Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க. புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது” பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் விருப்பமோ கொள்கையோ அல்ல. புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் வரை நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படும். புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்தினை முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. அது தொடர்பாக நீதியமைச்சர் காரணிகளை முன்வைத்திருந்தார் அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விமான நிலையத்தில் எதிர்நோக்கிய அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இந்த விடயம் தொடர்பாக தற்போதே எனக்கு அறியக்கிடைத்தது. விமான சேவைகள் நிறுவன தலைவரிடம் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளேன்.அதுபோல் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவிடமும் நான் இந்த விடயம் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளேன். ஸ்ரீதரனின் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1417497
  2. நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டம் தயாரிப்பு! நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுப் போக்குவரத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த அரசாங்கம் எவ்வாறு தலையிட வேண்டும் என்பது குறித்தும் அதற்கு வசதிகள் அளிப்பதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. கடந்த அரசாங்கங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நிதிக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பணம் பயனுள்ள திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை தேசிய திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடிய வகையில் வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கடன்களை ஒரு வருடத்திற்குள் வசூலிப்பது குறித்தும் அந்த வர்த்தகர்களிடம் உள்ள அரிசி கையிருப்புகளை ஒழுங்குபடுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேல் தளத்தில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைத்து பிரதேசங்களுக்கும் பிரிந்து செல்லக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டார். மேலும் தற்பொழுது அமுலில் இருக்கும் நிவாரணம் வழங்கும் முறையில் குறைபாடுகள் உள்ளதாகவும் அவற்றை அடையாளங் கண்டு நிவாரணங்கள் தேவையான சமூகத்தை சரியாக அடையாளம் கண்டு, அந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். இதில் தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயத்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபோன்சு, பிரதி திறைசேரி செயலாளர் ஏ.கே. செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1417527
  3. UP Date: துருக்கி விருந்தகத்தில் தீ- 76 பேர் உயிரிழப்பு! துருக்கியில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியின் பொலு மாகாணத்தில் அமைந்துள்ள கர்தல்கயா ரிசார்ட் பகுதியில் இயங்கிவரும் கிரான்ட் கர்த்தால் என்ற 12 மாடிகளைக் கொண்ட விருந்தகத்தின் 12 ஆவது மாடியில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது குறித்த ஹோட்டலில் 238 பேர்வரை தங்கியிருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தகத்தின் 12ஆவது மாடியில் பரவிய தீ ஏனைய பகுதிகளுக்கும் பரவியதால் அறைகளில் தங்கியிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் எனவும், அப்போது மூவர் தீயில் சிக்காமல் இருக்க மாடியில் இருந்து கீழே குதித்தபோது உயிரிழந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீக்காயம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், சிலர் அட்டைகள் மற்றும் போர்வைகளை பயன்படுத்தி கீழே குதித்து உயிர் தப்பியுள்ளனர் எனவும், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், 12 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த விருந்தகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் துருக்கி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1417549
  4. அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்! அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், பணியில் இருந்த பொலிஸார் அதிகாரிகளுடன் எம்.பி.க்கு வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு பொலிஸார்கள் எம்.பி.யிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டுள்ளனர். அந்த ஆவணங்களை வழங்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அடாவடியாக நடந்து கொண்டார். இன்று (21) காலை நாடாளுமன்றத்துக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட குழு இன்று (21) முற்பகல் 11.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட குழு, ஆதாரங்களை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்துவதோடு, விரிவான அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும். இந்நிலையில் ,பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1417333
  5. யாழில் பொலிஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையில் முரண்பாடு! வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக பயணித்து ஆளுநர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதன் போது போராட்டக்காரர்கள் வடக்கு மாகாண ஆளுநரை சந்திக்க முற்பட்டனர். எனினும் நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிஸாருடன் தர்க்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் போராட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆளுநர் உறுதிமொழி வழங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1417418
  6. அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு! அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அத்துடன் இராணுவத்திலும் மாற்றுப் பாலினத்தவர்களை இணைப்பதற்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான உத்தரவுகளில் கையெழுத்திடவுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். அத்துடன் ”எல்லை விவகாரம், இயற்கைப் பேரிடர்கள், வெளிநாட்டு கொள்கைகள் எனப் பலவற்றிலும் பைடன் அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப் ”அமெரிக்கர்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை தனது நிர்வாகம் உறுதியாக பின்பற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2025/1417323
  7. மியான்மர் முஸ்லீம் முல்லைத்தீவிற்கு வந்த ஒரு மாதத்தில்.... தனது முதலாவது உற்பத்தியை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தார். போகப் போக அவர்களின் உற்பத்தித் திறன் அமோகமாக இயங்கத் தொடங்கும். முல்லைத்தீவு மக்கள்... இப்பவே, இடம் பெயர ஆயத்தப் படுத்துவது நல்லது.
