Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by நிழலி

  1. அதாவது இந்திய கொலைகாரப் படை வடக்கிலும் கிழக்கிலும் மக்களின் விருப்புக்கு எதிராக ஆக்கிரமித்து இருந்த காலத்தில் இதே பிரேதச்சந்திரன் உருவாக்கிய அச்சமற்ற சூழ்நிலையை மீண்டும் கொண்டு வருவாராம்.
  2. லிபரல்கள் பெரும்பான்மை பெற 3 ஆசனங்கள் குறைவு. அனேகமாக கியூபெக் கட்சி யின் (Bloc Québécois) ஆதரவுடன் ஆட்சியமைப்பர். சிங்கின் கட்சி (NDP) இம்முறை மிகக் குறைந்த ஆசனங்களையே பெற்றது. அதன் தலைவர் கூட தன் தொகுதியில் தோற்றுவிட்டார் (கொன்சர்வேட்டியின் தலைவருக்கும் இதே நிலைதான்). பொதுவாக இங்கு ஆட்சி கவிழ்ப்பு எல்லாம் நடப்பதில்லை. அதுவும் நாடு ட்ரம் பின் வரிகளால் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, இப்போதைக்கு ஆட்சி கவிழ்ப்பு/ மாற்றம் எல்லாம் நிகழ சாத்தியங்கள் இல்லை. எத்தனை பேர் வாக்களித்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகலாம் என்பது அந்த தொகுதியில் இருக்கும் மொத்த வாக்களார்களின் எண்ணிக்கையை பொறுத்தது. அத்துடன், இனம் பார்த்து வாக்களிப்பதும் இங்கு குறைவு. Juanita வென்றது, தமிழர்கள் ஏனைய இடத்தை விட (ஸ்கார்பரோ, மார்க்கம் பகுதிகளுடன் ஒப்பிடும் போது) குறைவாக வாழும் இடத்தில் தான். அவருக்காக உழைத்தவர்களில் எனக்குத் தெரிந்த ஒரு இலங்கை முஸ்லிம் குடும்பமும் உள்ளது.
  3. தமிழ் சிறி, மொத்தமாக 3 தமிழர்கள் தான் தெரிவாகியுள்ளனர். அதில் இருவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். ஒருவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். தினக்குரல் வழக்கம் போல் தவறுதலாக 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளது. தமிழ் மக்களில் வெவ்வேறு பின்புலத்தைக் கொண்டவர்கள், வென்றது நல்ல விடயம். பல இந்தியத் தமிழர்கள் எம் சமூகத்துடன் நெருங்கி வாழ்கின்றனர். எம் கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர். ஒரே கோவில்களுக்கு வருகின்றனர். இங்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் கூட இந்தியத் தமிழர் தான் (சென்னையை பிறப்பிடமாக கொண்டவர்) நான் நினைக்கின்றேன் 3 தமிழர்கள் வென்றது இம் முறை தான் என.
  4. இல்லை, இவர் இலங்கை தமிழர். அனித்தா ஆனந்த் எனும் தமிழ் பெண்ணும் ஓக்வில் எனும் இடத்தில் தெரிவாகியுள்ளார். இவர் இந்தியத் தமிழர்.
  5. வெறுமனே வாய்ப்பேச்சு கூடாது. சும்மா ஒருக்கா சீனாவை சீண்டிப் பார்த்து விட்டு, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா இல்லை உளுத்தம் மா கொடுக்க முடியுமா என இந்தியா சொல்ல வேண்டும்.
  6. இதில் Juanita Nathan வெற்றி பெறக்கூடாது என்று NCCT (National Council of Canadian Tamils) அமைப்பினர் தீயா வேலை செய்தனர். Juanita முதலில் தனக்கு பரிச்சயமான மார்க்கம் - தொன்ஹில் (Markham - Thornhill) பகுதியில் தான் தேர்தலில் நிற்க முயன்றார். ஆனால் NCCT அமைப்பினர் பழமைவாத கட்சியில் செல்வாக்கு செலுத்தி அங்கு இன்னொரு தமிழரான லயனல் லோக நாதனை (Lionel Loganathan) தேர்தலில் நிறுத்தினர். இரு தமிழர்கள், தமிழர்கள் வாழும் தொகுதியில் தேர்தலில் நின்றால், வாக்குகள் சிதறும் என்பதை புரிந்து கொண்ட லிபரல் கட்சி, Juanita இனை பிக்கரிங் இல் நிற்க வைத்து வெல்ல வைத்துள்ளனர். NCCT அமைப்பினர் தான் பழைய உலகத் தமிழர் அமைப்பினர். இவர்கள் தான் கடந்த வரும் தமிழ் கனடிய காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த வீதித் திருவிழாவையும் குழப்பி அடித்தவர்கள். Juanita பிக்கரிங்கில் கூட வெல்ல கூடாது என சித்து வேலைகள் செய்தார்கள் என கூறுகின்றனர். Juanita நல்ல ஆளுமை உள்ள ஒரு தமிழ் பெண்மணி. தனிப்பட்ட ரீதியில் இவருடன் சில தடவைகள் உரையாடியிருக்கின்றேன். எனக்கு தெரிந்த ஒரு சிறுவனுக்கு ஆட்டிசம் இருப்பதால், அவனுக்கான சிறந்த சேவைகளை, கல்வியை எப்படி தெரிவு செய்வது தொடர்பாக கதைத்து இருக்கின்றேன். இங்குள்ள தமிழ் எப் எம் வானொலியிலும் அடிக்கடி பல பிரச்சனைகள் தொடர்பாக உரையாடி இருக்கின்றார். இவர் வென்றது மிக மகிழ்ச்சி.
  7. லிபரல் தான் ஆட்சிக்கு வருவார்கள் என தெரியும். இதனை நான் மார்ச் 16 இலேயே எழுதியிருந்தேன். இந்த திரியில் நான் எழுதிய ஒரு விடயத்தை மட்டும் இறுதி நேரத்தில் செய்யவில்லை. அதாவது பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கவில்லை. நானும் தாரளவாத கட்சிக்கே வாக்களித்தேன். காரணம், பக்கத்து நாட்டில் இருக்கும் வலதுசாரி பைத்தியகாரனை சமாளிக்கும் வல்லமை கார்னேக்கு அதிகம் இருக்கலாம் எனும் நம்பிக்கையில்.
