Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்

Everything posted by vasee

  1. 13 கோடி செலவழித்து பத்திரனவை வாங்கியுள்ளார்கள், ஆனால் அவரது பந்து வீச்சு இம்முறை சிறப்பாக இருக்காது என கூறுகிறார்கள், அண்மையில் அவரது வலைப்பயிற்சி தொடர்பில் இக்கருத்து வெளியாகியுள்ளது.
  2. ரசோதரன் உங்களது பதிலுக்காக பலர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.🤣
  3. பத்திரனவிற்கு பதிலாக நாதன் எலிஸை களமிறக்கினால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்.
  4. நானும் உங்களைப்போலவே நம்புகிறேன், எனது தெரிவும் சென்னைதான்.
  5. கெர்க்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேன் பெரியளவில் ஆயுத ஆளணி இழப்புக்களை சந்திக்கவில்லை, ஆனால் ஒரு பேரழிவினை உக்கிரேன் வெற்றிகரமாக தவிர்த்துள்ளது, இது அடிப்படையில் உக்கிரேனுக்கு ஒரு வெற்றியாக கருதுகிறேன். ஆனால் இரஸ்சியா போரினை தீவிரப்படுத்த போவதாக கூறுகிறார்கள், இது அமைதி உடன்படிக்கைக்கு முன்னதாக அதனை எட்ட இரஸ்ஸியா விரும்பக்கூடும், அதன் ஒரு கட்டமாக ஒடிசாவினை நோக்கிய படை நகர்வு இருக்கலாம் என கருதுகிறேன். உக்கிரேன் ஆளணி பிரச்சினையினை களைவதற்கு மேற்கு ஏதாவது ஒரு மாற்று வழியினை சிந்தித்தாக வேண்டும், போரை நிறுத்துவதற்கு உக்கிரேன் கூட ஆர்வமற்ற நிலை காணப்படுகிறது, அதற்கு காரணமாக உக்கிரேன் அதிகார வர்க்கம் தனது ஆட்சியினை தக்க வைப்பதற்கான முயற்சியாக இருக்கலாம், ஆனால் போரினை தொடரும் நிலையில் உக்கிரேனின் மனித வளம் இல்லை என கருதுகிறேன். கெர்க்ஸ் பிராந்தியத்தில் இருந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிசக்க்தி வழங்கல் மையத்தினை உக்கிரேன் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது இது உக்கிரேனின் மீறல் என இரஸ்சியா குற்றம் சாட்டுகிறது, மறுபுறம் உக்கிரேனின் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான தாக்குதலாகவும் இது கூறப்படுகிறது, ஜேர்மனி இரஸ்சியாவிற்கு சொந்தமானதென கருதப்படும் தென்னமரிக்க நாட்டு எரிபொருள் வழங்கல் கப்பலை தடுத்து வைத்துள்ளதாகக்கூறப்படுகிறது. சமாதான முயற்சியில் சம்பந்தப்பட்ட இரு தரப்பும் ஆர்வம் காட்டவில்லை, அத்துடன் மற்ற தரப்புகளும் போரை தொடரவே விரும்புவது போல் தெரிகிறது.
