Everything posted by தமிழ் சிறி
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
இவன்தான் மாணவியைக் கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டவன்! இவனுடைய பெயர்: முஹமட் நஷார் முஹமட் நஷீர்.
-
மலரும் நினைவுகள் ..
- பொங்கல் சிரிப்புகள்.
- கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
கடத்தப் பட்ட மாணவியின் பெற்றோரிடம்.... கடத்தல்காரன் 50 லட்ச ரூபாய் கப்பம் கேட்டுள்ள நிலையில்... மாணவியும், கடத்தல்காரனும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.- கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்
முல்லைத்தீவில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு! தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்று முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் தைத்திருநாளுக்கான இந்த உதவி 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பார்த்தீபனின் ஒழுங்குபடுத்தலில் சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சனால் முன்பள்ளி ஆசிரியர்கள், மாவீரரின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் குடும்பத்திற்கு இந்த அரிசி பானை பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416214- சிரிக்க மட்டும் வாங்க
- ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
ஈழப்பிரியன்... ஆளுக்கு ஒரு மில்லியன் தருவதாக அமெரிக்க தேர்தலின் போது சொன்னவரா. இது எப்படி சாத்தியம். சரியான ஏமாற்றுப் பேர்வழி போலுள்ளது.- கிளிநொச்சியில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்
தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள் தயார்-ஆனால் அரிசி இல்லை! உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் ஆயத்தமாகியுள்ளனர் இன்னிலையில் தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர். சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்ததுடன் தைதிருநாளினை முன்னிட்டு இந்துக்களின் வீடுகள் சுத்தம் செய்து அலங்கரித்து வருகின்றனர். இதேவேளை தற்போது, மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகின்றது அதனால் சில மக்கள் வெள்ளை அரிசியை கொள்வனவு செய்கின்றனர்.மேலும், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1416217- இந்தியாவின் ரோ ஒற்று சேவையைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும் - துமிந்த நாகமுவ
ஏராளன்... 400 பேருக்கும் அதிகமான றோ ஸ்ரீலங்காவில் நிற்கிறது என்றால், 200 + 200 யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் நிற்கிறது. மிகுதி கண்டி, ஹம்பாந்தோட்டையில் நிற்கிறது. யாழ்ப்பாணமும், கொழும்பும் தான்... இந்தியனின், தீவிர கண்காணிப்பில் உள்ளது. 😂- இந்தியாவின் ரோ ஒற்று சேவையைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும் - துமிந்த நாகமுவ
200... ரோ ஒற்றர்கள்... யாழ்ப்பாண இந்திய தூதரகத்திலும், மிகுதி 200 கொழும்பு இந்திய தூதரகத்திலும் இருக்கின்றார்கள் என ஊர்க்கிழவி சொல்லுது. 😎 😂 🤣- கருத்து படங்கள்
- ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
- ரணில் – சஜித்தை இணைக்க முயற்சி!
- ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
சீனாவிற்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்! சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (14) முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங்(Li Qiang) மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார். அத்தோடு இந்த விஜயத்தின் போது, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறதுடன் இதன் ஊடாக இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416196- எரிபொருள் வரிகளில் திருத்தமா? அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி!
எரிபொருள் வரிகளில் திருத்தமா? அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி! தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தங்களை அரசாங்கம் அதேநிலையில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 72 ரூபாவும், ஒரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கு 50 ரூபாவும், சூப்பர் டீசலுக்கு 57 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 2025 ஜனவரி 11ஆம் திகதி முதல் தொடர்புடைய வரிகள் அதே முறையில் பேணுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1416175- இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு ஜானாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!
இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு ஜானாதிபதி விடுத்துள்ள பணிப்புரை! இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் சுங்கத்துறை விடுவிப்பில் ஏற்படும் தாமதத்தை அடுத்த நான்கு நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கை சுங்கம் உட்பட அரசதுறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி , துறைமுகம் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார். இதன் போது துறைமுக துறையை அபிவிருத்தி செய்வதற்கான குறுகிய கால மற்றும் மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களைச் செயற்படுத்துவது அவசியமான போதும் தற்பொழுது எழுந்துள்ள சூழ்நிலையைத் தீர்க்க,அனைவரும் இணைந்து செயற்படுவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்பொழுது எழுந்த சூழ்நிலையைத் தீர்க்க, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி, அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு அனுமதி வழங்கும் செயல்பாட்டில் நிலுவையில் உள்ள தேக்கத்தைத் தீர்க்க, இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் பணியாற்ற உடன்பாட தெரிவித்துள்ளனர். அத்துடன் பரிசோதனை மட்டத்திலுள்ள கொள்கலன்களை வைப்பதற்கான துரித நடவடிக்கையாக UCTயில் (Unity container Terminal) இடம் ஒதுக்க அமைச்சு முடிவு செய்துள்ளது. அதற்கமைய புளூ மெண்டல் பகுதியில் 5 ஏக்கர் காணியைப் பயன்படுத்த இதன் போது முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இரண்டு ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், எஞ்சிய நிலத்தை பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. துறைமுக முனையத்தில் வேண்டுமென்றே கொள்கலன் லாரிகளை நிறுத்தி வைத்திருப்பது கொள்கலன் போக்குவரத்து நெரிசல் உக்கிரமடைய காரணம் என அடையாளம் காணப்பட்டதால், இந்தக் கொள்கலன் லாரிகளை நிறுத்துவதற்கு பேலியகொட பகுதியில் காணியொன்றை வழங்க அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது. இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்பு வழங்குவதில் இலங்கை தர நிர்ணய நிறுவனம், உணவு ஆணையாளர் திணைக்களம், தாவர தனிமைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த வெற்றிடங்களை நிரப்பவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இதற்கான நிதி தேவை இருந்தால், துறைமுக அமைச்சினால் அதை வழங்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்புக்கான நேரத்தில் பணிக்கு வராத தடயவியல் எழுதுவினைஞர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனியார் சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தன. இந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு அழைத்து வரும் பொறுப்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களிடமே உள்ளது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். உணவு சார்ந்த பொருட்களுக்கு வெளிநாட்டு ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் கட்டாயம் என்பதையும்,அதில் ஏதேனும் முறைகேடுகள் நடத்திருந்தால், அரசாங்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இறக்குமதியாளர்கள் உடன்பாடு தெரிவித்தனர். துறைமுக வளாகத்திற்குள் கொள்கலன்களை சுங்கத்துறை விடுவிப்பு வரையான காலம் வரை கட்டணமின்றி தரித்து வைப்பதற்கான காலத்தை இரண்டு நாட்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அடுத்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இதனை ஒரு நாளாகக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த அவசரகால செயல்முறையை ஜூன் 30 ஆம் திகதி வரை தொடர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ,துறைமுகங்கள், சுங்கம் மற்றும் துறைமுகம் தொடர்பான ஏனைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் யாவும் ஒரே குடும்பமாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார். தற்பொழுது வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் வாகனங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற துறைமுக சேவை வழங்கும் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதில் தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்கள் ரஸ்ஸல் அப்பொன்சு, கபில பெரேரா, இலங்கை சுங்க அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகாரிகள், இலங்கை தரநிர்ணய நிறுவன அதிகாரிகள் , உணவு ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கப்பல் ஏற்றுவோர் சங்கத்தின் அதிகாரிகள், கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள், கொள்கலன் போக்குவரத்து செய்பவர்கள் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சுங்கத்துறை விடுவிப்பு அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1416144- கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு! கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் அத்துடன் நேற்று இரவு அம்பாறை பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அந்த இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டு, பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை மாணவி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1416191- போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய ஜோ பைடன்!
போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய ஜோ பைடன்! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் திகதி அமெரிக்காவின் 47-வது ஜானாதிபதியாக பதவியேற்க உள்ளதுடன் அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டதுடம் ஜானாதி ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கி வைத்தார் இன்னிலையில் போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் உரையாடியஜானாதி பைடன் ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார். இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை என்றும் அவர் தெரிவித்தார் இதேவேளை அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு, உலக அமைதி போன்றவற்றில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஜானாதி மெடல் ஆப் பிரீடம் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416171- ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
எலான் மஸ்க்…. பெரிய பருப்பு, என்ற நினைப்பு. 😂 குவாட்டரும், பிரியாணியும் தருபவர்களுக்கே எமது வாக்கு. 🤣- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
அரசியல்வாதிகளுக்கு லஞ்சம், கொமிஷன் என்று பணம் வரும் போது... தமது சட்டைப் பையை நிரப்பத்தத்தான் பார்ப்பார்கள். எல்லாம் மக்களின் வரிப்பணம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.- நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
நாம் பேசியதெல்லாம் பொய். NPP 😂 🤣- தாழம்பூவின் மணமும் , தலைவலியும் – பழமொழி சொல்வது உண்மையா?
