-
Posts
34939 -
Joined
-
Days Won
173
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கிருபன்
-
ஈசலோடாயினும்... 1.ஒரு மழைநாளிரவில் பிறந்த ஈசல் ஒன்று சற்றே எம்பிப் பறந்தது வானில் .. பக்கத்தில் பறந்துகொண்டிருந்த பறவையைப் பார்த்து நானும் ஒரு பறவையென்று பெருமிதம் கொண்டது கொண்ட வினாடியே ஆயுள் தீர்ந்து விழுந்திறந்தது 2.விழுந்த ஈசல் இறக்கும் முன்பு நினைத்தது ஒரு நாள் வாழ்க்கைக்கு எதற்கிந்த சிறகு? http://ezhuththuppiz...og-post_30.html
-
எனது மனங்கொத்திப் பறவை ரவி (சுவிஸ்) ---------------------------------------- இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன் எனது பிரிய மனங்கொத்திப் பறவையின் மீள்வரவில் நான் இலேசாகிப்போயிருக்கிறேன். நான் எதையும் விசாரணை செய்வதாயில்லை. ஏன் பறந்தாய் ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய் என்பதெல்லாம் எனக்கு பொருட்டல்ல இப்போ. என் பிரிய மனங்கொத்தியே நீ சொல்லாமலே பறந்து சென்ற காலங்கள் நீண்டபோது என் மனதில் உன் இருப்பிடம் பொந்துகளாய் காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை அறிவாயா நீ. நீ அறிந்திருப்பாய் நீ இரக்கமுற்றும் இருப்பாய். மீண்டும் உன் கொத்தலில் இதமுற்றிருக்கிறேன் நான் கொத்து கோதிவிடு என் மனதை இதுவரையான உன் பிரிவின் காலங்களில் என் மனம் கொத்திச் சென்ற பறவைகளில் பலவும் என் நம்பிக்கைகளின் மீது தம் கூரலகால் குருதிவடிய எழுதிச்சென்ற வரிகளெல்லாம் வலிகள் ஊர்கின்றன. மறக்க முனைந்து மறக்க முனைந்து தோற்றுப்போகிறேன் நான். நான் நானாகவே இருப்பதற்காய் காலமெலாம் வலிகளினூடு பயணிக்கிறேன். சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு உன் மீள்வரவும் மீள்பறப்பாய் போய்விடும்தான். என்றபோதும் இன்று நான் இதமுற்றிருக்கிறேன் - நீ கோதிய பொந்துள் சிறகை அகல விரித்ததனால்! http://www.vaarppu.com/view/2533/
-
அகூதா, நுணா, உடையார் மூவரினதும் விடைகள் சரி. வயதுகள் வேறுபடினும் 5 பிள்ளைகள் என்பது சரிதான்
-
எங்கள் ஊர் விதானையாருக்குப் பாடசாலைக்குப் போகும் வயதில் பல பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் எல்லோரது வயதுகளையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கினால் வருவது 60060 எனில் விதானையாருக்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர்?
-
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.
-
முத்தக் கவிதைகள்: முத்தம்... ஒரு பெண் தன் பெண்மையை உணர்ந்து மெய் சிலீர்த்திடும் சுதந்திரத்தருணம்! ~*~* ~*~ முத்தம்! அன்பின் வெளிப்பாடு காதலின் கடைக்குட்டி நினைவுக்கோர்வையின் அகவரிசை ஆணாதிக்கத்தின் முற்றுப்புள்ளி யதார்த்தத்தை மீறிய கற்பனை. ~*~* ~*~ முத்தம் ! ஒரு நொடிக்கொண்டாட்டம் காமத்தின் கதவுத்தாழ்பாள் ஏவாளின் ஆப்பிள் பெண் உணர்தலின் முதற்புள்ளி கற்பனையை மீறிய யதார்த்தம். ~*~* ~*~ சவ வீட்டிலும் சத்தமில்லா தெருக்களிலும் பகிரப்படும் முத்தங்கள் வெவ்வேறானவை.. ~*~* ~*~ ஏங்கி நிற்கும் இதய வெற்றிடத்தை எதிர்பாரா ஒற்றை முடிவில் முத்தம் மலர்களால் நிரப்பும். ~*~* ~*~ தடுத்து பழகாதீர்கள் கொடுத்து பழகுங்கள் முத்தங்களை! - அருண்.இரா http://kaattchi.blog...-post_9276.html
-
