Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சிரியா விவகாரம் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை விரைவில்! ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் சிரியா குறித்த அறிக்கையை வெளியிடுவார்கள் என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் திங்களன்று (10) தெரிவித்தனர். தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியது மற்றும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்றியது குறித்து ஐ.நா.வின் மூடிய கதவு கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட கூட்டத்தின் பின்னர் உரையாற்றிய ரஷ்யாவுக்கான ஐ.நா.வின் தூதுவர் வசிலி நெபென்சியா (Vassily Nebenzia), சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமையைப் பாதுகாப்பது, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் விநியோகிப்பதை உறுதிசெய்வது ஆகியவை தொடர்பில் சபை கவனம் செலுத்தியதாக கூறினார். ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ரொபர்ட் வூட்டும் (Robert Wood), பெரும்பாலான உறுப்பினர்கள் மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து பேசியதை உறுதிப்படுத்தினார். சந்திப்பின் பின்னர் சிரியாவுக்கான ஐ.நா. தூதர் குஸ்ஸே அல்டாஹாக் (Koussay Aldahhak), தனது பணி மற்றும் வெளிநாட்டில் உள்ள அனைத்து சிரிய தூதரகங்களும் தங்கள் பணியை தொடரவும், மாற்ற காலத்தில் அரசு நிறுவனத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளன. இப்போது நாங்கள் புதிய அரசாங்கத்திற்காக காத்திருக்கிறோம். நாங்கள் சிரிய மக்களுடன் இருக்கிறோம். நாங்கள் நாட்டு மக்களைப் பாதுகாப்போம் மற்றும் பணியாற்றுவோம். எனவே மறு அறிவிப்பு வரும் வரை நாங்கள் எங்கள் பணியைத் தொடருவோம் என்றார். அசாத்தை வெளியேற்றிய கிளர்ச்சியாளர் தாக்குதல் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆல் தொடங்கப்பட்டது. இது முன்னர் நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்டது, 2016 இல் சிரியாவில் அல் கொய்தாவின் அதிகாரப்பூர்வ பிரிவாகவும் இருந்தது. HTS ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக பார்க்கப்படவில்லை. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இது ஒரு பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் மூடிய கதவுகளுக்கு பின்னாலான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டன் பின்னர், தடைகள் பட்டியலில் இருந்து HTS ஐ நீக்குவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் ரஷ்ய மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1411682
  2. ஹெய்ட்டியில் வயதானவர்களை குறிவைத்து வன்முறை; 184 பேர் கொலை! ஹெய்ட்டியின் சிட் சோலைல் (Cite Soleil) பகுதியில் கடந்த வார இறுதியில் சுமார் 184 பேர் கொல்லப்பட்டதாக அந் நாட்டு பிரதம அமைச்சரின் அலுவலகம் திங்களன்று (09) கூறியது. தாக்குதல் தொடர்பில் கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு வலையமைப்பு (RNDDH), ஒரு உள்ளூர் கும்பல் தலைவரின் மகன் நோய்வாய்ப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியது. சிறுவனின் மர்ம நோய்க்கு “சூனியம்” செய்யும் வயதான உள்ளூர்வாசிகளைக் குற்றம் சாட்டிய பில்லி சூனியப் பாதிரியாரிடம் கும்பலின் தலைவர் ஆலோசனை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 130 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று கூறிய ஐ.நா, வன்முறையை மேற்கொண்ட கும்பல் உயிரழந்தவர்களின் உடல்களை எரித்து கடலில் வீசியதாகவும் குறிப்பிட்டது. இந்தக் கொலைகளுடன் ஹெய்ட்டியில் இந்த ஆண்டு வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்தையும் விஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. https://athavannews.com/2024/1411667
  3. யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்று கஸ்ரமான "பாஸ்வேட்" போட்டு வைத்தேன். இப்ப அதை... என்னாலேயே, கண்டு பிடிக்க முடியாமல் இருக்கு. 😂 🤣
  4. வருட இறுதியில் இரண்டு பேருக்கும் நல்ல போட்டி ஆரம்பமாகி இருக்கு. நத்தார், புதுவருடம், தைப்பொங்கல்... எல்லாம் சேர்த்து பிரமாண்டமான ஸ்பெஷல் தயாரிப்பு ஒன்று நடக்கப் போகுது. 😂
