Everything posted by Justin
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
இது போன்ற தளங்களில் இருந்து வரும் செய்திகளை வாசிக்க விசேடமான ஒரு "மன அமைப்பு" வேண்டும்😎! அது இல்லாமையால்ல் பெரும்பாலானோர் வாசிப்பதில்லை. உங்களைப் போன்றோர் முக்கி மிக்கி மூலைகளில் கிண்டித் தேடினால் மட்டும் இவை வெளியே வரும். அதனால் தான் முக்கி முக்கித் தேடினீர்களோ என்றேன்! போர் நின்று விடும்! ஏனெனில் உக்ரைன் வீழ்ந்து விடும், டென்மார்க் அவ்வளவு தொலைவில்லை, எனவே அங்கேயும் புரின் ஆட்சி மலர உங்கள் போன்ற "புத்திசாலிகள்" உழைக்க வேண்டும் உறவே😂!
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இது வேறு வகையான கேள்வி, இதற்கும் மேல் உங்கள் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தமென விளங்கவில்லை. ஆனால், அன்பளிப்புக் கொடுத்தாலும் சரி, கொடுக்கா விட்டாலும் சரி, தேர்தல் முடிவுகளில் பாரிய மாற்றம் இருக்காது. ஏன்? ஒரு கட்சியை, வேட்பாளரை மக்கள் விரும்புவதற்கான காரணம் முதலே தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அது சிக்கலான காரணமாக இருந்தாலும் கூட. தொடர்ந்து தோற்று வரும் நா.த.க வை எடுத்துக் கொள்ளுங்கள்: 100 ஆண்டுகள் முன்பு ஒன்றாக இருந்த நிலப்பரப்பில், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் என்று கலந்து கட்டி உருவான ஒரு மக்கள் கூட்டத்திடம் போய் ஏனைய 3 மொழியினரையும் திட்டி வாக்குக் கேட்டால்,அந்த மக்களில் பெரும்பாலானோர் வாக்குப் போடுவார்களா? இயற்கையாகவே , அப்படி வெறுப்பரசியல் செய்யாத கட்சியை நோக்கி (அது ஊழல் கட்சியாக இருந்தாலும்) மக்கள் நகர்வர். இந்தப் பால பாடம் தெரியாமையால் தோற்கும் ஒரு கட்சி, வாக்கு இயந்திரத்தையும், அன்பளிப்புகளையும் திட்டி நேரத்தை வீணாக்குகிறதென நான் நினைக்கிறேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இப்படியெல்லாம் சத்தியம் தவறாமல் போடும் கிராம வாக்காளர்களினால் பெரிய கட்சிகள் வெல்கின்றன என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது. பணம், சலுகைகள் தேர்தல் காலத்தில் ஆறாக ஒடுவது உண்மை. அதனால் தான் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன என்பது நம்பக் கடினமான விடயம். தொடர்ந்து தோற்கும் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இது போன்ற விடயங்களை நம்புவது மிக இலகு. வாக்கு இயந்திரம் நம்பிக்கையற்றது என்று நம்புவதும் மிக இலகு. சுய திருப்தி அடையும் self-fulfilling prophecy என்பார்கள்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பணத்தை தருபவனிடம் "உனக்குத் தான் வாக்கு" என்று சொல்லி வாங்கி விட்டு, நேர்மையான வேட்பாளருக்கு மௌனமாக வாக்களிக்கத் தெரியாத மங்குனிகளாக தமிழக, இந்திய வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்😂! இப்படி நம்புவோர் இருக்கும் வரை, இந்த அம்புலிமாமாக் கதைகள் சொல்வோரும் இருப்பர்! அமெரிக்காவில் மொத்தமாகப் பதிவு செய்த வாக்காளர்கள் 160 மில்லியன் பேர் (2022 கணக்கின் படி). இவர்களிலும் அதிக பட்சமாக ஒரு 70% பேர் தான் வாக்களிப்பர். இந்தியாவின் பதிவு செய்யப் பட்ட வாக்காளர்களின் தொகை 969 மில்லியன் பேர், கட்சிகள் மட்டும் 2000 இற்கு மேல். 1 மில்லியன் வாக்குச் சாவடிகள். அமெரிக்காவும், இந்தியாவும் தேர்தலில் ஒப்பிட முடியாத தூரங்களில் இருக்கின்றன.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
