-
Posts
15243 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
பெருமாள் replied to ஈழப்பிரியன்'s topic in அரசியல் அலசல்
ரணில்தான் அந்த சகுனிதான் 2௦3௦ ல் அல்லது 2௦35 யார் இலங்கையை ஆளனும் எனும் முடிவை எடுப்பவனும் அவன் தான் ஒரு முழு சிங்கள இனவாதி அவனுக்கு தெரியும் இந்த அனுரா எல்லாம் வெத்து வேட்டு பக்கத்தில் உள்ள இந்தியாவும் மேற்குலகமும் ஒரு அளவுக்கு மேல் அவரின் ஆட்டத்தை ரசிக்காது என்று வேணுமென்றால் நீங்கள் தீருவில் தானே இனி த்தான் இருக்கு விளையாட்டு பொப் கோர்ன் உடன் இருப்பம் .😃 -
விக்கியர் முகத்திரையை கிழிக்க ஒரு அனுரா வரவேண்டி உள்ளது இவ்வளவு காலமும் எங்கை போயிருந்தின்கா ? அப்ப மற்ற கள்ளர் சுமத்திரன் ஸ்ரீதரன் மாவை எல்லாம் காந்தியம் பேசிக்கொண்டு இருக்கினமா ? இன்னமும் ? அவர் வரும் தேர்தலில் போட்டியிடவில்லை வரும் தலைமுறைக்கு வழி விட்டு கொடுக்கிறேன் என்ற சொல் அங்கிருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகளை கோப படுத்தி விட்டது அதுதான் காரணம் என்கிறார்களே உண்மையா ?
-
புலிகளின் நடவடிக்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்த வேணும் என்று சொல்லி புலிகளை வசைபாடுவது உங்க ஸ்டைல் இங்கு அனுரா வின் கடந்த கால நடவடிக்கைககள் அவர் கட்சி சார்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் போன்றவற்றை ரஞ்சித் எமது பார்வைக்கு நினைவு படுத்துகிறார் உங்களால் அவர் எழுதிய விடயங்களில் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை ஏனென்றால் அவர் எழுதுவது அனைத்தும் நடந்த விடயங்களே .பொது வேட்பாளர் அவர் உண்மையிலே யார் என்று தெரியாத போதிலும் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டுவதுதான் யாழில் உங்களின் 24 மணி நேர சேவை . நல்ல கருத்துக்கள் வரவேணும் அதற்காக எப்ப பார்த்தாலும் பழம் சீல கிழிந்தது போல் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டிக்கொண்டு புலம்பெயர் தமிழரையும் திட்டிக்கொண்டு எழுதுவதை எல்லாம் நீங்கள் கருத்து என்று எடுத்து கொண்டது உங்கள் சிறுமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்குது . அநேகமா இனி அனுரா திருந்தியும் இருக்கலாம் இரு இனமும் ஒன்று பட்டால் தான் அந்த தீவில் நல் வாழ்வு என்று அதற்கு முதல் ....................அறுத்து ஆடுகிரியல் உங்க வழக்கமான விளயாட்ட ?
-
அப்படியா எந்த பல்கலையில் எப்போ படித்தவர் என்ற விபரத்தை தர முடியுமா ? குதிரை ஓடிய கூட்டம் கோட்டு மாட்டிகொண்டு திரிந்தால் படித்தவர் என்ற விம்பம் தோன்றுவதை தவிர்க்க முடியாது . இங்கு ரணிலும் இவரும் கோட்டு மாட்டும் கூட்டம் ரணில் வெளிநாடுகாளில் படிக்கவில்லை . அங்கு அடிக்கிற வெக்கைக்குள் இவங்கள் இரண்டு பேரும் சனத்தை ஏமாற்றும் தோற்றம்
-
சில விடயங்கள கதைக்கும் போது ஆயிரகணக்கான சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ? அதே1972 jvp கிளர்சையில் இதே இந்திய ராணுவம் சிங்கள இளையோர்களை வீதியில் போட்டு நெரித்தார்காளே அப்படி இறந்து போன இளையயவர்களின் ஆன்மாக்கு இதே அனுரா என்ன பதில் சொல்ல போகிறார் ?
