Everything posted by தமிழ் சிறி
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
குமாரசாமி அண்ணே… கடைசியாக எடுத்த ஆயுதம் என்ன என்பதையும் சொல்லுங்கண்ணே. 🙂 எனது தோட்டத்திலும் சில குரங்குகள், 🐒🐒🐒 குரங்கு சேட்டை விட்டு கொண்டு திரிகுதுகள்… அதுகளின் வாலை ஒட்ட நறுக்க வேண்டி இருக்குது. 🐒🐒 🐵 😂
-
குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
100 வருடங்களை தாண்டிய வீரகேசரி…. டெல்ஃப்ட் தீவு என்று நெடுந்தீவை எழுதும் கொடுமையை என்னவென்று சொல்வது.
-
ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…!
இந்தத் திரி ஒருவரின் கண்ணிலும் படவில்லையா.... அல்லது, வாசித்து விட்டு "கோமா நிலை"க்கு போய் விட்டார்களா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
☢️🌊 ஐரோப்பிய நாடுகள் கடலில் 2 லட்சம் அணுக்கழிவு டிரம்முகளை கொட்டியுள்ளன – இதன் விளைவுகளை மனிதர்கள் விரைவில் சந்திக்க நேரிடலாம். பல தசாப்தங்களாக, சில ஐரோப்பிய நாடுகள் 2 லட்சம் அணுக்கதிர் கழிவு டிரம்முகளை நேரடியாக கடலில் கொட்டியுள்ளன. அது சேதமில்லாமல் இருக்கும் என்று நம்பப்பட்டாலும், விஞ்ஞானிகள் இப்போது எச்சரிக்கிறார்கள் – காலப்போக்கில் அவை அழுகி, அபாயகரமான கதிர்வீச்சு கடல் சூழலுக்கு கசியக்கூடும் என்று. இதனால் கடல் உயிரினங்கள் மட்டுமின்றி, மனிதர்களின் உணவு பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கக்கூடும். உலக மக்கள் பல கோடிகள், கடல் உணவையே முக்கிய உணவாக நம்புகின்றனர். கதிர்வீச்சு கசிவு, மீன்களையும் கடலையும் மட்டுமல்லாது, மனித ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். இந்த அதிர்ச்சி செய்தி, குறுகிய கால நன்மைக்காக மனிதர்கள் எடுத்த தவறான முடிவுகள், நீண்டகால துன்பத்தை உருவாக்கும் என்பதை நினைவூட்டுகிறது. சுற்றுச்சூழலை காக்க உடனடி நடவடிக்கை அவசியம். Tamil Trending Newsz
-
உங்களுக்கு தெரியுமா?
🐛 பிளாஸ்டிக்கைத் தின்னும் பூச்சிகள்! வாக்ஸ்வார்ம் (Waxworm) பூச்சிகள் 24 மணி நேரத்தில் ஒரு பிளாஸ்டிக் பையை முழுவதும் தின்றுவிடும் – ஆனால் சில நாட்களில் அவை இறந்துவிடுகின்றன. அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தது என்னவென்றால், வாக்ஸ்வார்ம் பூச்சிகள் பிளாஸ்டிக்கையே உணவாக எடுத்துக்கொள்ளும் தன்மையுடையவை. சில பூச்சிகள் சேர்ந்து ஒரு பிளாஸ்டிக் பையை 24 மணி நேரத்திலேயே தின்றுவிடும் சக்தி கொண்டவை. இது பிளாஸ்டிக் மாசுபாடு குறைப்பதில் புதிய நம்பிக்கையைத் தருகிறது. ஆனால், இந்த உணவு அவற்றுக்கு இயற்கையானதல்லாததால், சில நாட்களில் அவை உயிரிழந்து விடுகின்றன. எனவே, பூச்சிகளை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, விஞ்ஞானிகள் அவற்றின் உடலில் இருக்கும் சிறப்பு என்சைம்களை (enzymes) ஆராய்ந்து, அதை பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் வழிகளைத் தேடி வருகின்றனர். இது வெற்றிகரமாக செயல்பட்டால், உலகளாவிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 🌍♻️ Tamil Trending Newsz
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
🏆 100 வயது முதியவர், ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி உலக சாதனை படைத்தார். அரிதான வரலாற்றுச் சாதனையாக, 100 வயதுடைய ஒருவர் உலகின் ‘மிக விசுவாசமான ஊழியர்’ என கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இன்றைய வேகமான தொழில்சூழலில், இப்படியான அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால உறுதிப்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது. ஓய்வு பெற்றிருக்கும் வயதில் கூட, வேலைக்கான பாசமும், கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவரை முன்னெடுத்துச் சென்றது. இந்த சாதனை, மனித உள்ளத்தின் வலிமையையும், வாழ்க்கையில் அர்த்தமுள்ள நோக்கத்தை தக்கவைத்துக்கொள்ளும் சக்தியையும் நிரூபிக்கிறது. 🌟 அவரது பயணம், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பேருத்வேகமாக திகழ்கிறது. உண்மையான உழைப்பும் விசுவாசமும் எப்போதும் பாராட்டப்படும் என்பதற்கான சான்றாக இந்த சாதனை விளங்குகிறது. Tamil Trending Newsz
-
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!
