Jump to content

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Posts

    14878
  • Joined

  • Days Won

    166

Everything posted by நிழலி

  1. மேற்குலகின் இரட்டை வேடம் என்பது ஒரு காரணமாயினும், இவ் இரு நாடுகள் உட்பட பல நாடுகளால் பயங்கரவாதிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் ஆளும் நாட்டுக்கு இவர்கள் செல்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?
  2. தாம் நேரிடையாக மக்களிடம் 20 ஆம் திகதி படத்துக்கு போக வேண்டாம், ஹர்த்தால் அனுஷ்டியுங்கோ எனக் கோரிக்கை வைத்தால் எடுபடாது என்று படத்தை வினியோகம் செய்கின்றவர்களையும், திரையிடும் தியேட்டர்களையும் விட்டு விட்டு, படத்தில் கதா நாயகனாக நடித்தவரிற்கு கடிதம் எழுதி இருக்கின்றார்கள் (அக் கடிதத்தை விஜய் பார்க்க கூடிய விதத்தில் சேர்த்தும் இருக்க மாட்டார்கள்). இது தான் கடைந்தெடுத்த வங்குரோத்து அரசியல் என்பது. இரு கேள்விகள்: விக்கினேஸ்வரன் இப்பவும் ஜஸ்ரிஸ் ஆக இருக்கின்றாரா? அவரது கையொப்பத்தில் Justice என்று இன்னும் போட்டுள்ளது. அத்துடன் இவர் தானே முல்லைத்தீவு நீதிபதி ஆங்கிலம் விளங்காதபடியால் Attorney General சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டார் என்று சொன்னவர்?
  3. இந்த உளுத்துப் போன ஹர்த்தால் போராட்டத்தால் சிங்கள அரசுக்கோ அல்லது சிங்களத்தின் பொருளாதாரத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பங்குச் சந்தையில் எந்த பங்குகளிலும் சரிவு இதனால் ஏற்படப் போவதில்லை, இலங்கையில் இருக்கும் வெளி நாட்டு தூதரகங்கள் இதை ஒரு பொருட்டாகக் கூட கருதப் போவதில்லை. பாதிக்கப்படப் போவது தமிழ் பகுதிகளின் பொருளாதாரமும், வியாபாரமும், பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகளும் தான். வருடத்துக்கு நாலு, ஐந்து ஹர்த்தால் என்று, எந்த பலனையும் தராத போராட்டத்தை செய்வதால் நன்மை அடைவது, எதையும் புதிதாக சிந்திக்காமல், அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கும் அரைவேக்காட்டு தமிழ் தேசிய கட்சிகளும் அவை சார்ந்த அமைப்புகளும் மட்டும் தான். இப்படியாவது தம் இருப்பை காட்டுகின்றன.
  4. அருமையான, காலத்துக்கு தேவையான ஒரு பகிர்வு விசுகு. நன்றி காசாவில் நடந்து கொண்டிருப்பது முள்ளிவாய்க்காலின் Version 2 உலகம் முழுதும் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுக் கொண்ட பாலஸ்தீனர்களுக்கு எதிராகவே இவ்வளவுபடுகொலைகளை ஏவி விட்டாலும் எவரும் தடுக்க மாட்டார்கள் எனும் போது எமக்கு மட்டும் எப்படி தடுத்திருப்பார்கள் என்ற கேள்வி தான் எழுகின்றது.
  5. கண்டிப்பாக இந்த நடைமுறையை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணுக்கு முன் நிகழும் பகல் கொள்ளை இது.
  6. இந்த திரியின் தலைப்பை 'இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு' என்று மாற்றியுள்ளேன்
  7. என்றாவது முஸ்லிம் அகதிகளை முஸ்லிம் நாடுகள் / அரபு நாடுகள் வரவேற்று உள்ளனரா? இல்லை. ஆனால், இந்த முஸ்லிம்களை மேற்குலகு நோக்கி அகதிகளாக போவதற்கு தூண்டுவார்கள். மேற்கு நாடுகளும் இவர்களை வரவேற்று அடைக்கலம் கொடுக்கும். அப்படி, மேற்கில் குடியேறிய பின், இதே அரபு நாடுகள் பள்ளிவாசல்களை அமைக்வும், இஸ்லாமிய அமைப்புகளை உருவாக்கவும் (NGO), இஸ்லாமிய கல்வி நிலையங்களை கட்டியமைக்கவும் பெருமளவு நிதி உதவி செய்யும். இவ்வாறுதான் அவர்களின் (இஸ்லாமியர்களின்) கனவான, உலகெங்கும் தம் மதத்தை பரப்பி, உலகில் அதிக சனத்தொகை கூடிய இனமாக / மதமாக மாற்றுகின்றனரோ என்ற எண்ணம் எனக்கு எழுவது உண்டு (conquering the world) இதை நீங்கள் குடியேறி இருக்கும் நாடுகளில் கூட அவதானித்திருப்பீர்கள்.
