Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. கடைசியில் நம்ம பட்ட பெயரை சொல்லிட்டான் போல இருக்கு 😃
  2. ஒவ்வொரு மரமும் வெயிலின் வெக்கையை குறைக்கும் இந்த தறித்த மரத்தின் சாபம் பல பேரை கொள்ளும் . மரங்களின் அருமை தெரியாதவர்களின் சந்ததி உருப்பட போவதில்லை .
  3. இந்த கள்ள கடல் சமீபத்தில் தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது அது என்ன அலை என்று தெரியாமல் மடவளவு போன்ற இணையம்கள் செய்தி போட்டு இருந்தன .
  4. வாழை தோட்டத்து பக்கத்தில் சாக்கு கடை சாப்பாடு என்று நண்பர்கள் வாங்கி வருவார்கள் கொழும்பில் 80 கடைசியில் 90தொடக்கம் ஆக இருக்கனும் ஒரு பாசல் நாலு பேர் சாப்பிடலாம் அதுக்குள் சிலந்தி புழு எல்லாமே கண்டு அதன்பின் வெளியில் என்றால் வெஜ் தான் இன்று வரை .
  5. என் பெறா மக்கள் ஆறு பேரும் இறால் சாப்பிடாங்கள் காரணம் புழு என்பார்கள் .
  6. இந்த திரியை விளங்க நினைப்பவன் மினக்கெட்டு மொழிமாற்றம் செய்து இங்குஇணைத்து உள்ளார் இனி ஸ்டாட் மியூசிக் ............................................................................
  7. இவர் வேறை ஏப்ரல் போய் மே வந்து விட்டது இன்னும் விண்டர் ஜகேட்கள் விடைபெறவில்லை நம்ம நிலைமை இப்படி . பாரதி பாடியது போல் இருந்தால் ஏனப்பா இப்படி வெக்கை ?.
  8. சிங்களவன் கட்டா சம்பல் அடிமை அவனா இருக்காது .
  9. இம்கூம் நம்ம கிட்ட இந்த பாட்ஸா எல்லாம் பலிக்காது ஊசி போடும் ரூமுக்குள் தள்ளி கொண்டு போனாலே காணும் விண்டோவுக்குள்ளால் பாய்ந்து பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்து உச்சியில் இருந்து இரவு ஏழுமணிக்கு பின்தான் இறங்குவம் பகல் பொழுது மட்டும் வெள்ளை யூனிபோம் போட்ட பிசாசுகள் வேப்ப மரத்தை பார்த்து கத்தி கொண்டு இருப்பினம் .
  10. மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பலரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கி வைத்து இருந்த குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.madawalaenews.com/2024/05/180.html இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?
  11. தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் நாட்டிலேயே வாழ்கின்றோம்: சஜித் ஆதங்கம் வங்குரோத்து அடைந்துள்ள நம் நாட்டிலும் ஊழல், திருட்டு அதிகரித்துள்ளது எனவும், விசா மோசடி மற்றும் தேசிய வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு மோசமான நடவடிக்கையாக மாறியுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். மேலும், விசா நடைமுறையை மாற்றியமைத்ததில் கொள்முதல் முறை, விலைமனு முறை, போட்டி முறை உருவாக்கப்பட்டதா என்பதில் பிரச்சினை எழுகிறது என்றும் கூறியுள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 178 ஆவது கட்டமாக 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் கொழும்பு, கெஸ்பேவ, ஆனந்த சமரகோன் வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் உறையாற்றும்போதே இதனை கூறியுள்ளார். விலைமனு கோரல் “வங்குரோத்தான நாட்டில் கூட இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனும் போர்வையில் விலைமனு கோரல் முறையிலிருந்து விலகி, தேசிய சொத்துக்களும், வளங்களும் சூறையாடப்படும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும். ஊழலைத் தடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும். ஊழலைத் தடுப்பது கட்டளைச் சட்டங்கள் மூலம் மட்டும் மேற்கொள்ளப்படாமல், மேலதிக சுதந்திரத்தை வழங்கி, எளிதில் மாற்ற முடியாத அத்தியாயமாக மாற்ற வேண்டும்.” என சஜித் பிரேமதாச கூறியுள்ளார். https://tamilwin.com/article/visa-fraud-and-looting-of-national-resources-1715023486
  12. கடைசி காலத்தில் ஊருக்கு போய் இருப்பம் எனும் புலம்பெயர்ஸ் சிந்திக்கணும் . மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழருக்கெதிரா இனவாதம் கக்கும் சிங்களவர்கள் இருக்கும்வரை அந்தநாடு சொறி பிடித்த நாய் போலத்தான் இருக்கும் .
