Everything posted by நிழலி
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
மாற வேண்டியது யாருடைய பார்வை? - ‘இந்தியன் 2’ படத்தை முன்வைத்து சில கேள்விகள்! கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படத்தில் மூலம் வெளிப்படும் சமூகப் பார்வை எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானது. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ‘2.0’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பின் ‘இந்தியன் 2’ வெளியாகியுள்ளது. தனது கடைசி 2 படங்களில் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து முன்னோக்கிய சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக ரோபோடிக் பற்றி பேசியிருந்தார் ஷங்கர். தொழில்நுட்ப ரீதியாக இவ்வளவு முன்னோக்கி சிந்தி்க்கும் அவர் 2024-ம் ஆண்டிலும் சமூகம் குறித்த சில பிற்போக்குத்தனமான சிந்தனைகளைக் கொண்டிருப்பது அவரது ‘அப்டேட்’ ஆகாத தன்மையை மட்டுமல்லாமல் வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது. ‘இந்தியன் 2’-வில் என்ன பிரச்சினை? - மொத்தப் படமுமே பிரச்சினை என்றாலும், ஷங்கரின் முந்தையப் படங்களில் இருக்கும் எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள், திருநங்கைகள் மீதான அவரது மோசமான பார்வை இன்னும் மாறவேயில்லை என்பதை இப்படம் உறுதி செய்கிறது. படத்தில் ஆரம்பத்தில் தொழிலதிபர் ஒருவரை தனது வர்மக் கலையால் கொல்கிறார் கமல். கொல்லப்படுவதற்கு முன், வர்மத்தால் பாதிக்கப்படும் தொழிலதிபரின் உடல்மொழி ஒருவித நளினத்துடன் மாற்றம் பெறுகிறது. திருநங்கைகளை குறிப்பிடும் வகையில் கேலியாக சித்தரிக்கப்பட்ட அந்தக் காட்சி அபத்தமானது. அடுத்தடுத்து தொழிலதிபர்கள் கொல்லப்படும்போது, அவர்கள் மிருகங்கள் போன்ற உடல்மொழியால் பாதிப்புக்கு ஆளாகி துன்புறுத்தப்பட்டு பின்னர் கொல்லப்படுகினறனர். அப்படியென்றால் ஆண், பெண்ணைப் போன்ற நளினத்துடன் மாறுவது மிகப் பெரிய தண்டனையா? அவமானமா? இதைப் பார்க்கும் மூன்றாம் பாலினத்தவர்களின் மனநிலை குறித்த இயக்குநர் ஷங்கரின் பார்வை என்ன? சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டு முன்னேற்றம் காண போராடி வரும் மூன்றாம் பாலினத்தவர் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஷங்கர் மட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்? அவரது இயக்கத்தில் வெளியான ‘ஐ’ படத்திலும் திருநங்கைகள் குறித்த இதே மனநிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தையும் காட்சியையும் அமைத்திருந்தார். மட்டுமின்றி நேரடியாக திருநங்கைகளை தாக்கும் வசனங்களையும் இடம்பெறச் செய்திருந்தார். இத்தனைக்கும் அப்படம் விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் வெளியானதல்ல. சமூக வலைதளங்கள் மக்களிடையே பரவலாக பயன்பாட்டுக்கு வந்த காலகட்டத்தில் வெளியானதுதான். ஊழலில் இருந்து மக்கள் விடுபடுவது இருக்கட்டும், முதலில் இப்படியான மனநிலையில் இருந்து இயக்குநர் ஷங்கர் விடுபட வேண்டும். அதேபோல, மற்றொரு காட்சியில் கமல் ஆன்லைனில் ஊழல் தொடர்பாக நீண்....ட வகுப்பெடுத்து கொண்டிருப்பார். அப்போது கலரிங் அடித்த தலைமுடியுடன் வட சென்னையைச் சேர்ந்த மக்களின் மொழி மற்றும் உடல் பாவனைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இளைஞர்கள் சிலர், கமலுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கமென்ட் இடுவார். அதற்கு பதிலளிக்கும் கமல், ‘கழிப்பறை சுவர்ல எழுதிட்டு இருந்தவங்கல்லாம் ஃபேஸ்புக் சுவர்ல எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?’ என கேட்பார். இதன் அர்த்தம் என்ன? எளிய மக்களின் சமூக வலைதள பயன்பாடு உங்களை ஏன் அசசுறுத்துகிறது? அதே எளிய மக்கள் தைரியமாக சமூக ஊடகங்களில் பேசுவதால்தான் பல சமூக பிரச்சினைகள் வெளியே தெரிகின்றன. ஆன்லைன் அப்யூசர்களாக அவர்களை மட்டும் குறிப்பிட்டு தனித்து காட்சிப்படுத்தி புளங்காகிதம் அடைவது ஏன்? ‘இவங்கள்ளாம் வந்துட்டாங்களே’ என்ற மொழிநடையின் மாற்று முகம்தானே மேற்கண்ட வசனம்? ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஷங்கரின் வன்மம் புதிதல்ல. ‘முதல்வன்’ படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வரான அர்ஜுனிடம் ‘குப்பத்து பொறுக்கிப் பசங்க’ என்று சொல்வதைப் போல ஒரு வசனம் வைத்திருப்பார். குடிசைவாழ் மக்களை பொதுமைப்படுத்தி காழ்ப்புடன் வைக்கப்பட்ட வசனமாகவே இதைப் பார்க்கமுடிகிறது. பார்க்கில் குடித்து விட்டு துங்குபவர், ரோட்டில் குப்பை போடுபவர், எச்சில் துப்புபவர் இவர்களெல்லாம் தான் ஷங்கரின் படங்களில் ஆகப் பெரும் தேச துரோகிகள். அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது போன்ற ஆபத்தான கருத்தியலை ‘அந்நியன்’ போன்ற படங்கள் பேசின. இந்தியன் 2-விலும் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே, குப்பைகளை ஏற்றிச் செல்லும் தூய்மைப் பணியாளரைப் பார்த்து ஜெகன் நக்கலான தொனியுடன், ‘அய்யா துப்புரவு தொழிலாளரே, காசு வாங்குறீங்கள்ல’ என்று கேட்பார். இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு காட்சியில் இலவச திட்டங்களால் பயனடையும் மக்களையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் வகையில் வசனம் வைத்திருக்கிறார். மேடையிலும், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் சமூக நீதியை பேசும் கமல், இந்தக் காட்சிகளையும், வசனங்களையும் அனுமதித்ததுதான் ஆச்சர்யம். சென்னையின் பிரதான இடத்தில் இருக்கும் உயர் வகுப்பைச் சேர்நத பாபி சிம்ஹா, சிபிஐ அதிகாரியாகவும், கொத்தவால்சாவடி பகுதியில் இருக்கும் அனைவரும் பாடி பில்டர்கள், வர்மத்தை கூட சரியாக உச்சரிக்கத் தெரியாத ரவுடிகளாகவும் சித்தரிக்கும் அதீத புரிதலும், மறைமுக ஒடுக்குதலும் போகிற போக்கில் ஏற்றும் விஷ ஊசிகள். மார்க்கெட்டில் மீன் விற்கும் ஒரு பெண் கூட மீனின் வயிற்றில் கோலி குண்டுகளை நிரப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார். படம் பார்ப்பவர்களை முட்டாளாக நினைத்தால் மட்டுமே இப்படியான ஒரு காட்சியை வைப்பது சாத்தியம். மேலும், கிட்டத்தட்ட படத்தில் வரும் அரசு ஊழியர்கள் அனைவருமே லஞ்சம் வாங்குபவர்கள் தான்; மருந்துக்கு கூட ஒரே ஒரு ஊழியர் கூட நல்லவராக காட்டப்படவில்லை. பொதுமக்களோ, இயக்குநர்களோ, அரசியல்வாதிகளோ அனைவருமே ஒருகாலத்தில் புரிதல் இல்லாமல் தவறான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் வாசிப்பு, பரந்த பார்வை ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்ட பின் அவற்றை மாற்றிக் கொள்வதே இயல்பு. ஷங்கரின் இனி வரக்கூடிய படங்களிலாவது ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் மீதான அவரது பார்வை மாறும் என்று நம்பலாம். மாற வேண்டியது யாருடைய பார்வை? - ‘இந்தியன் 2’ படத்தை முன்வைத்து சில கேள்விகள்! | question to director shankar on kamal haasan starrer indian 2 movie explained - hindutamil.in
-
பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு - சர்வதேச அளவில் விமானசேவைகள் வங்கி சேவைகள் செயல் இழந்தன
நான் வேலை செய்யும் நிறுவனத்திலும் பல Services கள் இயங்காமல் உள்ளது. பல ஆயிரம் விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன இங்கு. போர், இயற்கை சீற்றம், பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றால் மட்டுமல்ல, தொழில் நுட்ப கோளாறால் கூட உலகம் முடக்கப்படக் கூடிய சூழல் ஒன்றில் வாழ்கின்றோம்.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
மனீஷா ஒரு நல்ல போராட்ட குணம் கொண்டவர். புற்றுநோய் வந்து, தகுந்த சிகிச்சை மேற்கொண்டு, அதற்கு எதிராக போராடி மீண்ட பெண்மணி. இவர் புற்றுநோய் பீடிக்கப்பட்ட காலத்தில் வெளி வந்த புகைப்படங்களில் தலை மொட்டையாக, மிகவும் மெலிந்து காணப்பட்டார் (அதனையும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்த கூட்டம் ஒன்று இருந்தது) அண்மையில் வெளிவந்த Heeramandi web Series இல் அட்டகாசமாக நடித்து இருந்தார்.
