Everything posted by நிழலி
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இது வரைக்கும் வந்த முடிவுகளில் முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 112 இண்டியா கூட்டணி:92 தமிழகம் தி.மு.க. கூட்டணி:03 பா.ஜ.க. கூட்டணி: 01 ஏனையவை: 0 https://www.hindutamil.in/
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
அவர் எத்தனையாம் மனைவி என்று ஒருவரின தனிப்பட்ட வாழ்வை ஏன் எட்டிப் பார்பான்? உலகறிய சட்டப்படி திருமணம் செய்து வாழ்கின்றனர். அரசியல் என்று வரும் போது, இருவருக்கும் கொள்கை என்ற ஒன்று அறவே இல்லை. தாம் எந்தக் கூட்டணியில் இருக்கின்றோம் என்று கூட சரியாக தெரியாமல் உளறிக் கொட்டியவர்கள்.
-
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
இது இனவாத செயலா இல்லையா என தெரியாது, ஆனால் மாணவிகள் இவ்வாறு காதுகளை மூடிக் கொண்டு வரும் போதே பரீட்சை மண்டபத்தியே நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டும். அப்படி எடுக்காமல், பெறுபேறுகள் வரும் போது அதை வெளியிடாமல் இடை நிறுத்தம் செய்வது சரியான செயலாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பரீட்சை மண்டபத்திலேயே முஸ்லிம் ஆசிரியைகளைக் கொண்டு, காதுகளை மூடிக் கொண்டு வந்த மாணவிகளை சோதனை செய்து விட்டு அனுமதித்து இருந்தால் இந்த பிரச்சினை எழுந்திருக்காது. காதுகளை மூடிக் கொண்டு வந்த மாணவிகள் எல்லாரும் பரீட்சையில் களவு செய்யத்தான் அப்படி வந்தனர் எனச் சொல்வது இனவாத பேச்சாகவே கொள்ள வேண்டி இருக்கு.
-
Exit Poll 2024 results: பாஜக கூட்டணி 350+, இண்டியா கூட்டணி 130+ வெல்ல வாய்ப்பு!
மீண்டும் மோடி அறுதிப் பெரும்பான்மை யுடன் ஆட்சியமைக்க போகின்றார் போல் இருக்கிறது... தமிழகத்தின் exit poll முடிவுகள் எதிர்பார்த்த முடிவுகளைத் தான் கூறுகின்றன. வரும் செவ்வாய் எல்லாம் தெரிந்து விடும்.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இதில் நான் சற்று முரண்படுகின்றேன். சர்வதேசத்தின் அழுத்தத்தில் இவ்வாறு ஒரு தீர்வை ரணில் வழங்க முன்வந்திருந்தாலும், தென்னிலங்கையின் இனவாத சக்திகள் மகிந்தவின் பின்னாலும் விமல் வீரசிங்க போன்றவர்களின் பின்னாலும் அணி திரண்டு, எதிர்த்து தீர்வை கைவிட வைத்து இருக்கும். அரகலய அன்றே உருவாகி இருக்கும். கடும் இனவாத அரகலயவாக அது இருந்திருக்கும். அவ்வாறு நடந்து இருப்பின், சமாதானத்துக்கான அவா தமிழர்களிடம் மட்டுமே உள்ளது, சிங்களத்திடம் இல்லை என தெளிவாக காட்டி தமிழர்களின் அரசியல் பலம் அதிகரித்து இருக்கும். இப்படியான ஒரு நிலையை ஏற்படுத்தவே அன்ரன் பாலசிங்கம் அண்ணா தன்னளவில் முயன்றார் என நம்புகின்றேன்.
