Everything posted by தமிழ் சிறி
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்றைய தினம் (18) நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இன்று (18) காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது. இதேவேளை, இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் வவுனியாவிலும் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று இருந்தது. இதேவேளை, மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1432209
-
சிரிக்கலாம் வாங்க
- தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
சுவியர்... அடுத்து, அடுத்து நட்டம் வரும்போதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கு. 😎- தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
👉 https://www.facebook.com/watch?v=744327178257931&locale=de_DE 👈 👆 கைதட்டல்களுடன் சந்தோஷமாக அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட். மேலே சென்ற சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் சோகம்..! Polimer News- தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
இந்தியாவிற்கு பாகிஸ்தானுடனான ஆபரேசன் சிந்தூரிலும் தோல்வி, இஸ்ரோவின் ராக்கெட்டிலும் தோல்வி… என்ன கஸ்ரகாலமப்பா. @goshan_che 😂- தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த... போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் கண்ணீர் கலந்த, நினைவு அஞ்சலிகள். 🙏- தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்! இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (18) அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ (ISRO), இன்று PSLV-C61 மூலம் EOS-09 என்ற 101ஆவது விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. குறித்த விண்கலம் 4 கட்டங்களாக செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது அதில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 232 வது கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இது தொடர்பான ஆய்வுக்கு பின்னர் விரிவான அறிக்கை வழங்கப்படும் என இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த விண்கலத்தில் சரியாக 8 நிமிடம் 13 செக்கன்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432197- நம்பிக்கை துளிர்க்கிறது
வணக்கம், நல்ல ஒரு கவிதையுடன் அறிமுகமாகி உள்ளீர்கள். உங்களை யாழ்.களம் அன்புடன் வரவேற்கின்றது. உங்கள் வரவு, நல் வரவாகட்டும்.- கருத்து படங்கள்
- 16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன்.
16ஆவது மே 18இல் நீதிக்கான போராட்டம் – நிலாந்தன். நீதி கிடைக்காத 16ஆவது ஆண்டு.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலை நீதிக்கான போராட்டம் என்று வர்ணிக்கின்றார்கள். ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டமானது தொடர்ச்சியானதாக, செறிவானதாக பெருந் திரள் மயப்பட்டதாக இல்லை.அவை அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் போராட்டங்களாகத்தான் காணப்படுகின்றன. கடந்த 16 ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருப்பது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டும்தான். அவர்களுடைய போராட்டம்தான் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியானது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்கள் உலகின் கவனத்தை ஈர்க்கத்தக்க விதத்தில் தென்னிலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அல்லது தென்னிலங்கைக்கு நோகக் கூடிய விதத்தில் எவ்வளவு தூரம் போராடியிருக்கிறார்கள்? சில “எழுக தமிழ்கள்”,ஒரு “பி ரு பி”,அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்கள், தமிழ்ப் பொது வேட்பாளர் போன்றவை… தவிர நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தொடர்ச்சியானதாகவோ அல்லது தென்னிலங்கையை அசைக்கக் கூடியதாகவோ இல்லை. ஏன் ? ஏனென்றால் கடந்த 16 ஆண்டு கால தமிழ் அரசியலானது பெருமளவுக்கு கட்சிகள் மைய அரசியலாகத்தான் இருக்கின்றது.தேர்தல் மைய அரசியல்தான். பெருமளவுக்குத் தேர்தலை நோக்கியே கட்சிகள் உழைக்கின்றன .அதேசமயம் பொதுமக்கள் போராடும்போது அல்லது பாதிக்கப்பட்டவர்கள் போராடும் போது அல்லது மக்கள் அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது கட்சிகள் அவற்றில் இணைக்கின்றன.நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்கத் தேவையான ஒரு அரசியல் பேரியக்கம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னை ஓர் அரசியல் இயக்கம் என்று கூறிக் கொண்டது. தமிழ்த் தேசியப் பேரவையையும் அது அவ்வாறு தான் தன்னை அழைக்கின்றது. ஆனால் நடைமுறையில் அவை தேர்தல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான். பொது வேட்பாளருக்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பும் ஒரு பேரியக்கமாக அடுத்தகட்ட வளர்ச்சியைப் பெறவில்லை. இவ்வாறு தமிழ்மக்கள் மத்தியில் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத ஒரு வெற்றிடத்தில், கட்சி மைய அரசியலுக்கு ஊடாக நீதிக்கான போராட்டத்தை முழு அளவுக்கு தாக்கமானதாகவும் செறிவானதாகவும் தொடர்ச்சியானதாகவும் முன்னெடுக்க முடியாத ஒரு நிலைமைதான் காணப்படுகிறது. தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் போராடவில்லை என்று இல்லை. ஆனால் அந்தப் போராட்டங்கள் ஒரு மையத்தில் இருந்து ஒருங்கிணைக்கப்படவில்லை. எல்லாப் போராட்டங்களையும் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கும் மையக் கட்டமைப்பு இல்லை. தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அப்படித்தான். அங்கேயும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை. கடந்த 16 ஆண்டுகளிலும் நீதிக்கான போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அடைவுகளைப் பெற்றிருப்பது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான். இன அழிப்புக்கு எதிரான தடைகள்,தீர்மானங்களை நிறைவேற்றியதிலும் சரி; இன அழிப்பு நினைவுச் சின்னங்களை நிறுவியதிலும் சரி; இன அழிப்பை அனைத்துலக மயப்படுத்தியதிலும் சரி; இன அழிப்பை நோக்கி ஐநாவும் உட்பட மனித உரிமை அமைப்புக்களின் கவனத்தை குவிய வைப்பதிலும் சரி; இன அழிப்பு ஆவணங்களை வெளியிடுவதிலும் சரி; ஒப்பீட்டளவில் அதிகம் உழைப்பதும் முன்னணியில் நிற்பதும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தாயகத்தோடு ஒப்பிடுகையில் அதிகம் சுதந்திரமான,செல்வச் செழிப்புள்ள ஒரு சூழலுக்குள் வாழ்கின்றது. சுதந்திரமான ஒரு சூழலுக்குள் வாழ்வதால் அவர்கள் இன அழிப்புக்கு எதிராக தாயகத்தை விடவும் ஒப்பீட்டளவில் வினைத்திறனோடு போராடக்கூடியதாக உள்ளது. அதனால் நீதிக்கான ஈழத் தமிழர்களின் கடந்த 16 ஆண்டு காலப் போராட்டத்தில் போராட்டத்தின் கூர்முனை போல காணப்படுவது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் தான். ஆனால் அங்கேயும் ஒருங்கிணைவு இல்லை. மைய அமைப்பு இல்லை. தமிழர்கள் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்பவும் தமது கொள்ளளவுக்கு ஏற்பவும் அங்குள்ள தனிப்பட்ட நபர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு போன்றவற்றுக்கு ஏற்பவும் வெவ்வேறு பரிமாணங்களில் நீதிக்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள். அங்கே ஒரு மைய அமைப்பு கிடையாது. ஐநா மையச் செயற்பாடுகளிலும் சரி ராஜதந்திர மட்டச் செயற்பாடுகளிலும் சரி இன அழிப்புக்கு எதிரான ஏனைய எல்லாச் செயற்பாடுகளிலும் அங்கே ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாத நிலைமைதான் காணப்படுகிறது. இந்த விடயத்தில் தாயகத்தின் தொடர்ச்சியாகத்தான் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பும் காணப்படுகின்றது. அது மட்டுமல்ல, மேற்படி செயல்பாடுகளில் ஒரு அடிப்படையான தலைகீழ் பொறிமுறை உண்டு. அது என்னவெனில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன அழிப்புக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் யதார்த்தத்துக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகின்றவை.அவை தாயகத்திலிருந்து வழிநடத்தப்படுகின்றவை அல்ல. மாறாக இன அழிப்புக்கு எதிரான நீதிக்கான போராட்டம் என்பது தாயகத்திலிருந்துதான் வழிநடத்தப்பட வேண்டும். ஆனால் நடைமுறை அவ்வாறு இல்லை. அதற்கு ஒரு பலமான காரணம் உண்டு. தாயகத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் உண்டு. அரசாங்கமும், ஏன் எதிர்க்கட்சிகளும்கூட நாட்டில் நடந்தது இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அண்மையில் கனடாவில் இன அழிப்பு நினைவுச் சின்னம் நிறுவப்பட்ட பொழுது அதற்கு எதிராக மஹிந்த குடும்பத்தின் சார்பாக நாமல் ராஜபக்ஷ என்ன சொன்னார்? ராஜபக்சகளின் வழக்கறிஞரும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆகிய அலி சப்ரி என்ன சொன்னார்? எனவே இன அழிப்புக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாயகத்தில் உள்ள கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் சில அடிப்படையான வரையறைகள் உண்டு. இது காரணமாகவே அவ்வாறான நடவடிக்கைகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிகம் வினைத்திறனோடு முன்னெடுக்கப்படுகின்றன. அதன் விளைவாகவே அமெரிக்கக் கண்டத்தில் இன அழிப்புக்கு எதிரான தடைகளும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தாயகத்துக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிக தொகையில் வாழ்வது கனடாவில் ஆகும். அதனால் அங்கு சக்தி மிக்க தமிழ் வாக்காளர் தொகுதி ஒன்று எழுச்சி பெற்று வருகிறது. இது கனடாவின் வெளியுறவுத் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறக்கூடும்.