Everything posted by கிருபன்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) மூன்றாம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) நான்காம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) மூன்றாம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் முதலாம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) இரண்டாம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) இரண்டாம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) மூன்றாம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) முதலாம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் கட்சி) இரண்டாம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) முதலாம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) நான்காம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) முதலாம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) மூன்றாம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக முதலாம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) முதலாம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) இரண்டாம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) முதலாம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) மூன்றாம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) முதலாம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) இரண்டாம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முதலாம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) இரண்டாம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? பூச்சியம் 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? இரண்டு 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? பூச்சியம் 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? பூச்சியம் 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? பூச்சியம் 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? பூச்சியம் 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 22 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பத்து (புதுச்சேரி அடங்கலாக). தமிழ்நாட்டில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கை சின்னத்தில் போட்டியிடுகின்றது. 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம் 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) பூச்சியம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
Best bowling பும்ரா என்று போட்ட எல்லோருக்கும் சந்தீப் சர்மா இன்று ஆப்படித்துவிட்டார்😂🤣
-
மட்டக்களப்பில் ஏன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது சாணக்கியன் வெளியிடும் தகவல் !!
மட்டக்களப்பில் ஏன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டது சாணக்கியன் வெளியிடும் தகவல் !! kugenApril 22, 2024 இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு புனித செபஸ்தியன் பேராலயத்தில் இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான விசேட திருப்பலி பூஜையும் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. ஆலயத்தின் பங்குத்தந்தை அனஸ்டின் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் அருட்தந்தை நவரெட்னம் நவாஜி அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீர்த்தவர்களின் ஆதம்சாந்திக்கான விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவர விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலய முன்றிலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் போது உயிர்நீர்த்தவர்களின் உருவப்படம் தாங்கிய பதாகை வைக்கப்பட்டு அதற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள், அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கொடூரமான ஈஸ்டர் குண்டுவெடிப்புக் கொலை நடந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்தக் குண்டுத் தாக்குதல் இயல்பாக நடந்ததா, இதற்குப் பின்னால் ஒரு பின்புலம் இருந்ததா, அரசியல் இலாபம் அடைவதற்காக செய்யப்பட்டதா எனப் பல சந்தேகங்கள் அந்த நேரத்தில் எழுந்தது. ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து சந்தேகத்திற்கிடமில்லாமல் இதுவொரு அரசியல் பின்புலத்துடன் சம்பந்தப்பட்டது என்பது போல் தென்படுகின்றது. இந்தக் கொலைக்குப் பின்னாலிருந்த எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இது விசாரணைக்குரிய காலமல்ல தீர்ப்பு வழங்கவேண்டிய காலமாகும். வத்திக்கான் போப்பாண்டவர் உட்பட மதத்தலைவர்கள் பலராலும் எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்தும் இலங்கை அரசாங்கம் மக்கள் நம்பக்கூடிய வகையில் இதுவரை மக்களுக்கு எந்தவொரு நீதியும் வழங்கவில்லை என்பதே சந்தேகத்திற்குரிய விடயமாகும். ஈஸ்டர் குண்டு வெடிப்பிற்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் யாரென்பது கடந்த வருடம் சனல்-4 ல் வெளிவந்த ஆவணப்படம் மூலமாக பல சந்தேகங்கள் இன்றும் எழுப்பப்பட்டிருக்கின்றது. இன்று நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் தான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். கடந்த வருடம் ஒரு சர்வதேச ஊடகவியலாளர் ஏன் இதற்கு ஒரு விசாரணை ஆரம்பிக்கப்படவில்லை, சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் உண்மை கண்டறியப்படலாம் என்று கூறியபோது உள்நாட்டு விசாரணை போதும் எனக் கூறியிருந்தார். இதே ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது 2017ல் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலே 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் சர்வதேச விசாரணைக்கு நான் தயாரெனக் கூறியிருந்தார். இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று முந்நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது. ஈஸ்டர் குண்டுவெடிப்பானது கொழும்பு, நீர்கொழும்புடன் சேர்ந்து ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கிலே எட்டு மாவட்டங்கள் இருக்கின்றபோது ஏன் மட்டக்களப்பில் மட்டும் நடத்தப்பட்டது என்பது பற்றி எமது மக்கள் மிக அவதானமாக சிந்திக்க வேண்டும். தமிழ் மக்கள் அதிகமான வாழ்கின்ற, தமிழ் வாக்காளர்கள் அதிகம் இருக்கின்ற மட்டக்களப்பிலே ஏன் இந்தக் குண்டுவெடிப்பு நடந்தது என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்புக் காணொளியிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டிருக்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுடைய ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா அவர்களின் வாக்கு மூலத்திலே சொல்லப்படுகின்ற விடயங்களைப் பார்த்தால் எம்முடைய மக்களுக்கு உண்மை புரியும். அதாவது ராஜபக்ச குடும்பத்தினர் இந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்ததினூடாக நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது, நாட்டில் பலமானதொரு தலைவர் இருந்தால்தான் இங்குள்ள சிங்கள மக்களுக்குப் பாதுகாப்பு என்பதுபோல ஒரு மாயை உருவாக்கினார்கள். ஆயுத முனையிலே எமது மக்களை கடந்த காலத்தில் அழித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் பிள்ளையான் அவர்களை ஏதோ தமிழ் மக்களின் ஒரு காவலர் போன்றதொரு விம்பத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே உருவாக்கியது. ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடந்த காலப்பகுதியிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பல வன்முறைகள் தூண்டப்பட்டிக்கும். அன்று தமிழரசுக் கட்சியினரான நாங்கள் மட்டக்களப்பிற்கு தலைமைத்துவம் வழங்கிய காரணத்தினால்தான் துரதிஷ்டவசமான சம்பவங்கள், கலவரங்கள் எதுவும் நடைபெறாமல் பொறுப்புள்ள தலைவர்களாக மக்களை வழிநடத்தியிருந்தோம். இவர்களைப்போல கொடூரமான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நபர்கள் அதாவது கிறிஸ்மஸ் ஆராதனையின்போது தேவாலயத்தினுள்ளே ஒரு பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டிலே சிறையிலிருந்த ஒருவர் அந்த நேரத்தில் இருந்திருந்தால் எவ்வாறான வன்முறைகள் நடந்திருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு புத்தகத்தை எழுதுவதனூடாக தங்களுடைய இரத்தக் கறைகளை கழுவியூற்ற முடியாது. ஆலயங்களிலே இந்த நிகழ்வுகளை நாங்கள் ஒழுங்கமைத்து மக்களை நாங்கள் திரட்டியெடுத்து ஆராதனையையும் நீதிக்கான அஞ்சலி நிகழ்வையும் நடத்துகின்றோமென்றால் இலங்கை சட்டத்திலே இவர்களுக்கு தண்டனை இல்லாதுபோனாலும் இறைவனுடைய நீதியின் கிழ் இவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மட்டக்களப்பிலே கொல்லப்பட்டது பிஞ்சுக் குழந்தைகள். அவர்களுடைய இறுதிக் கிரியைகளைச் செய்வதற்கு தாயோ தந்தையோ அங்கு இல்லாத நிலை காணப்பட்டது. அவர்கள் வைத்தியசாலையில் இருந்தனர், சிலர் உயிரிழந்திருந்தனர். அன்றைய தாக்குதலில் ஒரு குழந்தை தனது தாயையும் தந்தையையும் இழந்ததுடன் தனது இரு கண்களையும் இழந்து இன்றும் உயிருடன் இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தப்புவதற்காக, சிறையிலிருந்து தப்புவதற்காக, ஆட்சிக்கு வரவேண்டும் என்பற்காக செய்த பாவச் செயலுக்கு மக்கள் மன்னிப்பு வழங்கினாலும் இறைவன் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. நீங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்தே தீரவேண்டும். உங்களுக்கான தண்டனைணை எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் வழங்குவார்கள். முந்நூறு பேரின் இரத்தக்கறைகளின் மீதுதான் நீங்கள் கொங்கிறீட் பாதைகளில் பயணிக்கின்றீர்கள். பாதைகளுக்கு கொங்குறீட் இடுவதும் மக்களின் வரிப்பணத்தில்தான். வீதி அபிவிருத்தி செய்வதனூடாக மகாத்மா காந்தி ஆகிவிட முடியாது. வீதி அபிவிருத்தி செய்வதனூடாக நீங்கள் செய்த கொலைகளுக்கு பரிகாரம் செய்துவிட முடியாது. குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அணுவணுவாக செத்துக் கொண்டிருக்கின்றார்கள். என்னுடைய கணவரும் இரண்டு குழந்தைகளும் மரணித்தது ஒரு தடவைதான். ஆனால் நான் அவர்களைப் பற்றி சிந்தித்து தினமும் செத்துக் கொண்டிருக்கின்னே; என அண்மையில் ஒரு தாய் தெரிவித்திருக்கின்றார். அன்று சியோன் தேவாலயத்தில் வெடித்த குண்டானது எந்தத் தேவாலயத்திலும் வெடித்திருக்கலாம். அவர்கள் சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததற்கான காரணம் என்னவென்பது தெரியாது. எங்கு வேண்டுமானாலும் அது நடந்திருக்கலாம். மரணித்தவர்கள் உங்களுடைய உறவினர்களாகக் கூட இருந்திருக்கலாம். இவர்களுடைய இரத்த வெறியிலே அகப்பட்டது உங்களுடைய பிள்ளைகளாக இருந்திருக்கலாம். இனிவரும் காலங்களிலும் தங்களுடைய அதிகாரத்தை தக்கவைப்பதற்கு, தங்களுடைய எஜமானர்களின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய பிள்ளைகளையும் இவர்கள் பலிக்கடாவாக்கலாம். ஆகவே எங்களுடைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தக் கொலைக் கும்பலை இந்த மாவட்டத்திலிருந்து நாங்கள் அகற்ற வேண்டும், இந்தக் கொலைக் கும்பலை இந்த நாட்டைவிட்டே அகற்ற வேண்டும். நாட்டைவிட்டு அகற்றவேண்டுமானால் அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும். ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடைபெற்று ஐந்தாவது வருடம் முடிவடைந்த இந்நாளில் இந்த மக்களுக்கான நீதியை கோருவதற்காக எங்களுடன் கைகோர்த்து வாருங்கள், நாங்கள் தனியாக இதனை செய்ய முடியாது, ஒரு கட்சியாக இந்தப்பொறுப்பை தனியாக முன்னெடுக்க முடியாது, மக்கள் எங்களுடன் ஒன்றாக நின்றால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கலாம். மிகவிரைவில் ஒரு தேர்தல் நடைபெறவிருக்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது.எதிர்காலத்தில் நாங்கள் தலைவராக தெரிவுசெய்பவர் ஊடாக இந்த கொலைகார கும்பல்களுக்கு தண்டனைப்பெற்றுக்கொடுக்க எங்களுடன் இணைந்துவரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என்றார். https://www.battinews.com/2024/04/blog-post_360.html
-
சர்வதேச புவி தினம் இன்றாகும்!
சர்வதேச புவி தினம் இன்றாகும்! சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச புவி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக பூமி தினத்தின் தொனிப்பொருள் “பூவி மற்றும் பிளாஸ்டிக்” என்பதாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஏப்ரல் 22, 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் புவி தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று, புவி தினத்தில் சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க 193 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1 பில்லியன் மக்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். https://thinakkural.lk/article/299823
-
ஈரானுக்கு ஆதரவான இராணுவத் தளம் மீது மிகப்பெரும் தாக்குதல்
அமெரிக்க தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிக்கின்றோம் - ஈராக் அமைப்பு தெரிவித்துள்ளது Published By: Rajeeban 22 Apr, 2024 | 10:18 AM சிரியாவில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஈராக்கில் உள்ள தளங்கள் மீது தாக்குதலை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக ஈராக்கில் உள்ள ஆயுதகுழுவொன்று தெரிவித்துள்ளது. சிரியாவின் வடகிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளமொன்றின் மீது ஈராக்கின் ஜூமார் நகரிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது. பெப்ரவரிக்கு பின்னர் முதல்தடவையாக தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.பெப்ரவரி மாதத்தில் ஈராக் குழுக்கள் அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல்களை நிறுத்தியிருந்தன. ஈராக்கிய பிரதமர் அமெரிக்காவிற்கு மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலளாரை சந்தித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க படையினரை ஈராக்கிலிருந்து வெளியேற்றும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து மீண்டும் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஈராக்கின் ஹெட்டாய்க் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. சில மணிநேரத்தின் முன்னர் இடம்பெற்றது ஆரம்பமே என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புகள் சிரியாவின் மத்தியில் உள்ள சர்வதேச கூட்டமைப்பின் தளத்தை இலக்குவைத்துள்ளன என ஈராக்கிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/181624
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள் மீட்பு Published By: Rajeeban 22 Apr, 2024 | 10:36 AM இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின் உடல்களை நாசர் மருத்துவ கட்டிட தொகுதியில் மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசர் மருத்துவமனையின்கொல்லைப்புறத்தில் இந்த உடல்களை மீட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளது. நாசர் மருத்துவ கட்டிட தொகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த புதைகுழிகள் காணப்படுகின்றன நேற்று 50க்கும் மேற்பட்ட தியாகிகளின் உடல்களை பார்த்து அதிர்ச்சியடைந்தோம் என சிவில் பாதுகாப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் மஹ்மூட் பாசல் தெரிவித்துள்ளார். தேடுதல் நடவடிக்கையில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுகின்றோம் கொல்லப்பட்ட தியாகிகளின் எண்ணிக்கையை அறிவதற்காக அனைத்து புதைகுழிகளும் தோண்டப்படுவதற்காக காத்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இந்த மருத்துவமனையில் கடும் மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181628
