Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. சற்றும் மனம் தளராத விக்கிரமனாக நீங்கள் கேள்வி கேட்டாலும், இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் அதை கூறாமல் விட்டால் உன் தலை வெடித்து சிதறிவிடும் என்று அம்புலிமாமாவில் வரும் வேதாளம் கேட்டால் பதில் வரலாம். 😂 எப்படியும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். 😂
  2. இதனால் பிரிந்த குடும்பங்கள் பல. தாயகத்தில் முள்ளிவாய்கால் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொள்ள ஐரோப்பாவில் மக்களை இலக்குவைத்து ஒரு இவ்வாறான தாக்குதலை தேசிய செயப்பாட்டாளர்களாக வலம் வந்த மாபியா குறூப் செய்து அதில் வெற்றியும் கண்டது.
  3. @Kapithan அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள் பயன்படுத்திய உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில் தமிழரின் அரசியல் பலம் உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்காக இருந்தது. மக்களின் வீடுகளுக்கு சென ற இவர்களுக்கு அந்த வீட்டுகாரர் பணம் வழங்கக்கூடிய நிதி நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தும் கடன்வாங்கி தருமாறு வற்புறுத்துவார்கள். உங்கள் வீட்டுக்கு ஒரு பிரச்சனை வந்தால் கடன் வாங்கி அந்த பிரச்சனையை தீர்ப்பதில்லையா, அது போல் இப்போது உங்கள் நாட்டிற்கு கஷ்ரம் வந்துள்ளது என்றெல்லாம் சென்றிமென்ற் கதையளந்து அவரின் மனத்தை இளகப்பண்ணி அந்த பலவீனமான நேரத்தில் கடன் பத்திரத்தில் கையொப்பமிடப்பண்ணி அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுவிடுவார்கள். அதைவிட இன்னொரு தந்திரம் நாடகம் அரங்கேற்றப்பட்டது. வீடுகளுக்கு சென்று மக்களிடம் பணத்தை பிடுங்கும் அன்பான வற்புறுத்தலை செய்து கொண்டிருக்கும் போது அந்த விவாதம்தே நடைபெறும் போது அந்த தேசிய செயற்பாட்டாளருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வரும். அவர் தொலை பேசியை ஸபீக்கரை ஓன் செய்து பேசுவார். மறுமுனையில் ஒருவர் மிகுந்த கோபத்துடன், என்ன அவசரகால நிதி சேகரிக்கின்றீர்களாம் ஏன் என்னிடம் வரவில்லை என்று சத்தமிடுவார். உடனே இவர் பம்மிக்கொண்டு இல்லை அண்ணை நீங்கள் இப்ப முன்று மாதத்துக்கு முதல் தானே பத்தாயிரம் தந்தனீங்கள் அது தான் உங்களிடம் வரவில்லை என்று கூற மறு முனையில் இருப்பவர் இன்னும் கோபத்துடன் அதை விடுங்கோ. இப்ப நாடு இருக்கிற நிலைக்கு அந்த பத்தாயிரம் எந்த மூலைக்கு காணும் இந்த நேரம் நான் உதவி செய்யாமல் விட்டால் நான் தமிழனாய் இருக்க என்ன தகுதி இருக்கு, எனது காரை நேற்றே விற்று பணத்தை வீட்டில் வைத்துள்ளேன் வாங்கோ வந்து பெற்றுகொள்ளுங்கோ கொஞ்ச நாளைக்கு கார் இல்லாமல் இருந்தால் நான் குறைஞ்சா போயிடுவன் இண்டைக்கு எமது இறுதி யுத்தத்திற்கு நிதி தராமல் விட்டால் இன்று என்னால் இரவு நித்திரை கொள்ளமுடியாது உடனே வாங்கோ என்று கூறுவார். இந்த உரையாடல் அந்த செயற்பாட்டாளரால் ஏற்கனவே திட்டமிட்ட நாடக உரையாடல் என்பதை அறியாத அந்த வீட்டுகாரர் குற்ற உணர்சியில் பலவீனமாகி தனது பொருளாதார நிலைக்கு பன்மடங்கு மேல் வங்கியின் தனது பெயரில் கடன் பெற கையொப்பமிடுவார். இவ்வாறாக பல சம்பவங்கள் 2009 இன் கடைசி ஆறு மாத காலத்தில் நடந்தன. இவ்வாறான படு மோசமான செயற்பாடுகளே இன று மக்களின் நம்பிக்கையை இழக்கவைத்தது. இந்த மாபியாக்கள் சுயநலத்தால் பல துண்டுகளாக உடைந்து அது தொடர்கிறது. மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கி பல காலம் வாழ்ந்து ருசிப்பட்ட இந்த கும்பல்களில் ஒரு பிரிவே துவாரகா நாடகத்தையும் நடத்தியது.
