Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக பலமற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இல. SC/FR/112/25 இல் மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொண்சேகா, லக்ஷ்மணன் ஜெயக்குமார், நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர். Athavan Newsகாணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின்...காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவ...
  2. ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்! ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 12 பில்லியன் டொலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடு சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1437375
  3. செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு! செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது இதன்போது சிறு குழந்தையின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் அவைகள் அகழ்ந்து எடுக்கப்படவுள்ளன. அதேவேளை அகழ்வு பணிகளை 45 நாட்கள் முன்னெடுக்க நிதியினை விடுவிப்பதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , அதற்கான நிதி எதிர்வரும் திங்கட்கிழமையே கிடைக்கப்பெறும் எனவும் , 45 நாட்கள் அகழ்வு பணிகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் , 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் நடைபெற்று , பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437316
  4. நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்! பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார். தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437333
  5. இவர்கள் கூட்டமாக செல்ல எத்தனையோ பிரச்சினைகள் தமிழ் மக்களிடம் உள்ளது. இவர்கள்... தமது இருப்பை காட்ட வேண்டும் என்று நினைத்தால்.... தையிட்டி விகாரைக்குப் போய், தமது எதிர்ப்பை பதிவு செய்யச் சொல்லுங்கள்.
  6. நடிகர் கிருஷ்ணா பிணை கோரி மனு! போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்இ ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் நேற்று காலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதோடு அவர் இ நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு பிணை வழங்குமாறு கோரி சிறப்பு நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437321
  7. கனடாக்காரர் கறுப்புக் கொடி காட்டுவினம் என்று பார்த்தால், தேத்தண்ணி குடிச்சுக் கொண்டு இருக்கினம். 😂 🤣
  8. நிழலி… ட்றம்பின் ஆட்சியை, இரண்டாக பிரிக்கலாம். 1) பைடனுக்கு முன். 2) பைடனுக்கு பின். பைடனுக்கு முன்… ட்றம்பின் ஆட்சியில் போர் வெறி இல்லாமல் உலகம் அமைதியாக இருந்தது. இடையில் வந்த பைடன், உக்ரைன் - ரஷ்யப் போருக்குள் உலகத்தையே இழுத்து விட்டு போர் வெறி கொண்டு ஆடி, அதன் மறைமுக பாதிப்புக்களை ஒவ்வொரு ஐரோப்பியருக்கும் கொடுத்தது மிகவும் எரிச்சலூட்டியதால் ட்றம்ப் ஆதரவு நிலை எடுத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி ட்றம்பின் இரண்டாவது ஆட்சி அமையாமல்… அவரின் செய்கைகள் மிகவும் அருவருக்கத்தக்க, கேலித்தனமாக உள்ள ஆட்சியாக அமைந்துள்ளதை பார்த்து… ட்றம்புக்கு எதிர் நிலை எடுக்க வேண்டி வந்துள்ளது. 🙂 நாம் வெட்டிய கிணற்றில்…. உப்புத் தண்ணீர் வந்தால், அதனை குடித்துக் கொண்டு இருக்க முடியாது தானே… 😂 அதனை மூடி விட்டு, அடுத்த கிணற்றை வெட்ட வேண்டியதுதான். 🤣 அரசியலில்…. இதெல்லாம் சகஜமப்பா. 😂 🤣
  9. அமைச்சரே... போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையையோ, அதற்கான ஆதாரங்கள் திரட்டுவதையோ அனுமதிக்க மாட்டோம். இனப் படுகொலை என்ற என்ற பதம் பிரயோகிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை, இதையெல்லாம் சொன்ன அதே அரசாங்கத்தில் இருந்துகொண்டு... அமைச்சர் செம்மணிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு, நான் சென்றால் அது சிறப்பு என்றும் சொல்கிறார். யாழ்ப்பாணம்.com
