RAVI MANY
·
மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, வெளிநாடு போக ஆசை வந்தது. ஒரு ஏஜெண்டை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், வெளிநாடு போய் சேர்ந்தது.
வெளிநாட்டில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள்
தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம்,"ஏய்... நான் காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு,மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும்
தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.
அந்த ஊழியர், "உண்மை தான்... நீ காட்டு ராஜா தான்...ஆனால், இங்க குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.
இவ்வளவு தான் வெளிநாட்டு வாழ்க்கை !!!!!!