  8. 14 வயது சிறுமியை மூன்று வருடங்களாக கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்துள்ளனர். அதாவது 11 வயதில் இருந்து. இந்த இரண்டு காட்டுமிராண்டிகளுக்கு சின்னஞ் சிறு சிறுமி தேவைப்பட்டு இருக்கு. மகள் வயதுடைய பிள்ளையின் வாழ்வை அழித்து இருக்கின்றார்கள் இந்த கொடூரன்கள். இப்படியான காட்டேரிகளின் விபரங்களை பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டும். யூரீபர்களாவது இதைச் செய்ய வேண்டும். தலைவர் பிஸ்டல் குழுவையாவது இயங்கு நிலையில் வைத்து விட்டு சென்றிருக்கலாம்.
  9. நான் முதல் தடவை தோற்றிய போது, நாலு பாடங்களும் F எடுத்த ஆளாக்கும்.😄 இரண்டாம் தடவை 2 A யும் 2 C யும்.
  10. Tamil Behind Talkiesராயல்டி கேட்டதற்கான நோக்கம் இது தான்..!இளையராஜாவை திட்டி...பாடல்களுக்கான காப்புரிமை ராயல்டி தொகையை,நலிந்த இசை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்....
  11. எனக்கு இளையராஜாவின் மீது விமர்சனங்கள் உண்டு. ஒரு மனிதராக அவர் பல பிழைகளைக் கொண்ட ஒருவர். ஆதி திராவிட சமூகத்தில் பிறந்து விட்டு, அதை மறுக்கும் விதமாக நடந்து கொள்வதுடன் தன்னை ஒரு பார்ப்பனராக, ஒரு சங்கியாக நினைப்பதுடன், மற்றவர்களும் தன்னை அவ்வாறுதான் நடத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒருவர். எந்த சமூகம் அதிகாரத்துடன் உள்ளதோ, அதில் தானும் சங்கமிப்பதனூடாக, அதிகாரம் அற்ற, குரலற்ற சமூகங்களை ஏளனப்படுத்த முனைகின்ற ஒருவர் இளையராஜா. மோடிக்கு முன், முதலமைச்சர் முன், கோயில் பூசாரி முன், குருக்கள் முன் பவ்வியமாக கைகட்டி நிற்பார். அவர்கள் இவரை மதிக்காவிடின் கூட, அவர்கள் கால்களை கழுவி விடக் கூட துணிவார். ஆனால் ஒரு சாதாரண ஊடகவியலாளரைக் கூட மதிக்க மாட்டார். சபை நாகரீகம் என்பது மேட்டுக்குடியினருக்கு மட்டுமே என்ற கொள்கை கொண்டவர். ஆரம்பத்தில் தன் குருக்களாக, பழைய இசையமைப்பாளர்களை ஒவ்வொரு மேடையிலும் குறிப்பிட்டுச் சொல்வார். இன்று தன்னை பிரம்மாவாக நினைத்துக் கொள்கின்றார். மிகுந்த தலைக்கனம் பிடித்தவர். குடும்பத்தினருடன் கூட தலைக்கனமாக நடந்து கொள்கின்றவர். அவருக்கு பா.ஜ.க வின் மூலம் கிடைத்த ராஜ்யசபா எம் பி பதவி என்பது தலையில் சந்தனம் என்று நினைத்து அவரே வைத்துக் கொண்ட மலக் குவியல். ஆனாலும் இளையராஜா ஒரு அற்புதமான, அருமையான, இயற்கை எமக்கு அருளிய ஒரு கொடை. இதுவரைக்கும் அவர் கிட்டத்தட்ட 7000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அதில் ஒரு 100 பாடல்கள் வரைக்கும் ஏனைய பாடல்களின் மெட்டுக்களை உருவி இசையமைத்து இருப்பார். ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு அவரது அளப்பரிய இசையை எடை போட்டு மட்டம் தட்ட முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் ரஹுமான், ஹரிஸ் ஜெயராஜ் போன்றவர்கள் சமூகத்தில் உள்ள எல்லா மட்டத்தினரையும் கவரக்கூடிய இசையை அளிப்பவர்கள் அல்ல. ஆனால் இளையராஜாவால் அது முடியும். சாதாரண, படிக்காத, அன்றாடம் காச்சி, பாமரனான் ஒருவராலும் அவரது இசையை ரசிக்க முடியும்; தனி விமானம் வைத்து பயணம் செய்கின்றவர்களாலும் ரசிக்க முடியும். கருவில் இருந்து சுடுகாடு போகும் வரைக்குமான வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார். அந்தந்த கட்டங்கள் வாழ்வில் வரும் போது, அதற்கு ஏதுவாக ஒரு பாடலை , இசையை ஏற்கனவே அவர் இசையமைத்து இருப்பார். பாடல்கள் மட்டுமல்ல, அவரது பின்னனி இசையும் அற்புதமானது. பிதாமகன் படத்தில் கள்ளச்சாராயம் காச்சி குதிரைகளில் வைத்து கடத்தி செல்லும் காட்சியில் பின்னனி இசைத்து இருப்பார். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், பரவசம் அடைவோம் (இப் படத்தில் உள்ள பிறையே பிறையே பாடல் தனிமையில் கேட்கும் போது புல்லரிக்க வைக்கும்). மெளனராகத்தின் படத்தின் பின்னனி இசை முழுதுமே ஒரு தனி அல்பமாக போட்டு கேட்க முடியும். தளபதி படத்தில் வரும் பின்னனி இசை இன்னொரு வகையான பரவசம். -------- என் அம்மாவுக்கு 80 வயதாகின்றது. இப்ப இருக்கும் அம்மா முன்னர் இருந்த என் அம்மா மாதிரி அல்ல. எப்பவும் தன்னை பற்றி மட்டுமே கதைக்கின்ற, தற்பெருமை பேசுகின்ற, என் அப்பாவை எப்பவும் உயர்த்தி மட்டுமே கதைக்கின்ற ஒருவராக இப்ப அம்மா உள்ளார். அறளை பெயர்ந்து தற்பெருமை பேசும் ஒருவராக அம்மா மாறிவிட்டார். ஆனாலும் அம்மா மீதான என் பாசம் குறையவில்லை. அவர் எனக்கு செய்த அனைத்து நன்மைகளையும் நான் மறக்கவில்லை எனக்கு இளையராஜாவும் அப்படித்தான். இன்னும் சொன்னால், நான் அம்மாவுடன் கழித்த ஒட்டுமொத்த நிமிடங்களை விட, இளையராஜாவின் இசையும் கழித்த நிமிடங்கள் பல மடங்கு அதிகம். Wishing you long life Ilayarajah
