Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. இவர் இந்தியா அடிக்க போகிறார்கள் என நினைத்து மனைவி பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார்.
  2. இப்போ சாணக்கியன் வடக்கில் பீரங்கி பிரச்சாரம் செய்கிறார். தேர்தலின் பின் பார்க்கலாம் வெற்றியா தோல்வியா என?
  3. ஜிஎஸ்பி பிளஸ் வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள்! 00] http://seithy.com/siteadmin/upload/mano-eu-300425-seithy.jpg ஜிஎஸ்பி பிளஸ் வரி சலுகையை வழங்க நிபந்தனைகளை விதியுங்கள். இதுதான் தமிழரின் எதிர்பார்ப்பாகும் என ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்புக் குழுவிடம் எடுத்துரைத்துள்ள மனோ கணேசன் தலைமையிலான குழு எழுத்து மூல ஐந்து அம்ச கோரிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளது. சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் சலிப்பு அடைந்து விட்டார்கள். இலங்கை தொடர்பில் ஐ.நாவில் பிரதான பங்களிப்பு செய்த அமெரிக்காவும் இன்று ஒதுங்கி விட்டது. இந்நிலையில் எமது கடைசி சர்வதேச நம்பிக்கை ஐரோப்பிய ஒன்றியம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் இலங்கை விவகாரத்தை அணுகுங்கள் என்றும் எடுத்துரைத்துள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் உடனடி இடை நிறுத்தம், புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல் உடனடி ஆரம்பம், உண்மை ஆணைக்குழு (Truth Commission) மூலம் காணாமல் போனோர் மற்றும் பொறுப்பு கூறல் விவகாரங்களின் உடனடி அர்த்தப்பூர்வ நடவடிக்கை, நீண்டகால தமிழ் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை, நவீன அடிமைத்துவம் அம்சங்களைக் கொண்ட மலையக தமிழர் சமூகத்துக்குள் வரும் பெருந்தோட்ட வாழ் மக்களை ஐரோப்பிய கண்காணிப்பு வலயத்துக்குள் கொண்டு வந்து அவர்களது காணி உரிமை உட்பட வாழ்வுரிமைகளை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பான முன்மொழிவுகளை எழுத்து மூலமாகவும், உரையாடல் மூலமாகவும், இலங்கைக்கு வரிச் சலுகையைத் தொடர்ந்து வழங்கலாமா? என ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஜீஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பு குழுவினரிடம் நாம் நேரடியாக சமர்ப்பித்தோம். இந்த நிபந்தனைகளை திகதி குறித்து நிறைவேற்றினால் மாத்திரமே இலங்கைக்கு ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP+) வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் வரிச் சலுகை கண்காணிப்புக் குழுவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவிற்கும் இடையில் சந்திப்பு உரையாடல் கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன் எம்.பி, பிரதி தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி, ஜனநாயக மக்கள் முன்னணியின் (ஜ.ம.மு.) சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி, ஜ.ம.மு. சட்ட விவகார செயலாளர் சக்சின் கணேசன் ஆகியோரும், ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் தூதுவர் கார்மென் மொரேனோ, அரசியல் செயலர், கரோலினா மற்றும் ஐந்து பேர் கொண்ட ஜிஎஸ்பி ப்ளஸ் கண்காணிப்பு ஆகியோரும் கலந்துரையாடலில் இடம் பெற்றனர். இது தொடர்பில், மனோ எம்.பி. தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பு குழுவினரிடம் கையளித்த முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, (01) பயங்கரவாத தடை சட்டம் இன்றைய தேவைக்கு குற்றவியல் சட்டக்கோவை தாராளமாக போதுமானது. இதுவே ஜே.வி.