Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34948
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. மகாராணி காலமாகியதால் இணைய சேவைகளில் தடங்கல்கள் வராமல் இருக்க வேலை செய்யவேண்டும் என்று பேய்க்காட்டித்தான் கேள்விக்கொத்தை புதுப்பித்தேன். 😃
  2. கேள்விக்கொத்து தயாரிக்க போட்டி நிரல்தான் தேவைப்பட்டது. கூகிள் ஷீற் ஏற்கனவே இருந்ததால் விரைவில் தயாரிக்க முடிந்தது!😀 இனி பதில்களில் சரி, பிழை பார்க்கவும் அந்த தரவுகளை இன்னொரு கூகிள் ஷீற்றுக்கு ஏற்றவும்தான் நேரம் எடுக்கும். 😁
  3. இங்கிலாந்து வெல்லவேண்டும் என்று ஆசைதான். ஆனால் யாழ் களப் போட்டியில் வெல்லவேண்டுமென்றால் பல்வேறு சூத்திரங்களைப் பாவித்து வெல்லும் அணியைக் கணிக்கவேண்டும்! @ரஞ்சித், அவுஸில் போட்டி நடப்பதால் நீங்களும் கலந்துகொள்ளுங்கள். 😁 கூகிள் ஷீற் கேள்விக்கொத்து விடையளிக்க மிகவும் இலகுவானது😃 @ஈழப்பிரியன் ஐயா வேகமாக பதில்களைப் பதிந்துள்ளார்😍
  4. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கேள்விக்கொத்து கூகிள் ஷீற்றில் தரவேற்றப்பட்டுள்ளது. பின்வரும் இணைப்பின் மூலம் பதில்களைத் தெரிவு செய்யலாம். https://docs.google.com/spreadsheets/d/1OPJOCTwOlLDCdVlsKYmp4AkLFAufpUVXCKaXEbs1rSw/edit?usp=sharing முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் முதல் இரண்டு இடங்களுக்கு வரும் அணிகளைத் தெரிவு செய்ய உதவிகள் கூகிள் ஷீற்றில் உண்டு. எனினும் பதிலை போட்டியாளர் விரும்பியபடி தெரிவுசெய்யவேண்டும். பின்வரும் மஞ்சள் பெட்டிகளில் உள்ளவற்றை விரும்பிய முதல் சுற்று அணிகளின் பெயரை சுருக்கிய வடிவில் தந்தால், சுப்பர் 12 சுற்றில் உள்ள கேள்விகள் தானாகவே சரியான அணிகளைக் காட்டும். row22: #A1 - ? (2 புள்ளிகள்) A1 #A2 - ? (1 புள்ளிகள்) A2 row 32: #B1 - ? (2 புள்ளிகள்) B1 #B2 - ? (1 புள்ளிகள்) B2 ஒருவர் எடிற் பண்ணும்வேளை இன்னொருவரும் எடிற் பண்ணினால் பதில்கள் மாற்றம் அடையலாம். எனவே, பதில்களை பிரதி பண்ணியபின்னர் column E ஐ வெறுமையாக்கிவிடுங்கள்.