  6. இரஸ்சிய ஏங்கில்ஸ் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக இணையத்தில் உலாவருகின்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், குறித்த விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள அதே அளவு ஆயுதங்களுடன் மேலதிகமாக அதே அளவு ஆயுதம் வந்து சேர்ந்த போதே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இரஸ்சியா ஒரு பெரும் தாக்குதலை திட்டமிட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறையினூடாக குறித்த உளவுத்தகவல் உக்கிரேனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரஸ்சிய உக்கிரேன் போர்க்களம் உக்கிரேன் தரப்பில் சடுதியாக ஏற்படுகின்ற பின்னடைவை தடுத்து நிறுத்தி உக்கிரேன் தரப்பிற்கு ஒரு குறைந்த பட்ச நியாயமான தீர்வினை எட்ட மேற்கின் உதவிகள் அவசியமாக உள்ளது, ஆனால் ஆளணியில் பின்னடைவை சந்தித்துள்ள உக்கிரேன் தரப்பிற்கு தேவைப்படும் வீரர்களை திரட்டுவதில் உக்கிரேன் தரப்பு தன்னால் இயன்றளவில் வன்முறைகளை கூட பயன்படுத்துவதாக கடந்த காலத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆளணி பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உக்கிரேனால் கோடைகால தாக்குதலை எதிர்கொள்ளமுடியாது என கூறப்படுகிறது, அதற்குள்ளாக ஒரு தீர்வு எட்டப்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் உலகுள்ளது. இந்த போரின் முடிவில் போரிடும் இரு தரப்பிற்கும் இலாபம் இருக்க போவதில்லை, ஆனால் இழப்புகள் அதிகமாக இருக்கும் என்பதே உறுதி.
  7. எலோன் மஸ்கிற்கு SEC கீச்சகம் வாங்கிய விவகாரத்தினை முறையாக கையாளாமைக்காக குற்றப்பத்திரிகை அனுப்பியுள்ளது, 5% அதிகமான பங்குகளை வாங்கினால் அது தொடர்பான அறிவிப்பினை 10 நாள்களில் வெளியிட வேண்டும் எனும் சட்டத்தினை மீறியமைக்கான குற்றச்சாட்டில் நீதிமன்றில் SEC வழக்கு தொடர்ந்துள்ளது. https://www.reuters.com/world/us/elon-musk-issued-summons-sec-case-over-twitter-stake-disclosure-2025-03-20/
  8. இரண்டு முழங்கால் சில்லும் இரண்டு மணிக்கட்டும் என்பதால் அப்படி சிந்தித்தேன்.
  9. நீங்கள் பெரிய விளையாட்டு வீரராக இருப்பதனால் அவ்வாறு நினைத்தேன், அல்லது அவையடக்கத்திற்காக கூறுகிறீர்களோ என கருதுகிறேன். எனது மனதில் இன்னொரு சந்தேகம் நீங்கள் ஐஸ் கொக்கி விளையாடுபவரா? (உங்கள் எலும்பு முறிவுகளை பார்க்கும் போது அப்படி ஒரு சந்தேகம்)
  10. பெரும்பான்மையான பகலிரவு போட்டிகள் மைதான ஈரப்பதனால் பாதிப்பு ஏற்படுவதனால் ஐ பி எல் போட்டிகளில் நாணய சுழற்சியில் வெல்லும் அணிகள் முதலில் பந்து வீச்சினையே தெரிவு செய்யும், சுழல் பந்து வீச்சாளர்கள் பெருமளவில் இந்த மைதான ஈரலிப்பினால் பாதிப்புள்ளாகுவர், சென்னை அணியில் உள்ள நாதன் அலிஸ் போன்ற வீரர்கள் இந்த சவாலை எதிர்கொள்ள இலகுவாக இருக்கும், கட்டர்கள் வீசுவது கடினமாக இருந்தாலும் அவரரது அளவு குறைவான பந்துகள் பிட்சில் வழுக்கி வரும், அதனை இறுதி ஓவர்களில் ஆடுவது இலகல்ல.