பியின் கடந்த கால நிலைப்பாடாக இருந்தது. எனினும், புதிய சட்டம் அவசியமாயின் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் புதிய மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும்வரை இன்றைய பயங்கரவாத தடை சட்ட பாவனை உடனடியாக இடை நிறுத்தப்பட வேண்டும். (02) புதிய அரசியலமைப்பு இந்த அரசு தேர்தல் வேளையில், கடந்த நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்த பட்ட புதிய அரசியலமைப்பு பணியை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து, மீள ஆரம்பிப்போம் என உறுதி அளித்தது. அவ்வேளையில், நானும், இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அந்த புதிய அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் இருந்தோம். இந்த பணி இந்த வருடமே செய்து முடிக்கப்பட வேண்டும். வருடங்கள் கடந்தால் இதை ஒரு போதும் செய்து முடிக்க முடியாது என்பது எமது அனுபவமாகும். ஆகவே, இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். (03) பொறுப்பு கூறல் உடனடியாக உண்மை ஆணைக்குழு (Truth Commission) ஆரம்பிக்கப்பட்டு, பொறுப்பு கூறல் அடிப்படையில் வலிந்து காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். (04) தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத தடை சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இன்று பத்து தமிழ் கைதிகள் நீண்டகாலமாக உள்ளனர். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். கைதிகளின் பெயர் பட்டியல் விபரங்களை, 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் சார்பாக மு.கோமகன் தயாரிக்க, மக்கள் போராட்ட முன்னணி சார்பாக தோழர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அது இங்கே ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பு குழுவினரிடம் தரப்படுகிறது. (05) பெருந்தோட்ட மக்கள் மலையக தமிழ் மக்கள் பரப்பில் இருக்கின்ற பெருந்தோட்ட மக்கள் இலங்கையில் மிகவும் நலிவுற்ற பிரிவினர். இந்த மக்களின் நிலைமை இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய ஜீஎஸ்பி ப்ளஸ் (GSP+) கண்காணிப்பின் கீழ் வர வேண்டும். அதற்கான தரவுகள்: (அ) தோட்டங்களில் உற்பத்தியாகும் தேயிலை ஐரோப்பிய காலை உணவு மேசை வரை செல்லும் விநியோக பாதையின் ஆரம்பமான பெருந்தோட்டங்கள் நவீன அடிமைத்துவ அம்சங்களைக் கொண்டிருக்கின்றமை (ஆ) அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், பெருந்தோட்ட மக்களை போதுமான அளவு உள்வாங்காததால், அவர்கள் தனியார் கம்பனிகளின் தயவில் வாழ வேண்டி உள்ளமை. (இ) நவீன அடிமைத்துவ தினக்கூலி தொழிலாளர் என்ற நிலையில் இருந்து, பெருந்தோட்ட தொழில் துறையில் கூட்டுப் பங்காளராக மாறுகின்ற கூட்டு வர்த்தக மாற்றம் வராமை. (ஈ) தேசிய நீரோட்டத்தில் இருந்து திட்டமிட்ட முறையில் தள்ளி வைக்கப்பட்ட காரணத்தால், சம உரிமை மறுக்கப்பட்டு, நில உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, வாழ்வாதார உரிமை ஆகியவை மறுக்கப்பட்டு, பொது நிர்வாக, சமூக கட்டமைப்பு மற்றும் நாட்டின் பொது நலச் சேவைகள் கிடைக்காமை. http://seithy.com/breifNews.php?newsID=332688&category=TamilNews&language=tamil
  4. பாகிஸ்தானிய உளவுப்பிரிவு தங்களை இன்னும் சில தினங்களில் தாக்குவார்கள் என எதிர்வு கூறி உள்ளனர்.(India)
  5. இஸ்ரேல் செய்தது போல் சந்தேக நபர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்படுகின்றன.
  6. ஊழல் பெருச்சாளி மகிந்தவை துணிவிருந்தால் கைது செய்யுங்கள் பார்க்கலாம் உங்கள் துணிவை.
  7. இந்தியனாவது சண்டை பிடிக்கிறதாவது. சும்மா குறுக்கும் மறுக்கும் போர் விமானங்களை ஓட்டி விட்டு சண்டை முடிந்ததாக அறிவிக்கப்படும்.😆 துருக்கியில் இருந்து ஆயுதங்கள் பாகிஸ்தானில் வந்து இறங்கி உள்ளதாம்.