எங்கடை ஆட்களும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. ஒரு தமிழ் பொம்பிளை நீதிபதிக்கு கீழே தங்கள் வேலை செய்வதோ என்று "பெட்டிசன்" போடுற ஆட்கள் இருக்கும் மண் என்பதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு சாத்தான்.
-
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு!
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு! பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதியை, சட்டவிரோத பிரச்சார நிதி மற்றும் மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சர்கோசிக்கு உரிமை உண்டு. மேலும் இந்த வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார். வழக்குரைஞர்களுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. https://athavannews.com/2025/1448540
-
பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு!
பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு! கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பொலிஸாரைக் கண்டு அதிர்சியடைந்த சந்தேக நபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் அதே பகுதியைச்சேர்ந்த 24வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1448513
-
ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…!
இணைப்பிற்கு நன்றி கிருபன்.
-
கருத்து படங்கள்
- கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!
கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்! மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த துறவிகளில் மூன்று வெளிநாட்டு துறவிகளும் நான்கு இலங்கை துறவிகளும் அடங்குவதாக பன்சியகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்த விபத்து நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வன மடத்தில் தற்போது பல வெளிநாட்டு துறவிகள் வசித்து வருவதாகவும் ஊடகப் பிரிவு கூறுகிறது. துறவிகள் கேபிள் காரில் ஏறி மலை உச்சியில் உள்ள தியான பீடங்களுக்கு செல்ல புறப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பன்சியாகம போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1448454- உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்!
உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்! உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இதேவேளை, மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்க்கவும், நல்ல இசையைக் கேட்கவும், கடற்கரைகளுக்குச் செல்லவும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விஷயத்தைப் பற்றி தான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன், என்று அவர் கூறினார். இந்த ஒதுக்கீடு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1448480- பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்!
ஹ்ம்ம்... நல்ல ஒரு கண்ணியமான பதவி கிடைத்தும், அதனை காப்பாற்றத் தெரியாத முட்டாள் நீதிபதி. ஆமா.... இவர் தமிழா, சிங்களமா, முஸ்லீமா, பறங்கியா.... 😂 இப்போதான்... பார்த்தேன். தமிழ் பெண்மணியாம்.- தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் விஜய்!
தமிழக அரசியல்வாதிகளில் முதலிடத்தில் விஜய்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அப்போது பா.ஜ.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளை தனது அரசியல் எதிரிகளாக சுட்டிக்காட்டி உரையாற்றினார். சமீபத்தில் மதுரையில் நடந்த இரண்டாவது மாநாட்டிலும் அவர் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக, “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற கோஷத்துடன் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் அண்மையில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த ஆய்வில் நடிகர் விஜய் முதல் இடத்தைப் பெற்றுள்ளார் . நடிகர் விஜயை Instagram இல் 1.46 கோடிபேரும் Facebook க்கில் 77 லட்சம் பேரும் X தளத்தில் 55 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அந்தவகையில் சராசரியாக 93 லட்சம் பேர் விஜயை பின்தொடர்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. அதே சமயம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மொத்தமாக 30 லட்சம் பேரும் எடப்பாடி பழனிசாமியை 2.95 லட்சம் பேரும் , அண்ணாமலையை 10.25 லட்சம் பேரும் , உதயநிதி ஸ்டாலினை மொத்தம் 16.25 லட்சம் பேரும் பின்தொடர்கவதாகத் தெரிய வந்துள்ளது. எவ்வாறு இருப்பினும்சமூகவலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பது அரசியல் ஆதரவு அல்லது வாக்குகள் என்பதைக் குறிக்காது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு Instagram-இல் 9.75 கோடி பின்தொடர்பவர்கள் இருக்க, கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமான 27.3 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர். அதுபோல, விஜய்க்கும் அவரது திரை உலகப் புகழ் காரணமாக உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம் உள்ளதால், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448457- சீமானும், விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோர வேண்டும்: உச்ச நீதிமன்றம்
விஷயலச்சுமிக்கு, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்க... பின்னுக்கு நின்று கதை, வசனம், டைரக்ஷன் செய்யிற ஆட்களுக்கும், விசயலச்சுமிக்கு வெள்ளை அடிக்கிற ஆட்களுக்கும்…. வேலையில்லா திண்டாட்டம்தான். அய்யோ பாவம். இனி… மூடிக் கொண்டு இருக்கச் சொல்லி, உச்ச நீதிமன்றம் சொல்லிப் போட்டுது. 😂- இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