முக்கி முக்கித் தேடியதில் மேற்கில் இருந்து ஈரானுக்கு போன ஒரு கப்பலை ஹௌதிகள் அடித்ததைக் கண்டு பிடித்திருக்கிறீர்கள்😂 (ஈரான் மைண்ட் வொய்ஸ்: இந்த ஹௌதிகள் நல்லவங்களா, கெட்டவங்களா?) இனிக் கீழே உள்ள இணைப்பை அழுத்தி, இது வரை தாக்கப் பட்ட சரக்குக் காவிக் கப்பல்களின் படங்கள் பாருங்கள்! (றொய்ட்டர் காரன் பொய் சொல்லுவான், கவனம்😎!) https://www.reuters.com/graphics/ISRAEL-PALESTINIANS/SHIPPING-ARMS/lgvdnngeyvo/
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நேரம் பற்றி நான் தான் கவலைப் பட வேண்டுமென நினைக்கிறேன். வாசகர்களுக்கு சரியான தகவலைக் கொடுக்க வேண்டும், பிழையான தகவலை (நாயென்று திட்டு விழுந்தாலும்) மறுதலிக்க வேண்டும். அதே நேரம், அதுவே தொழிலாக இருக்கவும் முடியாது. ஒரு பலன்ஸ் தான்! சும்மா காற்றிலிருந்து தகவல்களைத் தூக்கிப் போட்டு விட்டுப் போகிற நீங்கள் "நேரம் பாழ்" என்று குறைப்பட அவசியமில்லை - ஏனெனில் நீங்கள் உணர்வு ரீதியாக கோபப் பட்டு எழுத எந்த தேடலும் தேவையில்லை, பிறகெப்படி நேரம் செலவாகும்?
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
எனக்குப் புரிந்தது வேறு: அகப்பையில் வருவதற்கு சட்டியில் ஒன்றுமில்லை😎!
-
கனடாவில் கார் களவு.
நிழலி சொல்லியிருப்பது சரி: நல்ல இன தூய நாய் வளர்த்தால், அதைக் காக்க எஜமானர் மேலும் அதிக கவனமெடுக்க வேண்டும்😂. அடுத்தது: துப்பாக்கி வைத்திருத்தல். கனடாவில், துப்பாக்கி லைசென்சோடு வைத்திருக்கலாம் என்றாலும், சுட்டு விட்டு பிரச்சினையில்லாமல் இருக்க முடியாது. அமெரிக்காவில், மாநிலத்திற்கு மாநிலம் விதிகள் வேறுபடும். புளோரிடா போன்ற மாநிலங்களில், stand your ground சட்டம் இருக்கிறது. துப்பாக்கி வைத்திருப்பவர், தன்னை அச்சுறுத்தும் நபரிடமிருந்து பின்வாங்கி அகலவோ, ரென்சனைத் தணிக்க (de-escalate) முயலவோ முயற்சிக்க வேண்டியதில்லை. அச்சுறுத்தும் எதிராளியைச் சுட்டு விட்டு பிரச்சினையில்லாமல் இருக்கலாம். நியூ யோர்க் போன்ற நீல மாநிலங்களில், சுட முதல் பல முறை எச்சரிக்க வேண்டுமெனச் சட்டம் இருக்கிறது. உதாரணமாக, வீட்டை திருடன் உடைத்தாலும், திருடன் கதவுக்கு வெளியே என்றால் சுடுவது பிரச்சினை. கதவைத் தாண்டி உள்ளே வந்தால் சுடலாம். எனவே, வாழுமிடத்தைப் பொறுத்து, இது ஒரு சவாலான விடயம் தான்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
"ஹௌதி எல்லா நாட்டுக் கப்பல்களையும் தாக்கி, உலக பொதுமக்களின் பணப்பையில் கை வைக்கிறார்கள்" என்பதை நான் சுட்டிக் காட்ட எந்த நாட்டினதும் விசுவாசியாக இருக்க வேண்டியதில்லை - சாதாரண செய்திகளை வாசித்தாலே இந்த முடிவுக்குத் தான் வர முடியும்! இங்கே சிக்கலான மேற்கு எதிர்ப்பு மன நிலையால் பாதிக்கப் பட்டு, சாதாரண செய்திகளில் இருந்து கூட யார் பலியாடு, யார் வன்முறையாளர் என்று தீர்மானிக்க முடியாமல் இருப்பது ஒருவர் தான் - அதை வாசகர்கள் புரிந்து கொள்வர். இது வரை எத்தனை தடவைகள் இப்படி ஆதாரங்கள் இல்லாமல், மேற்கு/அமெரிக்க எதிர்ப்பு வாதம் என்ற உணர்வை மட்டுமே வைத்து சும்மா அலட்டி, கடைசியில் மௌனமாகப் போயிருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் - யாருக்கு என்ன தெரியும், தெரியாது என்பது புலப் படலாம்😎!