  5. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 172 முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். ================ கேள்விக்கொத்து முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை: முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM எதிர் SRI 2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED எதிர் UAE 3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO எதிர் WI 4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL எதிர் ZIM 5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM எதிர் NED 6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI எதிர் UAE 7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL எதிர் SCO 8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI எதிர் ZIM 9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED எதிர் SRI 10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM எதிர் UAE 11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL எதிர் WI 12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO எதிர் ZIM முதல் சுற்று பிரிவு A: 13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) நமீபியா - NAM நெதர்லாந்து - NED சிறிலங்கா - SRI ஐக்கிய அரபு அமீரகம் - UAE 14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) 15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று பிரிவு B: 16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) அயர்லாந்து - IRL ஸ்கொட்லாந்து - SCO மேற்கிந்தியத் தீவுகள் - WI ஸிம்பாப்வே - ZIM 17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) 18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை: 19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS எதிர் NZL 20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG எதிர் ENG 21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். A1 எதிர் B2 22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று BAN எதிர் A2 24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று RSA எதிர் B1 25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AUS எதிர் A1 26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று ENG எதிர் B2 27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG எதிர் NZL 28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN எதிர் RSA 29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று IND எதிர் A2 30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று PAK எதிர் B1 31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AFG எதிர் B2 32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று NZL எதிர் A1 34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று BAN எதிர் B1 35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று PAK எதிர் A2 36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND எதிர் RSA 37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று AUS எதிர் B2 38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று AFG எதிர் A1 39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG எதிர் NZL 40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 * கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும். B1 எதிர் A2 41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN எதிர் IND 42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK எதிர் RSA 43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று NZL எதிர் B2 44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS எதிர் AFG 45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று ENG எதிர் A1 46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 * கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று RSA எதிர் A2 47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN எதிர் PAK 48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 * கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று IND எதிர் B1 சுப்பர் 12 பிரிவு 1: 49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ஆப்கானிஸ்தான் - AFG அவுஸ்திரேலியா - AUS இங்கிலாந்து - ENG நியூஸிலாந்து - NZL A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி 50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி A1 - ? (3 புள்ளிகள்) #அணி A2 - ? (2 புள்ளிகள்) 51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சுப்பர் 12 பிரிவு 2: 52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) பங்களாதேஷ் - BAN இந்தியா - IND பாகிஸ்தான் - PAK தென்னாபிரிக்கா - RSA A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி 53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி B1 - ? (2 புள்ளிகள்) #அணி B2 - ? (1 புள்ளிகள்) 54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி, அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட், அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) இறுதிப் போட்டி: ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண், அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) 59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) 60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) 61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) 63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) 65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) 67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) 68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) 69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி சனி 15 அக்டோபர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்!
