Everything posted by nunavilan
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாரிசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாவும் கமாசிடம் பேச்சுவார்த்தை பற்றிய பிரதி அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. 40 பணய கைதிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்படுவார்களாம்.
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
ரொம்ப முக்கியம். எமது மக்கள் மேல் மலம் கொட்டியவர்கள் உங்களில் பலர் உள்ளீர்கள். குண்டு மழை பொழிந்தவர்களும் நீங்கள் தானே?
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
அருகில் உள்ள நாட்டில் (Netherland)கஞ்சாவுக்கான அனுமதி நீண்ட காலத்துக்கு முன் உள்ளது. ஜேர்மனி கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது ஆச்சரியம் அளிக்கவில்லை. இதனை தான் கனடாவும் சொல்லி சட்டபூர்வமாக்கியது. இதன் வருமானம் அனைத்தும் ( சிகரட், மதுபானம் உட்பட) அரசுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடதக்கது.
-
துவாரகா உரையாற்றியதாக...
துவாரகா பேட்டி! பொய் என்ன? மெய் என்ன? /KUNA KAVIYALAHAN
-
இன்றைய வானிலை
யாரப்பா அந்த புத்தன்? 🙂 புத்தனின் வழியை எம்மக்கள் பின்பற்ற வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எகிப்தால் கட்டப்படும் பாரிய மதில்கள்
-
நடனங்கள்.
Arabic Kuthu from Spain - Anirudh Ravichander (From the movie "Beast") | Vinatha & company
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
- நடனங்கள்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
டக்ளஸ் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.- நடனங்கள்.
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சிரிய தலைநகரில் இஸ்ரேல் பலத்த எறிகணை தாக்குதலை நடாத்தி உள்ளது. இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.- அதிசயக்குதிரை
ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்... நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ??? குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...! நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!??? குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே... ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... காலம் ஓடியது..... என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.... அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்... என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்... என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... அவனே எனக்கு பேரனும் ஆனான்... என் மகளின் மகன் அல்லவா? அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்... என் சித்திக்கு தாய் அல்லவா? நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்... . . . நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Never forget or forgive. 1. Haifa Massacre 1937 2. Al-Quds Massacre 1937 3. Haifa Massacre 1938 4. Balad Al-Sheikh Massacre 1939 5. Haifa Massacre 1939 6. Haifa Massacre 1947 7. Abbasiya Massacre 1947 8. Al-Khisas Massacre 1947 9. Bab Al-Amud Massacre 1947 10. Al-Quds Massacre 1947 11. Sheikh Bureik Massacre 1947 12. Deir Yassin Massacre 1948 13. Jaffa Massacre 1948 14. Tantura Massacre 1948 15. Al-Quds Massacre 1953 16. Khan Yunis Massacre 1956 17. Al-Quds Massacre 1967 18. Sabra and Shatila Massacre 1982 19. Al-Aqsa Massacre 1990 20. Ibrahimi Mosque Massacre 1994 21. Jenin Refugee Camp Massacre 2002 22. Gaza Massacre 2008-2009 23. Gaza Massacre 2012 24. Gaza Massacre 2014 25. Gaza Massacre 2018-2019 26. Gaza Massacre 2021 27. Gaza Holocaust 2023-present- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நத்தனியாகு பங்குனி வரை கமாசுக்கு காலக்கெடு கொடுத்து இருக்கிறாராம் பணயகைதிகளை விடுவதற்கு.- Mist of Capricorn