  4. கடைசி ஆறு மாதங்களும் இன்னும் சிறிது காலங்கள் தான் உள்ளது அதற்குள் சுருட்டுவதை சுருட்டிவிட வேண்டும் என்ற அவசரத்தில் தான் நிதி திரட்டல் வேகப்படுத்தப்பட்டது. மக்களுக்கு திட்டமிட்டு உணர்சசி உருவேற்றி பல நாடகங்களை நடத்தி மின்னல் வேகத்தில் பணதிரட்டல் நடந்தது. கடைசி நேரத்தில் பணம் திரட்டிய முக்கியமான நபர்கள் பலருக்கு இனி அங்கு எல்லாம் முடியபோகிறது என்பது தெளிவாக தெரிந்தே இருந்தது. அதனால் ஏற்பட்ட மனஸ்தாபங்களே இன்றைய குழப்பத்திற்கு அத்திவாரம்.
  5. எல்லாம் பங்கு பிரிப்பு தகராறு தான். பொது மக்களிடம. கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கும் போதாவது நியாயமாக நடந்து கொண்டிருக்கலாம். அவங்களுக்குள் அது சகஜமப்பா. 😂
  6. தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு சின்னம் நல்ல பொருத்தமாக உள்ளது. 😂. Super
  7. நான் பேசியது தமிழ் தேசியர்களின் உதவாக்கரை அரசியலையும் அவர்களால் தமிழினம் கேடுகைட்டு போவதைப் பற்றி மட்டுமே. மற்றப்படி தீவிர தமிழ் தேசிய வாதிகளின் தனிப்பட்ட வாழ்ககை மிகவும் முன்னேறியே உள்ளது என்பதை கண்கூடாகவ பார்கிறோம். ஏனென்றால் தீவிர தமிழ் தேசியவாதிகள் நாட்டை தமது இனத்தை மட்டும் தான் நாசப்படுத்துவார்கள். பொறுப்பில்லாமல் உளறுவார்கள். அவர்களது குடும்ப விடயத்தில் பொறுப்புடனும் விவேகத்துடனும் நடந்து தமது பிள்ளைகள் இந்த தமிழ்தேசிய சகதிக்குள் விழாமல் பாதுகாத்து அவர்களை முன்னேற்றுவார்கள். தனிப்பட்ட ரீதியில் தீவிர தமிழ் தேசியவாதிகள் என்னைவிட முன்னேறியே உள்ளர்கள்.
  8. தமிழ் தேசியம் பேசுவோர் எல்லோருமே இப்படி லூசுகள் மாதிரி (அது என்ன மாதிரி லூசுகளே தான்) செக்கு மாடுகளை போல் இருந்த இடத்தையே சுற்றி வத்து உளறிக்கொண்டிருப்பர்.
