Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. இப்பதான் கதையை வாசிக்க தொடங்கியிருக்கின்றேன்.. இப்படி கஜுவையும் பாதாமையும் சாப்பிட்டால், உரச உரச பற்றும் தீ புரியாணியை வெளுத்துக் கட்டச் சொல்லும் தானே..
  2. நல்ல சுவாரசியமான ஒரு பயணக் கட்டுரை நில்மினி. நீங்கள் 2017 இல் உங்களது ஒரு பதிலில் மடகஸ்கார் பற்றி குறிப்பிட்டு இருந்ததைக் கண்டவுடன், அது பற்றி எழுத முடியுமா என நான் கேட்டது நினைவு. வெளினாட்டு பயணிகள் பலரை கவரும் நாடாகவும், மாணிக்க கற்கள் விளையும் பூமியுமாக இருப்பினும் இவர்கள் ஏன் 500 வருடங்களுக்கு முற்பட்ட வாழ்க்கையைப் போன்று வறுமையாக வாழ்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. அதுவும் 13 நாட்களுக்கு அமெரிக்க டொலர் 12000 அறவிடும் விடுதிகளை கொண்ட ஒரு நாட்டில்.
  3. ஒரே மூச்சில் 3, 4 பாகங்களை வாசித்து விட்டேன். பொதுவாக எனக்கு வரலாறு பிடித்தமான ஒன்று அல்ல. வரலாறு சார்ந்த புனைவு நாவல்களைக் கூட விரும்பி வாசிப்பதில்லை. ஆயினும், ஜஸ்ரினது எழுத்து நடையும், அவர் சொல்ல வரும் மையக் கருத்தை (இன்றைய ரஷ்யா - உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடர்பான) நோக்கிய துல்லியமான நகர்வும் வாசிப்பை சுவாரசியமாக்கியுள்ளன.
  4. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய நுணாவிலான், அகஸ்தியன் ஆகியோருக்கும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழ் சிறிக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்,
  5. தொடருங்கள் தமிழ் சிறி. ஒரு டவுட்டு, காலுக்கும் கியூட்டெக்ஸ் போடுகின்றீர்களா?
  6. இலங்கை ரெலிகொம்மில் மிக உயர்ந்த நிலை அதிகாரியாக இருந்த என் நண்பன் (வேலையில் இவன் கார் கதவை திறக்க என்றே ஒருவர் இருந்தார் என்பதை கண்கூடாக கண்டனான்), குடும்பத்துடன் இங்கு வந்து விட்டான். ஏன் என்று கேட்டதுக்கு, இங்கு பிச்சை எடுத்தாலும் பாதுகாப்பாக, முக்கியமாக தனி மனித சுதந்திரத்துடன் வாழலாம் என்கின்றான். Millennium m IT இல் உயர் பதவியில் வேலை செய்கின்ற, சிங்களப் பெண்ணை மணந்த என் தமிழ் நண்பன், தன் மகனையும் மகளையும் இங்கு படிக்க அனுப்பி வைத்து செட்டிலாக்கி விட என் மூலம் முயல்கின்றான் என் திட்டமும் எண்ணமும் அச்சொட்டாக இது தான் கொழும்பு என்று (யாழ்ப்பாணம் அல்லவே அல்ல) இருந்த எண்ணம், கொஞ்சம் நகர்ந்து சென்னை என்று ஆகியுள்ளது இப்ப.
  7. ....ஆனாலும் இந்த வரிகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதே...
  8. சுவையான எழுத்து நடையில் சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள் தமிழ் சிறி. நான் கேட்க நினைக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான். அவர் தன் காதலிக்கு கொடுத்த முத்தங்களில் இலங்கை யில் இருக்கும் போது கொடுத்த முத்தமா, அல்லது ஜேர்மனி வந்த பின் கொடுக்கும் முத்தமா சுவையாக உள்ளது .. என்று ஒருக்கால் கேட்டுச் சொல்ல முடியுமா?
  9. கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா
  11. சுவி அண்ணாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
  12. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா. நான் யாழில் இணைந்த வுடன் தனிமடல் போட்டு வரவேற்ற முதலாவது உறவு நீங்கள்!