தாழம்பூவின் மணமும் , தலைவலியும் – பழமொழி சொல்வது உண்மையா? பூக்களில் ஆண் மலர், பெண்மலர் என வகைகள் கொண்ட மலர் தாழம்பூ. செந்தாழம்பூ என்றால் சிகப்பு நிறத்தில் இருப்பது இல்லை. வெண்மை, மஞ்சள் ஆகிய இரு வண்ணத்தில் காணப்படும் மலர். மஞ்சள் நிறத்தில் பூக்கும் மலர் ஆண் மலர் (செந்தாழம்பூ) என்றும் வெண்மை நிறத்தில் பூப்பது பெண்மலர் எனவும் அழைக்கப்படுகிறது. ஆற்றோரம், சுனைகள், ஊற்று, கால்வாய்க்கரை, கடற்கரை ஆகிய நீர்நிலை பகுதிகளில் வளரும் மரம். திருநெல்வேலி மாவட்டத்தில் தாழை ஊற்று (தாழையூத்து), பெரியதாழை, கூடுதாழை மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் தாழக்குடி போன்ற ஊர் பெயர்களின் காரணம் தாழைமரங்கள் அடர்ந்து இருந்ததால் வந்த பெயர்கள் என்று கூறப்படுகிறது. தாழையை கவனக்குறைவாக தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை “கைதை” என தமிழில் முன்பும், மலையாளத்தில் தற்போது வரை குறிப்பிடுகின்றார்கள். அன்னாசி பழத்தை கைதை செத்தை என மலையாளத்தில் சொல்வார்கள்.. அன்னாசி மரமும் தாழை இனத்து வகையே. சிவபெருமானின் பூஜைக்கு உகந்த மலர் இல்லை என்றாலும் மற்ற தெய்வங்களின் பூஜைக்கு தாழம்பூவை பயன்படுத்துவார்கள். தாழம்பூ அதிக மணம் கொண்டது. இந்த பூவில் சிறிய பூநாகம் இருக்கும். நல்ல பாம்பை விட விசம் கொண்டது. தாழம்பூவை பறித்து தரையில் தட்டிய பின்னர் தான் எடுக்க வேண்டும். இல்லையெனில் பூநாகம் தீண்டும் என்ற பழைய பாட்டி கதை உண்மையா, பொய்யா என தெரியாது. அதிக மணம் கொண்ட மலராக இருந்தாலும் பெண்கள் இதனை தலையில் சூடுவதில்லை. சூடினால் தலைவலியை தரும் மலர். மணம் மட்டுமல்ல மருத்துவ குணமும் கொண்ட மலர். பித்தம் அதிகம் ஆகி வரும். உடல் சூட்டு நோய்களை குணமாக்க தாழம்பூவை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி பசும்பாலில் கலந்து குடிப்பதை மருந்தாக சித்த மருத்துவம் சொல்கிறது. ஒய்யாரக்கொண்டையில் தாழம்பூவாம். உள்ளே இருப்பது ஓராயிரம் ஈறும் பேனுமாம்.. என உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி போலியாக நடப்பவர்களை பற்றி தமிழில் தாழம்பூவை வைத்து பழமொழியும் உண்டு. இந்தப் பூ மிகுந்த வாசனை கொண்டதாக இருந்தாலும் கூட யாரும் இதை பயிரிட மாட்டார்கள்… வளர்ப்பது ரொம்ப கஷ்டம். சங்க காலத்தில் பெண்கள் மிகவும் விரும்பி தலையில் அணிந்த பூ இன்று தேடினாலும் கிடைக்காத அளவிற்கு அருகி கொண்டே வருகிறது. தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது இந்த தாழம்பூ என்று சொன்னால் மிகை ஆகாது. சங்ககாலத்தில் பெண்கள் மிகவும் விரும்பி இந்த பூவை தலையில் சூடி கொள்வார்களாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தலையில் வைக்கும் ஜடைக்கும் இந்த தாழம் பூவை வைத்து பின்னுவார்கள். கோடை காலத்தில் நாம் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை உடல் சூடு. அதற்கு தாழம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சிறிது பனைவெல்லத்தை கலந்து கொடுத்து வரும்போது உடல் சூட்டை பெருமளவு குறைக்கும்… சரும பிரச்சனை தோல் அலர்ஜி உள்ளவர்கள் இந்த பூவை கொதிக்க வைத்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் தோல் நோய் பிரச்சனை சரியாகும். https://athavannews.com/2025/1414980- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- பொங்கல் சிரிப்புகள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.