Everything posted by island
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நான் காலிஸ்தானை உதாரணம் காட்டியது நீங்கள் கூறிய விடயத்துக்கக அல்ல. தமது நலன்களை முன்னிறுத்தி மற்றயவற்றை புறக்கணித்தல் என்பதை தமிழரும் செய்துள்ள நிலையில் மற்றயவர்களை அதற்காக குற்றம் சாட்டுவது அபத்தம்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நான் கூறவந்த விடயம், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக சமரசம் செய்வதும், சில ராஜதந்திர உறவுகளை மேற்கொள்ளுவதும் உலக வழமை. அதற்காகவே காலிஸ்தானை உதாரணம் காட்டினேன். தமிழீழம் ஒன்று உருவாகி இருந்தாலும் அதன் பொருளாதார நலன்களை முன்னிறுத்தி, தனக்கு இலாபம் தரும் வர்த்தகத தொடர்பில் இருக்கும் ஒரு நாட்டினுள் நடக்கும் மனித உரிமை விவகாரங்களை தமிழீழமும் கருத்தில் எடுத்திருக்காது. இது இயல்பானது. நாட்டின் நலன் கருதி அவ்வாறு தான் நடந்து கொள்ளவேண்டும். ஆகவே இதல் மற்றய நாடுகளை குற்றம் சாட்டுவது எமக்குப் பயன்றறதுடன் எமக்கு பாதகமாகவும் அமையும். ஒரு நாடு என்ற அங்கீகாரத்துடன் உள்ள தனது எதிரிக்கு உலகில் இயல்பாக உள்ள அனுகூலங்கள் என்ன என்பதையும் உலக அங்கீகாரமற்ற இயக்கம் என்ற ரீதியில் உலகில் இயல்பாக எமக்கு உள்ள பிரதிகூலங்கள் என்ன என்பதையும் ஆழமாக சிந்தித்து தனது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டியது போராட்டதை நடத்தும் விடுதலை இயக்களின் கடமையே தவிர உலக நாடுகளின் வேலையோ மக்களின் வேலையோ அல்ல. உதாரணத்திற்கு தன்னுடன் ராஜதந்திர உறவு இல்லாத நாட்டு ராஜதந்திரிகளை தமது நாட்டில் இருந்து வெளியேற்றுவது ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் நடைமுறை. உலக அங்கீகாரத்துக்காக போராடும் ஒரு விடுதலை அமைப்பு அதே நடைமுறையை பின்பற்றுவது ராஜதந்திரமல்ல. ஐரோப்பியயூனியன் தம்மை பயங்கரவாத பட்டியலில் இட்டது என்பதற்காக அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர்களை வெளியேற்றிய செயலால் இலாபமடைந்தது ஶ்ரீலங்கா அரசே. வெறும் உணர்ச்சிவசப்பட்டு இதை சிலர் சிலாகிக்கலாம். ஆனால் உலக அளவில் எமது நிலையை உணர்ந்தே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேனுல் அதனால் விளையும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இது போல பல விடயங்களைக் கூறலாம். இவையெல்லாம் இனி யோசித்து என்ன பலன் என்றோ அல்லது இவை பேசாப்போருள்கள் அல்லது பேசாமல் மறைக்கப்பட வேண்டியவை என்று யாராவது நினைத்தால் அந்த அதே போன்ற தவறுகளையே இனியும் எதிர்காலத்திலும் செய்து எம்மை தாமே நாசப்படுத்திக்கொள்வோம்.