சிநேகிதனே & ஒரு தெய்வம் தந்த பூவே- புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
- Mist of Capricorn
SUJATHA MOHAN MEDLEY | Cover by Shweta Mohan Ft. Stephen Devassy- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
Avdiivka பகுதியில் இருந்து உக்ரேன் படைகள் வெளியேறுகின்றனர். https://www.bbc.com/news/world-europe-68323366- Mist of Capricorn
Thaikkudam Bridge's BEST live tribute! Rahman is emotionally awestruck! Govind Vasantha in Violin🎻- Mist of Capricorn
Ilaiyaraaja 1000 Tribute | Medley | Thaikkudam Bridge Live | City Shor - Govind Vasantha Killin it!!- லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
Arumugam Thangavelautham ' பிள்ளை மாமா' 80 ஆம் ஆண்டின் பிற்பகுதி.அப்போது யாழ்ப்பாணத்தில் அரச ஊழியனாக நான் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்கள்.அப்போது நாங்கள் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நாற்சார வீடொன்றில் குடியிருந்தோம்.ஒரு பகுதியில் நாங்களும் அடுத்த இன்னோர் பகுதியில் இன்னோர் குடும்பமும் வாடகைக்கு இருந்தார்கள். ஒரு நாள் மாலை பணி முடிந்து நான் வீட்டுக்குப் போன போது எனது இரண்டாவது மகளைக் காணவில்லை. மூன்று வயதுக் குழந்தை அவள்.அவள் எங்கே என்று மனைவியிடம் கேட்டேன். " தங்கச்சியை பிள்ளை மாமா தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்" என்றாள் மூத்த மகள்.அப்போது அவளுக்கு வயது ஆறு.மகனுக்கு இரண்டு வயது.கடைசி மகளுக்கு ஒரு வயது. பிள்ளை மாமாதான் எங்களுக்கு அந்த வீட்டை ஒழுங்கு பண்ணிக் குடுத்தவர். 'தம்பி'தான்(தேசியத்தலைவர்) பிள்ளை மாமாவை 78 இல் எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தவர்.79 இல் நாங்கள் கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் வசித்து வந்தோம்.அங்கும் பிள்ளை மாமா வருவார்.இரண்டாவது மகள்மீது பிள்ளை மாமாவுக்கு அதிகம் பாசம். எப்போ வீட்டுக்கு வந்தாலும் அவளைத் தூக்கிக் கொண்டு போய் விடுவார். அவளும் அவரோடு நன்றாக ஓட்டிக் கொண்டு விட்டாள்." யார் அந்த பிள்ளை மாமா?" என்ற கேள்வி உங்கள் மனங்களில் ஏற்படலாம்.அவர் வேறு யாரும் அல்ல.உங்கள் அனைவர்க்கும் அறிமுகமான பொன்னம்மான்தான் அவர். நாங்கள் குடியிருந்த வீடு பொன்னம்மான் தாய் மாமனுக்குச் சொந்தமானது.நாங்கள் இருந்த வீட்டுக்கு பின் புறம் அவரது இன்னோரு மாமியும் வசித்து வந்தார்.அங்கு வரும் வேளை களில் பொன்னம்மான் எங்கள் வீட்டுக்கும் வருவார்.பிள்ளைகளோடு விளையாடுவார். பொன்னம்மானின் குடும்பத்தினர் அனைவருமே ஆரம்ப நாட்களில் இயக்கச் செயற்பாடுகளுக்கு பெரிதும் துணையாக இருந்தார்கள்.அந்த நாட்களில் தலைவரைச் சந்திக்க வேண்டும் என்றால் பொன்னம்மான் வீட்டுக்குச் சென்றால் சந்திக்க முடியும். பொன்னம்மானின் தாயாரும் தேசியத் தலைவரை தனது மகன்களில் ஒருவராகவே கருதிச் செயற்பட்டார். எண்பதின் நடுப்பகுதியில் இயக்கம் இரண்டாக உடைந்த வேளையில் திட்டமிட்டு தலைவர் தனிமைப்படுத்தப் பட்ட போது தலைவரோடு இணைந்து செயற்பட்டவர்களில் பொன்னம்மான் முக்கியமானவர். 80 களின் பிற்பகுதியில் தங்கத்துரை குட்டிமணி ஆகியோர் களோடு தலைவர் இணைந்து செயற்பட்ட போது பொன்னம்மானும் தலைவரோடுதான் இருந்தார். 81 மார்ச் 25 ஆம் நாள் நீர்வேலியில் வைத்து மக்கள் வங்கிக்குச் சொந்தமான 82 இலட்சம் ரூபா பணம் அதனைக் கொண்டு வந்த வாகனத்தை வழி மறித்து பறித்தெடுக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அதனோடு தொடர்பு பட்டவர் களை காவல் புலனாய்வுப் பிரிவினர் தேடத் தொடங்கினர். முன்பே சில சம்பவங்களினால் தேடப்பட்டு வந்த தங்கத்துரை,குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டால் பிரச்சனையாகி விடும் என்பதற்காக அவர்கள் தமிழ்நாட்டுக்கு வருவதென முடிவு எடுக்கப்பட்டது.