  12. ஏ.ஆர்.ரகுமான் இசையில் மட்டுமல்ல இப்படியான விடையங்களிலும் கெட்டிக்காரர் (இவரது மனைவி சட்டம் படித்தவர் என கேள்விப்பட்டுள்ளேன்). தன் முதல் படத்தில் இருந்து இன்றுவரைக்கும் இது தொடர்பாக சரியான ஒப்பந்தங்களை போட்டுள்ளார். அதனால் அவரது இசையை/ பாடலை எவரும் அவரது அனுமதி இன்றி பயன்படுத்த முடியாது. ஆனால் இளையராஜாவுக்கு இப்படியான சட்டம் மற்றும் ஒப்பந்தங்கள் போட வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட ஆரம்பத்தில் இருக்கவில்லை. மிகச் சாதாரணமாக தயாரிப்ப்பாளருடன் மட்டும் சம்பளம் / உரிமை தொடர்பாக ஒப்பந்தங்களை போட்டுள்ளார். பின்னாட்களில் தான் அவர் சுதாகரித்துக் கொண்டார். முக்கியமாக மலேசியாவில் இருக்கும் ஒரு இசை வெளியீட்டு நிறுவனம் இவரது பாடல்களை திருப்பி திருப்பி சிடி போட்டு விற்கும் போதுதான் உணர்ந்து கொண்டார் என்று சொல்வர்.
  13. வர்த்தக நோக்கத்திற்காக இசையை பயன்படுத்த லைசென்ஸ் எடுத்து இருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில் இது தான் சட்டம். இதனையும் Tariff என்பர். இது ஒவ்வொரு இடத்துக்கும் மாறுபடும். ஜிம் போன்றவை ஒவ்வொரு பாடலுக்கும் காப்புரிமை பிரகாரம் பணம் செலுத்துவதில்லை. அவர்கள் எந்த நாட்டு இசையை பிரதானமாக இசைக்க விடுவர் என்று முன்னரே தெரிவித்து விடுவர். உதாரணத்துக்கு ஒரு ஜிம், ஜப்பானிய பாடல்களையும் அமெரிக்க இசையையும் ஒலிக்க விடுவாராயின், அதற்கான காப்புரிமைக்கான பணத்தை ஒவ்வொரு வருடமும் செலுத்துவர். IPRS போன்ற அமைப்புகள் அதனை வாங்கி, தம் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிப்பர். அதாவது அவ் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் ஜப்பானிய/ அமெரிக்க இசைக்கலைஞர்களுக்கு பகிர்ந்தளிப்பர். ஆனால் FM போன்றன, தாம் வர்த்தக நேரங்களில் இசைக்கும் பாடல்கள் அனைத்தினது விபரங்களையும் அனுப்பி வைப்பர். அதன் படி காப்புரிமை பணம் பகிர்ந்தளிக்கப்படும். வர்த்தக நிலையம் ஒன்று வானொலியில் வரும் பாடல்களை ஒலிக்கவிடின், காப்புரிமைக்கான பணத்தை செலுத்த தேவை இல்லை. ஏனெனில் FM நிலையங்கள் ஏற்கனவே அதற்கான கட்டணங்களை செலுத்துவதால். TikTok, YouTube, TV, Concert venues போன்றவையும் கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றின் மூலம் நினைத்து பார்க்காத அளவு பணம் collect பண்ணப்படுகின்றது. லக்ஸ்மன் சுருதி போன்றவைக்கும் இது பொருந்தும். ஆனால் இந்தியாவில் எவரும் சின்ன சின்ன இசைக்குழுக்களிடம் இருந்து இவற்றை எதிர்ப்பார்ப்பது இல்லை. ஆனால் இங்கு எதிர்ப்பார்க்கின்றனர். Chatgtp இல் இப்படித் தேடிப்பாருங்கள். இந்த லைசென்ஸ் / இனை பற்றி மேலும் அறிய முடியும் what is tariff in music industry விகடன் போன்றவை இதனை பற்றி எழுதியிருக்கின்றனர். அத்துடன், அண்மையிலும் ஒரு தயாரிப்பாளர் இதைக் கூறியிருந்தார்.
  14. இசை மூலம் / காப்புரிமை மூலம் பெறப்படும் பணத்தை பெற்று இசையமைப்பாளருக்கும் ஏனையவர்களுக்கும் பகிர இந்தியாவில் IPRS என்ற அமைப்பு உள்ளது. இதனையே அங்குள்ள அனேகமான இசையமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். இளையராஜா இதனை பயன்படுத்துவதில்லை. தன் இசை மூலம் கிடைக்கும் ராயல்டி பணத்தை நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கான ஒரு அமைப்பின் மூலமே பெறுகின்றார் என கூறுகின்றனர். அதாவது இளையராஜா ராயல்டியின் மூலம் பெறப்படும் வருமானத்தில் ஒரு பெரும் பங்கை நலிவுற்ற கலைஞர்களுக்கு பகிர்கின்றார்.