  6. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 172 முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். முதல் சுற்று அணிகள்: NAM Namibia (NAM) NED Netherlands (NED) SRI Sri Lanka (SRI) UAE United Arab Emirates (UAE) IRL Ireland (IRL) SCO Scotland (SCO) WI West Indies (WI) ZIM Zimbabwe (ZIM) சுப்பர் 12 சுற்றில் உள்ள முழு அங்கீகாரமுள்ள 8 அணிகள்: AFG Afghanistan (AFG) AUS Australia (AUS) BAN Bangladesh (BAN) ENG England (ENG) IND India (IND) NZL New Zealand (NZL) PAK Pakistan (PAK) RSA South Africa (RSA) முதல் சுற்று பிரிவு A,பிரிவு B என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு A இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு B இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் அடுத்த சுப்பர் 12 சுற்றுக்குப் போகும். சுப்பர் 12 சுற்றும் பிரிவு 1, பிரிவு 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் அரையிறுதிப் போட்டிகளுக்கு பின்வருமாறு தெரிவு செய்யப்படும். அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் இரண்டும் 13 நவம்பர் அன்று மெல்பேர்ணில் நடைபெறும் இறுதிப் போட்டியில் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி சனி 15 அக்டோபர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  7. முதல் சுற்றில் மோதும் அணிகள் பிரிவு A: நமீபியா: Gerhard Erasmus (c), JJ Smit, Divan la Cock, Stephan Baard, Nicol Loftie Eaton, Jan Frylinck, David Wiese, Ruben Trumpelmann, Zane Green, Bernard Scholtz, Tangeni, Lungameni, Michael van Lingen, Ben Shikongo, Karl Birkenstock, Lohan Louwrens, Helao Ya France. நெதர்லாந்து: Scott Edwards (c), Colin Ackermann, Shariz Ahmad, Logan van Beek, Tom Cooper, Brandon Glover, Timm van der Gugten, Fred Klaassen, Bas de Leede, Paul van Meekeren, Roelof van der Merwe, Stephan Myburgh, Teja Nidamanuru, Max O’Dowd, Tim Pringle, Vikram Singh சிறிலங்கா: Dasun Shanaka (c), Danushka Gunathilaka, Pathum Nissanka, Kusal Mendis, Charith Asalanka, Bhanuka Rajapaksa, Dhananjaya de Silva, Wanindu Hasaranga, Maheesh Theekshana, Jeffrey Vandersay, Chamika Karunaratne, Dushmantha Chameera (Subject to fitness), Lahiru Kumara (Subject to fitness), Dilshan Madushanka, Pramod Madushan Standby Players: Ashen Bandara, Praveen Jayawickrema, Dinesh Chandimal, Binura Fernando, Nuwanidu Fernando ஐக்கிய அரபு அமீரகம்: Yet to be announced பிரிவு B: அயர்லாந்து: Yet to be announced ஸ்கொட்லாந்து: Yet to be announced மேற்கிந்தியத் தீவுகள்: Nicholas Pooran (c), Rovman Powell, Yannic Cariah, Johnson Charles, Sheldon Cottrell, Shimron Hetmyer, Jason Holder, Akeal Hosein, Alzarri Joseph, Brandon King, Evin Lewis, Kyle Mayers, Obed Mccoy, Raymon Reifer, Odean Smith ஸிம்பாப்வே: Craig Ervine (c), Ryan Burl, Regis Chakabva, Tendai Chatara, Bradley Evans, Luke Jongwe, Clive Madande, Wessly Madhevere, Wellington Masakadza, Tony Munyonga, Blessing Muzarabani, Richard Ngarava, Sikandar Raza, Milton Shumba, Sean Williams Reserves: Tanaka Chivanga, Innocent Kaia, Kevin Kasuza, Tadiwanashe Marumani, Victor Nyauchi சுப்பர் 12 சுற்றில் மோதும் முழு அங்கீகாரமுள்ள 8 அணிகள் பிரிவு 1: ஆப்கானிஸ்தான்: Mohammad Nabi (c), Najibullah Zadran (vc), Rahmanullah Gurbaz (wk), Azmatullah Omarzai, Darwish Rasooli, Farid Ahmad Malik, Fazal Haq Farooqi, Hazratullah Zazai, Ibrahim Zadran, Mujeeb ur Rahman, Naveen ul Haq, Qais Ahmad, Rashid Khan, Salim Safi, Usman Ghani Reserves: Afsar Zazai, Sharafuddin Ashraf, Rahmat Shah, Gulbadin Naib அவுஸ்திரேலியா: Aaron Finch (c), Ashton Agar, Pat Cummins, Tim David, Josh Hazlewood, Josh Inglis, Mitchell Marsh, Glenn Maxwell, Kane Richardson, Steven Smith, Mitchell Starc, Marcus Stoinis, Matthew Wade, David Warner, Adam Zampa இங்கிலாந்து: Jos Buttler (c), Moeen Ali, Harry Brook, Sam Curran, Chris Jordan, Liam Livingstone, Dawid Malan, Adil Rashid, Phil Salt, Ben Stokes, Reece Topley, David Willey, Chris Woakes, Mark Wood, Alex Hales. Reserves: Liam Dawson, Richard Gleeson, Tymal Mills. நியூஸிலாந்து: Yet to be announced பிரிவு 2: பங்களாதேஷ்: Shakib Al Hasan, Sabbir Rahman, Mehidy Hasan Miraz, Afif Hossain, Mossadek Hossain, Litton Das, Yasir Ali, Nurul Hasan, Mustafizur Rahman, Saifuddin, Taskin Ahmed, Ebadot Hossain, Hasan Mahmud, Najmul Hossain, Nasum Ahmed Standby players: Shoriful Islam, Shak Mahedi Hasan, Rishad Hossain, Soumya Sarkar இந்தியா: Rohit Sharma (c), KL Rahul, Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, Rishabh Pant (wk), Dinesh Karthik (wk), Hardik Pandya, R Ashwin, Yuzvendra Chahal, Axar Patel, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Harshal Patel, Arshdeep Singh. Standby players: Mohammad Shami, Shreyas Iyer, Ravi Bishnoi, Deepak Chahar பாகிஸ்தான்: Babar Azam (c), Shadab Khan (vc), Asif Ali, Haider Ali, Haris Rauf, Iftikhar Ahmed, Khushdil Shah, Mohammad Hasnain, Mohammad Nawaz, Mohammad Rizwan, Mohammad Wasim, Naseem Shah, Shaheen Shah Afridi, Shan Masood, Usman Qadir Reserves: Fakhar Zaman, Mohammad Haris, Shahnawaz Dahani தென்னாபிரிக்கா: Temba Bavuma (c), Quinton de Kock, Heinrich Klaasen, Reeza Hendricks, Keshav Maharaj, Aiden Markram, David Miller, Lungi Ngidi, Anrich Nortje, Wayne Parnell, Dwaine Pretorius, Kagiso Rabada, Rillee Rossouw, Tabraiz Shamsi, Tristan Stubbs. Reserves: Bjorn Fortuin, Marco Jansen, Andile Phehlukwayo.
