Everything posted by நிழலி
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்கள் நெடுக்ஸ்.
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
நான் குளிர்காலத்தில் சிகரட்டை தொடவும் மாட்டேன். இளவேனில் காலம், இலையுதிர்காலம் மற்றும், கோடை காலத்தில் மாதம் ஒன்றுக்கு 10 இல் இருந்து 15 சிகரெட்டுகள் புகைப்பேன். சிகரட் Pack வாங்கி, அதை முடிக்க முடியாமல், காற்றுப் பட்டு இளவாலித்து போய் பல தரம் பாதியில் எறிந்தும் இருக்கின்றேன். டிசம்பர் 15 இன் பின், நேற்றுத்தான் இந்த வருடத்தின் முதல் சிகரட்டினை புகைத்தேன். முதல் சிகரெட் புகைத்தது இன்னும் நினைவில் உள்ளது. க.பொ.த சாதாரண தரத்தின் இறுதி பரீட்சையை எழுதிவிட்டு, சுண்டிக்குளி மகளிர் கல்லூரிக்கு சரியாக முன்னால் நின்று, அருகில் இருந்த கடையில் சிகரட் ஒன்றை வாங்கி, 'கலர்ஸ்' காட்ட என் முதல் சிகரட்டினை புகைத்தேன். ஊரெல்லாம் சுற்றிவிட்டு, 3 மணியளவில் வீட்டை போக, எவனோ ஒரு பயல் இந்த விடயத்தை அம்மாவுக்கு அதற்கிடையில் போட்டுக் கொடுக்க, அம்மா வேப்பங் கம்புடன் பத்திரகாளியாகி நின்று கொண்டிருந்தார்..
-
வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
நீதிபதி தடை உத்தரவை விடுக்கும் நேரம், இந்த குற்றவாளிகளை சுமந்து பறந்து கொண்டிருந்த இரண்டு விமானங்களும் சர்வதேச வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தமையால், உத்தரவை மதிக்க வேண்டிய தேவை இருக்கவில்லையாம்
-
வெளிநாட்டு மதபோதகர்கள் வெளியேற்றம்
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் செய்த உருப்படியான வேலை இது ஒன்றுதான். இந்த போக்கிரிகளை எந்த விசாவிலும் அனுமதிக்க கூடாது.
-
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
பரியோவான் கல்லூரி பழைய மாணவனும், என் நண்பனும், Yarl IT hub இன் முதுகெலும்பாகவும் இருக்கும் ரமோஷனின் வாழ்க்கை பயணம் பற்றிய காணொளி / பேட்டி. தான் மட்டும் முன்னேறியதுடன் வடக்கில் உள்ள இளையவர்களையும் முன்னேற்ற முயற்சிகளை எடுக்கும் ஒருவர் இவர். இக் காணொளியை தயாரித்து வெளியிட்ட Saho Creation இற்கு நன்றி.
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
புத்தா, நீங்கள் தான் நித்தா கொள்கின்றீர்கள் என நினைக்கின்றேன். இலங்கை ஊடகங்கள் அனைத்தும் இந்த வல்லுறவு தொடர்பான செய்தியை கண்ணியமான முறையில் வெளியிட்டு வருகின்றன. அனுராதபுரத்தில் நிகழ்ந்த இந்த கொடுமையை எதிர்த்து வன்னி மருத்துவமனை மருத்துவர்கள் கூட வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். பல ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தம் கரிசனைகளை வெளியிட்டுள்ளனர். இலங்கை முழுதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான விடயங்களின் மீது இச் சம்பவம் ஒரு குவியப்புள்ளியாக அமைந்து இருக்கு.
-
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது?