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
ஓம், உக்ரைன் படைகள் ரஷ்யாவிற்குள் படையெடுத்து நுழைந்தது எனக்கு மறந்து விட்டது😎 - எப்ப நடந்தது? பெப்ரவரி 2022 இல் அல்லவா? ஈரானில் அமெரிக்கா உருவாக்கியது என்ன பிரச்சினையாம்? ஒருக்கா நினைவு படுத்துங்கோ. பி.கு: அது ஏன் "அடிச்சு விட்டது, கதையளப்பது" என்றே வார்த்தைகளைப் பாவிக்கிறீர்கள்? நீங்கள் இவற்றை அடிக்கடி செய்வதாலா😂?
-
கனடாவில் கார் களவு.
அமெரிக்காவிலும் பதின்ம வயதுக் காரர்களை வைத்து குற்றக் கும்பல்கள் இப்படி இயங்கி வருகின்றன. துறைமுகங்கள் அதிகம் இருக்கும் கிழக்கு, தென் கிழக்கு, மேற்குக் கரைகளை ஒட்டிய நகரங்கள் தான் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, கிழக்குக் கரையின், நியூ ஜேர்சியில் திருடப் படும் வாகனங்கள் எலிசபெத் துறைமுகமூடாக (Sea Port) ஆபிரிக்க நாடுகளுக்குக் கடத்தப் படுவதாக சொல்கிறார்கள். சுங்கப் பரிசோதனை, பாதுகாப்பெல்லாம் இறுக்கமான ஒரு அமெரிக்க துறைமுகத்தினுள் இருப்போரின் ஒத்துழைப்பின்றி இதைச் செய்ய முடியுமென நான் நம்பவில்லை. கனடாவை விட அமெரிக்காவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்க இங்கே துப்பாக்கி வைத்திருக்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஒரு காரணம். அண்மையில், வாசிங்ரன் டி.சி யின் புறநகரப் பகுதியில், அதிகாலை சத்தம் கேட்டு விழித்த ஒரு வீட்டுக் காரர், தனது கைத்துப்பாக்கியோடு வெளியே போய்ப் பார்த்த போது, அவரது காருக்கு அருகில் ஒருவரைக் கண்டிருக்கிறார். உடனே வெடி தான், காருக்கு அருகில் நின்றவர் மரணமானார். மரணித்தவர் 15 வயது சிறுவன். ஆதாரங்களைப் பரிசோதித்த காவல் துறை, சுட்ட வீட்டுக் காரரை கைது செய்யக் கூட இல்லை. அதிகாலை 3 மணிக்கு, தன் 15 வயது மகன் வீட்டில் இருக்கிறானா என்று தேடிப் பார்க்க துப்பில்லாத பெற்றோர், சுட்டவரைக் கைது செய்யும் படி ஆர்ப்பாட்டம் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இப்படியான சம்பவங்கள் ஓரளவுக்கு அமெரிக்காவில் கனடா போன்ற நிலை வராமல் வைத்திருக்கின்றன.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
😂உண்மையாகச் சொல்கிறீர்களா அல்லது பகிடிக்கா என்று விளங்கவில்லை!