  9. பொது வேட்பாளரை நிறுத்துவதற்துவது ஏன் என்று தமிழ் தேசியவாதிகள் எனப்படுவோர் கூறும் காரணம் சர்வதேச நாடுகளுக்கு எமது மக்களின் கோரிக்கையை எடுத்து கூறுவது என்பதே. சர்வதேச நாடுகள் இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்குமா என்பது வேறு விடயம். ஆனால், கோரிக்கை என்பது வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதையும் இணைத்த பிரதேசத்தில் ஒரு தன்னாட்சி சமஸ்டி. அதாவது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான அனைத்து பிரதேசங்களையும் இணைத்த தன்னாட்சி அரசு. ஒரு பேச்சுக்கு சர்வதேசம் இதை கணக்கில் எடுக்கிறது என்றால் இப்போது பொது வேட்பாளர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் உத்தியோகபூர்வ வாக்களிப்பில் 50 வீதத்திற்கு குறைவாக பெற்றால் தன்னாட்சி கோரிக்கையை வட கிழக்கு மக்கள் நிராகரித்தை விட்டார்கள் என்றே சர்வதேசம் எடுக்கும். ஏனென்றால் மாபெரும் எழுச்சியுடன் 1977 ல் நடைபெற்ற தமிழீழ கோரிக்கைக்கான வாக்கெடுப்பிறகே வடகிழக்கில் உத்தியோகபூர்வமாக கிட்டத்தட்ட 52 வீத வாக்குகளே கிடைத்தன. ஏறத்தாள அரைவாசி வடகிழக்கு வாக்காளர்களால் அன்றே தமிழீழ கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. இன்றைய நிலையில் 50 வீதம் சாத்தியமா?
  10. அதி உத்தம ஜனாதிபதி பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார். இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சுயாட்சியுடனான அரசியல் தீர்வை காண்பார்.
  11. சனாதிபதித் தேர்தலும் தமிழ் பொதுவேட்பாளர் நாட்டியமும்…! சனாதிபதித் தேர்தல் அறிவிக்க முன்னாடியே தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம் என தமிழ்தேசிய அரசியல்வாதிகள் பாட ஆரம்பித்திருந்தனர். கடந்த ஜூன் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் தரப்பினர் சந்தித்தவேளையிலேயே, தமிழ் வேட்பாளரை நிறுத்தப்போகிறோம் என ஶ்ரீதரன்- விக்கினேஸ்வரன் தரப்பும், புறக்கணிக்கப்போகிறோம் என முன்னணி தரப்பும், இல்லை யாரேனும் ஒருவரை ஆதரிப்போம் என சுமந்திரன் தரப்பும் கைகலத்ததாக தெரியவந்திருந்தது. விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்தி, தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் - ஶ்ரீதரன் : தவராசா : அரியம் -செல்வம் அடைக்கலனாதன் -தர்மலிங்கம் சித்தார்த்தன் - ஶ்ரீகாந்தா -சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட நிலாந்தன் போன்ற தமிழ்தேசிய பத்தி எழுத்தாளர்களும் வேலைசெய்ய ஆரம்பித்திருந்தனர். அச்சமயம் வெளிநாடொன்றில் தமிழர்களைச் சந்தித்த ஶ்ரீதரன், “சிங்கள ஓட்டுகள் மூன்று நான்காக சிதறப்போகிறது பொதுவேட்பாளரை நிறுத்த இதுதான் சிறந்த சந்தர்ப்பம். நம்மை தேடி அவர்கள் வருவார்கள். எங்கள் கோரிக்கையை முன்வைத்து அதை ஏற்பவர்களை ஆதரிப்போம், இரு வெளி நாட்டு தூதர்கள் முன்னிலையில் கையெழுத்து