Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. 😂 ஏழுமலையான் எந்த உலகத்தில் இருந்து எழுதுகிறார் என விளங்கவில்லை. சட்ட விரோதமாக இருப்போரை "வந்து அழைத்துப் போங்கோ" என்று நாடுகளுக்கு அறிவிப்பார்களாம். நாடுகளும் வந்து கௌரவமாக அழைத்துப் போகுமாம். எந்த நாட்டில் இது நடக்கிறது😂? அமெரிக்காவில் இவ்வளவு சட்ட விரோதக் குடியேறிகள் தேங்கக் காரணம், பிடித்து அடைத்து வைக்காமல், பெயரைப் பதிந்து விட்டு வழக்கைப் பின் போட்டு விடுவர். பிணையில் வெளியே விடப் பட்டவர், வழக்கிற்கு வராமல் ஒளித்து வாழ்ந்து கொண்டிருப்பார். இதை going underground என்பார்கள். இதற்கு ஒரே வழி, கைது செய்து, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றி விடுவது தான். உடனடியாக வெளியேற்றா விட்டால், சட்டத்தரணி நீதி மன்றில் தடையுத்தரவு வாங்கி, ஒரு குடிவரவு நீதிபதியின் முன் ஆஜராக்கக் கோர முடியும். நீதிபதியப் பொறுத்து அவரது விண்ணப்பம் நிராகரிக்கப் படும் அல்லது மேலும் பரிசீலிக்கப் படும். இதனால் தான் உடனடியாக அனுப்பப் படுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து சுய விருப்பில் (voluntary) வெளியேறும் குடியேறிகள் மட்டும் தான் பயணிகள் விமானத்தில் பயணிப்பர். ஏனையோர் காலா காலமாக சரக்கு விமானங்களில் கிடைக்கும் ஓரிரு ஆசனங்களில் அமர்த்தப் பட்டுத் தான் நாடு கடத்தப் படுவர். இந்த C-17 இராணுவ விமானம், துருப்புகள் பயணிக்கும் விமானம். முன்னேற்றம் (upgrade) என்று சொல்லலாம்.
  2. மட்டம் தட்டப் பட வேண்டிய கருத்துகள் மட்டந் தட்டப் படும்! முட்டாள் தனமான கருத்துகளை (கூகிளில் இருந்து உருவிய துணுக்குகளில் இருந்து பெரியாரைப் படிக்கும் உங்கள் கருத்துகள் சிறந்த உதாரணங்கள்!) முன் வைக்கும் கருத்தாளர்களும் மட்டந் தட்டப் படுவர்! இதில் எந்த மாற்றமும் நான் செய்யப் போவதில்லை! நீங்கள் அஞ்சாம் ஆண்டு ஸ்கொலர்ஷிப் வெட்டுப் புள்ளியோடு வந்தாலும் கூட😎! இலங்கையிலும் சிங்களவரிடம் கொடுக்காமல் தமிழர் பகுதிகளை பிரிட்டிஷார் ஆண்டிருக்கலாம், நன்றாக இருந்திருக்கும். கல்வி, தொழில்துறைகள், உள்கட்டுமானம் என்பன இன்னும் அபிவிருத்தியாகி இருக்கும். இதை மறுக்க மாட்டீர்களென நினைக்கிறேன்.