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
மேலே சொல்லப் பட்டிருக்கும் விடயத்தில் அமெரிக்கா அடிக்கவில்லை அல்லவா? இது விளங்குகிறதா உங்களுக்கு😎? அல்லது இன்னும் மூன்று கருத்துக்கள் தாண்டினால் பிறகு நான் சொன்னதையே எனக்கு திருப்பி ஆதாரமாகக் காட்டும் "சிறு பிள்ளை வேளாண்மை" விளையாட்டைக் காட்ட ரெடியாக வந்திருக்கிறீங்களா😂?
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
நான் குறிப்பிட்டது கிழக்கு ஜேர்மனியில் இருந்த ஜேர்மன் மக்களை மேற்கு நோக்கிப் போக அனுமதிக்கவில்லை என்று, ஜேர்மனியர் அல்லாத வெளிநாட்டு அகதிகளை அல்ல. வெளிநாட்டு அகதிகளை மொஸ்கோ வரை (இன்றும்) ரஷ்யாவின் விமான சேவையாக விளங்கும் Aeroflot தான் ஆசியாவில் இருந்து ஏற்றி வரும். அங்கிருந்து தான் கிழக்கு ஐரோப்பா செல்வார்கள், கிழக்கில் இருந்து இவர்களை தாராளமாக செல்ல அனுமதிப்பார்கள். தம் பிரஜைகளுக்கே தொழில் இல்லாத போது, அகதிகளை எப்படி கிழக்கு ஜேர்மனி வைத்துப் பார்க்கும்😂?
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
முன்னேற்றம் தெரிகிறது - "வைரவரின் வாகனம்" என்று மறைமுகமாக எழுதப் பழகியிருக்கிறீர்கள்😂. ஹௌதி தாக்குவது மிளகாய்ப்பொடி கொண்டு வரும் கப்பலாக இருந்தால், மிளகாய் பொடி விலையேறும் தான்! ஆனால், அமெரிக்கா அதைத் தடுக்க ஹௌதிகளைப் போட்டுத் தாக்கினால், அது பிரச்சினையாகி விடும்! இங்கேயும் வைரவரின் வாகனக் குணம் தான் பிரச்சினை😎!
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
யாருடைய அனுபவத்தையும் மறுதலிக்காமல், ஒரு ஒப்பீட்டுக் குறிப்பை மட்டும் தருகிறேன். 1982- 84: இந்தக் காலப் பகுதியில் ஐரோப்பா கிழக்கு, மேற்கு என ஜேர்மனியின் ஊடாகப் பிரிந்திருந்தது. மேற்கில் அமெரிக்க செல்வாக்கு, கிழக்கு ஜேர்மனியில் தெளிவாக சோவியத் செல்வாக்கு (சோவியத்தின் சுற்றயல் நாடு-satellite state என்று கிழக்கு ஜேர்மனி அழைக்கப் பட்டது). ஜேர்மனியின் கிழக்கில் இருந்து மேற்குப் பாதிக்கு மக்கள் உயிரைப் பணயம் வைத்துத் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் தப்பியோடாமல் இருக்க பேர்லின் சுவரை படிப் படியாகப் பலப்படுத்திக் கொண்டிருந்தது சோவியத் அணி. (ஒரு கட்டத்தில், dog run என்ற வடிவில் கொடிய கடி நாய்கள் கூட காவலுக்குப் பயன்படுத்தப் பட்டன). இதே காலப் பகுதியில், உள்ளூர் வாசிகளான ஜேர்மனியர்கள், கிழக்கில் Stasi உளவுப் பிரிவினால் கைதாகி, சித்திரவதைக்காளானார்கள், காணாமல் போனார்கள். இன்னும், கிழக்கே போனால், ஸ்ராலின் பின் வந்த வால்களான பிறஷ்னேவும், அந்த்ரபோவும் சோவியத் ஒன்றியத்தின் சொந்த மக்களையே குலாக்குகள் (Gulags) என்ற சைபீரிய கடூழிய சிறைகளில் அடைத்து வைத்தார்கள். இவர்களுக்கு, அடுத்த நகரம் என்ன, அடுத்த கொட்டிலுக்கே சுதந்திரமாகச் செல்ல அனுமதி இருக்கவில்லை - பலர் அங்கேயே சமாதியுமானார்கள். எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் துன்பங்கள் என்பவை ஒப்பீட்டு ரீதியானவை தான். எதிர்பார்ப்புகளோடு குடியேறியாக வந்தோம், எதிர்பார்த்ததை விட குறைவாக அடைந்தோம். இன்னொரு பக்கம், நாம் அடைந்ததை விட அதிக துன்பம் அடைந்த மக்களை ஆண்ட, ஆளும் தலைவர்களை மிகவும் மரியாதையோடு விரும்புகிறோம். இந்த முரண், புரிந்து கொள்ள முடியாத ஒரு முரண்!