-
‘திரையரங்குகளுக்கு மொபைல் போன்களை கொண்டு வர தடை விதிக்க வேண்டும்’
வழக்கம் போல ஆதவனின் தவறான தலைப்பு. கைத் தொலைபேசியை தடை செய்யுமாறு கோரிக்கை தான் விடப்பட்டுள்ளது. அக் கோரிக்கை ஏற்கப்பட்டதாகவோ அல்லது, அதை நடைமுறைப்படுத்தப் போவதாகவோ உத்தியோக பூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கோரிக்கை அநேகமாக நிராகரிக்கப்படும். ஒரு மொக்குத்தனமான கோரிக்கை.
-
தாய்லாந்தின் தலைநகரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு- தேநீர் கோப்பையில் சயனைட்
பெருமளவு கடன் கொடுத்த பிரச்சனையில் கடன் கொடுத்த தம்பதியரில் உள்ள பெண்ணால் (Ms Chong), தேனீரில் சயனைட் கலக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி உட்பட செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் அந்த பெண்மணியும், அவரது கணவரும் சேர்ந்தே இறந்துள்ளனர்.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
அவர் ஏதோ ஒரு கிறக்கத்தில் எழுதியிருக்கின்றார் 😃
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
சங்கருக்கு சரக்கு தீர்ந்து போயிட்டுது. எழுத்தாளர் சுஜாதாவின் மறைவின் பின், அவர் எடுத்த படங்கள் எல்லாம் குப்பை. சிவாஜியில் தொடங்கிய சறுக்கல், எந்திரன் 1, ஐ (கொடுமையான படம்), எந்திரன் 2 என்று நீண்டு இன்று இந்தியன் 2 இல் முழுமையாக சறுக்கி விட்டார் என்று தெரிகின்றது. இடையில் நண்பன் படம் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் (அது இந்திப் படம் 3 idiots இன் remake என்பதால்) கமல் என்னும் நல்ல கலைஞன், அரசியல் கோமாளி ஆகிய பின், இன்னும் தன்னை மேதாவி என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார் என நினைக்கின்றேன். சமூக வலைத்தளங்களில் எல்லாம் இந்தப் படத்தை கழுவி கழுவி ஊற்றுகின்றார்கள். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இப்படி சினிமாவை, அரசியலை விமர்சிக்கின்றவர்களை, கக்கூஸில் முன்னர் கிறுக்கியவர்கள் என சங்கர் வசனங்கள் வைத்தமையால் சலங்கை கட்டி ஆடுகின்றார்கள். நான் இன்னும் இந்தியன் 2 இனைப் பார்க்கவில்லை. OTT இல் வந்தால் கூட அநேகமாக பார்க்க மாட்டேன் என நினைக்கின்றேன் கதையை நம்பாமல் பிரமாண்டம் என்ற பெயரில் பெரும் செலவில் எடுக்கப்படும் இப்படியான சினிமாக்கள் தோற்று, குறைந்த செலவில் கதையை மட்டும் நம்பி எடுக்கப்படும் கருடன், மஹாராஜா போன்ற படங்கள் வெல்லும் காலம் இது.
