Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. அவிஸ்கான் 4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை எடுத்ததுடன் அதில் 6 பந்துகள் (ஒரு ஓவர்) டொட் பந்துகளை போட்டு போட்டியையே மாற்றி விட்டார்.
  2. சிறிலங்காவை தமது கைக்குள் வைத்திருக்க இந்தியாவுக்கு உள்ள வழி இதுவாகும். இதன் மூலம் சீனாவை விட இந்தியாவை நம்பும் படி சிறிலங்காவிடம் இந்தியா (மோதி) நடக்க வேண்டியுள்ளது. தமிழ் நாடு அரசியல் ரீதியாக வடக்கு கட்சிகளை ஓரம் கட்டுவதும் மோதி போன்றவர்கள் தமிழ் நாட்டினையும் தமது கட்டுக்குள் கொண்டுவர செய்யும் வேலைகளை அனைத்து தமிழரும் அறிவர். ஈழ தமிழ் அரசியல்வாதிகள் படத்துக்கு மட்டும் லாயக்கானவர் என்பதை மோதி அறியாதவர் அல்ல.
  3. அப்போ போர் நடக்கவில்லை. அதற்கு பின் ஏற்பட்ட போரால் மக்கள் இடம் பெயர்ந்தனர். கொல்லப்பட்டனர். ஆகவே சனத்தொகை குறைந்தது. போர்க்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம்.
  4. மலிவான தொழிலாளர் சம்பளத்தால் தான் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளுக்கு தமது தயாரிப்புகளை செய்வதற்கு அனுப்பினார்கள். திருப்பி அவற்றை அமெரிகாவில் தயாரிக்க அவற்றை தயாரிக்க அதிக செலவாகும். இப்பொருட் களின் விலை சந்தையில் அதிகரிக்கும் என்பது வெள்ளிடைமலை.
  5. கனிமா!!!! கனிமா!!!!
  6. தேசிய மக்கள் சக்தியின் போலிமுகம் தையிட்டி திஸ்ஸ விகாரையில் அம்பலம்! [Saturday 2025-04-19 06:00] தொல்பொருள் சான்றுகள் எவையும் கண்டறியப்படாத யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரையை நிர்மாணிப்பதற்கு நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தோம். அதற்கு முரணாக அவ்விகாரை சட்டவிரோதமான முறையிலேயே நிர்மாணிக்கப்பட்டது என்ற உண்மை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதை இனவாதம் என ஜனாதிபதி கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 'திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவானதாகும். இருப்பினும் இந்தப் பிரச்சினையை மையப்படுத்தியதாக நிலவும் வடக்கு மற்றும் தெற்கு அரசியல் அகலவேண்டும். அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வுகாண இடமளிப்பதில்லை. அவர்களுக்கு இனவாதம் தேவை. எங்கேனும் தொல்பொருள் சின்னங்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றை தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில் நோக்கவேண்டுமே தவிர, அது இந்துக்களுக்கு உரியதா அல்லது பௌத்தர்களுக்கு உரியதா என இன, மத அடிப்படையில் நோக்கக்கூடாது' எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த தமிழர் விரோத இனவாத அரசாங்கங்களைப் போன்றதா? அல்லது உண்மையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப்புள்ளியா? என்ற விடயம் இதனூடாக வெளிப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். 'யாழ் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தொல்பொருள் சார்ந்த எந்தவொரு சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. மாறாக அது தனியார் காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அவ்விகாரையை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நாம் இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைத்ததுடன், இந்த சட்டவிரோத விகாரை நிர்மாணம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என ஏகமனதாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலாளர் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் குறித்த விகாரை நிர்மாணம் சட்டவிரோதமானது என ஏற்றுக்கொள்ளப்பட்டே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அந்த விகாரையை நிர்மாணிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, நிர்மாணப்பணிகள் முடிவடைந்ததன் பின்னர் நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படும் சகல கருத்துக்களும் அப்பட்டமான பொய்கள் மாத்திரமே' எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார். மேலும் உண்மைப் பின்னணி இவ்வாறிருக்கையில் தாம் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதிக்காகப் போராடுவதையும், அவர்களுக்கு ஆதரவாக நிற்பதையும் இனவாதம் என ஜனாதிபதி கூறுவாராயின், அவரது அரசாங்கமும் கடந்தகால இனவாத அரசாங்கங்களைப் போன்றுதான் செயற்படப்போகிறது என்பதே அர்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டார். 