Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி அர்ச்சனை செய்கின்றவர்கள் அப்படியே செய்து கொண்டு தான் இருப்பார்கள். ஈற்றில் அவர்களை எவரும் ஐந்து சதத்துக்கும் கணக்கெடுக்காமல் விட்டு விட ஒரு ஓரத்தில் இருந்து புலம்பி புலம்பி பின் ஓய்ந்து விடுவார்கள்.
  2. இலங்கை முஸ்லிம்கள் யோகாவை இன்னும் ஹராம் என நினைத்துக் கொண்டு இருப்பவர்கள். சவூதி கூட யோகா வகுப்புகள் மீதான தடையை எடுத்த பின்னும் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அதை ஹராம் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். சவூதி, எகிப்து ஆகியன யோகா மீதான தடையை எடுத்ததுடன், அதை ஊக்குவிக்கவும் செய்கின்றன. இலங்கை சோனகர்கள் ஒரு புதினமான இனத்தினர்!
  3. கடவுளை மட்டுமே நம்பினால், கைவிடப்படுவார்!
  4. ஒரு அரசுக்கு இருக்கும் பொறுப்பு, தன் ஆட்சிக்குட்பட்ட நிலத்தில், குற்றங்களை குறைப்பது. தமிழக அரசு இந்த விடயத்தில் பொதுவாகவே மெத்தனமாகவே நடந்து கொள்கின்றது. கள்ளச்சாராய விடயத்தில் மட்டுமல்ல, ரவுடிகளால் பெருகும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தை விட மெத்தனமாகவே உள்ளது. கள்ளச்சாராயம் விடயத்தில், மக்களுக்கும் அறிவும் வேண்டும். கண்ணுக்கு முன் எத்தனை பேர் இவ்வாறு அ நியாயமாக கொத்து கொத்தாக இறந்தாலும் சிலர் திருந்துவதில்லை. இந்த விடயத்தில் பிரேமலதா சொல்வது மிகவும் நியாயமானது. இப்படி இறப்பவர்களுக்கு இழப்பீடு என்று காசைக் கொடுத்தால், அது ஊக்குவிப்பாகவே அமையும்.
  5. இந்தச் செய்தி சொல்லப்பட்ட விதம், தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் எண்ணிக்கையை, பிரசன்னத்தை குறைக்கின்றனர் என்ற விதத்தில் அமைந்து இருக்கின்றது. ஆனால் அரசு செய்வது, சின்ன சின்ன இராணுவ முகாம்களை மூடி, பெரிய இராணுவ முகாம்களுடன் இணைப்பதும், நிர்வகிப்பதை இலகுவாக்க சில முகாம்களை மாற்றி அமைப்பதும் தான்.
  6. தமிழர்களுக்கு எந்த தீர்வும் வழங்க கூடாது என்று எதிர்த்தும் நிற்கும் இதே பெளத்த சங்கங்கள், பீடங்கள் தான் பால்சமனிலை மற்றும், LGBTQ+ சமூகத்துக்கு சாதகமான சட்ட திருத்தங்களுக்கும் எதிராக நிற்கின்றது. வலதுசாரிகள், நாசிகளின் கொள்கைகளை / ஹிட்லரை ஆதரிப்பவர்கள், மத அடிப்படைவாதிகள், மத சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள், இனவாதிகள், ஆச்சார பூபதிகள், சாதிமான்கள் எல்லாரும் ஒரே அணியில் தான் எப்போதும் ஒன்று சேர்வார்கள்.
  7. இது தமிழக அரசு தானே மது விற்கும் TASMAC கடையில் வாங்கி மது குடித்தவர்கள் அல்லவே இவர்கள். சந்திக்கு சந்தி TASMAC கடைகள் இருந்தும், கள்ளச் சாராயம் விற்கும் இடத்தில் வாங்கிக் குடித்தவர்கள் இவர்கள். அனேகமாக பொலிசுக்கு மாமூல் கொடுத்து இந்த் வியாபாரத்தை தொடர்ந்து நடாத்தி இருப்பார்கள். எம் ஊர்களில் இதுக்குப் பெயர் கசிப்பு, அங்கு கள்ளச்சாராயம்.
  8. வீரப்பையனுக்கு மனமார்ந்த நன்றி! உங்கள் நல்ல மனசு மேலும் உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்க வாழ்த்துகின்றேன்.