  5. யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்... நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான், வைத்தியர் அர்ச்சுனா... என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்கு, "ஏழரை" ஸ்ரார்ட் பண்ணி விட்டது. 😂 🤣
  6. இந்த வருடம் வைத்தியர்களின் ஆண்டு போல் தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் பைத்தியர் சாரி, வைத்தியர்களின் பேச்சாகவே உள்ளது. 😂
  7. ரணில் தலைமையிலான அரசாங்கம் 720 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் ரூபா பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும, நிதிப் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் கவலைகளை எழுப்பியுள்ளார். திட்டமிடப்பட்ட தேர்தலை இரத்து செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் முடிவின் விளைவாக ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 10% அநாவசிய செலவினம் எற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல், பொது மக்கள் மீது நிதிச் சுமையையும் சுமத்தியது, வரி செலுத்துவோர் நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அறிக்கை கூறியது. தேர்தல் காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. https://athavannews.com/2024/1411552
  8. தாய்வானின் அருகே சீன போர்க் கப்பல்கள்; பாதுகாப்பினை அதிகரித்த தைபே! தாய்வானின் இராணுவம் திங்களன்று (09) அவசரகால பதிலளிப்பு மையத்தை அமைத்து அதன் எச்சரிக்கை நிலையை உயர்த்தியதுடன், போர் தயார் நிலைப் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளது. தாய்வான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் சீனா கிட்டத்தட்ட 90 கடற்படை, கடலோர காவல்படை கப்பல்களை வைத்திருப்பதாக தைபே பாதுகாப்பு வட்டாரம் ரொய்ட்டர் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளது. போர்க்கப்பல்களைப் பொறுத்தவரை, வார இறுதியில் அதன் எண்ணிக்கை 08 இல் இருந்து 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தாய்வானை தனது சொந்தப் பிரதேசம் என்று கூறிவரும் சீனா, தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தேவின் பசிபிக் பயணத்திற்கு பதிலடியாக மற்றொரு சுற்று பயிற்சியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் வந்துள்ளன. திங்கட்கிழமை முதல் புதன் வரை ஜெஜியாங் மற்றும் புஜியன் மாகாணங்களுக்கு கிழக்கே ஏழு தடைசெய்யப்பட்ட வான்வெளி மண்டலங்களை சீனா அறிவித்துள்ளது. சர்வதேச விதிகளின்படி, ஏனைய விமானங்கள் கட்டுப்பாட்டாளர்களின் அனுமதியுடன் அவற்றை கடந்து செல்ல முடியும் என்று தாய்வான் கூறியுள்ளது. இந்த கருத்துக்கான ரொய்ட்டரின் கோரிக்கைக்கு சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, தாய்வானின் இராணுவம் அதன் “போர் தயார்நிலை பயிற்சிகளை” மூலோபாய இடங்களில் செயல்படுத்தியதாகவும், அதன் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படகுகள் சீன இராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. https://athavannews.com/2024/1411538
  9. முன்பு... டக்ளஸ் தேவானந்தா, திறந்த வீட்டிற்குள் நுழைந்த 🐕 நாலுகால் பிராணி 🐕‍🦺 மாதிரி போகாத அலுவலகமா? கல்விக்கூடமா? வைத்தியசாலையா...? அப்போ... ஒருவரும் காவல்துறையிடம் முறையிடவில்லையே, ஏன்..ஏன்... ஏன்...? 😂
  10. 1000 பேர் போய் வந்தார்களா என்று, விளக்குப் பிடித்து சரியாக எண்ணுவது யார்? ஏனெண்டால்... கள்ளக் கணக்கு வரக் கூடாது பாருங்கோ. 😂
  11. 2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு! இலங்கைக் கடற்படை தனது 74 ஆவது ஆண்டு நிறைவை இன்று (09) கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில், கடற்படையின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2138 சிரேஷ்ட மற்றும் சாதாரண மாலுமிகள் இன்று முதல் அமுலாகும் வகையில் உயர் பதவிகளுக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். முதன்முறையாக, இலங்கையில் கடற்படையின் ஆரம்பம் 1937 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கத் தொண்டர் கடற்படை கட்டளைச் சட்டத்தின் கீழ் ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை 1939 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் அது 1943 அக்டோபர் 1 ஆம் திகதி ‘ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை சேவை’ ஆனது. 