Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34945
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. டி20 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் சாதனை… யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்? christopherOct 18, 2022 18:25PM நடப்பாண்டு டி20 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை சென்னையில் பிறந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி வரும் கார்த்திக் மெய்யப்பன் படைத்துள்ளார். கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பதை அரிதாகவே பார்க்க முடியும். அதிலும் உலகக்கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பது ஒரு வீரரின் உயரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 3வது நாளிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இளம் வீரரான கார்த்திக் மெய்யப்பன். குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் சுற்றுப் போட்டி ஜீலோங்கில் உள்ள சைமண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது இலங்கை அணி. முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி நமீபியா அணியிடம் அடிபணிந்த நிலையில், இந்த ஆட்டத்தை இலங்கை அணி கவனமுடன் நிதானமாக துவங்கியது. ஹாட்ரிக் விக்கெட்டில் சிதறிய இலங்கை! இதனால் 14 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது இலங்கை அணி. இந்நிலையில் 15 ஓவரை யுஏஇ அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் வீசினார். அதுவரை நன்றாக விளையாடிய இலங்கை அணி மெய்யப்பனின் அந்த ஓவரில் சட்டென சிதற தொடங்கியது. முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில், 4வது பந்தில் இலங்கை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பஷில் ராஜபக்‌ஷே விக்கெட்டை வீழ்த்தினார். 5வது பந்தில் தனது கூக்லி பந்துவீச்சில் அசலங்காவை அலேக்காக டக்அவுட் ஆக்கினார். இதனையடுத்து பரபரப்பான ஓவரில் கடைசி பந்தினை வீசினார் மெய்யப்பன். இதில் இலங்கை அணி கேப்டன் ஷனகா கிளீன் போல்டாக, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கார்த்திக் மெய்யப்பன். மேலும் டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கார்த்திக் மெய்யப்பன். யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்? ஆகா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் கார்த்திக் மெய்யப்பனா… பெயரைக் கேட்டதும் தமிழ் பெயர் போன்று தோன்றுகிறதே… அவர் இந்தியரா என்று உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? ஆம் அதில் 100 சதவீதம் உண்மை உள்ளது என்பது அனைவருக்கும் நிச்சயம் ஆச்சரியமளிக்கும். 22 வயதான கார்த்திக் மெய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் கடந்த 2006ம் ஆண்டு துபாய்க்கு குடிப்பெயர்ந்த நிலையில், அங்குள்ள வின்செஸ்டர் பள்ளியில் கல்வி பயின்றார். அப்போது வலது கை சுழற்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்த கார்த்திக் மெய்யப்பன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை U-19 போட்டியில் யுஏஇ அணிக்கு மெய்யப்பன் கேப்டனாக செயல்பட்டார், அதனைத் தொடர்ந்து வங்காளதேசம் 2020ம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பையிலும் அவர் தனது நாட்டுக்காக விளையாடினார். அதே ஆண்டில் யுஏஇ யில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியிலும் இடம்பிடித்தார். பின்னர் கடந்த ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 தொடரில் அறிமுகமானார் மெய்யப்பன். அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடருக்கும் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார் கார்த்திக் மெய்யப்பன். இதுவரை இந்திய அணி வீரர்கள் யாரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் சாதனை படைத்தது இல்லை. இந்நிலையில் இந்திய வம்சாவளியும், தமிழகத்தில் பிறந்தவருமான கார்த்திக் மெய்யப்பன் சாதனை குறித்து பலரும் சமூக வலை தளங்களில் பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கைக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது. ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் இதுவரை ஹாட்ரிக் சாதனை படைத்தவர்கள் பட்டியல்: பிரட் லீ vs பங்களாதேஷ், 2007 கர்டிஸ் கேம்பர் vs நெதர்லாந்து, 2021 வனிந்து ஹசரங்க vs தென்னாப்பிரிக்கா, 2021 காகிசோ ரபாடா vs இங்கிலாந்து, 2021 https://minnambalam.com/sports/who-is-the-karthik-meiyappan/
  2. பிழையை திருத்தியுள்ளேன்☺️ ஒருத்தன் பிரிட்ஜின் தொங்குபாலத்தில் ஏறி இருந்து பண்ணிய ஆர்ப்பாட்டத்தால் எல்லாம் மாறிவிட்டது!