  13. நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும், அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1381171
  14. கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒரு தமிழர் அல்லது அவரின் குடும்பத்தை அறிந்திருக்கிறார்கள் - அவர்கள் வாழ்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது ஒரு தமிழருடன் வேலை செய்கிறார்கள். இருப்பினும், இங்கு ஏன் இவ்வளவு தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள், என்பதற்கான உண்மையான காரணங்கள் பலருக்குத் தெரியாது என்று சித்சபேசன் தெரிவித்துள்ளார். எங்கள் மூதாதையர் தாயகமான தமிழ் ஈழம், ஏராளமான விளை நிலங்களையும், ஏராளமான கடற்கரைகளையும் கொண்ட அழகிய மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுமென்றே, திட்டமிட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையால், பல தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உலகின் பல பகுதிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர், அந்த வகையில் கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்தநிலையில் ரதிகா சித்சபேசன் தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரியான் சிங்குடன் இணைந்து 11 வருடங்களாக இந்த படத்துக்காக பணியாற்றி வருகிறார். தமிழ் இனப்படுகொலை புதிய ஆவணப்படம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “இனப்படுகொலையில் இருந்து உயிர் பிழைத்தவளாக தமக்கு கிடைத்திருக்கும் மகத்தான பாக்கியம், தமது கல்வி நிலைகள், தமது தளம் மற்றும் வலையமைப்பு, அத்துடன் எனது உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கனேடியனாக, தமது பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தப் படத்தை உருவாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். வரலாற்று உண்மைகளாக, தப்பித்தல், உயிர்வாழ்வது, பின்னடைவு போன்ற பலரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கனடாவில் தமிழர்கள் எவ்வாறு செழித்து வருகிறார்கள் என்பதைக் இந்த ஆவணப்படத்தில் காண்பிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம். படத்தின் தயாரிப்பின் போது, காணாமல் போன, அல்லது கொலைசெய்யப்பட்ட தங்கள் மகன்கள் மற்றும் கணவர்களைத் தேடும் போது, போராட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தைரியமாக தொடர்ந்து போராடும் தாய்மார்களுடன் உரையாடல்களை நடத்தினோம். காசாவில் இடம்பெறும் மோதல் இந்த திரைப்படம், இலங்கை மோதல் மற்றும் காசாவில் தற்போதைய மோதலுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. காசாவில் இன்று பாலஸ்தீனியர்கள் வெகுஜன மற்றும் கண்மூடித்தனமான அழிக்கப்படுகின்றனர். இதுவே 2009 மே மாதம் இலங்கைத் தீவு நாட்டில் தமிழர்களுக்கு நடந்தது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இரண்டு கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன. காசா பகுதி 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது, பாலஸ்தீனியர்கள் இந்த மேற்குக் கரையுடன் பல ஆண்டுகளாகத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் படுகொலை இன்று நடக்கிறது எனினும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் தமிழர்கள் இருவருமே தத்தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எப்போதும் விரும்புகின்றனர். அவர்கள் இருவருமே அரசால் இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே எங்கள் உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ரதிகா சித்சபேசன் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/ray-of-hope-documentary-by-radhika-chitsabesan-1714862461?itm_source=parsely-api