அதன்படி ஏப்ரல் 5 ஆம் நாள் படகேறச் சென்ற சமயம் மணற்காட்டு கடற்கரையில் வைத்து தங்கத்துரை,குட்டிமணி,தேவன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக குட்டிமணி பொலிசாரினால் அடையாளம் காணப்பட்டதனால் உடனடியாக அவர்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, தொடர்புபட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் நோக்குடன் மும்முரமாக தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றன.அந்த வேளையிலும் பணத்தைப் பாதுகாப்பதிலும் பொன்னம்மானின் செயற்பாடுகள் இடம் பெற்றிருந்தன.பலத்த சித்திரவதைகள் காரணமாக தங்கத்துரை கொடுத்த வாக்குமூலங் களைத் தொடர்ந்து பொன்னம்மானும் தேடப்படுகின்றவர்களில் ஒருவரானார். அந்த நாட்களில் தலைவரும் பொன்னம்மான் உட்பட முக்கியமானவர் களும் தங்கள் தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு நாள் பொன்னம்மானின் கலட்டியில் அமைந்திருந்த வீடும் சுற்றி வளைக்கப் பட்டு வீடு முழுவதுமாக சல்லடை போட்டு தேடப்பட்டது.மறுநாட் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பொன்னம்மானின் மாமியார் " நேற்றெல்லோ குகனைத் தேடி பொலிஸ்காரங்கள் வந்திருக்கின்றாங் கள்.வீடு பூராவும் கிண்டிக் கிளறி நாசம் பண்ணியிருக்கிறாங்கள்.நல்ல காலம் குகன் அங்கை இருக்கேல்லை. (குகன் என்பது பொன்னம்மானின் இயற்பெயர்) அவன் இயக்கத்திலை இருக்கிறான் எண்டும்,வீட்டுக்கு வந்தால் தங்களட்டை கொண்டு வந்து ஒப்படைக்கும்படியும் சொல்லிட்டுப் போயிருக்கிறார்கள்" என்று கூறி வேதனைப்பட்டார். " குகனுக்கு இயக்கப் பொடியளோடை சில வேளை ஏதும் தொடர்புகள் இருந்திருக்கலாம்.எதுக்கும் குகனை கவனமாக இருக்கச் சொல்ல வேணும்" என்று மாமியாருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினேன். மாமியார் போன பின்,எங்கள் வீட்டில் தலைவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்து பொன்னம்மான் சிரித்தபடி வெளியே வந்தார்.பின் பொன்னம்மான் இடம் மாற்றப்பட்டு சில நாட்களில் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். தலைவர் அவர்களை எனது தம்பி என்றும், பல்கலைக்கழகத்தில் படிப்பதாகவும் சொல்லித்தான் மாமியாரிடம் வீடு வாடகைக்கு எடுத்திருந்தோம் பின் நாட்களில் தலைவரின் எச்சரிக்கை நடவடிக்கையைத் தொடர்ந்து நாங்களும் வீடு மாறிக் கொண்டோம். ஏப்ரல் 29 ஆம் நாள் அதிகாலையில் நாங்கள் குடியிருந்த அந்த வீடும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம் பெற்றதைத் தொடர்ந்து நாங்களும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மாமியார் புரிந்து கொண்டிருப்பார். ஜுன் மாதம் தலைவரோடு நானும் தமிழ்நாட்டுக்கு வந்து,அதனைத் தொடர்ந்து எனது குடும்பமும் வந்து சேர்ந்த பின் நாங்கள் புதுவையில் தங்குவதற்கான ஒழுங்குகள் செய்யப் பட்டிருந்தது. 82 இல் ரெலோ இயக்கத்தின் தலைவராக செயற்பாட்டுக் கொண்டிருந்த சிறீ சபாரத்தினத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணமாக தலைவர் அவர்கள் அந்த அமைப்பில் இருந்து பிரிவதாக முடிவெடுத்தார்.அதனைத் தொடர்ந்து மக்கள் வங்கிப் பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மீதியாக இருந்த பணம் என்பனவற்றை ரெலோவிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.அப்போது நாட்டில் இருந்த செல்வம் அடைக்கல நாதன் இடம் ரகுவப்பா,சங்கர் (சத்திய நாதன்) ஆகியோர் அவற்றை ஒப்படைத்தனர். அதன் பின்பு இயக்கத்திற்கு பெரும் நிதித் தட்டுப்பாடு நிலவியது.அந்த நாட்களில் பாண்டிச்சேரியில் வாழ்ந்த எங்கள் குடும்பத்தினரோடு சில காலம் பொன்னம்மான்,புலேந்தி அம்மான், லாலா ரஞ்சன் ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போது நாங்கள் தங்கியிருந்த பாண்டிச்சேரி காமராஜ் நகரில் நான் ஒரு சிறிய பலசரக்குக் கடையையும் நடத்திக் கொண்டிருந்தேன்.நான் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெளியில் செல்லும் போது பொன்னம்மானே கடையை பொறுப்பேற்று நடத்தியிருந்தார்.