  10. விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும் சும்மா....கலக்கு கலக்கி விட்டார்.. மெக்ரான் ....... தங்கள் நாட்டுக்கான....சட்டதிட்டங்களில்... கலக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 👌👌👌 இஸ்லாத்திற்கு புதிய சட்டங்க ளை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ...... புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மெக்ரான்.. புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ..... 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் ..... அதிபர் மெக்ரான் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்...... 1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே,..... பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும்....., இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது...... 2.மத அரசியல் நடத்த இஸ்லாத் திற்கு அனுமதி கிடையாது....., அரசியலில் மதம் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியா து. மீறினால் சம்பந்தபட்ட நபர்களுக்கு 5ஆண்டு சிறை......, குடியுரிமை ரத்து .. மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப் படுவார்கள்...... 3.எல்லா இஸ்லாமிய குழந்தை களும் ஸ்டுடென்ட் ID எடுக்க வேண்டும்......,ஒழுங்காக வகுப்பறைக்கு வருகை தந்து.... பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்......வகுப்பு நேரத்தில் நமாஸ் செய்ய அனுமதி கிடையாது...... ஹோம்கிளாஸ்...... ,மதரசாக்களில் படிக்க அனுமதி இல்லை.... .. மீறும் பெற்றோர்களுக்கு 5 ஆண்டு சிறை,..... குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்....... 4.மதரசாவுக்கு அனுமதி கிடையாது...... இஸ்லாம் படிக்க அரசு கண்காணிப்பில் தரும்..... மதம் சார்ந்த பாடத்திட்டங்களையே படிக்க அனுமதி.....,மதம் படிப்பிக்கும் இடங்களை அரசிடம் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல்,...... பாடம் நடத்தும் வீடியோக்களை அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும்......மீறும் நபர்களுக்கு 5ஆண்டு சிறை....,குடியுரிமை ரத்து.... மற்றும் பிரான்சை விட்டே வெளியேற்றப்படுவார்கள்...... பிரான்சில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது..... இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல....., நானும் எனதும் அரசும் தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார்..... பிரான்ஸ் அதிபர் மெக்ரான்..... உலகிலேயே இந்தியா என்ற இளிச்சவாய் நாடு தான் மதச் சார்பின்மை பேசி பெரும்பான் மை மக்களை அழிக்கும் அரசியல்வாதிகள் உள்ள ஒரே நாடு....என்ற உண்மை அனைவருக்கும் உரைக்கும்படி செய்ய வேண்டும்.... Radhakrishnan Radha
  11. ஏன், மக்கள் செம்மணிக்கு வந்த ஜேவிபி ( திசைகாட்டி ) இனவாத கும்பலின் எடுபிடிகளை துரத்தி கலைச்சவை என்பதற்கும், அந்த சப்பாத்துகள் அநாதையாக்கப்பட்டதற்கும்... இந்த அமைச்சரின் கருத்துக்கும் தொடர்புண்டு என விளங்கினால்... நீயும், தமிழன் ♥ Kunalan Karunagaran
  12. நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு! அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்த மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, நேட்டோ நாடுகளின் இராணுவ செலவினத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதன்போது, உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்த பரிந்துரைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்ததுடன் இது தொடர்பாக மாநாட்டு முடிவில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437239
  13. அற்ப விளம்பரங்களுக்கு சுமந்திரன் ஆசைப் பட்டு செய்த செயல்கள் எல்லாம் அவருக்கு எதிராகவே திரும்பியது கடந்த கால வரலாறு. ஆனாலும் திருந்திய மாதிரி தெரியவில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று முன்னோர்கள் சொன்னது அவ்வளவும் உண்மை.