  15. நான் வேலை செய்வது இசை காப்புரிமை தொடர்பான அமைப்பில். பாடல்களின் காப்புரிமை காரணமாக கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை அதில் ஈடுபடுகின்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் அமைப்பில கனடாவில் வர்த்தக நோக்கத்திற்காக இசையை / பாடலை பயன்படுத்தினால் எம்மிடம் மற்றும் எம்மை போன்ற இன்னொரு அமைப்பிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது gym மில் ஒலிக்க விடும் பாடலாக இருந்தாலும் சரி, FM மில் ஒலிபரப்பும் பாடலாக இருந்தாலும் சரி அந்த இசைக்கான காப்புரிமை பணத்தை தரவேண்டும். Live music நிகழ்விற்கும் இது பொருந்தும். அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பங்கு காப்புரிமை பெற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். பாடல் யாருக்கு சொந்தம்? பாடல் அதன் இசையமைப்பாளருக்கே சொந்தம். இது தான் பெரும்பாலான நாடுகளின் சட்டம். கனடா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இது தான் சட்டம். ஒரு பாடலின் இசையை படத்தின் தயாரிப்பாளர் வாங்குகின்றார். அதை அவர் அப் படத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். SPB, ஒரு இசை நிகழ்ச்சி நடத்தும் போது, அங்கு இசைத்த, இசைக்கப்படும் பாடல்களின் list இனை நான் வேலை செய்யும் அமைப்புக்கோ (கனடாவில் நிகழ்ந்தால்) அல்லது அது போன்ற இன்னொரு அமைப்பிற்கோ வழங்கப்படும். அதன் படி காப்புரிமையின் படி வருமானத்தின் சிறு பங்கு பகிர்ந்தளிக்கப்படும். இதில் spb யின் மகனே இவ் நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்பவர் எனும் அடிப்படையில், இளையராஜா இசையமைத்த பாடல்களை பாடினால் அதனையும் அந்த list இல் தர வேண்டும்.ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. சட்ட ரீதியாக ஒரு நாட்டில் நிகழ்ச்சி நடாத்த அனுமதி பெற்று இளையராஜா வின் பாடலையும் பாடி வருமானம் பெற்று விட்டு, சட்ட ரீதியாக கொடுக்க வேண்டிய அதன் விபரங்களை அவர்கள் கொடுக்காமல் தவறினார்கள். இது வேண்டும் என்றே செய்த தவறு. இதே தவறை ஒரு பிரபலமான ஆங்கில பாடல் பாடி செய்து இருந்தால் பெரும் பணம் தண்டமாக கிடைத்திருக்க வாய்பிருந்து இருக்கும்.
  16. அத்தியாவசிய விடயங்களில் செலவை குறைக்காமல், ஏனைய விடயங்களில் செலவை குறைக்க முடியும். உதாரணமாக, தியேட்டர் போய் படம் பார்க்காமல் வீட்டிலேயே படம் பார்ப்பது, உணவு விடுதிக்கு செல்வதை குறைப்பது, விருந்துகளை குறைப்பது, எல்லாவற்றையும் விட முக்கியமாக உணவு விரயத்தை கூடுமான வரை தவிர்ப்பது போன்றவற்றை செய்தாலே போதும். Cutting the corners
  17. இப்படியான மலிவு விலையில் வாங்கி சாப்பிட்டால் இலவசமாக நோயையும் தந்து அனுப்புவார்கள். தரமான உணவு விற்கும் தமிழ் கடைகளில் 25 இடியப்பங்கள் + சொதி + சம்பல் என்பனவற்றை $5.50 இற்கே விற்கின்றனர். தரமான இடியப்பம் எனில் 2 நாட்களுக்குள் மரத்துப் போய் விட வேண்டும். ஆனால் இங்கு மலிவு விலையில் விற்கப்படும் இடியப்பத்தை நீங்கள் ஒரு கிழமைக்கும் வைத்து இருக்க முடியும். அப்படி மரத்துப் போகாமல் செய்ய இடியப்பத்தில் மலிவு விலை எண்ணெயையும் சேர்த்தே செய்கின்றோம் என இப்படி இடியப்பம் செய்து விற்கும் ஒரு அண்ணை சொன்னார் (இந்த எண்ணெயும் ஏற்கனவே பொரித்து பொரித்து வீணான எண்ணெய்)
  18. நானும் 4 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான முறையில் தான் வீட்டுக் கடன் எடுத்தேன். இதை இங்கு Variable interest என்பர். இவ்வாறான ஒன்றை பெற விண்ணப்பிக்கும் போது, Stress test என்ற ஒன்றை செய்வார்கள். அன்றைய வட்டி வீதத்தை விட திடீரென வட்டி விகிதம் 2 விகிதத்தால் அதிகரிப்பின் அதனை தாங்கும் வல்லமை விண்ணப்பதாரிக்கு உண்டா அறியும் டெஸ்ட் இது. ஆனால் பலர் இதிலும் சித்து விளையாட்டு விளையாடி, பொய்யான முறையில் வருமானம் காட்டி, பெற்று விட்டு, பின்னர் வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, குய்யோ முய்யோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்து அரசை திட்டித் தீர்ப்பார்கள். இடையில் இரண்டு வருடம் நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டனான். மகன் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் கற்க அனுமதி கிடைத்து போக (Engineering Physics) தொடங்கிய காலத்தில் (நியாயமான முறையில் அரசுக்கு நான் வருமானம் காட்டுவதால், அவனால் கல்விக்கான கடனை பெரிய அளவில் பெற முடியவில்லை), வீட்டுக் கடன் வட்டி விகிதமும் அதிகரிக்க, அதே நேரம் அம்மாவும் இலங்கையில் இருந்து வந்து என்னுடன் வசிக்க தொடங்க, கொஞ்சம் கஷடப்பட்டனான். இப்ப சரியாகி விட்டது.
  19. ஆட்சிக்கு வர முதல் தாம் இந்த வர்த்தகத்தில் போட்டி நிலையை ஏற்படுத்த மேலும் பல Grocers இனை கொண்டு வருவோம் என்பர். பின் அதைப் பற்றி மூச்சுக் கூட விட மாட்டார்கள். அத்துடன் அமெரிக்க பெரும் வர்த்தகர்களுக்குத் தான் முதல் இடம் கொடுத்துக் கொண்டு இருந்தனர். இனி இது மாறும் என நினைக்கின்றேன்.
