Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. வன்னி மாவட்டத்தில் தபால் வாக்குகளில் அரியம் நான்காவது இடத்தில் உள்ளார். சஜித் முதலாவது இடத்தில்.
  2. யாழ்ப்பாணம் , நல்லூர் தொகுதிகளில் அரியநேந்திரம் என்ற தமிழ் பொது வேட்பாளர் முறையே 27 , 32 வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார். மிகுதி. 70 வீதத்தை சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள். சங்கே முழங்கு என்று உசுபேற்றியவர்களுக்கு மக்கள் சங்கூதி உள்ளார்கள். 😂
  3. நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்போதைய நிலையில் நடைமுறை சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு திட்டத்ததை உருவாக்கி ஒற்றுமையாக தொடர்சசியாக அரசியல் வேலைதிட்டங்களை முன்னெடுத்து இலங்கையில் தமிழரின் அரசியல், பொருளாதார பலத்தை அதிகரிக்கும் வகையில் செயற்பட்டால் அது தான் உண்மையான ஒற்றுமை.
  4. அவரது கோரிக்கை வட கிழக்கு இணைந்த தமிழர் சுயாட்சி என்பதை வட கிழக்கு மாகாண மக்கள் விரும்புகிறார கள் என்பதை சர்வதேசத்துக்கும் தென்பகுதிக்கும் எடுத்து அறைகூவி சொல்வது என்று இன்று வாக்களித்த பின்னரும் ஶ்ரீதரன் தெரிவித்தார். ஆகவே வட கிழக்கில் 50 வீதத்துக்கு மேல் எடுக்காமல் விட்டால் குண்டு சட்டிக்குள் சங்கூதி ஒரு மண்ணுக்கும் பிரயோசனம் இல்லை. 75 வருடங்களாக எமது எனேர்ஜி எல்வற்றையும் தவறான வழியில் பிரயோகித்து அனைத்தையும் இழந்ததை போல.
  5. தீவிர தமிழ் தேசியவாதம் என்ற போர வையில சிங்கள இனவாதத்துக்கு சமமாக தமிழ் இனவாதம் பேசும் தரப்புகள ஶ்ரீலங்காவில் ஒரு கடும் இனவாத ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றே எப்போதும் எதிர் பார்கிறார்கள். அதன் மூலமே தமது தமது வியாபாரம் செல்வ செழிப்புடன் நடைபெறும் என்றே எப்போதும் நினைக்கிறார்கள். அந்த வகையில் ஐரோப்பாவில் இருக்கும் கடும் தமிழ் இனவாதியின் முகநூல் பதிவு இப்படி கூறுகிறது. அனுர வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகப் பிந்திய செய்திகள் சொல்கின்றன. மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் இதுவரை தமிழர் தேசம் சந்திக்காத பாசிச இன ஒடுக்குதல்களை ஜேவிபியிடமிருந்து எதிர்பார்க்கலாம். அதற்கு வரலாற்றில் ஏகப்பட்ட சாட்சியங்களும் இருக்கின்றன. ஜே ஆர், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு பாசிசம் முறுக்கேறிய ஒரு இயக்கம்தான் ஜேவிபி. எமக்கும் இதுதான் தேவை. ஏனெனில் மைத்ரி, ரணில் போன்றவர்களை வைத்து தமிழ்த் தேசக் கோட்பாட்டிற்கு உள்ளக / வெளியக சக்திகளால் வைக்கப்பட்ட செக் இதன் வழி தகர்க்கப்பட்டிருக்கிறது. நாளையிலிருந்து தமிழீழம் நம்பிக்கையுடன் தனது புதிய பாய்ச்சலை தொடங்கும். வெல்வோம் ❤️ வென்றே தீருவோம் 🔥 இவரை போன்ற சுயநலமிகளின் சிந்தனை தான் தமிழினத்தை இன்றைய அதல பாதாள அவல நிலைக்களுள் கொண்டு வந்திருக்கிறது. இவரின் எதிர்பார்ப்பை வெல்லப் போகும் ஜனதிபதி நிறைவேற்ற கூடாது என்பதே தமிழர் எதிர்பார்பபு.