  14. சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது! சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா இன்று (26) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வாக்குமூலம் அளிக்க ஆணையத்தின் முன் முன்னிலையான பின்னர் அவர் காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் சந்திரகுப்தா 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனும் தொடர்புடையது. அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. https://athavannews.com/2025/1437246
  15. போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை. போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் சினிமா உலகமும் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் – நடிகைகளை பொலிஸார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் கூறிய தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டனர். இதன்போது நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவரைக் கைது செய்ய பொலிஸார் கேரளாவுக்கு விரைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று பொலிஸார் முன்னிலையில் ஆஜரானார். அவரை சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பிறகு அவருக்கு அரசு வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டிலும் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437172
  16. ஈரான் மீதான தாக்குதலை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டு பேசிய ட்ரம்! ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் தாக்கத்தை ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (25) இரண்டாம் உலகப் போரின் முடிவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அதாவது, அமெரிக்க நடவடிக்கையை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளுடன் ட்ரம்ப் ஒப்பிட்டார். இந்த தாக்குதலில் 150,000 முதல் 246,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இவர்களில் பொரும்பாலானோர் பொது மக்கள். அதேநரேம், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் கிடைக்கக்கூடிய உளவுத்துறை அறிக்கைகள் முடிவில்லாதவை என்றாலும் சேதம் கடுமையானது என்று வாதிட்டார். ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் மற்றும் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும், தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் செயற்பாடுகளை சில மாதங்கள் மட்டுமே தாமதப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அதேநேரம், அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களை “கடுமையாக சேதப்படுத்தியதாகவும்” அவற்றின் செயற்பாடுகளை பல ஆண்டுகள் பின்னோக்கிச் நகர்த்தியதாகவும் மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) தலைவர் கூறியுள்ளார். CIA இன் பணிப்பாளரான ஜான் ராட்க்ளிஃப், தாக்குதலில ஈரானின் முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறினார். இருப்பினும் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் அறிவிக்கவில்லை. அமெரிக்க தாக்குதலுக்கு பின்னரும், ஈரானின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய கூறுகள் அப்படியே இருந்ததாக பென்டகன் உளவுத்துறை நிறுவனத்திடமிருந்து கசிந்த முதற்கட்ட மதிப்பீடு தெரிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. https://athavannews.com/2025/1437195
  17. நோபல் பரிசு எல்லாம் கெஞ்சிக் கேட்டு பெறுகின்ற கேவலமான நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். . 😂
  18. இலங்கை சொற்களுக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி கொடுத்த அங்கீகாரம்! ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது. குறிப்பாக கொத்து ரொட்டி, கிரிபாத் உள்ளிட்ட பல பிரபலமான இலங்கை வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, ‘பைலா’ மற்றும் ‘பப்பரே’ என்ற கலாச்சாரச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய ஆங்கில பயன்பாட்டில் இலங்கை உணவு வகைகள் மற்றும் மரபுகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் குறிக்கிறது. புதிய உள்ளீடுகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமகால பயன்பாட்டை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி ஆசிரியர் குழு ஏற்கனவே உள்ள பல இலங்கை ஆங்கில சொற்களையும் திருத்தியுள்ளது. அகராதியில் இணைத்துக் கொள்ளப்பட்ட புதிய இலங்கை சொற்கள் அஸ்வெத்துமைஸ், அவுருது, பைலா, கிரிபத், கொத்து ரொட்டி, மல்லுங், ஒசரி, பப்பரே, வளவ்வ, வட்டலப்பம். திருத்தப்பட்ட சொற்கள் : சிலோன் காபி, சிலோன் டீ, சிலோனீஸ், கொழும்பு, டகோபா, கங்கானி, சிங்களி, தமிழ், யுஎன்பி, வேத்தா, விஹாரா மற்றும் பிற. இந்த புதுப்பிப்பு உலகளாவிய மொழியியல் நிலப்பரப்புகளில் இலங்கை கலாச்சாரம் மற்றும் மொழியின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1437181
  19. ஈழத் தமிழரை கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கை விட்டுவிடாதீர்கள்! -மனோ கணேசன். ”ஈழத்தமிழரைக் கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கைவிட்டு விடாதீர்கள்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிற்கும், எதிர் கட்சி தலைவர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடை பெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐநா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51வது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு கோருகின்றேன். இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பிலும் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன். இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437173
  20. மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை ஆன்லைனில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையல், ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மெக்ஸிகோ நகரத்தின் வடமேற்கே உள்ள குவானாஜுவாடோ, பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாநிலத்தில் 1,435 கொலைகள் நடந்துள்ளன. இது வேறு எந்த மாநிலத்தையும் விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437154

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.