-
ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.
"தேர்தல்- election" என்றால் என்னவென்று கூகிளில் தேடிப்பார்க்க கொஞ்சம் காலமெடுத்துக் கொண்டாராம்😎!
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
ஹௌதிகள் ஹொர்முஸ் நீரிணை நோக்கி செங்கடல் வழியாகப் போகும் எல்லாக் கப்பல்களையும் அடிக்கிறார்கள். இது வரை அறுபதுக்கு மேற்பட்ட தாக்குதல்கள். தாக்கப்படும் இந்தக் கப்பல்களில் அமெரிக்கர்களும் இல்லை, அமெரிக்க படைகளும் இல்லை- ஆனால் ஏற்றுமதிப் பொருட்கள் இருக்கின்றன. பல சரக்குக் கப்பல்கள் இப்போது செங்கடலை இதனால் தவிர்த்து, ஆபிரிக்காவைச் சுற்றி ஐரோப்பா வருகின்றன. இதனால் வரும் மேலதிக செலவு கப்பல்களில் வரும் சரக்குகளின் விலையில் சேர்க்கப் படுகிறது. எனவே, பொருட்களின் விலைகள் ஏறும். வசதியுள்ளவர்களுக்கு தோற்றாது, வசதியில்லாதவன் வயிற்றையும் வாயையும் கட்டிக் கொள்ள வேண்டும். நீங்கள் வசதியாக இருக்கிறீர்கள் போல, அல்லது உலக வரைபடம் இன்னும் சரியாகத் தெரியாமலே சமாளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் கொள்ளலாம்😂! குறைந்த பட்சம் யாருடைய வயிற்றில் ஹௌதிகள் அடிக்கிறார்கள் என்ற புரிதல் இல்லாமலே, ஒரு பக்கத்தால் "கல்யாணி" எழுத, மற்றப் பக்கத்தால "குமாரசாமி" சிரிக்கிறார்! இது தான் இன்றைய மகாஜனங்களின் நிலை😎!