  6. தெருவில் யாராவது குனிந்தால் கல்லெறிய போகிறார்கள் என்ற பயத்தில் பழக்க தோசத்தில் தெரு நாய்கள் ஓடும். பின்னர் சற்று நேரத்தில் பயம் தெளிந்து திரும்பி வரும். அதை போல தான் இவர்களும். ஒவ்வொரு முறையும் நாட்டில் மாற்றம் வரப்போகிறது என்றால் ஓடுவார்கள். பின்னர், பயம் தெளிய இவர்களும் திரும்பி வருவார்கள். அது இவர்கள் வாடிக்கை. 😂
  7. அவர் எதையும் வெட்டி புடுங்கி இருக்க மாட்டார். அடுத்தவர் தனியுரிமையிலும் அவர்களின் ஜனநாயக உரிமையில் தலையிடும் காட்டுதர்பார் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து அதன் காரணமாக மூளை கறள் கட்டிய ஒருவராக இருப்பார். புலம்பெயர் நாடுகளில் தமது அல்லது தமது குடும்பத்தின் பிரைவேசிக்கு, தனிநபர் உரிமைக்கு ஒரு ஒரு சிறிய பங்கம் வந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ஜனநாயகத்தின் நலன்களை அனுபவித்து கொண்டிருக்கும் புலம் பெயர் தேசியர்கள் தாயகத்தில் மட்டும் இவ்வாறான காட்டு தர்பாரை ஊக்குவிப்பார்களாம். தமக்கு சுதந்திரம் இல்லை என்று மூக்கால் அழுது புலம்பி தஞ்சம் பெற்று மேற்கு நாடுகளில் சுக போக வாழ்ககை வாழ்ந்து கொண்டு அடுத்தவர் தனியுரிமையை ஒடுக்குவதை ஊக்குவிக்கும் பக்கா சுயநலமிகளே இதனை ஆதரிப்போர்.
  8. பொது வெளியில் இவ்வாறு தனி நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை துரோகிகள் என்று வசைமாரி பொழிவதும், அதை ஒரு இணையத்தளம் எந்த வெட்கமும் இன்றி பிரசுரிப்பதும் எந்த வகையில் நியாயம். இது பக்கா காட்டுமிராண்டித்தனம் இல்லையா? இத்தனைக்கும் இவர்கள் செய்த குற்றம் என்ன? தாம் விரும்பிய வேட்பாளரை ஆதரிப்பது குற்றமா? தேர்தலில் தனக்கு விரும்பிய வேட்பாளரை ஆதரித்தற்காக அவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி பொதுவெளியில் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களை அச்சுறுத்துவது தான் தேசியமா? இதற்கான உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்? இது அவர்களது தனியுரிமையை மீறும் செயல் அல்லவா?
  9. இந்தாள் மட்டுமல்ல இந்த கூட்டமே லூசுகள் தான். 14 லட்சம் வாக்குகளில் இரண்டு அல்லது மூன்று லட்சத்தை பெற்றுவிட்டு வந்து மாபெரும் பேரெழுச்சி என்று லூசுகள் போல் கத்த தான் போகிறார்கள்.
  10. ரணில் சர்வதேசத்துடன் சேர்ந்து ஒஸ்லோவில் உடன்பாடு செய்தபடியான சமஸ்டிக்குள் தீர்வு கண்டு விடுவார்களோ என்ற பயத்தில் ரணிலுக்கு தண்டனை வழங்கி இனவாதியான போர் வெறியுடன் இருந்த மகிந்தவை கொண்டுவந்தால் தான் தமிழீழ போரை கொண்டு நடத்தலாம் என்று பாரிய தப்பு கணக்கு போட்டு பேரழிவை அடைந்து இன்று எதுவும் கிடைக்காத கையறு நிலை. அந்த மோசமான அரசியலை பாராட்டும் அளவுக்கு அரசியல் தற்குறியே இந்த அரியம் என்ற பொது வேட்பாளர்.
  11. தமிழர்களில் ஒரு பகுதியினர் ரணிலுக்கும் மற்றயவர்கள் சஜித் மற்றும் அநுராவுக்கும் ஆதரவு அளிப்பது ஒரு வகையில் சிறந்ததே. அந்த வகையில் மாவையின் மகனும் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் ரணிலுடன் நிற்பது நல்லதே. யார் வென்றாலும் அவர்களுடன் தமிழர் பிரதேச அபிவிருத்தி மற்றும் நடைமுறை பிரச்சனைகள் என உடனடியாக தீர்கக வேண்டிய பிரச்சனைகளை முன்னெடுக்கலாம். அதற்கு இவ்வாறானவர்கள் தமது சுயநலத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது பொது நலமாகவும் சிந்திக்க வேண்டும். அரியத்திற்கும் சிலர் ஆதரவளிக்கலாம். அவர் வென்றால் தமிழீழத்தை வெட்டி பிரித்து தருமாறு கேட்கலாம். 🔪🎂
  12. சரியாக சொன்னீர்கள் புலம் பெயர் நாடுகளில் தமிழ் தேசியவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்ளுபவர்கள் ஒரு சீரியலை டெலிவிசனில் பார்ப்பது போலவே தாயக அரசியலை நோக்குகின்றனர். அவர்களுக்கு நாளாந்தம் பொழுது போக ஒரு Thriling அரசியல் வேண்டும். யுத்த காலங்களில் அவர்களுக்கு இருந்த, அவர்கள் ரசித்த அந்த சுவாரசியம் இப்போது இல்லாமல் தவிக்கிறார்கள் பாவம்.
