-
Posts
52124 -
Joined
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nunavilan
-
ரஷ்யாவின் சொத்துக்களை பறித்து உக்ரைனுக்கு கடனாக கொடுக்கும் ஜி-7 நாடுகள்
nunavilan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இந்தியாவை விட்டு கட்டார் போன்ற நாடுகளை நாடலாம். -
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
nunavilan replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
பயங்காவாதி நத்தனியாகு பங்கருக்குள்ளாலை வெளியில் வந்து விட்டாரோ இல்லை அங்கை தானோ? மேற்கு ஊடகமே 5 பேர் இறந்ததாக கூறும் போது 100 விமானங்கள் எங்கை குண்டுகளை போட்டவைஎன தெரியவில்லை. இஸ்ரேல் காரர் பலஸ்தீன அகதி முகாம்களுக்கு மேல் குண்டுகளை போடத்தான் லாயக்கு போல . -
ஒரு தரம் போர் நடந்த இடங்களை சுற்றி காட்டினீர்கள் என்றாலே சிறுவன் புரிந்து கொள்வான். 5 வயது பிள்ளைக்கு போரினால் அங்கு இருக்க முடியவில்லை என்று சொன்னால் போதுமானது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nunavilan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆயுதங்களையும் கொடுத்து கொன்ற பின் அழுது புலம்பும் மேற்குலகில் நாம் வாழ்கிறோம்.மனிதாபிமானத்தின் விலை என்ன என்பதை எப்படி எமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம்??? -
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
nunavilan replied to பெருமாள்'s topic in நிகழ்வும் அகழ்வும்
ரொய்லட் ஆசனத்தில் அமராமலே சுமந்திரன் ஒரு திருகுதாளி என உணர முடியும். ஒரு தந்தை செல்வாவுக்கோ அல்லது அமிருக்கோ இல்லாத எதிர்ப்பு அலை ஏன் உருவாக வேண்டும்? ஒரு பொது அறிவு கேள்வி. இதற்கு ரொய்லட் ஆய்வாளர்களின் கருத்து அவசியமற்றது. என்னை பொறுத்த அளவில் தமிழரசு கட்சி ஒரு தேவை இல்லாத ஆணி. வேறொரு பெயருடன் இன வேதை கொண்டவர்கள் ஒரு பொது கட்டியை உருவாக்கி எல்லோரையயும் உள் வாங்கினால் மிக்க மகிழ்ச்சி. அந்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். -
அப்படியா? ஸ்ராலினும் , உதயநிதியும் ஒரே கட்சினரும் தந்தையும் மகனும். அவர்கள் காசால் தமிழக வாக்குகளை வாங்கி கொள்பவர்கள். அண்ணாமலை ஏற்கனவே ஒரு லூசர் .. அவரின் பேச்சுக்கே இடமில்லை. சீமான்/ விஜய் இணைவு பலருக்கு (காற்று வாக்கில் கேட்டது) வயிற்றில் புளியை கரைக்கலாம். 10 லட்சம் பேர் விஜயின் கூட்டத்தில் என்பது ஒரு அசாதாரணம். பார்க்கலாம் அவரின் வளர்ச்சியை.
-
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
nunavilan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
கதிர்காமர் தமிழருக்கு செய்த நன்மைகளை பட்டியல் இடவும்? போட்டு தள்ளியது பற்றி பிறகு ஆராயலாம். தமிழர் பிரதமர் ஆவது பற்றி சிங்கள இனவாதிகள் எப்படி இருந்தார்கள் என்பது பற்றிய கட்டுரையை நீங்கள் வாசிக்க மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். -
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
nunavilan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நான் நினைத்தேன் கதிர்காமரை போட்டது சந்திரிகா என. இதெல்லாம் உங்கள் காதுக்கெட்டாதோ?? உங்களுக்கு வரவு செலவு கணக்கு ரொம்ப வீக்காக உள்ளது. நாலு பக்கமும் அலசி ஆராய வேண்டும் புரோ. விடிய எழும்பி கருத்து எழுதினால் மட்டும் போதாது. -
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
nunavilan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அங்கஜன்😁 -
நீங்கள் பாராளமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுமிடத்து அநுரக்குமாரவின் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியளிக்கும் என்றால், நீங்கள் எவ்வாறு அவர்களுடன் பயணிப்பீர்கள்? சிறப்பாக தமிழ் மக்களின் உரிமைசார் விடயங்களை எப்படி பெற்றுக்கொள்ள முயற்சிப்பீர்கள்? என்ற கேள்விக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் திரு. சுமந்திரன் கூறிய பதில் https://www.facebook.com/watch?v=953980420084192 எப்படி சஜித்தை ஆதரித்து இருப்பார்??