  3. நாளைய புதன் (19 ஒக்டோபர்) இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL எதிர் SCO 14 பேர் அயர்லாந்து வெல்வதாகவும் 05 பேர் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர். அயர்லாந்து பையன்26 முதல்வன் சுவி அகஸ்தியன் தமிழ் சிறி பிரபா குமாரசாமி நுணாவிலான் வாதவூரான் கிருபன் ஏராளன் புலவர் எப்போதும் தமிழன் நீர்வேலியான் ஸ்கொட்லாந்து ஈழப்பிரியன் வாத்தியார் சுவைப்பிரியன் கறுப்பி கல்யாணி நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI எதிர் ZIM ஈழப்பிரியன் ஐயா ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்துள்ளார். மற்றவர்கள் எல்லோரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லுமா அல்லது ஸிம்பாப்வேயின் தயவால் ஈழப்பிரியன் ஐயாவைத் தவிர மற்றவர்களுக்கு புஷ்டியான முட்டைப்பொரியல் கிடைக்குமா என்பதை நாளைய இரண்டாவது போட்டியின் பின்னர் அறிந்துகொள்ளலாம்!
  4. இன்று நடந்த முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் நமீபியா அணியை வெற்றிகொண்டது. NAM 121/6 NED 122/5 இரண்டாவது போட்டியில் சிறிலங்கா அணி 79 ஓட்டங்களால் ஐக்கிய அரபு அமீரக அணியை வெற்றிகொண்டது. SRI 152/8 UAE 73 (சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது) இன்றைய இரு போட்டிகளினது முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 8 2 சுவைப்பிரியன் 8 3 ஏராளன் 8 4 கறுப்பி 8 5 ஈழப்பிரியன் 6 6 பையன்26 6 7 அகஸ்தியன் 6 8 வாத்தியார் 6 9 புலவர் 6 10 எப்போதும் தமிழன் 6 11 நீர்வேலியான் 6 12 முதல்வன் 4 13 தமிழ் சிறி 4 14 குமாரசாமி 4 15 வாதவூரான் 4 16 கிருபன் 4 17 கல்யாணி 4 18 பிரபா 2 19 நுணாவிலான் 2
  5. நாளைய செவ்வாய் (18 ஒக்டோபர்) இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 14 பேர் நமீபியா வெல்வதாகவும் 05 பேர் நெதர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா ஈழப்பிரியன் பையன்26 முதல்வன் அகஸ்தியன் தமிழ் சிறி பிரபா குமாரசாமி நுணாவிலான் வாதவூரான் கிருபன் புலவர் எப்போதும் தமிழன் கல்யாணி நீர்வேலியான் நெதர்லாந்து சுவி வாத்தியார் சுவைப்பிரியன் ஏராளன் கறுப்பி நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI எதிர் UAE அனைவரும் சிறிலங்கா வெல்வதாகக் கணித்துள்ளனர். சிறிலங்கா வெல்லுமா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தின் தயவால் புஷ்டியான முட்டைப்பொரியல் கிடைக்குமா என்பதை நாளைய இரண்டாவது போட்டியின் பின்னர் அறிந்துகொள்ளலாம்!
  6. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 31 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இன்றைய இரு போட்டிகளினதும் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலை. நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 4 2 பையன்26 4 3 சுவி 4 4 அகஸ்தியன் 4 5 சுவைப்பிரியன் 4 6 ஏராளன் 4 7 புலவர் 4 8 எப்போதும் தமிழன் 4 9 கறுப்பி 4 10 நீர்வேலியான் 4 11 முதல்வன் 2 12 தமிழ் சிறி 2 13 குமாரசாமி 2 14 வாதவூரான் 2 15 வாத்தியார் 2 16 கிருபன் 2 17 கல்யாணி 2 18 பிரபா 0 19 நுணாவிலான் 0 சுவி ஐயா, இனிமேல் முதலாவது இடத்திற்கு வரச் சாத்தியம் மிகவும் அரிது!