அது மட்டுமன்றி எங்கள் பிள்ளைகளின் கல்வியிலும் அக்கறை எடுத்து பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார். பாண்டி பஜார் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரையில் தங்கியிருந்த தலைவர் அவர்கள் பொன்னம்மானை யும்,கிட்டு அவர்களையும் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.அங்கு இருந்து செயற்பட்ட வேளையில் திருநெல்வேலித் தாக்குதல் உட்பட பலவற்றில் பங்கு பற்றினார் பொன்னம்மான். 1983 அக்டோபர் மாதமளவில் தேசியத்தலைவர் அவர்கள் இந்தியாவின் பயிற்சி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்நாடு வந்து சேர்த்திருந்தார். தலைவரோடு பொன்னம்மான் உட்பட மூத்த போராளிகளும் வந்து சேர்ந்திருந் தனர். பாலா அண்ணன்,முதலில் தமிழகப் புலனாய்வுத் துறை (Q Branch) உதவிப் பொலிஸ் மா அதிபராகப் பதவி வகித்த திரு.அலெக்சாந்தர் என்பவரோடு தொடர்பு கொண்டு அவரோடு உரையாடியதைத் தொடர்ந்து அவரின் ஆலோசனைக்கு அமைய திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில் இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இடம் வழங்கும்படி கேட்டிருந்தார்.அந்தக் கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் டெல்லியில் உள்ள றோ(RAW) புலனாய்வுத்துறை அலுவலகத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான திரு.எஸ்.சந்திரசேகரன் என்பவர் சென்னை வந்து பாலா அண்ணனைச் சந்தித்தார்.இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக நாட்டில் இருந்த தலைவருக்கு விபரம் அறிவிக்கப் பட்டு தலைவர் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்த்திருந்தார்.இந்திய றோ அதிகாரிகள் மற்றும் தேசியத்தலைவர், பாலா அண்ணன் ஆகியோர்களுக்கு இடையே நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தைகளின் பின் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்வதாக திரு.சந்திர சேகரன் உறுதியளித்தார்.அதன்படி 83 நவம்பர் மாதம் வட இந்தியாவில் உள்ள டேராடூன் என்ற இடத்திற்கு முதலாலது பயிற்சிக்கான அணி புறப்பட்டுச் சென்றது. முதலாவது பயிற்சி அணியை வழி அனுப்பி வைப்பதற்காக பெங்களூர் தொடர் வண்டி நிலையத்திற்கு ரகுவப்பாவும் சென்றிருந்தார்.ஆரம்ப நாட்களில் இருந்து பொன்னம்மானும் ரகுவும் நெருங்கிப் பழகியவர்கள்.ரயில் ஏறுவதற்கு முன் ரகுவைக் கட்டிப் பிடித்து " டேய் குண்டா இவங்கள் எங்கள் எல்லாரையும் அங்கையே முடிச்சுப் போடுவாங்களோ தெரியாது. நீ மணி அண்ணாவை( தலைவருக்கு மணி என்றும் ஒரு பெயர் இருந்தது) கவனமாகப் பார்த்துக்கோ" என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதிருக் கின்றார். இந்திய அரசின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற எமது போராளிகளுக்கு பொறுப்பாளராக பொன்னம்மானே செயற்பட்டுஇருக்கின்றார்.அங்கு மட்டுமன்றி தமிழகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொன்னம்மானையே தேசியத் தலைவர் அவர்கள் பொறுப்பாளராக நியமித்திருந் தார்.இந்தியாவில் வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமின் பொறுப்பாளராக செயற்பட்ட பொன்னம்மான் அந்தப் பயிற்சிக் காலத்திலேயே மற்றைய போராளிகளை இயக்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கியவர். அந்தப் பயிற்சி முகாமிற்தான் கிட்டு,விக்டர்,புலேந்திரன்,சூசை,பொட்டு, கணேஷ்,அருணா,ராதா,பரமதேவா, பதுமன், நம்மாள் உட்பட நூறு போராளிகள் பயிற்சி எடுத்தனர். முதலாவது பயிற்சி முகாமினை பொறுப்பேற்று நடத்தியதோடு தானும் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிய பொன்னம்மானுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருந்தது.மேட்டூர்,சிறுமலை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களை வழி நடத்தும் பொறுப்பை தேசியத் தலைவர் ஒப்படைத்திருந்தார். தலைவர் ஒப்படைத்த பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் பொன்னம்மான். கைக்குண்டுகள் தயாரிப்பதிலும் பொன்னம்மானின் பணி மிகப்பெரிய அளவில் இருந்தது.