Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. அந்த பெரும் படையில் நானும் ஒரு துளி.🤣 Pitch and conditions: The Eden Gardens mystery It is going to be hot and humid in Kolkata, where teams winning the toss have elected to chase in all three games this season with mixed results. Royal Challengers Bengaluru (RCB) restricted KKR to 174 and won, but the other two games featured successful defences of 200 totals. இந்த ஆடுகளம் கொல்கத்தாவின் ஆடுகளம், சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம், குறைந்தது 200 ஓட்டங்களாவது எடுத்தாக வேண்டும் என கூறப்படுகிறது, இந்த ஆடுகளம் கொல்கத்தாவிற்கு சாதகம் அதிகம் என கூறப்பட்டாலும் ஏற்கனேவே வெளியே போவதற்கு துண்டு போட்டு வைத்திருக்கும் அணியுடன் இன்று கொல்கத்தாவும் இணைந்து கொள்ளும் என கருதுகிறேன். இந்த போட்டியில் கொல்கத்தாவே வெல்லும் என கிரிக்கட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள், ஆனால் கொல்கத்தா அணியின் துடுப்பாட்டம் அதன் பலவீனமாக தொடர்கிறது, மறு வளமாக குஜராத் அணி ஒரு சமநிலையான அணியாக காணப்படுகிறது, குஜராத் அணியே வெல்லுமென கருதுகிறேன், இன்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு ஓரளவிற்கு முடிவிற்குள் வந்துவிடும் என கருதுகிறேன். இந்த போட்டி கொல்கத்தாவிற்கான வழியனுப்பும் போட்டி என்பதால் போட்டி முடிவில் பாட்டை ஒலிக்கவிடலாம் (சென்னை அணி போலில்லாமல் ஒரு சின்ன நம்பிக்கை கொல்கத்தாவில் இருக்கிறது இன்றைய போட்டியினை வெல்வார்கள் என).
  2. பலவீனமான ஒவ்வொரு உயிரினமும் தன்னை பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்கி அதனை அதன் கூர்ப்பில் வலுப்படுத்திக்கொண்டே வரும். வானில் பறக்கும் பறவைக்கூட்டம் ஒரே பாதையில் சீராக பறந்து கொண்டிருக்கும் போது முன்னால் செல்லும் பறவை மின்னல் வேகத்தில் எதிர்புறம் திரும்பினால் அதே போல அனைத்து பறவைகளும் மின்னல் வேகத்தில் திரும்பிக்கொள்ளுகின்றன, அதே போலவே மீன் கூட்டமும் அவ்வாறே செய்கின்றன இது அனைத்து ஜீவராசிகளும் தம்மை பலமாக பேண பயன்படுத்தும் பாதுகாப்பு பொறிமுறை. தனியாக நின்றால் இரையாகிவிடுவோம் என்பதற்காக இந்த பாதுகாப்பு பொறிமுறையினை அவை உயிரியல் ரீதியாக தலைமுறையாக கடத்தி வருகின்றன, ஆதி மனிதன் காட்டு வாழ்கையிலும் இவ்வாறே இருந்துள்ளது, ஆனால் நவீன உலகில் அதற்கான தேவை இல்லாமல் போய்விட்டாலும் மனிதர்களுக்குள்ளே இருக்கும் சுய பாதுகாப்பு பொறிமுறை இவ்வாறு மதம், சாதி, பிரதேசம் என கூட்டிணைய வைக்கின்றது. பிள்ளையான், கருணா போன்ற சுயநலமிகள் மக்களின் அறியாமையினை பயன்படுத்தி அவர்களை பிர்த்து அதன் மூலம் தமது இலாபத்தினை அடைகிறார்கள். மக்கள் சாதி, மதம், இடம் என பல ப்ரிவுகளாக பிரிந்து மேலும் பலவீனமாகிறார்கள், ஆரம்பத்தில் இந்த வேலையினை கருணா, பிள்ளையான் என தொடங்கினார்கள் புலிகளின் இல்லாமல் போன பின்னர் தமிழ் அரசியல் கட்சிகளும் அந்த கோதாவில் குதித்தார்கள், தற்போது தமிழர்கள் சில்லு சில்லாக உடைந்து பலவீனமாக உள்ளார்கள். சில சமயம் நான் நினைப்பது உண்டு ...இந்த பிள்ளையான் போன்றவர்கள் கூறும் கருத்தும் யாழ்களத்தில் எழுதுபவர்களின் கருத்தும் ஒரே மாதிரி இருக்கே ...