  15. தமிழ் மக்கள் ஐக்கியப்படும் போதெல்லாம் சிங்களதேச அரசியல் பரபரப்படைய தொடங்கிவிடும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் தமிழ் சிவில் சமூகம் ஒன்றுகூடி முடிவு செய்திருக்கிறது. தமிழ் பொது வேட்பாளர் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுத்தொடங்கிய நிலையில் சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அச்சமடைய தொடங்கி விட்டனர். அதனால்தான் மேற்குலக ராஜதந்திரி ஒருவர் அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற தமிழர்களின் நிலைப்பாடு சிங்கள தேசத்தை மட்டுமல்ல சர்வதேச அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும், இலங்கைத் தீவில் தமிழ் மக்களுடைய வகிபாகம் என்ன என்பதையும், தமிழ் மக்களும், தமிழ் தலைவர்களும் உணர வேண்டும். முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களை ஒரு மையத்தில் குவித்து தமிழ் தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஒரு மார்க்கமாக 2009ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஈழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் "எதிர்வரும் 2010 ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை மீண்டும் சர்வதேச உலகத்துக்கு சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்." என தனது ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார். அதுவே கொள்கை ரீதியாக தமிழ் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கும், தமிழ் மக்கள் தமது இறைமையை வாக்குகளின் மூலம் ஒரு தமிழ் தலைமைக்கு வழங்குவதற்குமான வாய்ப்பாக அமையும் என குறிப்பிட்டு இருந்தார். அந்தக் கோரிக்கைதான் கடந்த 2015 தேர்தலிலும் 2019 தேர்தலிலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. அதனை பலதரப்பட்ட அரசியல் ஆய்வாளர்களும் கோடிட்டு பல கட்டுரைகளை எழுதியும் ஊடகங்களில் பேசியும் வந்துள்ளனர். அந்தப் பின்னணியிற்தான் தற்போது 2024ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை 15 ஆண்டுகள் கழிந்தநிலையில் பலமடைந்து பரவலடைந்துள்ளது. இந்த பின்னணியிற்தான் தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதும், சிந்திப்பதும், செயற்படுத்துவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியா வாடி வீடு விடுதியில் ஒன்று கூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வருமாறு தீர்மானங்களை மேற்கொண்டனர். 1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறையாண்மையையும், சுயநிர்ணைய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது. 2. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது. 3. அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது. 4. அதற்காக சிவில் சமூகமும், தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது. 5. தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றிகொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புகளை நோக்காகக் கொண்டு செயல்படுவது. சர்ச்சைக்குரிய கருத்து இவ்வாறு சிவில் சமூகத்தினரின் நடவடிக்கையை அடுத்து சிங்களத் தலைவர்கள் அச்சமடைய தொடங்கி விட்டனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நாளில் தமிழர்களுக்கு நன்கு பரீட்சியமான மேற்குலக ராஜதந்திரி ஒருவர் அவசர அவசரமாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று முக்கிய சிவில் சமூகப் பிரதி ஒருவரை