சில மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவும் அவ்வாறு தடைகளை விதித்திருக்கின்றது. இவ்வாறாக கடந்த 16 ஆண்டுகளாக இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ராஜதந்திர வெற்றிகளை புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகம் பெற்றிருக்கின்றது. எனினும் அவை முழுமையானவை அல்ல. இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கடந்த 16 ஆண்டுகளிலும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் மெது மெதுவாகவே தமிழ் மக்கள் முன்னேறி வருகிறார்கள். ஐநா இன்றுவரையிலும் இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.மேலும், நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் தாயகத்திலிருந்து வழிநடத்தப்படவில்லை. தாயகத்திலும் அதை வழிநடத்தத்தக்க மைய அமைப்பு இல்லை. இதனால் கடந்த 16 ஆண்டு கால நீதிக்கான போராட்டத்தில் பொருத்தமான ஒருங்கிணைப்புகள் இல்லை. நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் உலக சமூகத்தை தங்களை நோக்கித் திரட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். உலகில் தமக்கு நட்பாக உள்ள நாடுகளின் ஆதரவையும் நிறுவனங்களின் ஆதரவையும் திரட்ட வேண்டியவர்களாகக் காணப்படுகிறார்கள். அவ்வாறு உலகத்தைத் திரட்டுவது என்றால் முதலில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஒரு தேசமாகத் திரட்டி கொள்ள வேண்டும்.ஆனால் தமிழ் மக்கள் தாயகத்தில் தங்களை ஒரு பலமான மக்கள் கூட்டமாக, தேசமாகத் திரட்டுமளவுக்கு தமிழ் தேசியக் கட்சி அரசியல் இல்லை.நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளும் அதன் பின்னரான அரசியல் உரையாடல்களும் அதைத்தான் காட்டுகின்றன. வாக்களிப்பில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத்தான் நிற்கிறார்கள்.ஆனால் கட்சிகள் அவர்களை வாக்காளர்களாகப் பிரித்து வைத்திருக்கின்றன. இதுதான் 16 வது மே 18 இல் ஈழத்தமிழ் சமூகத்தின் கள யதார்த்தம். https://athavannews.com/2025/1432176- சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ.
சின்னக் கதிர்காமர் என்ற பட்டமும் சுமந்திரனுக்கு உண்டு. கொடுத்த பட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், சொந்த இனத்திற்கு குழி பறித்துக் கொண்டு இருக்க வேண்டும்.- மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் மிதந்துவந்த நினைவு தூபி !
மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் மிதந்துவந்த நினைவு தூபி ! மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு தூபிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மிதக்கும் தூபி நேற்று (17) இரவு ஒன்பது மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . மின் விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் இரு மிதக்கும் வகையிலான தமிழின அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை அவதானித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டதுடன் அங்கு வந்த புலனாய்வு பிரிவினர் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். சுமார் நான்கு அடி கொண்ட சதுர வடிவில் முள்ளிவாய்காலில் அமைந்துள்ள நினைவு தூபி புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் எழுதப்பட்டிருந்தததாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு அருகில் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மெழுகுவர்த்தி போன்ற வடிவிலான மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1432170- தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவின் வாகனம் மீது துப்பாக்கி சூடு : முக்கிய ஆவணங்கள் பறிப்பு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு! நாரஹேன்பிட்டி பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த காரின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டின்போது துசித ஹல்லோலுவவுடன் காரில் சாரதியும் சட்டத்தரணியும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் துசித ஹல்லோலுவவுக்குச் சொந்தமான கோப்பை (file) யாரோ திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் , துசித ஹல்லோலுவ மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1432161- ருமேனியா சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி!