-
வெடுக்குநாறியில் அடாவடியில் ஈடுபட்ட சிவசேனை
மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு வெடுக்குநாறி மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன பண்ணுறது?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
உங்கள் உழைப்பறியோ உங்கள் தனிப்பட்ட வாழ்வு பற்றியோ நான் எதுவும் பேசவில்வும் இல்லை அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. தமிழர் அரசியலை பற்றி விமர்சிக அனைவருக்கும் உரிமை உண்டு. தனி நபர்களை விமர்சிக்கவில்லை. பொதுமக்களின் வாழ்வை பாதிக்கும் அரசியல் முடிவுகளை எடுக்கும் அரசியல் செய்த/ செய்யும் எல்லோரதும் அரசியல் நடவடிக்கைகளை எவரும் விமர்சிக்கலாம். (கவனிக்க அவர்களது தனிப்பட்ட வாழ்வை அல்ல) எவராவது தான் செய்யும் அரசியல் நடவடிக்கைகளை யாரும் விமர்சிக்க கூடாது என்று நினைத்தால் அவர் அரசியலில் ஈடுபடவோ தலைமை வகிக்கவோ அருகதை அற்றவர். இந்த விடியோவை முதல் முதல் பார்தத போது துவாரகா என்று வந்த பெண்ணுக்கு தான் தான் அடிவிழுவதாக நினைத்தேன். பின்னர் தேன் இவர் வேறு ஒருவர் என்பதை அறிந்தேன்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
உண்மைக்கும் உங்களுக்கும் வெகு தூரம். யாராவது உண்மைகளை பேசினாலே சேறடித்துவிட்டார்கள் கொச்சைபடுத்திவிட்டார்கள் என்று மூக்கால் அழுவது சென்றிமென்ற் பேசி உண்மைகள் பேசுவதை தடுக்க நினைப்பது உங்கள் வாடிக்கை தான். அதற்காக உண்மைகளை பேசாமல் இருக்க முடியாதே!
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அமெரிக்கா மட்டுமல்ல தமிழர்களாகிய நாமும் அப்படித்தான். 1980 களின் ஆரம்பத்தில் சீக்கியர்களின் காலிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை வலுவடைந்து பிந்தரன்வாலே தலைமையில் போராடியபோது அவர்களை இந்திரா காந்தியின் அரசு அடக்கி ஒடுக்கியபோது எந்த தமிழ் இயக்கங்களுக்கே (புலிகள் உட்பட்ட) அதற்கெதிராக மூச்சசுகூட விடவில்லை. ஏன்? 1984 ல் பொற்கோயிலில் அவர்களின் தலைவர் உட்பட பல போராளிகளை இந்திய இராணுவம் கொன்ற போதும் அவர்களின் பிரச்சனையை தீர்க்க அரசியல் ரீதியில் முயலாது இராணுவத் தீர்வை நாடிய போதும் எந்த தமிழ் ஆயுத இயக்கங்களோ மிதவாத அமைப்புகளோ அதற்கெதிராக மூச்சு கூட விடவில்லை. ஏன்? சுயநலம். நங்கள் மட்டும் சுயநலவாதிகளக இருப்போம் மற்றவர்கள் எல்லோரும் தமது தமது நலன்களை விட்டு எமக்கு உதவ வேண்டும் என்ற நினைப்பே பச்சை சுயநலத்தின் வெளிப்பாடே.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அருமையான கருத்து. சுப்பர் கோஷான். 👍👍👍👍
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
அனைத்துலக நோர்வே மூலம் நேரடியாகவே தலையிட்ட நிலையில், உலகத்தை பகைத்து போருக்கு மீண்டும் செல்வதன் ஆபத்தையைம் அப்படி அப்போரில் தோல்வி ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் அரசியல் சூனிய நிலையையும் சாதாரண மக்களாலேயே கணிக்க கூடிய நிலையில், உலக நாட்டு தூதுவர்களுடனும் பல ராஜதந்திரிகளுடனும் அடிக்கடியான சந்திப்புக்களை மேற்கொண்ட சம்பந்தப்பட்டவர்களால் அதுவும் ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர் கிறிஸ்ட் பற்றனின் நேரடி எச்சரிக்கைக்கு பின்னரும் கணிக்கமுடியாமல் இருந்தது என்பதை நம்ப முடியவில்லை. பாரிய மனித அவலம் தமிழீழதை அமைக்க சாதகமாக அமையும் என்ற மாயையில் மக்களின் அழிவு தொடர்பாக எந்த பொறுப்புணர்வும் அற்றதாகவே இறுதி சில வருடங்களாக பேச்சுவார்தையை புறக்கணிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டதோடு யுத்தத்திற்கான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது. பேச்சுவார்ததையில் நாம் கேட்டது கிடைத்திருக்கவிட்டாலும் இன்றைய நிலையை விட மிகவும் மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் அதே வேளை புலிகளுக்குள் இருந்த திறமைமிக்க அரசியல் போராளிகள் உயிருடன் இருந்து மக்களுக்கு தலைமை வகித்திருக்க முடியும். சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களின் பொதுப்புத்திக்கும் யுத்தத்தின் மூலம் புலிகளை தோற்கடித்தோம் என்ற மமதை இல்லாமல், பேச்சு வார்ததை மூலம் சமாதானமாகவே அவர்களின் ஆயுதத்தை மௌனித்தோம் என்ற மரியாதை புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் இருந்திருக்கும். இதை வீம்புக்காக சிலர் மறுக்கலாம். ஆனல் இன்றைய அவல நிலையை விட மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் என்பதை பொது அறிவுடன் சிந்திக்கும் எவரும் மறுக்க முடியாது.
