Everything posted by நிழலி
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
Butcher of Tehran என்று அழைக்கபட்டவர். 98 இல் 5000 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை கொன்று குவித்தமையால் இப் பெயர் வந்தது. ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளில் இருந்து கொடூரச் சிறை வரைக்கும் தண்டனையாக கொடுக்கும் நடைமுறையை உருவாக்கியவர்.
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
தொடர்பாடல் சாதனங்களை / தொழினுட்ப த்தை இஸ்ரேல் அல்லது CIA போன்ற உளவு அமைப்புகள் Hack செய்து ஆபத்தான வழிமுறைகளை வழங்கி இருக்கலாம். எதிர்காலத்தில் சாரதி இல்லாமல் தானியஙகும் கார்களிற்கு கூட இப்படியான ஆபத்துகள் ஏற்படும்.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
மகிழ்ச்சி! ஈரானில் இனியாவது முல்லாக்களின் அராஜகம் ஒழிந்து மக்கள் முக்கியமாக பெண்கள் அடிப்படை சுதந்திரத்தையாவது அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் இந்த மகிழ்ச்சி நீடிக்கும். ரணிலின் கல்லோயா திட்டம் இதனால் பாதிக்கப்பட்டால் இன்னும் அதிக மகிழ்ச்சி!
-
யாழில் நாய் இறைச்சி கொத்து.
செய்தியில் எந்த ஒரு இடத்திலும் நாய் இறைச்சி என்று குறிப்பிடப்படவில்லை, ஆனால் ஆதவன் தலைப்பில் வேண்டும் என்றே நாயிறைச்சி என்று போட்டுள்ளது. இணைப்பைத் தாருங்கள். நம்பகமான தளமா என சரிபார்க்கவும். ஏனெனில் அண்மையில் இங்கு கரப்பத்தான் கிடந்ததாக படம் எடுத்தது ஒரு உணவு விடுதியில், ஆனால் வேண்டும் என்றே இன்னொரு கடையின் பெயரை போட்டு முகனூலில் வதந்தி பரப்பி இருந்தார்கள்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
பொது சனாதிபதி வேட்பாளர் தொடர்பான கட்டுரை என்பதால் இங்கு இணைப்பை தருகின்றேன்.
- புலிகளும் எலிகளும்
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
அவர்கள் உடைத்து இருக்க வேண்டியது கையை அல்ல!
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
மகிழ்ச்சி
-
முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
அவரை பத்து கிலோ மீட்டர் ஊர்வலமாக நடத்திக் கொண்டு, அதை காணொளி எடுத்து எல்லாருக்கும் காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஜேவிபி ஐ.எம்.எப் இனை முற்றாகத் தவிர்ப்பதாக எங்கும் சொல்லவில்லை. அவர்கள் சொல்வது எல்லாம், தாம் பதவிக்கு வந்தால், ஐ,எம்.எப் உடனான பேச்சுவார்த்தையை / கடன் வாங்குவதற்கான நிபந்தனைகளை மீண்டு புதிதாக ஆரம்பிப்போம் என்பது மாத்திரமே. ஒரு வேளை, பதவிக்கு வந்தால், தாம் ஒரு போதும், அவர்களை எதிர்க்கவில்லை என்று மக்களுக்கு சொல்லலாம்.
