Everything posted by தமிழ் சிறி
-
சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.
தமிழ் மக்களிடம்.... சம்பந்தன் தோற்றதும், ஈழ மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்ததற்கு காரணமும் மேலே மேற்கோள் காட்டிய இடத்தில் இருந்து தான் ஆரம்பமாகின்றது. தந்தை செல்வா கூறியது போல்... தமிழ் மக்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். அத்தனை முள்ளமாரி வேலைகளையும் செய்து விட்டுப் போனவர்தான் சம்பந்தன்.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இல்லாவிட்டடால்... அவர்கள் தமிழர்கள் என்று சொல்ல எந்த அத்தாட்சியும் இல்லாமல் போய்விடும். பொதுச் சேவை செய்கிறவன் மேல் சேறு அடித்து, அதனை செய்ய விடாமல் தடுக்க எவ்வளவு முனைப்பு காட்டுகின்றார்கள்.
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன். யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம். அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது.மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்டி பள்ளிக்கூடப் பிள்ளைகளின் இரைச்சல் கேட்டது.யாழ் நகரம் வழமை போல இயங்கியது.கடைகள் பூட்டப்படவில்லை; நகரத்தின் விளம்பர ஒலிபெருக்கிகளில் வளமை போல சினிமா பாடல்கள் ஒலித்தன.சோக கீதம் ஒலிக்கவில்லை. நகரத்தில் துக்கத்தின் சாயலைக் காண முடியவில்லை. சம்பந்தரின் பூத உடல் பலாலி விமான நிலையத்திலிருந்து தந்தை செல்வா கலையரங்கை நோக்கி வந்த வழி நெடுக மக்கள் திரண்டு நின்று துக்கத்தை வெளிப்படுத்தவில்லை. அப் பூதவுடலை யாழ்ப்பாணத்திலிருந்து வழியனுப்பி வைத்த பொழுதும் மக்கள் திரண்டு நின்று வணக்கம் செய்யவில்லை. ஆனால் தந்தை செல்வாவின் பூதவுடல் தெல்லிப்பளையிலிருந்து முற்ற வெளியை நோக்கி வந்த பொழுது வழிநெடுக மக்கள் திரண்டு நின்றார்கள். சில இடங்களில் சில கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலம் நீண்டு சென்றதாகத் தகவல். அது ஒரு தேசிய துக்க நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டது. மக்கள் தன்னியல்பாக செல்வாவை தந்தை என்று அழைத்தார்கள்.தன்னியல்பாக ஆயிரக்கணக்கில் அவருடைய இறுதி ஊர்வலத்தில் திரண்டார்கள். ஆனால் சம்பந்தருக்கு அது நடக்கவில்லை. ஏன் ? ஈழத் தமிழர்களின் நவீன அரசியலில் மிக நீண்ட காலம், இறக்கும்வரை பதவியில் இருந்த ஒரு தலைவர் அவர். தமிழ் மக்களின் தலைநகரம் என்று வர்ணிக்கப்படுகின்ற திருக்கோணமலையின் பிரதிநிதி. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியல் ஆகிய மூன்று கட்டங்களையும் தொடுக்கும் மூத்த அரசியல்வாதி. எல்லாவற்றையும் விட முக்கியமாக கிழக்கில் இருந்து எழுச்சி பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு மூத்த அரசியல்வாதிக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அஞ்சலி செய்யாதது ஏன்? ஏனென்றால், சம்பந்தர் இறக்கும்பொழுது ஏறக்குறைய தோல்வியுற்ற ஒரு தலைவராகவே இறந்தார். சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்கு முன்னப்பொழுதையும் விட அதிகம் விட்டுக்கொடுப்பதன் மூலம் ஒரு தீர்வைப் பெறலாம் என்று அவர் கற்பனை செய்தார். அதில் தோல்வியடைந்தார். எனவே அவரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புத்தான். ஆயுத மோதல்களுக்கு பின்வந்த மிதவாத அரசியலின் தலைவரான அவர் நீட்டிய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பானது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்திருந்தால். சம்பந்தரின் வழி வெற்றி பெற்றிருக்கும்.ஆனால் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு ராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அது அரசியல் வெற்றியாக மாற்றப்பட முடியாத ஓர் இனப்படுகொலை.ராஜபக்சக்கள் அந்த வெற்றியை ஒரு கட்சியின் அடித்தளமாக மாற்றினார்கள்.அதன் மூலம் யுத்த வெற்றிவாதத்திற்கு தலைமை தாங்கினார்கள். யுத்த வெற்றிவாதம் எனப்படுவது சம்பந்தருடைய விட்டுக் கொடுக்கும் அரசியலுக்கு எதிரானது.யுத்த வெற்றிவாதமானது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது சம்பந்தர் மட்டும் தனிக்குரலில் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்; பிரிக்கப்படாத இலங்கைக்குள் ; பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆயுத மோதல்களுக்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த அப்படிப்பட்ட ஒரு தலைவரை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு உரிய முக்கியத்துவம் கொடுத்து பொருத்தமான விதத்தில் கையாளத் தவறியது. அவருடைய விட்டுக் கொடுப்புகளுக்கு பரிசாக எதிர்க்கட்சித் தலைவரின் வீடு அவர் இறக்கும்வரை வழங்கப்பட்டது. அந்த வீட்டை ஏற்றுக்கொண்டதன் மூலமும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ஸ்தானத்தை இழந்த பின்னரும் அந்த வீட்டை விடாது வைத்துக் கொண்டிருந்ததன் மூலமும் சம்பந்தர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்குத் தலைமை தாங்கும் தகுதியைக் குறைத்துக் கொண்டார். இப்படிப் பார்த்தால் சம்பந்தரை முதலில் தோற்கடித்தது சிங்கள பௌத்த அரசுக்கட்டமைப்புதான். இந்த