  8. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. போட்டிகள் 16 அக்டோபர் 2022 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 13 நவம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: பிரிவு A: நமீபியா (NAM) நெதர்லாந்து (NED) சிறிலங்கா (SRI) ஐக்கிய அரபு அமீரகம் (UAE) பிரிவு B: அயர்லாந்து (IRL) ஸ்கொட்லாந்து (SCO) மேற்கிந்தியத் தீவுகள் (WI) ஸிம்பாப்வே (ZIM) முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 16 அக்டோபர் முதல் 21 அக்டோபர் வரை ஜுலொங் மற்றும் ஹொபாட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. பிரிவு A போட்டிகள் ஜுலொங்கில் நடைபெறவுள்ளன. பிரிவு B போட்டிகள் ஹொபாட்டில் நடைபெறவுள்ளன. பிரிவு A இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு B இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 12 சுற்று: சுப்பர் 12 சுற்றில் T20 முழு அங்கீகாரம் உள்ள எட்டு அணிகளுடன் முதல் சுற்றில் தேர்வான 4 அணிகளும் இணைந்து மொத்தமாக 12 அணிகள் விளையாடவுள்ளன. இந்த சுப்பர் 12 சுற்றிலும் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு 1: ஆப்கானிஸ்தான் அவுஸ்திரேலியா இங்கிலாந்து நியூஸிலாந்து A1 (முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி) B2 (முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி) பிரிவு 2: பங்களாதேஷ் இந்தியா பாகிஸ்தான் தென்னாபிரிக்கா B1 (முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி) A2 (முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி) சுப்பர் 12 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 22 அக்டோபர் முதல் 6 நவம்பர் வரை சிட்னி, பேர்த், ஹொபாட், மெல்பேர்ண், பிரிஸ்பேன், அடிலெயிட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் பிரிவு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு இரண்டில் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) vs அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) vs அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) முதலாவது அரையிறுதிப் போட்டி 9 நவம்பர் அன்று சிட்னியிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 10 நவம்பர் அன்று அடிலெயிட்டிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகள் வெல்லும் அணிகள் 13 நவம்பர் அன்று மெல்பேர்ண் நகரில் மோதவுள்ளன. கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  9. இந்த வார இறுதியில் திரி திறக்கின்றேன்😀 என்ன சாத்திரம் பார்த்தாலும் ஆப்கானிஸ்தானே வெல்லப்போகின்றது😆
  10. போட்டியில் கலந்துகொள்ள 10 பேருக்கு மேல் வருவதாக இருந்தால் கேள்விக்கொத்தை தயாரிக்கலாம். @goshan_che ஐயும் அழைத்து வாருங்கள்!
  11. டி-20 உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு! JegadeeshSep 12, 2022 17:56PM ஷேர் செய்ய : ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிகளை பி.சி.சி.ஐ இன்று (செப்டம்பர் 12 ) அறிவித்துள்ளது. இதில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக உள்ளனர். ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா. தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா. காயம் காரணமாக இந்திய அணி வீரர் ரவீந்தர ஜடேஜா இந்த அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/t20-world-cup-india-squad-announcement/
  12. இலங்கையில் காலாவதியாகவுள்ள எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள்! இலங்கையால் தருவிக்கப்பட்ட எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் வரும் மாதத்தில் காலாவதியாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு தடுப்பூசியும் 10-15 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தளவு அதிகப்படியான அளவு இறக்குமதிக்கு யார் ஒப்புதல் அளித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்த மாதத்திற்கு முன்னர் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமற்றது என்று சுட்டிக்காட்டிய அவர், மருந்தளவு பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறதா என்றும் வினவியுள்ளார். எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, தேவைப்படும் சனத்தொகையை கணக்கிட்ட பின்னரே தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், பெரும்பாலான மக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசிகளை பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். https://newuthayan.com/252-3/
