Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அலஸ்காவில் மாயமான விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழப்பு. அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம் உனலக்ளீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு சென்ற செஸ்னா 208 பி என்ற விமானம் மாயமாகியிருந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானி உள்பட 10 போ் பயணித்திருந்தனர். நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றபோது அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியதன் காரணமாக விமானத்தை இயக்குவதில் விமானிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயல்வதற்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனையடுத்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்தனர். பின்னர் மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. மீட்பு படையினருடன் இணைந்து விமானத்தை தேடும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர். இந்நிலையில், மீட்புப்பணியாளர்கல் ஹெலிகாப்டர் மூலம் விமானத்தின் கடைசியாக சிக்னல் வந்த இடத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அலாஸ்கா கடல் பனியில் விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டனர். இதனால் அவர்கள் இரண்டு மீட்பு நீச்சல் வீரர்களை கீழே இறக்கி விசாரணை நடத்தினர். அந்த விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்து சம்பவங்கள் நடந்து 69 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420354
  2. தமிழ் அரசியல்வாதியின்... phd. பட்டத்தின் விளக்கம் அருமை. 😂
  3. சி.வி.கே. க்கு…. கொம்பிளைண்ட் கொடுக்கச் சொல்லி, “கீ” கொடுத்து விட்டவர் மகா கிறுக்கர். 😂 🤣
  4. ஒருவர் காரில் தன் மனைவி, அம்மாவுடன் சென்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்து கொண்டிருந்தது. அவரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவரது காரை முந்திக் கொண்டு சென்று அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் அவரிடம் "குட் ஈவ்னிங் சார்.." என்றார். அவர்: ''குட் ஈவ்னிங் ஏதாவது பிரச்சனையா..?" என்று கேட்டார். போலிஸ்: ''நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணிநேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒருமைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். அவர்: சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டுசொன்னார், ''இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயமா எடுத்துடணும்''. போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி '' சாரி சார் தப்பாக நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு வண்டி ஓட்டினாலே இப்படித்தான் எல்லோரிடமும் உளறுகிறார்'' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், ''நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்போ எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்". படித்ததில் பிடித்தது.
  5. வருமானம் தருகின்ற உணவுகளில் செரிமானம் தராத பரோட்டாவே முதலிடம்! சிலர் பரோட்டா என்பர் சிலர் புரோட்டா என்பர் இதில் எது சரியென்று தெரியாது ஆனால் இவ்வுணவே சரியில்லை என்பதுதான் உண்மை! இது பண்டை காலத்து உணவல்ல... அண்டை நாட்டு உணவு! வயிற்றை நிரப்பி வாழ் நாளை குறைக்கும்! சுண்டி இழுக்கும் அண்டிப் போகாதே! இப்போதெல்லாம் எமதர்மன் மாடு மீது வராமல் மைதா மாவுமீது வருகிறான்... எச்சரிக்கை!!! 😋 😋.... 🙂 படித்ததில் பிடித்தது.
  6. முனிவரின் தவத்தை கலைத்த பெண். 😂
  7. 👉 https://www.facebook.com/watch/live?ref=watch_permalink&v=991840679550323 👈 சந்தேக நபர்கள்... கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது எடுக்கப் பட்ட காணொளி.
  8. இந்தியர்களையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது உண்மை. 👍 முன்பு ஒப்பீட்டளவில் இலங்கையில் ஊழல் என்பது மிக மிக அரிதாகவே இருந்தது. அதனை மிக பாவப் பட்ட ஒரு செயலாகவே பல அரச அதிகாரிகள் கருதினார்கள். ஆனால் இப்போ... எங்கும் ஊழல் பரவி உள்ளது என நினைக்கின்றேன். பாடசாலை அதிபர்களே... ஊழல் செய்யும் அளவிற்கு நாடு புரையோடிப் போயுள்ளது.
  9. சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மீள அழைப்பு! நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர் துபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இந்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை பொலிஸாரின் அறிவிப்பின் அடிப்படையில், இன்டர்போல் அந்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவிப்பும் பிறப்பித்திருந்தது. இதேவேளை மூன்று சந்தேக நபர்களும் இன்று UL-226 விமானத்தில் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1420286
  10. ஊழலின் பிதாமகனே கருணாநிதிதான். சர்க்கரை ஊழல் என்று ஆரம்பித்து... கூவம் ஆற்று ஊழல் என்று வேறை லெவலில் விஞ்ஞான ஊழல் செய்த ஆள். முதல் முறையாக ஊழலுக்காக இந்தியாவில் ஆட்சி கலைக்கப் பட்டதும் தி.மு.க.வின் கருணாநிதி ஆட்சி தான்.