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
அன்று ஒரு நம்பிக்கை தரக்கூடிய,ஒழுக்கம் நிறைந்த தலைமை இருந்தது. என்ன நடந்தாலும் தலைவர் இருக்கின்றார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்பதை முற்றுமுழுதாக நம்பக் கூடிய சூழல் இருந்தது.. எனவே ஆசிரியர்களும் சரி, ஏனையவர்களும் சரி, தமிழ் தேசிய உணர்வை மேலும் வலுப்படுத்த தம்மாலான அனைத்தையும் செய்தனர். ஆனால் இன்று இருப்பவர்கள், தலைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத, ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூவாக மிஞ்சியிருக்கும் அரசியல்வாதிகள். இவர்களை நம்பி எவரும் பின்னால் போகப் போவதும் இல்லை, அவர்களை நம்பி இளையவர்களை தயார்படுத்தப் போவதும் இல்லை. சிங்களத்தை விட, இந்த தமிழ் அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசிய உணர்வு முன்னரைப் போல் கூர்மையடையக் கூடாது என்று நினைப்பவர்களாக இருப்பர். கூர்மையடைந்தால் தம் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்தவர்களாக மட்டுமன்றி, ஏற்கனவே போராட்ட காலத்தில் அப்படியான ஆபத்தை எதிர் நோக்கியவர்களாகவும் இருந்தவர்கள் எனபதால், இவர்கள் ஒரு போதும் தமிழ் தேசிய உணர்வை ஒரு கட்டத்துக்கு மேல் கூர்மையடைய விடமாட்டார்கள்.
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
உங்கள் கேள்வியை சரியாக விளங்கிக் கொண்டேனோ தெரியவில்லை. 2009 இன் பின் பிறந்த தலைமுறை மற்றும், அதற்கு 10 வருடங்களுக்கு முன் பிறந்தவர்களை பெற்ற தலைமுறையை நான் குறிப்பிட்டு இருந்தேன். நான் குறிப்பிடும் இத் தலைமுறையில் இருப்பவர்கள் இன்று 40 தொடக்கம் 55 வயதுக்குள் இருப்பார்கள். அதுவும் எம்மைப் போல் புலம்பெயராமல். அத்தனை அழிவுகளையும் நேரில் சந்தித்த தலைமுறை இவர்கள். இவர்களால் வளர்க்கப்படும் தலைமுறையினர் தான் இன்று பலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல், 'கேளிக்கைகளுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றவர்கள்.
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
இரத்தமும் உயிரும் கொடுத்த, கடும் இராணுவ மற்றும் தமிழ் கொலைக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் போராளிகளுக்கு அடைக்கலமும் உதவிகளும் புரிந்த, அப்பணிப்பு நிறைந்த போராட்டத்தை வளர்த்து எடுத்த ஒரு தலைமுறையால் தான் இன்றைய தலைமுறை பெற்று, வளர்த்து எடுக்கப்படுகின்றனர் என்பதையும் நினைவில் வைத்து இருங்கள். தம் தியாங்கள் வீணாகி மண்ணோடு மண்ணாகிப் போனதையும் பார்த்து வெறுத்த தலைமுறையும் அவர்களே /நாமே
-
சாமி சிறீ பாஞ்
அட்டகாசமான எழுத்து / மொழி நடையுடன் மீண்டும் வருகை தந்த பாஞ்ச் அண்ணாவை மனசார வாழ்த்தி வரவேற்கின்றேன். தொடர்ந்து இணைந்து இருங்கள்.