  8. இந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் அவித்த செய்தி போல உள்ளது. ஏனெனில் BBC, CNN, Al Jazeera போன்ற தளங்களிலும் கனடிய பிரதான ஊடகங்களிலும் மீட்புப் பற்றி எந்த செய்தியும் வரவில்லை.
  9. ஏற்றுமதி “சேர் அடுத்த patient ஐ வரச்சொல்லவோ எண்டு கேட்டிட்டு , 13 நம்பர் வாங்கோ ” எண்டு கிளினிக்கில நிக்கிற பிள்ளை கூப்பிட ரெண்டு பேர் வந்திச்சினம். என்ன பிரச்சினை ? “ நாரி நோகுது “ எத்தினை நாளா? “ கொஞ்ச நாளா” நாரி மட்டும் தானா இல்லாட்டி வேற எங்கேயும் நோகுதா? “ இல்லை சில நேரம் கழுத்தும் நோகும், போன கிழமை முழங்காலும் நொந்தது” . கால் விறைக்குதா? ஓம் அதோட தலையும் விறைக்குது. சோதிச்சுப்பாத்து ஒண்டும் இல்லை எண்டு சொல்லீட்டு , பதினெட்டு வயசு தானே படிக்கிறீங்களா எண்டு கேக்க, “ இல்லை “ வேலை செய்யிறீங்களா? “ இல்லை “ அப்ப என்ன செய்யிறீங்க “ சும்மா தான் இருக்கிறன் “ ……….. அப்ப குறிக்கிட்டது ஒரு நாப்பது வயது “ இல்லை அவ வெளீல போகப்போறா , கலியாணம் முற்றாகீட்டுது, அதுதான் போக முதல் எல்லாம் ஒருக்காப் பாத்தால் நல்லம் எண்டு வந்தனாங்கள், ஒருக்கா எல்லா scan உம் பண்ணிப் பாக்கலாமா” எண்டு கேட்டா , vehicle full service போட்டுத்தாறீங்களா எண்ட மாதிரி. அப்ப மகளுக்கு நோ எல்லாம் இல்லையா ? “ இல்லை எனக்குத் தான் இடைக்கிடை நாரி நோகிறது. இவ இப்ப வெளீல போனாப் பிறகு தேவை எண்டு இப்ப மேக்கப், கேக் ஐசிங், தையல் எல்லாம் படிக்கிறா , ஒரு நாள் நாரி நோகுது எண்டு சொன்னவள் அது தான் போக முதல் எல்லாத்தையும் காட்டீட்டால் நல்லம் எண்டு வந்தனாங்கள். அவையும் சொன்னவை வரமுதல் உங்கயே எல்லாத்தையும் காட்டீட்டு வரச்சொல்லி, ஒரு பிரச்சினையும் இல்லைத் தானே …..” எண்டு அம்மா சொன்னதுக்கு நான் தலையை ஆட்ட மேக்கப்பை தனக்கும் அம்மாக்கும் போட்டுப் பழகிக் கொண்டிருந்த மகள் சந்தோசமா வெளிக்கிட்டுப் போனா. எல்லா patient உம் பாத்து முடிய , “சேர் எனக்கு கலியாணம்” எண்டு கிளினிக்கில வேலை செய்யிற பிள்ளை வந்து சொல்லிச்சுது. எப்ப ? வாற மாசம் எங்க ? இந்தியாவில ஏன் அங்க? அவருக்கு இங்க வரேலாதாம் போய் எவ்வளவு காலம்? கொஞ்சக் காலம் எந்த இடம்? …. விசாரிச்சதோ ? “தூரத்துச் சொந்தக்காருக்குப் பக்கத்துவீட்டுக் காரருக்க தெரிஞ்ச ஆக்களாம், அவரோட நேர கதைச்சதாம் , வயசு கூடத்தான் ஆனாலும் எப்பிடியும் எனக்கு வெளீல போனாக்காணும், நான் இண்டையோட வேலையால நிக்கப் போறன்” எண்டு சொன்ன பிள்ளைக்கு வாழ்த்துச் சொல்லி எனக்கு வரேலாது இந்தாரும் என்டை gift எண்டு குடுத்த envelope ஐ வாங்கிக் கொண்டு சந்தோசமா வெளிக்கிட்டிச்சிது அந்தப் பிள்ளை. அதுகள் போனாப்பிறகும் இடைக்கிடை இப்பிடிக் கன வாகனங்கள் service க்கு வந்து போய்க்கொண்டிருந்திச்சுது ஒவ்வொரு மாசமும். ரெண்டு மாசம் கழிச்சு