  20. ஒரு விதத்தில் பார்த்தால், நான் எழுதியது ஒரு இனவாதக் கருத்து. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நாட்டவரை, அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட இனத்தவரை குற்றம்சாட்டிய கருத்து அது. ஆனால் நடக்கும் விடயங்களை நான் பார்த்து, உய்த்தறிந்து, உணர்ந்து கொண்ட கருத்து அது. ருடோ சகட்டுமேனிக்கு மாணவர் வீசா கொடுக்க தொடங்கியதும், பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மாணவர் வீசா எடுத்து இங்கு வந்தனர். அதில் பலர் பொய்யான சான்றிதழ்களைக் காட்டி வந்துள்ளனர். IELTS போன்ற சர்வதேச சான்றிதழ்களைக் கூட கள்ள வழியில் பல்லாயிரம் பேர் பெற்று வந்துள்ளனர் (இவர்கள் இதே மாதிரி அவுஸிலும் செய்தமையால் இந்தியாவின் 5 அல்லது 6 மானிலங்களில் இருந்து எவரும் மாணவ வீசாவில் வர முடியாது தடை செய்துள்ளனர், அதில் குஜராத் மற்றும் பஞ்சாபும் அடக்கம்) இவ்வாறு வந்தவர்கள் மாணவ வீசா காலத்திலேயே தொழில் அனுமதி பெற்று வேலை செய்யத் தொடங்கி பின் 2 அல்லது 3 வருடங்களில் நிரந்தரவதிவிட உரிமை பெற விண்ணப்பித்துள்ளனர். மாணவர் அல்லாத பல்லாயிரக்கணக்கானவர்கள் கனடாவுக்கு வருவதற்கு பல தடைகளை தாண்ட வேண்டும். காத்திருப்பு காலமும் நீண்டது. அதே போன்று உண்மையான காரணங்களுக்காக வரும் அகதிகளின் காத்திருப்பு காலமும் நீண்டது. ஆனால் இந்த மாணவர் வீசாவில் வருகின்றவர்கள், மிக இலகுவாக வந்து, தொழில் பெற்று நிரந்தரவதிவிட உரிமையும் பெறக் கூடியதாக சில வருடங்கள் இருந்தன. இப்போது இந்த முறையில் பல மாற்றங்களை கொண்டு வந்து, மாணவர் வீசா பெறுவதிலும் பல தடைகளை ஏற்படுத்தி, அவ்வாறு வந்தவர்கள் பெற்ற வேலை அனுமதியை நீடிப்பதையும் தடுக்க பல முறைகளை கொண்டு வந்து ஆப்படித்துள்ளார்கள். இவ்வாறு வந்தவர்களில் பஞ்சாபி இனத்தவர்கள் தான் மிக அதிகம் (அதற்கு ஒரு பின்கதவு காரணமாக பிரதான கட்சியின் தலைவராக பஞ்சாபி ஒருவர் இருக்கின்றார் என்ற கொசிப் ஒன்றும் உள்ளது) இவர்கள் இங்கு செய்யும் கூத்து, நாகரீகமடையாத இனத்தவர்கள் செய்யும் கூத்து. இரவிரவாக சத்தமாக, அண்டை வீட்டாரை தொந்தரவு செய்யும் அளவுக்கு பாட்டுகளை அலற விடுவதில் இருந்து, ரோட்டோரம் காறித் துப்புவது வரை தொடர்கின்றது. இதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். இங்கு 10 மோசமான குற்றங்கள் இடம்பெற்றால், அதில் 4 அல்லது 5 இவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட குற்றங்களாக உள்ளன (மிகுதி ஏனைய சகல இனத்தவரும்). கைது செய்யப்படுகின்றவர்களின் பெயரின் முடிவில் 'சிங்' கண்டிப்பாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து குடியேறிய இந்தியர்கள் கூட இவர்களை அடியோடு வெறுக்கின்றனர். அத்துடன் மாணவர் வீசா பெறுவதில் மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வருமாறு கோருகின்றனர். பொதுவாக இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள் என்று பெயரெடுத்தவர்கள். ஆனால் இன்று இந்தியர்கள் என்றால் ஏனைய அனைவரும் வெறுக்கின்றவர்களாக பெயர் எடுத்துள்ளனர்.
  21. நான் எழுத நினைத்ததை நீங்களே எழுதிவிட்டீர்கள். பாகிஸ்தானில் அண்மையில் ரயில் ஒன்றின் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பின்புலமாக இந்தியாவின் உளவு நிறுவனமும், அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட குழுவும் தான் காரணம் என்பது உலகிற்கும் பாகிஸ்தானியர்களுக்கும் மோடிக்கும் தெரியும். நீ எதை மற்றவர்களுக்கு செய்கின்றாயோ, அதுவே உனக்கு திரும்பி வரும்.
  22. இப்படி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிராமல், கனடாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்காமல், மூட்டை முடிச்சுகளுடன் மீண்டும் இவர்கள் இந்தியாவிற்கே திரும்பிச் சென்றால் மகிழ்ச்சி. முக்கியமாக பஞ்சாபிகள் இவ்வாறான சிறந்த முடிவை ஒன்ராரியோவில் எடுத்தால் மிக்க மகிழ்ச்சி.