  8. கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும் 0 கதையாசிரியர்: தி.ஞானசேகரன் தின/வார இதழ்: வீரகேசரி 1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டி ருக்கிறாள். வியர்வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பி யிருக்கின்றன. பின் வளவைக் கூட்டித் துப்புரவாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். பால் கொடுப்பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள்போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிறாள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக் கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிறான். சில வேளைகளில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிறான். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ. கண்ணாடியின் முன்னால் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக் கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப்புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின் மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத்திவிட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவையாவது கதிரி இங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலை களிலிருந்து சொல்லியனுப்பினாலும் அவள் வந்து செய்து கொடுப்பாள். வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வரவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய் விட்டன. அதனால் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை. வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும்புக்கு போவதற்கு முன் கதிரியை அடிக்கடி பார்த்திருக்கிறாள். அப்போது இருந்த அவளது இறுக்கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றன. ‘நறுக்’கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக்காம்பில் கடித்து விடுகிறான். ‘ஆ’ என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனைத் தூக்கி நிமிர்த்திய கதிரி, “ஏன்ரா கள்ளா கடிச்சனி?” என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிறாள். அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனது கடை வாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினால் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் ‘குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிறாள். இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிறான். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது. கொழும்பிலிருக்கும் மாதர்சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக்கடி செல்வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். பால் கொடுப்பதனால் உடலுறுப்புகளின் இறுக்கமும் கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி பால் கொடுப்பதை நிறுத்துவதற்கு இலகுவான முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன. வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தை யொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரியிருக்கும் இடத்திற்கு வருகிறாள். “பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?” வசந்தியைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிறாள் கதிரி. “காலைமைதான் வந்தனான்; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?” “இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படியிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின்வளவுக்குக் குப்பை கூட்டப் போட்டன்.” அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை ஆச்சரியமாகப் பார்க்கிறான். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான். “இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒரு நாளும் பார்க்கேல்லையெல்லே; அது தான் பயப்பிடுகிறான். அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினால் கோதியபடியே கூறுகிறாள் கதிரி. “உவனுக்கு எத்தனை வயசு?” “ஓ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சு போம்.” “இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிறாய். ஏன் நிற்பாட்டேல்லை? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே.” “என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுறாய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரியமாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப்பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனான். என்ரை நடுவிலாளும் அப்பிடித்தான்; இரண்டு வரியமாய்க் குடிச்சவள். பெத்த பிள்ளையளுக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே?” கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத்திருக்கிறாள்!. வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது. “பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது. கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே?” “இல்லை