-
ஆமையும் தமிழனும்....
பத்திரிகைச் செய்தி 1 தமிழர் பாசறைப் பத்திரிகை 10.04.4354 திங்கட்கிழமை. தமிழ் பெருங்குடிகளின் தொன்மை, அவர்களின் வரலாற்றை அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கு நாடுகள் எப்படியெல்லாம் மறைத்து வருகின்றனர். உலகை ஆண்ட தமிழர்கள் இன்று நாடு நாடற்ற இனமாக மாற்றப்பட்டுள்ளதென்றால் அதற்கு காரணம் இந்த மேற்குலக நாடுகளே. அவர்கள் இந்திய சிறிலங்கா நாடுகளின் மூலம் தமிழரை அழித்ததோடு அவர்கள் தொன்மைகளை மறைக்கும் கைங்கரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மேற்கு நாடுகளை மட்டுமல்ல இந்த உலகையே செல்வ செழிப்பாக்கியவர்கள் தமிழர்களே என்ற உண்மையை தமிழர் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உடாசா கோபாலு கண்டறிந்துள்ளார். இற்றைக்கு 23 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கோஷான் சே என்ற எமது தமிழ் பெரும்பாட்டனின் குறிப்புகளை ஆதாரங்களை மீட்டெடுத்த உடாசா கோபாலு அதை நூலாக உருவாக்க, அதை மக்கள் தூய்மைவாதக் கட்சியின் தலைமைச் செயற்பாட்டாளர் சேரமான் மக்கள் முன் வெளியிட்டு பலத்த கைதட்டல்கள் விசிலடிகள் மத்தியில் உரையாற்றினார். எமது பெரும்பாட்டன் கோஷானின் குறிப்புகளை இணையங்களில் இருந்து அழித்து விட அமெரிக்க ஏகாதிபத்திய சிஐஏ முயன்று வருவதாகவும், அதற்காகவே மைக்ரோசொவ்ற் நிறுவனத்துக்கு பெரும் தொகைப்பணம் கைமாறியுள்ளதான தகவல்களை, “தமிழ் நீ குழாய்ச் சங்கம்” என்ற செய்தி இணையம் வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டி உரையாற்றிய அவர், கோஷானின் குறிப்புகளைப் பாதுகாக்க அதனை PDF ஆக பிரதியெடுத்து தமது வரவேற்பறையில் தொங்க விட்டு, தமிழர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும் மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததோடு அதை செய்யாமல் விட்டால் நீ தமிழனே அல்ல என்று நரம்பு புடைக்க கூறினார். அத்துடன் 45 நூற்றாண்டுகளுக்கு முன்பு புறாக்களில் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்ட தமிழன் தகவல்களை அனுப்ப புதிய முறைகளைப் பற்றி ஆராய்ந்தான். அந்த வகையில் தகவல்களை அனுப்ப புதிய முறையை கண்டு பிடித்த ஒரு தமிழ் பெருமகுடிமகன் அதை சோதனை செய்வதற்காக தனது தந்தைக்கு “என்னப்பா” என்று கேட்டு தகவலை அனுப்ப, அவரை ஏமாற்றிய அமெரிக்க நிறுவனம் அந்த தொழில்நுட்பத்தை திருடி, என்னப்பா என்ற அழகு தமிழ் வார்ததையை திருடி WhatsApp என்று தனதாக்கி கொண்ட வரலாற்றையும் “ஏமாற்றப்பட்ட தமிழா” என்ற தலைப்பில் விடியோ வெளியிட்ட நீ குழாய் சங்க தலைவர் சேட்டை செம்மொழியான் தெரிவித்தார். உடாசா கோபாலு கண்டறிந்த, எமது பெரும்பாட்டன் கோசான் சே யின் கலவெட்டுகளை ஒத்த குறிப்புக களை மறைக்க அமெரிக்க சிஐஏ யுடன் சேர்ந்து சதி செய்த பேராசிரியர் அறிவுமதியின் முயற்சி தமிழர் வீரப்படையின் துரிதமான செயற்பாட்டால் முறியடிக்கப்பட்டது. பத்திரிகை 2 அறிவுச்சுடர் பத்திரிகை 14.04.4354 வெள்ளிக்கிழமை “தமிழர் பாசறை” பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 10.04.4354 ல் வெளியிட்ட தகவல்களை சரிபார்தத தமிழ் அறிவுப் பல்கலைகழக பேராசியர் அறிவுமதி 21 ம் நூற்றண்டில் வாழ்ந்த கோஷான் சே யாழ் இணையம் என்ற இணைய இதழில் நகைச்சுவையாக “சிரிப்போம் சிறப்போம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தகவல்களே அவை என்று, தனது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்தார். அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுமதி இலுமினாட்டி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதை போளிசீலன் தனது நீ குழாய் விடியோவில் கூறியதைத் தொடர்ந்து அந்த பேராசியர் வீட்டுக்கு முன்னால் திரண்ட தமிழர் வீரப்படை என்ற அமைப்பினர் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு அவரைத்தாக்கி தமது இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். அவர ஒரு வந்தேறி என்பதையும் வட்சப் தகவல்களை ஆதாரம் காட்டி அவர்களின் தலைவர் தெரிவித்தார். வீரத்தமிழர் அமைப்பின் இந்த வீரச்செயலை பல முகநூல்ப் போராளிகள் பாராட்டி லைக்குகளை அள்ளி வழங்கியுள்ளதுடன் தூய்மைவாதக் கட்சியில் உள்ளீர் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பத்திரிகைச்செய்தி 3 பிபிசி 16.04.4354 ஞாயிற்றுக்கிழமை பேராசியர் அறிவுமதி தாக்கப்பட்டது தொடர்பாவும் கோஷன் சே என்ற 21 ம் நூற்றாண்டு அறிஞர் தொடர்பாகவும் ஆய்வுச் செய்திகளை வெளியிட்ட அறிவுச்சுடர் பத்திரிகை செய்தி ஆசிரியர் தாகப்பட்டு பத்திரிகை பிரதிகள் தெருவில் எரிக்கப்பட்டதாக காவல்துறையினிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது இதை செய்தவர்கள் உணர்சிவசப்பட்ட தமிழ் காவலர்கள் என்று முகநூல் போராளி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக விபரங்களை அறிய தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துடன் தொடர்பு பிபிசி தொடர்பு கொண்ட போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துக்கு காவல்துறை இன்பெக்டர் வந்த போது அவர்களிடம் வாக்குமூலம் அளித்த கட்சித் தலைவர் இதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்டத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து திரும்பினர் என காவல்துறை ஆணையாளர் பிபிசிக்கு தெரிவித்தார். (பல ஆண்டு யாழ் இணைய வாசிப்பின் Inspiration காரணமாக எழுந்த கற்பனை)
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது உணவில் பூசணிக்காய்கறி பரிமாறப்பட்டதை மறைத்துவிடும். குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்ட மக்களைப் பழக்கியிருக்கும் தமிழ் தேசிய ஊடகங்களோ முழுப்பூசணிகாயையே சோற்றினுள் மறைத்துவிடும். ஆனால், சர்வதேச அபிப்பிராயம் எமது மக்களின் வருங்கால சந்திதியின் அரசியல் தீர்வுக்கு அவர்களில் இருப்பை இலங்கைத்தீவில் காப்பாறவும் மிக முக்கியம். அதனால் அதனை உருவாக்கும் சர்வதேச ஊடகங்களும் பெறுமதி வாய்ந்ததே. புலம் பெயர் தேசியம் பேசுவதாக கூறி பொழுது போக்கும் கும்பலுக்கு அது முக்கியமில்லை. இப்படியே இன்னும் 20 - 30 வருடங்களுக்கு இப்படியே பொறுப்புணர்சசியற்று பொழுது போக்கிவிட்டு அந்த கும்பல் ஜாலியாக செத்து போய்விடுவர். இவர்களில் 10 சதத்துக்கு பெறுமதி அற்ற அரசியலால் பாதிக்கப் படப்போவது தாயகத்தில் வாழப்போகும் மக்களே.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