பருவமெய்திய பின் மன்னார் அமுதன் -------------------------- பருவமெய்திய பின்தான் மாறிப் போயிருந்தது அப்பாவிற்கும் எனக்குமான பிடித்தல்கள் வாசலில் வரும் போதே வீணாவா! வா வாவெனும் அடுத்த வீட்டு மாமாவும் அகிலாவின் அண்ணாவும் போலிருக்கவில்லை அப்பா மழை வரமுன் குடையுடனும்.. தாமதித்தால் பேருந்து நிலையத்திலும்.. முன்னும் பின்னுமாய் திரிய காரணம் தேவைப்படுகிறது அப்பாவுக்கு துக்கம் தாழாமல் அழுத ஒருபொழுதில் ஆறுதல் கூறுவதாய் அங்கம் தடவுகிறான் அகிலாவின் அண்ணா யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடிக்கு வா நிலா பார்க்கலாமென மாமா இப்போதெல்லாம் பிடிக்கிறது அப்பாவை http://www.vaarppu.com/view/2496/
-
wellai -> நெல்லை
-
இ-கலப்பையைத் (http://thamizha.com/project/ekalappai) தரவிறக்கம் செய்திருந்தால் மிகவும் இலகு (Windows XP மற்றும் Windows 7 இல் எனக்கு வேலை செய்கின்றது). Launch EKalappai 3.0 Select Keyboard - Phonetic (English2Unicode) or Bamini (Bamini2Unicode) Windows Tray இல் இ-கலப்பை நிற்கும். அதனை ஒற்றைச் சொடுக்கு மூலம் ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் மாற்றலாம். இப்பதிவை அவ்வாறுதான் பதிந்தேன்.
-
அதானே. போட்டுடைத்த ரதிக்கு நல்ல வேப்பந்தடியால விளாசவேணும். கு.சா. நிதானமாக எழுதிய கருத்துக்கு ஒரு பச்சை!
-
:icon_mrgreen: திருவாளர் பச்சை உயிர்த்து வந்தீட்டார்! :icon_mrgreen:
-
வெளியே மழை பெய்கிறது ரெஜோ இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும் சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது … வாய் புகுந்து மீண்டால் இன்னொரு தெரு இன்னொரு வாசல் தப்ப முடியாதென்றே தெரிகிறது … உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி தொலைந்து போகத் தோன்றுகிறது பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும் மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது மதில் மேல் பூனையாய் என் நிழல் எந்தப் பக்கம் விழும் … நிழலைத் துரத்திக் கொண்டு நானும் என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும் ஓடிக் கொண்டேயிருக்கிறோம் மதிலைச் சிதைத்த படி … சில ரகசியங்கள் புரிகின்றன சில புதிர் முடிச்சுகள் அவிழ்கின்றன அகோரங்கள் அழகாகின்றன அழகிற்கான வாய்ப்பாடுகள் அழிகின்றன … எந்தப் பாதையும் இங்கே எனக்கில்லை எந்த கதவுகளுக்கும் என்னிடம் திறப்பில்லை வாசல் தேடி வர யாருமில்லை கதவின் பின்னே காத்திருப்பதில் நியாயமில்லை … கதைகள் அழிக்கப்பட்ட காகிதத்தில் புதிய கதைகளுக்கு இடங்களிருந்தாலும் கசங்கிய ரேகைகள் கவனமாய் இருக்கச் சொல்லுகின்றன … மீண்டும் ஒரு முறை, முதலில் இருந்து … எழுத அமர்கிறேன் வார்த்தைகள் தடித்து வர மறுக்கின்றன நடுங்கும் கைகளை நகங்கள் கிழிக்கின்றன .. தற்செயலாய் காயம் கண்டு கசிகின்ற ரத்தம் கிளர்ச்சியளிக்கிறது .. இன்னும் சில காயங்கள் வலிகளே வரங்களென்கின்றன … பகலில் தூக்கம் பிடித்திருக்கிறது கண்களை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுதான் போகிறது … நள்ளிரவில் ஓலமிடுகிறேன் நாய்களில் சில ஒத்திசைக்கின்றன … சீக்கிரம் இறந்து போகப் போவதாய் கற்பனை செய்து கொள்கிறேன் … கனவில் எல்லாம் குறுவாள் எடுத்துக் கொலைகள் செய்கிறேன் … பைகளில் சில்லறை கனக்கிறது பசிக்கிறது நினைவில் வருகிறது அம்மாவின் முகம் பசித்திருப்பதின் நியாயம் பிடித்திருக்கிறது … வெளியே மழை பெய்கிறது அழத் தோன்றுகிறது . http://www.rejovasan...aining-outside/
-
எனக்கு திருவாளர். பச்சை அவர்களின் முகக்குறி வேண்டும்!