ஆமா…. வருகின்ற வெள்ளிக்கிழமை, “ஜும்மா தொழுகை” முடிந்த பின்…. வீதியில் இறங்கி கதறுவதை பொறுத்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும். 😂- நோர்வேயில் குண்டு வெடிப்பு
அந்தக் கடைசிப் பந்தி அருமை. 👍🏽 வல்லரசுகளுக்கு இது… விளங்க கனகாலம் எடுக்கும் அல்லது கண்ணை மூடிக் கொண்டு, பால் குடித்த பூனையின் நிலைமைதான்.- இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
இலங்கை முஸ்லீம்களுக்கு இது இனிப்பான செய்தி அல்ல. 😂- மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்! ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறிய ரக பாரவூர்தியில் ஏற்றப்பட்டு, சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மாவெல்ல கடற்கரையிலிருந்து சீனிமோதர வீட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற குழுவினர், அந்த வீட்டில் மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடலங்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக, தங்காலை – சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று சிறிய ரக பாரவூர்த்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, குறித்த போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு, சுமார் 988 கோடி ரூபா என்றும் பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த கண்டுபிடிப்பு தரைப்பகுதியில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பாரியளவிலான போதைப்பொருள் தொகையாக பொலிசார் வரையறுத்துள்ளனர். https://athavannews.com/2025/1448426- அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல் பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களே சுயமாக ஒரு பணியைச் செய்யும்போது பங்கேற்பாளர்களின் நேர்மை 95% ஆக இருந்ததாகவும், அதே பணியை AI உதவியுடன் செய்யும்போது நேர்மை 75% ஆகக் குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், AI மீது அதிகம் சார்ந்திருக்கும் சூழலில் பொய் பேசும் பழக்கம் கூடும் என்பதையும், ஒழுக்கப்பாட்டில் (integrity) குறைபாடு தோன்றும் அபாயமும் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் ஏற்படக்கூடிய நேர்மைச் சவால்கள் மற்றும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதோடு, AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்படவும் வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448416- கருத்து படங்கள்
- திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
கருணாநிதி.... நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்த ராஜாத்தியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தும் போது, ராஜாத்தி... (மேலே படத்தில் உள்ள) செந்தாமரை என்பவரின் மனைவி. ராஜாத்தி தனது கையை விட்டுப் போனதை.... தாங்க முடியாமல் மீண்டும் இணைந்து வாழ செந்தாமரை எவ்வளவோ முயற்சித்தும்.... கருணாநிதி தனது ரவுடியிச செல்வாக்கை வைத்து... ராஜாத்தியை நிரந்தரமாக தனதாக்கிக் கொண்டார். ராஜாத்தியின் மகள் தான்... கனிமொழி. கோசான்..... நாங்கள் எல்லாம், கருணாநிதியின் வாழ்க்கை சரித்திரத்தை கரைத்து குடித்து விட்டுத்தான்... யாழ்.களத்திலேயே இணைந்தனாங்கள். இராஜாத்தி... இன்னொருத்தரின் மனைவி அல்ல என்று கருணாநிதிக்கு வெள்ளை அடிக்கிற கதை, கம்பி கட்டுற கதை போன்ற பொய் செய்தி எல்லாத்தையும் @Kandiah57 அண்ணை போன்ற ஆட்களுக்கு சொன்னால் அவர்கள் நம்பலாம். ஆனால் எங்களிடம் உங்கள் பருப்பு வேகவே, வேகாது. 😂 செந்தாமரை... பின்னாளில், தமிழ் திரையுலகத்தில் பிரபலமாக பேசப் பட்ட குணசித்திர நடிகர் ஆவார். ஸ்ராலின் அவர்கள்... தனது தந்தை செய்த அருவருப்பான செயலுக்கு பிராயச்சித்தம் செய்யும் விதமாக... தனது மகளுக்கு செந்தாமரை என பெயர் சூட்டியுள்ளார் என்றே கருத இடம் உள்ளது. ஆக.... கருணாநிதியின் குடும்பத்தில்... உதயநிதியின் சகோதரியாக இப்போதும் செந்தாமரை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். 🙂- இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு!
இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 6.61% வலுவான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று EDB ஒரு அறிக்கையை வெளியிட்டு கூறுகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் மாத்திரம் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தை விட ஆண்டுக்கு ஆண்டு 2.57% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்த செயல்திறன் இலங்கையின் ஏற்றுமதித் துறையின் வலிமையையும், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்தப்பட்ட உத்திகளின் செயல்திறனையும் எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1448332- கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ் மற்றும் கம்பஹா பஸ் பொட்டா ஆகியோரைக் கொலை செய்ய தானே திட்டமிட்டதாக பத்மே ஒப்புக்கொண்டார். அத்துடன் கம்பஹா ஒஸ்மன் மீதான கொலை முயற்சியில் நேரடி தொடர்பு இல்லையெனவும், தம்மிட்ட அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் கோரிக்கையின் பேரில் அதற்கு ஒத்துழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொக்கேய்ன், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்ததாகவும், தமது கைபேசியில், “கொக்கேய்னை ஐ என்ற குறியீட்டு பெயராக பயன்படுத்தியதையும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் பொலிஸார் ஏற்கனவே மீட்டுள்ளதாகவும், தற்போது தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே மீதமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1448286 - கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.