  13. தமிழ் மக்கள் தம்மு முதலாவது அல்லது இரண்டாவது தெரிவை ரணிலுக்கு அளிப்பதே தற்போதைய நிலையில் நல்லது. ரணில் வந்து பாலாறும. தேனாறும. ஓடப்போவதில்லை. ஆனால், இன்றைய நிலையில் அதுவே பொருளாதார நீங்கள் சொன்னது போல் தாயக மக்கள் சற்றேனும் பொருளாதார மீட்சி பெற்று வடகிழக்கில் தமிழர் இருப்பை பேண சற்றேனும் கைகொடுக்கும். அதுவே இன்றைய தேவை. எது எப்படியோ ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியுடன் சுயநலமற்று (அது சாத்தியமில்லாதுவிட்டால் அல்லது சுயநலத்துடன் சேர்த்து பொதுநலத்தை சற்றேனும் ஆர்வம் கொண்ட வட கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் ஆர்வம் உடைய) தமிழ் மக்களின் பொதுவான பொருளாதார நன்மைகளை பேணக்கூடிய வட கிழக்கு அபிவிருத்தி, உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு சிலராவது சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
  14. தாழ்ந்த சாதியினரின் வீட்டில் உணவு அருந்த கூடாது, பந்தியில் தாழ்ந்த சாதியினரை அனுமதிக்கக் கூடாது என்று, மக்களிடையே சாதி வெறியை வளர்தத, சாதி வெறியனாக வாழ்ந்த, நாவலர் மண்டபத்தில் வாக்கு சாவடியை அமைத்தால் நாவலரால் தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கிய மக்களும் அங்கு வந்து சமமாக வாக்களிப்பர் என்ற கவலை இந்து மா மன்ற தலைவருக்கு ஏற்பட்டதில் வியப்பு இல்லை.
  15. தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற உபாயம், தமிழ் தேசிய மக்களை ஒன்று திரட்ட பயன்படப்போகும் ஒரு அடையாளம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல ஒரு வாய்ப்பாக கொள்ளவேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம், தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒரு புள்ளியில் நின்று, மக்களிடம் சென்று ஆதரவு திரட்டிவதென்பது மிக நல்ல விடயம். மிக மிக நல்ல விடயம். தமிழ் தேசிய அரசியலில் ஒரு தீர்மானமிக்க புள்ளி! இதன் மூலம் இத் தேர்தல் முடிவில், நீண்டகாலமாக தமிழ் மக்களுடம் கோரிக்கை அளவில் மட்டும் இழுபட்டு வந்த பல விடயங்களுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி போட்டுவிடமுடியும். 1. வடக்கில் (யாழ்/வன்னி) மட்டும் ஓரளவு வாக்குகளைப் பெற்று- கிழக்கில் பெருத்த அடி வாங்குவதன் மூலம், வடக்கு கிழக்கு இணைப்பென்பது வெறும் மடையர்களின் கோரிக்கை மட்டுமே- கிழக்கு தமிழ் மக்கள் ஆணை கிடைக்காத அதை மொத்தமாக இனி உதாசீனப்படுத்திவிடலாம் என்கின்ற செய்தியையும், 2. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகளில் 50% வீதத்தையேனும் பெறாத தமிழ் தேசிய வேட்பாளர் என்பது- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து- தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரித்து, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்கின்ற செய்தியையும், 3. தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பெரும்பான்மை தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்வதுபோல் உண்மையில் பிரச்சனைகள் இல்லை- அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசியத்தினை அரசியல் -பொருளாதார லாப நோக்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற செய்தியையும், 4. பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்த தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை நாங்களும் நிராகரிப்பதே சரி- இவர்களுக்கு தீர்வென்பது இனி தேவையே இல்லாத ஒன்று என்கின்ற செய்தியை சிங்களத்துக்கும் உலகிற்கும் சொல்லத் துணிந்து, தமிழ் மக்களின் இத்தனைகால உரிமைப் போராட்டத்தை முட்டாள்தனமான சுயலாப அரசியல் முடிவினால் விற்கத் துணிந்திருக்கும் ஶ்ரீதரன்- மாவை- செல்வம்- விக்கி- சித்தார்த்தன்- சுரேஷ் போன்ற தமிழ்தேசியத் தூண்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக! தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில், மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்! செய்வீர்களா? ( முகநூலில் வாசித்தது)
  16. இங்கு நடந்ததும் ஒரு தெருவிழா தானே. தமிழ் அமைப்புக்களின் தெருவிழா இப்படி தானே இருக்கும். கனடாவிலும் மக்கள் விழாவை குழப்பவில்லையே. இதே போல அமைப்புகளுனுள் இருந்த ஈகோ பிரச்சனை முற்றியதால் சில அமைப்புகளில் இருந்த காடையர்களே அங்கும் குழப்பங்களில் ஈடுபட்டனர்.