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
1. புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று நீங்களும், அரசியல் கட்டுரைகளை எழுதுகின்ற பலரும் கூட தொடர்ந்து தவறாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள். 2000 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த தேர்தலில் திருகோணமலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெல்லவில்லை. மட்டக்களப்பிலும் 2 பேர் மாத்திரமே தெரிவானார்கள். அதே போன்று, யாழ்ப்பாணத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஐ.தே,க. ஒரு இடத்தில் வென்றது. வவுனியாவில் 3 தமிழர்கள் மட்டுமே வென்று இருந்தனர். இந்த அரசியல் ரீதியிலான பாதக நிலையை உணர்ந்த கிழக்கிலங்கை புத்திசீவிகளும், கிழக்கு இலங்கை பத்திரிகையாளர்களும், 2001 இல் கிழக்கு பல்கலைகழகத்தில் கருத்தரங்கு ஒன்றை நடாத்தி (டி, சிவராம் தலைமை வகித்தார்), தமிழ் கட்சிகள் / தமிழ் இயக்கங்கள் கூட்டாக அணி திரண்டு ஒரு கூட்டணியாக நிற்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்துரைத்தனர். அதன் பின்னான தொடர்ச்சியான செயற்பாடுகளின் பின்னால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஏற்படுத்தி இருந்தனர். இவர்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி, இந்த கூட்டமைப்பில் இருப்பவர்களுக்கு இனி மரண தண்டனை கொடுக்க கூடாது என்று வாய்மூல உறுதிப்பாட்டை பெற்று இருந்தனர். இந்த உறுதிப்பாடை கொடுத்தவர்கள் கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலனும், கருணாவும் ஆகும். த.தே.கூ இன் அன்றைய தேவையை உணர்ந்தது புலிகள் அல்ல. அதே போன்று த.தே.கூ இன் உருவாக்கமும் அவர்களால் நிகழ்த்தப்படவில்லை. த.தே.கூ சந்தித்த முதல் தேர்தலில் புலிகளின் செல்வாக்கு அதிகம் இடம்பெற்று இருக்கவில்லை வேட்பாளார் தெரிவில் கூட அவர்கள் செல்வாக்கு செலுத்தாமல் இருந்தனர். பின்னர் தான், பேச்சுவார்த்தை காலத்தில் அவர்கள் த.தே. கூ இற்கு தமது ஆசிர்வாதத்தை பகிரங்கமாக தெரிவித்து இருந்ததுடன், வேட்பாளர் தெரிவு வரைக்கும் தம் அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர். ஒரு கட்டத்தில் விடுதலப் புலிகளின் அரசியல் கட்சி போன்றே த.தே.கூ வை அவர்கள் தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வந்தனர். தலைவர் த.தே,கூ இல் அங்கம் வகித்த தலைவர்களை வன்னிக்கு அழைத்து கைலாகு கொடுத்து வரவேற்று இருந்தார். இதில் தமிழ் மக்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து படுகொலை செய்த சுரேஸ் பிரேமச்சத்திரனுக்கு கைலாகு கொடுத்த கூத்து கூட நடந்து இருந்தது. 2. 2004 இன் பின் புலிகளின் இராணுவ அரசியலுக்கு சமாந்தரமாக த.தே.கூ 2009 வரைக்கும் செயற்பட்டு வந்தமையால், 2009 இல் புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு அது அரசியல் செய்வதற்கான பலத்தை இழந்து விட்டது. உறுதியான தீர்மானங்கள் எடுக்க கூட திறனற்ற தலைவர்களையும், மாவை, சம்பந்தன் போன்ற, விடுதலை இயக்கங்களுக்கு முன்னரான அரசியல் செய்து தோற்றுப் போன மூத்த தலைவர்களையும், இலங்கை / இந்திய இராணுவத்தினருடன் இணைந்து தமிழ் மக்களை படுகொலை செய்த டெலோ, ஈபி போன்ற அமைப்பின் தலைவர்களையும் கொண்ட த.தே,கூ எதையும் சாதித்து விடக் கூடிய அளவுக்கு திறனற்ற, அரசியல் தெளிவுள்ள ஒரு கூட்டணி யாக இருக்க வாய்ப்பில்லை. 