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தான், இலங்கைக்கு விஜயம் 22 Apr, 2024 | 10:04 AM பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஈரான் ஜனாதிபதி திங்கட்கிழமை (22) இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது, இப்ராஹிம் ரைசி இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அழைப்பை அடுத்து, பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்ட ரைசி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் திறப்பு விழாவில் இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து பங்கேற்பதே அவரது இலங்கை விஜயத்தின் சிறப்பம்சமாகும். https://www.virakesari.lk/article/181620
-
2024 பட்ஜெட் வருமான இலக்கை எட்டத் தவறும்
2024 பட்ஜெட் வருமான இலக்கை எட்டத் தவறும் 2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 33வது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் தொடர்பான வரவு செலவுத்திட்ட இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட '2024 வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையில்' எதிர்பார்க்கப்படுகிறது. ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ஆண்டுதோறும் வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு, பொருளாதாரத் தகவல்களுக்கான இலங்கையின் முதன்மை தளமாக உள்ள PublicFinance.lk இல் வெளியிடப்படுகிறது. இலங்கையின் வருடாந்த வரவு- செலவுத் திட்டத்தின் நிதி, பணம் மற்றும் பொருளாதார மதிப்பீடுகளின் வலுவான பகுப்பாய்வு மற்றும் புறநிலை மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவால் (COPF) வெளியிடப்படும் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் நோக்கத்தையே இந்த அறிக்கையும் பிரதிபலிக்கிறது. இந்த இரண்டு அறிக்கைகளும் வரவு செலவுத்திட்டம் பற்றிய புரிதலையும் விவாதத்தையும் பொதுமக்கள் மத்தியிலும் பாராளுமன்றத்திலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.வெரிட்டே ரிசேர்ச்சின் ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் அரசாங்கத்தின் கணிப்புகளை விடவும் வரவு செலவுத் திட்டவிளைவுகள் தொடர்பாக மிகவும் துல்லியமான கணிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது. இது இலங்கையில் தொழில்சார் பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஒரு முக்கியமான மேலதிக உள்ளீட்டை உருவாக்குகிறது. மிகைப்படுத்தப்பட்ட வரி வருமானம் 1991 ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமான இலக்கை இலங்கை இதுவரை எட்டவில்லை. மிகச் சமீபத்தில், வழிவகைகள் பற்றிய பாராளுன்றக் குழு, 2023 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட இலக்கை விட வரி வருமானம் 13% குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூ.4,164 பில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது, இது 2023 ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42% அதிகரிப்பாகும். எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை 14% பற்றாக்குறையை கணித்துள்ளதுடன், வருமானம் ரூ.3,570 பில்லியனாக இருக்கும் என எதிர்வுகூறியுள்ளது. பெறுமதி சேர் வரி (VAT) மூலம் கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே கணிக்கப்பட்ட பற்றாக்குறையில் 61 சதவீதத்திற்குக் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டாண்மைவருமான வரி, தனிநபர் வருமான வரி, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மற்றும் சுங்க இறக்குமதி வரி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே மீதமுள்ள 39 சதவீதத்திற்குக் காரணமாகவுள்ளது. வருமானத்தில் வட்டி விகிதம் உலகில் வருமானத்திற்கு அதிக வட்டிச் செலவு விகிதத்தை இலங்கை கொண்டுள்ளதுடன், இந்த விகிதத்தைக் குறைப்பது பேரினப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்இந்த விகிதத்தை 64% ஆகக் குறைக்க எதிர்பார்க்கிறது. எவ்வாறாயினும், ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையின்’ வருமானக் கணிப்புகள் மற்றும் வட்டிச் செலவுகள் தொடர்பான அரசாங்கக் கணக்கீடு ஆகியவை, கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இது 70 சதவீதத்தைத் தாண்டும் எனக் குறிப்பிடுகின்றன. கடன் நிலைத்தன்மையின் முக்கிய குறிகாட்டியாக பொருளாதார வல்லுநர்கள் கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட பொருளாதார மீட்சித் திட்டத்தில் இலங்கை இதன் மூலமாக பின்தங்கும் நிலை ஏற்படும். https://www.tamilmirror.lk/செய்திகள்/2024-பட்ஜெட்-வருமான-இலக்கை-எட்டத்-தவறும்/175-336162
-
தமிழர்கள் வாக்கு ரணிலுக்கே; ஐ.தே.க. உறுதி!
தமிழர்கள் வாக்கு ரணிலுக்கே; ஐ.தே.க. உறுதி! ஆதவன். எதிர்வரும் அரசதலாவைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்தப்பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்: சஜித்பிரேமதாஸவையோ அல்லது அநுரகுமார திஸாநாயக்க வையோ நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாரில்லை. கடந்த அரசதலாவைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே சஜித் பிரேமதாஸவுக்குத் தமிழ்மக்கள் ஆதரவு வழங்கினார்கள். எனினும், அவரால் வெற்றிபெற முடியவில்லை. வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீட்டெடுக்க தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தமிழர்களின் வாக்குகள். குவியும்- என்றார். (ச) https://newuthayan.com/article/தமிழர்கள்_வாக்கு_ரணிலுக்கே;_ஐ.தே.க._உறுதி!
-
”தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும்” - மனோ கணேசன்
”தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும்” - மனோ கணேசன் தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குண்டர்கள் அந்த சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் செல்லமுத்து என்பவரது மகன்கள் மூலம் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்று, தூஷண வார்த்தைகளால் பேசி, பயமுறுத்தல் விடுத்துள்ளார்கள். இச்சம்பவம் நேற்று(21) கண்டி புசல்லாவையில் நிகழ்ந்தது. ஆலய நிகழ்வு ஒன்றுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை இடை மறித்து இந்த காட்டுமிராண்டி நிகழ்வு நிகழ்ந்துள்ளது. பொலிஸாரின் தலையீட்டினால் வன்முறை தடுக்கப்பட்டுள்ளது. தமது அரசாங்க பங்காளிகளை ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ள அறிவுரை வழங்குமாறும், இவர்கள் இனி இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறி வைக்க விரும்புகிறேன்“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி ஒன்றையும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகப்புத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமானையும் இணைய வாசிகள் கேள்வியெழுப்பி வருகின்றனர். http://www.samakalam.com/தமது-பங்காளி-கட்சிக்கு-வ/
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு கட்டணம் அறவிட்டால் நடவடிக்கை! நாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு கட்டணம் அறவிடும் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டதரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அவ்வாறான நபர்களை அடையாளம் காண்பதற்காக சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். http://www.samakalam.com/சுற்றுலாப்-பயணிகளிடம்-அத/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 வீரப் பையன்26 70 2 முதல்வன் 70 3 சுவி 70 4 ஏராளன் 70 5 நிலாமதி 70 6 அஹஸ்தியன் 70 7 ஈழப்பிரியன் 70 8 கல்யாணி 70 9 கந்தப்பு 70 10 கறுப்பி 70 11 எப்போதும் தமிழன் 70 12 வாதவூரான் 70 13 கிருபன் 70 14 நீர்வேலியான் 70 15 கோஷான் சே 70 16 நுணாவிலான் 70 17 புலவர் 70 ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் நிறைபெறும் ஞாயிறு 19 மே அன்று புள்ளிகள் வழங்கப்படும். சறுக்குமரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம் 😃