தமிழ்நாட்டில் பயிற்சி முகாம்கள் முடிவடைந்து நாட்டுக்குச் சென்ற பின்பும் அவரது தொழில்நுட்ப வேலைகளை கிட்டுவோடு இணைந்து மேற்கொண்டவர் பொன்னம்மான். இயக்கத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொன்னம்மானின் பணி பாரியது. வெடி மருந்துகளைக் கையாள்வதிலும் வல்லுனராக விளங்கியவர் அவர். பொன்னம்மான் நாட்டுக்குச் சென்ற பின் கிட்டு அவர்களோடு இணைந்து தொழில்நுட்பத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி கைக்குண்டுகள் தயாரிப்பு போன்ற வேலைகளும் இடம் பெற்றன. 1987ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி.யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்திருந்த சிறீலங்காப் படை முகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு கிட்டுவும் தோழர்களும் திட்டம் தீட்டினார்கள்.அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்காக பொன்னம்மானும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த தார். அந்தப் படை முகாமுக்கு தினம் தோறும் தண்ணீர் எடுத்துக் கொண்டு பவுசர் ஒன்று செல்வதை அவதானித்த புலிகள் அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து வெடிமருந்து நிரப்பிக் கொண்டு சென்று தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது. பவுசர் இரண்டு பகுதியாகப் பிரிக்கப் பட்டு கீழ் பகுதி வெடி மருந்து நிரப்பிய பகுதியாகவும்,மேல் பகுதி நீர் நிரம்பிய பகுதியாகவும் பிரிக்கப் பட்டது. பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் மேற் கொண்டிருந்தார்.அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கேடில்ஸும் வாசுவும் இணைந்தே அந்த பவுசரை தயாரித்து இருந்தார்கள். 14.02.1987 அன்று தாக்குதல் நடத்துவது என திட்டம் தீட்டப்பட்டிருந்தது.முதல் நாள் இரவிரவாக பொன்னம்மான்,வாசு, ரஞ்சன் ஆகியோர் வெடி மருந்தை நிரப்பினர்.அதிகாலை வெடிமருந்து நிரப்பப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது.நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது.பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான்,கேடில்ஸ், வாசு ஆகியோரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அனைத்து நடவடிக்கைகளினதும் ஒருங்கிணைப்பாளராக கிட்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்.மாலை 5 மணியளவில் தாக்குதலுக்குச் செல்லும் எல்லாக் குழுக்களையும் கிட்டு சரி பார்த்துக் கொண்டு இருந்தார். சரியாக 5.30 மணியளவில் மிகப்பெரிய சப்தம்.பூமியே ஒரு முறை அதிர்ந்தது. கிட்டு பொன்னம்மானை வாக்கியில் கூப்பிட்டார்.கேடில்ஸைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார்.யாரிடம் இருந்தும் தொடர்பு கிடைக்கவில்லை. ஜொனியை அழைத்து அந்த இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது அந்தப் பகுதி எங்கும் தூசி மயம்.அந்த இடத்தில் பெரிய குழி.அதற்கருகில் கேடில்ஸின் கார் நொருங்கிப் போய்க் கிடந்தது. அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ்,வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்திற்கு வந்ததாக கூட இருந்தவர்கள் கூறினார்கள்.பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது சிறிது ஒழுகியதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து நால்வரும் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்கள்.அந்த துவாரத்தை அடைக்கும் முயற்சியின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.அங்கு வாசுவின் பிஸ்டலும் அடையாள அட்டையும், கேடில்ஸின் காற்சட்டையின் ஒரு பகுதியுமே கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடிய விதமாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.ஈழக் காற்றோடு காற்றாய் பொன்னம்மான் மறைந்து விட்டார். " தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா?" என்ற பொன்னம்மான் அடிக்கடி பாடும் அந்த வரிகள் இப்போதும் எங்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலால் அவர்கள் தப்ப முன் பிடிக்க முடியவில்லையா?- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
ஓ சுகுமாரி - நடனங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.