Everything posted by தமிழ் சிறி
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
இரவு மூன்று மணிக்குத்தான் படுக்கப் போகின்றவர்கள் என்ற படியால், இரவு 7 மணிக்கு ஒரு சாப்பாடும், இரவு 2 மணிக்கு ஒரு சாப்பாடுமாக இருட்டில்... இரண்டு நேரம் சாப்பிடுகின்றார்கள். 😂
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
வாக்களிப்பு சில மணித்தியாலத்துக்கு முன்பு தான் ஆரம்பித்தது. ஜேர்மன் செய்திகளின் படி... வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்திய போது இருவரும் சம நிலையில் இருக்கின்றார்கள். எங்களுடைய ஆட்கள் நித்திரையாலை எழும்பி வாக்களிக்கப் போக மத்தியானம் தாண்டும். 🤣
-
கருத்து படங்கள்
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
- ஜனாதிபதியின் உருவத்துடன் போலி நாணயத்தாள்; ஒருவர் கைது!
ஜனாதிபதியின் உருவத்துடன் போலி நாணயத்தாள்; ஒருவர் கைது! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் ஒன்றை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று (04) பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாணயத் தாள்களை அச்சடித்ததாக அண்மையில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த கைது வந்துள்ளது. எவ்வாறெனினும், அரசாங்கமும் மத்திய வங்கியும் புதிய நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது. https://athavannews.com/2024/1407246- ஒரு தொகை ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது!
ஒரு தொகை ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது! இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பகுதியில் பல துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. AK47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 7.62 துப்பாக்கியின் 25 தோட்டாக்கள், 09 மிமி துப்பாக்கியின் 07 தோட்டாக்கள், AK47 ஆயுதத்தின் மகசீன், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கத்தி என்பன இதன்போது மீட்கப்படடன. எம்பிலிப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய சந்தேகநபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1407198- கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமர் ஹரினியிடம் மகஜர் கையளிப்பு!
இதை பிரதமரிடம் தெரிவிப்பதை விட... சுமந்திரனிடம் தெரிவித்தால், அடுத்த நாளே... அந்தக் காணிகள் விடுவிக்கப் படும். 😂 கைவசம் ஆளை வைத்துக் கொண்டு, எங்கெல்லாமோ அலைகிறார்கள். 😎 விபரம் புரியாத மக்கள். 🤣- உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கை 94 ஆவது இடம்!
உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கை 94 ஆவது இடம்! 2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது. குறித்த நாடுகளின் கடவுச்சீட்டினை கொண்ட மக்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெறலாம். அமெரிக்கா 8 ஆவது இடத்தைப் பிடித்தது, அதன் குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 94 வது இடத்தில் உள்ளது. இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரஜைகள் உலகின் 44 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலைப் பெறலாம். https://athavannews.com/2024/1407261- கமலா ஹாரிஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அணில் விவகாரம்!
கமலா ஹாரிஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அணில் விவகாரம்! அமெரிக்காவில் 4 நாட்களுக்கு முன்பு அணில் ஒன்று கருணை கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் பெரும்பாலான மக்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பீனட் என்ற அணிலை கருணை கொலை செய்ய விவகாரம் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. நியூயோர்க் நகரை சேர்ந்த லோனோ என்பவர் பீனட் என்ற 7 வயதான அணிலை வளர்த்து வந்துள்ளார். அவர் குறித்த அணில் செய்யும் சேட்டைகள் மற்றும் குறும்பு தனங்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவேற்றி வந்துள்ளார். இதனால் பீனட் அணிலை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்து 34 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அனுமதியின்றி அணிலை வளர்த்ததாக அதனை பறிமுதல் செய்த சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு ரேபிஸ் வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து அணிலை அதிகாரிகள் கருணை கொலை செய்ததால், பல லட்சம் பேர் கொதித்தெழுந்துள்ளனர். எலான் மஸ்க் போன்றவர்களும் இதனை ட்ரம்புக்கான வாய்ப்பாகவும் பயன்படுத்த முயன்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் அணிலுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கத்தையே கேட்கமுடிகிறது. அணிலை காட்டுக்குள் விடாமல் கொலை செய்வதா என்று கேட்டு தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடைபெறுகின்றன. செல்ல பிராணிகளை காக்க ட்ரம்ப்பால் தான் முடியும் என்று அமெரிக்க வலதுசாரிகள் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளதால், கமலா ஹாரிஸுக்கு குறித்த அணில் விவகாரம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1407225- அரசியல் சதிகள் அம்பலம்