பரிஸ் ரெலிகிராப்ஃ கூறியதை நான் கூறியதாக கூறும் அளவுக்கு புரளியை கிழப்பி மற்றவர்களை நம்ப வைக்கலாம் என்று நம்பும் அளவுக்கு பேதைத்தனமாக உள்ளவர்களுக்கும் தான் கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று நம்பி பாலை குடிக்கும் பூனைகளுக்கும் சாதாரண அறிவுள்ள மனிதர்களால் கூட புரிந்து கொள்ளக் கூடிய இந்த சிறிய விடயத்தை கூட புரிய வைக்க முடியாது என்பதும் அனைவருக்கும் புரியும்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நீங்க என்ன சொல்ல வாறீங்க பையன். சர்வதேச ஊடகங்கள் புலிகளை பற்றியும் அதன் தலைவர்களை பற்றியும் கிழி கிழி என்று கிழிச்சாலும் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை நம்ம ஊரு குப்பனும் சுப்பனும் குடித்து விடு ஏதோ உளறினால் அவர்களுக்கு சங்குதான். நல்ல தெளிவான அரசியல் கொள்கை. இந்த கொள்கையை வைத்து தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்று வேற சொல்லுறீங்க. தனிநாட்டை விடுங்கள். தமிழருக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை உருவாக்க வேண்டுமென்றாலே எமக்கு சாதகமான சர்வதேச அபிப்பிராயம் முக்கியமாக மேற்கு நாடுகளில் தேவை. அதைக் கெடுக்கும் அதேவேளை நீங்கள் விரும்பும் உங்கள் தலைவரை சர்வதேச ஊடகங்கள் எதிர்மறையாக எழுத வைத்த லாசப்பல் லூசுப் படையணியை உங்களால் எப்படி ஆதரிக்க முடிகிறது என்று வியப்பாக உள்ளது.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நீங்கள் கூறிய Paris telegraph தளத்தில், Woman was attacked by a group of LTTE (terrorist) Mobs in Paris என்ற தலைப்புடன் இந்த காணொளி உள்ளது. இப்போது தெரிகிறதா யார் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது என்று. சொந்த செலவில் சூனியம் வைப்பது என்று இதை தான் கூறுவர். இதை செய்த முட்டாள்களுக்கு பாராட்டுப்பத்திரம் வேறு. அடிமுட்டாள்கள் மட்டுமே இந்த செயலையும் காணொளி எடுத்து பதிவிட்ட முட்டாள்களையும் ஆதரிக்க முடியும்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
மிகவும் பண்பாக விமர்சித்தவரை முன்பு இதே பாரிசில் கொலையே செய்துள்ளோம். அநாரிகமாக வசைபாடிய இந்த பெண்ணுக்கு இதை கூட செய்யக்கூடாதா என்று கேட்பதில் நியாயம் உண்டு தானே!
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
@goshan_che இந்த விவாதத்தில் எதை நிரூபிக்க சிலர் முற்படுகின்றர்கள் என்றோ எதனால் விவாதம் நீண்டு செல்கிறது என்பதோ புரியவில்லை. ஆனால், ஏழையோ பணம்படைத்தவர்களோ இனம் மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் பணம் தேவை. சமூகப்பார்வையில் மக்கள் என்று பார்ககும் போது தென்னிலங்கை மக்களுகளைப் பொறுத்தவரை நீண்ட காலமாகவே தமது வாழ்க்கையை அனுபவித்து வாழ அவர்களுக்குப் பணம் தேவை. வடபகுதி மக்களை பொறுத்தவரை சேர்தது வைத்து விட்டு சாக அவர்களுக்குப் பணம் தேவை. ஆகவே இரு பகுதி மக்களின் பொருட்கள், சேவைகள் கொள்வனவு, சுற்றுலா போன்ற விடயங்களில் பாரிய வேறுபாட்டை அவதானிக்க முடியும். அதனால் உழைக்கும் பணத்தை வைத்தோ நுகரும் பொருட்களை வைத்தோ அவர்கள் ஏழையோ பணம் படைத்தவர்களோ என்பதை தீர்மானிப்பது கடினம். அது அவரவர் வாழ்ககை விருப்பங்களை பொறுத்தது. ஆனால் இன்றைய நிலையில் வடபகுதி மக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது கண்கூடு.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நடந்ததுண்டு. இந்த பெண்ணை போல கேவலமாக பேசாமல் பண்பாக விமர்சித்த பலருக்கு இவருக்கு நடந்ததை விட மோசமாக பல நடந்துள்ளன. தாயகத்திலும் ஐரோப்பாவில் தமிழர்வசிக்கும் அனேகமாக எல்லா நாடுகளிலும் 1985 ம் ஆண்டுகளைத் தொடர்ந்த பல ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. நீங்கள் வசிக்கும் நாட்டிலும் நடைபெற்றுள்ளன. அந்த காலத்தில் காணொளிகள எடுக்கப்படுவதும் இல்லை அவை இவ்வாறு பகிரப்படுவதும் இல்லை.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