-
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
இவர் அன்றில் இருந்து இன்று வரைக்கும் மாறாமல் அப்படியே இருக்கின்றார். கடும் புலி எதிர்ப்பு / கடும் தமிழ் தேசிய எதிர்ப்பு என்பவை மட்டுமே இவரது கொள்கைகள். ஒரு காலத்தில் சந்திரிகா அம்மையாரின் சேலை நுனியில் தொங்கிக் கொண்டு புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார். இன்று அனுரவின் ஷேர்ட்டில் தொங்குகின்றார். காற்று எந்தப்பக்கம் பலமாக அடிக்கப் போகுதோ என்று தானே கணித்து, அதில் தொங்கிக் கொண்டு தமிழ் தேசியத்தை எதிர்த்து சீவியம் நடத்தும் ஒரு சீவன் இவர்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நேற்று வாழ்வில் முதல் தடவையாக ஒரு பெண்ணினது வளைகாப்பு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். என் நெருங்கிய உறவு ஒருவரது மருமகள் என்பதால் சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க முடியவில்லை. இந்தியாவில் நடப்பது போன்று வித விதமாக வண்ணமயமான காப்புகளை கர்ப்பிணிக்கு ஏனைய பெண்கள் (மட்டும்) அணிவித்து கொண்டாடினனர். இதில் லைட்டா மனசில் ஒரு வெறுப்பை உணர்ந்தாலும் அங்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு இளம் ஈழத் தமிழ் பெண் தம்பதியையும் (lesbian couple) நிகழ்வுக்கு அழைத்து இருந்தனர். அவர்களும் எல்லாரையும் போல, ஏனைய நண்பர்கள் உறவினர்களுடன் சந்தோசமாக நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயத்தில் எம் இளம் சமூகத்தில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளமை மனசுக்கு திருப்தியாக இருந்தது.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
//``தாழ்த்தப்பட்டவர் என்கிற சொல் இழிசொல் இல்லை என்றாலும் பொதுச் சமூகத்தின் பார்வையில் `தாழ்ந்த’ என்கிற அர்த்தம் தொனிக்கும் சொல்லாகவே புரிந்துகொள்ளப்படும் என்பதால் `அட்டவணை சாதியினர்’ என்றே குறிப்பிடலாம்” என்கிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன்.// என நீங்கள் தந்த இணைப்பில் உள்ளது. இதே போன்ற புரிதலைத் தான் நானும் கொண்டிருக்கின்றேன் என்பதால் அச் சொல்லை கண்டவுடன் கேள்வி எனக்கு எழுந்தது.
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்...? மாட்டுறைச்சி சாப்பிடுகின்ற இந்துக்களை சாதியத்துடன் தொடர்பு படுத்தியதாக இது அமைந்திருக்கு என உணர்கின்றேன்.
-
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!
ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை. நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
-
மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் 'குணா குகை' நிகழ்வை தழுவிய இந்த மலையாளப் படம் எப்படி இருக்கிறது?
IPTV யில் Disney Hotstar ரில் வெளியாகி இருந்தமையால் நேற்றிரவு இப் படத்தின் தரமான பதிப்பை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் குடியும் கொண்டாட்டமுமாக காட்சிகள் தொடங்கினாலும், குணா குகைக்கு இளைஞர்கள் சென்றபின் படத்தின் tone னே மாறி, நல்லதொரு திரை அனுபவத்தை முடிவு வரை க்கும் கொடுத்தது. இத் திரைப்படம், நாளாந்தம் சிறு சிறு வேலைகள் செய்து உழைக்கும் சாதாரண குடும்பத்து இளைஞர்களின் நட்பின் உச்சத்தை பேசுவதால் தான் எளிதாக பலரின் மனசை கவர்கின்றது என நினைக்கிறேன். நல்ல படம். வாய்ப்பிருப்பின் பாருங்கள்.
-
யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
வாழ்த்துக்கள்! 33 வருடங்களுக்கு மேலாக, பிரிந்து இருவரும் தனித் தனிச் சிறையில் இருந்தும், இவர்களுக்கிடையிலான காதல் இன்னும் மாறவில்லை என்பதை அறிய ஆச்சரியமாகவும், சந்தோசமாகவும் உள்ளது.
-
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் - பாலியல் துஸ்பிரயோகம்
புலி நீக்கிய அரசியல் செய்ய சொல்கின்றவர்கள் விரும்புகின்ற மாற்றங்கள் தான் இப்படியான மனித விரோத சம்பவங்கள். இதைத் தான் சிங்களமும் விரும்புகின்றது. ஒரு இனத்தின் மனித விழுமியங்களை மழுங்கடித்து விட்டால், பண்பாட்டை அருவருக்கத்தக்கதாக மாற்றி விட்டால், அந்த இனம் எக்காலத்திலும் மீண்டு வராது என்பது அவர்களுக்கு தெரியும்.