இவர்கள் எல்லாம் ஒரே பாசறைக்கு சென்றவர்களோ... அவுஸ்ரேலியாவில் இருந்த ஒருவர் அவரது ஊரின் பெயரால் உருவாக்கப்பட்ட தொண்டு அமைப்பினூடாக அவரது ஊருக்கு செய்யப்பட்ட தொண்டு நடவடிக்கைகளை பயன்படுத்தி (அவர் ஊரில் அதன் மூலமான தொடர்பினூடாக) தனது பிள்ளையின் அரங்கேற்றத்திற்கான வாய்ப்பாக (செலவு குறைந்த அரங்கேற்றம் + உல்லாச பயணம்) அவர்களது ஊரில் உள்ள கோயில் நிகழ்வொன்றினை பயன்படுத்தினார், அவரிடம் கேட்டேன் அப்போ அங்கே வழமையாக பாடும் குழந்தைகளின் நிலை என்ன என அதற்கு அவர் கூறினார் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடுகிறார்கள்தானே இந்த வருடம் பாடாவிடால் ஒன்றும் குறைந்து போய் விடாது என அதில் நியாம் இருப்பதாக அவருக்கு இருக்கலாம். இப்படி பல மக்களை நாம் நாளாந்தம் சந்திக்கிறோம், இவர்கள் தமது சுயநலத்திற்காக பாவப்பட்ட தமது மக்களையே அறியாமல் சுரண்டுவதால் அதே போல தமது சுயநலனுக்காக செய்த தவறான செயல்களை செய்கின்ற கருணா, பிள்ளையா தமது தவறுகளுக்காக உருவாக்கின சித்தாந்தம்தான் இந்த பிரதேசவாதம், சுய நலன் இருப்பதில் தப்பில்லை ஆனால் அதனால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்களா என பார்க்காமல் விட்டு விடுகிறோம். இந்த தவறிற்கு நானும் விதிவிலக்கில்லை, ஆனால் பெரும்பாலோனோர் இதனை புரியாமல் செய்கின்றனர், இதனை யாரும் குற்றமாக கூறுவதில்லை ஒரு மாற்றத்திற்காக கூறுவதால் அதனை நாம் தான் புரிந்து அது தொடர்பில் கோபம் கொள்ளாமல் சிந்தித்து முன் செல்லவேண்டும். ஒரு வகையில் இந்த கருணா பிள்ளையான் போன்றோரின் பிரதேச வாதம் எடுபட காரணமாக இருப்பதற்கான காரணியாக நாமும் இருக்கின்றோம்.
  3. சென்னை அணி, கொல்கொத்தா அணி என இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகும் அணிகளில் தெரிவு செய்திருந்தேன் சென்னை அணி நேற்றோடு போயாச்சு இன்று கொல்கத்தா. காணொளி
  4. இன்றைய மும்பாய் சென்னை போட்டியின் பின்னர் சென்னை விசிறிகளின் சார்பாக🤣. காணொளி
  5. நீங்கள் சொல்வது சரி சென்னை அணியின் மத்திய பகுதி பலவீனமான பகுதி, ஓட்ட விகிதம் 100 இற்கும் குறைவானதென கேள்விப்பட்டேன் (ஓட்ட சராசரி நினைவில்லை) இதுவரை சென்னை அணியின் ஒட்டு மொத்த ஓட்ட சராசரி 116 என்பதாக நினைவில் உள்ளது, ஆனாலும் திருப்பாதி அணியின் மேல்பகுதியில் ஒரு பலவீனமான நபராக தொடர்ந்தும் இருப்பதால் இந்த போட்டியில் தொடருவாரா என்பது சந்தேகம் அதே போல் சங்கரும் அடுத்த போட்டியில் தொடுருவார என கருதவில்லை. குத்து மதிப்பாக 2/3 நபர்கள் சென்னை அணியினை தேர்வு செய்திருப்பார்கள்.🤣 மிகுதி 1/3 குஜராத் அணி (தமிழ்நாட்டு வீரர்கள் அதிகம் விளையாடும் அணி) 🤣
  6. சென்னை அணி பவர் பிளேயின் முக்கியமான 6 வது ஓவரை அஸ்வின், ஓவர்டன் என ஏற்கன்வே பலதடவை அடிவாங்கும் பந்துவீச்சாளர்களிடம் மீண்டும் மீண்டும் கொடுப்பது (குறிப்பிட்ட ஓவரில் குறைந்தது 20 ஓட்டங்களை கொடுப்பார்கள்). திரிப்பாதி போர்மில் இல்லை என்றாலும் விடாப்பிடியாக ஆட வைப்பது, மத்திய பகுதியில் போர்மில் இல்லாத வீரர்களை தொடர்ந்து பேணும்போது, சென்னை அணியில் வான்ஸ் பேடி போல சிறந்த இளையோர் அணியில் இருக்கும் போது அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் தொடர்வது, இவர் பஞ்சாப் பிரியான்ஸ் ஆர்யாவினை விட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என கூறுகிறார்கள் அவரை விட இவர் அடித்தாட கூடியவர் என கூறப்படுகிறது. இதனை பார்த்தாலும் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என புரிவதில்லைதான். ஆனால் அந்த லக்னோ போட்டியில் பந்த் போர்மில் இல்லாமல் இருந்தவர் ஓரளவாக சென்னை அணியுடன் விளையாடியமையால் அரை சதத்தினை எட்டியிருந்தார் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தனது போர்மிற்கு வந்து விடுவார். பந்த் மிக சிறப்பாக அணியினை வழிநடத்தி வந்திருந்தார் அந்த போட்டியில் குழப்பமாக முடிவுகள் எடுத்திருந்தார் என்பது உண்மைதான் ஆனால் அது மட்ச் பிக்சிங் என்பது கொஞ்சம் ஓவரான விடயம்.