  9. இந்த சாதனைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய அப்பா யானையைப் பற்றி ஒரு சொல் கூட இல்லை! என்ன உலகமடா இது 😄
  10. துமிலனுக்கும் அவரது அப்பா மூனா வுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்! ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தந்தை.
  11. வித்தியாசமான, ஆழமான பார்வை. சில விடயங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருப்பினும் நீங்கள் ஆழ அலசி இருப்பது நன்றாக உள்ளது. மேலும் மேலும் எழுதுங்கள்
  12. அடடா...ஒரு சொல்லைத் தவற விட்டமையால் சொல்ல வந்த விடயத்தையே தலைகீழாக எழுதியிருக்கின்றேன். நமக்கு இன்னும் பயிற்சி தேவை போல இருக்கு. நன்றி ரசோ!
  13. கடந்த மாதம் நெருங்கிய உறவில் தமிழ் பெண் ஒருவரின் வளைகாப்பு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அங்கு அவர்களை வாழ்த்த வந்த தமிழ் தம்பதிகளில் ஒரு தம்பதி பெண்-பெண் தம்பதி. அத் தம்பதியுடன் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஏனைய தமிழர்கள் வெகு இயல்பாக உரையாடிக் கொண்டு இருந்தது மட்டுமன்றி, கர்ப்பிணிக்கு காப்பு போடவும் விட்டனர்.
  14. முதலில் மன்னிப்பு என்று விட்டு, பின் நான் எழுதியதை தப்பித்தல் என்கின்றீகள். நான் ஊகத்தின் அடிப்படையில் எல்லா விடயங்களுக்கும் பதிலளிக்க முடியாது என்ற அடிப்படையில் தான் உங்களிற்கு பதில் எழுதியிருந்தேன். ஆனால் அதை தப்பித்தல் என்கின்றீர்கள். இதில் கேட்ட கேள்விக்கு என் பதில்: ஓம், நான் ஆதரிக்கின்றேன். முக்கியமாக கனடாவில் இவ்வாறான தம்பதியினர் தத்தெடுக்கும் விடயத்துக்கு ஆதரவழிக்கின்றேன். ஏனெனில் ஒரு குழந்தையை தத்தெடுப்பது இங்கு வெகு கடினமான ஒரு Process . பல விடயங்களை சீர் தூக்கிப் பார்த்தே தத்தெடுக்கும் அனுமதியை Child and Family Services வழங்குவார்கள். எனவே இந்த முறைமையினூடாக அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் போது, அதை நான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
  15. ஒரு விடயம் இங்கு புலம் , நிலம் ஆகிய சொற்களை வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தி வருகின்றீர்கள் என்பதை காண முடிகின்றது. புலம் என்றால் நிலம் மற்றும் நாம் வாழ்ந்த நாடு என்று பொருள்படும். அதனால் தான் புலம் - பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்றோம். "புலத்தில் உள்ளவர்களும் நிலத்தில் உள்ளவர்களும்" என குறிப்பிடும் போது இரண்டும் ஒரே தரப்பினரைத்தான் குறிப்பிடப்படுகின்றது. https://ta.wiktionary.org/wiki/புலம் ஏற்கனவே யாழிலும் இது தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது என் புரிதல் தவறேன்றால் விளக்கவும்.
  16. உதாரணத்துக்கு என் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் நான் தத்துக் கொடுக்கும் நிலை வரின் அது நானும் மனைவியும் அகால மரணம் அடைந்து இருந்தால் மாத்திரமே சாத்தியமாகி இருக்கும். ஆனால் அப்படி ஆகவில்லை. எனவே அப்படி தத்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும் போது நான் முடிவெடுக்க வேண்டி வரும் என்பதற்கு ஊகத்தின் அடிப்படையில் எப்படி நான் பதில் தருவது? கேள்வியை சற்று விளக்கி கேட்டால் நல்லது
  17. தங்க வசதி மட்டுமல்ல வாழ்வையே தந்த நாட்டின் எல்லாவற்றையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எமக்கு பிடிக்காத விடயங்களை எதிர்த்து எம் கருத்தை முன்வைக்கலாம், அவற்றில் இருந்து தனிப்பட விலகி இருக்கலாம், ஏன் எதிராக்ல் போராட்டங்களைக் கூட செய்யலாம். ஆனால் எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, பலர் ஏற்றுக் கொண்டு சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தினரை அழித்தொழிக்க வேண்டும் என்பது எந்த விதமான நியாயம்? தனக்கு ஒவ்வாத விடயம் எனில் அதை அழித்தொழிக்க வேண்டும் என்பது எந்தவகை அறம்? உங்களின் இரண்டாவது கேள்விக்கு என் பதில்: இலங்கை போன்ற இனமொன்றில் பிறந்த் காரணத்திற்காக உயிர் வாழும் உரிமை பறிக்கப்படும் தேசத்துக்கு அதே இனத்தில் பிறந்த ஒருவர் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நினைப்பதே மகா தவறு என்பேன்.