-
க.வே.பாலகுமாரன்அவர்களின் பேசுவோம் போரிடுவோம் நூல் வெளியீட்டு நிகழ்வு -பெல்சியம்.
இன் நூலை இணையம் மூலம் பெற்றுக் கொள்ள வசதி இருப்பின் அறியத்தரவும். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நூலாக இது இருக்கும் என நம்புகின்றேன்.
-
மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1
இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல், மற்றும் ஒற்றுமை பற்றிய பிரக்ஞை உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு தொடர். பகிர்வுக்கு நன்றி இந்த மாற்றத்தை புரிந்து கொள்வது மிக அவசியம்.
-
உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
வழக்கம் போன்று பொறுப்பற்ற முறையில் தமிழ் ஊடகம், முக்கியமாக தினக்குரல் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளது. அஸ்ராசெனிகா உலகளவில் கொவிட் தடுப்பூசிக்கான தேவை குறைவடைந்து செல்வதனாலும், சந்தையில் வேறு பல கொவிட் தடுப்பூசிகள் இருப்பதனாலும், தன் தடுப்பூசியை திரும்பப் பெறுவதுடன், தயாரிப்பதையும் நிறுத்துவதாகவே அறிவித்துள்ளது. தன் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுவதால், திரும்பப் பெறுவதாக அந் நிறுவனம்அறிவிக்கவில்லை. மேலும்: May 7 (Reuters) - AstraZeneca (AZN.L), opens new tab said on Tuesday it had initiated the worldwide withdrawal of its COVID-19 vaccine due to a "surplus of available updated vaccines" since the pandemic. The company also said it would proceed to withdraw the vaccine Vaxzevria's marketing authorizations within Europe. "As multiple, variant COVID-19 vaccines have since been developed there is a surplus of available updated vaccines," the company said, adding that this had led to a decline in demand for Vaxzevria, which is no longer being manufactured or supplied. https://www.reuters.com/business/healthcare-pharmaceuticals/astrazeneca-withdraw-covid-vaccine-worldwide-telegraph-reports-2024-05-07/ LondonCNN — AstraZeneca is withdrawing its highly successful coronavirus vaccine, citing the availability of a plethora of new shots that has led to a decline in demand. The vaccine — called Vaxzevria and developed in partnership with the University of Oxford — has been one of the main Covid-19 vaccines worldwide, with more than 3 billion doses supplied since the first was administered in the United Kingdom on January 4, 2021. But the vaccine has not generated revenue for AstraZeneca since April 2023, the company said. https://www.cnn.com/2024/05/08/business/astrazeneca-covid-vaccine-withdrawal/index.html https://www.bbc.com/news/health-68977026
-
யாழில் உணவகத்தில் புழு!!
இதே வாழைத் தோட்டத்தில் 90 ஆரம்பத்தில் நானும் வாழ்ந்து இருக்கின்றேன். அதே சாக்குக் கடையில் சாப்பிட்டும் இருக்கின்றேன். அன்று என் வாயில் கடிபட்டது சிலந்தி அல்லது புழுவா??? நான் இவ்வளவு நாளும் அது எலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..😀
-
ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
ச்சை... என் மனசு கண்ட மாதிரி எல்லாம் யோசிக்குது...
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
யாழில் தாங்க முடியாத வெக்கை என்று என் நெருங்கிய உறவுகள் சொல்லி அனுப்பி வைத்த வெப்பநிலையைக் காட்டும் படங்கள்
-
கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
கனடா மிரர் தவறாக மொழி திரித்துள்ளது. இப்பொழுது தான் கைது செய்துள்ளனர். இனி, இவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, ஆதாரங்களை சமர்பித்து வழக்கு தொடங்கி முடிக்க சில வருடங்கள் செல்லும். அதன் பின் தான் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டனாவா இல்லையா என முடிவு தெரியும்.