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்
ஆக, இங்கு இரு தரப்புமே சட்டத்துக்கு எதிராகத்தான் செய்கின்றனர். விசிட் வீசாவில் வந்தால் வேலை எடுக்கலாம் என்று தவறான, சட்டத்துக்கு முரணான, நம்பிக்கையை விதைத்து இங்கே வரவழைத்த உறவினர்கள் / நண்பர்களும் இதற்கு பொறுப்பு.
-
உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவர். எம் இனத்தில் எம்முடன் கூடப் பிறந்த ஒற்றுமையின்மை மற்றும் ஒத்துழையாமை போன்ற நோய்களால், மலினமான அரசியல் செய்து, சகோதர இயக்க படுகொலைகளின் முன்னோடியாக, தன் இயக்கத்தில் இருந்தவர்களையே போட்டுத் தள்ளி, பின்னர் அதே தன் இயக்கத்தாலேயே (டி.சிவராமின் திட்டத்தினால்) படுகொலை செய்யப்பட்டவர்.
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார்
நீங்கள் ஏன் இப்படி செய்கின்ற முதலாளிகள் பற்றி தகுந்த இடத்தில் முறையிடக் கூடாது? toll free in Ontario: 1-800-531-5551. மேலே உள்ள இலக்கத்துக்கு தொலைபேசியில் அழைத்துக் கூட உங்களால் முறையிட முடியும். அல்லது, CRA இன் காதிலும் போட முடியும்.
- துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு - T. கோபிசங்கர்
-
வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரினால் பல மில்லியன் டொலர் வருமானம்
தமிழ்வின்னுக்கு திரவத்தை அளக்கும் அலகும் மீற்றரில் இருக்கின்றது. மில்லி லீற்றருக்கும் மில்லி மீற்றருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இணையம் நடத்தினால் இப்படித் தான் நிகழும்.
-
கருடன் Review: சூரியின் ஆக்ஷன் அவதாரமும், உணர்வுபூர்வ அனுபவமும்!
நேற்று முந்தினம் இப் படத்தை பார்த்தேன். இவ் வருடத்தில் வந்த உருப்படியான படம். வெற்றி மாறன் எழுதிய கதை மீது இருந்த எதிர்ப்பை படம் ஈடு செய்தது. இப்படத்தில் தன்னை மிகவும் நப்பும் நண்பனை ஏமாற்றும் கதாபாத்திரத்தின் பெயர் - கருணா!.
-
முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி - யாழில் சம்பவம்
இங்கு சில வருடங்களுக்கு முன், ஒரு தமிழ் இளம் பெண், கடலில் (இங்கு நாம் பெரும் ஏரிகளை கடல் என்றே சொல்வோம்) குளித்துக் கொண்டு இருக்கும் போது, ஒரு கூரான தடி, தொண்டையில் குத்தி, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
-
சம்பந்தர் காலமானார்
இது தேவையற்ற செருகலாகவே நான் எடுத்துக் கொள்கின்றேன். அத்துடன் நான் இந்த தளத்தின் உரிமையாளரும் அல்ல. ஒரு போதும் என் கருத்துக்கு வரும் பின்னூட்டங்களை நான் எதிர்வாதமாக எடுத்துக் கொள்வது இல்லை. அவை எதிர்வினைகள் மட்டுமே. நன்றி
-
உத்தரப் பிரதேச ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழப்பு
ஒரு பக்கம் மதுவால் இறக்கின்றனர், இன்னொரு பக்கம் மதத்தால் இறக்கின்றனர்.