வாங்குவோம்” என அவரைப் பொறுத்தவரையிலான தமிழருக்கு மிகவும் உகந்த - எதிர்கால தந்திரோபாய நகர்வை விளக்கி உரையாற்றியிருந்தார். சனாதிபதித் தேர்தல் வேண்டாம்; ஆனால் பொதுவேட்பாளரை தெரிவு செய்வோம் என இன்னொரு தலைவர் விக்கினேஸ்வரன் அறிக்கை விட்டார். கூடவே சுமந்திரன் மூளையால் யோசித்து முடிவெடுப்பவர், நான் அப்படியல்ல என்று சுயதம்பட்டம்வேறு அடித்திருந்தார். புறக்கணிக்கும் முன்னணியை தவிர்த்து கவனியுங்கள், இதில் பொதுவேட்பாளர் தேவை - அதுதான் சரியான தீர்வு என ஈடுபாட்டுடன் களமிறங்கிய ஶ்ரீதரன்- சித்தார்த்தன்- செல்வம்- விக்கி என அனைவரும் தீவிர தமிழ்தேசிய அரசியல்வாதிகள். பொதுவேட்பாளரே ஒரே திர்வு- இதோ மக்கள் தீர்மானிக்கப்போகிறார்கள் என எழுதித் தள்ளியவர் தமிழ்தேசிய பத்தியாளர் நிலாந்தன். இப்போது என்னவாகிற்று? - மெல்ல மெல்ல பொதுவேட்பாளருக்கான தெரிவு விமர்சிக்கப்பட, ஒருசில கிழமைகள் முன்பு பொதுவேட்பாளர்தான் தேவை என மக்களிடம் உணர்ச்சிகர உரையாற்றிய ஶ்ரீதரன் இருக்கும் இடம் தெரியாமல் சைலெண்ட் மோட்க்கு போய்விட்டார். முன்னால் நின்று நடத்திக்காட்டுவதுதானே தலைவருக்கு அழகு? ஒருமாதம் கூட தாக்குப்பிடிக்கமுடியாத தந்திரோபாயங்களை மக்களிடம் முன்வைக்க வெட்கமாக இல்லை? -பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும் இழுபறியில் ஶ்ரீகாந்தா பக்கம் பொறுப்பை தட்டிவிட்டு விக்கினேஸ்வரன் நழுவிக்கொண்டார். தமிழ்தேசிய godfather. - இறுதியில் பொதுவேட்பாளராக எஞ்சியிருப்பது தவராசாவும் அரியநேந்திரனும் தானாம். அதிலும் அரியம் தான் தெரிவு என்கிறார்கள். இவர்கள் இருவரும் தமிழரசு மத்திய குழுவைச் சார்ந்தவர்கள். ஶ்ரீதரன் அபினானிகள். தமிழரசுக் கட்சி ஒரு முடிவு எடுத்திருக்காத நிலையில் இவர்கள் கையைத் தூக்கியதற்காக உருப்படியான தமிழரசுத் தலைவர் கட்சியை விட்டு விலத்தவேண்டும். ஆனால் நடக்காது. -பெண் வேட்பாளர் தான் வேண்டுமென பத்மினி சிதம்பரநாதன் முதற்கொண்டு பலரையும் முயற்சித்து பலனில்லை. - பொதுவேட்பாளர் ஐடியாவை ஆரம்பித்துவைத்த ஶ்ரீதரனோ விக்கினேஸ்வரனோ இதில் தாமே முன்வந்து தேர்தலை எதிர்கொண்டிருக்கவேண்டும். இருவரும் எஸ்கேப். இனித் தெரிவாகுபவர்கள் வேலைக்காகமாட்டார்கள் என செல்வமும் சித்தார்த்தனும் விலகிக்கொள்வார்கள். -பொதுவேட்பாளராக நியமனம்பெறுபவர் ஒரு சில ஆயிரம் ஓட்டுகளை, கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் வாங்கியதைப் போல் வாங்கி சந்தி சிரிப்பார்கள். இவர்கள் தான் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத் தருவார்களென மக்கள் காத்திருக்கவேண்டுமா? இவர்கள் தான் எம் இனத்தின் காவலர்கள்- எதிர்கால தூண்கள்-, அரசியல் சாணக்கியர்கள் என இளம் அரசியல்வாதிகள் பின்பற்றவேண்டுமா? —— மன்னாரிலோ எங்கேயோ நடந்த சனாதிபதி வேட்பாளர் தொடர்பான கூட்டமொன்றில் சுமந்திரனின் பேசிய பேச்சு முக்கியமானது. 