2009 இன் பின் கையாலாகாத அரசியல்வாதிகள் மட்டும் தான் தமிழ் மக்களுக்கு மிச்சமிருக்கின்றனர். காத்திரமான அரசியல் செய்யக்கூடியவர்கள் ஒன்றில் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்கள், அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். என் பதிலில் இதற்கு புலிகள் மட்டுமே காரணம் என பொருள்பட எழுதியது என் தவறு. இதற்கு ஏனைய இயக்கங்களும், கருணா குழுவும் கூட காரணங்களாக உள்ளனர் என்பதையும் நான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இன்று இவ்வாறு எச்சங்களாக மிச்சம் இருப்பவர்கள் மூலம் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்று நானும் நம்பவில்லை, தமிழ் மக்களும் இனி நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே அவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே வழி, இருப்பதை தக்கவைத்துக் கொண்டு முடிந்தவரை தம்மை முன்னேற்றுவதே. @விசுகு,தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும், ஒன்று கூடல்களுக்கு அதிகமாகவும் செல்கின்றனர் என அங்கலாய்த்து இருந்தார். இதுக்கு காரணமும் இதுவே. தமிழ் தேசியம் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்கின்றவர்களின் கையாலாகாத்தனத்தையும், செயற்திறனற்ற நடவடிக்கைகளையும், வெற்று முழக்கங்களையும், வெற்றியளிக்காத முயற்சிகளையும் முன்னெடுக்கின்றவார்களின் நிகழ்வுகளுக்கு செல்வதை விட, அவற்றை தவிப்பது தமக்கு நன்மை பயக்கும் என நம்புவதானாலேயே. நன்றி போகின்ற போக்கில் இப்படியெல்லாம் ஜோக் அடிக்க கூடாது சசி.😆
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
My son / daughter is studying at National school என்று சொல்வதில் அவ்வளவு பெருமை அவர்களுக்கு.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
மாகாணசபைகளின் அதிகாரத்தை படிப்படியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கின்றேன். சிங்களப் பகுதிகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. மாகாணத்தின் அதிகாரமும், மத்திய அரசின் அதிகாரமும் சிங்களவர்களின் கைகளில் தான் என்பதால்/ ஆனால், வடக்கு கிழக்கில் அப்படியான நிலை இல்லை என்பதுடன், இவ்வாறு தேசிய பாடசாலையானால் அப் பாடசாலைகள் மேலும் இன ரீதியிலான ஒதுக்கல்களுக்குள்ளாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இந்த மேய்ப்பார்கள் எவரும் இல்லாமல் போனதுக்கு நாமும் ஒரு காரணம். ஏக பிரதி நிதித்துவத்தை வலியுறுத்தி, அப்படி ஏக பிரதிநிதியாக மாறுவதற்கு செய்த அரசியல் படுகொலைகளை நியாயப்படுத்தி அதை சரி என்று ஏற்றுக் கொண்டவர்கள் நாம், இன்று அதன் விளைவை பார்த்து விட்டு, கவலைப்படுகின்றோம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
ரஞ்சித், நீங்கள் அவர்களை துரோகிகளாக பார்க்கின்றீர்கள் என்று நேரிடையாக எழுதவில்லை. ஆனால் இந்த ஒப்பீட்டின் மூலம் என்னத்தை சொல்ல வருகின்றீர்கள்? ஒரு கூட்டம் தேசியம் சார்ந்ததாகவும், இன்னொரு கூட்டம் ஆக்கிரமிப்பு படையை ஆதரிக்கும் கூட்டமாகவும் நீங்கள் வசதியாக கணித்துள்ளீர்கள். இவ்வாறு ஆக்கிரமிக்கும் சிங்கள படையை ஆதரிக்கின்றவர்களைத் தான் நாம் ஒரு காலத்தில் துரோகிகள் என்று பெயரிட்டு, மண்டையிலும் போட்டு, அதற்கு ஆராவாரமாக ஆதரவும் கொடுத்து இருந்தோம். இல்லை இந்த ஒப்பீட்டின் மூலம் நான் அவர்களை துரோகிகளாக எழுதவில்லை என்று நீங்கள் சொன்னால், நான் அதை