Everything posted by தமிழ் சிறி
-
குட்டிக் கதைகள்.
எல்லாம் திறமான நகைச்சுவைகள் சுவியர். 😂
-
முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்
இஸ்ரேலியர்கள்…. காத்தான்குடிக்கும் பெருவாரியாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம். 🙏 😂
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஒற்றுமையாக இருந்து, இனத்துக்கு நன்மை செய்ய மாட்டோம். மறு பக்கம் அன்றைய தலையாட்டிகளான.... டக்ளஸ் மற்றும் சந்திரகுமாரோடு கூட்டணி அரசியல் செய்வோம். - சுமந்திரனின் தமிழரசு கட்சி. - அடுத்த தேர்தலுக்கு... ஊருக்குள் வருகின்ற தமிழரசு கட்சிகாரனுக்கு... செருப்பு பிய்ய, சம்பவம் காத்திருக்கு.
-
செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன கருவிகள்!
செம்மணி புதைகுழி பகுதிகளில் ஸ்கேன் ஆய்வு பணிகள் இன்று முதல் ஆரம்பம்! செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கேன் நடவடிக்கைகள் இன்றைய தினம் (04) முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர். ஸ்கேனர் (தரையை ஊடுருவும் ரேடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை அந்நிலையில், ஶ்ரீஜெயவர்வத்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கேனர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்நடவடிக்கையை அடுத்து , இன்றைய தினம் குறித்த ஸ்கேனரை பயன்படுத்தி ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களான ஆடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காட்டும் வகையில் நாளைய தினம் (05)செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மதியம் 1.30 மணி முதல் , மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சான்று பொருட்களை பார்வையிட வருபவர்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441747
-
செம்மணி மனித புதைகுழி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
செம்மணி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது!- ஜகன் குணத்திலக. ”இதுவரை நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் திருப்தி உள்ளது” என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகன் குணத்திலக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழிகள், அமைந்துள்ள சித்துபாத்து மயானத்தினை இன்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இன்று செம்மணிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் குறித்த குழுவினர் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மற்றும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் இன்று இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜகன் குணத்திலக கருத்துத் தெரிவிக்கையில் ” செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டோம். அகழ்வு பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளோம். இன்று நாம் அவதானித்த விடயங்களை நாம் அறிக்கையாக வெளியிடுவோம். கொழும்பு சென்ற பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவருடனும் ஏனைய ஆணையாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த வார இறுதிக்குள் செம்மணி தொடர்பான அறிக்கையை நாம் வெளியிடுவோம். இதுவரை நடைபெற்ற அகழ்வுப்பணிகளில் திருப்தி உள்ளது. எனவே அதனை நாம் அறிக்கையில் சுட்டிக்காட்டவுள்ளோம். இங்கு நடைபெறுகின்ற வியடம் உணர்வு சார்ந்த விடயமாக காணப்படுகின்றது. எனவே ஊடகங்கள் இதனை அறிக்கையிடும்போது இதனை உணர்வு ரீதியாக அறிக்கையிடாது, யாதார்த்தமாக செய்திகளை அறிக்கையிடுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். செம்மணி தொடர்பாக இதுவரையில் எம்மால் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே மிக விரைவில் அனைத்து அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1441775
-
பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல்.