1950 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தின் மூலம், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி ‘ராயல் சிலோன் நேவி’ ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம், அன்றைய அரச இலங்கை தன்னார்வ கடற்படை சேவையில் செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளிடமிருந்து, நிரந்தரமான ஒரு தொடக்கமாக அமைந்தது. அன்றிலிருந்து, நாட்டின் கடல் பரப்பின் பாதுகாவலர் என்ற சிறப்புப் பொறுப்பை நிறைவேற்றி, நாளுக்கு நாள் வளர்ந்து வந்த ராயல் சிலோன் கடற்படை, 1972 இல் இலங்கை குடியரசாக மாறியதும் ‘இலங்கை கடற்படை’ ஆனது. 1980 ஆண்டு முற்பகுதியில், நாட்டின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, கடற்படையின் பாரம்பரியப் பாத்திரத்திலிருந்து போர்ப் பாத்திரமாக மாற்றப்பட்ட கடற்படை, அதன் பின்னர் தேசிய மனிதவளத்திலும் இராணுவத் திறனிலும் படிப்படியாக வளர்ந்தது. 2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை வெற்றிகொள்வதில் சுமார் மூன்று தசாப்தங்களாக தனித்துவமான பங்களிப்பை வழங்கியது. இலங்கை கடற்படை தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும், அத்துடன் அல்லாதவற்றைக் கட்டுப்படுத்தவும் தனது வளங்களைப் பயன்படுத்துகிறது. கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் பாரம்பரிய கடல்சார் சவால்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுத்து கடற்படையினரின் அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி நாட்டின் கடல்சார் லட்சியத்தை அடைவதில் உறுதியாக உள்ளது. https://athavannews.com/2024/1411486
  12. அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு ட்ரம்ப் மன்னிப்பு! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் பதவியேற்கும் முதல் நாளில், 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், 2024 ஜனவரி 6 கேபிடல் கலவரத்தை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லிஸ் செனி மற்றும் அவரது சக ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது நீதித்துறை விசாரணையை நாடமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியதுடன், கேபிடல் கலவரத்தை விசாரித்த சட்டமியற்றுபவர்கள் உட்பட அவரது அரசியல் எதிரிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், ஜனவரி 20 அன்று பதவியேற்ற பின்னர், குடியேற்றம், எரிசக்தி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளதாகவும் ட்ரம்ப் உறுதியளித்தார். அமெரிக்காவின் மிகப் பெரிய குற்றவியல் விசாரணை எனக் கூறப்பட்ட 2021 ஜனவரி 6 தாக்குதலில் குறைந்தது 1,572 பிரதிவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக நுழைவது முதல் தேசத்துரோக சதி மற்றும் வன்முறைத் தாக்குதல் வரையிலான குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். இவர்களில் 1,251 க்கும் மேற்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் மற்றும் 645 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411506
  13. சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்! பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளனர், அவர்களது தலைவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் இராஜதந்திர பணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். சிரிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரஷ்யாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும் அரசியல் உரையாடலைத் தொடர மொஸ்கோ எதிர்பார்த்துள்ளதாகவும் கிரெம்ளின் வட்டாரம் மேலும் கூறியுள்ளது. சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) ஒரு மின்னல் முன்னேற்றத்திற்குப் பின்னர் தலைநகர் டமாஸ்கஸை எதிர்ப்பின்றி கைப்பற்றினர். இது 14 ஆண்டுகால உள் நாட்டுப் போருக்கு மத்தியில் சுமார் 50 ஆண்டுகால பஷர் அல்-அசாத்தின் குடும்ப ஆட்சியை முடிவுக்கும் கொண்டு வந்தது. https://athavannews.com/2024/1411490
  14. ஓணாண்டி... மேலே உள்ளது உங்களை போன்றவர்களுக்காகத்தான் எழுதியிருக்கு. நன்றி கவியரசு கண்ணதாசன் & @Kavi arunasalam
  15. மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப் படும் போது... சூடு கண்ட பூனை, ஸ்ரீதரன் வேறொரு வியூகத்தை எடுப்பார் என நம்புகின்றேன். ஆனால்... நீங்கள் சொல்வது போல்... சிறி, கஜேஸ், செல்வம், விக்கி அணி அமைக்க தற்போது காலம் கனியவில்லை. ஓரிரு வருடத்தில் நடக்கலாம்.