  11. குல்தீப் யாதவ் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார், இதுவரை காலமும் KKR அணியில் இடம்பெற்ற குல்தீப்பிற்கு பதிலாக வருணை KKR வாங்கியுள்ளது. பையனுடைய ஆதங்கத்தினை உணர்ந்துள்ளது KKR அணி.🤣
  12. நீங்கள் எப்பிடி இருப்பீர்கள் என ஒரு அனுமானம் இருந்தது, இப்படி எலிஃபன்ட் என கூறி தலைகீழாக மாற்றிவிட்டீர்கள்.🤣
  13. ஐ பி எல் போட்டிகளில் 12 நபர்கள் விளையாடலாம் (பொதுவாக கிரிக்கெட்டில் 11 நபர் விளையாடும் ஆட்டம்). இந்த பன்னிரண்டாம் ஆட்டக்காரரை (Impact player) இன்னொரு வீரருக்கு பதிலாக பயன்படுத்துவார்கள். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளரான நூர் அகமடினை இந்த ஆண்டு வாங்கியுள்ளார்கள், அவரை பந்து வீசுவதற்கு மட்டும் பயன்படுத்தி அவருக்கு பதிலாக வேறு ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரை 12 ஆவது வீரராக தெரிவு செய்யலாம். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளரான இலங்கை பந்து வீச்சாளர் மதீச பத்திரன தனது பந்து வீச்சு பாணியினை மாற்றியுள்ளார் எனவும் (தற்போது லசித் மலிங்கவின் பந்து வீச்சு பாணி) அதனால் அவர் முன்னர் போல் (முன்னர் லசித்தினை விட கிடையாக வீசுவார்) அவரது பந்து வீச்சு இல்லை என கூறப்படுகிறது. அவுஸ்ரேலிய வேக பந்து வீச்சாளரரான நாதன் எலிஸ் சென்னை அணியில் உள்ளார், இறுதி ஓவர்களில் மிக சிறப்பாக பந்து வீச கூடிய எலிஸை சென்னை பயன்படுத்துமா என தெரியவில்லை. மொத்தமாக 14 போட்டிகள் கொண்ட ஐ பி எல் போட்டிகளில் தெரிவு போட்டியில் ஒவ்வொரு அணிகளும் தமது மைதானத்தில் 7 போட்டிகள் விளையாடுகின்றன, இதில் 5 போடிகளையும் தமது மைதானத்திற்கு வெளியே 3 போட்டிகளையும் வென்றால் அரை இறுதி போட்டிகளுக்கு தெரிவாகலாம். சென்னை ஆடுகளம் மெதுவாக இரட்டை தன்மை கொண்ட ஆடுகளமாக கடந்தகாலத்தில் இருந்துள்ளது, கடந்த ஆண்டில் வேக பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்கள், ஆனால் இந்த ஆண்டு ஜடேயா, அஸ்வின், நூர் அகமட் என 3 முண்ணனி சுழல் பந்து வீச்சாளர்களை சென்னை அணி கொண்டுள்ளது. நூர் அகமட், குல்தீப் போல இடது கை மணிக்கட்டினால் சுழல் பந்து வீசும் பந்து வீச்சாளர். சென்னை அணியே குறைந்த ஓட்டங்களை ஆரம்ப ஓவர்களில் பெற்ற அணியாக உள்ளது, ஆனால் இறுதி ஓவர்களில் மிக அதிக ஓட்டங்களை பெற்ற அணியாகவும் உள்ளது. ஒப்பீட்டளவில் அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணியாக சென்னை அணி இல்லாது இருப்பினும் எப்போதும் போல அரை இறுதிப்போட்டிக்கு இம்முறையும் தெரிவாகுமா(சென்னை வெல்லும் என கணித்துள்ளேன்)? நீங்கள் ஒரு சகலாகலாவல்லவனாக இருக்கிறீர்கள்.