நிபந்தனைகளை இஸ்ரேல் பூர்த்தி செய்தால் பணயக்கைதிகளுக்கு உதவ தயார் – ஹமாஸ் தெரிவிப்பு! இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவி வழங்க செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7 முதல் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதி எவியதார் டேவிட்டின் இரண்டு காணொளிக்களை வெளியிட்டதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஹமாஸ் குழுவின் இந்த அறிக்கை வந்துள்ளது. காணொளியில் தற்போது 24 வயதான பணயக்கைதி எலும்புக்கூடு போல் தோற்றமளிக்கிறார். அவரது தோள்பட்டையில் காயத்தின் தழும்புகள் காணப்படுகின்றன. இந்த காட்சிகள் பெரும் விமர்சனத்தைத் தூண்டின, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் இந்த காணொளிகள் “பயங்கரமானவை” என்று முத்திரை குத்தினார். மேலும் அவை “ஹமாஸின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன” என்று கூறினார். இதனிடையே ஞாயிற்றுக்கிழாமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பணயக்கைதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளார். இந் நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள ஹமாஸின் இராணுவ செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்தா, எதிரி கைதிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தின் எந்தவொரு கோரிக்கைக்கும் நேர்மறையாக ஈடுபடவும் பதிலளிக்கவும் தயாராக உள்ளோம். ஆனால், இஸ்ரேல் நிரந்தரமாக ஒரு மனிதாபிமான வழித்தடத்தைத் திறப்பது, உதவி விநியோகிக்கப்படும்போது வான்வழித் தாக்குதல்களை நிறுத்துவது உள்ளிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இந்த எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது. இதில் 93 சிறுவர்களும் அடங்குவர். பல சர்வதேச நிறுவனங்கள் பிரதேசம் முழுவதும் பஞ்சம் பரவி வருவதாக எச்சரித்துள்ளன. இஸ்ரேலிய முற்றுகை காரணமாக கடந்த மார்ச் 2 முதல் மே 19 வரை காசாவிற்குள் எந்த உதவியும் வரவில்லை – அன்றிலிருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவது குறைவாகவே உள்ளது. இதற்கிடையில், பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் நேற்று காசாவில் குறைந்தது 80 பேர் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களால் இறந்ததாகவும் கூறினர். https://athavannews.com/2025/1441727
-
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு!
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு! தூத்துக்குடியில் 1119.67 கோடி இந்திய ரூபாய் செலவில் 114 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாயின் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார். மேலும், கார் முதல் விற்பனை தொடக்க விழாவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கனிமொழி எம்.பி. , வின்பாஸ்ட் கார் நிறுவன நிர்வாகிகள், அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441711
-
பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல்.
பணயக்கைதிகளை பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிய இஸ்ரேல். ”காசாவில் சிறைபிடிக்கப்பட்ட தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) முன்வர வேண்டும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். கடந்த இரண்டரைக்கு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் பலரை சுட்டுக் கொன்றதுடன், 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பயணக் கைதிகளில் பலர் இறந்து விட்ட நிலையில், சிலர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் படையினரின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, இஸ்ரேலை அடிபணிய வைக்கும் விதமாக, தங்களது பிடியில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதி ஒருவரின் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த வீடியோவானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் அந்த நபர், மண்வெட்டியுடன் தனக்கு தானே புதைக்குழியை வெட்டிக் கொள்ளும் காட்சிகள் குறித்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையிட வேண்டும் என்றும், அங்குள்ள தங்கள் நாட்டு பணயக் கைதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவ சேவை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, சிறைபிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை சந்திக்க ஹமாஸ் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441722
-
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!
வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்! வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலையத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்தஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியானசாலை மண்டபத்தை திறந்து வைத்து உறையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்த சீதையம்மன் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியாவிலிருந்து அநேகமான பக்த அடியார்கள் வழிபாடுவதற்காக இந்த ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். நாளுக்கு நாள் இங்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன்று இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகைளை எடுத்துகொண்டால் இந்தியாவில் இருந்து தான் அதிகமான பயணிகள் வருகை தருகிறார்கள். வழிபாட்டுத் தலங்களை பார்வையிடவே அதிகமானோர் நாட்டுக்கு வருகின்றார்கள். அதிலும் சீதையம்மன் ஆலயம், கோணேஸ்வர ஆலையம், கதிர்காமம், போன்ற புனித ஸ்தலங்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள அதிகளவில் வருகை தருகின்றனர். எமது பொருளாதார நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால் வெளிநாட்டு பயணிகள் வருவதை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். இவ் வருடத்தில் 