ருமேனியா சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி! ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இத்தொடரில் இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை போல ஏனைய வீரர்களும் திறமையை வெளிப்படுத்தினர். 3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் , வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஏனைய வீரர்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதேவேளை, இந்த தொடரில் குகேஷ் 6 வது இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432137- இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் 146 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!
இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் 146 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆகாயப்படை நடத்திய தாக்குதலில் குறைந்தது 146 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதியில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் மிகவும் கடுமையானவை என கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , இரண்டு நாள்களுக்கு முன்னர் தமது மத்திய கிழக்கு பயணத்தை நிறைவேற்றியதை அடுத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலில் மேலும் 58 பேர் கொல்லபட்டதாகவும் மேலும் பலர் கட்டட இடிபாடுகளுக்கிடையே புதையுண்டு கிடப்பதாகவும் வடக்கு காஸாவிலுள்ள இந்தோனீசிய மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தாக்குதல்களில் 459 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1432164- அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென சூறாவளி ஏற்பட்ட நிலையில் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கென்டக்கி, மிசோரியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இதுவரை சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிசோரி மாகாணத்தில் சென்ட் லூயிஸ் (St. Louis) நகரில் மாத்திரம் சுமார் 5,000 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மரங்கள் முறிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் பல இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சூறாவளி தாக்குதலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1432173- அமெரிக்க சிறைச் சாலையிலிருந்து தப்பிச்சென்ற 10 கைதிகளால் பரபரப்பு!
அமெரிக்க சிறைச் சாலையிலிருந்து தப்பிச்சென்ற 10 கைதிகளால் பரபரப்பு! அமெரிக்காவின் நியூ ஓர்லின்ஸ் (New Orleans) சிறைச் சாலையிலிருந்து 10 கைதிகள் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைதிகள் நேற்றையதினம் (16) நள்ளிரவுக்குப் பின் கழிவறைச் சுவரை உடைத்துத் தப்பி சென்றுள்ளதாக அந்நாட்டு சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்ற பகுதியில் காணப்படுகின்றமையினால் இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பிச் சென்ற 10 கைதிகளில் ஒன்பது பேர் ஆபத்தானவர்கள் என்றும் அவர்களிடம் ஆயுதம் இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைதிகளை கைது செய்வதற்கு அந்நாட்டு பொலிசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தப்பிச் சென்ற கைதிகளில் சிலர் கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1432133- 10 இலட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த ட்ரம்ப் திட்டம்
யாருடைய காணிக்குள்…. யார், யாரை… குடியமர்த்துவது. 😎- வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு.
நான் ஒரு சட்டத்தரணியாக இருப்பதால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையாகத் தெரியவில்லை - 2015 செப்டெம்பர் ஜெனிவாவில் சுமந்திரன்... சுவிஸ் அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர். இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ குறித்தும் அது பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பார்களா என்பது பற்றிய கேள்வி திரு.லதன் என்பவரால் கேட்கப்பட்டது. திரு.