Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. நிங்கள் கூற முற்படுவது எனக்கு விளங்கவில்லை. உங்களுக்கு நகைசுவையாக தெரிந்த விடயத்தினை குறிப்பிட்டால் அதனை நானும் இரசிபேன் (உங்களது நகைச்சுவை உணர்ச்சியினை நினைத்து😁).
  2. இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை புலிகள் ஆதரிக்கவில்லை என்பது உண்மைதான் ஆனால் இந்திய இராணுவத்துடன் புலிகள் மோதுவதற்கு காரணம் அவர்களை அவ்வாறு இந்தியா நிர்ப்பந்தித்தது (அதன் தலைவரை கொல்ல முயற்சித்தல், பிற ஆயுத குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி நிராயுதபாணிகளான (ஆயுத ஒப்படைப்பின் பின்னர்) புலிகளை கொலை செய்தமையால்).
  3. SPX 500 இன்னொரு கீழ்நோக்கிய நகர்வு பின்னர் உயரலாம் (தற்போது இரண்டாம் அலையில் பயணிக்கிறது என நினைக்கிறேன்) எதிர் வரும் வாரம் நடுப்பகுதியில் நிகழலாம், கடந்த மாத (AUGUST மாதத்திற்குரிய) வரைபடத்தின் படி விலை சரிவடையலாம் என காட்டுகிறது (Hanging man). 5400 வலயத்திலிருந்து விலை இறங்கியுள்லது வரும் வாரத்தில் இந்த வலயம் எவ்வாறு செயற்படுகிறது என்பதனை பொறுத்து சந்தை போக்கு மாறலாம்.
  4. இந்த back test result மேலே கூறிய market makers method இன் Market structure இனை பாயன்படுத்தி வழமையான trend trade இன் தரவுகள், இந்த தரவுகளினடிப்படியில் 10% draw down இற்கு Risk percentage 1% per equity இற்கு 0% இருப்பதாக மாதிரிகள் காட்டுகின்றன (01 Jul 2024 - 25 Aug 2024). ஆனால இது ஒரு முழுமையான தரவல்ல இந்த மாதங்கள் சந்தை Trending market ஆக இருந்தமையால் இதனை சரியான தகவலாக எடுக்க முடியாது, ஆனால் இந்த ஆண்டு முழுவதும் சந்தை மேல் நொக்கியோ அல்லது கீழ் நோக்கியோ குறித்த திசையில் பயணிப்பதால் இந்த முறைமை உகப்பானதாக இருக்கலாம்.
  5. உரிமைகளை கேட்பது முட்டாள்தனம் அல்ல, அது அவரவர் உரிமை, ஆனால் அந்த உரிமையினை வழங்கமாட்டேன் என கூறி தமது உரிமைகளை இழப்பதுதான் முட்டாள்தனம், அதனைத்தான் சிங்களம் செய்கிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். நான் நம்புகிறேன் ஒரு காலத்தில் தமிழர்களின் காலில் விழுந்து உரிமைகளைத்தருகிறோம் என கெஞ்சுவார்கள் ஆனால் அப்பொது அவர்களை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் (அவர்களே உரிமை இல்லாமல் பிரித்தானியரின் காலனித்துவ காலத்தில் இருந்த நிலையில் இருப்பார்கள்).
  6. இது நேற்று அமெரிக்க வத்தக நேரத்தில் சாம்பல் மெல்லிய நிற பெட்டியினை (Stop hunt box) விலை அணுகிய போது. இந்த Stop hunt box பற்றி பி டி எப் இல விபரம் உள்ளது. Sell stop order not triggered. sell limit order, after break down. இந்த வர்த்தகம் இன்னும் பூர்த்தியாகவில்லை.