-
போதிமரம் தமிழ்நதி என்னை விறுக்கென்று கடந்த உன் விழிகளில் முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது உன் உதட்டினுள் துருதுருக்கும் கத்திமுனை என் தொண்டைக்குழியை வேட்கிறது. மாறிவிட்டன நமதிடங்கள் துடிப்படங்கும் மீனாக நான் தரையில் துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில். துரோகி-தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ சற்றுமுன்பேஅம்மணமானோம். இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில் எரிகிறது எரிகிறது தேகம் நம் அட்டைக்கத்திகளில் எவரெவரின் குருதியோ வழிகிறது நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன் ஒழுகிற்று ஊரும் உயிரும் இழந்த பல்லாயிரவரின் ஒப்பாரிகள் வன்மம் உதிர்த்து வந்தொருக்கால் அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன் மரணம் என்ற போதிமரத்தின் கீழ் நிழலில்லை நீயுமில்லை நானுமில்லை வதைமுகாம் மனிதர்களின் கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது தோற்றவரின் வேதம் என்பாய் சரணாகதி என்பாய் போடீ போ! இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை! http://tamilnathy.blogspot.com/2009/12/blog-post_20.html
-
வாழ்த்துமழைகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
-
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்
-
நிழலியின் மகனுக்கு "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்".
-
என் பாதையும் என் பயணமும் கவிஞர்.பாரதிமோகன் இலக்கு நோக்கிய என் பயணத்தில் பாதை தெரியாமல்.. பலநாட்கள்.. இடறி விழுந்து தடம் மாறி சில நாட்கள்.. முட்டி முளைக்கின்ற போதெல்லாம் கிள்ளி எரிகின்ற விரல்கள்.. எங்கே தொலைந்து போவேனோ என்ற அச்சத்திலேயே.. போராடி போராடி புதிய பாதை தேடி-மீண்டும் இலக்கு நோக்கிய பயணம்.. பாதையும் முடியவில்லை பயணமும் முடியவில்லை களைப்பினூடே திரும்பிபார்கிறபோதுதான் உணர்கிறேன்.. வாழ்வில் பாதி முடிந்திருப்பதை மீதி வாழ்க்கையை எப்படி வாழ்வது... மீண்டும் தொடர்கிறது என் பயணம்.. அதற்கான இலக்கோடு! http://bhaarathimohan.blogspot.com/2011/03/blog-post.html
-
நாங்கள்தான். மனதைத் தொடுகின்ற கவிதை.
-
கதவுகளுக்குப் பின்னால்... ஜெ.திவா தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! நான் அப்போதுதான் என் ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் அழத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் என் சிசுவுக்கு முலையூட்டத் தொடங்கியிருக்கலாம் நான் அப்போதுதான் ரத்தக் கறைபடிந்த என் கொலைக்கருவியை பார்க்கத் தொடங்கியிருக்கலாம் தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் நான் விதைக்குள் தவிக்கும் ஒரு தளிரை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடும் நான் ஒரு பறவையின் மனதை அறிய ஒரு கிளிக்கு பேச்சுப் பழக்கிக்கொண்டிருக்கக்கூடும் நான் சுவரில் தொங்கும் ஒரு கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருக்கக்கூடும் நான் ஒரு கனவின் பாதி வழியில் நின்றுகொண்டிருக்கக்கூடும் தயவுசெய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் யாரேனும் ஒருவர் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் யாரேனும் ஒருவர் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுக்கொண்டிருக்கலாம் யாரேனும் ஒருவர் திறக்கக் கூடாத ஒன்றைத் திறந்துகொண்டிருக்கலாம் யாரேனும் ஒருவர் இழக்கக் கூடாத ஒன்றை இழந்துகொண்டிருக்கலாம் தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த அற்ப சாகசங்கள் முடிவுக்கு வந்துவிடும் இன்னும் கொஞ்ச நேரத்தில் பாதிப் பைத்தியம் தெளிந்துவிடும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இசைத் தட்டுகள் நின்றுவிடும் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு கதவை மூடிவைக்கும் எல்லா தேவைகளும் விலகிவிடும் தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும் கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார் ஒரு