  3. புரிகிறது! சில வருடங்கள் முன்பிருந்தே, நான், கோசான், நீர்வேலியான் உட்பட பலர் ட்ரம்ப் பற்றியும், புரின் பற்றியும், புரின் வால்களாக உருவாகி வரும் ஓர்பான் போன்றோர் பற்றியும் மீள மீளச் சொல்லி வந்திருக்கிறோம். இதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தோரை இரு வகைகளில் அடக்கலாம்: 1. இந்தக் கருத்துக்களைச் சொல்வோரைப் பிடிக்காத உறவுகள், அதனால் கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டு வாதாடுவோர். 2. உலகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அல்ல, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்ற வரலாறு கூடத் தெரியாத அறிவலட்சியர்கள். துரதிர்ஷ்ட வசமாக, இந்த இரண்டாவது வகையினர் எங்கள் சமூகத்தில் பெருகி விட்டனர். தொடர்ந்து பெருகுவர் என்றே அஞ்சுகிறேன். யாழுக்கு வெளியே, பொறியியல், உயிரியல், நிதியியல் துறைகளில் பெரிய படிப்பெல்லாம் படித்த என் நண்பர்கள் பலருக்கு, ஹிற்லர் எத்தனை பேரைக் கொன்றார் என்பது பற்றிய விபரங்கள் கூட இன்னும் தெரியாத அளவுக்கு, அறிவலட்சியர்களாக இருப்பதைக் காண்கிறேன். இதற்கு என்ன தான் தீர்வு? வீடுகளில் நம் குழந்தைகளை வாசிப்பாளர்களாக உருவாக்க வேண்டும். வளர்ந்தவர்கள் உலாவரும் யாழ் போன்ற இடங்களில் விடயம் தெரிந்தவர்கள் கூச்சப் படாமல் பேச வேண்டும். குடத்தில் வைத்த விளக்காக இருக்காமல், குன்றில் வைத்த விளக்காக இருக்க வேண்டும்! நக்கல், திட்டு, பேச்சு எல்லாம் வரும் தான்! ஒரு பக்கம் தூக்கிப் போட்டு விட்டு வளர்ந்தவர்கள் இருக்கும் இடங்களிலும் விடயங்களைப் பேச வேண்டும்!
  4. புதிர் இது தான்: முன்னைய தலைமுறையினரை விட, தற்போதைய இளையோர் - குறைந்த பட்சம் மேற்கு நாடுகளில்- மது அருந்துவதும், புகை பிடிப்பதும் குறைவாக இருக்கிறது. மது விற்பனை கூட குறைந்திருக்கிறது. சிவப்பு இறைச்சியை, வேகனிசம், ஆரோக்கியம் போன்ற காரணங்களால் இளையோர் தவிர்ப்பதும் அதிகரித்திருக்கிறது. இப்படி பல முன்னேற்றங்கள் இருந்தும், சில வகைப் புற்று நோய்கள் இளையோரில் அதிகரித்திருக்கின்றன. சில ஊகிக்கக் கூடிய காரணங்கள், தண்ணீர், சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் (micro and nano-plastics) மாசு என்பனவாக இருக்கலாம். ஏனெனில், பல இள வயது புற்று நோய்கள், பெருங்குடல் புற்று நோய்களாக இருக்கின்றன. இன்னும் சில காரணிகளாக, குடல் நுண்ணங்கிகளை (gut microbiome) மாற்றும் வெளிக்காரணிகள். உதாரணமாக, தூக்கமின்மை, அல்லது ஒழுங்கான தூக்கமின்மை, ஒளி உமிழும் (light) மூலங்களை மணிக்கணக்காகப் பார்த்து, தூங்கும் போது கூட குறைத்தூக்கம் கொள்வது. இவை கூட காரணங்களாக இருக்கலாம்.
  5. எனக்கும் ஒரு விளம்பர உதவி செய்யுங்கோ.."சிறு வயதில் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால்..." என்று ஆரம்பிக்கும் "சிட்டுக்குருவி" லேகிய பிசினஸ் செய்தால் யாழில் நல்லா ஓடும் அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்😎!
  6. எனக்கு விடுதலை பத்திரிகையைத் தேட வேண்டிய அவசியம் ஏன்😂? பெரியார் பற்றிய நான் வாசித்து ஒரு 30 வருடங்கள் இருக்கும். எல்லாமே யாழ் நூலகத்தின் 3 கிளைகளில் இருந்தன, பெரும்பாலானவை நல்லூர் கிளையில் இருந்தன. இதற்கேன் விடுதலை பத்திரிகை தேவை? நீங்கள் - கூகிள் தேடலில் வரும் துணுக்களில் தொங்கிக் கொண்டிருப்பதால் நீங்கள் தேடத் தான் வேணும். "எங்கேயும் விடுதலை பத்திரிகை இல்லை, எனவே துணுக்கைத் தான் நான் நம்புவேன்!" என்றால் அது உங்கள் இஷ்டம். இந்த அறிவலட்சியமே உங்கள் தொடர் இயல்பாக வைத்துக் கொண்டு "நான் SSLC பாஸ் தெரியுமா? என் அஞ்சாம் ஆண்டு ஸ்கொலர்ஷிப் வெட்டுப் புள்ளி தெரியுமா? என்று உங்களை மேலும் மேலும் அரிவரி லெவலுக்குக் கொண்டு போனாலும் பரவாயில்லை😎 ! வாசகர்கள் உங்கள் தரத்தையும், அறிவையும் மதிப்பிட்டுக் கொள்ள அது உதவலாம்!