  13. ஆண்டு 1955. Zavalichi எனும் உக்ரைனில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இரவு 11 மணி. வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டு இருந்தது. குளிர்காலத்தின் ஆரம்பகாலம் இது. நீண்ட தூரத்தில் இருக்கும் மாதா கோயிலின் மணி அடித்து 11 என்பதை காட்டியது. இரவை இருள் மூடி இருந்தது. கிராமத்தில் உள்ள எல்லாரும் எப்பவோ உறங்க போயிருந்தனர். புலோவிச் தன் நரைச்ச தாடியினை மெதுவாக தடவி விட்டுக் கொண்டு தன் கபினில் மாட்டியிருந்த அட்டவணையை மீண்டும் ஒருமுறை பார்த்து இனி அடுத்த 6 மணித்தியாலங்களுக்கு எந்த ரயிலும் வரப்போவதில்லை என்பதை நிச்சயத்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவி சினிக்கா சமைத்து வைத்து இருக்கும் சூப்பை குடித்து விட்டு 5 மணித்தியாலங்கள் உறங்கலாம் என நினைத்து மதியம் பாதி குடித்து மிச்சம் வைத்து இருந்த சுருட்டின் முனையில் மீண்டும் நெருப்பை பற்ற வைத்தார். புலோவிச் இந்த கிராமத்தில் இருக்கும் சிறு ரயில் நிலையத்தின் சிக்னலுக்கு பொறுப்பானவர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் இராணுவத்தில் இருந்து பணியாற்றி விட்டு ஒய்வு பெற்று விட்டு இப்ப இதற்கு பொறுப்பாக இருக்கின்றார். அவரது 4 மகன்களும் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர். மிகவும் இயல்பான வாழ்க்கை. ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழும் மனிதர் அவர். வீட்டுக்கு செல்வதற்கு நடக்க தொடங்குகின்றார். ரயில் நிலையத்தில் இருந்து நான்கு அடி தூரம் மட்டுமே நடந்து இருப்பார். தூரத்தில் ஒரு ரயில் வரும் ஓசை கேட்கின்றது. இந்த நேரத்தில் எந்த ஒரு ரயிலும் வருவதற்கு வாய்ப்பே இல்லையே என்று தன் கண்களை சுருக்கிக் கொண்டு மீண்டும் பார்க்கின்றார். அந்த ரயில் மெதுவாக ஆனால் சீராக வந்து கொண்டு இருந்தது. அதன் சக்கரங்கள் ரயில் தண்டவாளத்தில் பட்டும் படமாலும் ஒரு தாள கதியில் தவழ்ந்து கொண்டு வருவது போல இருந்தது. தான் சிக்னல் கொடுக்கவில்லையே... எப்படி இந்த ரயில் சிக்னலையும் அலட்சியப்படுத்திக் கொண்டு இப்படி வருகின்றது என அங்கலாய்ப்புடன் அதனையே உற்றுப் பார்க்கின்றார். ரயில் பழமையான ரயில். நீராவி இயந்திரம் மூலம் இயக்கப்படும் ரயில். அதன் எஞ்சின் ஏதோ ஒரு விருந்தில் சிறப்பு நடனம் ஆட வந்திருக்கும் மங்கையின் புன் முறுவல போன்று இருந்தது. அதன் அருகே மெல்லிய புகை மூட்டம் பனியின் சாரல்களுக்கு மத்தியிலும் தெளிவாக தெரிந்தது. புலோவிச் தன் 10 வருட சமிக்ஞை பொறுப்பாளர் காலத்தில் ஒரு போதுமே இந்த ரயிலை கண்டதில்லை. இப்படி பழைய ரயிலை ரஷ்சியஅரசு பயன்படுத்துவதும் இல்லை. அவர் தன் கண்களை மேலும் சுருக்கி ரயிலையே பார்த்துக் கொண்டு நிற்கின்றார். அது அவர் நிற்கும் இடத்தினை கடக்க தொடங்குகின்றது. அப்பொழுதுதான் அதை கவனிக்கின்றார். அதன் எஞ்சினில் ரயிலை செலுத்துவதற்கு எவரும் இல்லை. எஞ்சின் கண்ணாடியில் எந்த முகத்தையும் காணவில்லை. புலோவிச்சின் தோலில் இருந்து அவரது வெண்ணிற முடிகள் மெல்ல கிளர்ந்து எழுகின்றன. ரயிலின் பெட்டிகளிலும் எவரும் இல்லை போன்றே தோன்றுகின்றது. அதன் அனைத்து சிவப்பு நிற யன்னல்களும் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பெட்டியின் நுழைவாயில்களும் கறுப்பு நிற கதவுகளால் சாத்தப்பட்டு இருந்தன. புகைபோக்கியுனூடாக திரவ நுரை வெளியாகிக் கொண்டு இருந்தது. இறந்த காலம் ஒன்றை தனக்குள் புதைத்துக் கொண்டு அந்த ரயில் செல்வதாக புலோவிச்சுக்கு தோன்றியது ரயில் கடக்கும் போது, மாதா கோயிலின் மெழகுவர்த்தி வாசனையை ஒத்த வாசனை காற்றில் பரப்பிக் கொண்டு கடந்து கொண்டிருந்தது. வெண்ணிற அன்னம் ஒன்று தன் சிறகுகளை படபடவென அடிக்கும் ஓசையுடன் ரயில் அவரை விட்டு கடந்து செல்கின்றது. அதன் கடைசிப் பெட்டியும் கடந்து சென்ற பின் தண்டவாளத்தில் இருந்து நெடிய தூரம் சென்று மறையும் வரைக்கும் அவர் பார்த்துக் கொண்டு நின்றார். அடுத்த நாள் காலையில் தொலைபேசி மூலம் ஏனைய ரயில் நிலையங்களில் விசாரிக்கும் போது, அப்படி ஒரு ரயில் தம் நிலையங்களை கடந்து செல்லவே இல்லை என அறிந்தவுடன் அவர் செய்த முதல் வேலை, வேலையை விட்டு விலகியதே. (ரயில் இன்னும் பயணம் செய்யும்) பின் குறிப்பு: இக் கதை 'உண்மையாக நடந்தது' என்று சொல்லப்படுகின்ற ஒரு மர்மமான கதையை / செய்தியை ஒட்டி (unresolved mystery), அதைத் தழுவி புனையப்படுகின்றது.... இந்தக் கதையை கண்டிப்பாக உங்களில் சிலர் அறிந்து இருப்பீர்கள். அப்படி அறிந்து இருப்பின் இப்போதைக்கு அதை சொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
  14. பாஞ்ச் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாதவூரானுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  15. இதை வைத்து இலங்கை மற்றும் இந்தியாவில் யாழிணையத்தை தடை செய்யாமல் விட்டால் சந்தோசம்.