'ஏனெனில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்ததாகக் கூறியது. அவ்வாறிருக்கையில் இவ்விவகாரத்தில் சுமுகமான தீர்மானமொன்றை எடுக்காமல், ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொண்டிருப்பது ஏன்? தேசிய மக்கள் சக்தி முழுவதுமாக மக்கள் விடுதலை முன்னணியின் கைகளுக்குள்ளேயே இருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி என்பது நீண்டகாலமாக தமிழர் விரோத கொள்கையுடன் இனவாத அடிப்படையில் செயற்பட்டுவந்த அமைப்பாகும். எனவே தேசிய மக்கள் சக்தியின் போலி முகம் இந்த தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் அம்பலமாகியிருக்கிறது' எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார். https://seithy.com/breifNews.php?newsID=332204&category=TamilNews&language=tamil
  7. யுக்ரேனிய படை வீரர்கள் சரணடைகிறார்கள். அவர்களை வழி நடத்த தலைமை இன்மையால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார்கள். Forcefully conscripted soldier, basically kidnapped off the street is not an asset on the frontline but a liability. தெருவில் கடத்தப்பட்ட, கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிப்பாய், போர்முனையில் ஒரு சொத்தாக இல்லை, மாறாக ஒரு பொறுப்பாகவே கருதப்படுகிறார்.
  8. யாழ்பாணத்தில் சந்திரசேகர் குழுவினரின் சித்து விளையாட்டுக்கள் விரைவில் வெளியாகும்! தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகர் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (18) நடாத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன. குறிப்பாக தன்னுடைய அரசின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் வந்தால் தான் அபிவிருத்திக்கானான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மிரட்டலாக கூறுகின்றார். இது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் கலாசாரத்தை காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது மக்களையும் தனித்துவமான சபைகளினதும் அதிகாரங்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது. இவ்வாறு சிறுமைத்தனமாக ஜனாதிபதி செயற்படுவது வெட்கக் கேடானது. உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல. அவை உள்ளூர் வழங்களை கொண்டு மக்கள் தமது பிரதேசத்தின் ஆளுகையை முன்னெடுக்கும் ஒரு அபிவிருத்திக்கான அரசியல் கட்டமைப்பு. மக்களிடம் பெறும் சோலை வரியாலும், முத்திரை தீர்வை வரியாலும், நீதிமன்ற குற்ற தண்டப் பணங்கள், சந்தை குத்தகைகளூடாக கிடைக்கும் வருமானங்கள் கடைத் தொகுதிகளின் வரிகளூடாக கிடைக்கும் பெரு நிதிகளே சபைகளின் நிதி பெறும் வழிகளாக இருக்கின்றன. அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் தத்தமது வழங்களை கொண்டுதான் நிதியை ஈட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவே தவிர மத்திய அரசின் தயவில் உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படவில்லை என்பதை அநுரவும், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு உள்ளூர் அதிகார சபையின் ஆளுகைக்குள்ளேயே அப்பிரதேசத்தின் அனைத்து செயற்றிட்டங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டது. உள்ளூராட்சி மன்றங்கள் தனித்துவம் கொண்டவை. சபைகள் ஒவ்வொன்றும் ஒரு குட்டி அரசாங்கம். அதன் தவிசாளருக்கு அப்பிரதேச சபையின் உச்ச அதிகாரம் இருக்கின்றது. இதில் மக்கள் தெளிவு பெற வேண்டும். மேலும் சமூக நலன்புரி திட்டங்களை வழங்குவதாக கூறி சர்வதேச நடுகளிடம் இருந்து வரும் பல நூறு மில்லியன்களை பெற்று வெளிவிவகார அமைச்சு என்ற போர்வையில் அதன்னூடாக கையாண்டு சபைகளுக்கு நிதிகளை விடுவிக்கும் முறையை கையாண்டு வருகின்றன. அதன்படி தற்போது கிடைக்கும் நிதியை மத்திக்கு கையகப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதேவேளை பல பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அநுர அரசு, அதில் தோல்விகண்டு இயலாமல் போனதால் இப்போது அச்சுறுத்தும் செயற்பாடாக தன்னை முன்னெடுக்க முயல்கின்றது. அதிமட்டுமல்லாது சந்திரசேகரர் குழுவினர் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பிள்ளைகள். இந்த பால்குடிகள் ராஜபக்சர்கள் கூட செய்யாத அடக்கு முறைகளையும், அநியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்கின்றனர். எனவே மக்கள் இதில் தெளிவாக இருப்பது அவசியம். அதுமட்டுமல்லது தமிழ் மக்களின் பிரதேசங்களில் காலூன்றினால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பையும் இல்லாது செய்துவிடும் என்றார் https://seithy.com/breifNews.php?newsID=332168&category=TamilNews&language=tamil