இந்தியாவுக்கு கலியாணத்துக்குப் போன பிள்ளை திருப்பியும் வேலைக்கு வந்திச்சுது. “ஆ எப்பிடி இருக்கிறீர், கலியாணம் எப்பிடி, அவர் எங்க “? எண்டு ஆக்களுக்கு முன்னால கேட்ட கேள்விக்கு விடை உடன வரேல்லை, ஆனாலும் பிறகு வந்து , “ Sir இதுதான் photo எல்லாம் வடிவா நடந்தது. போய் sponsor க்கு அலுவல் பாக்கிறராராம் அநேமா மூண்டு மாசத்தில கூப்பிடுவன் எண்டவர் “ எண்டு நம்பிக்கையோட சொலலீட்டுப் போச்சுது. நாலு மாசம் கழிச்சு; “என்ன மாதிரி போற அலுவல் எண்டு கேக்க” , “ அவருக்கு இப்ப தான் பாஸ்போட் வந்ததாம் இனித்தான் கூப்பிடுவாராம் “ . அப்ப இந்தியாவுக்கு கள்ளப் பாஸ்போட்டிலயோ வந்தவர் எண்ட கேள்விக்கு அந்தப் பிள்ளைக்கு விடை தெரியேல்லை. ஆறு மாசம் கழிச்சு; “ Sir ஏதும் நல்ல வேலை இருந்தாச் சொல்லுங்கோ சம்பளம் இங்க காணாது , கலியாண வீட்டுக் கடனையே கட்டேலாமல் நிக்கிறம் அதோட போறதும் இன்னும் சரிவரேல்லை ” எண்டிச்சுது அந்தப் பிள்ளை. அதுக்கு மேல ஒண்டும் கேக்கேல்லை. ஒரு வருசத்தால; “ Sir அது சரிவரேல்லை இது அக்கான்டை மாமான்டை சம்மந்த பகுதிக்காரர் கொண்டந்தவராம் அடுத்த மாசம் இந்தியாவுக்குப் போய் அப்பிடியே போயிடுவன்” எண்டு இந்த முறை நம்பிக்கையா good bye எண்டு அதே பிள்ளை சொல்லீட்டுப் போச்சுது, பதியப்படாமல் நடந்த முதல் கலியாணம் முறிக்காமலே முறிஞ்சது ஒருத்தருக்கும் தெரியாத மட்டும் நல்லம் எண்டு நெச்சபடி நான் வீட்டை வெளிக்கிட்டன். இந்த முறை கலியாணத்துக்குப் போனது ஒரு மாசத்திலயே திரும்பியும் வேலைக்கு வந்திட்டுது . நான் ஒண்டும் கேக்கேல்லை. ரெண்டு பேருமே பேசாம வேலையைப் பாத்தம். போன மாசம்; ரெண்டு தரம் கலியாணம் rehearsal பாத்த பிள்ளை வந்து, “ Sir நான் கனடா போப்போறன். பாங்கில கொஞ்சம் காசு காட்டினா கனடா போகலாமாம். ஏற்கனவே கொஞ்சம் கட்டீட்டன் , மற்ற எல்லாம் ரெடி , ஒரு கோடி காசு ஒரு மாசம் bank இல இருந்தாச் சரியாம் , வீட்டை அடகு வைக்க அம்மா பாக்கிறா போறது நல்லது தானே எண்டு சொன்னதுக்கு என்ன பதில் சொல்லலாம் எண்டு யோசிக்கத் தொடங்கினன். யோசிச்சு முடிக்க முதல் ஏற்றுமதிக்காய் வளத்த இன்னொரு நாட்டுக்கோழி நொண்டாத காலில நோவெண்டு சொல்லிக் கொண்டு வந்து என்னை யோசிக்க விடாமக் காப்பாத்திச்சுது. இருக்கிற முழங்காலில இல்லாத நோவுக்கு வைத்தியம் பாத்திட்டு வெளிக்கிட; “ வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதிக்கு இருந்த தடை நீக்கம் “ எண்டு அரசாங்கம் அறிவித்தது எண்டு லோசனின் செய்திகள் தயையங்கம் சொல்ல, இது எந்த ஏற்றுமதியை எண்டு யோசிச்சபடி நடந்தன். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
  10. அப்படி என்றால் வெளி நாட்டில் இன்னும் இலகு அல்லவா? வீட்டில் தாலி கட்டி விட்டு Common law partner அல்லது Living together என்று தப்பிக்கலாம்.