ஆறு மாசந்தான்” “எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல் லையோ? அதுக்குப் பசிக்குதுபோலை. உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக்கிறாய்?” வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிறாள். “ஏதோ கனாக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டு மணிக்குத்தானே பால் கொடுத்தனான். இனி பன்னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.” வசந்தி தான் கூறுகிறாள். “இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தையாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.” வசந்தியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிறாள். குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடைகளைத் தட்டி அழுகையைக் குறைக்க முயலுகிறாள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது. “அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக் கொண்டு வாங்கோ.” அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிறாள். வசந்தி அதனை வாங்கி குழந்தையின் வாயில் வைத்தபின்புதான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த றப்பரை ஆவலுடன் உமியத் தொடங்குகிறது. கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகியிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிறாள். அந்தச் சிரட்டையிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிறாள். “பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை; பாலைக் குடுமன்” வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிறாள். “அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல். நான் இப்ப பால் கொடுக்கிறதைக் குறைச்சுப் போட்டன்; வாற மாசத்தோடை நிற்பாட்டப்போறன். நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்.” அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது, அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிறாள் தாய். கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது. “ஏன் கதிரி தேத்தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிறாய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன். கையோடை ஒரு கத்தை வைக்கலையும் எடுத்துக்கொண்டு போய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக் கொண்டு நிற்குது.” கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தையுடன் செல்கிறாள். கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிறாள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக்கோற் போரில் ஒரு கற்றை வைக்கோலை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிறாள். அவளைப் பின் தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிறான். கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமுகிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன்கன்று, பால்குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினால் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத்திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிறாள். அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும். கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிறாள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிறாள். வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப்பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலைசெய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின் கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிறாள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிறான். வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வ தற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். வெகுநேரமாகக் கண்ணாடியின் முன்னால் நின்று ஒரு புதிய ‘பாஷன்’ கொண்டையைப் போடுவதில் அவள் முனைந்திருக்கிறாள். அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத்துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒருமுகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள். கொண்டை போட்டு முடிந்துவிட்டது. ஆனாலும் வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவாறாகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள். வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தியின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்குகிறாள். அவளைப் பார்த்ததும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிறாள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது. அன்னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுது கொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது. கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிறாள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண்டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை. “ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளையைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்”அன்னம்மாவிடம் கூறுகிறாள் கதிரி. “இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணுமெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலியாணத்துக்குப் போட்டாள். இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனான், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி; அவள் கேட்டால் தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவனெண்டு சொல்லிப் போட்டுப் போட்டாள். இப்ப என்ன செய்யிறது? அழுதழுது இதுகின்ரை தொண்டையும் அடைச்சுப்போச்சு”. அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித்துத் துடித்து அழுகிறது குழந்தை. அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந் தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஆனாலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வெகு நேரமாக அழுது களைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப்போது அழுவதற்கே சக்தியிருக்கவில்லை. அது இப்போது முனகிக் கொண்டிருக்கிறது. அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு ‘அம்மா அம்மா’ என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கி விடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது. இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது. “கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட்டுது; பசுப் பாலையாவது குடுமன்.” கதிரி அன்னம்மாவிடம் கூறுகிறாள். “குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஓடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன். ” முற்றத்து விறாந்தையிலுள்ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்திவிட்டு, செம்பை எடுத்துக் கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிறாள் அன்னம்மா. குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது. கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடியவில்லை. துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணையின் ஓரத்திற்கு வந்து விடுகிறது. ஐயோ! குழந்தை விழப்போகிறதே ! கதிரி ஓடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிறாள். “அம்….. மா” குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது. குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி. குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது. “அ….. ம்மா, அம்… மா ” கதிரி தன்னை மறக்கிறாள். கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் கைகளால் அளைந்தபடி வாயை வைத்து உமியத் தொடங்குகிறது. “ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துப் போட்டுது”. மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிறாள். அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப்போது கதிரி இருக்கவில்லை. கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது ‘ஹான்பாக்’கைத் திறந்து அதற்குள்ளிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரிசெய்து கொள்ளுகிறாள். – வீரகேசரி 1973 – கால தரிசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஏப்ரல் 1973, கணேச சனசமூக நிலையம், புன்னாலைக்கட்டுவன். https://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9/
  9. சுமந் பேசுகிறார் https://www.facebook.com/watch/live/?ref=notif&v=947943203915128&notif_id=1745760241813263&notif_t=live_video
  10. உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம் 2024 க.பொ.தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (27) முற்பகல் அறிவித்தார். அதன்படி, உயிரியல் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய மாணவி ஹேகொட ஆராச்சிகே சந்திதி நிம்ஹார நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதே பாடப் பிரிவில் இரண்டாம் இடத்தை அனுராதபுரம் மத்திய கல்லூரி மாணவி கல்பா விதுசரனி பெற்றுள்ளதோடு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் ஜமுனாநந்தா பிரணவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் லெசந்து ரன்சர குமாரகே என்ற மாணவரும், இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் கந்ததாசன் தசரத் என்பவரும், மூன்றாம் இடத்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் தெவிந்து தில்மித் தஹநாயக்க என்பவரும் பெற்றுள்ளனர். கொழும்பு விசாகா கல்லூாியின் மாணவி கங்கானிகே அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். வணிகப் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை கொழும்பு ரோயல் கல்லூரியைச் சேர்ந்த இந்துவர சன்ஹித குமாரபேலி என்பவரும் நுகேகொட சுஜாதா கல்லூரியின் லெசந்தி உதாரா பெரேரா