  7. கன நாட்கள் எழுதாமல் மண்டைக்குள்ள நிறையத் தேங்கி விட்டது😂! இந்த முறை வெவ்வேறு ஏரியாக்களில், ஒவ்வொன்றாக பல கட்டுரைகள் தர வேண்டும்!
  8. கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்! "....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020, it was a Democratic Party stronghold. This year, it flipped for President-elect Trump. For many in Dearborn, the war in Gaza played a deciding factor in their votes" https://www.npr.org/2024/11/08/nx-s1-5183216/how-trump-was-able-to-win-support-from-many-muslim-voters-in-michigan அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் 15 வாக்குகள் முக்கியமானவை. அமெரிக்க மாநிலங்களில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு நகரம், கவுன்ரி ஆகியவை மிச்சிகனில் இருக்கின்றன. கடந்த ஜனாபதித் தேர்தலில் பைடனோடு கோவித்துக் கொண்டு "மிகுந்த தூர நோக்கோடு" 😎 ட்ரம்பை பகிரங்கமாக இந்த மாநிலத்தின் சில முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்தார்கள். இம்மாநில முஸ்லிம் அமெரிக்கர்கள் சிலர், ட்ரம்புக்குப் போடாமல், ஆனால் கமலாவுக்கும் போடாமல் மூன்றாம் தரப்பிற்கு வாக்கை அளித்து, இறுதியில் ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்தார்கள். விளைவு இது தான்! ஒரு வருடம் அல்ல, ஒரு மாதத்திலேயே வீட்டு வாசலில் டெலிவரி! என் மனக் குரல் சொல்வது: "சாவுங்கடா".
  9. KFC இற்கு வாக்குப் போட்ட கோழிகள் கொஞ்சம் தவிக்கட்டும்😂, இதனாலாவது புத்தி வந்தால் பயன் இருக்கும். "பொம்பிளை எங்களை ஆள்வதா, நெவர்!" என்று ட்ரம்புக்கு வாக்களித்த கறுப்பின ஆண் சிங்கங்கள் இனி DEI இன் பாதுகாப்பைப் பெற முடியாது. இருக்கும் நிறுவனங்களில் கொஞ்சம் உருப்படியாக இருக்கும் நிறுவனங்களே சம வேலைவாய்ப்பு விதிகளைத் தளர்த்திக் கொண்டிருக்கின்றன (உதாரணம் Target Inc.). இவர்கள் இனி வேலையில்லாமல் அரச உதவியைப் பெற்றுக் கொண்டு, அதையும் பவுடர் அடிக்கப் பாவிக்கிறார்களா என்று மாதாமாதம் drug test செய்த படி குட்டிச் சுவரில் குந்தியிருக்க வேண்டியது தான்! மறுபக்கம், "ட்ரம்ப் வந்தால் மெக்சிக்கோக் காரனை நாடுகடத்துவார்" என்று வாக்களித்த இந்திய, இலங்கை அமெரிக்கர்களுக்கும் இருக்கிறது ஆப்பு.