1940 களில் இருந்து தமிழர்களின் தீர்க்கமற்ற / எதிர்காலத்தை நோக்கியதற்ற ஆனால் கடந்த காலங்களில் தேங்கி நின்று அரசியல் செய்த- செய்யும் வரலாற்றை படிப்படியாக விளக்கியிருப்ப்பார். அதன்வழியிலான அடுத்த நகர்வாகத்தான் இந்த பொதுவேட்பாளர் விடயமும் என்று முடித்திருப்பார். சுமந்திரனோடு பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இருக்கும் அரசியல்வாதிகளில் உண்மையை அரசியல் பூச்சுகள் இல்லாமல் செவிட்டில் அறைந்து சொல்லும் திறமை இங்கு வேறு எவருக்கும் இல்லை. Day 1 இல் இருந்தே பொதுவேட்பாளர் விடயத்தை முழுதாக கடுமையாக எதிர்த்துவந்தது சுமந்திரன் மட்டும்தான். இருக்கலாம், விக்கி சொன்னதுபோல இப்போதிருக்கும் வடக்கு கிழக்கு தமிழ்தேசிய அரசியல்வாதிகளில் மூளையை பாவித்து முடிவெடுக்கும் ஒருவர் சுமந்திரனாக இருக்கலாம். தேசியத்தின் பெயரில் - போர்வையில் தங்கள் இயலாமைகளையும் குறைகளையும் மறைத்து, மக்களை பேய்க்காட்டாமல், மூளையை பாவித்து அரசியல் செய்ய இளைஞர்கள் அரசியலுக்குள் வரவேண்டும். த்தூ..! வெட்கங்கெட்ட தமிழரசியல். நன்றி முகநூல் பதிவு
  12. பொது வேட்பாளருக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடுகிறார கள் போல இருக்கு. 😂
  13. 1987 ல் தமிழர்களால் உதைத்து தள்ளிய மாகாணசபை முறையை முழுமையாக அமுல்படுத்தினாலே போதும் என்ற நிலையிலேயே தமிழரின் அரசியல் பலம் உள்ளது. அதற்கு பின்னரான மக்களின் அத்தனை இழப்புகளும் விழலுக்கு இறைத்த நீரே.
  14. காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள் தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது. தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம். ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும். இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட) ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு கேட்பது ஒன்றே ஜதார்தத பூர்வமானது. எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும் அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை. இப்போது இதை செய்ய தவறினால், முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான்.
  15. உண்மையில் சிறப்பான கருத்து இது. ஆனால், ஈழத்தமிழரின் வரலாற்றில் உரிய நேரத்தில் பெறக்கூடியதை பெற முயற்சிக்காமல் வெற்று வீராப்புடன் தவறான கோலங்களை போட்டு காலத்தை கடத்தி பெறக்கூடியதை இழந்த பின் புலம்புவது ஈழத்தமிழரின் வாடிக்கை. சமஸ்டியை கண்டி சிங்களவர்கள் வலியுறுத்திய போது அதை நிராகரித்து காலங்கடத்தி, பின்னர் காலங்கடந்த பின் சமஸ்டி கட்சி( தமிழரசுக்கட்சி) ஆரம்பித்து சமஸ்டி கேட்டதை போல அந்த நிலையே ஆயுதப்போரளிகள் காலத்திலும் தொடர்ந்தது.
  16. இந்த உலகத்தில் வாழும் அனைவருமே அவரவர் கதாநாயகிகளுடன் வழிவது இயற்கை தானே! நீங்களும் நானும் கூட இதற்கு விதிவிலக்கல்லவே! கதாநாயகியுடன் வழியாதவன் எல்லாம் ஒரு மனிசனா?
