Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்தியாவில்... சட்டத்தை மதித்து ஒழுங்காக வீதிகளில் ஒடத் தெரியாதவர்கள், வானில் ஒழுங்காக பறப்பார்களா. ( மேலிருந்து வெத்திலை துப்பல், சிறுநீர் கழித்தல்... வேறு தொல்லை) 😂 எனக்கென்னவோ... வானத்தில் விபத்து ஏற்பட்டு.. பொத்து பொத்து என்று, வீட்டுக் கூரைகளிலோ, மக்களின் தலைகளிலோ இவை விழ சந்தர்ப்பங்களே அதிகம். 😎
  2. சென்ற 27.09.2024 அன்று, ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த வீதிகள்... பல ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மூடப் பட்டிருந்த நிலையில்... ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க, மக்களின் பாவனைக்ககாக திறந்து வைக்கப் பட்டது. இதனை எந்த சிங்கள கட்சிகளோ, சிங்கள அமைப்புகளையோ, புத்த பிக்குகளோ தமது வேண்டுகோளை ஏற்றுத்தான், அந்த வீதி திறக்கப் பட்டது என்று... எவரும் உரிமை கோரவும் இல்லை, திறக்கப் பட்ட வீதிக்கு முன் நின்று படம் எடுத்து... நாலாந்தர "ஈன அரசியல்" செய்யவும் இல்லை. ஆனால்... நேற்று திறந்த அச்சுவேலி வீதிக்கு முன் நின்று ஒருக்கால் மஞ்சள் சட்டையுடனும், பிறகு வெள்ளைச் சட்டையுடனும் நின்று படம் காட்டிக் கொண்டு நிற்கிறார் சுத்துமாத்து சுமந்திரன். படம் எடுப்பதற்காக உழுத வயலை, உழுத... பச்சோந்தியிடம், வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும். மக்களை முட்டாள் ஆக்குவதாக நினைத்துக் கொண்டு... தான், முழு முட்டாள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்குது இந்த சுத்துமாத்து. 😂
  3. 4) முக்கியமாக... மக்களால் தெரிவு செய்யப் படாதவர் பாராளுமன்ற தேர்தலில் தோற்றால், பின்கதவால் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதை அறவே ஒழிக்க வேண்டும். சுத்துமாத்து எம்பிக்களுக்கு... அடிக்க வேண்டும் ஆப்பு. 😂
  4. சரியாக சொன்னீர்கள். இவர்கள் அனைவரும்... மக்களை சிங்களக் கட்சிகளை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கும் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மேற்கு நாடுகளில் பெரும்பாலானோர் அரசியலுக்குள் நுழைய முன்... அரசியலை ஒரு பாடமாக எடுத்து படித்து இருப்பார்கள். எனக்குத் தெரிந்து சில தமிழ்ப் பிள்ளைகள், அரசியல் படித்து இங்குள்ள பிரபல கட்சிகளில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதன் பலன் இன்னும் 5-10 வருடங்களில் தெரிய வரும். தாயகத்திலும் இதே வழியை பின்பற்ற... இளைய சமுதாயம் முன் வரவேண்டும் இதற்கு உரிய ஊக்கத்தை பல்கலைக்கழகங்கள் செய்ய முன் வர வேண்டும். சுத்துமாத்து "லோயர்" மார் எல்லாரும் எம்.பி. என்ற மிதப்பில் திரிவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
  5. 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை! உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரேனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதற்காக 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 19 இந்திய நிறுவனங்கள் உட்பட சுமார் 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ள அதே நேரத்தில் கருவூலத்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது. வர்த்தகத்துறை தடை பட்டியலில் 40 நிறுவனங்கள் உள்ளன என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அசன்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் மார்ச் 2023 முதல் மார்ச் 2024க்கு இடையில் ரஷ்யாவை தலமாக கொண்ட நிறுவனங்களுக்கு 700 ஏற்றுமதி தொகுப்புகள் அனுப்பியதாகவும் அதில் அமெரிக்க தயாரிப்பு விமான பாகங்கள் மற்றும் மைக்ரோ சிப்கள் உள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் விவேக் குமார் மிஸ்ராஇ சூதர் குமார் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2023 முதல் 2024 வரை ரஷ்யாவை தலமாக கொண்ட நிறுவனத்திற்கு அமெரிக்க விமான உதிரி பாகங்கள் போன்ற மூன்று லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை வழங்கியதாக இந்தியாவை தலமாக கொண்ட மாஸ் டிரான்ஸ் நிறுவனம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. https://athavannews.com/2024/1406807