  10. அபிலாஷுக்கு சென்னையில் அடை மழை பெய்தாலும் அது "உலக முதாளித்துவ வாத லிபரல் முதலைகளின்" சதி என்று தான் எழுதுவார்😂! சிலரைப் பொறுத்த வரை ஒரு கொள்கை, கோட்பாடு மீதான பேரார்வம்- passion, காய்தல் உவத்தலின்றி தரவுகளைப் பார்க்காமல், தமது நம்பிக்கையை வலுப்படுத்தும் தரவுகளை மட்டும் பூதக் கண்ணாடியூடாகப் பார்த்து உலகைப் புரிந்து கொள்ள வைக்கும். நான் அவதானித்த வரை அபிலாஷின் பல உலகப் பார்வைகள் இந்த cherry-picking மூலம் தான் உருவாகியிருக்கிறது. பெண் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது பொருளாதாரமேயொழிய குடும்ப அமைப்பல்ல என்கிறார். அப்படியானால் பெண்ணுடலின் உயிரியலான மகப்பேறு, தாய்மைக்குரிய எதிர்பார்க்கப் பட்ட கடமைகள், அதனால் வேலை செய்ய இயலாமல் பொருளாதார உலகில் இருந்து விலகும் பெண்களின் வீதம் அமெரிக்காவில் கூட ஏன் அதிகமாக இருக்கிறது என்று அபிலாஷுக்கு தேட இயலவில்லையா?
  11. பொட்டம்மானைத் தூக்கிப் போட்டு விட்டே முரட்டு முட்டுக் கொடுத்திருக்கிறார்கள், கிட்டுவைக் கடந்து போக முயற்சிக்காமல் இருப்பார்கள் என நம்புகிறீர்களா? Optimist ஐயா நீங்கள்😂!
  12. முகநூலில் நான் இருந்தால் இதைப் போதித்திருப்பேன், ஆனால் நீங்கள் தானே இந்தக் குப்பைகளையும், உங்கள் சார்புக் கருத்துடையோரின் குப்பைகளோடு சேர்ந்து காவி வந்து இங்கே நிற்கிறீர்கள்? எனவே உங்களிடம் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
  13. சீமானின் pressure washer திறமாக வேலை செய்கிறது! 😂 உங்களுக்குக் கூட சீரியசான கருத்தாடல் கை விட்டுப் போய் விட்டது!
  14. எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் இருந்தார். அந்த வீட்டில் ஒவ்வொரு கல்யாண வீடு, செத்த வீடு, சாமத்திய வீடு நடக்கும் போதெல்லாம், தன் முன்பகையைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்வார். அவரின் முதுகுக்குப் பின்னால் அவரை "கேன்சர்" என்று நகைச்சுவையாக அழைப்போம். அதே போல இருக்கிறார்கள் யாழ் களத்திலும், முகநூலிலும் எழுதும் உங்களைப் போன்ற தீவிர தேசியர்கள். மரண வீட்டில் கூட தமக்குப் பிடிக்காதவன் மீதான பகை தான் முன்னுக்கு நிற்கிறதேயொழிய ஒரு மரியாதை நிமிர்த்தம் பேண வேண்டிய மௌனம் இல்லை! இதே "கார தேசிக்காய்" குழு, அமரர் மாவை உயிருடன் இருக்கும் போது அவர் பற்றிய படங்களை இணைத்து அவரை ஊழல் அரசியல்வாதியாகக் காட்டிக் கொண்டிருந்ததை அவர்களே மறந்து விட்டார்கள்😂!