விடயத்தில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை நம்புமளவுக்கு சம்பந்தர் ஏமாளியாக இருந்தாரா என்ற கேள்வி எழும். அல்லது அவர் தன் சொந்த மக்களின் போருக்கு பின்னரான கூட்டு உளவியலை விளங்கிக் கொள்ள முடியாத ஒரு தலைவராக இருந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது விளங்கிக் கொண்ட போதிலும் அதற்கு விரோதமாக செயல்பட்டவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? அதனால்தான் அவருடைய அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்த பொழுது மக்கள் அதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வரவில்லையா ? இரண்டாவதாக, அவரை தோற்கடித்தது, அவருடைய அரசியல் வாரிசுகள். யாரை தன்னுடைய பட்டத்து இளவரசர்போல வளர்த்தாரோ, அவரே சம்பந்தரைக் குறித்து பொதுவெளியில் விமர்சிக்க தொடங்கினார். அவர் மற்றொரு வாரிசாக இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார்.தனது சொந்த தேர்தல் தொகுதியில், திருக்கோணமலையில் தன்னுடைய வாரிசாக அவர் யாரை இறக்கினாரோ, அவர் தனக்குத் தெரியாமல் நியமனங்களைச் செய்கிறார் என்று புலம்பும் ஒரு நிலைமை ஏற்பட்டது. அதாவது தன் மிக நீண்ட அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சம்பந்தர் தனது சொந்தக் கட்சிக்காரர்களாலே மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலின் பின் கட்சி இரண்டாக உடைந்தது. கட்சிக்காரர்களே கட்சியை நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்தினார்கள். தனது தாய்க் கட்சி உடைந்த போதும், அந்தக் கட்சியை கட்சிக்காரர்களே நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்திய பொழுதும், அதைத் தடுக்கும் சக்தியற்றவராக, கையாலாகாத ஒரு தலைவராக, சம்மந்தர் காட்சியளித்தார். அதாவது அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய கண் முன்னாலேயே அவருடைய தாய்க் கட்சி உடைக்கப்படுவதையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதையும் கையாலாகாதவராக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு அவர் தோற்கடிக்கப்பட்டிருந்தார். சம்பந்தரை அவருடைய வாரிசுகளே தோற்கடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவருடைய அஞ்சலி நிகழ்விலும் அவருடைய கட்சிக்காரர்கள் அவரை தோற்கடித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒர் அரசியல் தலைவரின் அஞ்சலி நிகழ்வு என்பதும் ஓர் அரசியல் நிகழ்வுதான். அதை அதற்குரிய கால முக்கியத்துவத்தோடு விளங்கி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை கட்சிக்காரர்கள் செய்யத் தவறினார்கள்.அவரைப் பெருந்தலைவர் என்று அழைத்த கட்சிக்காரர்களே அந்த அஞ்சலி நிகழ்வை பிரம்மாண்டமானதாக ஒழுங்குபடுத்தத் தவறினார்கள். அல்லது அவர்களால் அவ்வாறு ஒழுங்குபடுத்த முடியாத அளவுக்கு மக்களின் கூட்டு மனோநிலை இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா? அதனால் யாழ்ப்பாணத்தில் அந்த சாவீடு சோர்ந்து போன ஒரு சா வீடாகக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தில்,சம்பந்தரின் அஞ்சலி நிகழ்விலும் அவர் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய வாரிசுகளும் அவருடைய விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்களும் அவர் இறந்த பின்னரும் அவரைத் தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்லலாமா? https://athavannews.com/2024/1391210
-
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி
பிரிட்டனின் ஆட்சிமாற்றம் – தமிழா்களுக்குச் சாதகமாக அமையுமென தமிழ்க்கட்சிகள் நம்பிக்கை! பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றமானது, இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில், எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகருமென எதிா்பாா்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளாா். 14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா். அத்துடன், ஆங்கிலேயர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, தமிழர்களுக்கான நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை தொழிற்கட்சியினா் விரைந்து முன்னெடுக்கவேண்டும்’ என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். இதேவேளை, தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை கொன்சவேட்டிவ் கட்சியும் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன், தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில் அது தமிழர்களுக்கு சிறந்த மாற்றமாகவே அமையும் எனவும் அவா் நம்பிக்கை வெளியிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1391217