என்பவரும் பிடித்துள்ளனர். அதேநேரம் ரத்னாவலி பாலிகா வித்யாலய மாணவி செனெலி சமத்கா ரணசிங்க, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரத்தினபுரி பர்கசன் உயர் மகளிர் கல்லூரி மாணவி தினெத்மி மெதன்கா ஜனகாந்த கலைப்பிரிவில் இரண்டாம் இடத்தையும், கண்டி மஹமாயா மகளிர் வித்தியாலய மாணவி இசுரி அஞ்சலிகா பீரிஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். பொறியியல் தொழில்நுட்பவியல் பிரிவில் முதலாம் இடத்தை நாரம்மல மயுரபாத மத்திய கல்லூரியின் மாணவன் காவ்ய ரவிஹங்சவும் இரண்டாம் இடத்தை இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவன் உஷான் மலிக் ஜயசூரியவும் மூன்றாம் இடத்தை நாகஸ்தெணிய ஶ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் பசிந்து மதுசங்கவும் பெற்றுள்ளனர். உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபே...உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்2024 க.பொ.தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (27) முற்பகல் அறிவித்தார்.
  11. ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போரிட்ட அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் படுகொலை! அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் மகன் என அடையாளம் காணப்பட்ட ஒரு அமெரிக்க நபர், 2024 ஆம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் சண்டையிட்டபோது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் 21 வயதான மைக்கேல் அலெக்சாண்டர் க்ளாஸ், ஏப்ரல் 4, 2024 அன்று கிழக்கு ஐரோப்பாவில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2024 இல் மத்திய புலனாய்வு அமைப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்ட ஜூலியான் கல்லினாவின் மகனாவார் உக்ரைனில் கொல்லப்பட்ட மைக்கேல் க்ளாஸ். அமெரிக்காவின் மீதான உள்நாட்டு கோபமும், ஒன்லைன் தீவிரமயமாக்கலும், நடுத்தர வர்க்க அமெரிக்க இளைஞரை கிழக்கு உக்ரைனின் கொலைக் களங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இராணுவத்தில் பணியாற்றிய பெற்றோருக்குப் பிறந்த ஒரு உயர்நிலைப் பள்ளி கால்பந்து வீரர் இந்த மைக்கேல் குளோஸ். புலன்விசாரணை இணையபக்கம் ஒன்றில், பிப்ரவரி 2022 முதல் ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரில் க்ளாஸும் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில், க்ளாஸ் பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவு வட்டாரங்களில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கும் காசா போருக்கும் அமெரிக்கா அளித்த ஆதரவிற்காக அவர் தமது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். துருக்கியில் இருந்தபோது, க்ளாஸ் ரஷ்யாவுக்குச் செல்லும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வழக்கமாக பாலஸ்தீனம் பற்றிய வீடியோக்களை கவனிப்பதுடன் அமெரிக்கா மீது மிகவும் கோபமாக இருந்தார் என்றே அவருக்கு நெருக்கமான ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு விசா பெற்ற பிறகு, அவர் மாஸ்கோவிற்கு செல்வதற்கு முன்பு ரஷ்யா முழுவதும் பயணம் செய்தார், அங்கு அவர் தனது ஆவணங்கள் காலாவதியாகும் முன்பு இராணுவத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பெரும்பாலும் நேபாள ஒப்பந்த வீரர்களுடன் பயிற்சி பெற்றார். இராணுவத்தில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் உக்ரைனுக்கு ஒரு தாக்குதல் பட்டாலியனின் உறுப்பினராக அனுப்பப்பட்டார். ஆனால் அவர் மரணம் தொடர்பில் விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. அவரது பெற்றோர் ரஷ்ய அரசாங்கத்தைத் தொடர்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://seithy.com/breifNews.php?newsID=332503&category=WorldNews&language=tamil
  12. உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும்
  13. திரு பிமல் ரத்நாயக்க என்கின்ற ஜேவிபி அமைச்சர் வடக்கு மக்களிடம் நீங்கள் உப்பில் பார்ப்பது பெயரையா அல்லது ருசியையா என கேள்வி எழுப்பியிருக்கின்றார் ஒரு பொருளின் Authenticity யும் , பெறுமதியையும் அதிகரிக்க அந்த உற்பத்திப் பொருளின் பெயருக்கு, அதனை உற்பத்தி செய்த இடத்தின் அடையாளத்தை வழங்க வேண்டும் அதேபோல், குறிப்பிட்ட உற்பத்தி பொருளுக்கு பிராந்தியத்தின் அடையாளம் (Regional identity) ஊடக Value சேர்க்கவும் பெயரிடல் அவசியமானது. இவை மட்டுமன்றி, இந்த அணுகுமுறை Branding மற்றும் Storytelling-க்கும் முக்கியத்துவமானது குறிப்பாக Himalayan Pink Salt, Maldon Sea Salt, Darjeeling Tea, Scotch Whisky, Manuka Honey உட்பட பிரபல உற்பத்திகள் பிராந்திய அடையாளங்கள் ஊடாகவே புகழ் பெற்று இருக்கின்றன அதாவது பெயரிடல் அணுகுமுறை பிராந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு (Economic development) மிக தேவையானது அந்த வகையில் பூர்விக மக்கள் தங்கள் பிராந்திய வளம் மற்றும் உற்பத்தி என்கின்ற (Local pride) அடிப்படையில் முன்வைக்கும் கோரிக்கை