நம்பும் அதே வேளை, நான் உங்கள் எழுத்தின் மூலம் உணர்ந்து கொண்டது அதைத் தான் என்பதை மறுக்கவில்லை. நிற்க, இந்த இரண்டும் வெவ்வேறு கூட்டம் என்பதே என்னைப் பொறுத்தவரைக்கும் தவறான கண்ணோட்டம். இரண்டிலும் கலந்து கொண்டவர்களும், கலந்து கொள்ள விரும்பியும் போக முடியாமல் போனவர்களும் இருக்க கூடிய சந்தர்ப்பம் தான் அதிகம். வெசாக் பந்தலை பார்க்க போனவர்களை ஆதரிப்பவர்கள் இலங்கையர்களாக இணைவோம், அடையாளம் துறப்போம், தேசியம் பேசோம் என்று கூவுபவர்கள் வரிசையில் வைத்து பார்பது உங்களுக்கு சரியாக இருக்கலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இல்லை.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்: தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம், பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம், பின் போராட போன சக தமிழ் இயக்கங்களை துரோகிகள் என்றோம், பின் சக போராளிகளையே துரோகிகள் என்றோம். இன்று போரைத் தாங்கி, எல்லாவற்றையும் எதிர்கொண்ட தமிழ் பொது மக்களையும் துரோகிகள் என சொல்லத் தொடங்கப் போகின்றோம்.. ஈற்றில்முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எம்மை நாமே துரோகி என அழைத்து எம் கழுத்தை நாமே அறுத்து எம்மை கொல்வோம்.
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
எத்தனை கோடி ஆயுதங்கள் கொடுத்தாலும், அவற்றை இயக்கவும், நிலங்களை தக்க வைக்கவும் ஆளணி வேண்டும். உக்ரைன் போர் இன்னும் ஒரு வருடத்துக்கு நீடிப்பின் உக்ரைன் இராணுவத்தின் எண்ணிக்கையில் பெரும் சரிவு வந்துவிடும். இந்தப் பிரச்சினை ரஷ்யாவுக்கு ஏற்பட்டாலும் கூலிக்கு ஏனைய நாடுகளில் இருந்து ஆளணியை கொண்டு வந்து போரை நடத்தும்.
-
இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
ராஜீவ் படுகொலை நிகழ்ந்து இருக்காவிடினும், ராஜீவ் கொலைப் படையினரை அனுப்பி இருக்காவிடினும் கூட, இந்தியா ஈழப் போராட்டத்தை நசுக்கித் தான் இருக்கும். ராஜீவ் கொலை ஒரு சாட்டாக, வாப்பாக போய்விட்டது.
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
Turbulence இனால் ஒருவர் பலியானார் எனும் செய்தியை இன்று தான் முதன் முதலாக கேள்விப்படுகின்றேன். இனி பிளேனில் போகும் போதும் ஹெல்மெட் போட்டுக் கொண்டு போக வேண்டும்.
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
அண்ணனின் இழப்பால் வாடும் வாதவூரானுக்கும், குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
தனக்கு தனக்கு என்றால், சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்.
-
“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”-ஜோ பைடன்
இலங்கையில் நிகழ்ந்தது / நுட்பமாக இன்றும் நடந்து கொண்டு இருப்பது இனப்படுகொலை அல்ல என்று பாலஸ்தீனர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இன்றுவரைக்கும் சொல்லிக் கொண்டு இருப்பது எந்தளவுக்கு சுய நலமானதோ, பக்கச்சார்பானதோ அதே அளவுக்குத் தான் இதுவும்.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
கோத்தா, மகிந்த ஆகியோர் பதவியில் இருக்கும் போது இறப்பு ஏற்பட்டிருந்தாலும் உலக நாடுகளின் தலைவர்கள் இரஙகலைத் தெரிவித்து இருப்பர். கிளாலி படுகொலைகள், ஜேவிபி காலத்தில் சிங்களவர்கள் மீது செய்த படுகொலைகள் எல்லாவற்றையும் தெரிந்தும் பிரேமதாசா கொல்லப்பட்ட போது உலக தலைவர்கள் இப்படித் தான் நடந்து கொண்டனர்.