  7. தற்போதும் பெரும்பான்மை இனம் போரினால் தமிழர்களை வென்று விட்டோம் இனி தீர்வு கொடுக்கத்தேவையில்லை எனும் மனப்பான்மையில் உள்ளார்கள் என்பதனை உங்கள் கருத்தின் மூலம் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளீர்கள், இலனக்யின் பொருளாதார நிலை தற்போது பிரச்சினை இல்லை எனும் எண்ணப்பாடே பெரும்பான்மையான இலங்கையர்களிடையே நிலவுகிறது, ஆனால் அது உண்மையல்ல. அண்மையில் எங்கோ வாசித்தாகநினைவுள்லது இந்தியா இலங்கையினை தரைப்பாதையினூடகவோ அல்லது வேறு வகையிலோ (சரியாகநினைவில்லை) இதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினை 3 விகிதமாக அதிகரிக்க முடியுமென இந்தியா அறிவித்திருந்தது. இது இலங்கைக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும் இவ்வாறு இந்தியா இலங்கையில் எப்போதும் கரிசனையாக இருப்பது எதனால். இந்த தரைப்பாதை மட்டும் திறந்தால் இந்தியா இலங்கையினை காவு கொண்டுவிடும். இந்திய எல்லை நாடுகளான பாகிஸ்தான், சீனா(தரைப்பகுதி இணைப்பு கொண்ட) ஆகிய நாடுகளைத்தவிர்த்து மற்ற நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை உருவாக்கி விடுவதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறது, இலங்கையில் இனி வரும் காலங்களில் முழுமையான தனது பிடியினை இந்தியா இறுக்கவுள்ளது. குரங்கு அப்பம் பிரித்தனை போல இந்தியா இனவாதம் கண்ணை மூடி நிக்கின்ற ஒரு நாட்டினை ஆரம்பத்தில் சிறுபான்மையினருக்கு ஆயுதம் வழ்ங்கி உள்நாட்டு போரை தீவிரப்படுத்தி பின்னர் அதனை அழித்து பெரும்பான்மையினரது இன வெறியினை இந்தியா காப்பாற்றி விட்டது என எண்ணத்தில் தற் போது படிப்படியாக தமது இறைமையினை இழக்கின்றனர். யார் ஆட்சி கட்டிலேறினாலும் முதலில் போய் எயமானனின் காலில் விழும் நிலைக்கு பேரினைவாதம் உள்ளது, இறுதியில் எனக்கு மூக்குப்போனாலும் எதிர்க்கு சகுனப்பிழையாக வேணும் (தமிழருக்கு சம உரிமை கொடுக்கவில்லை என்ற சந்தோசம்) எனும் நிலையில் தமிழர்களின் நிலைக்கு தமது உரிமைகளை இந்தியாவிடம் அடகு வைக்கும் நிலைக்கு வரும் நிலை வந்து கொண்டிருக்கிறது. சகல சமூகங்களும் சம அந்தஸ்துடன் வாழ்ந்தால் நாடு அபிவிருத்தி பாதையில் பயணிக்கமுடியும் அதை விடுத்து தொடர்ந்தும் பிற்போக்குவாத சிந்தனைகளோடு மற்ற சமூகங்களை அடக்கமுற்பட்டால் வேறு யாருக்கல்லாமோ அடிமையாகலாம் ( நாடுகள் மட்டுமல்ல நிதி நிறுவனங்களிடமும்). இந்தியா பல் முதலீடுகளில் ஆர்வம் காட்டுவது பின்னர் அதற்கான பாதுகாப்பு என இலங்கையில் நுழைவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என கருதுகிறேன். இதில் இந்தியா உடன் சீனா ஆதிக்கப்போட்டியில் ஈடுபட்டால் நாடு இரண்டுபட்டுவிடும்.
  8. 96.547 விலைக்கு கீழே விற்க தீர்மானித்துள்ளேன் (Sell stop), இது எனது வகை வர்த்தகம் முறை Market makers சந்தை அமைப்பினை பயன்படுத்தி (Market structure).