  9. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்” - சீமான் ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன்பு கஞ்சி அருந்தியதோடு தொழுகையிலும் ஈடுபட்டார். இந்த சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஸ்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாட்டிலிருந்து விஜய் என்ற ஒரு முக்கிய நபர் இருக்கிறார் அவர் தவெக என்ற கட்சியை உருவாக்கியுள்ளார். இப்போது, அவர் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு மாற விரும்புகிறார். திரைப்படத் துறையில் இருந்த காலத்தில், அவர் தனது பல படங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார். பல்வேறு வழிகளில் முஸ்லிம்களை அவதூறு செய்ய முயன்றார். இப்போது, அவர் ஒரு அரசியல் முகத்தை முன்வைத்து முஸ்லிம் சமூகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார் சமீபத்தில் அவர் ஒரு இஃப்தார் விருந்தை நடத்தி, சூதாட்டக்காரர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளை அழைத்தார், இது தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தை எரிச்சலடையச் செய்துள்ளது. தமிழ்நாட்டு முஸ்லிம்கள் நடிகர் விஜய்யுடன் கைகுலுக்கவோ, சந்திக்கவோ அல்லது அனுதாபம் கொள்ளவோ கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும், நடிகர் விஜயை நம்ப முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், விஜய் இஃப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், விஜய்க்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த சீமான், “எனக்கு தம்பி விஜய்யை பற்றி தெரியும். அது மாதிரி உள்நோக்கம் வைத்துகொண்டு செய்யும் ஆள் அவர் கிடையாது. அவர் எதார்த்தமான ஆள். இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பார்கள், அதனால் அவர் போயிருப்பார். விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாதா? எனக்கே தனிப்பட்ட முறையில் தம்பியை தெரியும். கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக எங்கிருந்தோ பேசுகிறார்கள். இந்த மாதிரி குற்றச்சாட்டை எல்லாம் தம்பி விஜய் மீது வைக்காதீர்கள்” என்று கூறினார். nakkheeran“விஜய் மீது இந்த மாதிரி குற்றச்சாட்டுக்களை வைக்காதீர்கள்”...ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன...
  11. மற்றவர்களிடம் களவாடிக் கொடுக்கும் நத்தார் பாப்பாவாக மாறியுள்ளார் அநுரகுமார! நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பிரச்சார கூட்டமும் நேற்று (17) விளாவெட்டுவான் ராஜா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறுகின்றார் என்று நாட்டின் தேர்தல் ஆணைக்குழு கடிதம் எழுதிய முதலாவது சந்தர்ப்பம் இந்த தேர்தலில்தான் நடைபெற்றுள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களை மீறுகின்றார், தேர்தல் சட்டங்களை மீறுவதை நிறுத்துங்கள் என்று ஜனாதிபதி ஒருவருக்கு கடிதம் எழுதிய சந்தர்ப்பம் 2025ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலிலேயே நடைபெற்றுள்ளது. தற்போது கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பண்டிகை வருகின்றது. ஆனால் ஜனாதிபதி ஈஸ்டர் பண்டிகையினை நத்தார் பண்டிகை வருகின்றது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றாரோ தெரியாது. ஏன்னென்றால் நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் காலப்பகுதியில் நத்தார் பாப்பா வருவார், அவர் குழந்தைகளுக்கு பரிசுகள் எல்லாம் வழங்குவார். நத்தார் பாப்பா திரிவது போன்றுதான் இன்று ஜனாதிபதி வடகிழக்கு முழுவதும் திரிகின்றார். நத்தார் பாப்பாக மாறிவிட்ட அநுர குமார திசாநாயக்க கூறுகின்றார் மன்னாரையும் புத்தளத்தினையும் இணைக்கும் வீதியை உடனடியாக செய்யப் போகின்றேன் என்று. வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது உங்களுக்கு தெரியாதா மன்னார் புத்தளம் வீதியை அமைக்கவேண்டும் என்று. உள்ளுராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் நத்தார் பாப்பாவாக மாறிய பின்னர்தானா உங்களுக்கு தெரியவந்தது. ஜனாதிபதியின் சொந்த ஊரில் ரயில் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக ஆய்வு செய்வதற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னார் - புத்தளம் வீதியை அமைப்பதற்கான ஆய்வு செய்வதற்கு ஒரு 