  6. இது, நல்லூர் கோவிக்குப் போகின்ற ஒரு வீதி மாதிரி உள்ளது. 😅 சுமந்திரனின் புலுடாக்கள் பல. அதில் இதுவும் ஒன்று. 😂 கேட்கிறவன் கேனையன் என்றால்.... எருமை, ஏரோப் பிளேன் ஓட்டுமாம். 🤣
  7. ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு! செவனகல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 40 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது ஆயிரம் மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1406603
  8. 200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது! 200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று செவநகர நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது. வீட்டின் முன்றலில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் மறைத்து வைத்திருந்த 53 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அந்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த வருடம் 30 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஓமல்பகே தம்மிக்க சமன்குமாரவின் சகோதரி என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1406681
  9. உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தில்லை. 💐 வாழ்க வளமுடன். 🙏 சுய சரிதை போல் எழுதிய கவிதை மிக அழகு. 👍🏽
  10. இந்த ஹாலோவீன் அலங்காரத்தை அகற்றுமாறு அக்கம் பக்கத்தினர் காவல் துறையிடம் முறைப்பாடு. ரொம்ப பயந்தவர்களாக இருப்பாங்களோ... 😂
  11. ஹ்ம்ம்... தீபாவளி நேரம் இப்படி ஒரு கோரச் சம்பவம். தொழில் போட்டி என்றால், கொலை செய்து தான் அதனை தீர்க்க வேண்டுமா? இனி மறியலில் இருந்து என்ன செய்யப் போகின்றார்கள். கொலை செய்யப் பட்டவர்கள் குடும்பமும், கொலை செய்தவர்கள் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்து விட்டதே.
  12. கிருபன் ஜீ யும் பருத்தித்துறை, சுமந்திரனும் பருத்தித்துறை. 😍 ஊர்ப் பாசத்தில் சுமந்திரன் வெல்வார் என்று போட்டு வீணாக ஒரு புள்ளியை இழக்கப் போகின்றார். 😂 சுமந்திரன் பாராளுமன்றம் போவார்✔️. ஆனால் மக்கள் வாக்களித்து நேரடியாக பாராளுமன்றம் போக முடியாமல்... சுமந்திரன் பின் கதவால், தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போகக் கூடிய நிலைமையே தற்போது உள்ளது என கருதுகின்றேன். 🤣 கந்தப்புவின் கேள்வியும்... நேரடியாக பாராளுமன்றம் போகின்றவர்களை பற்றித்தான் அமைந்துள்ளது. அதனை கவனித்தீர்களோ தெரியவில்லை.
  13. ரணில்.... நைசாக, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் "மூமென்ட்". 😂
  14. முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து குறித்து ரணில் கேள்வி! முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அரசாங்கம் நீக்கியதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சந்திரிக்காவின் கணவரின் கொலையுடன் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தொடர்புபட்டுள்ளது. அவருக்கும் குண்டுவெடிப்பினால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளோம். அதேநேரம், மகிந்த ராஜபக்ஷ, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்தமை வேறு விடயம், எனினும் அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையினை கருத்திற் கொண்டு அவரின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். தமக்கு எவ்வித சலுகைகளும் தேவையில்லை எனவும், எனினும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். https://athavannews.com/2024/1406596
  15. தீபாவளி கொண்டாடும் உறவுகளுக்கு, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  16. இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்! போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. அதன் முதல் விமானமானது நேற்றைய தினம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA)வந்தடைந்தது. விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அதற்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் அதில் பயணம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1406590

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.