Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30758
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே பேச பேச தான் இன்னும் பிடிக்குதே பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே கை சேர்ந்ததால் கவலை மறந்ததே தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓரிடம் கிடைத்ததே ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா பெண் : இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே......! --- உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே ---
  2. மிக நல்ல விடயம் ........அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் இனியாவது சேர்ந்து வாழட்டும்.......!
  3. சிறப்பான ஒப்புநோக்குதல் ........! 👍 இணைப்புக்கு நன்றி சுப.சோமசுந்தரம்........!
  4. நான் நேற்றிரவு எதிர்பாராமல் "ஆடு ஜீவிதம்" படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது......இங்கு நான் படத்தை விமர்சிக்க வரவில்லை......இதில் வரும் ஒரு காட்சி.....! அமலாபால் தன் வீட்டின் முற்றத்தில் இருந்த கிடுகுகளால் மறைத்து கட்டியிருந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருப்பார்.....அங்கு வரும் அவரது கணவன் பிருத்விராஜ் அவரை அப்படியே ஈரப் பாவாடையுடன் தூக்கி வந்து, வீட்டின் அருகே ஒரு பெரிய ஆறு ஓடுகின்றது அந்த ஆற்றில் வீசுவார் பின் தானும் குதித்து அமலாபாலுடன் உல்லாசமாய் நீந்துவர்......இக் காட்சி எந்த விரசமுமின்றி அழகாக நயமாக படமாக்கப் பட்டிருக்கு......அதை எழுத்தில் வர்ணிப்பதாயின் அப்படியே மயிலம்மாவும் வாமனும் நீராடுவதை வாசிக்கவும்...... இந்தப் படம் இப்போதுதான் வந்தது......சில வாரங்களுக்கு முன்பே மயிலம்மாவில் இதுபோன்று நான் எழுதியிருந்தேன்....... இவை எதேச்சையாக நடப்பது அவ்வளவுதான்.......!
  5. துர்க்கையம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.சனம் குறைவாக இருந்தது.கொஞ்ச பக்தர்களே இருந்தார்கள்.கோவில் பெரிதாகவும் அழகாகவும் இருக்கு. முன் வாசலில் காராம்பசு கன்றுடன் நின்று வரவேற்கிறது. சிறப்பாக அம்பாளை தரிசனம் செய்து அர்ச்சனையும் செய்து விட்டு வெளியே வருகிறோம். எனக்கு மாவிட்டபுரத்தில் எங்கள் வீட்டையும் அருகே இருக்கும் காளிகோவிலையும் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் சென்று வந்த எனது தங்கை சொன்னார், வீடெல்லாம் உடைத்துக்கொண்டு போட்டார்கள். ரோட்டில் இருந்து ஒரே காடாய் கிடக்கு.போகும் வழியெல்லாம் மரங்களாலும் பற்றைகளாலும் மறைந்து போய் கிடக்குது என்று. முன்பு லொறி போன பாதை இப்போது வான் போகவும் சிரமப்பட்டுக்கொண்டு போகுது. நீங்கள் தெரிந்து எழுதினீங்களோ தெரியாமல் எழுதினீங்களோ தெரியாது நான் முன்பு எழுதிய என் அனுபவ சம்பவத்துடன் அப்படியே ஒத்துப் போகின்றது.......இது 2018 ல் நான் ஊருக்குப் போய் வந்து யாழ் அக்காவை 19 ல் "திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்" என்னும் ஆக்கத்தில் எழுதியிருந்தேன்.....! அங்கு எங்களுக்கு ஒரு பனங்காணி இருந்தது. அதில் ஒரு பெரிய விளாத்திமரமும் அதற்கு நடுவாய் ஊடறுத்து ஒரு பனைமரமும் இருந்தது. நான் நண்பர்களுடன் அப்பப்ப அந்த விளாத்தியால் ஏறி பின் பனையில் ஏறி நுங்குகள் வெட்டிப்போட்டு வந்து சீவிக் குடித்திருக்கிறோம்......அதற்கு அருகில் மஞ்சமுன்னா மரம் என்று நினைக்கிறேன் அதன் கீழ் ஒரு சாதாரண கல்லுதான் எந்தவிதமான ஆடம்பரங்களை இல்லை அதை "கல்லடி வைரவர்" என்று சொல்லுவார்கள்.....