Everything posted by தமிழ் சிறி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?
ஆழ்ந்த அனுதாபங்கள்.- நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
தீவு பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்! அமைச்சர் சந்திரசேகர்! யாழ்ப்பாணத்தில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை சேதமடைந்த படகில் இருந்த பயணிகளை விரைந்து மீட்ட பணியாளர்களுக்கும் கடற்படையினருக்கு தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், கடல் பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளதுடன் அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438948- வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!
வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு! நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை உள்ளடங்குகின்றன. மேலும், ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளையும் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேலும், சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும், மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகிவிட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ்ப்பாண வைத்தியசாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார். இதுபோன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இதேவேளை, சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன என்றும், எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை, புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடமானது ஜெர்மன் செஞ்சிலுவைச் சங்க வாரன்டோர்ஃப் கிளை (German Red Cross Warendorf Branch) மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டதுடன் அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு இலங்கை கடற்படை மற்றும் இராணுவம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438940- கருத்து படங்கள்
- இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி!
- வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!
அகராதி: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People's Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்) என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது.- செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன். அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில் மனிதப் புதைகுழிகள் அதிகமுடைய ஒரு தீவுந்தான். சிங்கள மத்தியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கலாநிதி ஜயலத் மற்றும் சுனிலா அபய சேகர போன்றவர்களின் வார்த்தைகளில் சொன்னால் அழகிய இலங்கைத் தீவு காணாமல் போனவர்களை மறக்க முற்படும் ஒரு தீவுந்தான். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொடங்கி கடந்த 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்ட ஒரு தீவு.யாருக்குமே சரியான கணக்குத் தெரியாது.புத்த பகவானைத் தவிர. இதுவரை 23 புதை குழிகள் கிண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆகப் பிந்தியதுதான் செம்மணி. செம்மணிக்கு ஓர் இனப் பரிமாணம் உண்டு. அதனால்தான் அது இப்பொழுது பேசு பொருளாக மாறியிருக்கிறது. மேலும் ஐ நா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும்பொழுது செம்மணி கிண்டப்பட்டமை என்பது மற்றொரு முக்கியத்துவம். அதனால் அதற்கு உலகப் பிரசித்தம் கிடைத்திருக்கிறது. மூன்றாவது, முக்கியமானது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. எனவே தமக்குரிய அரசியல் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் என்ற அடிப்படையில் செம்மணியை ஒரு விவகாரமாக மாற்ற வேண்டிய தேவை தமிழ்த் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலில் உண்டு. இதனால் செம்மணி விவகாரம் முதலாவதாக தமிழ் மக்களை தேசிய உணர்வோடு ஒருங்கிணைத்து வருகிறது.இரண்டாவதாக இனப்பிரச்சினை மீதான சர்வதேசக் கவனத்தை ஈர்த்து வருகிறது.அனைத்துலக ஊடகங்கள் அது தொடர்பாக செய்திகளை வெளியிடத் தொடக்கி விட்டன.புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அதைப் பேசு பொருளாக்கியிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செம்மணி அகழ்வுக்கு ஒரு கோடியே இருபது லட்ஷம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் தொடர்ந்தும் தேவையான நிதி வழங்கப்படுமா? அதோடு அணையா விளக்கு போராட்டமும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் கேட்பதுபோல இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையை;அனைத்துலக சமூகத்தின் நிபுணத்துவ உதவியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா? குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின் பின்னரான அரசியற் சூழலில் தேசிய மக்கள் சக்தி செம்மணி தொடர்பில் எப்படி நடந்து கொள்ளும்? முதலாவதாக அது,தேசிய மக்கள் சக்தியானது உண்மையை வெளியே கொண்டு வருவதில் எந்த அளவுக்கு உண்மையாக உழைக்கும் என்பதில் தங்கியிருக்கிறது. இரண்டாவதாக அது,அவ்வாறு வெளிக்கொண்டு வரப்படும் உண்மையானது தென்னிலங்கையில் இனவாதத்தை புதிய கட்டத்துக்கு உயிர்ப்பிக்குமா இல்லையா என்ற விடயத்திலும் தங்கியிருக்கிறது . முதலாவது விடயத்தை நான் ஏற்கனவே இப்பகுதியில் எழுதியிருக்கிறேன். தனது இரண்டு ஆயுதப் போராட்டங்களின் போதும் காணாமல் ஆக்கப்பட்ட தனது சொந்தத் தோழர்களுக்காக ஜேவிபி நீதி கேட்கவில்லை. ஆயிரக்கணக்கான இளையோர் அவ்வாறு கொல்லப்பட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டார்கள்.ஜேவிபி அவர்களுக்காக நீதி கேட்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டால் எந்தப் படைத் தரப்பை அவர்கள் இறுதிக் கட்டப் போரில் யுத்த வெற்றி நாயகர்களாகக் கட்டியெழுப்பினார்களோ அதே படைத்தரப்பை அவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டி வரும். அவ்வாறு செய்வதற்கு ஜேவிபி தயாரில்லை. நாட்டின் யுத்த வெற்றி நாயகர்களை யுத்தக் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஜேவிபி தயாராக இருக்காது.அதனால்தான் கடந்த தசாப்தங்களில் கிண்டப்பட்ட மனிதப் புதைக்குழிகளின் விடயத்தில் ஜேவிபி உண்மையை வெளியே கொண்டு வரத் தேவையான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. உதாரணமாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு மாத்தளையில் ஒரு பெரிய மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது.அது கண்டுபிடிக்கப்பட்ட காலம் 2012. மாத்தளை பொது ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக நிலத்தை அகழ்ந்த பொழுது அங்கே எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. அதைத்தொடர்ந்து அப்பிரதேசம் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கிண்டப்பட்டது.அதன்போது மொத்தம் 158 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அக்காலகட்டத்தில் அதற்கு எதிராக அனுரகுமார குரல் எழுப்பியதாக ஒரு ஞாபகம்.அது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது.ஆனால் அது ஒரு விவகாரமாகத் தொடர்ந்து பேசப்படவில்லை. கிண்டப்பட்ட புதை குழிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியே கொண்டு வரப்படவில்லை. அவற்றை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி உரிய தீவிரத்தோடு போராடவில்லை. அக்காலகட்டத்தில் மதிப்புக்குரிய மனித உரிமை ஆர்வலர் ஆகிய சுனிலா அபயசேகர, மாத்தளை புதை குழி தொடர்பாக “சண்டே டைம்ஸ்” பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறுகிறார்,”இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் தம் உறவினர்களின் எச்சங்களைத் தேடி ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவார்கள். ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறு இல்லை.” என்ற பொருள்படக் கூறிக் கவலைப்பட்டிருந்தார்.அதற்குக் காரணம் என்ன? அந்தப் புதை குழிகளுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய அமைப்பு அப்பொழுது போராடவில்லை என்பதுதான். இவ்வாறு கொன்று புதைக்கப்பட்ட தன் தோழர்களுக்காக;கொன்று எரிக்கப்பட்ட;கொன்று கடலில் வீசப்பட்ட தன் தோழர்களுக்காக, நீதி கேட்காத ஓரமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் என்று எப்படி எதிர்பார்ப்பது? இந்த விடயத்தில் ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் என்பிபி இனவாதத்தின் பக்கம்தான் நிற்கும். இது முதலாவது. இரண்டாவது,செம்மணி விவகாரம் தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குமா இல்லையா என்பது. ஏற்கனவே நாம் பார்த்தபடி இனவாதத்தின் பக்கம் நிற்கும் என்பிபி தனது படை வீரர்களை காட்டி கொடுக்காது. அவர்களை விசாரணைக் கூண்டில் நிறுத்தாது.