  11. பலஸ்தீன மக்களுக்கு உலக அளவில் இருக்கும் ஆதரவையும், அனுதாபத்தையும் இப்படியான முஸ்லிம்களில் இருக்கும் அடி முட்டாள்கள் இல்லாமல் செய்து கொண்டு இருக்கின்றனர். இஸ்ரேலும் இதைத்தான் எதிர்பார்க்கின்றது.
  12. 1. சுதந்திர ஊடகவியலாளர் நிமலராஜனை படுகொலை செய்த அமைப்பின், 2. உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதலை மேற்கொண்டு ஊழியர்களை படுகொலை செய்த குழுவின், 3. தமிழர் நிலங்களில் நிகழும் மண் கொள்ளைகளை நிகழ்த்தும் மண் மாபியாக்களின், 4. தீவகங்களில் நிகழ்ந்த/ நிகழும் சட்ட விரோத செயல்கள் பலவற்றில் ஈடுபடும் ரவுடிகள் குழுக்களின், தலைவரும் மற்றும் 5. தினமுரசு ஆசிரியரும், ஈபிடிபியின் சித்திரவதை முகாம்களுக்கு பொறுப்பாளருமான அப்பிள் என்று சக உறுப்பினர்களால் அழைக்கப்பட்ட அற்புதனை கொன்றவர்களை ஏவியவருமான டக்கிளஸ், இன்று பாலஸ்தீனத்தை பற்றியும் சமாதானம் பற்றியும் ஆசிரியர் கலாசாலையில் அதிதியாக கலந்து கொண்டு பேசி உள்ளார் என்பதை காணும் போது புல்லரிக்கின்றது!
  13. மிகவும் மகிழ்ச்சியான சம்பவம். மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும், மன்னார் வைத்தியசாலைக்கு தேவையான அளவு குருதி வழங்கிய குருதி கொடையாளிகளுக்கும் நன்றி. சாவுகளின் எண்ணிக்கை வெறும் ஸ்கோர் எண்ணிக்கையாக மட்டுமே பார்க்கப்பட்டுக் கொண்டு இருக்கும் உலகில், ஒரு உயிரின் மதிப்பை உணர்ந்த சிலரும் எம் தாயகத்திலும் உள்ளனர்.
  14. WhatsApp இல் பகிரும் செய்திகளை சரியா தவறா என ஆராயாமல் பகிர வேண்டாம். சரியான தகவல் கீழே;
  15. இந்த 'இலங்கையர்கள்' தமிழர்களா, சிங்களவர்களா அல்லது முஸ்லிம்களா என்று அறிய, எல்லா இடமும் தேடிப் பார்த்தேன், அதை அறிய முடியவில்லை. அறிய முயன்றது ஏன்? : வழக்கமாக தமிழர்கள் என்றால், டெய்லி மிரர் தொட்டு எல்லா ஊடகமும் தமிழர்கள் என்று போடும். அதுவே சிங்களவர்கள் என்றால், இலங்கையர்கள் என்று போடும் என்பதால்.
  16. இதற்கு எல்லாம் பெரிய கருத்தாடல், வாக்கெடுப்பு என்று போக வேண்டிய தேவை இல்லை நாதம். பொதுவாக வழக்கத்தில் உள்ள பதங்களே போதும். வெள்ளையினத்தவராயின், வெள்ளையினத்தவர் என்றும், கறுப்பு நிறத்தவராயின் கறுப்பு நிறத்தவர் என்றும், ஆசியர்களை ஆசியர்கள் என்றும் இந்தியர்களை இந்தியர்கள் அழைக்கலாம். அதுவும் ""கறுவலுடன் சேர்ந்து எம் தமிழ் இளைஞனும் சேர்ந்து...' என்பது மாதிரி இல்லாமல்."அவர்களின் நிறம் / இனம் பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய தேவைகளுக்குரிய விடயங்களுக்கு மட்டும் குறிப்பிடலாம். இங்கு (கனடாவில் / அமெரிக்காவில்) Black Street, White Street என்ற பெயர்களில் ஒவ்வொரு ஊரிலும் தெருக்கள் உள்ளதால், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதால் இவ்வாறு அவர்களது நிறங்களுக்குரிய பொதுவான பெயர்களில் அழைப்பது தவறில்லை என நம்புகின்றோம். எதிர்காலத்தில், அதை அவர்கள் எதிர்த்தால், நாமும் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதைக்காக, கைவிட வேண்டும். சோனி / மோட்டுச் சிங்களவர்: இதில் சோனி என்ற பதம் மட்டுமல்ல, தொப்பி பிரட்டி என்ற பதங்களை நாம் காணும் போதெல்லாம் மட்டுறுத்துவதுண்டு. ஐலண்ட் குறிப்பிட்டதுள்ளது போன்று 'காக்கா' என்ற பதமும் நீக்கப்படல் வேண்டும். "மோட்டுச் சிங்களவர்" இந்த அடைமொழியுடன் ஒருவர் சிங்களவரை குறிப்பிடுவாராயின், இங்கு 'மோட்டு' என்ற அடைமொழிக்குள் உண்மையாக அடங்குபவர் யார் என்ற கேள்விதான் எழுகின்றது. ஏனெனில், சிங்களவர்களை முட்டாள்கள் என்று விழித்துக் கொண்டு, இருப்பதை எல்லாம் அவர்களின் தந்திரங்களுக்குள் ஒவ்வொன்றாக இழந்து கொண்டு நிற்பது நாங்கள் தான். நன்றி வணக்கம்!
