அந்தக் கல் எப்படி வந்ததோ தெரியாது ஆனால் அதை வைத்திருந்ததும் மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது......கையில் நூல், தாயத்து மாதிரி.......! 😁
நல்லாயிருக்கு கதை.......!
வணக்கம் வாத்தியார்..........!
ஆண் : ஏறாத மல மேலே…. ஆ…
எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா… ஆ…
எசப் பாட்டு படிக்கட்டுமா
எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா
பெண் : ஆ…
ஏ… எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பி விட
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
ஆண் : ஏ புள்ள சரோசா
இங்க எவளாது
எம் பாட்டுக்கு எசை பாட்டு பாடுனிக
பெண் : ஏனுங்க நாங்க பாட்டு பாடற
மாறியா இருக்கோம்
உங்க பாட்டுக்கு எசை பாட்டு
பாட முடியுமா
ஆண் : எலே ராக்கு நீ பாடுனவ
பெண் : ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான்
கொரசல் ஆக்கும்
ஆண் : அடி மாங் குலத்து கர மேல… ஏ…
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து…
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பெண் : பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
ஆண் : அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப
பெண் : ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஆண் : ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்
அடி ஓடப் பக்கம்…...!
--- ஏறாத மல மேலே ---
ஒவ்வொரு தேசம் ஒவ்வொரு மாநிலம் + மக்கள் ஒவ்வொருவர்களிடமும் வெவ்வேறு வித்தியாசமான வாழ்க்கை முறைகள் ......... இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் நன்றாகவே உள்ளது.......! 😁
இணைப்புக்கு நன்றி கிருபன்........!
வாஸ்தவத்தில் நீங்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கின்றது.......! 😁
பலப்பல தத்துவ ஞானங்கள் உங்களிடம் கைவசம் இருக்குது போல......அவைகளை இங்கே இறக்கி வைக்கலாம் ........தொடருங்கள் தில்லை ........!
சால்மன் மீனும் மிகக் குறைந்த நிரோட்டங்கள் உள்ள உயரமான இடங்களில் இனப்பெருக்கம் செய்து கடலுக்கு வரும் பின் மீண்டும் அந்தப் பருவங்களில் நீர்விழ்ச்சிகளில் எல்லாம் எதிர்நீச்சலில் ஏறி பழைய இடத்துக்கு சென்று இனபெருக்கம் செய்யும்.......! (சில இயற்கை வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்)......!
இரவில் கதை சொல்வது இன்று அறவே அற்றுப்போய் விட்டது என்றுதான் சொல்லவேண்டும்......முன்பு ஒராள் கதை சொன்னாலோ பாட்டுக்கள் படித்தாலோ சுற்றிவர ஐந்தாறு பேராவது இருந்து கேட்பார்கள்.....இன்று யாருமே கிடையாது........! 😴
நன்றி ரசோதரன்........!
நாங்கள் ஒருநாளும் சந்தியில் நின்று வம்பளந்ததில்லை, எல்லாம் பாடசாலை மைதானத்திற்குள்தான்.....உற்றாரோ உறவினரோ யாரும் வந்து கல்லால எறிந்து திரத்திரவரை சமா நடக்கும்........" தேன் தடவிய விஷம்" நல்லா இருக்கு......! 😂
கிரகணம் உங்களின் குசினிக்குள் நின்றிருக்கு, நீங்கள் அநியாயத்துக்கு வெளில நின்று தேடியிருக்கிறீர்கள்......சும்மா சொல்லக்கூடாது சம்பவம் நல்லா இருக்கு......! 😂
மக்களை கட்டுப்படுத்த முடியாது ......அனால் ஒன்று செய்யலாம்.....அழகரை நீர் உட்புக முடியாத ஒரு கண்ணாடி கூண்டுக்குள் வைத்து அழைத்து வரலாம்.........! 😁
பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!
வணக்கம் வாத்தியார்.........!
பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி
நான் என்று வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி
நான் என்று ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே
நான் என்றும் மிதப்பேன்
குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)
பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை......!
--- மார்கழிப் பூவே மார்கழிப் பூவே ---