சுமந்திரன் இதற்கு பதிலளிக்கும் பொழுது, ” …‘இனப்படுகொலை’ என்று பேசியதால் பல்வேறு விடயங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம். இங்கு நடந்தது இனப்படுகொலை என்று முடிவு செய்வது அரசியல் அரங்கு அல்ல, மாறாக அது நீதிவிசாரணையிலேயே முடிவு செய்யப்படவேண்டும். மனித உரிமை ஆணையாளர் கூட அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கும் இதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாக தோன்றவில்லை. இதை நாம் இனப்படுகொலை என்று சொல்லமுடியாது. இதை கவனத்தில் எடுக்காமல் இனப்படுகொலை என்று பேசுவதால் நாம் இன்று பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்… ” இவ்வாறு சொன்ன சுமந்திரன் இன்று இனப்படுகொலை பற்றி பேசி கஞ்சியும் குடிக்கிறார். சுமந்திரன் தலைமையிலான தமிழரசுக்கட்சிக்கே மக்கள் இன்றும் அதிகமாக வாக்களித்துள்ளனர். விடுதலைப்போரையே ஏற்றுக்கொள்ளாத சுமந்திரனை வைத்துக்கொண்டு தமிழ் மக்கள் ஒருபோதும் இனப்படுகொலைக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. யாழ் அன்ரனி- சிரிக்கலாம் வாங்க
👉 https://www.facebook.com/100076314756096/videos/1032250969007183 👈 நல்ல காலம்.... இதையும், ஒருவரும் பார்க்கவில்லை. 🤣 @suvy 😂- இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை லொறிகள் - விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன
இங்கு நீண்ட தூரப் பயணங்களுக்கு இரண்டு சாரதி இருப்பார். அதிலும் ஒரு ஒருவர் ஓடும் நேரம் அவரது டிஜிட்டல் முறையில் கணக்கு எடுக்கப் பட்டுக் கொண்டு இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் இடைவேளை எடுக்காவிட்டாலோ, எட்டு மணித்தியால ஓய்வு எடுக்கா விட்டாலோ... அவருக்கு தண்டப் பணம் அறவிடப் படும். அந்த டிஜிட்டல் பதிவுகளை பொலிஸார் ஒரு வருடம் கடந்தும் பார்த்தால் தண்டனை கிடைக்கும். ஆதலால்... சாரதிகள் மிக, மிக அவதானமாக இருப்பார்கள். குற்றம் செய்து விட்டு... பொலிசை ஏமாற்ற முடியாது என்பது சிறப்பு. அதனால்... இங்கு விபத்து ஒப்பீட்டளவில் மிகக் குறைவு.- மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
கவி அருணாசலம் உங்களது முதல் அனுபவம் இப்படி ஒரு சோகத்தில் முடிந்தது கவலை என்றாலும், நல்ல வர்ணனையுடன் மண்வாசனைக்குரிய கதையை கேட்ட திருப்தி ஏற்பட்டது.- தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்!
தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த வீதி விபத்தில் உயிரிழந்தார்! தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த கபரணை வீதி விபத்தில் உயிரிழந்தார். திருகோணமலை கந்தளாயை பகுதியை சேர்ந்த தேசிய ஊடகவியலாளர் ப்ரியான் மலிந்த (வயது 34), இன்று அதிகாலை கபரணை-திருகோணமலை வீதியில் கல்வங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இரத்தினபுரியில் இருந்து கந்தளாயில் உள்ள தனது இல்லத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் ஊடகவியலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெரியாத வாகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் இடத்தைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தப்பி சென்றவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1432123- இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை லொறிகள் - விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன
இலங்கை வீதிகளுக்கு... லொறியின் உடல் பாகத்தில் தயாரிக்கப் பட்ட பேரூந்துகளே பொருத்தமாக இருக்கும். பயணிகளுக்கு என்று பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்ட பஸ்களை இலங்கையில் ஓடுவதற்குரிய சாலைகள் எல்லா இடமும் இல்லை. முதலில் நல்ல சாலைகளை அமையுங்கள், சாரதிகளுக்கு நல்ல பயிற்சி கொடுங்கள், முக்கியமாக சாலி விதிகளை மீறுபவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தண்டனை வழங்குகள், முக்கியமாக சாரதிகள் எட்டு மணித்தியாலம் வாகனம் ஓடினால்... அடுத்த எட்டு மணித்தியாலம் வேறு ஒருவர் ஓடக் கூடியமாதிரி ஆட்களை ஒழுங்கு பண்ணுங்கள். இது பொதுமக்களின் உயிருடன் சம்பந்தப் பட்ட விடயம். மேற்கு நாடுகள் மாதிரி பார்த்து, பார்த்து நிறைய வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். சும்மா.... அரசியல்வாதிகள் மாதிரி, வாயாலை நெடுக வடை சுட்டுக் கொண்டு இருக்க முடியாது.- நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு வந்த கப்பலில் குஷ் போதைப்பொருளுடன் சென்னையைச் சேர்ந்தவர் கைது!
மக்கள்... மலிவான விலையில், நிறைய பொருட்களை கொண்டு செல்லலாம் என மகிழ்ச்சியில் இருக்க... இந்த போதைப் பொருள் கடத்துபவர்களின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது. - தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.