Everything posted by island
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சாவகச்சேரில் அர்ச்சனா வெற்றி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
திரிகோணமலை தொகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றி.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
போகிற போக்கில் பார்ததால் 2/3 மெஜோரிடி எடுப்பார்கள் போல உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மானிப்பாயில் தேசிய மக்கள் சக்தி வெற்றி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதுக்கு இன்னொரு ரைமிங் இருக்கு. பொன்னம்பலம் உன் பொய் அம்பலம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஊர்காவற்துறை தொகுதியில் ஈபிடிபி வெற்றி.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இல்லை. நான் நம்பவும் இல்லை, விரும்பவும் இல்லை. ஆனால், சமூக ஊடகங்களில் அலப்பறைகள் அப்படி இருக்குமோ என்று எண்ண தோன்றியது. கோஷானின் மானசீக வாக்களிப்பும் அதையே சொன்னது. இன்று மதியம் தாயக நண்பர்கள் உறவினர்களுடன் பேசியபோது அவர்கள் கடைசிவரை அரச்சுனாவுக்கு ஒரு சீட் கூடக் கிடைக்காது என்றார்கள். பார்பபோம் என்ன நடக்கிறது என்று. சற்று முன் அர்சுனா பேட்டி வென்றவுடன் புலிக் கொடியுடன் பாராளுமன்றம. செல்வாராம்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நாம் நினைக்கும் அளவுக்கு அநுர அலையும் யாழில் இல்லையாம். பொறுத்திருந்து பார்பபோம்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அர்சசுனா கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்காது என்றே தாயகத்தின் இன்றைய நிலவரம் தெரிவிக்கிறது. 😂
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
இத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 124 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் எனவும் சஜித் அணி 53 ஆசனங்களையும், ரணில் அடி 24 ஆசனங்களையும் கைப்பற்றலாம் எனவும் கருத்து கணிப்பு ஒன்று கூறியுள்ளதாம். மிச்ச ஆசனங்களை சில்லறைக்கட்சிகள் கைப்பற்றலாம். 😂
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
ஏன் பொருளாதார தடை விதிக்கவேண்டும். சீமானின் நெய்தல் படை எங்கே போனது. அதை எடுத்து விடவேண்டியது தானே! ஶ்ரீலங்கா கடற்படையை அவரது நெய்தல் படையால துவம்சம் செய்யலாமே! 😂 அதை பயன்படுத்தினால் ஶ்ரீலங்கா கடற்படை தாங்காது என்று ஒரமா படுக்க விட்டிருக்கிறார் போல.😂
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
People struggle alliance
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அந்த கட்சி வட கிழக்கில் போட்டியிடுகிறதோ என்று கூட தெரியவில்லை. மக்கள் போராட்ட முன்னணி. சிங்களப் பிரதேசங்கள் எங்கும் தமிழரின் போராட்டத்தில் உள்ள தார்மீக நியாயப்பாட்டை எடுத்து சொல்லும் கட்சி. கொழும்பில் என்றால் அதற்கு தான் வாக்களிப்பேன். இருந்தாலும் பரவாயில்லை உள்ளதற்குள் கொஞ்சம் நல்லது ஒன்றை ஏற்கனவே தெரிவு விட்டேன்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நான் மனமார வாக்களிக்க விரும்பிய கட்சி லிஸ்ட்இல் இல்லை.
-
என்னடா சொல்லுறீங்க..?
தமிழ் தேசிக்காய்களின் முக்கிய content creator இவரை போன்ற சிங்கள தேசிக்காய்கள் தான். எனவே தான் தமிழ் தேசிக்காய்களின் ஆதர்சன ஊடகமான லங்கா ஶ்ரீ இதனை தேடி எடுத்து இந்த சிங்கள தேசிக்காயின் நகைச்சுவை செய்தியை வெளியிட்டுள்ளது. 1948 ம் ஆண்டில் இருந்து இவ்வாறான சிங்கள- தமிழ் இனவாதிகள் தான் இன்றைய நிலைக்கு நாட்டை கொண்டு வந்தவர்கள்.