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
RCBvsKKR : ஒரு ரன்னில் பரிதாப தோல்வி… ஆபத்தில் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவு! Apr 21, 2024 20:53PM IST ஷேர் செய்ய : கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று (ஏப்ரல் 21) நடந்தப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்யாசத்தில் தோல்வியை தழுவியது பெங்களூரு அணி. ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காடன் மைதானத்தில் இன்று மதியம் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் 50 ரன்களும், தொடக்க வீரர் பிலிப் சால்ட் 49 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 223 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களுரூ அணியில் தொடக்க வீரர்களான கோலியும்(18), டூ பிளெஸ்ஸியும்(7) அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் அதன் பின்னர்3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் ஜாக்ஸ், ரஜத் பட்டிதார் ஜோடி கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறவிட்டனர். இருவரம் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த நிலையில் பெங்களூரு அணியும் 11 ஓவரில் 137 ரன்கள் குவித்திருந்தது. இதனால் வெற்றி பெங்களூரு பக்கம் திரும்பிய நிலையில், 12வது ஓவரை வீச வந்த ரஸ்ஸல் ஒரே ஓவரில் வில் ஜாக்ஸ்(55) மற்றும் பட்டிதாரை(54) வெளியேற்றினார். ரஸ்ஸலை தொடர்ந்து 13வது ஓவரை வீசிய சுனில் நரைனும் தன் பங்கிற்கு களமிறங்கிய கேமரூன் க்ரீன் மற்றும் லாம்ரோர் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதனால் 155 – 6 விக்கெட்டுகள் என பெங்களூரு அணி தடுமாற மீண்டும் கொல்கத்தா அணி கை ஓங்கியது. அதன்பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் – பிரபு தேசாயுடன் இணைந்து அதிரடியாக ஆட மீண்டும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இருவரும் மேற்கொண்டு 33 ரன்கள் குவித்த நிலையில், பிரபுதேசாய் (24) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் வெற்றி பெங்களூரு அணிக்கு தான் என்று நினைத்த நிலையில், 3 பவுண்டரி, 1 சிக்சருடன் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 19-வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் 4 பந்தில் மூன்று சிக்சர்களை பறக்கவிட்டு பெங்களூரு ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்தார் கர்ண் சர்மா. எனினும் அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றியை ருசித்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி இந்த தொடரில் 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினயது. அதே வேளையில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7ல் தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது பெங்களூரு அணி. மீதம் இன்னும் 6 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதே கடினமாகியுள்ளது. இதனால் இந்த முறையும் ஈ சாலே கப் நமதில்லை என்று பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். https://minnambalam.com/sports/rcbvskkr-bengalurus-play-off-dream-in-jeopardy/
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அது வந்து இறங்கிய காலத்தில் இருந்த இடம்😀 ஏராளமான முசுப்பாத்தியள் நடந்த இடம்! இப்ப சீலன் கடையை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்! பையன், போத்தில்களை ரூட்டிங் பக்கம் மட்டும் அனுப்பிடாதாங்கோ! முன்னொரு காலத்தில ஒரு நண்பனுடன் ரூட்டிங்கிலுள்ள கடையொன்றுக்கு மேலே இருந்தவர்களின் அபார்ட்மென்றுக்கு போனேன். ஒருத்தரையும் தெரியாது. கிச்சினுக்குள் போனால் 42 famous grouse வெற்றுப் போத்தில் ஜன்னல் விளிம்பு முழுவதும் அடுக்கியிருந்தது. எல்லாம் நம்பர் போட்டு அடுக்கியிருந்ததால்தான் 42 என்று கண்டுகொண்டேன். எத்தனை மாதக் கணக்கு என்றால் ஒரு கிழமை எண்டாங்கள்! அன்றும் ஆறு போத்தல் மேலதிகமாக அடுக்கினார்கள்! அதுக்கும் என்னால் முடிந்தளவு பங்களித்தேன்😵😵💫
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நானும் பங்குபற்றுகின்றேன். அநேகமாக முதல் இடத்தைப் பிடிப்பேன்😂
-
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்- நிலாந்தன் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்தமுறைதான். அது ஒன்றுக்கு மேற்படட தரப்புக்களால் முன்னெடுக்கப்படுவதும் இந்த முறைதான். அதுமட்டுமல்ல,அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த முறைதான். இந்தக் கோரிக்கையை கோட்பாட்டு ரீதியாக முதலில் முன்வைத்தவர் மு.திருநாவுக்கரசு. இக்கோரிக்கையை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு விளங்கிக் கொள்ளாமல் பிரயோகித்தவர்கள் குமார் பொன்னம்பலமும் சிவாஜிலிங்கமும் ஆவர். மு.திருநாவுக்கரசு 2010 ஆம் ஆண்டு, அதாவது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த அடுத்த ஆண்டு “பொங்குதமிழ்” என்ற இணையதளத்தில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும் என்று கட்டுரை எழுதினார். ஆனால் அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தரப்பு ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பதாக நினைத்துக் கொண்டு, அதே ராஜபக்சக்களின் ஆணையை முன்னெடுத்த தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள். திருநாவுக்கரசுவின் கட்டுரையை யாரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் 2015 ஆம் ஆண்டும் திருநாவுக்கரசு அதே கட்டுரையை சிறு மாற்றங்களோடு அதே இணையத் தளத்தில் எழுதினார். அப்பொழுது ஆட்சிமாற்ற அலை வீசியது. ராஜபக்சக்களைத் தோற்கடிப்பதற்காக ரணில்+மைத்திரி கூட்டு ஒன்றை மேற்கு நாடுகளும் இந்தியாவும் சேர்ந்து உருவாக்கின. அப்பொழுதும் தமிழ்மக்கள் ராஜபக்சங்களுக்கு எதிராக வாக்களிப்பதாகக் கருதிக்கொண்டு இறுதிக்கட்டப் போரில் தற்காலிகமாக பாதுகாப்பு மந்திரியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். திருநாவுக்கரசு இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் அதுதொடர்பாக எழுதிய பின்னரும் தமிழ் அரசியல் சமூகம் அது தொடர்பாகக் கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் நோர்வையில் வசிப்பவரும் திருநாவுக்கரசுவின் மாணவருமான ஒரு புலமையாளர் அவரிடம் கேட்டார்… “என் நீங்கள் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள்?” என்று. அதற்கு திருநாவுக்கரசு சொன்னாராம் ஒருமுறை எழுதியதை யாரும் உள்வாங்கவில்லை என்பதனால்தான் அதைத் திரும்பத் திரும்ப எழுத வேண்டியிருக்கிறது என்று. “கடந்த பல தசாப்தங்களாக தமிழ் அரசியலில் சரியான அறிவியல் முடிவுகள் எடுக்கப்பட்டிருகின்றன. ஆனால் அவை அரசியல் தீர்மானகளாக மாற்றப்படவில்லை” என்று மேற்படி நோர்வீஜியத் தமிழர் அடிக்கடி கூறுவார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வந்த பொழுது தமிழ் மக்கள் பேரவை ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது. அக்குழு ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எல்லாக் கட்சிகளையும் சந்தித்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக தெளிவான பதில்களைக் கூறவில்லை. கோட்டாபய தனது அமெரிக்கப் பிரஜா உரிமையைத் துறப்பதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை முன்வைத்து சம்பந்தர் உரையாற்றினார். அதுமட்டுமல்ல, ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால் அது சிங்கள மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களைத் தூண்ட