சந்தித்து "பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தடுத்து விடாதீர்கள்" எனக் குறிப்பிட்டார். “தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தத்தான் போகிறார்கள்” என அந்த சிவில் சமூகப் பிரதி குறிப்பிட்ட போது "அப்படியாயின் தமிழ் மக்கள் தமது இரண்டாம் விருப்பத் தேர்வு வாக்கினை ரணிலுக்கு அளிக்கும்படி சொல்லுங்கள்" அன்றும் கேட்டுள்ளார். மேற்படி விடயம் ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத் தீவைப் பொறுத்தளவில் ஒரு சிறிய தேசிய இனமாக இருக்கலாம், ஆனால் இலங்கை தீவிலும், இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரசியலிலும், மேற்குலகத்தின் உலகம் தழுவிய அரசியலுக்கும் (பூகோள அரசியல்) ஒரு இன்றியமையாத வகிபாகத்தை வகிக்கிறார்கள் என்பது புலனாகிறது. சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது பற்றி தென்னிலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருடன் பேசும்போது கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க “தமிழர்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தட்டும். அதைப் பற்றி எனக்கு எந்த கவலை இல்லை” என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இப்போது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்கின்ற தீர்மானம் உறுதியாகி வரும் நிலையில் அவர் அச்சமடைந்துள்ளார். தமிழர்கள் உதிரிகளாக இருக்கின்ற போது ஏறி மிதித்தவர்கள், எக்காளமிட்டவர்கள், பொருட்டாக மதிக்காதவர்கள் இப்போது தமிழ் மக்கள் திரட்சி பெறுகின்றபோது அச்சமடைகின்றனர். அதன் வெளிப்பாடுதான் ரணில் விக்ரமசிங்காவினால் ஐரோப்பிய ராஜதந்திரி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை. ஆனாலும் கொழும்பில் வாழ்ந்து கொண்டு கொழும்புமைய அரசியலை மேற்கொள்ளும் தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதை ஏளனம் செய்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் எனத் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்பது என்பது குறித்த ஒருவரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பையே கொடுக்கும். "யார் அந்த கோமாளி பொது வேட்பாளர்" என சர்ச்சைக்குரிய கொழும்பு வாழ் யாழ். மாவட்ட அப்புக்காத்து எம் பி. ஒருவரின் கையாள் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்தி என்ற போது அல்லது தமிழ் மக்கள் திரட்சியாக தேசியம் பேசுகின்ற போது சிங்களவர்கள் கோபப்படுகிறார்கள் இது சிங்களர்களை ஆத்திரமூட்டும் செயல் என்கிறார் சுமந்திரன். அப்படியானால் இதுவரை காலமும் சிங்கள மக்கள் அல்லது சிங்கள தலைவர்கள் தமிழர்கள் மீது ஆத்திரம் கொள்ளவில்லையா? என்ற ஒரு பலமான கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் ஒன்று திரண்டால் என்ன? ஒன்று திரளாவிட்டால் என்ன? தமிழ் மக்கள் தமது உரிமைகளை கேட்டால் சிங்கள தேசத்தில் கோப அக்கினி வெளிப்படும். இது சிங்கள தேசத்தின் அரசியல் பண்பாட்டியல். சிங்கள மக்கள் பழகுவதற்கும் பேசுவதற்கும் இனிப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசினால் மறுகணமே கழுத்தை நெரிப்பார்கள். இதுவே யதார்த்தம். எந்த உயிரியும் போராடித்தான் வாழ வேண்டும். போராடாமல் எந்த உயிரிக்கும் வாழ்வு கிடையாது. ஆகவே எமது உரிமைகளை கேட்பதற்கு சிங்கள தேசம் கோவப்படுகிறது என்றால் நாம் வாய் பொத்தி மௌனியாக, அடிமைகளாக, சேவகம் செய்யத்தான் முடியும். சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டுமாக இருந்தால் போராடித்தான் ஆக வேண்டும். இதுவே யதார்த்தம். இதனை கொழும்பிலே