10 மில்லியன் ரூபாவினை அவர் ஒதுக்கியிருந்தால் அவர் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம். இவை அனைத்தும் தேர்தலுக்காக வழங்கப்படும் போலியான வாக்குறுதிகள். சில எருமை மாடுகளைப் போல் உள்ள அமைச்சர்கள்தான் ஜனாதிபதியை நத்தார் பாப்பா போல இழுத்துக்கொண்டு செல்கின்றார்கள். இன்னும் ஒரு கருத்தினையும் ஜனாதிபதி கூறியிருந்தார். சனத் ஜயசூரியவிடம் சொன்னாராம் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கட் மைதானத்தை உருவாக்குங்கள் என்று. அவ்வாறானால் சனத் ஜயசூரிய நாட்டின் ஜனாதிபதியா? அல்லது அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியா? இந்திய பிரதமர் இலங்கை வந்தபோது 1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தினை கைப்பற்றிய இலங்கை அணியை சந்தித்திருந்தார். அதன்போது சனத் ஜயசூரிய வடக்கில் ஒரு சர்வதேச கிரிக்கட் மைதானத்தினை அமைக்கவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைத்திருந்தார். நத்தார் பாப்பா என்றால் தங்களின் பரிசினையே வழங்கவேண்டும். மற்றவரின் பரிசினை களவெடுத்துக் கொடுப்பவராக இன்று அநுரகுமார திசாநாயக்க மாறியுள்ளார். இதுதான் இந்த நாட்டின் நிலைமை என்றார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், பட்டிப்பளை கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபைக்காக போட்டியிடும் வட்டார வேட்பாளர்கள் 10 நபர்களும் பட்டியல் வேட்பாளர்கள் 8 நபர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://seithy.com/breifNews.php?newsID=332170&category=TamilNews&language=tamil
  12. தேர்தல் விதிமுறைகளை மீறினார் ஜனாதிபதி - தமிழரசு முறைப்பாடு! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், மன்னார் நகர சபைக்குத் தமது தேசிய மக்கள் சக்தியினரை மக்கள் தெரிவு செய்தால், அந்த நிர்வாகத்தின் திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நாம் அங்கீகாரம் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்வோம். வேறு தரப்பிடம் நிர்வாகம் போனால் அவர்களின் திட்டங்கள் குறித்து ஒன்றுக்குப் பத்து தடவை பரிசீலித்தே முடிவெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு உரையாற்றி இருக்கின்றார். இந்த உரை அப்பட்டமாக தேர்தல் விதிமுறை மீறலாகும். இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணையத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட இருக்கின்றோம். மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம் எனவும் தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=332174&category=TamilNews&language=tamil
  13. திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.7,850 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல் சென்னை: திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.7,850 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆரணி சேவூர் ராமசந்திரன் (அதிமுக) பேசும்போது, மீட்கப்பட்ட திருக்கோயில் நிலங்கள், இன்றும் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கோயில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இது நிறுத்தப்பட்டு விட்டதால் பல யானைகள் இறந்துள்ளது என்றார். இதற்கு பதில் அளித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ.2800 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மட்டுமே மீட்கப்பட்டது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7,850 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.450 கோடி மதிப்பிலான 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆண்டுக்குள் ரூ.5,000 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் கட்டாயம் மீட்கப்படும். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்ல்களில் 28 யானைகள் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் பணியில் ஈடுபடுகிறது. அனைத்து யானைகளுக்கும் குளியல் தொட்டி அந்தந்த கோயில்களில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும், மாதம் 2 முறை வனத்துறை குழு மருத்துவ குழு இணைந்து யானைகளுக்கு உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகள் நடைப்பயிற்சி செய்யும் அளவிற்கு திருக்கோயில்களிலேயே பாதை அமைத்து யானைகளின் நலன் காக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இறந்து போன 10 யானைகளின் நினைவாக யானைகள் மண்டபத்தை கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருத்தணியில் யானை மண்டபம் இந்த மாத இறுதியில் திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். திருப்பதிக்கு நிகராக திருசெந்தூர் மாறும்.. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் நேற்று கூறும்போது, கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.22 கோடியுடன் கூடுதலாக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து திருசெந்தூர் பக்தர்கள் தங்கும் விடுதி ஓராண்டுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்து விட்டது. திருச்செந்தூர் கோயிலுக்கு பெருந்திட்ட பணிகளுக்கு அனுமதி பெற்று 440 கோடி ரூபாய் அளவுக்கு திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூரை வடிவமைக்கும் சிற்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார். https://www.dinakaran.com/dmk_4-yearrule_asset_recovery_ministersekarbabu/
  14. அன்புமணியுடன் ராமதாஸ் சமரசமா? எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு திண்டிவனம்: ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவால் அன்புமணியுடன் சமரசமாகி விட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கை : மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு நாள் மாநாட்டை, இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்த வேண்டும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணமும், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் பயணமும், இறை நம்பிக்கைக் கொண்ட இந்துக்களுக்கு காசி யாத்திரையும் புனிதமானவை. பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருநாள் சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் கடற்கரை மணற்பரப்பில் கூடுவது தான் புனித யாத்திரை. இந்த ஒரு பயணம் கொடுக்கும் உற்சாகம் பாட்டாளிகளுக்கு அடுத்த ஓராண்டுக்கு சுறுசுறுப்பாக பணியாற்ற வகை செய்யும். இதுவரை நடத்தப்பட்ட 20 மாநாடுகள் எவ்வாறு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் நடத்தப்பட்டனவோ, அதை விட 100 மடங்கு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் இந்த ஆண்டு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் எனது கனவு ஆகும். அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராமங்களில் இருந்தும் அணி அணியாய் வாகனங்கள் புறப்பட வேண்டும். அனைத்தையும் விட மிகவும் முக்கியம் மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும். பயணப் பாதையில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மாமல்லபுரம் மாநாட்டுத் திடலில் பாட்டாளிகளின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் யார் என்று ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலடியாக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நானே தலைவராக தொடர்வேன் என்று அன்புமணி தெரிவித்தார். தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதலால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம், பனையூர் என இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று சமரசம் செய்து வந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பாமகவில் சலசலப்பு சரியாகிவிட்டது. விரைவில் ராமதாஸ், அன்புமணி ஒன்றாக பேசுவார்கள்’ என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சித்திரை முழுநிலவு நாள் மாநாடு ஏற்பாடுகளை அன்புமணி பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தார். இந்நிலையில், மாநாட்டு குழுத்தலைவராக அன்புமணியை நியமித்து இருக்கிறேன். பாட்டாளிகள் ஆவலுடன் வர வேண்டும் என்று ராமதாஸ் அழைப்பு விடுத்து உள்ளார். இதனால் அன்புமணியுடன் ராமதாஸ் சமரசமாகி விட்டாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதலால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம், பனையூர் என இரண்டு பேரின் வீட்டிற்கும் சென்று சமரசம் செய்து வந்தனர். https://www.dinakaran.com/anbumani_ramadoss_compromise/?utm_source=izooto&utm_medium=on_site_interactions&utm_campaign=Exit_Intent_Recommendations
  15. Trump and strategy of tariffs Paresh Nath, U.T. Independent, India Trump threatens 25% tariffs on Mexico and Canada Dario Castillejos, Oaxaca, Mexico Tariffs on the neighbor Angel Boligan, El Universal, Mexico City, Www.caglecartoons.com