உதவாதா என்றும் அவர் கேட்டார். தமிழரசுக் கட்சி அப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. கூட்டமைப்புக்குள் அங்கம் வகித்த பங்காளிக் கட்சிகள் துணிந்து முடிவெடுக்கவில்லை. விக்னேஸ்வரன் அதை ஆதரித்தார். ஐங்கரநேசன்,அனந்தி போன்றவர்களும் அதை ஆதரித்தார்கள். எனினும் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த விடயத்தை செயலுருப்படுத்த தமிழ்மக்கள் பேரவையால் முடியவில்லை. அது உருவாக்கிய சுயாதீனக் குழுவானது அதுதொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டதோடு சரி. தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக் குழு 2019 இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கும் பல மாதங்களுக்கும் முன்னரே இந்த விடயத்தை முதலில் கையில்எடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். அதன் பின் “மக்கள் மனு” என்று அழைக்கப்படும் ஒரு சிவில் சமூகம்அதனை முன்னெடுக்கின்றது. அந்த சிவில் சமூகம் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இரண்டுகருத்தரங்குகளையும் நடத்தியிருக்கிறது. அதே சமயம் புலம்பெயர்ந்த தமிழ் முதலாளி ஒருவரும் இதுதொடர்பில் சிந்திப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன. விக்னேஸ்வரன் அது தொடர்பாக வெளிப்படையாகவே பேசி வருகிறார். தமிழ் பொது வேட்பாளர் என்றுதெரிவை சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு அடுத்தபடியாக அவர் இப்பொழுது அதிகமாகப் பேசி வருகிறார். அவர்சிவகுரு ஆதீனத்தின் முதல்வரை அவ்வாறு பொது வேட்பாளராக நிறுத்தலாமா என்றும் ஒரு பரிந்துரையைச் செய்திருந்தார். அதேசமயம் ஈழத்துச் சிவசேனையின் தலைவராகிய மறவன்புலவு சச்சிதானந்தம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை பொது வேட்பாளராக சிபாரிசு செய்திருந்தார். இவ்வாறாக தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் இப்பொழுது மேற்பரப்புக்கு வந்துவிட்டது. அது அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக மாறிவிட்டது. அதில் பல்வேறு தரப்புகளும் ஈடுபாட்டைக் காட்டுகின்றன. அல்லது அதைக் குழப்புகின்றன. அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற தெரிவைக் குழப்பும் தரப்புகள் அல்லது அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் தரப்புகள்,பின்வரும் காரணங்களை முன்வைக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலாவது காரணம்,தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு ஏற்கனவே தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஒன்று என்பது. குமார் பொன்னம்பலம் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அதில் ஏற்கனவே தோல்வி கண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. குமாரும் சிவாஜியும் அதை அதற்குரிய கோட்பாட்டு அடர்த்தியோடு முன்னெடுக்கவில்லை. அவர்கள் தமிழ் வேட்பாளர்களே தவிர தமிழ் தரப்பில் பெரும்பாலானவர்களின் விருப்பங்களை பிரதிபலித்த பொது வேட்பாளர்கள் அல்ல. ஆனால் இப்பொழுது பேசப்படுகின்ற தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தின் குறியீடு. இலங்கை அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலையே தமிழ்மக்கள் மறைமுக பொதுசன வாக்கெடுப்பாக மாற்றலாமா என்ற ஒரு ஜனநாயகப் பரிசோதனை அது. தமிழ்ப்பொது வேட்பாளர் தேர்தலில் வென்று ஜனாதிபதியாக வரப்போவதில்லை. ஆனால் பெருமளவுக்கு தமிழ் வாக்குகளை அவர் திரட்டும் பொழுது, அவர் தமிழ்க் கூட்டு மனச்சாட்சியின் குறியீடாகப் பார்க்கப்படுவார். தமிழ்ப்பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவார் என்ற கற்பனையோடு யாரும் தமிழ் வேட்பாளரை நிறுத்தவில்லை. அவர் சிங்கள வேட்பாளர்களின் வெற்றியை சோதனைக்கு உள்ளாக்குவார் என்ற ஒரு பேர வாய்ப்பு அதில் உண்டு. அதைவிட முக்கியமாக, அவர் தேர்தலில் வெல்லப் போவதில்லை. ஆனால் அவர் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்ஷம் ஒரு திரளாகத் திரட்டுவார். இரண்டாவது காரணம், தமிழ்ப் பொது வேட்பாளர் தோல்வியுற்றால் அது தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளின் தோல்வியாகக் காட்டப்படும் என்பது. உண்மைதான். ஆனால் தேர்தல் என்று வந்தால் வெற்றி மட்டும் தான் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. தமிழ் மக்களின் உச்சமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தரப்பை ஒன்றிணைப்பதற்கான மிக வலிமையான ஒரு செய்முறையாக அது இருக்கும் என்பதே வெற்றிதான். அங்கு தேர்தல் வெற்றியை மட்டும் வைத்து அந்த முயற்சியின் இறுதியான விளைவை மதிப்பிட வேண்டியதில்லை.கடந்த 15 ஆண்டுகளிலும் இம்முறை பொது வேட்பாளர் என்ற கோரிக்கை மேற்பரப்புக்கு வந்திருப்பது ஒரு வெற்றி.அதை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி மேலே உயர்த்துவது என்று தமிழ்த்தரப்பு சிந்தித்து ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மூன்றாவது காரணம்,ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்துக்களைத் தூண்டிவிடுவார் என்பது. சம்பந்தர் திரும்பத் திரும்ப அதைச் சொல்லுகிறார்.தமிழரசு கட்சிக்குள் ஒரு பகுதியினரும் அதைக் கூறுகிறார்கள்.அவ்வாறு தூண்டப்படும் சிங்கள வாக்காளர்கள் ராஜபக்சக்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும் எனவே ராஜபக்சக்களை வெற்றி பெற வைப்பதற்குத்தான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.தமிழ் மக்கள் எதிர்ப்பைக் காட்டினால் அல்லது தமிழ்மக்கள் தனித்து முடிவு எடுத்தால்,அது சிங்கள இனவாதத்தைத் தூண்டிவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இங்குள்ள அடிப்படைக் கேள்வி என்னவென்றால், சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது மட்டும் என்ன தூங்கிக்கொண்டா இருக்கிறது? அப்படி என்றால் விகாரைகளைக் கட்டுவதும் தமிழ் மரபுரிமைச் சின்னங்களை ஆக்கிரமிப்பதும் மேய்ச்சல் தரையை ஆக்கிரமிப்பதும் யார்? சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் கோபித்துக் கொள்ளும் அல்லது அது தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளும் என்று பயப்பட்டால் தமிழ் மக்கள் எதிர்ப்பு அரசியலையே கையில் எடுக்கக்கூடாது.தமிழ்த்தேசியம் என்ற வார்த்தையெல்லாம் பயன்படுத்தக்கூடாது.போராட்டம்,சுதந்திரம் என்றெல்லாம் பிரகடனங்களைச் செய்யக்கூடாது. அதேசமயம் தமிழ்ப் பொது வேட்ப்பாளர் ராஜபக்சக்களை வெல்லவைப்பார் என்று பதட்டமடைபவர்களில் ஒரு பகுதியினர் வெளிப்டையாகச் சொல்லாத ஒரு விடயம் என்னவெனில்,சஜித்துக்குக் கிடைக்கும் தமிழ் வாக்குகளை பொது வேட்பாளர் கவர்ந்து விடுவார் என்பது. நாலாவது காரணம், ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்துகிறவர்கள் யாரோ ஒரு சிங்கள வேட்பாளரோடு டீல் செய்ய விரும்புகிறார்கள் என்ற சந்தேகம். இருக்கலாம். அதற்கு வாய்ப்புகள் உண்டு.அதேநேரம் அது தமிழ்ப் பொது வேட்பாளரின் கோரிக்கைகள் என்ன என்பதில்தான் தங்கி இருக்கின்றது. ஏனென்றால் தமிழ்ப்பொது வேட்பாளரோடு ஏதோ ஒரு டீலுக்கு வரும் சிங்கள வேட்பாளர் சிங்கள பௌத்த வாக்குகளை இழக்க வேண்டிவரும் என்பதே இலங்கைத் தீவின் கள யதார்த்தமாகும். சரத் பொன்சேகாவுக்கு அதுதான் நடந்தது. மைத்திரிக்கு அது நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் சம்பந்தர் மையால் உடன்படிக்கை எழுதுவதற்கு பதிலாக இதயங்களுக்கு இடையில் உடன்படிக்கை செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் இலக்கியத்தனமாகப் பேசினார். தமிழ்ப் பொது வேட்பாளர் உச்சமான கோரிக்கையை முன்வைத்தால், அவருடன் எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் பேரம்பேச வரமாட்டார் என்பதே யதார்த்தம்.