-
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
பெருமாள் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
பொறுங்க உங்க ஆள் கனடாவிலும் கிழிந்த தவக்கை போல் இருப்பார் . -
இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தமிழக கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது. புதிய ஜனாதிபதிக்கு நன்றி இதில் ஒரு வருடமாக இலங்கைச் சிறையில் இருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த ரொபர்ட் என்ற கடற்றொழிலாளரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்றொழிலாளர் விடுதலை செய்யப்பட உள்ளமைக்காக தமிழக கடற்றொழிலாளர்கள் புதிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-nadu-fishermen-s-request-to-anura-1727370468
-
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
பெருமாள் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
பேராண்டி உங்க ஆள் நிறம் மாறும் ஓனானை விட சிறப்பானவர் எப்படியும் தப்பி விடுவார் ஆனால் வெளிநாட்டில் பதுக்கிய பணம் அங்கு வாங்கிய தொடர் மாடி வீடுகள் தற்போது யாரின் பெயரில் உள்ளது அதாவது பினாமி பினாமி என்பார்களே அவரின் பெயரும் நமக்கு தெரியும் ஒரு மெயில் காணும் உங்க ஆள் மயிலாடுவார் சும்மா வாயை கிண்டிக்கொண்டு இருக்காதிங்க . ஐஸ் தொழில் நடாத்தி வந்த விசுவாசி அந்த பினாமி இப்ப நம்மவர்களுக்கு விளங்கி இருக்கும் . -
அநுரகுமாரவின் வெளிப்பாடு அச்சுறுத்தல் அல்ல : பாதுகாக்கும் சுமந்திரன்
பெருமாள் replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
அவர் செய்த திருகுதாளம்களை அனுரா வந்தால் வெளிபடுத்தி விடுவாரோ என்ற பயத்தில் சுமத்திரன் உளறி தள்ளுகிறார் இப்படி சொன்னவரா சஜித்துக்கு வாக்கு போடுங்க என்று சொன்னவர் ? இப்படி நிறம் மாறும் ஓணான் கூட தற்கொலை பண்ணும் இவரின் செய்கைககளை பார்த்து . -
பெரும் அதிர்ச்சியில் தமிழ் அரசியல்வாதிகள்! தப்பியோடப் போவது யார்....!
பெருமாள் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
தங்களுக்கு குடை பிடிக்க கூட ஒராளை வைத்திருக்கும் திருட்டு கழுதைகள் இவர்களா தமிழருக்கு தீர்வை பெற்று தரபோகிரார்கள் ? -
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்து ஓய்ந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அடுத்து வரும் ஆறு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல்வாதிகள் தமது நாடாளுமன்ற பதவிகளை பெற்றுக்கொள்ள மக்களிடம் வாக்குகளை கேட்கத் தயாராகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். புள்ளிவிபரங்கள் முன்னரை விட தற்போது மாறுபட்ட அரசியல் களம் உருவாகி உள்ளது. இலகுவாக மக்களை ஏமாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறான பொய்களை கூறி தமது இருப்புக்களை தமிழ் அரசியல்வாதிகள் தக்க வைக்கப் போகின்றார்கள் என்பதே தற்போதுள்ள சவாலாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையிலான புள்ளிவிபரங்களை நோக்கும்பட்சத்தில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என தாம் என ஏமாற்றித் திரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி மக்களால் வெறுக்கப்படும் ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளரான சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியிருந்தனர். தமிழர் பகுதி இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் சஜித் முன்னிலை பெற்ற போதும் இரண்டாம் மூன்றாம் நிலையை எட்டியவர்களின் வாக்கு வீதங்கள் அதிகரித்துள்ளமை தமிழரசு கட்சிக்கு பெரும் தோல்வியாக மாறியுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் சஜித் முன்னிலை பெற்ற போதும், தமிழரசு கட்சியிற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரம் வருமாறு, யாழ். மாவட்டத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய பா.