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
எல்லோரும் எச்சரிக்கை மட்டும் தான் விடுவர், ஏனெனில் புத்தியுள்ள தலைவர்களுக்கு status quo மாறாமல் இருப்பதே முக்கியம். இடையிடையே முன் யோசனை குறைந்த தலைவர்களும் அமைப்புகளும் - புரின், ஹமாஸ், நெரன்யாகு- போன்றவை மட்டும் சும்மா சண்டையைத் துவங்கி விட்டு முடிக்கவோ, தப்பவோ முடியாமல் நெரிபடுவினம்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
சோவியத் ரஷ்யா தனியாக நாசி ஜேர்மனியை எதிர்க்க முதல், ஹிற்லரோடு பங்கு பிரிப்பு ஒப்பந்தம் போட்டதை நாசூக்காக மறைத்து விட்டீர்கள் போல - நெடுக்கரின் ட்ரேட் மார்க் cherry-picking😎! பின்னர், நாசிகளே படையெடுத்த பின்னர் தான் சுதாரித்துக் கொண்டு திருப்பித் தாக்கினர். ஸ்ராலின் - இன்றைய புரினின் பழைய வடிவம்- இப்படி உள்ளடி வேலைகள் எல்லாம் செய்ததால், பிரிட்டன் தான் தீவிரமாக சோவியத் ரஷ்யாவை எட்ட வைக்க நேச அணிகளைத் தூண்டியது - அப்படி எட்ட வைத்திருந்திருக்கா விட்டால், 1948 இலேயே ஸ்ராலின் ஐரோப்பா, பிரிட்டனை நோக்கி வந்திருப்பார். இப்போது நீங்கள் சுதந்திரமான ஒரு தீவில் வாழ்ந்திருப்பீர்கள். காலக் கொடுமை இப்படி உங்களை புரின் இல்லாத இங்கிலாந்தில் கஷ்டப் பட வைத்து விட்டது😂. பின்லாந்து, சுவீடன் மட்டுமல்ல, ஆர்மேனியா கூட நேட்டோவின் சினேக பூர்வ நாடு தான், ஆனால் நேட்டோவில் உறுப்பினரல்ல. நேட்டோ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் சலுகை ஐந்தாம் சரத்தின் பாதுகாப்பு - அது இருக்கும் நாடுகளை ரஷ்யாவும் தாக்காது, அந்த நாடுகளும் ரஷ்யாவைத் தாக்க மாட்டா. இதன் பெயர் பலச்சமநிலை பேணல்.
-
என்னோட சாதி..
சிலர் "கடந்து போ, பேசாமல் போ, மறையும்" என்கின்றனர் - இதெல்லாம் கடந்து போன காலங்கள் இருந்தன. இவர்களின் தியரி சரியானால் இப்போது சாதி ஒரு பொருட்டில்லாமல் போயிருக்க வேண்டும், அப்படியா போய் விட்டது? இல்லையல்லவா? ஜே.பி.சி மெசின் தேர் முதல் (2023 இல்) தீவகத்தின் அதிபர் பதவி வரை சாதி மீண்டும் மூர்க்கமாக எழும்பி நடமாடுகிறதல்லவா? பிறகேன் இந்த இத்துப் போன "வைக்கோல் போருக்குள் மறைச்சு விட்டால், எல்லாம் கிளீனாகி விடும்" என்ற வாதம் இன்னும் தொடர்கிறதெனத் தெரியவில்லை. எனவே, வெளிப்படையாகப் பேசும் துணிவில்லாதவர்கள், பேசத் துணிந்தவர்களையாவது நையாண்டி செய்யாமல் மௌனமாக இருங்கள் - உங்கள் மௌனம் சில நேரங்களில் சாதி வாதத்தை ஒழிக்க உதவலாம்!
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
புரின் பெறுமதி தெரிந்த ஒரே அமைப்பு உலகில் நேட்டோ தான்!😎 70 ஆண்டுகளாக அயல் ஸ்கண்டினேவிய நாடுகளால் கூட இயலாமல் போன காரியத்தை செய்தவர் புரின் என்ற "ஸ்லீப்பர் ஏஜென்ற்": சுவீடனையும், பின்லாந்தையும் வெள்ளித் தட்டில் வைத்து நேட்டொவில் ஒப்படைத்தார்😂!