30 இலட்சம் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். தற்பொழுது 1.3சதவீதமான வெளிநாட்டு பயணிகள் வருகை தந்துள்ளனர் அதிலும் அதிகமாக வருகின்றவர்கள் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள். வெளிநாட்டு பயணிகளின் வருகையால் கடந்த ஆறு மாதகாலப்பகுதியில் 3.7 பில்லியன் டொலர்கள இலாபமாக கிடைத்துள்ளது. இந்த வருடத்திற்குள் பில்லியன் 7.5 டொலர் இலாபத்தை பெற்றால் பொருளாதாரத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதிகமான அடியார்களை இந்தியாவிருந்து இந்த சீதையம்மன் ஆலையத்திற்கு அழைத்து வரும் நோக்கில் இந்த ஆலயத்தினை மேலும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அத்தோடு இந்த பகுதியில் அதிகமான சுற்றுலா விருந்தகங்கள் அமைந்துள்ளது இந்த பிரதேசத்தை பிரதிநிதித்துவம் படுத்தி இராமயண வரலாற்றை இனைத்த வெளிநாட்டவர்கள் எதிர்வரும் காலங்களில் இங்கு வருகை தருவார்கள். மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை நுவரெலியா பிரதேசத்தி்ற்கு மேற்கொள்ளும் போது இந்த பிரதேச மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1441658
-
கருத்து படங்கள்
- செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்..! மனோ கணேசன் தெரிவிப்பு! “..கிருஷாந்தி குமாரசுவாமி மட்டும் அல்ல, இன்னமும் பல நூற்று கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். இதை நான் 1998ம் வருடமே என் சாட்சியத்தில் சொன்னேன். இன்று ஐந்து அல்லது ஆறு மனித புதை குழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நான் சொன்னது உண்மை ஆகி உள்ளது.” “மொத்தமாக 250 முதல் 300 பேர் வரை சித்திரவதைக்கு உள்ளாகி கொன்று புதைக்க பட்டார்கள். இன்று தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் நானும், ஏனைய நால்வரும் மட்டும் இத்தனை பேரை கைது செய்து, சித்திரவதை செய்து, கொன்று, குழி வெட்டி, புதைக்க முடியுமா?” “யாழ்ப்பாணத்துக்கு செல்லும் பிரதான, சாலையில் அமைந்துள்ள, செம்மணி காவல் சாவடியில், பகல் நேரங்களில், அடையாளம் காட்டப்படுவோர், உடன் கைது செய்ய பட்டு, இராணுவ வாகனத்தில் , ஏற்றப்பட்டு, 7ம் இராணுவ படை தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை என்ற பெயரில், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, சடலங்களாக இரவு மீண்டும் செம்மணி காவல் சாவடிக்கு கொண்டு வரப்படுவர். மேலதிகாரிகளின் கட்டளை படி நாம் அந்த சடலங்களை அங்கே புதைப்போம். தொடர்ந்து புதைத்தோம். இதுதான் நடந்தது. கொலை செய்த மேலதிகாரிகள் தப்பி விட்டனர். புதைத்த நாம் தண்டனைக்கு உள்ளாகி உள்ளோம். சில மேலதிகாரிகள் கைதாகி வழக்கு தொடரப்பட்டு, பின் அந்த வழக்கு நின்று போய் விட்டது. அதிகாரிகள் தப்பி விட்டார்கள். நாம் அகப்பட்டுள்ளோம். இது அநீதி. சர்வதேச விசாரணை நடக்கும் பட்சத்தில் நான் சாட்சியம் அளித்து குற்றம் இழைத்த அதிகாரிகளின் பெயர்களை வெளி படுத்த தயாராக உள்ளேன்” லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்கிரம மூலம் இவ்வாறு கூறி உள்ளதாக தெரிவித்த, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இவ்விதம், வெளி கொணர பட்டுள்ள கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் புதிய திருப்பம் தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளியான, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவின் மனைவி திருமதி எஸ்.சி.விஜேவிக்கிரம, ஜனாதிபதி அனுர குமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பி உள்ளார். ஐ.நாவுக்கும் அனுப்பி உள்ளார். அக்கடிதத்தில் அவரது கணவர் அவரிடம் கூறிய மேற்கண்ட விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே இன்று இந்த கடிதம், அனுரகுமார திசாநாயக்கவின் “கோர்ட்டில்” நிற்கிறது. சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அனுர உடன் பட வேண்டும். அதில் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவுக்கு, உடனடியாக அங்கே அதி உயர் விசேட பாதுகாப்பு வழங்க பட வேண்டும். இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயார் ஆவோம். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் நாம் அதிகார பூர்வமாக கோரிக்கை விடுப்போம். பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இதுவரை, இப்படி ஒரு இராணுவத்தை சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்ட தயார் என கூறவில்லை. ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அனுர குமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாக தர ஐநா மனித உரிமை ஆணையகமும் முன் வர வேண்டும். இதை செய்ய முடியா விட்டால், இது ஒரு அரசாங்கமாகவோ, அது ஒரு ஐநா சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அனுர குமாரவும், வொல்கர் டர்க்கரும் உணர வேண்டும். அதனால்தான், அனுரவுக்கு செம்மணி விவகாரம் ஒரு அக்னி பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன். https://athavannews.com/2025/1441628- ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருமானம்! கடந்த 06 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் உள்ள சீதைஅம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் $3.7 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு அடுத்த சில மாதங்களில் மேலும் $3.7 பில்லியன் வருவாய் இலக்கை எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகள் முன்னணியில் உள்ளனர். மேலும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மத சுற்றுலாப் பயணிகளில் முன்னணியில் உள்ளனர். எனவே மதப் பயணத்தை ஊக்குவிக்கும் நம்பிக்கையில் அரசாங்கம் ஆலயத்துக்கு மேலும் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுரா செனவிரட்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1441652- சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்!
சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்! பேருந்து ஒன்றிலிருந்த சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டில் நியூசிலாந்து பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்திலிருந்து 60 மைல் வடக்கே உள்ள கைவாகாவில் திட்டமிடப்பட்ட ஒரு நிறுத்தத்தின் போது, ஒரு பயணி லக்கேஜ் பெட்டியை அணுக அனுமதி கேட்டதை அடுத்து, பேருந்து சாரதி பைக்குள் அசைவு ஒன்று ஏற்படுதை கவனித்தார். சாரதி, சூட்கேஸைத் திறந்தபோது, அவர்கள் அந்த 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்தனர். இதன்போது, குழந்தையின் உடல் சூடாக இருந்ததாகவும், உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லாமல் தோன்றியதாகவும் அதிகாரிகள் கூறினர். மீட்பின் பின்னர், குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கு விரிவான மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது. குறித்த குழந்தை சூட்கேஸில் எவ்வளவு நேரம் இருந்தாள், அல்லது பேருந்து எந்த நகரங்களுக்கு இடையே பயணித்தது என்பது குறித்து அதிகாரிகள் எந்தக் கருத்தையும் கூறவில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெயர் குறிப்பிடப்படாத 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குழந்தையை மோசமாக கையாண்டமை அல்லது புறக்கணித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். அந்தப் பெண் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1441659- ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்!
ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து; 68 பேர் மரணம், 74 பேர் மாயம்! ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஏமனுக்கு அருகில் நடந்த தொடர்ச்சியான கப்பல் விபத்துக்களில் அண்மைய நிகழ்வாகும். ஏமனில் உள்ள சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தலைவரான அப்துசாட்டர் எசோவ் கூறுகையில், 54 எத்தியோப்பிய குடியேறிகளுடன் சென்ற கப்பல், தெற்கு யேமன் மாகாணமான அப்யானில் இருந்து ஏடன் வளைகுடாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூழ்கியது. கான்ஃபார் மாவட்டத்தில் கரை ஒதுங்கிய 54 புலம்பெயர்ந்தோரின் உடல்களும், மேலும் 14 பேரின் உடல்களும் இறந்து கிடந்ததுடன் ஏமனின் தெற்கு கடற்கரையில் உள்ள அப்யானின் மாகாண தலைநகரான ஜிஞ்சிபாரில் உள்ள மருத்துவமனையின் பிரேத அறைக்கு அவை கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். அதேநேரம், கப்பல் விபத்தில் 12 புலம்பெயர்ந்தோர் மட்டுமே உயிர் பிழைத்தனர். ஏனையவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்றும் எசோவ் கூறினார். இதற்கிடையில், அப்யான் பாதுகாப்பு பணியகம் ஏராளமான இறந்த மற்றும் காணாமல் போன புலம்பெயர்ந்தோரை கருத்தில் கொண்டு ஒரு பெரிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான உள்நாட்டுப் போர் இருந்தபோதிலும், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பகுதியிலிருந்து வேலைக்காக வளைகுடா அரபு நாடுகளை அடைய முயற்சிக்கும் குடியேறிகளுக்கு ஏமன் ஒரு முக்கிய பாதையாகும். செங்கடல் அல்லது ஏடன் வளைகுடா முழுவதும் பெரும்பாலும் ஆபத்தான, நெரிசலான படகுகளில் புலம்பெயர்ந்தோர் கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அண்மைய மாதங்களில், ஏமனுக்கு அருகில் நடந்த கப்பல் விபத்துகளில் பல புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். மார்ச் மாதத்தில் ஏமன் மற்றும் ஜிபூட்டிக்கு அருகில் நான்கு படகுகள் கவிழ்ந்ததில் இரண்டு புலம்பெயர்ந்தோர் இறந்தனர் மற்றும் 186 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1441648- சிரிக்கலாம் வாங்க
- தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன்.