எனினும் ஒரு அரசாங்கம் என்ற அடிப்படையில் ஐநாவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக,என்பிபி ஒரு தோற்றத்துக்காவது விசாரணைகளை முன்னெடுப்பது போல காட்டிக் கொள்ளும். ஆனால் அதற்கும் அடிப்படை வரையறைகள் இருக்கும். ஏற்கனவே கடந்த ஐநா கூட்டத் தொடரில் வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் அனைத்துலகப் பொறிமுறையை நிராகரித்திருக்கிறார். இந்நிலையில் அனைத்துலக உதவியை கேட்பது; ஐநாவின் மேற்பார்வை போன்ற விடயங்களுக்கெல்லாம் என்பிபி ஒத்துக்கொள்ளாது. மாறாக உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்புக்கூடாக விவகாரங்களைக் கையாள முற்படக் கூடும். ஆனால் அங்கேயும் வரையறைகள் இருக்கும்.தமிழ் மக்களுக்கு நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ளப்போய், அதன் விளைவாக, தெற்கில் இனவாதிகளுக்கு புதிய எரிபொருளை வழங்க என்பிபி விரும்பாது. செம்மணி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு நடக்கும்போது வெளிவரக்கூடிய உண்மைகள் படைத்தரப்புக்குப் பாதகமாக மாறுமாக இருந்தால், தென்னிலங்கையில் இனவாதிகள் புதிய பலத்துடன் மேல் எழுவார்கள்.தமது யுத்த வெற்றி நாயகர்களை என்பிபி காட்டிக் கொடுக்கப் பாக்குறது என்று கூச்சலிடுவார்கள்.இது எதிர்காலத்தில் தனது தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும் என்று என்பிபி பயப்படுமாக இருந்தால் செம்மணி தொடர்பான விசாரணைகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராது. ஏற்கனவே யுத்த வெற்றி நாளைக் கொண்டாடும் பொழுது அதில் யுத்த வெற்றி நாயகர்களை விழிக்கும் பொழுது அனுர பயன்படுத்திய வார்த்தைகள் தொடர்பில் தென்னிலங்கையில் இனவாதிகள் மத்தியில் விமர்சனங்கள் உண்டு. இத்தகையதோர் பின்னணியில், படைத் தரப்பை விசாரணை செய்வதற்கு என்.பி.பி. முன்வராது. என்.பி.பி.க்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது புரட்சிகரமான பெரும்பான்மை அல்லவென்று நான் அடிக்கடி இப்பகுதியில் எழுதியிருக்கிறேன்.அது பெருமளவுக்கு சிங்கள பௌத்த வாக்குகள்தான். இந்த அடிப்படையில் சிந்தித்தால்,தேசிய மக்கள் சக்தியானது சிங்கள பௌத்த மனோ நிலையின் கைதிதான்.எனவே அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் செம்மணி அகழ்வாராச்சியை அனுமதிக்க மாட்டார்கள். அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்த பொழுது, சிங்களம் மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதுதொடர்பாக பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்ற ஒரு தொகுக்கப்பட்ட பார்வை உண்டு. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையையொட்டி விமல் வீரவன்ச வழமை போல இனவாதத்தைக் கக்கினார். ஆனால் அவரைவிட வேறு யாரும் அது தொடர்பாக பெரிய அளவில் கதைத்ததாகத் தெரியவில்லை. அதனை எப்படிப் பார்ப்பது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முன்னய அரசாங்கங்களின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஒரு தொகுதி முன்னாள் அரசியல் பிரதானிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளின் மீது தென்னிலங்கையில் உள்ள ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனம் அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம் என்று சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் தனது இலங்கை விஜயத்தின் முடிவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உத்தியோகபூர்வ ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் உள்நாட்டு விசாரணையை ஊக்குவிப்பவைகளாகக் காணப்படுகின்றன. அதுபோலவே அவருடைய வருகையின் பின்னணியில் இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஐநாவின் மீதான நம்பிக்கையை மேலும் குறைத்திருக்கின்றன.ஐநா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைத்தான் அதிகம் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. இது என்பிபி அரசாங்கத்துக்குச் சாதகமானது, என்றாலும் அந்த விசாரணைகளின் முடிவில் வெளிப்படும் உண்மைகள் யுத்த வெற்றி நாயகர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமாக இருந்தால்,அதை என்பிபி அனுமதிக்காது. அதாவது இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் விரிவைப் பரிசோதிக்கும் ஆகப் பிந்திய விவகாரமாக செம்மணி காணப்படுகிறது. https://athavannews.com/2025/1438904- வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!