  17. ஐரோப்பாவில் எந்த மன்னர் கால வரலாற்றை எழுதும் போதும் அவர்களின் எதிர்மறை அம்சங்களை தவறுகளை மறைக்காமல் எழுதியே உள்ளார்கள். ஏனென்றால், அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு தத்தமது சமூகங்களை முன்னேற்றிய அவர்களுக்கு இத்தகைய சாகஸ கதையாடல்களில் தங்கி இருக்க வேண்டுய அவசியமில்லை. காலத்துக்கேற்ப தம்மை தகவமைத்து கொள்ளாத பத்தாம்பசலி இனங்களுக்கே தாழ்வு மனப்பான்மையை போக்க இவ்வாறான சாகாச கதையாடல்கள் புராணங்களில் தங்கி இருக்க வேண்டிய தேவை உள்ளது.
  18. சாக்கடையை சாக்கடை என்று தான் கூற முடியும். வேறு பெயர் கொண்டு அழைக்க முடியாது. சாக்கடையை புனிதமானது என்று நாலு முட்டாள்கள் தூக்கி கொண்டாடுவது பற்றி எனக்கு அக்கறை இல்லை.
  19. காசி சாக்கடை தண்ணீரை யாழ்பாணம் கொண்டு வந்ததே தவறு. அதை வேறு எமது மண்ணில் உள்ள தண்ணீருடன் கலந்தது அடுத்த தவறு.
  20. வைகோ, வை.கோபாலசாமியாக எம்பியாக அதாவது பாராளுமன்ற மேலவை திமுக உறுப்பினராக இருந்த போது தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு செய்த நன்மைகள் எண்ணிலடங்காதது. குறிப்பாக 1981 ல் இருந்து அவரின் ஈழ பங்களிப்பு ஆரம்பமாகி விட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் அடாவடிகளை தமிழ் நாட்டு மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததில் அவரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அத்துடன் ஜோர்ச் பெர்ணாண்டஸ் போன்ற வட இந்திய தலைவர்களுக்கு ஈழப்போராட்ட நியாயங்களை எடுத்து கூறி அவர்களை எமது பக்கத்திற்கு இழுக்க அவர்மேற்கொண்ட பங்கும் குறிப்பிடத்தக்கது. ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் தனது வாழ் தாள் முழுவதும் ஈழ போராட்ட அனுதாபியாக இருந்ததற்கு அடித்தளம் இட்டவர்களில் முதன்மையானவர் வை. கோபாலசாமி ஆகும். அவர் இந்திய பாது காப்பு அமைச்சராக இருந்த போது எமக்கு சில சலுகைகளை செய்ததாக கேள்விப்பட்டேன். ஆனால், வை கோவின் மாபெரும் பலவீனம் எளிதில் உண்ர்சிவசப்பட்டு கோபப்படும் அவரின் மனப்பாங்கு. அந்த கோபத்தில் குறுகிய நொக்கிலான தீர்மானங்களை மேற்கொள்ளுதல். ஒரு அரசியல் தலைவரின் மீது உள்ள கோபத்தினால் அவரை வஞ்சம் தீர்க்க அவரின் எதிரளியுடன் கொள்கைக்கு முரணான கூட்டணி அமைக்க அவரது மனநிலை தூண்டியது. பல தொலைக்காட்சி பேட்டிகளில் ஒலிவாங்கியை தூக்கி எறிந்து விட்டு வெளியேறினார். இவை எல்லாம் சேர்ந்து அவரின் அரசியல் எதிர்காலத்தை பாழாக்கியது.
  21. தங்கள் நிலைப்பாட்டில் முழுமையாக உடன்படவில்லையாயினும் உங்கள் விருப்பத்தின் நியாயத்தை புரிந்து கொள்கிறேன். இவ்வாறான விருப்பத்திலேயே அனைத்து தமிழ் மக்களும் இருந்தனர். அதனை துஷபிரயோகம் செய்தவர்கள் மக்கள் நம்பிக்கை வைத்த புலம் பெயர் பொறுப்பாளர்களே. இன்று அவர்களில் பலரின் நடவடிக்கைகளை பார்ககும் போது இவர்களா அப்பழுக்கற்றவர்கள் என்று ஒரு காலத்தில் நம்பியிருந்தோம் என்றே விரக்தியே மிஞ்சுகிறது. உங்கள் விருப்பம் தவறல்ல. ஆனால் நடைமுறையில் அப்படியல்ல என்ற விரக்தியே எனது கருத்தின் சாராம்சம். புலிகளின் தடைக்கு முக்கிய காரணமாக செயற்பட்டு மத்திய அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்து தடை கொண்டுவரை ஓயமாட்டேன் என்று தடை வாங்கி தந்தவர் ஈழத்தாய் என்று தமிழ் தேசியவாதிகளால் கொண்டாடப்படும் ஜெயலலிதாவே ஆகும்.