  14. எனக்கும் ஐ பி எல் தூரம்தான், ஆனால் சும்மா எதனையாவது கிறுக்கி விட்டு பொழுதை போக்கலாம் என இறங்கியுள்ளேன் (அனைத்து போட்டியிலும் அதே நிலைதான்). நான் வெளிநாடு வந்த ஆரம்பத்தில் எனது ஆங்கிலம் மிக மோசம், நான் தங்கியிருந்த வீட்டில் என்னுடன் மற்றும் இருவர் இருந்தார்கள் அவர்கள் நான் வருவதற்கு முன்னரே வந்திருந்தார்கள். அதில் ஒருவருக்கு என்னைப்போலவே ஆங்கிலம் மோசம், மற்றவர்தான் எனக்கு ஆரம்பத்தில் மொழி பெயர்பாளர், ஆனால் ஆங்கிலத்தினை எழுத்துக்கூட்டி வாசித்து அறியும் அளவு சிறிதளவு இருந்தது. அதனால் எனது குடியேற்ற விண்ணப்பங்களை நானே நிரப்புவதுண்டு, அதில் என்னை பற்றிய கேள்விக்கு பதில் அழிப்பதில் சிரமம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை, ஆனால் எனது மொழி பெயர்ப்பாளர் நண்பர் தனது விண்ணப்பங்களை வேறு ஒருவரிடம் கொண்டு சென்று நிரப்புவார். அவரை அனைவரும் மதிக்கும் நிலையில் இருப்பார், அவரது குடும்பமும் அப்போது வந்திருக்கவில்லை அதனால் மற்ற இளைய எனது நண்பர்களுடன் இருந்தார். எனது மொழி பெயர்ப்பாளர் நண்பர் தன்னுடன் என்னையும் கூட்டி போவார் (என்னிடம் கார் இல்லை), அவர் தனது விண்ணப்பத்தினை நிரப்ப போய்விடுவார் நான் அந்த வீட்டில் இருக்கும் மற்ற நணப்ர்களுடன் அரட்டை அடிக்க போய்விடுவேன் (தப்பி தவறி கூட அங்கிளை பார்ப்பதில்லை) , எனது நண்பர் ஒரு நாள் கூறினார் அங்கிள் (அவரை அப்படித்தான் அழைப்பது) உன்னை ஒரு மாதிரியோ என தன்னிடம் கேட்டதாக கூறினார். என்னைப்பற்றிய கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலை எந்த கூறுவதற்கு எனக்கு சிரமமாக இருக்கவில்லை என நினைத்து அங்கிளிடம் உதவி கேளாதது பிரச்சினையாகிவிட்டது, இந்த போட்டிகளில் கூட எனக்கு தெரிந்ததை கிறுக்குவதற்கு எனக்கு சிரமமாக இருக்கவில்லை ஆனால் இது ஒரு கலகலப்பான திரி என்பதால் தொடர்ந்திருப்பேன்.
  15. ஒரு மணித்தியாலத்திற்கு 500 கல்லை இதனை செய்பவர் செய்வதாக நினைவுள்ளது அந்த கல்லை காய வைப்பதற்கு (எடுத்து சென்று வரிசையாக அடுக்கி வைப்பதற்கு) 5 நபர்களவில் இருப்பார்கள், கல் செய்பவர் தனது வேகத்தினை குறைக்க மாட்டார், முதலில் கல்லை காய விடும் பகுதி கல் செய்பவருக்கு அண்மையாக இருக்கும் பின்னர் அது 50 மீட்டர் வரை நீண்டு செல்லும். அந்த கல்லை காயவைப்பவர் ஆரம்பத்தில் சாவகாசமாக நிற்கலாம் ஆனால் கல்லை அடுக்கி நீண்டு சென்று 50 மீட்டர் தூரத்தினை நெருங்கும் போது 100 மீட்டர் ஓட்டமாக இருக்கும், இதற்குள் காலனிலை வேறு பாதிப்பினை உருவாக்கும் இலகுவான வேலை இல்லை. ஒரு நபர் கொஞ்சம் தாமதித்தாலும் அது அந்த முழு கூட்டணியினையும் பாதிக்கும்.