  8. ரயில் மசாஜ் நல்லது தானே… அதுக்கு ஏன் வயித்தெரிச்சல் பிடித்தவங்கள்… விசாரணை செய்யப் போகிறார்களாம். இவற்றை ஊக்குவிக்காமல்… மறுத்தான் போடும்…. இப்படியானவர்களால் தான், நாடு அழிவுப் பாதையை நோக்கி செல்கின்றது. 😂
  9. சரியான பதில் பெருமாள். 😂 கணவருக்குத்தான் தெரியும்… தனது மனைவி எதனைக் கண்டு பயப்பட்டு கீழே பாய்வார் என்று… 🤣
  10. ஆமை புகுந்த வீடும், அப்புக்காத்து புகுந்த கட்சியும்…. உருப்பட்ட மாதிரித்தான். 😂 🤣
  11. வெள்ளைக்காரன் எப்படி மாடு பிடிக்கிறான் என்று பார்ப்போம் என்றால், அவரை… வயது மூப்பு காட்டி நீக்கி விட்டார்கள். 🥲
  12. கள்வர்கள்… கஸ்ரப்பட்டு களவெடுக்க மாட்டார்கள். நோகாமல்… நொங்கு தின்றுவிட்டு போய்விடுவார்கள். 😂
  13. 1956’ம் ஆண்டின் 70 வருடத்தைய தொழில் நுட்பம், இப்போது சரி வருமா?
  14. அண்மையில்… சிங்களப் பகுதி ஒன்றில், பல மில்லியன் அமெரிக்க டொலர் செலவழித்து கட்டப் பட்ட பாலத்திலிருந்த செப்புக் கம்பிகளை வெட்டி எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம் விலைவாசி உயர்ந்து, மக்களிடம் பொருட்களை வாங்கும் சக்தி குறையும் போது…. லஞ்சம், களவு, கொலை, ஏமாற்றுதல் என்று தீய வழிகளை நோக்கி மக்கள் செல்கிறார்கள். “பசி வந்திட… பத்தும் பறந்து போகும்.”
  15. எல்லோரும் அரச உத்தியோகத்தையே விரும்புகின்றனர். இலங்கையில் 18 பேரில் ஒருவர் அரச உத்தியோத்தில் இருப்பதாக வாசித்த நினைவு. இது உண்மையானால், ஏழை நாட்டிற்கு மிக அதிகம். எமது நாட்டின் கல்விப் பாடத்திட்டத்தை சீர் செய்து… எட்டாம் வகுப்புகளில் இருந்தே தொழில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது… பல சுய தொழில் முனைவோர் உருவாகுவார்கள். எல்லா அரசாங்கங்களும் தினமும் அறிக்கை மழையாக பொழிந்து, வாயால்… வடை சுட்டுக் கொண்டு இருந்தால், உலகின் முதலாவது பிச்சைக்கார நாடாக ஶ்ரீலங்கா வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
  16. அன்புத் தம்பி உங்களுக்கு ஜேர்மன் பாசை தெரியுமா. மேலே உள்ளது தரமான…. ரைமிங் பகிடி. மொழி புரியாதவர்களுக்காக…. //வீதி பழுதாகி உள்ளது என்று எச்சரிக்கை பலகை வைக்கப் பட்டுளது. அதற்கு கீழே யாரோ ஒருவர்… “அறிவித்தலுக்கு நன்றி. தயவு செய்து திருத்தி விடுங்கள்” என்று எழுதி விட்டுப் போயுள்ளார். 😂