அரியநேத்திரன் 116688 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 84558 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 27086 பெற்றனர். வன்னி மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 52573 வாக்குகளையும், பா. அரியநேத்திரன் 36377 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 21412 வாக்குகளையும் பெற்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க 91132 வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 38832 வாக்குகளையும், பா. அரியநேத்திரன் 36905 வாக்குகளையும் பெற்றனர். வாக்கு எண்ணிக்கைகள் திருகோணமலை மாவட்டத்தில் அநுரகுமார திசாநாயக்க 49886 வாக்குகளையும், ரணில் விக்ரமசிங்க 40496 வாக்குகளையும், பா.அரியநேத்திரன் 18524 வாக்குகளையும் பெற்றனர். வடக்கு, கிழக்கில் எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் தேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயற்படவில்லை. ஆனாலும் அதிகப்படியான அது வாக்குகளை பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் இது பல மடங்காக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதியாக உள்ள அநுரகுமார திசாநாயக்க வெறும் நான்கு இலட்சம் வாக்குகளை பெற்றார். அவர்களின் அசாத்திய வளர்ச்சி காரணமாக ஐந்து ஆண்டுகளில் சுமார் 50 இலட்சம் வாக்குகளை பெறுக்கொள்ளும் நிலைமை மாறியுள்ளது. இதில் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்ற இளம் பாராயத்தினரும் அதிகளவில் அடங்கும். வடக்கு - கிழக்கு இவ்வாறானதொரு மாற்றம் தமிழர்கள் மத்தியிலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போதுள்ள இளைஞர்களின் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. வடக்கு - கிழக்கு தமிழர்களின் நிலைமை குறித்து தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவிக்கையில், எமது கட்சி, தமிழ் மக்கள் மத்தியில் பரீட்சியம் இல்லாத ஒன்று. எனினும், ஜனாதிபதியின் அநுரகுமாரவின் அணுகுமுறைகள் தொடர்பில் அவர்கள் மத்தியில் பாரிய மாற்றம் ஏற்படும். அடுத்து வரும் தேர்தல்களில் அதன் வெளிப்பாடு நேரடியாக தெரிய வரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில் தற்போது மெருகூட்டப்பட்ட புது இரத்தம் பாய தொடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளைவேட்டி கட்டிய வயதான அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு அவர்கள் செவிமடுப்பார்கள் என்பது சந்தேகம். அடுத்து வரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. இதற்கு பல வலுவான காரணங்கள் உள்ளன. இழுபறிநிலை தமது சொந்த சுயநலத்திற்காக மக்களை ஈடு வைத்து சுகபோகங்களை அனுபவிக்கும் தமிழ் அரசியல்வாதிகளே தற்போது உள்ளனர். மக்கள் நலன்சார்ந்து எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் அவர்கள் எடுப்பதில்லை. அதனையும் தாண்டி தமது கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. தமது தலைமை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் பல வருடங்களாக இழுபறிநிலை தொடர்கிறது. இந்நிலையில் இவ்வாறான அரசியல்வாதிகளை தொடர்ந்தும் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். அதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை வாய்ப்பாக மக்கள் பயன்படுத்தி கொள்வர். தற்போதைய நிலையில் தேசிய மக்கள் சக்தியின் சித்தாந்தங்களை தமிழ் இளைஞர்கள் மத்தியில் விதைக்கும் பணியினை பலர் முன்னெடுத்து வருகின்றனர். இளைஞர் அணி இதற்காக இளைஞர் அணியொன்றையும் உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான அரசியல் மாற்றங்களை சுயநலத்திற்காக செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அடுத்த வரும் தேர்தல்களில் ஒற்றுமையில்லாத வயதான அரசியல்வாதிகளுக்கு ஓய்வு வழங்கி, மக்கள் நலன் சார்ந்து செயற்படும் இளைஞர்களை தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என்ற கோஷம் வலுப்பெற்றுள்ளது. அது சாத்தியமானால் தற்போது தமது சுயத்திற்காக மட்டுமே அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள் என்பது யதார்த்தம். அடுத்து வரும் தேர்தல் களம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். https://tamilwin.com/article/sri-lanka-parliament-election-2024-tamil-members-1727259397
-
இந்த சொத்தி கதையத்தான் 14 வருடமாய் சொல்கிறீர்கள் ஏன் நீங்கள் போய் நிக்க வேன்டியதுதானே ?
-
அட கோமாளியே விடுங்கையா கட்டு சோறு க்குள் புகுந்த பெருச்சாளி அது . உங்கள் சிந்தனை வலுபெற இறைவன் ஆசி உண்டாகட்டும் .
-
ராஜபக்சாகூட்டம் b பிளான் c பிளான் இல்லாமலா இருப்பார்கள் ?