  23. விரிவான கட்டுரைக்கு நன்றி ரஞ்சித். பிள்ளையான் மிக மோசமான மனிதகுல எதிரி என்பதுடன் இவன் போன்ற படுகொலையாளர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கே அழிவுகளை கொண்டு வரக்கூடிய சமூக துரோகிகள். இவ்வாறான பேர்வழிகளை ஜனநாயகத்தின் பேரால் தம் தலைவர்களாக தேர்ந்தெடுக்கும் அவலமான செயற்பாடுகளை செய்தவர்கள்/ செய்கின்றவர்கள் கிழக்கு வாழ் தமிழர்கள் மட்டுமல்ல. வடப்குதி தமிழர்களும் தான். இந்திய இராணுவத்துடன் தோளோடு தோள் நின்று, பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞ, இளைஞிகளை படுகொலை செய்தும், பல தமிழ் பெண்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து பாலியல் வல்லுறவு செய்து கொன்றும், தமிழர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றும் அடாவடித்தனங்கள் புரிந்த அமைப்பின் தலைவர்களாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், 2009 வரைக்கும் துணை இராணுவக் குழுவாக இயங்கிய ஈபிடிபியின் தலைவர் டக்கிளஸையும் தேர்தல்களில் வெல்ல வைத்த / வைக்கின்றவர்களாக வட பகுதித் தமிழர்களும் உள்ளனர். ஒரு முறை சரிநிகர் பத்திரிகை சுரேஸ் பிரேமச்சந்திரனை செய்தி அல்லது பேட்டி ஒன்றுக்காக 90 களில் தொடர்பு கொள்ள, கொழும்பில் உள்ள காரியாலயத்துக்கு தொலைபேசியில் அழைக்கும் போது, அங்கிருந்தவர்கள் சுரேஸ் மட்டக்களப்புக்கு சென்று விட்டார் என்றும், அங்கு அவரை தொடர்பு கொள்ள ஒரு தொலைபே இலக்கத்தை தந்தனர். அந்த இலக்கம், ராசிக் குழுவின் முகாமினது தொலைபேசி இலக்கம். அதாவது சுரேஸ் மட்டக்களப்புக்கு செல்லும் போதெல்லாம், ராசிக் குழுவின் முகாமில் தான் தங்குகின்றவர். இப்படியானவர்களைத் தான் வடக்கு கிழக்கு தமிழர்கள் தேர்தல்களில் வெல்லவைக்க முயல்கின்றனர்.
  24. பிறந்த நாள் வாழ்த்துகள் நிலாமதி அக்கா. நான் யாழில் இணைந்தவுடன் என்னை தனிமடலில் வரவேற்ற பாசக்கார உறவு நிலாமதி அக்கா!
  25. தண்டனையே குற்றம் “மனித உரிமை மீறல் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஐநா சபையில் நிறைவேற்றுவோம்” என்ற தலையங்கத்தைப் பத்தாவது வருசமா திருப்பியும் சலிக்காம வாசிக்க, “ நான் ஒரு பெட்டிசன் அனுப்பிறன் அதில ஒரு கையெழுத்துப் போட்டு அனுப்பிவிடும்” எண்டு எனக்குப் பெரிய பள்ளிக்கூடத்தில படிப்பிச்சவர் ஒருத்தர் கோல் எடுத்தார். சஜித் பிரேமதாசான்டை இங்கிலீசில இருந்ததை வாசிக்க சிரமப்பட்டிட்டு பேசாமக் கையெழுத்துப் போடுவம் எண்டிருக்கத் திருப்பி கோல் எடுத்து, “ அவர் மகனுக்கு சும்மா அடிச்சுப் போட்டார், இதை விடேலாது நான் கோட்டுக்குப் போப்போறன், மனித உரிமை மீறல் ” எண்டு கடுமையாச் சொன்னார். இருக்கிறதில எது உரிமை எது மீறல் எண்டு முடிவெடுக்கேலாமல் யோசிச்சபடி ஆசுபத்தரீல நடந்து போக, பக்கத்தில வந்த இன்னொரு பரியாரியார், “நான் அவங்களைக் கலைச்சு விட்டிட்டன் , உவங்கள் சரிவரமாட்டாங்கள், எங்களை மாதிரி இப்பத்தைகள் இல்லை” எண்டு மருத்துவத்தையும் பாடமாக்கித் தள்ளீடுவம் எண்டு நம்பி வந்த பெடிபெட்டைகளை பேசிக்கொண்டு வந்தார். இதுகள் படிச்ச பள்ளிக்கூடம் தான் பிழை எண்டு முடிவுக்கு வந்தவர் அதிலேம் வாத்திமார் அடிச்சுத் திருத்தாததால தான் எல்லாம் இப்பிடித் திரியுது எண்ட புறுபுறுத்தபடி போனார். இதையும் கடந்து கிளினிக்குக்குப் போக அங்க ஒரு அம்மா மகனோட உள்ள வந்தா. அவன் தான் வீட்டுக்கு காவலோ தெரியேல்லை கூட்டுக்க நிக்கறதுக்களுக்கு கழுத்தில கட்டிறதை காதில இருந்து கால் வரை தொங்க விட்டபடி பெடியன் வந்திருந்தான். வந்தவனுக்கு ஏதும் வருத்தமோ தெரியாது பாவம் தலை மயிரெல்லாம் கறள் கட்டினமாதிரிக் கலரில இருந்துச்சுது. பதினைஞ்சு வயசு பள்ளிக்கூடத்துக்கு போறேல்லையாம் , ஆனால் பக்கத்தில எங்கயோ “ கூடப் போனதில” அடி வாங்கீட்டானாம் எண்டு உடைஞ்ச கையோட வந்தவனைப் பாக்க விளங்கிச்சுது உடைஞ்சது கை மட்டுமில்லை கன பிணைப்புக்கள் எண்டு. “ ஏன்டா பள்ளிக்கூடம் போறேல்லை ” எண்டு கேக்க அம்மா “அவன் குளப்படி எண்டு சேர் அடிச்சதாலை நிண்டிட்டான்” எண்டு பெருமைப்பட்டுச் சொன்னா. அடிச்ச அடிவாங்கின கதையெல்லாம் கேட்டு முடிய மணி ரெண்டாக, மனிசி மத்தியானம் பள்ளிக்கூடம் முடிய ஏத்த வரச் சொன்னது ஞாபகம் வர ,நேரம் போட்டுது எண்டு போட்டு அவசரமாக் காரை எடுத்துக் கொண்டுபோய் சிக்னலில நிக்க பின்னால வந்து நிண்ட மூண்டு சில்லும் , கொக்கு மாதிரி எப்பவுமே ஒண்டைத் தூக்கிக் கொண்டு நிக்கிற ரெண்டு சில்லும் “கோன் அடிச்சுது “, தான் இதுக்கெல்லாம் நிக்கேலாதாம் “என்னை விடு போப்போறன்” எண்ட மாதிரி . இவனுக்காக எப்பிடிக் காரைத்தூக்கிக் கொஞ்சம் அரக்கிப் ரோட்டுக் கரையில நிப்பாட்டிற எண்டு யோசிக்கப் பச்சை விழுந்திச்சுது. முன்னுக்கு நிண்ட நான் டக்கெண்டு எடுக்க ரெண்டு பக்கத்தாலேம் பாதுகாப்புக்கு போற பொலிஸ்காரன் மாதிரி வந்த ரெண்டு சில்லுக்காரன் நான் slowவாய்ப் போறனாம் எண்டு முறாய்ப்பா முறுக்கிக் கொண்டு போக அதைக் கவனிக்காத மாதிரி நான் ஓடிக்கொண்டு போனன். போற வழியில பிரபல பாடசாலையில படிக்கிறது, படிப்பிக்க விட்டது எல்லாம் பள்ளிக்கூடம் விட்டோன்ன தமன்னாவைப் பாக்கப் போன கூட்டம் மாதிரி பாஞ்சு வந்து நாலைஞ்செண்டு நடு ரோட்டால அணிவகுத்துப் போக ரோட்டின்டை கரைப் பக்கமா மண்ணுக்கால காரை விட்டன். ஒரு மாதிரி கஸ்டப்பட்டு நேரம் போகுதெண்டு அரக்கப் பறக்க வந்தா, அண்டைக்கெண்டு பாத்து போக்குவரத்தை சீராக்கிறம் எண்டு வந்து நிண்ட சீருடைக்காரார் எல்லாச் சந்தீலேம் நான் கிட்ட வரவும் என்னை மறிச்சிட்டு மற்றவயை விடவும் சரியா இருந்திச்சுது. எங்க காணேல்லை எண்டு Mrs அடிச்ச கோலை, வேணும் எண்டு “ miss” பண்ணீட்டு ஒரு மாதிரிப் போய்ப் பள்ளிக்கூட வாசலில நிக்க, வந்து ஏறினவை எல்லாரும் கதவைச் சாத்தின சாத்து காரோட சேத்து எனக்குத் தான் எண்டு விளங்கிச்சுது. ஏறின உடனயே என்னை ஒண்டும் கேக்காம பின்னால திரும்பி, “எத்தினை marks, எத்தினை மணிக்குக் கிளாஸ், எங்க தொப்பியைக் காணேல்லை” எண்ட வழமையான கேள்வி-நேரம் நடக்க “ரோட்டை” மட்டும் பாத்தபடி காரை ஓடிக்கொண்டு போனன். ஆளை விட்டாக் காணும் எண்டு பின்னுக்கு பாஞ்சு ஏறினதுகளை பாத்து மனிசி, “இதுகளை ஒண்டும் செய்யேலாது, இங்கபார் சாப்பாடு அப்பிடியே இருக்கு, அப்போத வெறும் socks ஓடித் திரியுது, சட்டையில மை , home work செய்யேல்லையாம் எண்டு complain , நாங்கள் எல்லாம் எங்கடை அம்மா சொன்னா எல்லாம் உடன செய்வம், எண்டு பஞ்ச புராணத்தைத் தொடங்க , “சரிசரி, விடும் பாவம்” எண்டு நான் சொல்ல, “கடைசியா நீங்களும் ஒண்டும் சொல்லாதேங்கோ நான் தான் எல்லாம் பாக்கோணும்” எண்டு புறுபுறுத்தபடி மனிசி வீடு வர வீட்டுக்குள்ள போக, நான் எங்க சோத்துக்கரண்டியைக் காணேல்லை சாப்பாட்டு மேசையில தேடிக்கொண்டிருந்தன். பின்னேரம் patient பாத்துக் கொண்டிருக்க உள்ள வந்த ஒருத்தர் மகனை இருத்தி வைச்சிட்டு “ அவனுக்கு கையில நோகுதாம், எழுதவே ஏலாது எண்டு சொல்லிறான்” எண்டு தொடங்கினார். நானும் அங்க நோகுதா இங்க நோகுதா எண்டு கேக்க அவன் அப்பாவைப் பாக்க அவர் தலையும் இவன்டை தலையும் ஒண்டா ஆடிச்சுது ஓமெண்டு . என்னடா இண்டைக்கு வந்த முதலாவது patientஏ இப்பிடி இருக்கு, ஒரு பிரச்சினையேம் காணேல்லை எண்டு போட்டு , ஒண்டுமில்லை சும்மா நோ தான் எண்டு சொல்ல முதல், “எனக்கு X-ray எடுக்கோணும்” எண்டு அப்பா ஓடர் போட நான் தேவேல்லை எண்ட, “இல்லை வாத்தியார் அடிச்சிட்டார் என்டை மகனுக்கு , அவருக்கு நான் ஆரெண்டு காட்டிறன், எல்லா இடமும் கடிதம் போட்டிருக்கிறன், உங்கடை report ஒண்டும் வேணும்” எண்டு என்னையும் சட்டத்தில சாட்சியா சேக்கப் பாத்தார். என்னத்தை எழுதிறது எண்டு தெரியாம எதையோ கிறிக்கிக் குடுக்க, வெளீல போய் உந்த டாக்குத்தர் சரியில்லை நான் கொழும்பில போய்க் காட்டப்போறன் எண்டிட்டுப் போனார். ஒரு நாள் இரவு திடீரெண்டு நட்பின் அழைப்பொண்டு “ உடன வந்தா எங்க patient பாப்பீங்களா, மகனுக்கு முதுகில அடிச்சிட்டார் மாஸ்டர், அவன் நோகுதெண்டு இப்ப அழுறான்”எண்டு சொல்லத்தொடங்கி பிறகு நோவை விட்டிட்டு , “என்டை பிள்ளையை எப்பிடி அடிப்பார், நான் உடனயே principalக்கும் சொல்லீட்டன்” எண்டு கதை சொல்லி முடிக்க பிள்ளை நோ மறந்து நித்திரையாகீட்டுது எண்டு நெக்கிறன். இவதான் வழக்காம வேற ஆராவது சொல்லேக்க அடிச்சது சரியெண்டு வக்காளத்துவாங்கிறவ , ஆனாலும் தன்டை மோனுக்கு எண்டோன்ன வாத்திபிழை அவன் நல்லபெடியன் சரியான அமைதி எண்டு அவனைப் பத்தின பட்டோலையை நீட்டியே வாசிச்சா. 