எதிரியை விட நாம் கேவலமானவர்கள் என்பதை நிருபிப்பதில் எம்மவருக்கு எப்போதும் எக்காலத்திலும் வெற்றிதான். அந்த நிருபிப்பில் சந்ததியை இழந்தாலும் எமது அடிப்படை நோக்கத்தை இழந்ததிலும் எமக்கு கவலை இல்லை. வெற்றியை கொண்டாட வேண்டியதுதான். 😂
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
இணைப்புக்கு நன்றி பாலபத்திரரே. முழுவதும் பார்த்தேன். இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் அத்தனையும் ஆரோக்கியமானவையே. எமது இனத்துக்குள் இருக்கும் சமூகப்பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்பட வேண்டும். ஆனால் இங்கு பேசியவர்களை பார்க்கும் போது கருத்து வேறுபாடுகளின் போது குரலை உயர்ததி கத்துவதும் பணபற்றமுறையில் அங்கும் இங்கும் நடந்து திரிவதும் பார்கக ரசிக்க கூடியதாக இல்லை. புலம் பெயர்ந்து மேற்குநாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்தும் எம்மவர்கள் இந்த விடயத்தில் எந்த முன்னேற்றத்தையும் தம்முள் ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அமைதியான முறையில் எதிரில் இருப்பவர்களுக்கு புரியக் கூடிய வகையில் கருத்தாடல்களை செய்திருந்தால் அவர்கள் பேசிய ஆரோக்கியமான விடயங்கள் மக்களை இலகுவில் சென்றடைந்திருக்கும்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பதிலுக்கு நன்றி கோஷான். நீங்கள் இலங்கையின் பல இடங்களுக்கு ஏற்கனவே சுற்றுலா சென்றிருப்பதால் மேலும் பல தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இது போன்ற பயண வீடியோக்களை இணைத்து உங்கள் பயணக்கட்டுரையின் முக்கியத்துவத்தை குறைக்கின்றேனோ என்று தயங்கி தயங்கியே இதனை இணைத்தேன். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளூவீர்களோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், உங்கள் நேர்மறையான பதில் கண்டு திருப்தியடைந்தேன். நன்றி கோஷான். இலங்கை முழுவதற்குமான பயண தகவல்கள் அடங்கிய பல வீடியோக்கள் இந்த இளம் தம்பதியினரின் யூருயூப் தளத்தில் உள்ளன. நான் அறிந்த வரை இலங்கையில் இயங்கும் யூருயூப் தளங்களில் மிக தரமான தளம் இவருடையது. சுற்றுலா பிரதேசங்களின் தகவல்களை துல்லியமாக முன்பே திரட்டி தேவையற்ற அலட்டல்களை தவிர்தது சிறந்த மொழி நடையில் இவர்கள் தரும் பாணி மிகச் சிறப்பானது.
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
பொதுவாக சமூக வலைத்தளங்களின் போக்கு என்பது பின்வருமாறு உள்ளது. பரந்துபட்ட அறிவுத்தேடல் உள்ளவர்களை அதை நோக்கி உந்தித் தள்ளும் ஆரம்ப புள்ளியாக செயற்பட்டு அவர்களுக்கு சேவை செய்யும் கருவியாக செயற்படும் அதேவேளை, பொது அறிவுக்கு தன்னைமட்டுமே முழுமையாக நம்பியவர்களை அவர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறிவையும் மங்க வைத்து அடி முட்டாளாக்கிவிடும்.