@goshan_che, @nedukkalapoovan, @valavan, @kandiah Thillaivinayagalingam, @satan, @Kapithan, @Kandiah57, @விசுகு, @நிழலி, @குமாரசாமி, @ரஞ்சித், @கிருபன் ஆகியோர் இந்தக் காணொளியை நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டும்.- பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்
உண்மைதான். பிரதம மந்திரிக்கு உரிய ஆடம்பரம் இல்லாமல், அன்றாடம் வீதியில் காணும் சாதாரண பெண் போல் Denim கால்சட்டையுடன் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டது ஆச்சரியமாகவும் மனதிற்கு பிடித்தும் இருந்தது. மற்றைய ஆசிய நாட்டு பெண் பிரதமர்களை விட… இவர் வித்தியாசமாக பொது வெளியில் வந்தது சிறப்பு.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
தமிழ் நாட்டில் இருந்து... இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொண்ட தோழர் புரட்சிகர தமிழ்தேசியனுக்கு பாராட்டுக்கள். 👍 🙂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சரமாரியான அருவாள் வெட்டில் முடிந்தது, முகநூல் கருத்து யுத்தம். 😂- அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
கட்டாயம் நீங்கள் வைக்கும் "ரம்ப் பார்ட்டியில்" கலந்து கொள்கின்றேன். குடிக்க, கடிக்க பலகாரம் எல்லாம் இருக்குதானே. 😂 நான், "வெடி பக்கற்" வாங்கிக் கொண்டு வாறன். விடிய,விடிய... வெடி கொழுத்த வேணும். 🤣- வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!
உதுக்குத்தான் எங்களுடைய அரசியல்வாதிகள், தேர்தல் நேரம் தவிர... மற்றைய 5 வருடமும் மக்களை சந்திக்கப் போறது இல்லை. 🤣- வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!
அதுதான்... எனக்கும் புரியவில்லை. இயற்கை அழிவுக்கு... அரச தம்பதிகள் என்ன செய்ய முடியும். பாதிக்கப் பட்ட மக்களை பார்க்கப் போனது ஒரு குற்றமா?- வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!
பேரழிவுகரமான வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள வலென்சியா பகுதிக்கு வருகை தந்த ஸ்பெயினின் மன்னர் ஃபெலிப் மற்றும் ராணி லெடிசியா மீது கோபமடைந்த மக்கள் சேறு மற்றும் முட்டைகளை வீசினர். மூன்று காணொளிகளையும் அம்புக்குறி மேல் கிளிக் பண்ணி பார்க்கவும்.- அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்
நாளையில் இருந்து… ட்ரம்பு தான், அமெரிக்க ஜனாதிபதி என்று உக்ரைன் காரருக்கு சொல்லி விடுங்கோ. 😂- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
வடமாகாண சாமானிய மக்களின் வாழ்வாதர விடுதலையை ஏற்படுத்த ஸ்ரீகாந்தராசா அகிலனுக்கு வாக்களியுங்கள். சின்னம்: உண்டியல்.- அரசியல் சதிகள் அம்பலம்
இப்போதுள்ள அரசியல்வாதிகள் இந்தக் காணொளியை பார்த்து தம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.- பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்
மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்! பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் இதன் போது தேசிய மக்கள் சக்தி யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டுள்ளதுடன் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்களாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் பிரதமரின் வருகையை ஒட்டி மன்னார் நகர பகுதியில் பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407091- பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு!
பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி பட்டாசு சத்தம் கேட்டு மிரண்டு போய் வீதியை நோக்கி ஓடியபோது வழியில் வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கறுப்பியின் உடலை மீட்ட நாயின் உரிமையாளரும் ஊரைச் சேர்ந்தவர்களும் கருப்பிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்துள்ளனர். பண்டிகை காலங்களில் இது போன்று விலங்குகளுக்கு ஏற்படும் விபத்துக்களையும் ஆபத்துக்களையும் தடுக்க மக்கள் விழிப்புணர்வோடு பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என கால்நடை மருத்துவர்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407130- வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர். கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பைபோர்டா நகரில் எதிர்ப்பாளர்கள் அரச தம்பதிகள் மற்றும் ஸ்பெய்னின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை நோக்கி “கொலைகாரன்” என்று கூச்சலிட்டனர். எனினும், முகத்திலும் உடைகளிலும் சேறு படிந்த நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் ராணி லெடிசியா பின்னர் கூட்டத்தின் உறுப்பினர்களை ஆறுதல்படுத்துவதற்கு முனைந்தார். அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரமான சிவாவுக்குச் செல்லும் மன்னரின் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. பல தசாப்த காலத்துக்கு பின்னர் ஸ்பெய்னில் கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1407052- கருத்து படங்கள்
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.