  16. இஸ்லாமியர்களும், தமிழர்களும் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளார்கள், ஆனால் அதனை உணர்ந்து தவறுகளை திருத்தி முன்செல்லாமல் இரண்டு தரப்பு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது தொடர்கினர், அதற்கு காரணம், தமிழர் தரப்பு மட்டும் தனது தவறினை உணர்ந்து அந்த தவறீற்காக மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் தமிழர் தரப்பில் குற்றம் சாட்டுவதுடன் இதுவரை தமது தரப்பின் தவறுகளை மூடி மறைத்து மன்னிப்பு கோரவில்லை, அதனாலேயே அர்சுனா போன்றவர்கள் இவ்வாறு இனவாதம் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை தமது வறுகளுக்காக மன்னிப்பு கேளாமல் அவர்களால் முன்னோக்கி செல்ல முடியாது, திறந்த மனதுடன் உண்மைகளை எதிர்கொள்ளும் பக்குவம் அற்றவர்களாக இஸ்லாமியர்கள்தொடர்ந்தும் இருக்கிறார்கள். பார்ப்போம் இந்த நாரதர் (அர்சுனா) கலகத்தால் ஏதாவது நல்ல மாற்றம் நிகழுகிறாதா என.
  17. வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... அர்சுனாவின் இந்த செயல் கண்டிக்கப்படவேண்டியதுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த பக்கம் ஒரு அர்சுனா என்றால் இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் அர்ச்சுனாவினை விட மோசமானவர்கள். அதற்காக அவர்கள் அப்படியானவர்கள் என கூறி அர்சுனா செய்யும் அருவருக்கதக்க செயலை நீங்கள் மட்டுமல்ல ஒருவரும் ஆதரிக்க போவதில்லை.
  18. சும்மா ஏதாவதை தெரிவு செய்யுங்கள், அது அவ்வளவு கடினம் இல்லை 15 - 30 நிமிடத்தில் முடிக்கலாம், ஆனால் இந்த கேள்விகளை தயாரிக்க குறைந்த படசம் 5 - 8 மணித்தியாலங்கள் கிருபன் செலவழித்திருப்பார் (குறைந்த பட்சம்) என கருதுகிறேன். இலகுவான ஒரு ஆலோசனை எனது பதில்களுக்கு எதிரானதை தெரிவு செய்யுங்கள் உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும்.
  19. என்னுடன் முன்னர் வேலை செய்த ஒரு நியுசிலாந்து இளைஞ்ஞர், அவர் படித்துக்கொண்டே வேலை செய்தார், அப்போது அவருக்கு 21 வயது, படிப்பு காலத்திலேயே நாடு நாடாக பயணம் செய்வார் சமூக தொண்டிற்காக, வேலையிலும் எப்படியோ அனுமதி வாங்கியிருந்தார் பாதி நாள்கள் தான் வேலைக்கு வருவார். தனது சமூக தொண்டிற்கு அனைவரையும் வலிய அழைத்து செல்வார், ஒரு தடவை அவர் சக வேலையாளர்கள் அவர் வீட்டில் இருப்பார் என வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள் அவர் வீட்டில் இல்லை, வீடு திறந்தே இருந்தது. அவரிடம் ஒரு தடவை தொண்டு நடவடிக்கைக்காக விளம்பரம் அச்சிடுவதற்கு காசு கட்டணம் அறவிடுகிறார்களே என கேட்டதற்கு அவர் கூறினார் அது அவர்களது தொழில் என கூறினார். அவர் வேலையினை விட்டு தனது நாட்டிற்கே போய்விட்டர் ஆனாலும் அவருடன் வேலை செய்தவர்கள் வீட்டிற்கு வெவ்வேறு பட்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரும் கடிதங்கள் மட்டும் நிற்கவில்லை. நான் பார்த்ததிலேயே எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் (வார இறுதியில் தேவாலயத்தில் வைத்து தொண்டு நடவடிக்கையில் ஈடுபடுவார் ஆனால் மதம் ஒரு நோக்கம் அல்ல) சமூக தொண்டு செய்த நபர் அவர், ஆனால் மிக தெளிவானவராக இளம் வயதிலேயே இருக்கின்றார். இந்த யுடியுப்பர்கள் (விளம்ப்ரம்) இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு குறைந்த பட்ச உதவிகள் கூட கிடைக்காது என கருதுகிறேன்.