  16. செய்திகள் கம்மன்பிலவிடம் கவலையுடன் சொல்லி அழுத பிள்ளையான்! இலங்கை ஆட்சியாளர்கள் தன்னை நன்றாக பயன்படுத்தி விட்டு இப்போது கைவிட்டு விட்டார்கள் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். உதய கம்மன்பில பிள்ளையானை சந்திக்கும்போது அரசாங்கத்தின் பழிவாங்கல்கள் குறித்து பிள்ளையான் ஆழ்ந்த கவலையை கண்ணீருடன் வெளியிட்டு கவலையுடன் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் குறித்தும் இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கம்மன்பிலவுக்கு விளக்கமளித்த பிள்ளையான் அரச சாட்சியாளராக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு தமக்கு அழுத்தங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். கடத்தல் விவகாரம் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்ட போதிலும் இப்போது ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தை தன்னுடன் கோர்ப்பதற்கு விசாரணையாளர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் உதய கம்மன்பிலவிடம் தெரிவித்திருக்கிறார். ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போதும் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறும் பிள்ளையான் இந்த சம்பவம் தொடர்பில் தான் சிலரை காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் இதனால் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் வெளிவந்துள்ள தகவல்களை முற்றுமுழுதாக இதன்போது நிராகரித்துள்ளார். அரசாங்கத்தின் விசாரணைகள் அரசியல் ரீதியாக மேற்கொள்ளுப்படுவதாகவும் போர்க் காலத்தில் தன்னை நன்கு பயன்படுத்திய இதே தரப்பினர் தற்போது அரசியல் காரணங்களுக்காக தன்னை பழிவாங்குவதாகவும் இது தொடர்பில் ஜனநாயகத்தை விரும்பும் தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது விசாரணை அறையில் உறங்குவதற்கு கூட ஒழுங்கான வசதிகள் இல்லை என்றும் தரையில் படுத்து உறங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் உதய கம்மன்பிலவிடம் சுட்டிக்காட்டிய போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸாரை இந்த விடயத்தில் கடிந்துகொண்ட கம்மன்பில்ல உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வர உதவிய பிள்ளையானுக்கு இப்படியான அநீதிகளை செய்வது நியாயமா ?இப்படியானவருக்கு படுக்கை வசதி கூட செய்யாமல் இருப்பது மோசமான நடவடிக்கை இல்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து பிள்ளையானிடம் கேட்டு அறிந்து கொண்ட உதய கம்மன்பில இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9/
  17. போராட்டங்களை கையாள என்பிபிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவைப்படுகிறது! [Wednesday 2025-04-16 07:00] http://seithy.com/siteadmin/upload/suresh-premachandran-051124-seithy.jpg தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். என்.பி.பி. ஜே.வி.பி இரண்டும் ஒன்றுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. கொள்கை ஒன்றுதான். சர்வதேசத்தின் உதவிக்கான வேறு வேறு தோற்றப்பாட்டை காடுகின்றனரே தவிர வேறெந்த விடயமும் இல்லை. கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் தமிழ் மக்களை மிரட்ட நினைத்தால் அது அவரது இயலாமையாக இருக்கும். ஏனெனில் தமிழ் தரப்பு இவரைப்போல பலரை, பலரது மிரட்டலை கண்டது. இவரது புலுடா இனியும் தமிழ் மக்களுடம் எடுபடாது. கடந்த தேர்தல் காலத்தில் சொன்னதை செய்வதற்கு அவர்கள் தற்போது தயாராக இல்லை. ஏனெனில் தங்களுக்கு எதிராக வர இருக்கின்ற மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் தேவையாக இருக்கின்றது. அத்துடன் அபிவிருத்தி பற்றி பேசும் இவர்கள் புதிதாக எந்தவொரு அபிவிருத்தியையும் செய்யவில்லை. குறிப்பாக பொய் மட்டுமே இவர்களது செயற்பாடுகளாக இருக்கின்றது. சொல்லாடல்கள் வித்தியாசமாக இருக்கின்றதே தவிர உள்ளடக்கங்கள் ஒன்றுதான். குறிப்பாக கடந்த அரசுகளின் நிலைப்படே இவர்களது பயணமும் தொடர்கின்றது. குறிப்பாக புத்த விகாரை கட்டுமாணங்கள் தொடர்கின்றன, கைதிகள் விடுவிக்கப்படவில்லை, இதை தடுக்கவும் இல்லை. யாழ் . மாவட்டத்தில் இருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் எதை செய்தோம் என்பதை மக்களுக்கு கூறவேண்டும் என மேலும் தெரிவித்தார். http://seithy.com/breifNews.php?newsID=332084&category=TamilNews&language=tamil