எனவே தமிழ்ப்பொது வேட்பாளர் முன்வைக்கப் போகும் கோரிக்கைகள் எவை என்பதுதான் அதைத் தீர்மானிக்கின்றது. ஐந்தாவது காரணம், எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் நம்ப முடியாது. எனவே தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது. உண்மை. எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் நம்பக் கூடாது என்பதற்காகத்தான் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்வைக்கப்பட வேண்டும் என்று கேட்கப்படுகிறது.15 ஆண்டுகளாக தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றுக் காசோலையாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வழங்கப்பட்டன.அதை நிறுத்தி அதை தமிழ் வேட்பாளருக்கு உரியதாகத் திரும்பினால் என்ன ? எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்ப நான் கூறுவது போல, பகிஸ்கரிப்பு ஒரு தெரிவுதான் இந்தியாவில் நோட்டா என்று தெரிவு உண்டு. அதைப்போல. ஆனால் அந்த தெரிவை முன்வைக்கும் ஒரு கட்சி அதற்காக உழைக்க வேண்டும்.அந்த தெரிவை மக்கள் மயப்படுத்த வேண்டும்.அறிக்கையை விட்டுவிட்டு பேசாமல் இருக்க முடியாது.அப்படி இருந்தால் ஏனைய கட்சிகள் மக்களைப் பிழையான வேட்பாளரை நோக்கிச் சாய்த்துக் கொண்டு சென்று விடுவார்கள்.அதாவது தமிழ் வாக்குகள் மீண்டும் வெற்றுக் காசோலையாக யாரோ ஒரு சிங்கள வேட்பாளரை நோக்கிப் போகும்.தேர்தலைப் புறக்கணிப்பது ஒரு தெரிவு.ஆனால் அதற்காக உழைக்க வேண்டும். அதை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதுதான் சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டம் செய்ய வேண்டியது. மேற்சொன்னவற்றைத் தொகுத்துப் பார்த்தால்,தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கும்.தமிழ்ப்பொது வேட்பாளர் எனப்படுபவர் தமிழ்மக்களின் கூட்டு மனோநிலையின் குறியீடாக இருப்பார்.அவர் தமிழ்க்கட்சி அரசியலைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடாது.தமிழ்மக்கள் மத்தியில் தற்போது தூண்டி விடப்படும் பிரதேச,சாதி,சமய,பால் அசமத்துவங்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது.எந்த ஒரு சிங்கள வேட்பாளரோடும் அவர் தன்னிச்சையாக டீலுக்கு போக முடியாது. ஜனாதிபதித் தேர்தல்மூலம் அவருக்கு கிடைத்த பிரபல்யத்தை அவர் அடுத்தடுத்த தேர்தல்களில் முதலீடு செய்யக்கூடாது….போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு பொது வேட்பாளரை தமிழ் மக்கள் முன் நிறுத்துவார்களாக இருந்தால், அவ்வாறு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய கட்டமைப்புகளை தமிழ் மக்கள் உருவாக்க முடிந்தால்,அது கடந்த 15ஆண்டு கால தமிழ் அரசியலில் திருப்பகரமான ஒரு நகர்வாக அமையும்.இல்லையென்றால், இக்கட்டுரையில் முன்கூறப்பட்ட நோர்வீஜியத் தமிழர் கவலைப்பட்டதுபோல தமிழ் அரசியலில் சரியான அறிவியல் முடிவுகள் எடுக்கப்பட்டபோதிலும்,அவை அரசியல் தீர்மானங்களாக மாற்றப்படாததன் ஆகப்பிந்திய விளைவொன்றை தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் https://www.nillanthan.com/6695/
-
மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி – வல்வை ந.அனந்தராஜ்
மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி – வல்வை ந.அனந்தராஜ் April 21, 2024 இந்திய அரசின் அடாவடித் தனங்களுக்கு எதிராக இரண்டு சாதாரண அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீரை மட்டுமே அருந்தி, 31 நாட்கள் ஒரு துண்டு உணவு கூட அருந்தாது நோன்பிருந்து, சாவடைந்த அன்னை பூபதியின் நினைவுநாளான இன்றைய நாள் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்“ என்று உலகம் முழுவதும் நினைவுகூரப்படுகின்றது. மட்டக்களப்பு கிரானில், 1932 இல் பிறந்த கணபதிப்பிள்ளை பூபதியம்மா, இந்திய இராணுவம் தமிழீழ தாயகத்தில் நிலை கொண்டிருந்த காலப் பகுதியில், மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராகத் தீரமுடன் இயங்கி வந்ததால், மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் அவரது பெயர் புகழ்பெற்று விளங்கியது. விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் பாரிய யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் எதிராக வடக்குக் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சாத்வீகமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொணடிருந்தன. தமிழ் மக்களுக்கு எதிராக, இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டக்களப்புத் தமிழ் மக்கள் திரண்டெழுந்தபொழுது, பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அன்னையர் முன்னணி தோற்றம் பெற்றது. அந்தவகையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுககக்கூடிய பாரிய விருட்சமாக அன்னையர் முன்னணி வளர்ந்து வந்ததைக் கண்ட இந்திய இராணுவத் தளபதிகள் அந்த அமைப்பைத் தடைசெய்வதற்கும், அதில் செயற்பட்டுக் கொண்டிருந்த பெண்களைக் கடத்திக் கொண்டு செல்வதற்கும் பல முயற்சிகளை எடுத்துவந்தனர். இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில், பலமுனைகளில் அறவழிப் போராட்டங்களை நடத்துவதற்கு மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி தீர்மானித்தது. இந்த அறவழிப் போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் அவர்கள் இந்திய அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து, இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர். இவை இரண்டுமே சாதாரண மனிதாபிமானம் மிக்க கோரிக்கைகளாகவே இருந்ததாகச் சர்வதேச அமைப்புகளே அந்தநேரம் சுட்டிக் காட்டியிருந்தன. அதில், ஆகக் குறைந்த கோரிககைகளாக, 1. இந்திய அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளை நிறுத்துவதற்கான யோசனையாக, தமிழீழ விடுதலைப் புலிகளுடன், உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 2. இந்திய இராணுவத்தின் கோரப்பிடியில் இருந்தும் தமிழ் மக்களைக் காக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து சாகும் வரையான உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் குதிப்பதற்காக பல நூற்றுக் கணக்கான பெண்கள் முன்வந்தனர். இவ்வளவு பெருந்தொகையான பெண்கள் அறவழிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக வந்ததைக் கண்டதும், அன்னையர் முன்னணியினரின் போராட்ட உத்வேகம் மேலும் அதிகரித்தது. இந்திய இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இவ்வளவு பெண்கள் துணிவுடன் களத்தில் இறங்கியதால் இதற்கான சரியான முடிவை எடுக்க முடியாத நிலையில் இருந்த அன்னையர் முன்னணி இறுதியில் குலுக்கல் முறையில் யாராவது ஒருவரைத் தெரிவுசெய்து சாத்வீகப் போராட்டக் களத்தில் இறக்குவது என்று முடிவெடுத்தது. இந்தத் தெரிவின் மூலம் முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அன்னம்மா டேவிட் அவர்கள் 1988ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் அவரது உண்ணா நோன்புப் போராட்த்தைக் கண்டு அச்சமடைந்த இந்தியப் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்த அன்னம்மா டேவிட் அவர்களைத் திடீரெனக் கடத்திச் சென்றதால், அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அன்னையர் முன்னணியினரின் முதலாவது சாத்வீக முயற்சியே தோல்வியைத் தழுவியபோதும், அன்னையர் முன்னணியினர் தொடர்ந்தும் தமது முயற்சியை முன்னெடுத்தனர். இந்தநிலையில் தான் பூபதியம்மாள் இந்திய இராணுவத்தினருக்கு எதிராகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் உண்ணாநிலைப் போராட்டத்தை 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரையான உண்ணா நோன்பினை ஆரம்பித்தார். அன்னம்மா டேவிட் அவர்களுக்கு எதிராக இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூரம் பூபதி அம்மாளுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டதுடன், பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்தார். “நான் எனது சுயவிருப்பின் பேரில் உண்ணா விரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டே