  7. கலந்துகொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்😒 கால்பந்து போட்டிக்கு தயாரிப்பமா என்று யோசிக்கின்றேன்!
  8. தற்போதைய யாழ் களப் போட்டியாளர்களின் நிலை! நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 சுவி 4
  9. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 5 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்களில் சுவி ஐயாவைத் தவிர அனைவருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆப்பு வைத்துவிட்டது
  10. இன்று சுவி ஐயா நரி 🦊 முகத்தில் முழிச்சிருக்கின்றார்! WI 84-8 ஸ்கொட்லாந்து வெல்ல இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் எடுத்தால் போதும்!
  11. தலையின்ர பேர் பட்டியலில் கட்டாயம் கடைசியில்தான் இருக்கும்! அதுக்கு வேறு ஒருவரும் போட்டிபோடவேண்டாம்!
  12. நாளை திங்கள் (17 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO எதிர் WI 18 பேர் மேற்கிந்தியத் தீவுகள் வெல்வதாகவும் ஒரே ஒருவர் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஸ்கொட்லாந்து சுவி நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? ....... 4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL எதிர் ZIM 08 பேர் அயர்லாந்து வெல்வதாகவும் 11 பேர் ஸிம்பாப்வே வெல்வதாகவும் கணித்துள்ளனர். அயர்லாந்து முதல்வன் சுவி தமிழ் சிறி பிரபா நுணாவிலான் வாதவூரான் கிருபன் கல்யாணி ஸிம்பாப்வே ஈழப்பிரியன் பையன்26 அகஸ்தியன் குமாரசாமி வாத்தியார் சுவைப்பிரியன் ஏராளன் புலவர் எப்போதும் தமிழன் கறுப்பி நீர்வேலியான் நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  13. இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 2 2 பையன்26 2 3 முதல்வன் 2 4 சுவி 2 5 அகஸ்தியன் 2 6 தமிழ் சிறி 2 7 வாதவூரான் 2 8 கிருபன் 2 9 சுவைப்பிரியன் 2 10 ஏராளன் 2 11 புலவர் 2 12 எப்போதும் தமிழன் 2 13 கறுப்பி 2 14 கல்யாணி 2 15 நீர்வேலியான் 2 16 பிரபா 0 17 குமாரசாமி 0 18 நுணாவிலான் 0 19 வாத்தியார் 0 நமீபியா அணியின் எதிர்பாராத வெற்றி சுப்பர் 12 போட்டிகளில் தாக்கத்தை உண்டு பண்ணி பலரின் புள்ளிக் கனவுகளுக்கு ஆப்பாக இருக்கப்போகின்றது
  14. கூகிள் ஷீற் கைவிடாது. ஆனால் கார் மணிக்கணக்காக ஓடிக்கொண்டிருப்பதால் கூகிள் சீற்றில் கைவைக்க இன்னும் 5 மணிநேரம் எடுக்கும்☺️ அது இராத்திரி! வீடியோ வேறு எடுத்து வைச்சிருக்கிறாங்கள் நலன் விரும்பிகள்😊
  15. இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி. புள்ளிகள் பின்னர் தரப்படும்
  16. காரியமில்லை @MEERA! முட்டைக்கோப்பியுடன் யாழ்கள வீரர்கள் போட்டிகளில் வீறுடன் மோதுகின்றனர்.! கண்டு களியுங்கள்!!🤪
  17. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சிறிலங்கா 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது. யாழ்களப் போட்டியாளர்கள் அனைவருக்கும் நமீபியா ஆப்பு வைத்துவிட்டது பிரித்தானிய நேரம்தான் கேள்விக்கொத்தில் உள்ளன. Sky Sports இல் பார்க்கலாம். இலவசமாகப் பார்க்கும் வழிகள் நமக்குத் தெரியாது!