அதில் என்ன விசேஷமெனில் உங்களுடைய பொருட்கள் ஏதாவது கைதவறி தொலைந்து போனால் ஒரு ஒரு சதத்தை துணியில் முடித்து அந்த வைரவரை நினைத்துக் கொண்டு வீட்டு சாமிபடத்துக்கு முன் வைத்தால் போதும் இரண்டொரு நாளில் அவை கிடைத்துவிடும்.....அவை சின்ன சின்ன பொருட்கள் ஆடு மாடுகள் போன்ற காணாமல் போன்றவைகள்.....நான் இவ்வளவு வருடங்களாச்சுது இன்றும் ஏதாவது பொருட்கள் காணாமல் போனால் அவரை நினைத்திக் கொள்வேன் அவர் என்னைக் காய் விட்டதில்லை..... இதில் விவாதங்கள் செய்யமுடியாது, நம்பிக்கைதானே எல்லாம்.......! (இன்னுமொரு சம்பவம் அதை "மயிலம்மா" பக்கத்தில் எழுதுகிறேன்).
  6. வணக்கம் வாத்தியார்........! ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ ஆண் : பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி ஆண் : தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ ஆண் : ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு இது பூவோ பூந்தேனோ ஆண் : மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம் பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும் ஆண் : ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான் பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான் ஆண் : மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளைத் தட்டுங்க கேட்டு இது பூவோ பூந்தேனோ.......! --- அரைச்ச சந்தனம் ---
  7. பொதுமக்களுக்கு இதுபோன்ற பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கொரோனாவை விடவும் கொடியவர்கள்........! 😴
  8. உங்களின் அனுபவங்கள் மனசைக் கலங்கவைக்கின்றது.......ஆனால் எம் விதி எல்லோருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள் வந்து வாழ்க்கையை புரட்டிப் போடுகின்றது.......!
  9. போளையடிக்கு முன் அரிவரி படிக்கும் போதே பாடசாலை விறாந்தையில் சிலேட்டுப் பென்சிலை துண்டு துண்டாய் முறித்து வைத்து விளையாடுவோம். அது இப்பவும் நல்ல ஞாபகமாய் இருக்கு. பின் போளையடி, கிட்டி புள் என்று கிரிக்கட் புட்பால் வரை போய் ......! 😇 நன்றி நிழலி ........!
  10. நான் காலையில் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டு கடந்து போய் விட்டேன் ........! 😂 சூப்பர் சிறியர்......!
  11. வணக்கம் வாத்தியார்.......! பெண்: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி நான் தேடும் சொர்கம் எங்கே காமி ஆண்: மஞ்சள் நாத்து நான் கட்டு பார்கவா கொஞ்சம் ஆசையா தொட்டு பார்கவா பாவாடையில் எதுக்கு சதிராட்டம் பெண்: காதல் சூட்டிலே மாமன் ஏங்குற சேலை காத்துல மூச்சு வாங்குற மாறாப்புல விசிறி விசிரோனும் ஆண்: நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன் நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன் பெண்: மூடும் முந்தானை பந்தல் இது ஆடு பந்தாடு அல்லி கொடு பெண்: கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா அள்ளி கட்டவா ...மேளம் கொட்டவா சூடேறுது எனக்கு ஒன்னு வேணும் கன்னி பொன்னிது ரொம்ப சின்னது நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது போதாதடி எனக்கு இன்னும் வேணும் பெண்: போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன் கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன் ஆண்: ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன கண்ணே உன்னோட வீராப் பென்ன........! --- மெதுவா தந்தி அடிச்சானே ஒம் மச்சானே ---
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.