வவுனியாவில் அமிர்தலிங்கத்தின் நினைவு தினம் அனுஸ்டிப்பு! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அ. அமிர்தலிங்கத்தின் 36 ஆவது நினைவுதினம் கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் நூலகத்தில் இன்று இடம்பெற்றது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1438928- 2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது!
2025 ஜூன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 600 மில்லியன் டொலரை கடந்துள்ளது! இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும். இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பணவனுப்பல் மொத்த மதிப்பு 3.7 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 18.9% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் 6.57 பில்லியன் அமெரிக்க டொலராகும். அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1438922- எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது! எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகின் மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதன்போது காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1438919- பிரதமர் தலைமையில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல்!
பிரதமர் தலைமையில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான தெளிவூட்டல்! புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக மாகாண, வலய மற்றும் கோட்ட மட்ட கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தெளிவூட்டல் கலந்துரையாடல் தொடரின் முதல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று நேற்று (12) வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பாடத்திட்ட திருத்தங்கள், கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு செயன்முறைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆசிரியர் அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்களைக் குறைத்தல், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல், மாகாண சபை அளவில் இருக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு விரைவான தீர்வுகள் வழங்குதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தற்போது இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், டிஜிட்டல்மயமாக்கலையும் மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக இந்த சீர்திருத்தத்தை தனித்தனியாகப் பார்க்க வேண்டாம், ஒட்டுமொத்த செயன்முறையிலும், அமைப்பிலும் இங்கு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எப்போதும் இந்த நாடு வளர்ச்சியடைந்துவரும் நாடு என்று மட்டும் கூறினால் போதாது, அந்த முறையை மாற்ற வேண்டும். அதை நாம் தான் செய்ய வேண்டும். இதனை மாற்ற வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர்கள் மட்டுமல்ல நிர்வாக துறையினர், பெற்றோர்கள் உட்பட அனைவரும் ஈடுபட வேண்டும். இந்த சீர்திருத்தத்தைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வெளியேறும் போது பல்கலைக்கழகம், உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி மூலம் முன்னேறிச் செல்ல இதன் மூலம் வழியமைக்கப்படுகிறது. நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் கட்டாயமாக கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் இந்த செயன்முறையில் அரச சேவைக்குரிய இடமாற்றங்களை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்களைச் சரியான முறையில் சமப்படுத்த வேண்டும். மாகாண அளவில் ஆசிரியர் அதிபர் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மாகாண சபை மூலம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட திருத்தங்களை அமைச்சு மூலம் மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைத்து பாடசாலைகளும் நமதே, நமது பிள்ளைகள் தான் இருக்கிறார்கள். தற்போது பாடசாலைகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் பொறுப்புகூற வேண்டும், அதற்காக பாடசாலைகளின் நிலைமையை சரி செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க நாம் இணங்கி வேலை செய்வோம். அரசாங்கம் என்ற வகையில் கல்வி சீர்திருத்தத்திற்கு நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக கல்விக்காக ,மனித வளத்தை மேம்படுத்த, அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி வசதிகளை வழங்குவேன் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நமக்கு இருப்பது இந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதுதான். முதல் ஆண்டு நமக்கு கடினமாக இருக்கும் ஆனால் மூன்று நான்கு ஆண்டுகள் செல்லும்போது எளிதாக செய்ய முடியும். மாகாண அளவில் இந்த செயன்முறையை முன்னெடுக்கும் போது இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்த கலந்துரையாடல் முக்கியமானது . நம் பிள்ளைகளுக்காக இந்த மாற்றத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மேலும் குறிப்பாக, வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். https://athavannews.com/2025/1438925- வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ்.பொதுநூலக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் !