  7. பிளட்டாக பந்து வீசுவதன் மூலம் பந்தை தூக்கி அடிப்பது கடினமாக இருக்கும், ஆனால் புல் லெந்தில் பந்துவீசும் போது பிளட்டாக வீசினாலும் அடிப்பார்கள்.
  8. யாரோ பேபி டிவிலியர்ஸ் வருகிறாராம்.🤣 பெரும்பாலான ஆடுகளங்கள் பெரிதாக எழுந்து வராது என்பதால் அவர் தேவையில்லாமல் முதுகை வளைக தேவையில்லை என கூறிவிடுங்கள் அவரிடம், பிறகு அவர் காயத்தினால் வெளியேறினால் ராஜஸ்தான் அணி மேலே உள்ள அணிகளுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிடும்.🤣 நல்ல அவதானிப்பு.👍
  9. முக்கியமான ஆட்டத்தின் நடுப்பகுதியினை ஆதிக்கம் செலுத்தும் சுழல் பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்துவதுதான் முக்கியம் விக்கெட் எடுத்தால் அது மேலும் சிறப்பாக இருக்கும், சென்னை அணியின் தோல்விக்கு ஆட்டத்தின் நடுப்பகுதி துடுப்பாட்டக்காரர்கள் போடும் முட்டுக்கட்டை காரணமாக இருபப்து போல.
  10. அது ஒரு நகைசுவைக்காக, நானும் சென்னையினைத்தான் தெரிவு செய்துள்ளேன் ஆனால் 3 அணிகள் தமது இடத்தை துண்டு போட்டுவிட்டார்கள் ஏற்கனவே, சென்னை, கைதராபாத், ராஜஸ்தான். இன்றைய போட்டியில் சுயாஸ் கால் தடத்தினால் ஏற்பட்ட ஆடுகளத்தின் கடினமான பகுதியினை குறிவைத்து பந்து வீசினார், ஏனெனில் பந்து அதிகமாக திரும்பும் என்பதால் ஆனால் அது புல் லெந்தில் இருப்பது துடுப்பாட்டக்காரருக்கு வசதியாக இருந்ததனால் அவரும் வஞ்சகமில்லாமல் 6, 4 என அடித்தார், வனிந்து சும்மாவே விக்கெட் எடுக்கிறேன் என அதே அளவில் தூக்கி போடுவார்.🤣
  11. வாய்ப்பில்லை, முதலாவது போட்டியில் குஜராத் வென்றாலும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியில் உள்ள இலங்கை சுழல் பந்து வீச்சாளர்கள் தமது சீருடைக்குள் லக்னோ சீருடை அணிந்தே வருவார்கள்.🤣
  12. ராஜஸ்தானும் பெங்களூர், சென்னை அணிபோல் தனது மைதானத்தில் தோற்கும் அணி. ராஜஸ்தான் அணிக்கு இரண்டு இலங்கை சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்து அந்த அணியினை தோற்கடிக்கிறார்கள்.🤣
  13. காணொளி இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியினை தேர்வு செய்து வென்றவர்களுக்காக. 🤣
  14. மீண்டும் சந்திப்போம், இனிய பயணமாக அமையட்டும், வெய்யில் அதிகமாக தென்னிந்தியா இருக்கலாம். எனக்கும் இதே நிலைதான்.
  15. மழையினால் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது (சுழல் பந்து).
  16. Power play 4 overs PSL பாகிஸ்தான் T20 போட்டி
  17. உங்கள் இருவருக்குமிடையேதான் போட்டியே இருக்கு.🤣 காணொளி
  18. இந்த யாழ்கள போட்டியில் கலந்து கொண்டமையாலேயே நீங்கள் ஐ பி எல் பார்க்கிறீர்கள் என கருதுகிறேன், அடுத்த ஐ பி எல் போட்டியில் கலந்து கொள்ளும் போது அணிகளின் விபரம் உங்களுக்கு தெரியும் அதனால் இந்த முறையினை விட சிறப்பாக தெரிவு செய்வீர்கள், ஆனால் இந்த ஐ பி எல்லில் கூட ஐ பி எல்லினை வழமையாக பார்ப்பவர்களைவிட சிறப்பாக தேர்வு செய்துள்ளீர்கள் அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக செயற்படுவீர்கள் என கருதுகிறேன்.