  16. தொடருங்கோ நெடுக்கு.... உங்கள் எழுத்து நடை வாசிக்க கொஞ்சம் கடினமாக எனக்கு இருப்பினும் தொடர்ந்து வாசிக்கின்றேன்... இடையிடையே படங்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
  17. கொஞ்ச நேரத்துக்கு முன் கொழும்பில் வசிக்கும் அம்மாவுக்கு தொலைபேசினேன். நான்: "அம்மா .. முழு நாட்டுக்கும் ஊரடங்கு போட்டுள்ளார்கள்... கவனம் வெளியே போக வேண்டாம்" அம்மா: "ஓமடா.. கொழும்பில் இந்தியன் ஆமி வந்து நிற்குதாம்..அதுதான் ஊரடங்கு போட்டுள்ளார்கள்" என்னத்தைச் சொல்ல...
  18. பிந்திக் கிடைத்த தகவல்களின் படி பாரதப் பிரதமர் மோடியும் அதி உயர்ரக போர் விமானம் ஒன்றை தானே செலுத்தியபடி இலங்கை விரைகின்றார். இலங்கைக்கு உடனடியாக உதவுவதில் தன்னுடன் இணையுமாறு ராகுலை அவர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இலங்கையில் திராவிட மாடலை அமுல்படுத்தினால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
  19. இந்தியா, சீனா, ரஷ்சியா மட்டுமல்ல, எந்த நாடுகளிடமும் நாம் எதனையும் கேட்டுப் பெற முடியாது தான் நிதர்சனம். ஆனால் இதில் சீனாவும் ரஷ்சியாவும் இலங்கைக்கு செய்த உதவிகளை விட (ஆயுத உதவி மற்றும் இலங்கையை ஐ.நாவில் காப்பாற்றுவது) மேற்கு எமக்கு செய்தது தான் மிகப் பெரும் துரோகம். எம் போராட்ட வலுவை முற்றாகச் சிதைத்ததில் மேற்கினது பங்களிப்பு முக்கியமாக அமெரிக்காவினது பங்களிப்பு இந்தியாவின் பங்களிப்புக்கு நிகரானது. எனக்கு தெரிந்து இருவரைத் விர மனித உயிர்களின் இழப்பை எவரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் இந்தப் போரை ஆரம்பிக்க கூடிய தவிர்க்க முடியாத நிலைக்கு ரஷியாவை கொண்டு நிறுத்திய காரணங்களை நியாயப்படுத்துகின்றதை தான் அவதானிக்க முடிகின்றது. இன்று வெள்ளைத் தோலும் நீல நிறக் கண்களும் கொண்ட மக்களின் இறப்புக்காக இங்கு கவலைப்படும் பலர் அமெரிக்காவின் ஆதரவுடன் சவூதி யேமனில் நடாத்தும் படுகொலைகளுக்கு கவலைப்படுவதை காண முடியுது இல்லை. அதே போன்று அன்று அலெப்போ நகர் மீது 4 வருடங்கள் முற்றுகையிட்டு இறுதியில் குளோரின் குண்டுகள் உட்பட இரசாயன ஆயுதங்களை ரஷியா பயன்படுத்தி சிரிய மக்களை கொல்லும் போதும் எவரும் யாழில் கவலைப்பட்டு கண்ணீர் விட்டு, கட்டுரைகள் எழுதியதையும் அவதானிக்கவில்லை.
  20. பிரபா, எங்கள் நிலையைக் எவருக்கு ஒப்பிட்டு காட்டி நியாயம் கேட்க போகின்றீர்கள்? மேற்குலகிடமா? எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.