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ்.பொதுநூலக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. திட்டமுன்னேற்ற மீளாய்வை இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளுமாறும், இவற்றுக்குப் பொறுப்பாக பதவிநிலை அலுவலர் ஒருவரை நியமிக்குமாறும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர் ஆர்.குருபரன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சி செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் ஆகியோருடன் யாழ். பொதுநூலகத்தின் பிரதான நூலகர், மத்திய கட்டடங்கள் திணைக்களப் பொறியியலாளர், மாநகர சபையின் பொறியியலாளர், நூலகம் நிறுவனத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1438910- நெடுந்தீவுக் கடலில் விபத்து - 15 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு
நெடுந்தீவுக்கு சென்றிருந்த சுற்றுலா படகு விபத்து – பயணிகள் பாதுகாப்பாக மீட்பு! யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதன்போது 12 பயணிகள் 02 பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சிறியரக சுற்றுலா படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் இதன்போது பணியாளர்கள் உள்ளுர்சுற்றுலா பயணிகள் உட்பட 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பிராந்தியத்தில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்பகுதியைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த அனர்த்தத்தினை எதிர்கொண்டுள்ளனர். குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி சமிக்ஞையை அவதானித்த நெடுந்தீவு தனியார் படகு பணியாளர்கள் விரைந்து செயற்பட்ட நிலையில் படகில் இருந்த 12 பயணிகள் 02 பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிராபத்து இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாப்பாக தங்களின் படகிற்கு மாற்றியுள்ளனர். இதேவேளை குறித்த படகில் இருந்து உள்ளுர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு முழுமையாக கடல் நீரில் முழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மிட்கப்பட்ட பயணிகள் கடற்படையினரின் ஒத்துழைப்பில் குறிகாட்டுவானை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438913- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
மற்ற பிரபல கல்லூரிகள் எல்லாம்.. வெளியில் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லைப் போலுள்ளது.- 2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
நேற்று யாழில் 9A எடுத்த மகள். இன்று தந்தை விபத்தில் பலி! பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலி வீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை, வீதியில் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது. அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இரு பிள்ளைகள் பேராதனை மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் நிலையில், இளைய மகள் நேற்று வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Selvakumar Natkunasingam- இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
சங் அம்மாவிற்கு பென்சன் எடுக்கிற வயது வந்திட்டுது. இனி எங்கை போறது. 😂- சிரிக்கலாம் வாங்க
கட்டிலில்... மதில் கட்டிய தம்பதிகள். 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஐ... லவ் யூ. ❤️ 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அப்பப்பா... வெக்கை... தாங்க முடியலை. 😂 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் படத்தைப் பார்க்க, தலை சுத்துதா... 😂- இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்! இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை (Eric Meyer) நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலி சுங்கின் வெற்றிடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமிக்கப்படவுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார். அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார். எரிக் மேயர், நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், வடமேசிடோனியாவின் ஸ்கோப்பே நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார். இதேவேளை, வொஷிங்டனில் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தில் சிறப்பு உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகராக எரிக் மேயர் பணியாற்றியுள்ளார். அத்துடன் கம்போடியாவில் தூதரகத் தலைமை அதிகாரியாகவும், இடைக்கால துணை தூதராகவும் செயல்பட்டுள்ளார். பின்லாந்திலுள்ள அமெரிக்க தூதராகவும் ஆர்ஜன்டீனாவின் துணை தூதராகவும், பின்னர் எகிப்தின் கெய்ரோவிலுள்ள பண்பாட்டு விவகார தூதராகவும் பணியாற்றியுள்ளார் அவருக்கு அமெரிக்க வெளியுறவு துறையிலிருந்து பல உயரிய பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438886 - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.