நிலாந்தன் நன்றாக ஆராய்ந்து எழுதியிருக்கின்றார். முக்கியமாக வெளி நாட்டு உணவு வகைகளால், உணவு விடுதிகளால் பாரம்பரிய உணவு முறையில் பெரியளவில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று என்பதை விளக்கியுள்ளார். எனக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் ஒரு விடயம் என்னவெனில், யாழ்ப்பாணத்தில் அல்லது வடக்கில் ஏன் சிங்கள சமையல் / சிங்கள உணவு பாரம்பரிய உணவு வகையை வழங்கும் உணவு விடுதிகள் இல்லை என்பதே. சிங்கள பாரம்பரிய சமையல் முறையும் உணவும் நல்ல ஆரோக்கியமான உணவு வகை என்பதுடன், வித்தியாசமான சுவையைக் கொண்டவை. நான் வீட்டில் சிங்கள சமையல் முறையில் மீன், கோழி இறைச்சி மற்றும் பருப்புக் கறி போன்றவற்றை தொடர்ச்சியாக சமைத்து சுவைப்பவன். அவர்களின் பொழஸ் கறி அற்புதமான சுவை கொண்ட ஒன்று.
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
நல்ல நேர்காணல். தெளிவாகவும், துணிச்சலாகவும் பதில் வழங்கியுள்ளார்.
-
டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
நேற்று இத் திரைப்படத்தை பார்த்தேன். வார இறுதியில் பார்த்து ரசிக்க கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம். சிரித்து, ரசித்து பார்க்க கூடியதாக இருந்த்து.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
சீமான் என்றாவது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று, அதுவும் வடக்கு கடற்கரைகளுக்கு மிக அருகில் சென்று, போரால் பாதிக்கப்பட்ட தாயக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் கொள்ளையை நிறுத்தச் சொல்லியோ, அதற்கு எதிராக கண்டனங்களையோ தெரிவித்தோ அல்லது அறிக்கை ஒன்றையாவது விட்டிருக்கின்றாரா? அவ்வாறு செய்திருப்பின், அவற்றின் இணைப்புகளையும் இணைத்து விடுங்கள். நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல்.
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையடிக்க வேண்டாம் என்று சொல்வதே. கடல்வள கொள்ளையர்கள் தம் செயல்களை நிறுத்துவதைத் தவிர இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் இல்லை. ஸ்டாலினில் இருந்து, சீமான் மற்றும் விஜய் வரைக்கும் இதைச் சொல்லும் துணிவு அற்றவர்கள்.
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
ஓணாண்டி, Public இடத்தில் படம் எடுப்பது என்பது வேறு, சிறுமிகளை (18 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை) அவர்களின் / பெற்றோர்களின் அல்லது பாதுகாவலரின் அனுமதி இன்றி படம் / வீடியோ எடுப்பது வேறு. இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியவில்லையா? அப்படி மைனர் பிள்ளைகளை ஒருவர் அன்னியர் படம் எடுத்தால், அவருக்கு எதிராக முறைப்பாடு தெரிவித்தால், அல்லது அப்படி எடுக்கும் போது காவல்துறை கண்டால் நடவடிக்கை எடுப்பர். கண்டிப்பாக ஐரோப்பாவிலும் இது நடைமுறையில் இருக்கும் என நம்புகின்றேன். இந்த செய்தியில் குறிப்பிட்ட சம்பவத்தில் மாணவிகளை படம் எடுக்கும் போது, பாடசாலை நிர்வாகம் எடுக்க வேண்டாம் என்று தடுத்து இருக்கின்றது. அதையும் மீறி எடுத்துள்ளார். எனவே இது முறைப்பாடு செய்ய வேண்டிய ஒரு விடயம். பாடசாலை நிர்வாகம் தடுத்து இருக்காவிடின், மிகச் சாதாரண நிகழ்வாக அமைந்து இருக்கும். இதுவே பாடசாலை சம்பந்தப்பட்ட ஒருவரோ அல்லது மாணவிகளின் பெற்றோர் / பாதுகாவலர் ஒருவரோ படம் எடுத்து இருந்தால் பிரச்சினை எழுந்து இருக்காது.