சாகும் வரையான உண்ணா நோன்பினை ஆரம்பித்தார். இவர் நீர் மட்டும் அருந்தி சாகும்வரையான உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கியதும், இடையிடையே பல தடவைகள் தடங்கல்களை இந்திய இராணுவத்தினர் மேற்கொண்டனர். அவரையும் கடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அன்னை பூபதி இருந்த மேடையைச் சுற்றிவர ஆயிரக்கணக்கான பெண்கள் சூழ்ந்து நின்றதால், இந்தியப் படையினரின் முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனால் உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பத்துப் பிள்ளைகளில் சிலரையும், இந்திய இராணுவம் கைதுசெய்தது. இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அன்னை பூபதி உறுதியாக இருந்ததால், அவரது சாத்வீகமான போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவரால் முன்வைக்கப்பட்ட இரண்டு அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினால், தான் சாகும் வரையான உண்ணாநிலைப் போரட்டத்தை நிறுத்துவதாக இந்திய அரசுக்கு அறிவித்தபோதும், அன்னையர் முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உதாசீனம் செய்த இந்திய அரசு, அன்னை பூபதியை சாவடையச் செய்வதிலேயே குறியாக இருந்ததால், அவர் உண்ணாநோன்பினை ஆரம்பித்து, சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று மட்டக்களப்பு மாநகரின் மாமாங்கப் பிள்ளையார் ஆலய முன்றலில் உணவே அருந்தாது உயிர் நீத்தார். அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதுடன் வானமே பிளந்து வீழ்வது போல் ஓவென்ற அழுகுரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. உண்ணாநோன்பு, உப்பு சத்தியாக்கிரகம், அந்நியரின் உணவுப் பொருட்களையும், ஆடைகளையும் நிராகரித்தல் போன்ற சாத்வீகமான போராட்ட வடிவங்களை உலகுக்குக் கற்றுக் கொடுத்த இந்தியாவின் முகத்திரை அன்னை பூபதியின் சாவின் பின்னர் மீண்டும் கிழித்தெறியப்பட்டது. பிரித்தானிய அரசுக்கு எதிராக இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் உண்ணா நோன்பினை மேற்கொண்ட பொழுது, ஜனநாயக ரீதியில் அப்போது செயற்பட்ட பிரித்தானிய அரசு காந்தியைச் சாக விடாமல் காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு தடவையும் காந்தியின் கோரிககைகளை ஏற்று உடனடியாகவே நடைமுறைப்படுத்தித் தன்னை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இனங்காட்டிய பிரித்தானிய அரசின் வழியைக் கூட இந்திய அரசு பின்பற்றாதது எல்லோருக்குமே ஏமாற்றத்தைத் தந்தது. ஆனால் அகிம்சையை உலகுக்குப் போதித்த இந்தியாவின் பிதாமகனாகக் கணிக்கப்படும் காந்தியடிகள் சாகாமலேயே உண்ணா நோன்பு இருந்து மகாத்மா என்று அழைக்கப்படும் நிலையில் சாதாரண நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாது பன்னிரு நாட்களில் உலகமே பார்த்திருக்க சாவடைந்த தியாகி திலீபனை அல்லது நீரை மட்டுமெ அருந்தி, 30 நாட்களில் சாவடைந்த அன்னை பூபதியின் மரணம், இந்திய அரசுக்குமட்டுமல்லாது, தனது சாத்வீகமான போராட்ட வடிவங்களினால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மகாத்மா காந்தி அடிகளுக்குமே பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. https://www.ilakku.org/மகாத்மாவின்-அகிம்சைப்-போ/
-
கிழக்கின் ஆளுநராக நஸீர் அஹமட்? ரணில் திட்டமிடுவதாக தகவல்
கிழக்கின் ஆளுநராக நஸீர் அஹமட்? ரணில் திட்டமிடுவதாக தகவல் April 21, 2024 முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹபீஸ் நசீர் அஹம்மட்டை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளார் என்று ஜனாதிபதி தரப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கு வசதியாக கிழக்கின் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஊவா மாகாண ஆளுநராக நியப்படவுள்ளார் என்றும் அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கிறது. நசீர் அஹமட் 2012 இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கிழக்கு மாகாண சபைக்குள் நுழைந்தார். கிழக்கின் முதலமைச்சராக பதவிவகித்தார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் நுழைந்த அவர் மொட்டு அரசுடன் இணைந்து இராஜாங்க அமைச்சரானார். இதன் காரணமாக அவரது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கியது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிழக்கு முஸ்லிம்களின் ஆதரவு தனக்குத் தேவை என்பதால் நசீர் அஹம்மட்டை கிழக்கின் ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று அறியமுடிகிறது. https://www.ilakku.org/கிழக்கின்-ஆளுநராக-நஸீர்/
-
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி PrashahiniApril 21, 2024 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று ஐந்தாவது வருட நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று (21) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றன. பிரதான அஞ்சலி நிகழ்ச்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் தலைமையில் அவரது கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கொல்லப்பட்ட உறவினர்களுடைய புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய கிறிஸ்தவ விவகார பிரிவு ஏற்பாடு செய்த இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சியின் செயலாளர் பி பிரசாந்தன் உட்பட உயிர் நீத்த உறவுகளுடைய உறவினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/04/21/news-of-the-day/55913/மட்டக்களப்பில்-உயிர்த்த/
-
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
“இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்” இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது . இவர்கள் ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாக இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. மைட்டோகாண்ட்ரியன் என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த வாரம் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வு கட்டுரையில் இலங்கையின் சிங்கள அல்லது தமிழ் மக்களை விடவும், இந்த ஐந்து பழங்குடியினருடன் வேடுவ இனத்தவருக்கு அதிக மரபணு ஒற்றுமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299759
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி 20 Apr, 2024 | 03:40 PM பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார். பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார். 2019 இல் அமெரிக்காவில், `Travalyst' என்றொரு பயணம் சார்ந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அந்தச் சமயத்தில், ஹாரி அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தனது வசிப்பிடமாகவும், சொந்த நாடாகவும் பிரிட்டனைக் குறிப்பிட்டிருந்தார் ஹரி தற்போது அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், தனது புது நாடாக அமெரிக்காவைக் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. https://www.virakesari.lk/article/181521
-
ஈரானுக்கு ஆதரவான இராணுவத் தளம் மீது மிகப்பெரும் தாக்குதல்