  15. ட்ரம்ப் போன்ற "4 வருடங்களுக்கு அப்பால் என்ன நடக்கும்?" என்று யோசிக்க முயலாத தலைவர்களால், உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டியிருக்கும் நல்ல கட்டுரை. இதே போன்ற மாற்றங்கள் பல முன்னரும் நடந்திருக்கின்றன. 1. 2000 களில் இந்தியாவுக்கு றொக்கற் இயந்திரங்களை விற்க அமெரிக்கா தடை போட்டு அவர்களது விண்வெளி ஆய்வுகளை முடக்கிய போது, இந்தியாவே சுயமாக, மலிவான றொக்கற் இயந்திரங்களை வடிவமைத்து வெற்றி கண்டது. 2. 2014 இல் கிரைமியாவை ரஷ்யா ஆக்கிரமித்த போது அமெரிக்கா செயலற்றிருந்தது. விழித்துக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், ஈட்டி முனை என்ற திட்டம் மூலம் சில நேட்டோ அணிகளை உருவாக்கி சகல ஐரோப்பிய நேட்டோ எல்லைகளுக்கு அருகில் நிறுத்தினார்கள். 3. 1970 களில் இஸ்ரேலுக்கு ஆதரவு தந்த அமெரிக்காவிற்கு எரிபொருள் விற்க அரபு நாடுகள் மறுத்து பாரிய எரிபொருள் தட்டுப் பாட்டை ஏற்படுத்தினார்கள். இதன் பின்னர் தான் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை உருவாக்கவும், உள் நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆரம்பித்தார்கள். பசுமைத் தொழில் நுட்பத்தின் தோற்றுவாய் இது எனலாம். 4. மிக அண்மையாக, ரஷ்யாவின் எரிவாயுவை கணிசமாகக் குறைத்து விட்டு, நோர்வேயில் இருந்து வடகடல் வழியாக எரிவாயுவை இறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அத்தோடு, அமெரிக்க எரிவாயுவை திரவமாக்கி, ஐரோப்பாவிற்கு LNG ஏற்றுமதி செய்வதை அதிகரித்திருக்கிறார்கள். இது ரஷ்யாவின் ஐரோப்பா மீதான மிரட்டலால் வந்த விளைவு. எனவே, சிவதாசன் சொல்வது போல, கனடா தன் "வேட்டைப் பல்லைத்" தீட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் சனத்தொகையில் பத்திலொரு பங்கை வைத்துக் கொண்டே இவ்வளவு வளர்ச்சியைக் கண்ட கனடா உண்மையில் ரௌத்திரம் கொண்டால், மெக்சிகோவோடு NAFTA இற்கு மாற்றான ஒரு ஏற்பாட்டைச் செய்து அமெரிக்காவிற்கு சில நட்டங்களை ஏற்படுத்தலாம்!
  16. நீங்கள் தானே "பெரியார் இது சொன்னார், அது சொன்னார்" என்று துணுக்குகளை வைத்து உரையாடினீர்கள்? துணுக்குகளை முழுவசனத்தில் context ஓடு வாசியுங்கள் என்றேன். நூலகத்தில் கூட பெரியாரின் நூல்கள் இல்லை என்கிறீர்கள்😂. இணையத்தில் துணுக்குத் தான் இருக்கிறது, எனவே என்னைக் கேட்கிறீர்கள். நீங்கள் ஒரு விடயத்தைப் பிரேரித்தால், அதை நீங்கள் தான் ஆதாரமாகத் தேட வேண்டுமென்பது கூடத் தெரியாமல் மொரட்டுவையில் என்ன படித்தீர்கள்? இந்த விஞ்ஞான முறைமையின் அடிப்படை கூட இல்லாமல் தான் சில இடங்களில் உங்கள் உரையாடல் என்னுடைய மிருக வைத்தியப் படிப்பை இளக்காரமாகப் பதிவிடுவதில் வந்து நின்றிருக்கிறது. மொரட்டுவை வெட்டுப் புள்ளி போலவே மிருக வைத்தியத்திற்கும் வெட்டுப் புள்ளி இருக்கிறது என்று தெரியாத அறிவலட்சியம் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் பெரியார் உட்பட எதைப் பற்றியும் ஆழ வாசிக்காத ஒரு பொறியியலாளர். நான் கிடைப்பவற்றையெல்லாம் வாசித்து விட்டுக் கடந்து போகிற மிருகவைத்தியர். இதில நான் உங்களுக்கு "கீழே"😂 என்கிறீர்களா? பெரியார் லீலைகளைத் தொடருங்கள், ஆனால் ஆதாரங்களைத் தாருங்கள். இணையக் குப்பையில், யூ ரியூப் பின்னூட்டங்களில இருந்து வெட்டி ஒட்டாதீர்கள்.