  22. விடுதலைப்புலிகள் இயக்கமானது அவர்களது அரசியல் தவறுகளுக்கு அப்பால், போராட்டத்துக்கு கோட்பாட்டு ரீதியில் நேர்மையாக போராடிய இயக்கம். அதில் இருந்த உயர்மட்ட அரசியல் தலைவர்கள் உயிரோடு இருந்திருந்தாலாவது தடை நீக்கத்தை பயன்படுத்தி பழைய தவறுகளை களைந்து விடுதலைப்புலிகளை மீள அரசியல் அமைப்பாக உருவாக்கி பழைய அனுபவங்களுடனும் புதிய தந்திரோபாயங்களுடன் கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படியான நேர்மையான அரசியல் போராளித் தலைவர்கள் எவரும் இன்று இல்லை. அதுவே வெளி நாடுகளில் அமைப்பில் இருந்த சுயநலமிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. வெளிநாடுகளில் புலிகளை தமது சுய லாபத்துக்கு பயன்படுத்துயவர்களே இன்று எஞ்சி உள்ள நிலையில் தடை நீக்கம் எதிர்மறை விளைவுகளையே ஈழத்தமிழருக்கு செய்யும். தவறானவர்கள் கையில் இயக்கத்தின் பெயர் செல்ல வழி வகுக்கும். எஞ்சியுள்ள மாபியாக்கள் எப்படியும் அந்த இயக்கத்தின் பெயரை கைப்பற்றி அதனைப் பயன்படுத்தி தமது கொள்ளையை தொடர முயல்வார்கள் என்பதற்கு துவாரகா விடயம் உட்பட மேலும் பல சம்பவங்கள் சாட்சியம் ஆகவே தடை தொடர்வதே ஈழத்தமிழருக்கு நன்மை பயக்கும்.
  23. அர்சுனா ராமநாதன் என்பதால் அந்த டொக்ரருக்கு சேர் பொன் ராமநாதன் ஞாபகம் வந்திருக்கும். அதனால் அப்படி கூறினாரோ! 😂 மற்றபடி சேர் என்று அரச அலுவலகங்களில் தமது மேல்நிலை அதிகாரிகளை அழைப்பது இலங்கையில் மிக நீண்ட கால நடைமுறை. தமிழ் நாட்டை பார்த்து புதிதாக வந்ததல்ல. கொழும்பு விமான நிலையத்தில் பயணிகளுடன் பேசும் விமான நிலைய ஊழியர்களே சேர் என று அழைத்து உரையாடுவதை பார்ததிருக்கிறேன்.
  24. பையன் தவறான தகவல். டாஸ்மார்க் மது உற்பத்தி நிறுவனம் திறந்தது எம். ஜி. ஆர் ஆட்சி காலத்தில். அதனை தனியாரின் சில்லறை விற்பனை நிலையங்களூடாக டாஸ்மார்க் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மதுவை விற்க ஏற்பாடு செய்தார். பின்னர் அரசு சார்பில் டாஸ்மார்க் கடைகளை திறந்தது ஜெயலலிதா அம்மையார் காலத்தில். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவற்றை மூடாமல் தொடர்சியாக கொண்டு நடத்தினார். TASMAC (Tamil Nadu State Marketing Corporation) began its operations in 1983. It was established by the Government of Tamil Nadu to regulate and manage the distribution and sale of alcohol in the state.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.