ஈரான் சார்பு ஆயுதகுழுவின் ஈராக் தளத்தின் மீதுதாக்குதலை மேற்கொண்டது யார் ? மறுக்கின்றது அமெரிக்கா Published By: Rajeeban 21 Apr, 2024 | 10:27 AM ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் தங்கியிருந்த ஈராக்கிய தளமொன்றின் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ள அதேவேளை இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈராக் இராணுவத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள முன்னாள் ஈரான் ஆதரவு குழுவான ஹசெட் அல் சபியின் தளத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக்கின் உள்துறை அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களில் மூன்று ஈராக்கிய படையினரும் உள்ளனர் . விமானதாக்குதலே இடம்பெற்றது என ஈராக் அதிகாரிகள் இருவர் குற்றம்சாட்டியதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. உயிர் இழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹசெட் அல் செபி அமைப்பு தனது பகுதிகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஈராக்கிய படையினர் யார் தாக்குதலை மேற்கொண்டனர் என்பதை தெரிவிக்கவில்லை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றதா என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.. இதேவேளை அமெரிக்கா இந்த தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது. ஈராக்கின் மீது குறித்த தினத்தில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொண்டனர் என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹசெட் அல் சாபி அமைப்பு தற்போது ஈராக்கிய இராணுவத்தின் ஒரு பிரிவாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181559
-
மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது - பாரிஸ் கிளப்
மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது - பாரிஸ் கிளப் 21 Apr, 2024 | 07:22 AM (இராஜதுரை ஹஷான்) கடன் மறுசீரரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போன்று இலங்கையின் கடன் நிலைபேறான தன்மைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.தற்போதைய மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது.என பாரிஸ் கிளப்பின் இணை தலைவரும் பிரான்ஸ் பல்தரப்பு விவகாரம்,வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி கொள்கை திணைக்களத்தின் உதவி செயலாளர் விலியம் ரூஸ் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவில் வொஷிங்டனில் இடம்பெறும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அரையாண்டு வசந்தகால மாநாட்;டு;ட்டில் கலந்துக் கொண்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பரிஸ் கிளப்,ஒபெக் நிதியம்,சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய இராச்சியத்தின் முகவரமைப்பு உட்படச் சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை (19) இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும், பரிஸ் கிளப்பின் இணை தலைவரும் பிரான்ஸ் பல்தரப்பு விவகாரம்,வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி கொள்கை திணைக்களத்தின் உதவி செயலாளர் விலியம் ரூஸிற்கும் இடையிலான சந்திப்பின் போது உத்தியோகப்பூர்வ கடன் கடன் வழங்குநர் குழு மற்றும் ஏனைய தரப்பினருடனான பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தன்மை குறித்து கலந்துரையாடப்பட்டது. கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதைப் போன்று இலங்கையின் கடன் நிலைபேறான தன்மைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.தற்போதைய மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது.ஆகவே பொருளாதார மறுசீரமைப்புக்களை மீளாய்வு செய்யாமல் முன்னெடுப்பது அத்தியாவசியமானது என விலியம் ரூஸ் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஒபெக் நிதியத்தின் தலைவர் அப்துல் ஹமீட் அல்கலீபாவுக்கும்,நிதி இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி செயற்திட்ட பணிகளை முன்னெடுப்பதற்கும்,முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு நிதி ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய இராச்சிய முகவரான்மை (யுஎஸ்எஐடி) பிரதி உதவி நிர்வாக அதிகாரி அஞ்சலி கொரியுடன் கௌரிற்கும் இடையிலான சந்திப்பில்; இலங்கையின் பல்துறை அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அஞ்சலி கொரி உறுதியளித்துள்ளார். பொருளாதார மீட்சிக்காக இலங்கை முன்னெடுத்த தீர்மானங்கள் குறுகிய காலத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும்,தற்போதைய மறுசீரமைப்பு மற்றும் அதனுடனான முன்னேற்றங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/181535
-
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனை
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தோருக்காக பிரார்த்தனை 21 Apr, 2024 | 01:04 PM உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றுக்கான பிரார்த்தனை மற்றும் ஐந்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. (படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/181573
-
இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அணுகும் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அணுகும் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 21 Apr, 2024 | 01:35 PM (லியோ நிரோஷ தர்ஷன்) தென்னிந்திய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதை விட இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்தினால் பொருளாதார ரீதியில் தென்னிந்தியாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, இந்தியா உடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அனுகுவதாகவும் குறிப்பிட்டார். இலங்கையின் சமகால பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தீரமான நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீள்புதுப்பிக்கதாக்க வலுசக்தி பயன்பாடுகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டும். மறுபுறம் ஆசியா மாத்திரமன்றி உலக பொருளாதாரத்தின் கேந்திர நிலையத்திற்கான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். இதற்கு நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ய வேண்டும். கொழும்பு துறைமுகத்தின் தென் முனையத்தில் தான் கூடுதல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களிலும் முக்கிய துறைமுக செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. இவற்றை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வது அவசியம். அப்போதுதான் இந்தியாவுக்கு செல்லும் சர்வதேச சரக்கு கப்பல்களின் பண்ட பரிமாற்ற நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்ள முடியும். இஸ்ரேல் - ஹமாஸ் மோதலுடன் சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் அதிகரித்தன. இது இலங்கைக்கு நன்மையாகியது. இந்தியாவுடனான இணைப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் கட்டுவதனூடாக நில ரீதியான நேரடி இணைப்பு ஏற்படுகிறது. இந்த இணைப்பின் ஊடாக இலங்கை எவ்வாறு நன்மை அடைய முடியும் என்ற தொலைநோக்கு பார்வை எமக்கு இருக்க வேண்டும். குறிப்பாக, தென்னிந்தியாவின் உற்பத்திகளின் ஏற்றுமதியில் இலங்கை துறைமுகங்கள் பயனடைய முடியும். குறிப்பாக கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை தென்னிந்தியா தமது ஏற்றுமதிகளுக்காக பயன்படுத்த முடியும். இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதை விட பொருளாதார ரீதியில் தென்னிந்தியாவுக்கு நன்மையளிக்கும். இவ்வாறான திட்டங்களினால் இலங்கைக்கு தொழில் வாய்ப்பு ரீதியான நன்மைகள் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதே போன்று உற்பத்தி பொருளாதாரத்திலும் இலங்கை கூடிய கவனம் செலுத்த வேண்டியதுள்ளது. புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. கனிய வளங்களை ஏற்றுமதி செய்யும் போது மூலப்பொருட்களாக அல்லாது முடிவுப்பொருட்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்காக பல சர்வதேச நிறுவனங்களின் தொழிற்சாலைகளை உள்நாட்டில் நிர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயம் உள்ளிட்ட அனைத்து உற்பத்திகளையும் தேசிய பொருளாதாரத்துடன் இணைக்கும் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். இதனை மையப்படுத்தியதாகவே எமது நிலையான பொருளாதார அபிவிருத்தி திட்டம் உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/181574