  18. இன்றைய இரண்டாவது போட்டியின் கணிப்புக்கள் 2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED எதிர் UAE 15 பேர் நெதர்லாந்துஅணி வெல்வதாகவும் 04 பேர் ஐக்கிய அரபு அமீரகம் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நெதர்லாந்து ஈழப்பிரியன் பையன்26 முதல்வன் சுவி அகஸ்தியன் தமிழ் சிறி வாதவூரான் கிருபன் சுவைப்பிரியன் ஏராளன் புலவர் எப்போதும் தமிழன் கறுப்பி கல்யாணி நீர்வேலியான் ஐக்கிய அரபு அமீரகம் பிரபா குமாரசாமி நுணாவிலான் வாத்தியார் இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
  19. உலகக்கிண்ணப் போட்டிகள் இன்று ஆரம்பித்துள்ளன. இன்று ஞாயிறு (16 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM எதிர் SRI எல்லோரும் சிறிலங்கா அணி வெல்வதாகக் கணித்துள்ளனர். எல்லோருக்கும் முட்டை என்றுதான் இறுதி நிலவரம் சொல்கின்றது!
  20. @நீர்வேலியான், உங்கள் தெரிவுகளின்படி IRL சுப்பர் 12 சுற்று பிரிவு 1 இல் வராது. பின்வரும் அணிகளில் ஒன்றை மாற்றவிரும்பினால் சொல்லுங்கள். AFG, NZL, SRI ,ZIM யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவோர் பதிந்தது நிலை போட்டியாளர் 1 1 ஈழப்பிரியன் 2 2 பையன்26 3 3 முதல்வன் 4 4 சுவி 5 5 அகஸ்தியன் 6 6 தமிழ் சிறி 7 7 பிரபா 8 8 குமாரசாமி 9 9 நுணாவிலான் 10 10 வாதவூரான் 11 11 வாத்தியார் 12 12 கிருபன் 13 13 சுவைப்பிரியன் 14 14 ஏராளன் 15 15 புலவர் 16 16 எப்போதும் தமிழன் 17 17 கறுப்பி 18 18 கல்யாணி 19 19 நீர்வேலியான் எல்லோருக்கும் வெற்றிக் கனியைத் தட்ட வாழ்த்துக்கள்!
  21. முதல் தடவை @புலவர் பங்குபற்றுவதாலும் முதலில் ஈ அடிச்சான் கொப்பி அடிச்சான் என பதில்கள் இருந்தததாலும் (இப்ப மட்டும் என்னவாம்!), திருத்திய பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 😁 விதிகளை எல்லோருக்கும் தளர்த்தமுடியாது! எனினும் சுவாரசியம் வேண்டுமல்லவா!
  22. விரைவில் கலந்துகொள்ளுங்கள். ஐந்து மணி நேரம் மாத்திரமே உள்ளது @நீர்வேலியான்! யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கேள்விக்கொத்து கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/1OPJOCTwOlLDCdVlsKYmp4AkLFAufpUVXCKaXEbs1rSw/edit?usp=sharing முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும். பின்வரும் மஞ்சள் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய முதல் சுற்று அணிகளின் பெயரை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 12 சுற்றில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளைக் காட்டும். row22: #A1 - ? (2 புள்ளிகள்) A1 #A2 - ? (1 புள்ளிகள்) A2 row 32: #B1 - ? (2 புள்ளிகள்) B1 #B2 - ? (1 புள்ளிகள்) B2 ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணியபின்னர் column E ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.
  23. கல்யாணியின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. பதிந்தது நிலை போட்டியாளர் 1 1 ஈழப்பிரியன் 2 2 பையன்26 3 3 முதல்வன் 4 4 சுவி 5 5 அகஸ்தியன் 6 6 தமிழ் சிறி 7 7 பிரபா 8 8 குமாரசாமி 9 9 நுணாவிலான் 10 10 வாதவூரான் 11 11 வாத்தியார் 12 12 கிருபன் 13 13 சுவைப்பிரியன் 14 14 ஏராளன் 15 15 புலவர் 16 16 எப்போதும் தமிழன் 17 17 கறுப்பி 18 18 கல்யாணி இன்றிரவு பிரித்தானிய நேரம் 10 மணிக்கு முன்னர் கலந்துகொள்ள விரும்புபவர்கள் பதில்களைத் தாருங்கள். இல்லையேல் போட்டியில் பார்வையாளராகத்தான் இருக்கமுடியும்!!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.