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன். செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது. ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான். செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது. கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு. நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான். இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ? இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள். நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம். அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது. வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார். எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது. இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது. எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும். இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ? https://athavannews.com/2025/1441586- ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: கையெழுத்து விவகாரம் குறித்து தமிழரசுக்கட்சியின் தீர்மானம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழரசுக்கட்சி கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடாது? நிலாந்தன். செம்மணிப் புதைகுழிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இம்மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மக்கள் பொருட்களை அடையாளம் காட்டலாம்.அது ஒரு நீதிமன்றத்தில் ஆளுகைக்கு உட்பட்ட நடவடிக்கை என்ற காரணத்தால் அதற்குரிய ஒழுங்குகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தில் சீரியஸாக இருக்கிறது, உண்மையாக இருக்கிறது என்று கூறுபவர்களுக்கு இது உற்சாகமூட்டக்கூடியது.குறிப்பாக அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரை நோக்கி அரசாங்கம் உழைத்து வருவதை இது காட்டுகிறது. ஊழல்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆர்வத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான நடவடிக்கையானது பொறுப்புக் கூறத் தொடர்பில் அரசாங்கம் உலக சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றது என்பதைக் காட்டுகின்றன. பகிரங்க சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் என்பதும் இந்த உள்நோக்கத்தை கொண்டதுதான். செம்மணியில் அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்ற ஒரு பிம்பத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டியெழுப்புவதன் மூலம் உள்நாட்டு நிதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக மனித உரிமைகள் ஆணையாளர் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது என்ற தனது நிலைப்பாட்டை கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக தெரிவித்த பின் அரசாங்கம் அதிகம் உற்சாகமடைந்திருப்பதாகத் தெரிகிறது. கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் அரசாங்கத்தின் ஓர் அலகு போல செயல்படுகின்றது என்ற பொருள்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விமர்சித்து வரும் ஒரு பின்னணிக்குள், அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் முடிவுகளை தனக்குச் சாதகமாக வளைக்கக்கூடிய விதத்தில் அரசாங்கம் திட்டமிட்டு உழைக்கின்றது என்பதைத்தான் செம்மணி விசாரணைகளில் அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த விடயத்தில் தமிழ்த் தரப்பு என்ன செய்யப் போகின்றது? முதலாவதாக செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதற்கும் அந்த விடயத்தில் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உதவக்கூடிய விதத்திலும் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு;தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உண்டு; தமிழ்ச் சிவில் சமூகங்களுக்கு உண்டு. நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் உரிய முறைப்படி திரட்டி,உரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறைக்கூடாக முன்னெடுப்பதுதான். இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகளிடமும் தமிழ் குடிமக்கள் அமைப்புகளிடமும் நீண்ட கால அடிப்படையிலான பரந்தகன்ற,வேலைத் திட்டம் ஏதாவது உண்டா? குறிப்பாக ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவதற்கும் அப்பால் பரிகார நீதியை நோக்கி நிலைமைகளை புத்திசாலித்தனமாக நகர்த்தக்கூடிய வழி வரைபடம் ஏதாவது உண்டா ? இந்த விடயத்தில் முன்கை எடுத்து செயற்பட்டிருக்க வேண்டியது பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிதான்.2015 இலிருந்து 2018 வரையிலும் அக்கட்சி நிலைமாறு கால நீதியின் பங்காளியாக செயற்பட்டது. அப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களில் ஒரு பகுதியினரும் நிலைமாறு கால நீதியை நிராகரித்து பரிகார நீதியைக் கோரினார்கள். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதை சட்டத்துறை சார்ந்த வார்த்தைகளில் சொன்னால் நிலை மாறு கால நீதிக்கானது. தமிழரசுக் கட்சி காலகட்டத்தில் நிலைமாறு கால நீதியின் பங்காளியாகச் செயல்பட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்கள் ஐநாவோடும் இலங்கை அரசாங்கத்தோடும் இணைந்து செயல்பட்டார்கள். நிலைமாறு கால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிசோதனை செய்தோம். அந்தப் பரிசோதனை தோற்றுப் போய்விட்டது “என்று சுமந்திரன் சொன்னார். அவர் இதைச் சொன்னது வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில். அந்த சந்திப்பு முக்கியமானது. 2021 ஆம் ஆண்டு மன்னாரைச் சேர்ந்த சிவகரனால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு அது. ஜெனிவாக கூட்டத் தொடரை முன்னிட்டு ஐநாவுக்குக் கொடுக்க கடிதம் ஒன்றை ஏழுதுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது சந்திப்பு அது. சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தார்கள். அந்த சந்திப்பில்தான் சுமந்திரன் மேற்கண்டவாறு சொன்னார்.அந்த சந்திப்பின் பின் நிகழ்ந்த மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்,சென் திரேசாள் மண்டபத்தில் இடம் பெற்றது.அதில்தான் ஒரு கூட்டுக் கடிதம் இறுதி செய்யப்பட்டது. வவுனியாவில் சுமந்திரன் சொன்னதை இன்னொரு விதமாகச் சொன்னால் இலங்கை தீவில் நிலை மாறுகால நீதியை ஸ்தாபிக்கும் முயற்சிகளில் அதாவது இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் ஐநா தோற்றுப் போய்விட்டது என்றும் சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்களும் பங்காளிகள்.ஆட்சி மாதத்தைக் கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் கூடாது தொடர் செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அப்பொழுது உருவாக்கப்பட்ட ரணில் மைத்திரி அரசாங்கமானது ஐநாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியதுதான் நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானம் ஆகும். அதற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட எல்லா தீர்மானங்களிலும் அப்போது இருந்த இலங்கை அரசாங்கங்கள் தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களித்தன. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னரும் அரசாங்கம் ஐநா தீர்மானங்களுக்கு எதிராக விவாக்களித்தது.ஏன் அதிகம் போவான்? புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகிய விகித ஹேரத் கடந்த ஐநா கூட்டத்தொடரில் பேசும் பொழுது ஐநா தீர்மானங்களுக்கு எதிராகவும் அனைத்துலக பொதுமுறைக்கு எதிராகவுமே பேசியிருக்கிறார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்,ஏற்கனவே ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான முயற்சிகள் தோல்வியடைந்திருக்கும் ஆகப்பிந்திய அனுபவங்களின் பின்னணியில்,ஒரு புதிய அரசாங்கம் கொழும்பில் ஆட்சி செய்யும் ஒரு பின்னணியில்,கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. அக்கட்சியானது சிவில் சமூகத்தோடு இணைந்து ஒரு கடிதத்தைத் தயாரித்து அந்த வரைபை தமிழரசுக் கட்சிக்கும் அனுப்பியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை அதாவது நேற்று அது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழரசுக் கட்சி கூடியது. முடிவில் கூட்டுக் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்று சுமந்திரன் அறிவித்திருக்கிறார். எனினும் தமிழரசுக் கட்சியின் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொழும்பில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் நிகழ்வு ஒன்றில் சுமந்திரன் கஜேந்திரகுமார் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில் சுமந்திரனுக்கும் கஜனுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக ஒரு தகவல்.கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் முடிவை சுமந்திரன் அறிவித்திருக்கும் ஒரு பின்னணியில் அந்தச் சந்திப்பு இனி நடக்குமா இல்லையா என்பதனைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கட்சியின் பதில் தலைவர், பொதுச் செயலாளருக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது என்று சிவஞானமும் சுமந்திரனும் கூறுகிறார்கள்.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்களிடமிருந்து கழட்டி எடுத்து கடிதத்தில் அவர்களுடைய கையெழுத்தை வாங்குவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது என்ற குற்றச்சாட்டு அதற்குள் மறைந்திருக்கிறது. இந்தக் கூட்டுக் கடித விவகாரத்தை முன்வைத்து தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமிழரசுக் கட்சியினர் மத்தியில் உண்டு.