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்களின் வாழ்வின் முக முக்கிய மூன்று காலகட்டங்களிலும் அரசியல் செய்தவர். இந்த மூன்று வெவ்வேறு காலகட்டங்களிலும் அவர் பெற்ற அனுபவங்களீன் அளவு, தென்னாசியாவில் எவரும் பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த அனுபவங்களினூடாக அவர் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க செய்த காத்திரமான முயற்சிகள் என்ன? பூச்சியம். வெறுமனே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சந்திப்பதும், கால காலமாக சந்திரிக்கா, சரத் பொன்சேக்கா, மகிந்த, மைத்திரி, ரணில் என சிங்கள இனவாதத் தலைவர்களை நம்பியதும், ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக் கூடாது, அப்படி கிடைப்பது தம் பிராந்திய நலன்களுக்கு எதிரானது என காரியமாற்றும் இந்தியாவை நம்பியதும் தவிர உருப்படியான எந்த விடயத்தை இந்த பழுத்த, தமிழ் அரசியல்வாதி ஆற்றியிருக்கின்றார்? மக்கள் மயப்படுத்திய போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிகழ்வு ஏதேனும் இந்த 40 வருடங்களில் செய்து இருக்கின்றாரா? தானும் ஏமாந்து, தமிழ் மக்களயும் வாக்குறுதிகளால் ஏமாற்றியதைத் தவிர என்ன செய்து இருக்கின்றார்? முதுமையில் தள்ளாடிய போதும், தன் பதவியில் இருந்து இறங்காமல் கால விரயம் செய்தவர். ஆகக் குறைந்த தான் பிரதி நிதித்துவம் செய்யும் திருகோணமலையில் நிகழும் சிங்கள மயமாக்கலுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் தன் எம் பி பதவியில் மட்டும் குறியாக நின்றவர். இவர் மிதவாத தலைவர் அல்ல. தன் நலன்களை மட்டுமே முன்னெடுத்த பிரமுகர். அவர் அரசியல் ரீதியில் கண்டிப்பாக கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவர். அப்படியான விமர்சகர்களை நோக்கி 'நீ என்ன புடுங்கினாய் அவரை விமர்சிக்க' என்று கேட்பவர்கள், ஆரோக்கியமான விமர்சனங்களை விரும்பாத கூட்டத்தினை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். அதே நேரம், அவர் சாவினை கொண்டாட்டமாக கருதுவதும், பட்டாசு கொளுத்தி கொண்ஂடாடுகின்றவர்களை போற்றுவதும் அரசியல் நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனமான செயல்கள் மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டிய செயல்கள். அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும். டொட்.
-
சம்பந்தர் காலமானார்
அமைதி வழி அரசியல் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உருப்படியாக எதையும் பெற்றுக் கொடுக்க முடியாத தோற்றுப்போன அரசியல்வாதியாக 91 வயது வரை வாழ்ந்து தன் வாழ்நாள் கனவான எம் பி யாகவே சாக வேண்டும் என்பதை மட்டுமே நிறைவேற்றிக் கொண்ட ஒருவராக விடைபெற்றார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஈழபிரியன் அண்ணா
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
எழுத்தாளர் இரா.முருகவேள் தன் முகநூலில் எழுதியது... // ‘ஏழை மக்கள் உடல் வலிக்காகக் குடிக்கிறார்கள். அவர்களுக்குக் குறைந்த விலையில் பாதுகாப்பான சாராயமும் கள்ளும் அரசே தர வேண்டும்' என்ற வாதம் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. உடல் வலி தாங்க முடியாத அளவுக்கு மக்கள் உழைக்கிறார்கள் என்றால், அவர்கள் உழைப்பின் கடுமையைக் குறைக்க வேண்டும். உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு வேலை நேரம், ஊதியம், நிம்மதியாகத் தூங்க ஓரளவு வசதியான வாழ்விடம் இவைதான் அரசு செய்ய வேண்டியவை. மக்கள் வலிக்காகக் குடிக்கத் தொடங்கி அது பழக்கமாகி குடிக்கு அடிமையாகி ஐம்பது வயதில் உழைக்கத் தகுதியற்றவர்களாக உடைந்துபோகிறார்கள். இந்த வாழ்நிலையில் எந்தச் சாராயத்தைக் கொடுத்தாலும் இதுதான் நடக்கும். குறைந்த விலை சரக்கு என்பது குறுக்கு வழி. உதிரிப் பாட்டாளி வர்க்கம் ஈடுபடும் கடின உடலுழைப்பு பணிகள் அன்றாடக் கூலிப் பணிகளாக உள்ளன. அரசு வரிகளுக்குள் வருவதில்லை. எனவே பெரும் நிறுவனங்களும் இப்படிப்பட்ட பணிப்பாதுகாப்பு இல்லாத உழைப்பில் மக்களை ஈடுபடுத்திவருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியமான பகுதி, இதுபோன்ற உழைப்பை நம்பியுள்ளது. இவர்களுக்காக அரசுக் கண்காணிப்பு, வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு உள்ளே வராத கள்ளச் சாராயம் போன்றவை கண்டும் காணாமலும் விடப்படுகின்றன. கறுப்புப் பணம் என்பது போல இது கணக்கில் வராத உழைப்பு. இந்த மக்களின் உயிருக்கு பத்து லட்சம்தான் விலை. இதோடு கணக்குத் தீர்க்கவே முதலாளித்துவ அரசுகள் முயலும். குறைந்த விலை, பாதுகாப்பான சாராயம் என்ற அவர்கள் வாதத்தில் சிக்கினால் நாம் சாராயக் கம்பெனிகளின் விற்பனைப் பிரதிநிதிகள் ஆவோம்.//
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வாருங்கள் சுண்டல்! நீண்ட காலத்தின் பின் மீண்டும் யாழ் வந்த உங்களை வரவேற்கின்றேன்.