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சாவகச்சேரி வைத்தியசாலையின் நெருக்கடி நிலை – பொதுமக்கள் போராட்டத்தில் குதிப்பு! யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றம் மற்றும் அதன் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு கொண்டு வருவதற்கு வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நாளை திங்கட்கிழமை காலை 8 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தென்மராட்சி மக்கள் துண்டுப்பிரசுரம் மூலம் அறிவித்துள்ளனா். அத்துடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும், சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு கொண்டு வர வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மூன்றாவது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகருடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாக வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனா அமைச்சருக்குத் தொிவித்திருந்தாா். அத்துடன், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் மற்றும் ஆளணி வளம் காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தனர். பொதுமக்கள் தமக்கான சேவைகளை பெற்றுகொள்வதில் இடர்பாடுகளை சந்திப்பதாக அலுவலகத்துக்கு கிடைத்த தொலைபேசி முறைப்பாடுகளுக்கு அமைய அக்களவிஜயம் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாாிகள் தொிவித்துள்ளனா். இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடயத்தில் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள் மறைந்திருப்பதால், அவற்றிற்கு எதிராக வைத்திய அத்தியட்சகா் இராமநாதன் அர்ச்சுனா முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து சில தரப்பினா் தமது எதிா்ப்பினை வெளிப்படுத்துவதாக சமூக ஆா்வலா்கள் பலா் கருத்து வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391221
-
போதையூட்டும் மூலிகைச் செடி – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
போதையூட்டும் மூலிகைச் செடி – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். வெலிகந்த அசேலபுரத்தில் சித்த வைத்தியங்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியான அத்தன செடியின் பழத்தின் விதைகளை உட்கொண்டால் போதை ஏற்படும் என முதியவர் ஒருவர் உட்கொண்டு வந்துள்ளதை அவதானித்த பாடசாலை சிறுவன் ஒருவன் அந்த விதைகளை உட்கொண்டபோது அவனுக்கு போதை ஏற்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த பாடசாலை சிறுவன் தான் கல்விகற்கும் அசேலபுரத்திலுள்ள பாடசாலையிலுள்ள சக மாணவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் இந்த விதையை எடுத்துக் கொண்டுவருமாறு அந்த மாணவனிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவதினமான கடந்த வெள்ளிக்கிழமை குறித்த விதையை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவன் சக மாணவர்களுக்கு வழங்கியதையடுத்து அவர்கள் அதனை உட்கொண்டதையடுத்து 4 மாணவர்கள் 3 மாணவிகள் உட்பட 7 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனா். அவர்களை உடனடியாக அம்புலனஸ் வண்டி வரவழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 6 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் ஒரு மாணவி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவருக்கு எந்த விதமான ஆபத்துக்களும் இல்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார். இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1391243
-
பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ!
பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ! இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தள்ளார். அபோபிஸ் [Apophis] என்ற இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2036 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளதால் இந்த பேராபத்து ஏற்படாது என எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் என்றாலும் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது எனவும் அசம்பாவிதங்களுக்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதால் நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகின்றதாகவும் ஆபத்துகளை கண்டறிய நாம் இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைவர் சோம்நாத் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1391240
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
பல மருத்துவ மனைகளிலும், கல்லூரிகளிலும்…. டக்ளஸ் தேவானந்தாவால் தனது வாக்கு வங்கியை அதிகரிக்க நியமிக்கப் பட்ட ஊழியர்களே அதிகம் வேலை செய்வதும்… அவர்களால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் போன்ற சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம். அரசியல்வாதிகள் இப்படியான இடங்களில் மூக்கை நுளைக்காமல் இருந்தால் மட்டுமே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்க முடியும். யாழ். இந்துக் கல்லூரியிலும்…. சில அரசியல்வாதிகள் மூக்கை நுளைக்க முற்பட்ட போது தற்போதைய அதிபர் அதற்கு சம்மதிக்காததால் அவரால்… அங்கு சிறந்த சேவையை ஆற்ற முடிகின்றது.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
ஆறு திருமுருகனின் மகளிர் இல்லத்துக்கு எதிராக கம்பு சுற்றிய ஆட்கள் எல்லாரும் வரிசையாக வரவும். வேடிக்கை என்னவென்றால்… ஈழம், சைவம் என்றால் "அலர்ஜி" உள்ள பெரும்பாலானவர்கள்தான் இங்கும் கம்பு சுற்றியது கவனிக்கத்தக்கது.
- சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
எனக்கும், துருக்கி தோற்றது பயங்கர சந்தோசம். 😁 ஜேர்மனிக்கு கிடைக்காதது, துருக்கிக்கும் கிடைக்கக் கூடாது. 🤣
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சுகவீனம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நைஜீரியாவில், கதவைத் திறப்பவருக்கு.... இன்னும் ஒருவர் கதவு திறக்கும் காட்சி. 😂
-
நெதர்லாந்தில் இருந்து 35 மோப்ப நாய்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
நெதர்லாந்தில் இருந்து 35 மோப்ப நாய்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் நேற்று (5) வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நாய்கள் நெதர்லாந்திலிருந்து நேற்று (5) அதிகாலை 02.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த நாய்கள் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நாய்களின் மொத்த மதிப்பு 5 கோடியே 80 இலட்சம் ரூபா ஆகும். இந்த நாய்களில் 21 பெண் நாய்களும் 14 ஆண் நாய்களும் உள்ளன. இந்த நாய்களை ஏற்றுக்கொள்வதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிறுவனத்திற்கு வருகை தந்தார். இந்த நாய்கள் விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1391195
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாம்புக்கு... சவுக்காரம் போட்டு குளிக்க வார்க்கலாமா? 😂
-
கருத்து படங்கள்
- தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித்தேர்தலைப் பிற்போடுவதே சிறந்த தெரிவாக அமையும் - சி.வி.விக்னேஸ்வரன்
முதலில்... பொது வேட்பளாராக தான் போட்டி போடப் போறன் என்றார். இப்போ தேர்தலை பின் போடுவது நல்லது என்கிறார். இடையிலும்... ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக சில அறிக்கைகள் விட்டது போல உள்ளது. இவர்களுக்கு... நிரந்தர கொள்கைகள் எதுவும் இல்லையா...? மக்களை பைத்தியக்காரர் ஆக்குவது என்றே.. முடிவெடுத்து விட்டார்களா.- திருகோணமலையில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மாயம்
மூன்று நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்க்கப்பட்ட இஸ்ரேல் பெண். திருமலையில் காணாமல் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டிலிருந்து திருகோணமலைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி, கடந்த 26ம் திகதியில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் மூன்று நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த வெளிநாட்டு பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பெண் தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனும்திக்கப்பட்டிருந்தார். மருத்துவ பரிசோதனையின் பின்னர், அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. https://athavannews.com/2024/1391154- கதிர்காம கந்தனின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பம்
கதிர்காம கந்தனின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பம். வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று (06) முதல் தினமும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளுடனான ஊர்வலம் நடைபெறவுள்ளதுடன், 21ஆம் திகதி இறுதிப் பெருவிழா நடைபெறவுள்ளது. பின், 22ம் திகதி காலை, மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவத்தையடுத்து , உற்சவம் இனிதே நிறைவடையும். திருவிழாக் காலங்களில் கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொது வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட ஆணையாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பக்தர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதுடன், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. https://athavannews.com/2024/1391151- சம்பந்தர் காலமானார்
அப்படி ஒன்று இருந்திருந்தால், முன்பே சொல்லி இருப்பார்கள் தானே...😁 சம்பந்தர், பகலிலும் நித்திரை குளிசை போட்டுட்டு இருக்கிற ஆள். 😂- யாரோடும் தேரோடும்
அட… ஆமா…. அவரேதான். 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குப்பை நொட்டி.- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஜேர்மனி 1 - ஸ்பெயின் 2 ஸ்பெயின்... கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.- புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸுக்கு அழைப்பு
பிடியாணை அப்படியே இருக்கின்றது. சட்டங்கள் எல்லாம் ஏழை, பாளைகளுக்கே. அரசியல்வாதிகளுக்கு அல்ல.- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஜேர்மனி 1 - ஸ்பெயின் 1 88´வது நிமிடத்தில் ஜேர்மனி ஒரு கோல் அடித்தது. - தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித்தேர்தலைப் பிற்போடுவதே சிறந்த தெரிவாக அமையும் - சி.வி.விக்னேஸ்வரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.