  17. முகப்புத்தக வீடியோவை பார்ததாலே தெளிவாக தெரிகிறது, தமிழ் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்த தீவிர தமிழ் தேசியவாதிகளின் பங்கு பிரிப்புச் சண்டை என்பது. ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் தடையை எடுத்தார்களானால் இந்த திருட்டு காவாலிகளின் அட்டகாசம் இன்னும் அதிகரிக்கும்.
  18. இந்த பொதுவேட்பாளர் கேம் என்பது தாயகத்தில் வாழும் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கு அடுத்த பாராளுமறன்ற தேர்தலுக்கான ஒரு உசுப்பேற்றல் முதலீடு. ( பாராளுமன்றம் சென்று ஶ்ரீலங்கா ஒற்றையாட்சிக்கு விசுவாசபாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்வது வேறு) புலம் பெயர் நாடுகளில் வெட்டி வீர தேசியம் பேசுபவர்களுக்கு ஒரு time pass. மற்றும் உண்டியல் இதர வருமானம். etc
  19. நீங்கள. கூறியது 100 வீதம் உண்மை. 2015 ம் ஆண்டுக்கு முன்பு இரு முறை அங்கு சென்ற போது முழுமையான இராணுவ ஆதிக்கம் இருந்தது. வாய் திறக்கவே மக்கள் பயந்தார்கள். பாடசாலைகளில் ஒரு விழா என்றால் கூட அப்பகுதி இராணுவ அதிகாரியை கட்டாயம் அழைக்கவேண்டிய நிலை இருந்தது. நினைவேந்தல்கள் இல்லை. நிலாந்தன் போன்ற பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் இன்று போல் எழுதும் சூழ்நிலை இருக்கவில்லை. இன்று வீரம கதைக்கும் பலர் 2015 ம் ஆண்டுக்கு முன்பு வாயே திறக்கவில்லை. ஆனால், 2016, 2018 ல் போன போது பாரிய இடைவெளியை உணரக்கூடியதாக இருந்தது. எனவே அன்று மைத்திரியை ஆதரித்தால் மக்கள் எதையும் இழந்துவிடவில்லை. நன்மைகளையே பெற்றனர். 2015 ல் மைத்திரியை ஆதரித்ததால் நாம் எதையும பெறவில்லை என்று இன்று புலம்புபவர்கள் எவரும் 2015 ம் ஆண்டுக்கு என்ன செய்தனர்? அன்று செய்ததைப்போல் மக்களின் நடைமுறை பிரச்சனைகளை நிறைவேற்க் கூடிய வேட்பாளர்களோடு நடைமுறை பிரச்சனைகள் தொடர்பில் பேசி அவர்களுக்கு வாக்களிப்பதே உகந்தது. அரியநேந்திரன் போன்ற வெத்து வேட்டு கோமாளிகளுக்கு வாக்களிப்பதால் எதுவும் கிடைக்கபோவதில்லை. ஒரு bollot sheet waste. அரியத்திற்கு வாக்களிப்பதும் வாக்கு சீட்டை குப்பைத்தொட்டிக்குள் போடுவதும் ஒன்றே.
  20. வட கிழக்கு மாகாங்கள் இணைந்த தமிழர் தாயகத்தில் சுயாட்சி என்ற கோஷத்தை முன்வைத்து தமிழர் தாயகத்தில் ஒரு பொது வாக்கெடுப்பு என்று கூறி அரசியநேந்திரன் என்ற பொதுவேட்பாளரை இறக்கியவர்கள் இப்போது எம்ஜியார், நம்பியார் கதைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டிய பரிதாப நிலை. 😂 அரியம் நீங்க எம்ஜி ஆர் மாதிரியுங்க. 😂 - நிலாந்தன்
  21. அப்ப சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்கில் தான் சங்கே முழங்கு கோஷம். 😂
  22. சோழ பேரரசன் ராஜராஜ சோழன் பல வயதுகளில் பல மனைவிகளை கல்யாணம் செய்து தனது வாழ்வை அவர் களுடன் இன்பமாக அனுபவித்தான். அவன் மகள் ராஜேந்திர சோழனும் அதையே செய்தான். இவர் ஒரு சாதாரண நபர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.