வாழ்ந்து, அடிமைத்தன, கீழ்ப்படிவு சமூகவியலுக்குள் பழக்கப்பட்டு அடிமைத்தனமாக வாழ்கின்ற வாழ்க்கை முறையே சகஜமானதாக எண்ணி வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு அதுவே மேலானதாகவும் சொர்க்க வாழ்வாகவும் தோன்றும். இத்தகைய உளவியல் அடிமை மாயைக்குள் இருந்து கொழும்பு வாழ் தமிழரசியல் தலைமைகள் எனப்படுவோர் விடுதலை பெறவேண்டும். இல்லையேல் இவ்வாறுதான் அடிமை வாழ்வுதான் சுதந்திரம் என்றும், ஜனநாயகம் என்றும், இதுவே வாழ்க்கை என்றும் தவறாக எண்ணிக் கொண்டிருப்பர். எனவே தாயக மண்ணில் வாழ்பவனே தமிழர்களை வழிநடத்த வேண்டும் அத்தகைய தலைவனுக்கே தமிழ் மக்களின் தேசிய அபிலாசை என்னவென்று புரியும். அதே நேரத்தில் சம்பந்தர் பொது வேட்பாளரை நிறுத்துவதனால் எந்தப் பயனும் இல்லை. தேர்தலில் முன்நிற்கின்ற இரண்டு பிசாசுகளில் சிறிய பிசாசுக்கு வாக்களிப்போம்"" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் தமிழ்மக்களின் அரச அறிவியலில் முதிர்ச்சிக்கு இது எத்தகைய அவமானகரமான கூற்று. 2010 தேர்தலில் பெரிய பிசாசைவிட சின்னப்பிசாசுக்கு ஆதரவளிப்போம் என்றுதானே முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை நேரடியாக நின்று படுகொலை செய்த இராணுவ தளபதி சரத் பொன்சாய்க்காவுக்கு வாக்களிக்க சொன்னீர்!. அவ்வாறு 2015 ஆம் ஆண்டு தேர்தலில் பெரிய பிசாசைவிட குட்டிப் பிசாசாகிய சிறிசேனாவுக்கு வாக்களிக்க சொன்னீர்!. 2019 தேர்தலில் பெரிய பிசாசுவை விடுத்து சின்ன பிசாசுவாகிய சஜித்துக்கு வாக்களிக்க சொன்னீர்!. இத்தகைய அரசியலால் தமிழ் மக்களுக்கு ஒரு உப்பு கல்லை தானும் பெற்றுத்தர முடிந்ததா? அல்லது தமிழ் மக்கள் சர்வதேசரீதியாக ஒரு அரசியல் முன்னெடுப்பை இதனால் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதா? இரண்டுமே ஏற்படவில்லை. தமிழ் மக்கள் மேன்மேலும் அழிந்து முள்ளிவாய்க்கால் பேராவலத்தை ஒத்த ஒரு அரசியல் பேரவலத்தையே இந்த முடிவுகள் ஏற்படுத்தின என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தளவில் சிங்கள தேசத்தின் பெரிய பிசாசு, சின்னபிசாசு, குட்டிப்பிசாசு, தெரிந்தபேய், தெரியாதபேய் எல்லாம் ஒன்றுதான். அனைத்தும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கவே முனையும். தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதையே இவை இலட்சியமாக வரித்துக் கொண்டவை. இவற்றில் நல்லவை, கெட்டவை என்று பாகுபாடு செய்வதற்கு இடம் கிடையாது. இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு பொது எதிரிகளே. கொழும்புவாழ் தமிழ் அரசியல் தலைமைகளின் இத்தகைய சிங்களவர்களிடம் நல்ல பெயர் வாங்கும் தம்நலன் சார்ந்த சுயநல அரசியல் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனை அடுத்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆயுதக் குழுவின் தலைவரின் அரசியல் ஆலோசகர் "இந்த சிவில் சமூகத்தினர் எதனையும் கதைப்பார்கள் செயல்படுத்த தூண்டுவார்கள் ஆனால் பிரச்சனை என்று வந்துவிட்டால் இவர்கள் எதற்கும் வரமாட்டார்கள். தேர்தலில் நிற்பதற்கும் மக்களுடைய கேள்விக்கும் நாங்கள்தானே பதிலளிக்க வேண்டும். ஆகவே இந்த சிக்கலில் நாங்கள் மாட்டாமல் ரணிலுக்கு வாக்களிப்போம்" எனக் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் மேடைகளில் பொது வேட்பாளர் வேண்டும் அது நல்லதுதான் என குறிப்பிடுகின்றனர். இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போது மக்களுக்கு பதில் அளித்து இருக்கிறார்கள்? எப்போது மக்களை சந்தித்து இருக்கிறார்கள்? பொதுத்தேர்தல் வரும் போது மட்டுமே இவர்கள் மக்களிடம் வாக்குப் பிச்சை பெறுவதற்கு மட்டுமே