சுருக்குக் கயிற்றின் கடைசி முடிச்சை போடுவதை நீங்கள் தடுத்து விடும்போது கடவுள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் ஒரு விடைபெறும் முத்தத்தின் பாதையில் நீங்கள் குறுக்கிட்டுவிடும்போது கடவுள் உங்களோடு பேசுவதை நிறுத்திவிடுவார் எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள் உங்களுடைய சொற்களால் நிரப்பும்போது கடவுள் உங்களுக்கு கதவு திறக்க மறுத்துவிடுவார் நீங்கள் மூடப்பட்ட ஒரு அறையின் கதவுகளை இவ்வளவு சந்தேகத்துடன் பார்க்கும்போது தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்! http://jthiva.blogspot.com/2011/06/blog-post_22.html
-
பருந்து தேவதேவன் உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நகங்களால் உங்கள் முகம் குருதி காணப் பிராண்டப் பட்டதுபோல் உணர்ந்திருக்கிறீர்களா? பறவை இனத்திற் பிறந்தாலும் விண்ணிற் பறக்க இயலாது குப்பை கிண்டித் திரியும் அதனை துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி! அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து அப் பருந்தோடு பருந்தாய் பறந்து திரிந்திருக்கிறீர்களா பாதையில்லா வானத்தில்? குப்பைகளை ஆங்கே நெளியும் புழுக்களை கோழிக் குஞ்சுகளை அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை புலம்பல்களை போரை போர்க்களங்களில் பிணமாகி அழியும் மனிதர்களை பிணங்களின் அழுகிய வாழ்வை- நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா? அது தன் சிறகு மடித்து தனது பனித்த கண்களுடன் ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில் அய்யம் சிறிதுமின்றி ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா? http://poetdevadevan.blogspot.com/2011/06/blog-post_04.html
-
எனக்கும் பாடப்புத்தகம் படிக்கத்தொடங்கினால் நித்திரை வந்துவிடும். அதற்காகவே தற்போதும் முன்னர் படித்த புத்தகம் ஒன்றை பக்கத்தில் வைத்திருக்கின்றேன். இரண்டு பக்கம் தாண்டமுதல் நித்திரை வந்துவிடும். அப்படி வரும் நித்திரை குலைய ஏழெட்டு மணித்தியாலம் போகும்!
-
போதை உயிரோடை பாதியில் படித்து நிறுத்திய கதையை தொடர்வது அதிகாலை கனவை தொடர்வது போல எளிதல்ல ஊன் உறக்கம் மறந்த வாசிப்பின் எழுத்துகள் உதிரத்தில் மிதக்கக் கூடும் பேய் விரட்டுவதினும் கடினமானதே படிப்பின் போதையை விட்டொழிப்பது வாசிப்பை நிறுத்தி வைத்து சற்றே இடைவெளி விட்டு ஒருநாள் படிக்கும் போதுணர்ந்தேன் போதையொன்றும் பெரும் பரவசத்தை தருவதில்லை http://uyirodai.blogspot.com/2011/04/blog-post_29.html
-
எனக்கு கொல்வது பிடிக்கும் போகன் எனக்கு கொல்வது பிடிக்கும் முதன் முதலாய் என்னை விரட்டிய தெரு நாயை அடித்துக் கொன்றேன் அன்று தெரிந்துகொண்டேன் நாய்களுடன் விவாதிப்பது என்றுமே பயன் தராது என்னுடைய பயத்தை நான் கொல்வதன் மூலமே வென்றேன் எப்போதெல்லாம் பயந்தேனோ அப்போதெல்லாம் கொன்றேன் பிடிக்காத வாத்தியார் பிடிக்கவில்லை என்ற பெண் விளையாட்டில் வென்ற நண்பன்... ஆனால் ஒரு கோழையைப்போல் ரகசியமாய்க் கொல்வது எனக்குப் பிடிக்கவில்லை வெளிப்படையாக கொல்வதற்கு நீங்கள் சில காரணங்களை கேட்டீர்கள் நாடு,மொழி,மதம் இனம்,ஜாதி சித்தாந்தம் போன்ற முகாந்திரங்களுடன் கொல்வதை நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என புரிந்துகொண்டேன் ராணுவத்தில் சேர்ந்து எதிர் நாட்டினரைக் கொன்றேன் விருதுகள் கிடைத்தன கடவுள் நம்பிக்கை இல்லாவிடினும் மதக் கலவரங்கள் செய்தேன் ஏனெனில் மதக் கலவரங்களில் எல்லாம் அனுமதிக்கப் படுகின்றன பெண்களைப் புணர்வதும் குழந்தைகளை எரிப்பதும் கூட.. ஆண்களைக் கொல்வதை விட பெண்களைக் கொல்வது இனிப்பானது இன்னும் பிறக்காத சிசுக்களை வயிற்றிலிருந்து பிடுங்கிக் கொன்றிருக்கிறேன்.. எல்லாம் கடவுளுக்காக எனில் எதுவும் பாவமில்லை உண்மையில் கொல்பவர் அனைவர் கையிலும் சொர்க்கத்தின் திறவுகோலை பார்த்தேன் எல்லாக் கடவுள்களும் கொலை செய்துள்ளனர் ஆகவே கொல்வதினால் நானும் கடவுள் ஆகிறேன் பின்னர் இனக் கலவரங்களில் ஈடுபட்டேன் மொழிப் போர்களில்.. சித்தாந்த சுத்திகரிப்புகளில்... கொன்ற இடங்களில் எல்லாம் என்னைப் பயந்தீர்கள் மரியாதை செய்தீர்கள் வலியதே எஞ்சும் என்பது உங்களுக்கும் தெரியும் சிலர் என்னை பாசிஸ்ட் என்பீர்கள் கவலையில்லை ஏனெனில் எனக்குத் தெரியும் உங்களைக் கொல்பவர்களை மட்டுமே நீங்கள் உங்களை ஆள அனுமதிப்பீர்கள் என்று... http://ezhuththuppizhai.blogspot.com/2010/06/blog-post_8250.html