அடிப்படையில் மிக நியாயமானது ஆனால் கல்வியறிவற்ற திரு பிமல் ரத்நாயக்க (University Dropout) எங்களை இனவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றார் மைத்திரிபால சிறிசேன கால இடைக்கால அறிக்கைக்கு ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படக்கூடாது என திரு அனுர குமாரவுடன் சேர்ந்து எழுதி கொடுத்த விமல் என்கின்ற இனவாதி எங்களுக்கு பாடம் நடத்துகின்றார் உண்மையில் ஆனையிறவு உப்பள உற்பத்திக்கும் ஜேவிபி ஆட்சியாளர்களுக்கும் எந்த தொடர்புமில்லை கடந்த கால ஆட்சியாளர்கள் உள்ளூர் முதலீட்டாளர்களை புறக்கணித்து தென்பகுதி வியாபாரிகளை பொறிமுறையில் உள்வாங்கியதால் தான் சிங்கள பெயர் வழங்கப்பட்டுள்ளது அரசியல் மட்டுமின்றி பிராந்திய பொருளாதாரத்தின் பார்வையிலும் இது உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் அதாவது தமிழ் பிராந்தியத்தின் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் இதனூடாக உப்பு பெயர் சர்ச்சைக்கு தீர்வு காண முடியும். ஆனால் அதற்கு தயாரில்லாத ஜேவிபி எங்களை இனவாதிகளாக்க முயற்சிக்கின்றது இதற்கிடையில் சிங்கள ஆட்சியாளர்கள் தான் கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க பிரதேச வீதிக்கு 'தமிழ் சங்க வீதி' என பெயரிடவிடாமல் பல ஆண்டுகளாக தடுத்து வருகின்றார்கள் வடக்கு மாகாணசபை அம்மாச்சி உணவகம் திட்டத்தை முன்வைத்த போது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளால் பெயரின்றி உணவகங்களை திறக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு இருந்தது ஜேவிபி பங்காளிகளாகவிருந்த கடந்த கால ஆட்சியாளர்கள் ஜேவிபி உட்பட்ட இனவாதிகளை காரணமாக வைத்து வெறும் பெயரில் மட்டும் பல நூறு அரசியல் செய்தார்கள் குறைந்த பட்சம் ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் கூட இதை சரி செய்ய தயாரில்லை பட்டலந்த விவகாரத்தில் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களை சர்வதேச உதவி பெற்றாவது தண்டிப்போம் என் பேசும் ஜேவிபி வடக்கில் பலவந்தமாக கடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்தமாட்டோம் என அறிவித்திருப்பது இனவாதமாகும் அரசியல் கைதிகள் இல்லை என பகிரங்கமாக ஜேவிபி அறிவித்திருப்பது இனவாதமாகும் அரச கட்டமைப்புகளை சிங்கள மயப்படுத்தி தொடர்ச்சியாக எண்ணிக்கையில் சிறிய தேசிய இனங்களுக்கு வாய்ப்பை ஜேவிபி மறுத்து வருவது இனவாதமாகும் தமிழ் முஸ்லீம் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு விசாரணைகளை ஏவிவிடும் சம நேரத்தில் ஆக்கிரமிப்பு ஈடுபடும் பிக்குகளை ஜேவிபி பாதுகாப்பது இனவாதமாகும் தொல்பொருள் திணைக்களம் ஊடக தமிழ் பிரதேசங்களில் புதிய தொல்பொருள் ஆய்வு களங்களை ஜேவிபி அனுமதிப்பது இனவாதமாகும் பூர்விக மக்களுக்கு சொந்தமான வீதிகளுக்கு சட்டவிரோத கட்டுப்பாடுகளை விதிப்பது இனவாதமாகும் ஆட்சிக்கு வந்த முதல் நாள் முதல் தேசிய மொழி கொள்கைக்கு எதிராக ஜேவிபி செயற்பட்டு வருவது இனவாதமாகும் இவ்வாறு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இனவாத செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஜேவிபி சொந்த மண்ணில் , நிம்மதியாக, கௌரவத்துடன் வாழ விரும்பும் தமிழ் தேசிய மக்களை இனவாதிகளாக சித்தரிக்க முயலுவது அசிங்கமானது குறிப்பாக சிங்கள மக்களது அரசியற் சுதந்திரங்களுக்கோ அல்லது அவர்களது சமூக பொருளாதார, கலாச்சார வாழ்விற்கோ எண்ணிக்கையில் சிறிய தமிழ் தேசம் தடையாக இல்லாத நிலையில் அவர்களை இனவாதிகளாக சித்தரிக்க முயலுவதே இனவாதமாகும். இனமொன்றின் குரல்
  14. ஏக்கிய ராஜ்ய தொடர்பாக சட்டத்தரணி சுமந்திரன் தொடர்ந்தும் பொய் கூறுகிறார்என் பி.பி ஒரு பாரிய அடியை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாங்க போகின்றது. சமஸ்டி தீர்வு பற்றி 9 ஆவது நிமிடத்தில். 12 ஆவது நிமிடத்தில் இருந்து ஏக்கிய ராட்சிய பற்றிய விளக்கம்.
  15. யாழ் மாநகரசபை மேயர் வேட்பாளர் கபிலனுடனான செவ்வி தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரங்களின் ஏன் அதிக அக்கறை காட்டுகிறது? ஜனாதிபதி தேர்தல், பா.மன்ற தேர்தலில் ஏற்பட்ட அநுர அலை உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் ஏற்படுமென நினைக்கிறீர்களா? தேர்தல் காலங்களின் தேசியமக்கள் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் உண்டு??? ஊழலை ஒழிப்போம் எனும் போர்வையில் அரசியல் பழிவாங்கலை தேசிய மக்கள் கட்சி செய்கிறதா? உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தெரிவு எப்படி இடம்பெறுகிறது? என் பி பிக்கும் ஜே வி பிக்கும் என்ன வித்தியாசம்? விரிவுரையாளாராக இருந்த நீங்கள் ஏன் அரசியலில் புகுந்துள்ளீர்கள்? யாழ் மாநகரசபை குறைபாடுகளை எவ்வாறு நிவர்த்தி செய்வீர்கள்?? அமெரிக்காவின் வரி எம்மை எப்படி பாதிக்கும்??
  16. ஆப்கானிஸ்தானை தாக்க பாகிஸ்தானை தளமாக பாவிக்கா அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பணம் கொடுத்தது. இனி அந்த தேவை இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.