வருகிறார்கள். வாக்குகளால் கதிரையை பெற்றுவிட்டால் அவர்கள் மக்களை மறந்து விடுகிறார்கள். நாடாளுமன்றத்தின் சுகபோகத்தையும் அதனால் கிடைக்கக்கூடிய தமக்கான சலுகைகளையும் தேடியே பெரும்பாலான காலத்தை செலவழிக்கிறார்கள் என்பதுவே நிதர்சனம். எனவே சிவில் சமூகத்தினர் முன்னெடுக்கின்ற பொதுவேட்பாளர் என்ற விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பரவலடைந்து இருக்கிறது. வலுவடைந்து இருக்கிறது. ஆனால், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள சிலருக்கு உள்ளுக்குள் கோபத்தை விளைவித்தாலும் அவர்கள் வெளியே காட்டாமல் நடிப்பதாகவே தோன்றுகிறது. எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களுடைய விருப்பினை இவர்கள் நிறைவேற்றித்தான் தீர வேண்டும். இல்லையேல் அடுத்த தேர்தல் இவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டும். தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு பதவியேற்காமல் இருக்கின்ற சிவஞானம் சிறீதரன் "தனிப்பட்ட ரீதியாக நான் பொது வேட்பாளர் நிறுத்துவதை ஆதரிக்கிறேன்" என்று கருத்தை வெளியிட்டுள்ளார். அது மட்டுமல்ல பொது வேட்பாளர் விடயத்தை மத்திய குழு கூட்டத்தில் எடுக்கின்ற தீர்மானத்திற்கு அமைய கட்சியின் தீர்மானத்திற்கே நான் கட்டுப்பட்டவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் அவருடைய விருப்பம் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது என்பதுதான். ஆகவே, தமிழரசு கட்சியின் பெரும்பான்மையானவர்கள் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள் என்று கொள்ளப்பட முடியும். அதே நேரத்தில் யாழ். மாவட்ட எம். பி. ஆகிய முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையானவர்களும் பொது வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளனர். மேற்படி சிவில் சமூகத்தினர் மேற்கொண்ட ஊடக அறிவிப்பிற்கும் அவர்கள் முழுமையானஆதரவு வழங்கி இருக்கின்றனர் என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் பரப்பில் பெரும்பான்மையானோர் மத்தியில் பொது வேட்பாளர் என்பது கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு கடந்த நாட்களில் தமிழ் ஊடக பரப்பில் அச்சு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சாதகமான எழுத்துக்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. எனவே ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வேட்பாளர் என்ற விடயம் முக்கியமானது என்ற கருத்து வலுவடைந்துவிட்டது. ஈழத்து அரசியலில் எப்போதும் தமிழ்மக்கள் கொள்கையின் பக்கமே நின்று இருக்கிறார்கள். கொள்கைக்காகவே வாக்களித்து இருக்கிறார்கள். எனவே தமிழ் சிவில் சமூகம் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துமிடத்து பெரும்பான்மை தமிழ் மக்கள் அந்தப் பொது வேட்பாளருக்கே வாக்களிப்பர் என்பது திண்ணம். இவ்வாறு சிவில் சமூகம் முன்னின்று ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதாக வெளியிட்ட முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை நிராகரித்து தமிழ் மக்களின் ஆணை பெறுவதற்கான தேர்தலாக இதனைப் பயன்படுத்தி தமிழ் வாக்குகளை ஒன்று குவித்து ஜனநாயகத்தின் பெயரால் ஒரு மக்கள் ஆணையை பெற்றுவிட்டால் அது சர்வதேச அங்கீகாரத்துக்கு உட்பட்டதாகவே அமையும். இதன் மூலம் சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்தும் செய்தியை அறிவிக்க முடியும்.கூடவே சிதைவடைந்துள்ள தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை தூக்கி நிறுத்தவும் முடியும். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது முடிவாகிவிட்டது. அடுத்து யாரை? நிறுத்துவது என்பதுவே இங்கே கேள்வியாக உள்ளது. இது இலகுவாக தீர்க்கப்படக் கூடிய ஒன்றே. தமிழர் தரப்பில் மிகச் சிறந்த ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரிகள், மிகச்சிறந்த அறிவார்ந்த ஊடகவியலாளர்கள், ஓய்வு பெற்ற ஆளுமை மிக்க கல்லூரி அதிபர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள், ஓய்வு பெற்ற பெண் அதிகாரிகளும், பெண் ஆளுமைகளும் இருக்கிறார்கள். தேசத்திற்கு தங்கள் பிள்ளைகளை தாரை வார்த்த முற்போக்கான அன்னையர்கள் இருக்கிறார்கள். தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய சமூக சமயப் பெரியவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களில் யாரையாவது ஒருவரை இலகுவாக தெரிவு செய்திட முடியும். அதுவும் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் தமிழ் தேசியம் பெரும் ஆபத்துக்குள்ளாகி இருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த ஒருவரை தெரிவு செய்வதன் மூலம் அனைத்து தமிழ் மக்களுடைய வாக்குகளையும் ஒன்று திரட்டி ஒரு மக்கள் ஆணையை நிச்சயமாக தமிழ் மக்களால் பெறமுடியும். அவ்வாறு ஒருவரை நிறுத்தி ஈழத் தமிழ் மக்களுக்கான மக்கள் ஆணை ஒன்றை பெறுமாறு ஈழத் தமிழர்களை வரலாறு வற்புறுத்துகிறது . https://tamilwin.com/article/sinhala-leaders-afraid-of-tamil-candidate-1714875475
  16. பேராண்டி நீங்களும் ஒருவரின் பல அவதாரங்களில் ஒன்று என்று நினைத்தேன் ஆனாலும் உங்களின் முன்னைய கருத்துக்கும் தற்போதைய கருத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு பேராண்டி எப்படி ஓவர் நைட்டில் இப்படி கொள்கை மாற்றம் ?
  17. வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர். அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
  18. இலங்கையில் மற்றுமொரு மோசடி அம்பலம் - வெளிநாட்டவர்களை ஏமாற்றிய கடைக்காரர் இலங்கை வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை உணவக உரிமையாளர் ஏமாற்றிய நிலையில், நீதிமன்றம் வரை அபராதம் செலுத்தியிருந்தார். இந்நிலையில் புறக்கோட்டையில் ஒருவர் காலில் அணியும் சாதாரண பாதணிக்கு 9800 ரூபாவை வெளிநாட்டு பெண்ணிடம் அறவிட முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. காலணி கொள்வனவு வெளிநாட்டை சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருவர் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக புறக்கோட்டைக்கு அவர்கள் கடைக்காரரிடம் கழிவு விலையில் காலணியை கொள்வனவு செய்ய முடியுமா என்று கேட்ட பின் பாதணிகளை பார்வை இட்டுள்ளனர். குறித்த பெண் ஒரு சாதாரண பாதணியின் விலையை கேட்ட பொழுது கடைக்காரர் 9800 ரூபா என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பாதணியில் விலை மிக அதிகம் என தெரிவித்ததுடன் குறித்த வெளிநாட்டவர்கள் அதனை வாங்க மறுத்து கடையை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். இதன்போது வெளிநாட்டவர்கள் பதிவு செய்த காணொளியை அழிக்குமாறு கடைக்காரர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் இலங்கையில் பல மோசடியாளர்கள் உள்ளதாகவும், இங்கு வரும் வெளிநாட்டவர்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என அவர்கள் தமது சமூக வலைத்தளம் ஊடாக தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/sri-lanka-tourists-issue-colombo-scammer-shop-1714828235
  19. அங்கு வெக்கை இங்கு இன்னமும் விண்டர் ஜக்கட் ஓய்வுக்கு போக வில்லை இன்று காலையில் ஓரளவுக்கு வெப்பம் பின்னேரம் இருந்ததும் போச்சு .