-
காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே... ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே... ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல் உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல் நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம் பூக்களை திறக்குது காற்று புலங்களை திறக்குது காதல் முடிந்தது மறைந்தது ஊடல் காதல் செய்வோம் ஒருமுறை மலர்வது காதல் இருவரும் கலந்தபின் தேடல் முதல் எது முடிவது காதல் காதல் செய்வோம் காத்திருந்தாய் அன்பே நான் பூத்திருந்தேன் முன்பே காத்திருந்தாய் அன்பே நான் பூத்திருந்தேன் முன்பே காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே அன்பே அன்பே நீ சொல்லிய மெல்லிய சொல்லிய என் தலை சொர்க்கதை முட்டுதடி நீ சம்மதம் சொல்லிய நொடியில் ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி என் ஆவலை வாழ வைத்தாய் என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய் நீள வைத்தாய் என் பூமியை எடுத்துக் கொண்டாய் உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய் காதலனே உன்னை துடிக்கவிட்டேன் கண்களை வாங்கி கொண்டு உறங்கவிட்டேன் என் உயிரே உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன் அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன் இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன் சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன் உன்னால நெஞ்சில் அடி பூகம்பம் என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ ஹே பொற்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ காத்திருந்தாய் அன்பே பாடல்: காத்திருந்தாய் அன்பே பாடியவர்கள்: சின்மயி. நிவாஸ், அபே இசை: பிறேம் வரிகள்: வைரமுத்து படம்:நவீன சரஸ்வதி சபதம்
-
இந்த தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலுக்கு வந்து அப்படி செய்வோம் இப்படி செய்வோம் எனும் ஆட் கள் தான் எம்மக்களுக்கு தேவை என்கிறீர்கள். கடந்த 15 வருடத்தில் சுமந்திரனின் சாதனைகள் எவை? ஓகோ. தற்போது கட்சியில் உள்ளவர்கள் சொக்க தங்கங்கள். அப்படித்தானே?? இதனை எப்படி மக்கள் அறியாமல் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பலரையும் பாராளுமன்றம் அனுப்பி உள்ளார்களே. அப்போ மக்கள் மூடர்களா??
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
nunavilan replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
என்னது 160 விமானங்கள் தாக்கி 4 பேர் தான் இறந்துள்ளார்களா?? இனி மேல் இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதலை நடத்தாது என நினைக்க தோன்றுகிறது. தவிச்ச முயல் அடிக்க தான் இஸ்ரேல் லாயக்கானது.😁 -
கட்சிக்குள் தனக்கு எதிரானவர்களை நாசுக்காகவும், நேரடியாகவும் வெளியேற்றி தனது வழிக்கு ஆதரவானவர்களை வைத்து கட்சி நடாத்துவது எந்த வகை நியாயம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?? கட்சியில் இருந்து நீங்கியவர்களின் பட்டியல் கட்சியில் இருப்பவர்களை விட அதிகம் என்பதே இதற்கு சாட்சி.இது சம்பந்தர் காலத்தில் தொடங்கிய போதும் இப்போதும் தொடர்கிறதே? ஏன்? தந்தை செல்வா காலத்தில் அவர் கட்சியை ஒருங்கிணைத்தது போல் ஏன் சம்பந்தராலோ அல்லது சுமந்திரன் போன்றோரால் முடியவில்லை?? இதை தாண்டாமல் சிங்களவரையோ, இந்தியனையோ, மேற்கு நாடுகளையோ வெல்வதை கனவிலும் நினைக்காதீர்கள்.
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
nunavilan replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
சவூதி அரேபியா, இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. -
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
nunavilan replied to ரஞ்சித்'s topic in உலக நடப்பு
அமெரிக்க தளத்தில் இருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது . செய்தியின் உண்மை தன்மை பற்றி தெரியவில்லை. -
எங்கட தமிழ் அரசியல்..? சிவனிடம் சில நாய்கள் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தன. அது என்னவென்றால், ''தங்களை யாரும் மதிப்பது இல்லை, எங்கே போனாலும் தங்களை எல்லாரும் 'அடிக்' என்பதும் 'கல்லால் எறிந்து துரத்துவது' மட்டுமல்லாமல் இந்த மனிதர்கள் எங்கள் உரிமைகளை அவமானம் செய்கின்றனர். நாங்கள் அவர்களை வீட்டில் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாத்து வந்தும் பலன் எதுவும் இல்லை'' என்றன. சிவன் அவர்களிடம் சென்னார், 'நீங்கள் எல்லாரும் நாளை வாருங்கள்' என்று. அதற்கு சம்மதித்து, நாய்கள் மறுநாள் சென்றன. அங்கே பெரிய குவியல் சோறு இறைச்சியுடன் குழைத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவன் அவர்களிடம், 'முதலில் சாப்பாட்டினை சாப்பிடுங்கள் பின் கதைப்பம்' என்றார். நாய்கள் சாப்பிட சென்றன. அங்கே, அவைகள் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்றுக்கொன்று பெரும் சண்டை பிடித்து, கடிபட்டன. அவை சோற்று குவியலில் விழுந்து சண்டை செய்தன. சாப்பிட முடியாமலும் சோறும் இல்லாமலும் போக சிவனிடம் அவை மீண்டும் சென்றன. 'சாப்பாடு எப்படி இருந்தது? எல்லாரும் சாப்பிட்டீர்களா?, என்று சிவன் கேட்டார். 'நாங்கள் எங்கே சாப்பிட்டோம்..? எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் சோறு எல்லாம் சிதறி விட்டது' என்றன. 'இதனால்தான் உங்களை யாரும் மதிப்பது இல்லை. உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியாத நீங்கள் எப்படி உங்கள் இனத்தின் பிரச்சினையை தீர்க்க வெளிக்கிட்டீர்கள்..? போங்க போங்க போய் உங்கள் வேலையை பாருங்கள்' என்றார், சிவன். (கதை முடிஞ்சிது)