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
இங்கு அனுமதி இல்லாமல், 18 வயதுக்குட்பட்ட பெண்ணின் படத்தை எடுத்து, அதற்கெதிராக பொலிசாருக்கு முறைப்பாடு செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். பாடசாலைக்கருகில் ஒருவர் காரிற்குள் இருந்து சுய இன்பம் அனுபவித்ததுக்கே கைது செய்யப்பட்டார். அவ்வளவு ஏன், பாடசாலை முடிந்து வீதியில் வந்து கொண்டிருந்த ஒரு மாணவிக்கு லிப்ட் தர முயன்றதுக்கே ஒருவரை கடுமையாக விசாரித்தார்கள்.
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
செய்தியின் சாராம்சம் படி, இவர் புலம்பெயர் நாட்டில் இருந்து அங்கு போய் வசிக்கின்றவ ஒருவர் போன்று தெரிகின்றது. இப்படி பெண் பிள்ளைகளை /மாணவிகளை அவர்களின் அனுமதியின்றி இங்கு கனடா போன்ற நாட்டில் படம் எடுத்திருந்தா, கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து, எல்லா ஊடகங்களிலும் படத்தை போட்டு, இவர் இதைப் போன்று முன்னர் நடந்து கொண்டு, அதனால் எவராவது பாதிப்படைந்தனரா என்று எல்லாம் தகவல் கேட்டு இருப்பார்கள். இவரது கைத் தொலைபேசி, கணணி, தகவல் சேமிப்பு கருவிகள் எல்லாவற்றையும் பொலிசார் பரிசோதிக்க வேண்டும்.
-
வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்துக : இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும் - ரவிகரன்
@வல்வை சகாறா இந்த செய்தியை பார்க்கவும். தாயக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த கொள்ளைக்காரர்களுடனான பிரச்சினை பற்றி அக்கறை தெரிவித்து இருந்தீர்கள் அண்மையில்.
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
இது தான் பிஜேபி அரசின் எலும்புத்துண்டுகளை பொறுக்கி உண்ணும் இந்திய மத்திய அரசின் நீதித்துறையால் வழங்கப்பட்ட தீர்ப்பு. கருத்துச்சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது
-
மேதகு வே.பிரபாகரன் "வீர நாள்" (மே 17 2025)
இவர்களுக்கு இப்பதான் தெளிந்து இருக்கு. யாழ் இணையம் இதனை எப்பவோ வெளிப்படையாக அறிவித்து விட்டு ஒவ்வொரு வருடமும் மாவீரன் பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலியும் செலுத்திக் கொண்டு வருகின்றது. போராடி வீழ்ந்த தலைவரின் மகள் துவரகாவினது சாவு பற்றியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லாவிடின் போலிகாக்களது பெருக்கம் கூடி விடும்.
-
வவுனியாவில் உணவகம் ஒன்றில் வடைக்குள் சட்டை ஊசி
இதை வாசிச்சதில் இருந்து, அந்த ஊசியை அவர்கள் என்ன செய்திருப்பினம் என்று ஒரே யோசனையாக கிடக்கு
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
நீங்கள் சொல்வது மிகச் சரி நுணா. நாங்களும் அதே மாதிரி, சிங்கள பெளத்த இனவாத அரசுக்கு எதிராக போராடாமல், மாவட்ட சபையே போதும் என்று அன்றே காலில் வீழ்ந்து சரணாகதியாகி இருந்தால், அதாவது டீல் பேசி இருந்திருந்தால் பெருமளவான உயிரிழப்புகள், நிலப்பறிப்புகள், பொருளாதார இழப்புகளை தவிர்த்து இன்றைய நிலையினை அன்றே நாம் அடைந்து இருக்கலாம். தலைவர் தன்னையும் தன் மக்களையும் நம்பி ஏமாந்து போனார். செலன்ஸ்கி அமெரிக்காவையும், மேற்குலகையும் நம்பி ஏமாந்து போனார். பேசாமல் அன்றே காலில் வீழ்ந்து பாதங்களை நக்கிப் பிழைத்து இருக்கலாம்
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது. உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.