  17. ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (African Swine fever) கடந்த ஒக்ரோபர் முதல் இலங்கையினுள் நுழைந்து வேகமாகச் சகல மாகாணங்களுக்கும் பரவி வருகிறது. யால காட்டில் காட்டுப் பன்றிகளுக்குக் கூட பரவி விட்டது எனக் கண்டறிந்திருக்கிறார்கள். பன்றிகளில் இந்த நோயின் இறப்பு வீதம் ஏறத்தாழ 100% - ஒரு பன்றியும் உயிர் பிழைக்காது. ஆனால் மனிதர்களுக்கும், ஏனைய கால் நடைகளுக்கும் ஆபத்தில்லை. கட்டுப் படுத்துவது மிகக் கடினம். தடுப்பூசிகள் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. நோய் தொற்றிய, தொற்றாத சகல பண்ணைகளையும் போக்குவரத்தைக் கட்டுப் படுத்தித் (quarantine) தான் இதைப் பரவாமல் தடுக்கலாம். பண்ணைக்குள் ஒரு சைக்கிள் வந்தால் கூட, அதன் சக்கரத்தை தொற்று நீக்கியால் சுத்திகரித்துத் தான் அனுமதிக்க வேண்டும். இப்படியான இறுக்கமான quarantine கட்டுப் பாடுகளை இலங்கையின் பெரும்பாலான பண்ணைகளில் நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த பண்ணையாளர் போன்றோர் என்ன செய்யலாம்? பண்ணைக்கு காப்புறுதி இருந்தால் (சாதாரணமாக இது எடுத்திருக்க வேண்டும்) அதன் மூலம் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், மீண்டும் புதிதாக அதே நிலத்தில் பன்றிப் பண்ணை தொடங்குவதை குறைந்தது 1 வருடமாவது தள்ளிப் போட வேண்டும். எங்கள் நாட்டில் இருக்கும் கட்டுப் பாட்டு முறைகளின் படி, இந்த வைரஸ் நோய் இலங்கையில் மறையப் போவதில்லை. எனவே பன்றிப் பண்ணையை விட்டு வேறு கால் நடைகளைப் பற்றிப் யோசிப்பது நல்லது.
  18. சபேசனின் வரலாற்றுப் பார்வை அருமையாக இருக்கிறது. சாதி ஒழிப்புப் போராட்டத்தின் தோற்றுவாயாக ஈழத்தில் இடது சாரிகள் தான் இருந்தார்கள் என நினைத்திருந்தேன். இன்று தான் திராவிடர் கழகம் இதைத் தொடங்கியிருக்கிறது என்ற வரலாறு தெரிந்தது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வரலாறு தெரியாமல் துணுக்குச் செய்திகளையும், யூ ரியூப் காணொளிகளையும் மட்டும் பார்த்ததால் தான் சில ஈழவர்கள் சீமானின் வலையில் விழுந்திருக்கிறார்கள் போல தெரிகிறது!
  19. ஓணாண்டியார், விடயம் மிகவும் எளிமையானது, இதைப் பெரிதாக்க வேண்டாம்! இதைப் பற்றி யாரும் இனிப் பேசப் போவதில்லை! ஒணாண்டியாரின் கருத்துக்கு எப்போதும் நம்பகத் தன்மை இருக்கும். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும்.
  20. பலரும், பல வழிகளில் இதைச் சொல்லியிருந்தாலும், மீண்டும் மீண்டும் வெவ்வேறு வேசங்களில் வந்து ஒரே கீதம் இசைப்பதால், இதைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது!
  21. சுவிஸ் காரர் கொஞ்சம் நூதனமான துவேசக்காரர். கிழக்கு ஐரோப்பாவின் நாடுகள் பல ஹிற்லருக்குப் பணிந்து தாங்களே யூதர்களை சுற்றி வளைத்துப் பிடித்து வதை முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்கள். சுவிஸ், யூதர்கள் உட்பட்ட அகதிகள் தங்கள் நாட்டுக்குள் தப்பி வந்து விடாமல் பார்த்துக் கொண்டதன் மூலம் நாசிகளின் இனவழிப்பிற்கு உதவினார்கள். பின்னர், நாசி யுத்தக் குற்றவாளிகள் தப்பி வந்து ஒளிந்திருக்கவும், அமெரிக்கா உட்பட்ட நாடுகளுக்கு சட்ட ரீதியாகக் குடியேறவும் உதவினார்கள். இப்படி சுவிஸ் அல்ப்ஸ் கிராமமொன்றில் ஒளிந்திருந்து அமெரிக்காவால் காப்பாற்றிக் கொண்டு வரப்பட்ட நாசி விஞ்ஞானி von Braun தான் அமெரிக்கா முதல் றொக்கற் தயாரிக்க உதவினார். அவருக்கு உயர் விருதும் கொடுதார்கள் அமெரிக்காவில்.