  20. ஐ பி எல் பெரும்பான்மையானோர் பார்ப்பதே இல்லை, ஐபிஎல் போட்டியினை வைத்து பொழுதுபோக்காக போட்டியில் கலந்து கொள்ளுங்கள். இழப்பதற்கு எதுவும் இல்லை.
  21. இளையராஜா தனது பாடல்களில் 6/8 , 3/4 தாளத்தில் பாடல்களை அமைத்திருக்கிறார் என கருதுகிறேன் (மென்மையான பாடல்கள்), ரகுமான் பெரும்பாலும் 4/4 தாளப்பாடல்களாக இருந்தாலும் அவரது மென்மையான பாடல்கள் 6/8 தாளத்தில் இருக்கின்றது, அண்மையில் வந்த மாமன்னன் திரைப்படத்தில் வந்த நெஞ்சமே நெஞ்சமே பாடல் 6/8 என கருதுகிறேன். பொதுவாக மென்மையான இசை விரும்பிகள் குறித்த காலப்பகுதியினராக இருக்கிறார்கள், அதனை அடுத்துவரும் காலப்பகுதியினர் வெறுவகையான இசையினை விரும்புகிறார்கள், அதனால் பெரும்பான்மையான இரண்டு தலைமுறை தற்போதய தலைமுறையினரை விட அதிகம் என்பதால் ஒரு குறிப்பிட்ட தரப்பு இசை அமைப்பாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள், காலப்போக்கில் இன்னொருவர் வருவார் என கருதுகிறேன். எனக்கும் மென்மையான இசை பிடிக்கும் ஆனால் பிராண்ட் பற்றிய கவலை எப்போதும் இருந்ததில்லை(எனக்கு இசை பற்றி எதுவும் தெரியாது). 4/4 தாளம் ஒரு பொதுவானது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது.
  22. போட்டியில் கலந்து கொள்ளுங்கள் ஆர்வம் தீயாக பற்றிக்கொள்ளும், தவறவிட்ட முதல்வர் பதவி கிட்டும் (தெரியாத துறையில் (ஐ பி எல்) தான் முன்னேறலாம்), ஐ பி எல் போட்டி முடியும் வரை மஞ்சள் உடை அணிந்தால் உங்களுக்கு அதிர்ஸ்டம் கிட்டும், தவிர்க்க வேண்டிய நிறம் ஊதா (அதிர்ஸ்ரமற்ற).
  23. சோதனைக்கு தயார்படுத்துவது போல பெரியளவில் தயார்படுத்தல் நடந்து கொண்டுள்ளது, போட்டி முடிவு திகதி நெருங்கும் போது அனைவரும் ஒரேயடியாக போட்டியில் கலந்து கொள்வார்கள்.
  24. பீதோவன் 13 வயதில் அதனை செய்த்ததாக நினைவுள்ளது, ஆனால் கூகிகிளில் தேடிய போது 29 வயதில் என உள்ளது.
  25. பாவம் இளையராஜா அவருக்கு மட்டும் ஒரே சோதனையாக இருக்கிறது, எப்பவுமே அவரை சுற்றியே விமர்சனங்கள் இருக்கிறது. ஒரு முறை இசகு பிசகாக ஒரு பிரச்சினையில் மாட்டி பொறியில சிக்கிய எலி மாதிரி முழிச்சுக்கொண்டிருந்த போது எனது தாயார் கூறினார், அதென்னவோ தெரியவில்லை பிரச்சினைகள் எல்லாம் உன்னையேதான் தேடி வருகிறது என, கடந்த காலத்தில் நான் சிக்கி தவித்த பிரச்சினைகளை பட்டியலிட்டார், சிந்தித்து பார்த்த போது அது உண்மையாக இருப்பது போல தோன்றியது (பிரச்சினை வருகிறது என ஒதுங்கி இருந்தாலும் பிரச்சினை வந்து முன்னால நிற்கும்), சிலருக்கு சும்மா இருந்தாலும் சிக்கல்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.