  17. யாயினி இணைத்து இருக்கும் திரியில் ஒரு கறுப்பு இனத்தவரைக் காப்பிலி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு மோசமானது என்று தெளிவாக உரையாடப்பட்டு இருக்கு. காப்பிலி என்ற பதத்துக்கு பின் வரலாற்று காரணங்கள், பெயர் வரக் காரணங்கள் என்று பல இருந்தாலும், எம்மவர்களால் இச் சொல் கறுப்பு இனத்தவரை நோக்கி சொல்லப்படுவதன் காரணம், தம்மை உயர்வாகவும் அவர்களை தமக்கு கீழாகவும் கருதும் 'உயர்சாதி' மன நிலையில் தான். மேலும் எம்மவர்கள் கறுப்பு இனத்தவர்களை 'கறுவல்' என்றும், சீனர்களை 'சப்பட்டைகள்' என்றும், அல்ஜீரியர்களை 'அடை' என்றும் அழைப்பது அவர்களை இழிவுபடுத்துவதற்காகவே அன்றி வேறு எந்தக் காரணங்களாலும் இல்லை. சொந்த இனத்துக்குள்ளேயே சாதி பார்க்கும் இழி மனநிலையின் தொடர்ச்சி தான் இந்த பழக்கம். ஏற்கனவே சொல்லியது போல, இந்தச் சொல் தவிர்க்கப்பட வேண்டியது. யாழில் கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டிய, விதி மீறலுக்குரிய சொல். நன்றி
  18. வணக்கம் சுமே, ஆம் இது மிகவும் தவறான அவச் சொல் தான். கருப்பின மக்களை தரம் தாழ்த்த எம்மவர்களால் பயப்படுத்தப்படும் நிறவெறி கொண்ட ஒரு சொல். யாழ் விதிகளின் படி, இச் சொல்லை யாழில் எங்கும் பயன்படுத்தவும் முடியாது - தலைப்பில் உட்பட. நன்றி
  19. ஆக, முற்படுத்தப்பட்டோர் (உயர் சாதியினர்) 15% தான் உள்ளனர். அதிலும் பிராமணர்கள் வெறும் 3.65 வீதத்தினர் தான். ஆனால் இவர்களின் கையில் தான் 90% மான அதிகாரமும், உயர் பதவிகளும் உள்ளன. இந்த நிலைமை பீகாரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இப்படித்தான் இருக்கும். சனாதன தர்மத்தை, வருணாச்சிரமத்தை நம்புகின்றவர்கள் வெறுமனே 15% என்பது மோடிக்கும், பா.ஜ.க. வுக்கும், RSS இற்கும் வெறுப்பைக் கொடுப்பதால் தான் இந்த சாதிவாரியான கணக்கெடுப்பை பா.ஜ.க எதிர்க்கின்றது. தமிழகத்திலும் இப்படியான சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். 'இண்டியா' கூட்டணியில் இருக்கும் திமுக இதனை செய்ய வேண்டும்.
  20. பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா. என்றும் மனதளவில் மார்க்கண்டேயன் ஆகவே இருங்கள்!
  21. தமிழக அரசின் இந்த தீர்மானத்தால் இன்னும் பலர் உறுப்புத் தானம் செய்ய முன்வந்து பலரை வாழ வைப்பர். நல்லதொரு தீர்மானம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.