தவர்களாகவும் திகழ்ந்தார்கள். ஆயுதப் போராட்டம் முளைவிடுவதற்கு முன்பாகவே அத்துமீறிய சிங்களச் சிப்பாய்களை நையப்புடைத்திருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே, வல்வை மண்ணில் இருந்து தனியாகக் கடற்படையொன்றை வைத்து ஆளும் அளவுக்கு தமிழினத்துக்கான தலைமை ஒன்று பரிணாமித்தது. ஆனால், இந்த வரலாறுகள் எதுவும் தெரியாததாகவே எமது இளைய தலைமுறை உள்ளது. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும், ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அது கருக்கொண்டதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே நீடிப்பதையும் எமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் எமது அரசியல் தலைவர்கள் தவறிழைத்துவிட்டார்கள். இதனாலேயே, காலங்காலமாகத் தமிழின விரோத நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்த ஜே.வி.பியினால் இலகுவில் இங்கு காலூன்ற முடிகிறது. பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற ருசியில் இப்போது ஊரும் நமதே என்று வந்து நிற்கிறார்கள். ஆனால், ஊர் எங்களதுதான் என்ற தெளிவான பதிலைத் தமிழ் மக்கள் இம்முறை ஜே.வி.பிக்கு சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://seithy.com/breifNews.php?newsID=332335&category=TamilNews&language=tamil
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது - அமைச்சரவை பேச்சாளர்
கோத்தபய, ரனிலின் குற்ற செயல்களுக்கு எந்த வித சாட்சியங்களும் இது வரை கிடைக்கப்பெறவில்லையா? அல்லது அவர்கள் குற்றவாளிகளே இல்லையா?
-
பிள்ளையான் - பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி
ஊழல் ஒழிப்பு அணி வன்னி பிரபாகரன் ஊழல் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கினார்! -முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா புகழாரம் பிரபாகரன் ஒருபோதும் ஊழல் மோசடிகளை ஆதரிக்காத ஒருவராகவே இருந்தார், நிதிமோசடி செய்பவர்கள், துரோகம் செய்பவர்களுக்கு அவர் அதிகபட்சமாக மரணதண்டனை வழங்கினார். கருணாவின் ஊழல்கள் தொடர்பில் அறிந்த பிரபாகரன் அவரை கிளிநொச்சிக்கு அழைத்த போது அவர் கொன்றுவிடுவார் என்று தப்பி ஓடிய நபர்தான் இந்த கருணா. விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இருந்தார், அவர் கருணாவை விட திறமையானவர், அவருடன் நாம் கிழக்கில் போரிட்டோம். பலகல்ல என்ற எமது இராணுவத் தளபதி ஜனாதிபதி சந்திரிக்காவுக்குத் தெரியாமல் கருணாவை கொண்டு வந்து கொழும்பில் ஒளித்து வைத்தார், அதனால் அரசு அவரை பணி நீக்கம் செய்தது. இதேவேளை பிள்ளையான் 150 பேருடன் சுங்காவில் பகுதியில் முகாமொன்றில் இருந் தார்.நாங்கள் அவர்களை எம்மிடம் சரண டையுமாறு கோரினோம். அவ்வாறு சரண டைந்தவர்களில் 80 பேர் வரையிலானோர் 13 வயதுக்கும் குறைவானவர்களாகவே இருந் தனர்.அவர்கள் ஐசிஆர்சியிடம் ஒப்படைத் தோம். எஞ்சியவர்களை நாங்கள் பாதுகாப்பு வழங்கி பார்த்துக்கொண்டோம். ஆனால் பிள்ளையான் யுத்தம் செய்யவில்லை, ஆட்கடத்தல்கள் செய்துள்ளார். ராஜ பக்ஷ காலத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கினோம். இப்போது இவர்களை வீரர்கள் என்று கம்மன்பில போன்றோர் கூறுகின்றனர். கம்மன்பில எதுவும் தெரியாதவர். யுத்த காலத் தில் எங்கேயே இருந்தவர் இப்போது வந்து ஏதோ கூறுகின்றார். பிள்ளையான்தான் யுத்தத்தில் உத்தரவுகளை வழங்கினாரா? இப்படியான ஒருவரை வீரர் என்று கம்மன்பில போன்றவர்கள் கூறுவது தெற்கில் உள்ளவர்களுக்கே வெட்கமானது. பிள்ளையானிடம் எவ்வளவுசரி பரித்துக் கொள்வதற்காக நீங்கள் வீரர் என்றும்,உங்களின் சட்டத்தரணி என்றும் கதைக்கின்றனர். இவர்கள் சேட் அணிந்திருந்தாலும் கீழே அணிந்துகொண்டுதான் இவ்வாறு கூறுகின்றனரா? என்று கேட்கவேண்டியுள்ளது பிள்ளையான் , கருணா இருவரும் ஊழல் செய்துவிட்டு புலிகளுக்கு பயத்தில் அங்கிருந்து ஓடி வந்தவர்கள், இவர்கள் வீரர்கள் இல்லை. என்று சரத் பொன்சேகா கடந்த கிழமை சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த வருடமும் விளையாடுவது பற்றி சிந்திக்கிறாராம்.😄
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர
சற்றுமுன் மைத்திரி வாக்குமூலதால் புதிய திருப்பம்
-
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
Published By: J.G.STEPHAN 10 DEC, 2020 | 04:53 PM சர்வதேச விசாரணை வேண்டாம் என்று அவர் சொன்னார் என்று சிலர் சொன்னதால் அதை இணைத்தேன்.
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர
மைத்திரியும் தனக்கு தெரியும் என ஒரு முறை சொல்லி இருந்தார். அவரை பிடித்து நாலு உதை கொடுத்தால் உள்ளது வரும். ஒருவரை ஒருவர் காப்பாற்ற நடாத்தும் நாடகம் என்பது தமிழ் மக்களுக்கு தெரியுமோ இல்லையோ உலகுக்கு தெரியும்.