-
ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த சுமந்திரன்
முதலே நான் குறிப்பிட்டது போல, கேள்விகளுக்குப் பதில் வராது. ஏன்? இவர்கள் சுமந்திரன் மீது சாட்டும் குற்றங்களின் தோற்றுவாய் ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு வந்தவையல்ல, வேறு தோற்றுவாய்கள், வெளியே சொல்ல தயங்கும் காரணங்கள் இருக்கின்றன. ஆனால், உங்களுக்குத் தெரிந்து கொண்டு தான் கேட்டிருக்கிறீர்கள் என அறிவேன். ஆனால், வாசகர்கள் அறிந்து கொள்ள: 1. சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு (ICC) இலங்கையின் குற்றங்கள் இன்னும் முறையாக முன்வைக்கப் படவில்லை. பிரதான காரணம், அப்படி மனு செய்வதற்கான 3 பொறிமுறைகளில் எதுவும் தமிழர்கள் தரப்பின் வசம் இல்லை. வேறொரு அங்கத்துவ நாட்டினூடாக மனு செய்யும் முயற்சி ஓரிரு ஆண்டுகள் முன்பு பிரிட்டனில் ஆரம்பித்தது, நிலை எனவென்று தெரியவில்லை (அந்த முயற்சியைக் கூட, மியன்மாரின் றொஹிங்கியா மக்களின் வழியைப் பின்பற்றித் தான் பிரிட்டன் தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது வரைக்கும் எவரும் அக்கறையாக எப்படி ICC ஐ அணுகுவது என்று யோசித்ததாக நான் அறியவில்லை) 2. அப்படியானால் எங்கே விசாரணை நடக்கிறது? ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் (OHCHR) நடக்கிறது. 2014 இல் "..எதிர்கால தீர்ப்பாயமொன்றில் சமர்ப்பிப்பதற்காக ஒரு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்" என்ற வாக்கியத்தோடு முதல் தீர்மானம். தீர்மானத்தின் இணைப்பு கீழே: https://www.ohchr.org/en/hr-bodies/hrc/oisl#:~:text=In its resolution A%2FHRC,violations and abuses of human இடையில், இலங்கை அரசு இந்த தீர்மானத்தின் படி ஒழுக மாட்டேன் என்ற போது, அமெரிக்காவின் அணி, இன்னொரு தீர்மானம் மூலம் இலங்கையை தொடர்ந்து உடன் வைத்திருக்க பணியாற்றியது. அந்த அமெரிக்க நிலைப்பாட்டிற்கு சுமந்திரன் ஆதரவாக இருந்தார். இதையே "தவணை கொடுத்தார்கள்" என்று சுமந்திரன் எதிர்ப்பு அணி குத்தி முறிந்து வியாக்கியானம் செய்தன. தவணை கொடுத்திருக்கா விட்டால், சர்வதேச/ஐ.நா படைகள் வந்திறங்கி தமிழர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என்று நினைத்தார்களோ தெரியாது😂. தற்போது, 2021 தீர்மானத்தின் படி Sri Lanka Accountability Project (SLAP) என்ற பொறுப்புக் கூறல் திட்டம் மூலம் தகவல் சேகரிப்பு நடந்து வருகிறது. அதன் இணைப்புக் கீழே: https://www.ohchr.org/en/hr-bodies/hrc/sri-lanka-accountability/index#:~:text=In its resolution 46%2F1,Lanka with a view to விசயம் இவ்வளவு தான்! "சுமந்திரன் இதைக் குழப்பினார் , விக்கி ஐயா இதை முன்னேற்றினார்!" என்பதெல்லாம் மேல் தீர்மானங்கள் பற்றி எதுவும் தெரியாதவர்கள் போடும் கூச்சல் - white noise!
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
வெளித்தெரியாமல் இருக்கும் இதயக் கோளாறுகள் சிலரில் உடற்பயிற்சி, உடல் உழைப்பின் போது வெளிப்படுவதுண்டு. இந்தக் காரணத்தினால் தான், முதல் எப்பொழுதும் கடின உடற்பயிற்சி செய்யாதோர், ஒரு மருத்துவ பரிசோதனை , இதய பரிசோதனை செய்த பின்னர் கடின உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று மருத்துவ ஆலோசனை இருக்கிறது. சாதாரணமாக இதயத்தின் இரத்தக் கலன்களில் இருக்கும் அடைப்புக் (atheroma) கூட, உடற்பயிற்சி கடினமாகும் வரை வெளித்தெரியாமல் இருக்கலாம். இதற்கு ஒரு வழி, stress test செய்து இதய இயக்கம் சரியாக இருக்கிறதா என்று கண்டறிவது. மேல் செய்தியில் இருப்பது, atrial flutter எனப்படும் பிறப்பிலேயே இருக்கக் கூடிய ஒரு நிலை. இதயப் பரிசோதனையில் கண்டறியலாம். சிகிச்சைகள் இருக்கின்றன.