-
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி.
இலங்கையில், முக்கியமாக தமிழர் தாயகத்தில், ஒரு காலத்தில் ஒம்பது என்றும் உஸ் என்றும் மிகவும் கொச்சையாக அழைக்கப்பட்டு, சமூகத்தில் இருந்து விலத்தப்பட்டு, முக்கியமாக மோசமான பாலியல் ரீதியிலான வன்முறைக்குள்ளாகும் சமூகமாக, தமக்குள் கூனிக் குறுகி இருந்த இந்த திருநங்கைகளும், திருநம்பிகளும் இன்று தம்மை இன்னார் தான் என்று இனம்காட்டி, மூன்றாம் பாலினத்தினராக தலை நிமிர்ந்து சமூகத்தின் முன் நிற்கின்றனர். மிகவும் பாரட்டப்பட வேண்டிய, சமத்துவத்தை நோக்கிய முயற்சி!
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
வளவன், நான் இது தொடர்பாக தமிழ் மீனவர்களைக் குறை கூறியுள்ளேனா? இலங்கை, இந்திய, மற்றும் தமிழக அரசுகள் இந்த பிரச்சனையை தீர்க்க காத்திரமான செயற்பாடு எதையும் செய்வதில்லை. அத்துடன் திரை மறைவில் இதனை ஊக்குவிக்கவும் செய்கின்றனர். இந்த நிலையை தோற்றுவிக்க காரணம் என்னவென்று பெரிதாக ஆராயக் கூடத் தேவையில்லை. எப்படியாவது தமிழக மீன் கொள்ளையர்களையும் எம் தாயக மீனவர்களையும் மோதல் நிலையிலேயே வைத்து இருப்பது அவர்களிற்கு தேவையானது. இதன் மூலம் தமிழகத்துடனான தாயக மக்களின் உறவில் சில ஆழமான கீறல்களை உருவாக்கி கொள்வது அவர்களுக்கு பல விதங்களில் அனுகூலமாக அமைகின்றது. இந்த நிலையைத் தான் அவர்கள் விரும்புகின்றனர். அந்த நிலையைத் தான் நான் கொடுமையான கால மாற்றம் என்று எழுதியுள்ளேன். நன்றி
-
இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு
15 வருடங்களில் காலம் எப்படி மாறி விட்டது! எம் கடல்பரப்புகளில் எம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிர்களையும் பறிப்பதில் முன்னுக்கு நின்ற இலங்கை கடற்படை இன்று வாழ்வாதாரத்தை காக்கின்றவர்களாக எம் மீனவர்களால் போற்றப்படும் ஒரு காலத்தில் நாம் வந்து நிற்கின்றோம். 15 ஆண்டுகளுக்கு முன் உடலில் குண்டைக் கட்டி தற்கொடை தாக்குதல் மூலம் நூற்றுக்கணக்கான கடற்படை சிப்பாய்களை தமிழ் கடல் பரப்புகளில் இருந்து அகற்றிய அதே இனம் இன்று கடற்படை சிப்பாயின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவுக்கும் நிலையில் வந்து நிற்கின்றது. சிங்களமும், இந்தியமும், இவர்களுக்கு எடுபிடிகளாக இருக்கும் டக்ளஸ் போன்ற தமிழ் அரசியல்வாதிகளும் இந்த 'இந்திய மீனவக் கொள்ளையர்களின்' அத்துமீறல்களை கட்டுப்படுத்த காத்திரமான செயல்களை செய்யாமல், திரைமறைவில் ஊக்குவிப்பதும் இதே நிலையை தோற்றுவிப்பதற்காகத்தான். காலம் எவ்வளவு கொடுமையானது.
-
ஆண் பாம்புடன் சேராமலேயே 14 குட்டிகளை ஈன்ற பெண் பாம்பு - எப்படி சாத்தியம்?
Serena Williams என்று பெயர் மாற்றினால் என்ன நடக்கும்?