  20. இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார். மக்கள்தொகை குறைப்பு சதவீதம் பூஜ்யம் மற்றும் ஆறு சதவீதம். இதனால் பெண் மக்கள் தொகை எழுபதாயிரமும், ஆண் மக்கள் தொகை எழுபத்து நாலாயிரமும் குறைந்துள்ளது. இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளதாக கூறும் பேராசிரியர், இறப்பு எண்ணிக்கையும் 1447 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிகரிப்பு ஒரு சதவீதமாக எட்டு சதவீதம் ஆகும். மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை 19,784 ஆக குறைந்துள்ளது. https://www.thamilan.lk/articles/9yDU04jxuk05zuaiwQte
  21. கட்டுநாயக்காவில் இணைய வீசா: தொடரும் சர்ச்சை பண்டாரநாயக்க சர்வதேச விமான (Bandaranaike International Airport) நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் வீசாக்களின் முக்கிய தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் (VFS Global) அமைப்பை இணைத்தமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தேசிய பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையில் வெளிநாட்டினரிடமிருந்து அதிகரித்த கட்டணங்கள் என்பனவே இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தனிப்பட்ட விபரங்கள் முன்னதாக உள்ளூர் நிறுவனமான மொபிடெலின் உதவியுடன் குறைந்த கட்டணத்தில் அமைப்பை உருவாக்கி, சிக்கனமான விகிதத்தில் இலங்கை குடிவரவுத்துறை எந்த சிரமமும் இல்லாது இந்த பணியை கிரமமாக கையாண்டு வந்தது. இந்நிலையில் மேலும், 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் வீசா ஆவணங்களை கையாளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸினால் (Tiran Alies) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த முழுப் பிரச்சினையின் பின்னணியில் சில மறைமுக நிகழ்ச்சி நிரல் இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதோடு அதை விரிவாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரஜைகளின் தனிப்பட்ட விபரங்களை குறித்த வெளிநாட்டு நிறுவனம் வைத்திருப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், சுற்றுலாப்பயணிகளாக வரும் வெளிநாட்டு பிரஜைகளின் தனிப்பட்ட பின்னணியை இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளால் முழுமையாக மதிப்பிட முடியாததால், அதுவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும குடிவரவு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதிகரித்த கட்டணங்கள் அத்துடன், இலங்கை குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து வீசா கட்டணத்தை மட்டுமே வசூலித்து வந்துள்ளனர். ஆனால் செயல்முறை அவுட்சோர்ஸ் (மூன்றாம் தரப்பு) செய்யப்பட்ட பிறகு கூடுதல் சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால், வருகை தரும் வீசா கட்டணம் 100 டொலர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிகரித்த கட்டணங்கள் சுற்றுலாத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளூர் நிறுவனத்தின் முன்மொழிவைக் கண்டுகொள்ளாமல், 'GBS டெக்னொலஜி சேர்வீசஸ்' மற்றும் 'IVS Global FZCO' ஆகிய நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்கியுள்ளது. புதிய இணைய வீசா தளத்தை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் உள்ளது. இதன்படி ஏப்ரல் 17 முதல், இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் வீசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 18.5 டொலர்கள் சேவைக் கட்டணம் மற்றும் 7.27 டொலர்கள் வசதிக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளனர். https://tamilwin.com/article/online-visa-in-katunayake-controversy-continues-1714795048

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.