  11. UNHRC இலிருந்து அமெரிக்கா வெளியேறுவது இலங்கைக்கு சாதகம் – சட்ட நிபுணர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இருந்து விலக அமெரிக்கா எடுத்த தீர்மானம் இலங்கைக்கு சாதகமாக அமையும் என சட்ட நிபுணர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 24 ஆ ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 58 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு இந்த மாற்றமானது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தப்படுவதிலும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கூடிய கலப்பு நீதிமன்றங்கள் போன்ற பொறிமுறைகளுக்காக வாதிடுவதிலும் அமெரிக்கா தொடர்ந்து முன்னணி பாத்திரத்தை வகித்து வருவதாக கலாநிதி மஹாநாமஹேவா சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், UNHRC இருந்து அமெரிக்கா வெளியேறுவது புவிசார் அரசியல் நிலப்பரப்பை இலங்கைக்கு சாதகமாக மாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வளர்ச்சியின் மூலம், எங்களின் சொந்த மனித உரிமைகள் திட்டத்தை முன்வைக்க எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பானது, எங்கள் கதை மற்றும் எதிர்கால கொள்கைகளுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கும். இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளின் ஆதரவைப் பெற்றால், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தை நாம் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1420255
  12. ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஹமாஸ் அமைப்பினர்! இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். பின்னர் அமெரிக்கா, கட்டார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்கள், பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்த தனது சொந்த அமைப்பினரை ஹமாஸ் சித்திரவதை செய்து தூக்கிலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் ஓரினச்சேர்ககை என்பது சட்டவிரோதமானது. இதற்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். ஹமாஸ் முன்னாள் தளபதி மஹ்மூத் இஷ்டிவி, ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்ததாகக் கூறி 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். ஹமாஸ் அவரை ஒரு வருடத்திற்கு சிறையில் அடைத்து சித்திரவதை செய்து, அவரது மார்பில் மூன்று முறை சுட்டு கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1420193
  13. சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு எதிராக ட்ரம்ப் பொருளாதார தடை! டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக ஆக்கிரமிப்பு பொருளாதார தடைகளை அங்கீகரிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். செவ்வாயன்று (04) அமெரிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை‍ உத்தரவினை முன்னதாக பிறப்பித்ததன் மூலம் ஹேக் நீதிமன்றம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐசிசி ஊழியர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள், அமெரிக்க குடிமக்கள் மற்றும் சில நட்பு நாடுகளின் குடிமக்கள் மீது விசாரணை அல்லது வழக்குத் தொடரும் முயற்சிகளில் ஈடுபட்டதாக உறுதிசெய்தால், அவர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்களை இந்த உத்தரவு வழங்குகிறது. காசாவில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு பிடியாணை உத்தரவுகளை பிறப்பிக்கும் கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றத்தின் முடிவின் பிரதிபலிப்பாக ஐசிசி க்கு எதிரான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வொஷிங்டனுக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த நடவடிக்கையில் ட்ரம்ப் உத்தரவில் கையெழுத்திட்டார். ட்ரம்பின் நிர்வாக உத்தரவில், ஐசிசியின் அண்மைய நடவடிக்கைகள் “ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்துள்ளது” என்று கூறியது, இது அமெரிக்கர்களை “துன்புறுத்தல், துஷ்பிரயோகம் மற்றும் சாத்தியமான கைது” ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் மூலம் ஆபத்தில் ஆழ்த்துகின்றது. இந்த மோசமான நடத்தை அமெரிக்காவின் இறையாண்மையை மீறுவதாக அச்சுறுத்துகிறது. அதேநேரம், அமெரிக்க அரசாங்கம் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நமது நட்பு நாடுகளின் முக்கியமான தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை பணிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது – என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐசிசியில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ உறுப்பு நாடுகளாக இல்லை. இந்த நிலையில் தனது நிர்வாக உத்தரவில் ட்ரம்ப், “ஐசிசியின் அதிகார வரம்பிற்கு தங்கள் பணியாளர்களை உட்படுத்தக்கூடாது” என்ற நாடுகளின் “முடிவை நீதிமன்றம் மதிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். சொத்துக்களை தடுப்பது, ஐசிசி அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அமெரிக்காவுக்குள் நுழைவதை இடைநிறுத்துவது உட்பட “ஐசிசியின் மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது அமெரிக்கா உறுதியான மற்றும் குறிப்பிடத்தக்க விளைவுகளை சுமத்தும்” என்றும் ட்ரம்ப் கூறினார். ட்ரம்ப் பலமுறை சர்வதேச நீதிமன்ற‍ை விமர்சித்துள்ளார். மேலும், அவரது முதல் பதவிக் காலத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் போர்க்குற்றம் இழைத்துள்ளதா என விசாரித்து வந்த ஐசிசி அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்தார். அந்தத் தடைகள் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தால் நீக்கப்பட்டன. ஐசிசி 2002 இல் நிறுவப்பட்டது – யூகோஸ்லாவியாவின் கலைப்பு மற்றும் ருவாண்டா இனப்படுகொலையை அடுத்து – கூறப்படும் அட்டூழியங்களை விசாரிக்க இந்த அமைப்பு வந்தது. 120 க்கும் மேற்பட்ட நாடுகள் ரோம் சட்டத்தை அங்கீகரித்துள்ளன – இது ஐசிசியை அமைத்தது – மேலும் 34 நாடுகள் அதில் இணைவதற்கு கையெழுத்திட்டுள்ளன, எதிர்காலத்தில் அவை அங்கீகரிக்கப்படலாம். https://athavannews.com/2025/1420245
  14. பாராளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து இருப்பவர்கள் ஒன்றாக இணைந்து இருக்கின்றார்கள் போலுள்ளது. தமிழர்கள் நலன் சார்ந்து வரும் பிரச்சினைகளுக்கு சிங்கள எதிர்கட்சிகளும் சேர்ந்து குரல் கொடுத்தால்தான்… இந்தக் கூட்டில் அர்த்தம் இருக்கும். இல்லையேல்… பத்தோடு பதினொன்றாக இருந்து விட்டுப் போய் விடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.