  18. இங்கே வருடத்தில் ஒரு முறை இப் பேரணி நடக்கும். இப் பேரணிகளை, பாடசாலைகளில் வைக்கப்படும் rainbow flags களை LGBTQ சமூகத்தை சக சமூகமாக அங்கீகரியுங்கள் என்பதை வலியுறுத்த, அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என காட்ட இவற்றை நடாத்துகின்றனர். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஓரினச்சேர்க்கை அவரவர் விருப்பு சம்பந்தமானது. எவராலும் திணிக்கப்பட முடியாது. Trend இனை பார்த்து ஒருவர் மாறினால், அவரைப் பார்த்து ஐயோ பாவம் என்று சொல்லிப் போட்டு கடந்து போகத்தான் முடியும். கபிதன் கூறியது வேறு, குமாரசாமி கூறியது வேறு. சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகத்தை அழிக்கப்பட வேண்டியவர்கள் என எழுவது எல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் வகைக்குள் வராது.
  19. கந்தையா அண்ணை, எனக்கு இரண்டு பிள்ளைகள், இங்கிருக்கும் ஓணாண்டி, விசுகு மற்றும் பலருக்கு தெரியும் நான் அவர்களுடன் போடும் கும்மாளம். ஆனால் என் மகிழ்ச்சிக்குரிய விடயங்கள் மட்டுமே எல்லாருக்கும் மகிழ்ச்சியை தரும் என நான் நம்பவில்லை. ஓரினச்சேர்க்கையாளர்கள் அவரவருக்கு தெரிந்த முறையில் மகிழ்வாக வாழ்கின்றனர்.
  20. சொந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் எதனையும் எழுத வேண்டும் என்றால், இங்கு எவரும் பரந்துபட்டு உரையாடவும் முடியாது. ஆணும் ஆணும், மற்றும் பெண்ணும் பெண்ணும் எப்படி உடலுறவு கொள்கின்றார்கள் என்பது ஒரு 15 வயது பிள்ளைக்கே இன்று தெரிந்திருக்கும் போது, உங்களுக்கு தெரியாது என்று சொல்கின்றீகள்! அதுவும் ஜேர்மனில் இருந்து கொண்டு! அல்லது ஆண் குறியும் பெண் குறியும் சம்பந்தப்பட்டால் மாத்திரமே அது உடலுறவு என நீங்கள் வரையறை செய்து வைத்துள்ளீர்கள் போல் உள்ளது.
  21. ஓரினச்சேர்க்கையாளர்கள் உடலுறவு கொள்ளும் போது இவை நடக்கவில்லை என்று யார் உங்களுக்கு சொன்னது? மாறாக, ஓரினச்சேர்க்கையாளர்களை அவர்களின் விருப்புக்கு எதிராக எதிர் பாலினத்தவர்களுடன் உடலுறவு கொள்ள செய்தால் தான் மேற்சொன்ன எதுவும் நிகழாது. இதெல்லாம் சாக்கு போக்குதானே? 1. ஓரினச்சேர்க்கையாளர்கள் மிகவும் குறைந்த விகிதமானோர். அவர்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாது விடின், மனித குலம் அழிந்து போகப் போவதில்லை. 2. ஓரினச்சேர்க்கையாளர்களும் adoption இப்போ மூலமும் வாடகை தாய் முறை மூலமும் பிள்ளைகளை பெற்றுக் கொள்கின்றனர். அத்துடன் சொந்த பிள்ளைகள், பேரக்குழந்தைகள் இல்லாவிட்டால் சந்தோசம் இல்லாமல் ஆகிவிடுமா? சட்ட ரீதியிலான அங்கீகாரத்தினை, பாடசாலைகளில் அவர்களுக்கான அங்கீகாரத்தையா trend நீங்கள் என்று சொல்கின்றீர்கள்?