-
கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி!
விழுந்தும் மீசையில் மண் படாத moment என்பது இதுவா? லிபரல் கட்சியின் ஒன்ராரியோ மாகாண தலைவர் / leader மண் கவ்வி விட்டார். வெறும் 11.3 வீத வாக்குகளை பெற்று லிபரல் கட்சி மூன்றாவதாக வந்திருக்கின்றது. ஆனாலும் மீசையில் மண் படவில்லை என்ற சந்தோசம் உங்களுக்கு. Fedal தேர்தலிலும் இதே நிலைதான் வரும். ஆனாலும் உங்கள் இந்த பதிலை நான் பின்னூட்டம் இட்ட அன்றே போட்டிருந்தால் கொஞ்சம் மதிப்பு கொடுக்கும் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் election result வரும்வரை இருந்திருக்கின்றீர்கள். அவ்வளவு நம்பிக்கை லிபரல் கட்சி மீது?
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
வீடியோ பார்த்தேன், பொலிஸ் அதிகாரி அராஜகமாத்தான் நடந்து கொண்டிருக்கின்றார். அவர் தான் முதலில் தாக்கி இருக்கின்றார். சம்மனை கிழித்தது தவறு. ஆனால் அதற்காக இந்த அதிகாரி செய்தது தவறுமட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகம்.
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்
இதில் சித்தார்த்தன்,சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ,நா.சிறீகாந்தா ஆகியோர் இந்திய கொலை இராணுவம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்து, தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து, நூற்றுக் கணக்கானோரை காணாமல் செய்து, புலிகளின் போராளிகளை கொலை செய்த விடயங்களில் நேரடியாக பங்குகொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள். இன்று வரைக்கும் தம் ஈனச் செயல்களுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்காத கொலைகாரர்கள். அத்துடன் மு.சந்திரகுமார் முன்னால் , பல போராளிகளை காட்டிக் கொடுத்து, கொன்று, தீவகத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகக் காரணமான ஒட்டுக் குழு ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். அத்துடன் அக் கட்சியின் சித்திரவதைகளுக்கு பொறுப்பான தினமுரசு ஆசிரியர் அற்புதனின் (அப்பிளின்) சகாவும் ஆவார். இவர்களின் கூட்டு என்பது தமிழ் மக்களுக்கான பெரும் சாபம்.
-
திட்டமிட்டபடி நாளை தொடர் உண்ணாவிரதம் - தமிழக மீனவர்கள் அறிவிப்பு
எல்லை தாண்டி கொள்ளை அடிக்க அனுமதி கேட்டும், கொள்ளையடித்தவர்களை விடுதலை செய்யக் கேட்டும் நிகழும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சாகும் வரைக்குமான உண்ணாவிரதமாக மாற்றி போராடுமாறு நான் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
-
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது
இந்த வருடம் இவ் கோயிலில் சிவராத்திரி பூஜை நிகழும் போது, அனுர அரசு எவ்வாறு நடந்து கொள்ளும் என்ற கேள்வியுடன் இருந்தேன். ஏனெனில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து சஜித்துடன் அனுரவும் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். சிங்கள இனவாதிகள் இந்த முறை விட்டுப் பிடிப்பம் என்று அமைதியாக இருக்கின்றனர். இதையே சாக்காக வைத்து வெற்று இனவாத பேச்சுகளை தமிழ் மக்கள் முன் பேசி வாக்கு சேகரித்து விட்டு பின்னர் சும்மா இருக்கும் தமிழ் தேசிக்காய் அரசியல்வாதிகளும் இதனால் அமைதியாக இருக்க வேண்டி உள்ளது.