  22. ஆதாரத்தைப் பார்க்காமல் விளங்கிக் கொள்ள நான் "மூளையில் chip பதித்த படி திரியும்" சீமானின் சூப்பர்மேன் தம்பியல்லவே😎! நீங்களே தேடிப் பாருங்கள்! உங்கள் பாசையில் சொன்னால் நீங்களே ஒரு சாக்கடை அரசியல் வாதிக்கு செம்பு தூக்கியபடி உங்களுக்கு சேவை செய்ய இன்னொருவரைத் தேடுவது ரூ மச்😂! செவ்வியனுக்கு எழுதிய பரிந்துரைப்பைப் பார்த்தேன். எங்கேயோ யாரோ பெரியார் எதிர்ப்பாளர் எழுதிய பின்னூட்டத்தை அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள் எனப் புரிந்தது, நீங்களாவது ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கிறதாவது? உங்களைப் போல அதிகம் படிப்பில்லாத ஒருவர் நோண்டுமளவுக்காவது மிருக வைத்தியம் நான் படித்திருக்கிறேன் அல்லவா? எனவே மூளையைப் பற்றிப் பேசலாம். சீமான் ஆதரவாளர்கள் மூளையைக் கழட்டி வைத்து விட்டு பின் தொடர்வதால் மூளை பற்றிப் பேசுவது trigger ஆக இருக்கிறது போல😂!
  23. பெரியாரின் வெளியீடுகள் digitization செய்யாமல் எப்படி பிபிசி சீமானின் அவதூறுக்கு எதிராக ஒரிஜினல் பத்திரிகையை வெளியிட்டது? அந்தத் திரியில், கிருபன் பகிர்ந்த பெரியாரின் வெளியீடுகளுக்கான இணைப்புகளையும் நீங்கள் பார்க்கவில்லையென ஊகிக்கிறேன். ஒரு சாக்கடை அரசியல் வாதி 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி, தவறு என நிரூபிக்கப் பட்ட ஒரு அவதூறை மீண்டும் பரப்புவார். உங்கள் போன்ற ஆதரவாளர்கள் அதை நம்புவீர்கள். ஆதாரம் கேட்டால், "கேட்பவன் தான் பெரியார் எழுத்துக்களை digitization செய்து உங்களுக்கு வாயில் உரித்த வாழைப்பழம் போல ஊட்டி விட" வேண்டுமென்பீர்கள்😂. அப்ப சீமான் ஆதரவாளர்களெல்லாம் ஆதாரங்களை எப்படித் தேடுவது என்று தெரியாத மொக்கனுகள் என்கிறீர்களா? சென்னையில் எங்கே நூலகம் இருக்கிறதென்று கூடத் தெரியாத சிறுவர்களா? உங்கள் போன்றோரை, digitization மட்டுமல்ல, பெரியார் எழுத்துக்களை quantamization (?) செய்தால் கூட மாற்ற முடியாது! எதைத் தந்தாலும் பார்க்கிற மூளையை மாற்றா விட்டால் எதுவும் மாறாது!
  24. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு teachable moment இனைக் நான் காண்கிறேன். 2012 இல் தாயகம் சென்று வன்னியில் யுத்த காலத்தில் வாழ்ந்த மக்களைச் சந்தித்த பிறகு, யாழில் தமிழர் தரப்பின் மீதான என் பார்வையை நான் மாற்றிக் கொண்டேன், அதையே இங்கே வெளிப்படையாக எழுத ஆரம்பித்தேன். ஒரே அவதார், ஆனால் நிலைப்பாட்டில் சிறிது மாற்றம். என்னுடைய இந்த வெளிப்படையான மாற்றத்திற்கே சிலரிடமிருந்து கேள்விகளும், திட்டல்களும் இன்றும் இடைக்கிடை கிடைக்கின்றன. இப்படித் திட்டுவோர் எல்லோருமே அனேகமாக சீமான்/நாதக ஆதரவாளர்கள்! அவதாரை மாற்றிய ஒரு சக சீமான் ஆதரவாளரை எப்படி வரவேற்கப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்😂!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.