  22. இதே குடும்ப அமைப்பு முறையில், பெண் துணையை ஆண் கொல்வதும், குழந்தைகள் மீதான வன்முறையும், குடும்ப வன்முறையும் (domestic violence) உள்ளது. அண்மையிலும் ஒன்ராரியோ மாகாணசபையில் இந்த domestic violence எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட சீர்திருத்தத்தை என்.டி.பி. கட்சியினர் கோரி அதை டக் போர்ட்டும் ஆதரித்து இருந்தார். ஆகவே குடும்ப அமைப்பு முறைதான் பாதுகாப்பானது என்றும், ஓரினச்சேர்க்கை பாதுகாப்பற்றது என்றும் கூற முடியாது இங்கு காண்பிக்கப்படும் அநேகமான விளம்பரங்களில், ஆண் - பெண் உறவைச் சார்ந்த குடும்பத்தையும், பிள்ளைகளையும் தான் காட்டுகின்றனர். நான் பார்த்த எந்த விளம்பரத்திலும் ஓரினச்சேர்க்கையாளர்களை காட்டவில்லை. இதே காரணங்களால் தான் நான் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கின்றேன். நாசிக்கள் போல், அவர்களை கொல்ல வேண்டும் என்றோ, விரட்டப்பட வேண்டும் என்றோ கூறவில்லை நீங்கள் கனடாவில் வாழ்வதாக ஒரு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள் என நினைக்கின்றேன். அங்கு இப்படியான ஓரினச்சேர்க்கையாளர்களை கண்டவுடன் எப்படி உங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள்? கடவுளே வந்தாலும் எதிர்ப்பவர், நிச்சயம் அவர்களைக் கண்டவுடன் சும்மா இருந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.
  23. இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளில் இருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் வந்து வாழ்கின்ற ஜேர்மன் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான உரிமைகளுக்கு மிகவும் வலுவாக சட்ட ரீதியிலான அங்கீகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹிட்லரின் நாசிகள் ஓரினச்சேர்க்கையாளர்களையும் கொன்று குவித்து இறுதியில் தோற்கடிக்கப்பட்டபின் (இரண்டாம் உலகப் போரின் பின்) இவர்களுக்கான உரிமைகள் வழங்குவதில் ஜேர்மனி முன்னனி வகிக்கின்றது ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு registered partnerships எனும் வகையில் 2001 இல் சட்ட ரீதியில் வழங்கிய ஜேர்மனி, பின்னர் 2017 இல் அவர்கள் குழந்தையை தத்தெடுக்கும் வகையில் மேலும் தளர்வுகளை கொண்டு வந்து ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு மேலும் மேலும் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள், அந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, அந்த நாட்டின் சட்டங்களை மதிக்காமல் அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்றும், அதாவது கொல்லப்பட்ட வேண்டும் என்றும் விரட்டப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றீர்கள். தனக்கு அபயம் அளித்த ஒரு நாட்டில் உள்ள, சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ள ஒரு சமூகத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கின்றீர்கள். இது தான் ஜேர்மன் நாட்டுக்கு நீங்கள் செய்யும் கைமாறு! நன்றி கெட்ட உலகம் இது.
  24. ஊக்குவிப்பது என்றால் எப்படி? அப்படி ஊக்குவிப்பது ஏன் தவறானது?
  25. அதனால் தான் சொன்னேன், காலம் தாழ்த்திய கோரிக்கை என்று. புலிகள் ஒபாமா சொன்னதைக் கேட்டு, அவ்வாறு செய்து இருந்தாலும் மகிந்த அரசும் இந்தியாவும் போரை நிறுத்தி இருக்காது. ஏனெனில் முற்று முழுதான வெற்றியை அடைய முடியும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு கிளிநொச்சி வீழ்ந்த பின், வன்னியில் ஒரு சிறு நிலப்பரப்புக்குள் புலிகள் சுற்றிவளைக்கப்பட்ட பின் ஏற்பட்டு இருந்தது. முக்கியமாக ஆனந்தபுர சமர் (மார்ச் 30, 2009) இன் போது புலிகளின் முக்கிய தளபதிகள் எல்லாம் கொல்லப்பட்ட பின் இந்த நம்பிக்கை அவர்களுக்கு 100 வீதம் ஏற்பட்டு இருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.