-
'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
மலையக தமிழரின் வாக்குரிமையை பறித்ததும் இவரின் முன்னோர்களின் “எல் போட்” பாராளுமன்றம் தானே! 1948 ல் சுதந்திரம் என்றால் 1949 ல் எல் போட் பாராளுமன்றம் தானே இருந்திருக்கும்.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
உத்தம ஜனாதிபதி அது அந்த காலம். இப்ப, ஜனாதிபதி சகோதரய. 😂
-
சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
குட் மோர்ணிங் சேர்.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
கோஷன், நான் எழுதியது தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தை மட்டுமே. அவ்வாறு நடந்து கொள்ளும் போது நாம் விரும்பும் முழுமையான அரசியல் தீர்வு கிடைக்காமல் விட்டாலும் எதிர் காலத்தில் சேதாரமாவது இல்லாமல் இருக்கும். கடந்த 75 ஆண்டுகளாக தமிழருக்கு அதிகளவில் சேதாரத்தைக் கோடுத்து எதையும் பெற்றுக்கொள்ளாத, போராட்டத் தொடக்கப்புள்ளியில் இருந்த வாழ்வியலையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிய இறுதி புள்ளியை அடைந்ததுடன் தீர்வை மேலும் சிக்கலாக்கிய அரசியல் தொடர்சசியை விடுத்து அறிவு பூர்வமான அரசியலை எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இந்த கற்பனை கலந்த ஆக்கத்தை வாசித்த போது மீண்டும் பின்வரும் பழைய பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
கஜேந்திரகுமார், சுமந்திரன் இருவரும் மீண்டும் கொழும்பு சென்று தமது சட்டதரணி தொழிலுக்கு திரும்பலாம். மணிவண்ணன் மீண்டும் யாழ் மாநகரசபை மேயராகி நகரை அபிவிருத்தி செய்யலாம். செலவம், சுரேஷ் ஓய்வெடுக்கலாம், சுகாஷ் “நான் லோயர்” என்று கத்திக்கொண்டு அடுத்த பைத்தியமான குதிரை கஜோட சேர்ந்து தெரு தெருவா அலையலாம். மற்றயவர்கள் ஏதோ தெரிந்த தொழிலைச் செய்து பிழைக்கலாம்.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
என்னைப் பொறுத்தவரை இம்முறை தமிழ் மக்களில் இருந்து பாராளுமன்றம் செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை உணர்நதவர்களாகவும், அதனை தீர்க்கும் ஆற்றல் மற்றும் விருப்பு மிகுந்தவர்களகவும், ஜதார்தத ரீதியில் சிந்தித்து நடைமுறை சாத்தியமான வழியில் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து புரிந்துணர்வை ஏற்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்களில் தமது பங்களிப்புகளையும் வழங்கி அதிகாரப்பரவலக்கலை ஏற்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்த அதில் முன்னேற்றம் காண தமது ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் பிரயோகப்படுத்துபவர்களாகவும், சில்லறை அரசியலுக்காக தம்முள் முரண்பாடுகளை மேற்கொள்ளாதவர்களாகவும் கட்சி வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். மக்களின் கலவி பொருளாதார மேம்பாட்டை ஆளும் அரசுகளுடன் கெளவரமான இணக்கப்பாட்டை மேற்கொண்டு வட கிழக்குல் தமிழரின் வாழ்ககை தரத்தை உயர்த்த முன்னுரிமை கொடுப்பவராக இருத்தல் வேண்டும். மக்கள் தமது பொருளாதார வாய்பபுகளை தேடி வெளிநாடு ஒடாது உள்நாட்டில் உரிய வருமானமீட்டி மகிழ்வுடன் வாழும் நிலையை சிறிது சிறிதாகவேனும் ஏற்படுத்துவது எமது மக்களின் மக்கள் செறிவை தாயகத்தில் பாதுகாக்கும். உனக்கு ஏன் இந்த பேராசை என்று உறவுகள் நினைக்கலாம். இருந்தாலும பேராசையை பதிவு செய்ததில் தவறில்லையே😂 தீவிர தமிழ் தேசிய வெறி நோய் முற்றி அதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மரமண்டை அரசியல்வியாதிகள் கட்சி வேறுபாடு இன்றி முற்றாக தோற்கடிக்கப்படல் வேண்டும். ஏனெனில் எனது முதல் பந்தியில் கூறிய Eligibility யில் ஒன்று கூட இல்லாத வெறுமையாளர்கள் அவர்கள்.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
நிச்சயமாக செயலில் இறங்குபவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். வெறும் சவுண்டு கொடுத்து மக்களை உசுப்பேற்றும. தேசிக்காய்கள் யாரென்றாலும் அவர்களுக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நீங்கள் கூறுவது மக்களுக்கான அரசியல் விடுதலையை தமது தலைமை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தமது உயிரை தியாகம் செய்த அந்த மாவீரரின் மீது வைத்த கெளரவத்தினாலேயொழிய தவறான அரசியல் தீர்மானங்களை ஆதரித்து அல்ல. மக்களுடன் தனிபட பேசிப்பார்ததல் அது தெரியும்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அப்படியானால் அப்படி முயன்று பார்த்து றிஸ்க் எடுத்தோம் அதனால் மக்கள் பேரழிவைச் சந்தித்தோம் என்பதை நேர்மையாக வெளிப்படையாக கூற வேண்டும். அதை வெளிப்படையாக கூறிய உங்களுக்கு நன்றி. அடுத்தவர் மீது முழு பழியையும் போட்டு தப்பிக்க நினைக்க கூடாது என்பதே எனது கருத்தின் சாராம்சம். உலக அரசியல் பிராந்திய அரசியல் என்பவை எமது தனி நாட்டுக்கு கோரிக்கைக்கு முழுமையாக எதிராக இருக்கிறது என்பது ஏதோ ஒன்றும் இரகசியம் அல்ல. அது வெளிப்படையானது என்பது, உலக அரசியலை நீண்ட காலமாக அவதானிக்கும் சாமான்யர்கள் கூட அறிந்த விடயம் தான்.