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்🎊🎂🎉🍾🎈
  14. முதலிகே, சிறிதம்ம தேரர், ஹஷாந்த ஆகியோர் தங்காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு முகாமில் 23 Aug, 2022 | 09:46 PM ( எம்.எப்.எம்.பஸீர்) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரும், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பொறுப்பில் உள்ள தங்காலை, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்ப்ட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ், இது தொடர்பில் எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்ட நிலையிலேயே, அவர்கள் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, அரசுக்கு எதிரான சதிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா என சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனபப்டும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைந்த பொலிஸ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளரின் தகவல்கள் பிரகாரம், 90 நாள் தடுப்புக் காவல் விசாரண நடக்கும் தற்போதைய சூழலில், தங்காலையில் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் விரும்பினால் சட்டத்தரணிகளை சத்திக்க அனுமதியளிக்கப்படும் என அறிய முடிகின்றஹு. அத்துடன் நெருங்கிய உறவினர்கள் என கிராம சேவகரின் அத்தாட்சியுடன் வரும் உறவினர்கள் மட்டும் அவர்களை வார நாட்களில் ஒரு நாளில் மட்டும் உற்பகல் 9.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பார்ப்பதற்கு அனுமதிப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது ஐந்து லாம்பு சந்தியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரோடு ஒன்றாக பயணித்த ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோர் கடந்த 18 ஆம் திகதி முதல், பயங்கரவாத தடை சட்டத்தின் விதிவிதாங்கள் பிரகாரம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழான 72 மணி நேர தடுப்புக் காவலின் கீழ், பேலியகொட பொலிஸ் நிலைய கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டு களனி வலய குற்ற விசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்தனர். கல்வெவ சிறிதம்ம தேரர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்ர்து வைக்கப்ப்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந் நிலையில் இந்த மூவர் குறித்த விசாரணைகளையும் உடனடியாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கையளிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கடந்த 21 ஆம் திகதி ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணைகளில், இந்த மூன்று பேரும் அரசுக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து அவதானம் செலுத்தி விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் பயங்கர்வாத நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவும் ஆலோசனை வழ்னக்கப்பட்ட நிலையிலேயே, சி.ரி.ஐ.டி. மற்றும் சி.ஐ.டி. இணைந்த பொலிஸ் குழுவொன்றூடாக விசாரணைகல் தர்போது முன்னெடுக்கப்படுகின்றன. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 18 ஆம் திகதி மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கறுவாத்தோட்டம், கொம்பனித் தெரு, பொரளை பொலிஸ் பிரிவுகள் மற்றும் களனி வலய குற்ற விசாரணைப் பிரிவு என்பனவற்றால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரும் உள்ளடங்கும் நிலையில் அந்த மூன்று பேருக்கு எதிராக மட்டும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான முதல் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை, கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்ப்ட்டு நீதிமன்றில் ஆஜர்ச் எய்யப்பட்ட 16 பேரில் ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/134249
  15. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் நன்றிகள்!🙏🏽 நிழலியின் மகனுக்கும் அன்றுதான் பிறந்தநாள் (நிழலியின் மகனுக்கு எனது வயதில் இருந்து ஒன்றிரண்டு குறைவு, அடுத்தடுத்த வருடங்களில் எட்டிப்பிடித்துவிடுவார்!)