88 எண்டு நெக்கிறன் சுண்டுக்குளிச் சந்தீல இந்தியன் ஆமி எங்கடை பள்ளிக்கூட Principalஇலும் பாக்க strict ஆ இருந்த காலம். நாங்கள் கொஞ்சப் பேர் பள்ளிக்கூடத்துக்கு வேளைக்கு வந்து மூலை வகுப்பில நிண்டு “ Recky” எடுக்கிறனாங்கள்; அவங்களை இல்லை சுண்டுக்குளிப் பெட்டைகளை. ஒரு பக்கம் prefects க்கும், ஒரு பக்கம் வாத்திமாருக்கும் sentry போட்டுத்தான் Recky எடுக்கிறது. எல்லாரும் வரிசையா வாங்கில ஏறி நிண்டு பாக்கிறது. அவங்கடை புண்ணியத்தில சுண்டுக்குளிச் சந்தீல எல்லாப் பெட்டைகளும் இறங்கி வரிசையா நடந்தும் சைக்கிளை உருட்டிக் கொண்டும் போறதால கனநேரம் கண்ணுக்கு குளிரச்சி . பூக்களை ரசிக்கேக்க குளவிக் கூட்டுக்க கல் எறிஞ்ச மாதிரி ஆரோ ஒருத்தன் எறிஞ்ச கல்லு பொம்பிளை ஆமிக்கோ இல்லை ரீச்சருக்குப் பட்டிச்சோ தெரியேல்லை அடுத்த நாள் வகுப்பு முழுப்பேரையும் கூப்பிட்டு “ ஆர் செய்தது எண்டு சொல்லித் தாங்கோ எண்டு ஒரு கருணா இருக்க மாட்டானா எண்டு தனத்தார் தேட, கடைசிவரை முள்ளிவாய்க்காலில ஒண்டா ஒருந்த மாதிரி நாங்க நிக்க, காட்டிக்குடுக்காட்டிப் பிரச்சினை வரும் எண்ட தனத்தாரின்டை வெருட்டு எடுபடாமப் போக, நாலு பிரம்பு முறிஞ்சும் எல்லாரும் சிரிச்சுக்கொண்டு வகுப்புக்கு வந்தம். அடுத்த பாடம் இங்கலீஸ் படிப்பிக்க வந்த Alex Master , நடந்ததை கேட்க சரி இந்தாளும் வெளுக்கப் போகுதாக்கும் எண்டு நெக்க “ , I like you spirit “ எண்டு சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. வாத்தி அடிச்சது “செய் குளப்படீக்காய்” இருந்த காலம். போன முறை செய்யாத குளப்படிக்கு அடிவாங்கினவன் இந்தமுறை தன்டை குளப்படிக்கு வேறொருத்தன் அடிவாங்க விளங்கினான் வாத்தி அடிக்கிறது ஆளுக்கில்லை சிவபருமானுக்கு பாண்டியன் குடுத்த மாதிரித் தான் இந்த அடியும் முழு வகுப்புக்குத்தான் எண்டு. Friend க்காய் வாங்கின அடி ஒரு கடி மாங்காயில் அடங்கிப் போக வாத்தீன்டை பிரம்படி இனிப்பாய் மாறிச்சுது. அதோட அடிச்ச வாத்தி அண்டே மறந்தாலும் அதைக் கேள்விப்பட்டா அம்மா அந்தக்கிழமை முழுக்க கலைச்சுக் கலைச்சு இன்னும் வெழுப்பா எண்டதால கன அடிகள் வீட்டுக்குப் போகாமல் வகுப்புக்குள்ளயே சமரசப்பட்டிச்சுது. அடிச்சவாத்தி அடுத்தநாளும் முன்னுக்குக் கூப்பிட சரி இண்டைக்கும் அடிதான் எண்டு வாத்தியையும் திட்டிக் கொண்டு கையைத் தடவித்தடவிப் போக , “புத்தகத்தை எடுத்து அடுத்த பாடத்தை வாசி” எண்டு சொல்லி முன்னால நிக்கவிட நான் சிறுக்க வாத்தியார் உயர்ந்து நிண்டார். இப்ப அடிக்கடி நடக்கிற “ மீண்டும் பள்ளிக்கூடம் போறம்” எண்ட நிகழ்வெல்லாத்திலேம் படிச்சதோ படிப்பிச்சதோ ஒருத்தருக்கும் ஞாபகமிருக்காது ஆனால் அடி வாங்கினவனுக்கும் அடிச்ச வாத்திக்குத்தன் தான் ஞாபகமும் கூட, demandம் கூட. வீடோ, பள்ளியோ கண்டிப்பும் தண்டிப்பும் மாணவருக்கு காவலாய் இருந்த காலம் அது. இப்ப என்னெண்டாத் தண்டனைகள் கண்டிக்கபட்டு, பெற்றவர் இன்று பொலிசாகி, சமூக வலைத்தளங்கள் நீதிபதியாகிப் போய், கடைசியில் தண்டனைகள் குற்றங்களாக்கப் பட்டு நிக்கிற காலம் இது. அடிச்துக்கெல்லாம் காரணம் சரியா இல்லாட்டியும் அடி வாங்கின நான் சரியாகீட்டன் ஏனெண்டால் அடி கூட தடுப்பூசி மாதிரித்தான் வருத்தம் வர முதலே போட்டால் தான் நல்லம், வருத்தம் வராது வந்தாப்பிறகு ஊசி போட்டுப் பிரியோசனமிருக்காது. இவை யாவும் நிஜமே Dr. T. Gobyshanger யாழ்ப்பாணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.