கடிதத்தின் பிரதிகள் தனித்தனியாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டமையை மேற்சொன்ன சந்தேகத்துக்கு ஊடாகத்தான் தமிழரசுக் கட்சி பார்க்கின்றது என்று தெரிகிறது. எனவே ஐநாவுக்கு அனுப்பப்படப் போகும் கூட்டுக் கடிதம் மெய்யான பொருளில் ஒரு பலமான கடிதமாக அமைவதற்கான வாய்ப்புகள் இனிமேல்தான் உருவாக வேண்டும். தமிழரசுக் கட்சியின் கூட்டத்தின் பின் அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் அக்கடிதத்தில் தமிழ்த் தேசியப் பேரவைச் சேர்ந்த கட்சிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மட்டும்தான் கையெழுத்திடுவார்கள் போல் தெரிகிறது. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்று சொன்னால் அந்த கூட்டுக் கடிதத்துக்கு அங்கீகாரம் குறைவாகவே இருக்கும். இந்த விடயத்தில் கூட்டுக் கடிதத்தின் அங்கீகாரத்தைக் கூட்டுவதா? அல்லது தமிழரசுக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதா? என்ற இரண்டு தெரிவுகளில் எதனை தமிழ்த் தேசிய பேரவை எடுக்கப் போகிறது ? https://athavannews.com/2025/1441586- கருத்து படங்கள்
- நல்லூரானை தரிசித்தார் பிரதமர் !
நல்லூரானை தரிசித்தார் பிரதமர் ! யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (03) நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் , யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாவின் 6ஆம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441570- செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம்(02) மேலும் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 126 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 05 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இதுவரையில் 117 மனித எலும்புக்கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 28 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் கடந்த 13 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 52 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1441565- ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு!
ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்த உத்தரவு! ரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெட்வெடேவின்(Dmitry Medvedev) கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற நிலையில், டிரம்ப் உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கிய 50 நாள் காலக்கெடுவை 12 நாட்களாக குறைத்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். இதேவேளை, தமது நிபந்தனையை மீறினால் ரஷ்யா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் மற்றும் 100 சதவீத வரியும் விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெட்வதேவ் அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைக்கு தனது எக்ஸ் தளத்தில், பதில் கருத்தினை வெளியிட்டிருந்தார். ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ அல்ல என்றும் ரஷ்யா மீதான மிரட்டல்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கே அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டார். அத்துடன் அமெரிக்காவின் பனிப்போர் காரணமாக, தன்னிச்சையாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் அமெரிக்காவை நோக்கி ஏவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷ்யாவை நோக்கி அணு ஆயுதம் தாங்கிய இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை அனுப்புமாறு டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்றும் அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் டொனால் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1441578- குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.- நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு.
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாருடன், அவரது மகனும் தற்போதைய பதினோராவது நிர்வாக அதிகாரியுமான குமரேஷ் சயந்தன மாப்பாண முதலியார் படத்தில் காணப்படுகின்றார்கள். பட இணைப்பிற்கு நன்றி சுவியர்.- பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
முதல்வர் ஸ்ராலினை சந்தித்த பன்னீர்செல்வம். அந்தச் சந்திப்பில்... சின்னவர் உதயநிதியும், பன்னீர்செல்வத்தின் மகனும் கலந்து கொண்டார்கள்.- பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
ஆஸ்பத்திரி பிள்ளைப் பெறு பகுதியில் பார்த்தால்... துருக்கி, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று முஸ்லீம் பெண்களால் நிரம்பி வழியும். அங்கு ஜேர்மன்காரிகளை காண்பது அரிது. இந்த முஸ்லீம் ஆண்களுக்கு... ஆணுறை என்று ஒன்று, கடையில் விற்பது தெரியாது போலுள்ளது. 😂 - செம்மணி மனிதப் புதைகுழியின் சர்வதேச விசாரணைக்கு சோமரத்ன ராஜபக்ச தயார் : அநுரவிற்கு பறந்த கடிதம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.