  16. குமாரசாமி ஐயா, புத்தன் அங்கிள் இருவருக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  17. இலங்கையில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்படவில்லையாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார் . இதேவேளை நாளாந்த கொரோனா தொற்றாளர்களுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா தொற்றாளர்களின் வேகம் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார் .நேற்று வெள்ளிக்கிழமை 131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/இலங்கையில்-தற்போது-நாளாந/
  18. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த 5 புகைப்படங்களையும் புரிந்துகொள்வது எப்படி? ஜூலை 18, 2022 “எங்கோ, நம்பமுடியாத ஒன்று நாம் அறியக் காத்திருக்கிறது” – இது பிரபல வானியல் அறிஞரான கார்ல் சாகனின் வார்த்தைகள். இதனை குறிப்பிட்டுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த அரிய புகைப்படங்களை நாசா உலகுக்குப் பகிர்ந்தது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பரந்து விரிந்திருக்கும் விண்வெளியில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் நாம் அறிந்துகொள்ள என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம். SMACS 0723: விண்வெளியில் ஒரு சிறு விண்மீன் திரள்களை (galaxies) இப்படம் குறிக்கிறது. அதாவது, உங்கள் கை நிறைய மணல்துகள்களை வைத்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு துகள் அளவுதான் இந்த விண்மீன் திரள்களின் கூட்டம். இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய துகளைத்தான் இப்படம் குறிக்கிறது. இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் நமது பிரபஞ்சம் எவ்வளவு பெரியதென்று.. இந்தப் படத்தை நீங்கள் கவனமாக பார்த்தால், விண்மீன் திரள்களை தெளிவாகக் காணலாம். சில விண்மீன் திரள்களின் ஈர்ப்பு விசையால் சிதைக்கப்பட்டிருப்பதால் அவை நீண்டு காணப்படுகின்றன. சில வட்டவடிவில் காணப்படுகின்றன. இதில் ஆங்காங்கே நட்சத்திரங்களும் மின்னுகின்றன. The Southern Ring Nebula – தெற்கு வளைய நெபுலா: இது விண்வெளியில் தெற்குப் பகுதியில் வளைய வடிவத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இது தெற்கு வளைய நெபுலா (The Southern Ring Nebula ) என்று அழைக்கப்படுகிறது. நெபுலா என்பதற்கு புகை அல்லது பனிமூட்டம் என்று பொருள். ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த நெபுலாவை பார்க்கும்போது, அவை ஒளிரும் மேகங்கள் போன்று தெரியும். ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ள தெற்கு வளைய நெபுலா ஜெல்லி மீன் போன்று காணப்படுகின்றது. ஹைட்ரஜன் நிறைந்துள்ள நெபுலாக்கள்தான் விண்வெளியில் நட்சத்திரங்கள் தோன்றும் இடங்களாக உள்ளன. நெபுலாக்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் மிகுந்த வெப்பத்தை கொண்டவை. இது பூமியிலிருந்து சுமார் 2,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன (1 ஒளி ஆண்டு = 9.5 டிரில்லியன் கிமீ). ஸ்டிபன்ஸ் குவின்டெட் – Stephan’s quintet: இப்படத்தில் ஐந்து விண்மீன் திரள்கள் (5 galaxies) உள்ளன. அதாவது நமது சூரியக் குடும்பத்தை போன்று ஐந்து விண்மீன் திரள்கள் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த விண்மீன் திரள்களை எட்வர்ட் ஸ்டீபன் என்பவர் 1877-ஆம் ஆண்டு கண்டறிந்தார். அதனால் இந்த விண்மீன் திரள்கள் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இதில் ’quintet’ என்பது 5 என்ற எண்ணிக்கையை குறிக்கும். நிறைய விண்மீன் திரள்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருந்ததை அப்போதுதான் விஞ்ஞானிகள் கண்டனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி Stephan’s quintet -ஐ தெளிவாக படப்பிடித்து அனுப்பியுள்ளது. இதில் ரெண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று பிணைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் விண்மீன்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை அறியலாம். மேலும் அப்பகுதியில் உள்ள கருத்துளைகளை அறிந்து கொள்ளவும் இந்தப் படம் உதவுகிறது. ஸ்டிபன்ஸ் குவின்டெட் பூமியிலிருந்து 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. கரினா நெபுலா – Carina Nebula: கரினா நெபுலா பொதுவாக மலை பள்ளத்தாக்குகள் போன்று காணப்படும். இதன் பின்பகுதியில் நீல நிற வானம் தெளிவாக தெரியும். இவை பூமியிலிருந்து 7,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. இவை வாயுகளாலும், தூசுகளாலும் ஆனது. நமது சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வளி மணடத்தில்தான் இவையும் அமைந்துள்ளன. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கரினா நெபுலாவை துல்லியமாக படம்பிடித்துள்ளது. அதில் அமைந்துள்ள நட்சத்திரங்களும் இப்படத்தில் தெளிவாக தெரிகின்றன. கரினா நெபுலாவின் முனைகளில் அமைந்துள்ள ’NGC 3324’ என்ற விண்மீன் கூட்டமும் இப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது. வெளிகோள் – WASP-96 b: இந்த வெளிகோள். 2014-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. விண்வெளியில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.இது பூமியிலிருந்து சுமார் 1,150 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த வெளிகோள் வியாழன் கோளின் நிறையில் பாதி நிறையைக் கொண்டது. இது, அதன் நட்சத்திரத்தை முழுமையாக சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 3.4 நாட்கள். இந்த கோளின் வெப்பநிலை 1000 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். மேலும் இந்த கோளில் வாயுக்கள் நிரம்பியுள்ளன. இந்த வெளிக்கோளின் வளிமண்டத்தில் உள்ள நீராவி அளவு, கர்பன் அளவையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கணக்கிட்டு அனுப்பியுள்ளது. நமது சூரிய குடும்பம் இருக்கும் பால் வளிமண்டலத்தில் மட்டும் சுமார் 5,000 புறக்கோள்கள் வரை உள்ளன. விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றி விமர்சனங்களுக்கு மத்தியில் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் படங்கள் பெரும் வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியுள்ளன. ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுத்த புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல.. அவை கடந்த காலத்தை சேர்ந்தவை. உங்களுக்கு குழப்பாக இருக்கலாம் விண்வெளியில் தொலைவை, ஒளி ஆண்டுகளில்தான் கணக்கிடுறோம். எப்போதோ பயணம் செய்த ஒளி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் காண நேர்ந்த கணத்தில்தான் இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கும்போது அவை கடந்த காலத்தை சேர்ந்தவைத்தான். பிரபஞ்சம் இந்த நொடியில்கூட, தனது எல்லையை அதிகரித்துக் கொண்டே சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் லட்சக்கணக்கான கிரகங்கள், விண்மீன்கள் இருக்கலாம்.. இன்னமும் பல அதிசயங்களை காண இருக்கிறோம்.. ஏன் பிரபஞ்சம் எப்போது, எப்படி உருவானது என்ற புதிருக்கும் கூட விடை கிடைக்கலாம்.. காத்திருப்போம்..! ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அடுத்த புகைப்படங்களுக்காக..! தொகுப்பு: இந்து குணசேகர் https://chakkaram.com/2022/07/18/ஜேம்ஸ்-வெப்-தொலைநோக்கி-எ/
  19. பொறுமைதான் இதற்கு தீர்வு. பிழை காட்டினால் திரும்பவும் அந்தப் பக்கத்திற்கு refresh செய்துபோகலாம். Editor இல் இருப்பது காணாமல் போகாது என்பதால் நேரத்தை வீணாக்காமல் பதியலாம்! இதை எல்லாம் வெட்டியாடித்தான் இடைக்கிடை பதிவைப் போடுகின்றேன்! 13 வருடம் நொக்கியாவில் புது ஃபோன்களை பாவித்த பழக்கம்! மக்கர் பண்ணினால் அதை எப்படி மேவி வேலை செய்யலாம் என்று பழகிப்போய்விட்டது😜
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் ஐயா🎉🎊🎂
  21. கவி அருணாசலம் ஐயாவையும் மதிச்சு கடுதாசி போட்டிருக்காப்பல😂🤣
  22. குருந்தூர் மலை விவகாரம்: 23 ஆம் திகதி விசாரணை சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விஹாரை கட்டுமானப் பணித்தொடர்பிலும், வழக்குத் தொடர்பிலும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பொலிஸாரிடம் விளக்கம் கோரியுள்ளது. தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் 12ஆம் திகதியன்று 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விஹாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன. இந்நிலையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், குருந்தூர்மரை தொடர்பில் ஏற்கெனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பில், நேற்று (16) நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அதன்போது, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அனைத்து நகர்த்தல் பத்திரங்கள், நீதிமன்றம் ஏற்கெனவே, வழங்கிய கட்டளைகளை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விஹாரை தொடர்பிலும், இந்த வழக்குத் தொடர்பில், நீதிமன்றிற்கு வழங்கவேண்டிய அறிக்கைகளை பொலிஸார் தொடர்ச்சியாக வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். அந்தவகையில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், பொலிஸார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான், வழக்குத் தொடுனரான பொலிஸார், குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் 23 ஆம்திகதி இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு திகதியிட்டுள்ளார். இது தொடர்பில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில், குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற வழக்கு, குருந்தூர்மலை ஆதி ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சார்ந்த மக்களால் நகர்த்தல் பத்திரம் அழைக்கப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே சமர்ப்பணம் செய்யப்பட்டது. இந்தவழக்கில் 13.09.2018 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், மிகத் தெளிவான கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அக்கட்டளையிலே, குருந்தூர்மலைப் பிரதேசம் தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வருகின்ற பிரதேசம் எனவும், அப்பிரதேசத்திலே புதிதாக எவ்விதமான கட்டடங்களையும் அமைக்க முடியாது எனவும் அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பரம்பரையாக வழிபாடுசெய்கின்ற சைவர்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் எனவும், அதனை யாராலும் தடுக்க முடியாது. எனவும் அத்தோடு ஏனைய புதிய கட்டடங்களை அமைக்கும், விஹாரைகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவர்களை கைதுசெய்யலாம் எனவும் கட்டளை வழங்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டளையினை மீறியே தற்போது அங்கு புதிதாக ஒரு விஹாரை அமைக்கப்பட்டு, அந்தவிஹைரையில் 12.06.2022அன்று, விசேட பூசை வழிபாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச்சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்ந நிகழ்வுளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இன்றையதினம் (நேற்று) இருதரப்பு வாதங்களையும் ஆழ்ந்து அவதானித்த நீதவான், வழங்குத் தொடுனர் தரப்பான பொலிஸார் இந்த வழக்குத் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நீதிமன்றிலே கூறுவதற்காக, இந்த வழக்கு விசாரணைகளை இந்தமாதம் 23 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/குருந்தூர்-மலை-விவகாரம்-23-ஆம்-திகதி-விசாரணை/175-298659
  23. வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணிக்கிறார்கள் - து.ரவிகரன் வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணித்து கொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் விகாரை வைப்பதற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் சாப்பிட வழியில்லை உணவுக்கு, எரிபொருளுக்கு, எரிவாயுவுக்கு என அலைகின்றார்கள். விலைவாசி ஏற்றம், மின்சார பற்றாக்குறை, இவ்வாறு தொடர்ச்சியாக மக்கள் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அரசாங்கமும், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் தங்களுடைய வேலைகளை அதாவது காணி பறிப்பு வேலைகளையும், மதத் திணிப்பு வேலைகளையும், கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படியான நடவடிக்கையால் மக்கள் கஷ்டத்தின் மத்தியில் துவண்டு போய் இருக்கின்றார்கள். உங்களுக்கு தெரியும். மூன்று தினங்களுக்கு முதல் வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் நில அளவை திணைக்களம் அளக்க வந்த போது அங்கு நாங்கள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களுக்கான வழியிலே அதை மீட்க முடிந்தது. ஆனால் எப்போது திரும்ப வருகின்றார்களோ தெரியாது. அதே போல் இன்றைக்கு குருந்தூர் மலையில் பகிரங்கமாக ஒரு புத்தர் சிலையை வைக்கப் போவதாக அறிவித்துவிட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் கூட இங்கே வந்து தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். இப்படியான நேரத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு அறுபது பேருக்கு மேல் வந்து உடனடியாக அவர்களை ஒரு இடத்திலும் நுழைய விடாமல் இப்படியான விழாக்கள் போன்ற நடவடிக்கைகளை செய்யவிடாமல் புத்த மத திணிப்புகளை மேற்கொள்ளப்படாமல் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம். ஈற்றில் எங்களுக்கு பதில் வழங்கிய தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அல்லது அதனோடு சேர்ந்த காவல்துறையினர் எல்லோருமாக கூறிய ஒரு பதில் தாங்கள் உடனடியாக நிறுத்துகின்றோம் என்றும் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் உட்பட இதனோடு சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளை அழைத்து இதற்கான ஒரு சரியான முடிவு கிடைத்ததன் பின்பு தாங்கள் இந்த பணிகளை தொடர்வதாக கூறி இருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இப்போது இங்கே வந்து பார்த்த போது ஒன்று தெரிகிறது. இங்கே இருந்த எங்களுடைய சைவ அடையாளங்களும் இல்லை. இப்படியான ஆக்கிரமிப்பானது சிங்கள, பௌத்த இனவாதிகளிடம் ஊன்றிப் போய் எங்களுடைய வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை இன்னும் பறித்து கொண்டிருக்கிறார்கள். மதத்தை திணித்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் மக்களுடன் சேர்ந்து மிகவும் சிரமத்தின் மத்தியிலே இதனை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/129444
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.