  18. சிறுபான்மை மக்களுக்கான நீதியை பெறவே முடியவில்லை: சர்வதேச விசாரணை வேண்டும் - சுமந்திரன்Published By: J.G.STEPHAN 10 DEC, 2020 | 04:53 PM (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/140568/sfkghjghj.jpg அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதியானதாக இல்லை என்பது சபையில் பேசியவர்களின் கருத்தில் தெரிகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. அதேபோல் மனித உரிமை வழக்குகள் மாகாண மேல் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் குறித்த முரண்பாடுகள் எமது நாட்டின் மீதான தவறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறும்பான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. தசாப்த காலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளது. அரசியல் தலையீடுகள் நீதிமன்றங்கள் மீது பிரயோகிக்கப்படுவதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகின்றது என கருதுகிறேன். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்பட்டும் வருகின்றது. இது குடியுரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரையில் நீட்டிக்கப்படுகின்றது. அண்மைக்கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டாலும் கூட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் எழுகின்ற நேரங்களில் எல்லாம் நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அவரால் அதனை மாத்திரமே செய்ய முடியும். முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் குறித்த பிரச்சினை எழுந்த நேரமும் அதனையே அவர் செய்தார். பெரும்பான்மையின் நிலைப்பாட்டுக்கு அமைய நியாயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோல் வேறு சில காரணிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பவர்கள் அரச பாதுகாப்பிலேயே உயிரிழக்கின்றனர் என்றால் அது பாரிய பிரச்சினையாகும். அண்மையில் மஹர சிறையிலும் கைதிகள் கொல்லப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ சிறையில் 27 பேர் கொல்லப்பட்டனர் . 2012 வவுனியா சிறையில் நிமலரூபன், டில்ருக்ஷன் கொல்லப்பட்டனர். இவர்கள் அடித்து கொல்லப்பட்டனர். கை கால்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதற்கான சாட்சியங்கள் உள்ளது. இவ்வாறு பட்டியலை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியும். அரசாங்கம் ஜனநாயகத்தை உயரியதாக கருதுவதாக கூறுகின்றது. சிறந்த நீதிமன்ற கட்டமைப்பு உள்ளதாக கூறுகின்றது. அவ்வறு இருந்தும் எவ்வாறு சிறைக்குள் கொல்லப்படும் நபர்கள் குறித்த உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்காது இருக்க முடியும். நீதிமன்ற சுயாதீனமே இல்லாத ஒரு நாட்டிற்கு எதற்கு நீதி அமைச்சர் என்ற கேள்வியே எழுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்பது மிக மோசமான நீதி கட்டமைப்பாகும். திருகோணமலை ஐந்து மாணவர் கொலை விவகாரத்தில் நீதி எங்கே? கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விடயத்தில் என்னவானது? சிவநேசன் விடயத்தில் என்னவானது? ரவிராஜ் விடயத்தில் நீதி எங்கே? பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விசாரணைகள் என்னவானது? லசந்த விக்கிரமதுங்க, கீத் நோயர், பிரகீத் எக்னளிகொட, 34 தமிழ் ஊடகவியலாளர்கள் காணமால் போனமை, கொல்லப்பட்டமை குறித்தெல்லாம் ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை. ஒரு சிலரது கொலைகளில் பாதுகாப்பு படையினர் தொடர்புபட்டுள்ளனர். இந்த விடயங்களில் குறைந்த பட்சம் விசாரணைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஜனநாயக, சட்ட வல்லமை கொண்ட நாடென்றால் ஏன் இவ்வாறு நடக்கின்றது. எனவே நீதிமன்றம் மீது நம்பிக்கை எமக்கு இல்லை என நேரடியாக எம்மால் கூட முடியும். இதற்கான எம்மை நீங்கள் திட்ட முடியாது. இந்த நாட்டில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச குற்றங்கள் பல நடந்துள்ளது. அதனால் தான் சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம். சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கோருகின்றோம். அதனை நீங்கள் வேண்டாம் என கூற முடியாது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் வெளியாகிவிட்டது. நாம் புதிதாக கூறத் தேவையில்லை, நீங்களே அதனை கூறிக்கொண்டுள்ளீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/96329
  19. புதுமை பெண்ணில் இருந்து காதல் மயக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.