-
உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !! வித்யாசாகர் ----------------------------------------------------------- நாட்கள் தொலைத்திடாத அந்த நினைவுகளில் சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ; உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய முதல் பொழுது முதல் தருணம் - உடையாத கண்ணாடியின் முகம் போல பளிச்சென இருக்கிறது உள்ளே; ஓடிவந்து நீ சட்டென மடியில் அமர்ந்த கணம் என்னை துளைத்து துளைத்து பார்த்த இருவிழிகள், எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என எல்லாமே உன்னை எனக்குள் - மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்; எனக்காக இல்லையென்றாலும் உனக்காகவேனும் வந்து - உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன் ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து - இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில் வைத்திருக்கிறேன்; பெரிதாக அதையெல்லாம் எண்ணி கதையெழுதும் காதலெல்லாம் அல்ல; நம் காதல்; காதலென்ற வார்த்தை கூட நம் உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம், அதையெல்லாம் கடந்து நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது. திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள் தவறிப் போட்டுவிட்ட - கல் போல மனதிற்குள் மனதை போட்டுவிட்டு யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது. சொல்லியிருந்தால் மட்டும் உலகம் அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ தெரியாது - ஆனால் - காதலென்னும் அவசியமோ நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ அல்லது 'அத்தனை' இடைவெளியோ கூட அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே; அப்படி - சேருமிடமே தெரியாத வானமும் பூமியும் போல் எங்கோ ஒரு தூரத்தில் ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு; நானென்றால் நீ ஓடிவருவதும் நீயென்றால் நான் காத்திருப்பதும் எச்சில் பாராமல் - தொடுதலுக்கு கூசாமல் - ஆண் பெண் பிரிக்காமல் - எந்த வரையறையுமின்றி - உரிமையே எதிர்பாராது - மனதால் மட்டும் நெருங்கியிருந்த உணர்வு சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்??? தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட திராணியின்றி நகைக்கும் உலகம் தானே இது; அட, உலகமென்ன உலகம்; உலகத்தை தூக்கி வீசிவிட்டு நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள தயாரில்லை என்பதற்கான காரணத்தை காலம் மட்டுமே ஒருவேளை அறிந்திருக்கக்கூடும்; எப்படியோ; யார்மீதும் குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின் இன்று - அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே உனக்கும் எனக்கும் மட்டும்; தூரநின்று கண்சிமிட்டும் அந்த குழந்தையின் சிரிப்புப்போல நீ சிரிக்கும் அந்த சிரிப்பின் நினைவுகளில் தான் கட்டிவைத்திருக்கிறேன் என்னை - வாழ்விற்குமாய்; இப்போதும்!! இப்படியே கடந்து கடந்து ஓர்நாளில் - என் உயிர்முடுச்சு அவிழ்ந்து நான் கீழே விழுகையில் - ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது நீ வந்து நிற்கையில் - என் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும் நீ விழுந்து அழுது புரண்டால் - உனக்கு வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!! http://www.vaarppu.com/view/2449/