  16. தமிழரசு கட்சியின் தேசியப் பட்டியல் மூலம்... தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்தியர் சத்தியலிங்கத்தை, பதவி விலக வைத்து... அவரை வடக்கு மாகாண சபைக்கு போட்டியிடச் செய்வதன் மூலம் பாராளுமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கம் போல் பின்கதவால் பாராளுமன்றம் போக முயற்சிக்கின்றார். 😎 முன்பு சுமந்திரன்... " நான், தேர்தலில் மக்களால் நிராகரிக்கப் பட்டால்... தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன்" என்று கூறினாரே என்று நீங்கள் கேட்டால்... "அது... போன மாசம், இது... இந்த மாசம்" என்று சொன்னாலும் சொல்வார். 😂 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்... ராஜதந்திர சிந்தனைகளை எல்லாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே... டக்கென்று கண்டுபிடித்து விடுவதுதான் சுமந்திரனின் கஸ்ரகாலம். 🤣
  17. ஒரு காட்டில் வயசாகி போன🐱 புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு🐜 வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்மூர்ல பணம் படைச்சவனுக்கு தோணுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோணுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுச்சு. புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவு நாளா இது தோணலையேன்னு ஒரு முயலை🐰 செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவணையாவும் கொடுக்கனும்"னுச்சு. "ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னுச்சு, அப்படியே வாங்கிகிச்சு... ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை 🐱ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு. இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு🐒 அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி. 'எதைத் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஒரு ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்" "யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பை தானென்று" அதிரடியாக சொன்னது ஆந்தை.🦉 இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே "படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான்". வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்...! Latha Babu 😂 🤣
  18. டாக்டர் "ஸ்டெதஸ்கோப்"பை காதில் வைக்க மறந்துட்டீங்க. 😂
  19. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடந்த தமிழரசு கட்சித் தலைவருக்கான போட்டியில்... அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களாலேயே தோற்கடிக்கப் பட்டார். பின்... சென்ற மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டார். ஆக... சுமந்திரனுக்கு இந்த ஆண்டு... "கனதியான" இரண்டு தோல்விகளை கொடுத்துள்ளது. முன்னாள் பா. உ. சுமந்திரன்... இந்த இரண்டு தோல்விகளையும் ஏற்றுக் கொண்டு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே.. நல்லது. அவர், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவாரேயானால்.. தமிழ் மக்கள், வடக்கு மாகாண சபைக்கு... அனுரவின் சிங்கள கட்சியை தெரிவு செய்வார்கள் என்பது 100 வீதம் உண்மை.
  20. அப்போதைய பத்திரிகைகளில்... வடக்கு மாகாணசபை அங்கத்தவர்களால் பகிரங்கமாக சுமந்திரனை குற்றம்சாட்டி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களே அவை. அத்துடன்.... அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச கூட, சுமந்திரனின் தலையீட்டைப் பற்றியும், மாகாணசபைத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டாம் என்று, சுமந்திரன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார். நான் எனது நினைவில் உள்ளதை வைத்தே எழுதுகின்றேன். உதாரணத்துக்கு ஒன்று கீழே உள்ளது. எல்லா... ஆதாரமும் என்னால் திரட்ட எனக்கு நேரம் இல்லை. ஆர்வம் இருந்தால்... நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால்.... சுமந்திரன் இவற்றை செய்திருக்க மாட்டார் என்று நம்புவதுபோல் தெரிகின்றது. அதுசரி... உங்களிடம் இருந்து நான் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதானே. 😂 நேரம் பொன்னானது. நன்றி, வணக்கம். 🙏 https://www.samakalam.com/தலைகாட்ட-தயங்கும்-தலைவர/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.