  17. கனகபுரம் துயிலுமில்லத்தில், கூட வந்தவர்களே கூட்டி வந்தவர்களுக்கு எதிராக மாறிய சம்பவம்! மக்கள் எதிர்ப்பால் ஓடித்தப்பிய சந்திரகுமார் குழு!! கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2016 முதல் சிறப்பாக மாவீரர் நாளை எழுச்சிபூர்வமாக நடாத்திவருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இருக்கும் மாவீரர் பணிக்குழுவை மாற்ற வேண்டும் என்று EPDP சந்திரகுமாருடன் சேர்ந்தியங்கும் ஒரு தரப்பு கடுமையாக முயற்சி செய்தது. அந்த முயற்சியின் இறுதியாக இன்று 11ஆம் திகதி காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் புதிய நிர்வாக தெரிவு நடைபெறும் என்று EPDP சந்திரகுமாரின் தம்பியான தீபன் என்பவர் சமூகவலைத்தளங்களில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த நிர்வாக தெரிவுக்கு எதிராக மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன் பெருமளவான மக்களும் போராளிகளும் ஒன்றுகூடியிருந்தார்கள். அந்த நேரத்தில் புதிய தெரிவை ஒழுங்கு செய்ந தீபன், 13 பேருடன் துயிலுமில்லத்தடிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மக்களும் முன்னாள் போராளிகளும் பல கேள்விகளை தீபனிடம் கேட்டார்கள். கூட வந்தவர்களிடமும் கேட்டார்கள். (“இவளவு காலமும் சிறப்பாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மாவீர்ர நாள் நடந்துவருகிறது, பிறகு ஏன் புதிய பணிக்குழு தெரிவு?” “தமிழ்த்தேசியத்தை அழித்து புலிகளை காட்டிக்கொடுத்த இனத்துரோகி சந்திரகுமாருக்கு மாவீரர் நினைவேந்தல் செய்ய என்ற அருகதை இருக்கிறது?” “2016 முதல் இதுவரை மூன்று தடவை மாவீரர் பணிக்குழு தெரிவு செய்யப்பட்டு புதிய தலைவர் செயலாளர் தெரிவு செய்ப்பட்டு வெளிப்படையாக நடக்கிறார்கள் அதை ஏன் குழப்ப முற்படுகிறீர்கள்?” “தற்போது மக்கள் மயப்பட்டிருக்கும் மாவீரர் நினைவேந்தலை தனியுரிமையாக்கும் தேவை என்ன?” போன்ற பல கேள்விகளை கூடியிருந்த மக்கள் கேட்டார்கள். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தீபனும் கூடவந்தவர்களும் பதறினார்கள். ஒருகட்டத்தில் தீபனுடன் கூட வந்த பெண்கள் சிலர் இன்று புதிய நிர்வாக தெரிவு என்று சொல்லி தான் அழைத்தார்கள். இப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் வேலை என்று எமக்கு தெரியாது. எங்களை மன்னித்துவிடுங்கள் என்று சொன்னார்கள். பின் அவர்களே இந்த புதிய தெரிவு தேவையில்லை என்று சொன்னார்கள். தீபனுடன் வந்திருந்த EPDP சந்திரகுமாரின் கனகாம்பிகைக்குள வட்டார இணைப்பாளர் பாலன் என்பவர் புதிய தெரிவு செய்யப்பட வேண்டும் என சொல்ல வெளிக்கிட்ட போது சுற்றியிருந்த சிலர் பாலனை கடுமையாக எச்சரித்தவுடன் இருந்த இடம் தெரியாமல் பாலன் பம்மிவிட்டார். இறுதியாக மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் கடும் எதிர்ப்பினால், புதிய தெரிவு நடாத்த வந்த EPDP சந்திரகுமார் தரப்பு வேறு வழியின்றி காயங்கள் ஏதுமின்றி உயிர்பிழைத்தால் போதும் என்று வந்த வழியே திரும்பி சென்றார்கள். Monisha Kokul is with மதி தீபன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.