  19. Pitch and conditions The Chinnaswamy Stadium isn't the bowlers graveyard it used to be this season. The pitches used so far have been two-paced and RCB haven't been able to exceed 170 while batting first in both games. The curator attributes the slowness to high heat and low humidity, though recent rain and cooler evenings may change that a bit. பெங்களூர் அணியின் பந்துவீச்சு பஞ்சாப் அணியுடன் ஒப்பிடும் போது ஒரு சுழல் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது, பெங்களூர் ஆடுகளம் இரட்டைதன்மை கொண்டதாக இருந்தால் பெங்களூர் அணியினை விட பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பு கூட இருக்கலாம். அடுத்த போட்டியில் பெங்களூர் அணிக்கு வாய்ப்பு இருக்கலாம், இரண்டு போட்டியிலும் ஒரே அணியினை தெரிவு செய்தால் இரண்டில் ஒன்று சரியாக வரும். 50:50 .
  20. பஞ்சாப் அணியினை மைக் மோகன் அணியென கடந்த போட்டியில் கூற கொல்கத்தா அணியினை தோற்கடித்தது, தற்போது கொல்கத்தா அணி அரோகரா குறூப்பில் நுழையும் அடுத்த அணி எனும் நிலையில் நிற்கின்றது. 3 அணிகள் கிழே இடத்தினை துண்டு போட்டு வைத்துள்ளார்கள், இன்றைய போட்டி ஒரு முக்கியமான போட்டியாக பஞ்சாப்பிற்குள்ளது. அட்லஸ் கேர்குலஸிடம் தற்காலிகமாக குடுத்த பதவி மாதிரி எனது பதவி வெகுவிரைவில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறேன்.
  21. 2 கோடி பணமா அல்லது அதனைவிட அதிகமா என சரியாக தெரியவில்லை, அத்துடன் அந்த கொலிவூட் படமா என்பதும் சரியாக நினைவில்லை.
  22. கமலின் விக்ரம் படம் வந்திருந்த போது தொடரூந்தொன்றில் என மனிவியுடன் பயணம் செய்தேன், அந்த தொடரூந்தில் இருந்த இந்திய தமிழ் பெண்கள் விக்ரம் படம் தாறுமாறாக இருந்தது என கூறிக்கொண்டு வந்தார்கள், நான் அந்த படத்திற்கு போகவில்லை, வழமையாக வேலையால் வந்து (நீண்ட இரவு நேர வேலை) அப்படியே படத்திற்கு போவதால் படம் நன்றாக இல்லாவிட்டால் நித்திரை கொள்வதுண்டு அதனால் தேவையற்ற மனஸ்தாபம் வந்துவிடும் என்பதால் அந்த படத்திற்கு 3 டிக்கெட் எடுத்து எனது மனைவியின் நண்பிகளுடன் போய் பார்க்கும்படி கூறிவிட்டேன். படம் பார்த்துவிட்டு வந்து இனிமேல் படமே வேண்டாம் என கூறிவிட்டார். inside man எனும் கொலிவூட் படம் ஒன்றில் ரகுமானின் பாடலை பயன்படுத்த அனுமதி கோரிய போது ரகுமான் அதனை இலவசமாக கொடுக்க முன்வந்ததாகவும் ஆனால் மணிரத்தினம் அதனை பயன்படுத்தி 2 கோடி வசூலித்ததாக எங்கோ கேள்விப்பட்ட நினிவுள்ளது. காணொளி
  23. சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன் கைதராபாத்தும் குரூப்பில் இணைந்துவிட்டது.
  24. RCB தனது மைதானத்தில் இதுவரை இந்த ஆண்டில் போட்டியினை வெல்லவில்லை இன்றைய போட்டியிலும் அது தொடருமா?
  25. நீங்க வேற, நான் மேல போறத பத்தி நினைக்கவில்லை, 2 புள்ளி வித்தியாசத்தில் ஒரு பேரணி வருகிறது அந்த ஜோதியில் கலக்க போகிறேன் எனும் மகிழ்ச்சிதான்.🤣 டெல்லி அணியின் பயிற்சியாளரன தமிழ்நாட்டை சேர்ந்த (பிறந்து வளர்ந்த இடம்) கேமந்த் பதானி கூறிய துடுப்பாட்டக்காரர்கள் ஒரு போட்டியினை வெல்வார்கள், பந்து வீச்சாளர்கள் தொடரை வெல்வார்கள் என்பதற்கு ஏற்ப நல்ல பந்துவீச்சில்லாத கைதராபாத் அணியினால் கொஞ்சம் சிக்கலான ஆடுகளத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.