  9. இந்த வட்டம் 3 எழுச்சி(UP trend) அல்லது வீழ்ச்சியுடன் (Down trend) பூரணமடையும் என கூறப்படுகிறது அதன் பின்னர் விலை எதிர் திசையில் பயணிக்கும், அவ்வாறாயின் இன்னொரு சவீழ்ச்சியுடன் இந்த இந்த இறங்குமுகம் முடிவுக்கு வருகிறது
  10. அவுஸ்ரேலிய தொலைக்காட்சிக்குழுவினர் கேர்க்ஸ் பிராந்தியத்தின் நிலவரங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
  11. 84 பக்கங்கள் கொண்ட பி டி எப் இல் 20 பக்கத்தில் உள்ள சந்தை வட்டம் படம் AUDJPY முதல் இரண்டு நாள் நிலவரம் இந்த முறைமியினை Market makers method என அழைக்கிறார்கள் இந்த முறைமயினை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரிவ் மாரோ என்பவர், தற்போது இதே முறைமையினை ICT முறைமையில் வேறு பெயரில் அழைக்கிறார்கள் இரண்டு விதமும் யூ ரியூப்பில் குறித்த நபர்களால் தரவேற்றப்பட்டுள்ளது. முதலாவது படத்தில் சந்தை வட்டம் விளக்கப்பட்டுள்ளது. சந்தை வட்டம் 3 நிலைகளை கொண்டது 1. Accumulation (வாரத்தின முதல் நாள் ஆசிய சந்தை நேரம், சந்தையின் முதல் நாள் ஆசியநேரத்தினை இரண்டாவது படத்தில் சிகப்பு பெட்டியினால் குறிப்பிடப்பட்டுள்ளது) 2.Manipulation 3.Trend release வாரத்தின் முதல் நாள் ஆசிய சந்தையில் தமக்கு தேவையான பங்குகளை சந்தையினை உருவாக்குபவர்கள்(Market Makers) வாங்குவார்கள், இதனை Accumulation என கூறப்படுகிறது. அடுத்து இரண்டாவதுநிலை ஆரம்பமாகிறது அதனை Manipulation phase என கூறப்படுகிறது இந்த நிலையில் சாதாரண வாடிக்கையாளர்களாகிய என்னை போன்ற வர்த்தகர்களை (Break out traders) கவர்ந்திழுக்க சந்தையின் தவறான பக்கத்தில் விலையினை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்வார்கள் AUDJPY இல் விலை உயர்த்தப்பட்டுள்ளது அதனை பின்பற்றி நானும் வாங்கி இழப்பு ஏற்பட்டது. அடுத்த நிலை சந்தையினை சரியான திசையில் கொண்டு செல்லல்(Trend release) இதன் படி பார்த்தால் குறைந்தது அடுத்த இரண்டு நாளைக்கு விலை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது வார இறுதியில் விலை உயர்வடையலாம் அல்லது அவ்வாறு நடக்காமலும் விடலாம். முதலாவது உதாரண மாதிரி Up trend இற்கானது, ஆனால் AUDJPY இந்த வாரம் down trend (Mirror image மாற்றி பார்ககவும்) பி டி எப் மற்றும் யுர்யூப்பில் இது தொடர்பான விளக்கங்கள் உள்ளது. இத படங்கள் 7 நாளில் காலாவதியாகிவிடும்.
  12. முதலாவது வர்த்தகம் அதன் stop loss இனை எட்டி விட்டது, பொதுவாக திங்கள்கிழமை வர்த்தக நேரத்தின் குறைந்த விலையினை விட குறைந்தால் விலை கீழிறங்க வாய்ப்புள்ளது, ஆனால் மெல்லிய சாம்பல் நிற பெட்டி குறித்த தின ஆசிய நேரத்தினை விட 25 புள்ளி குறைவாக குறைந்த விலையிலிருந்து ஆரம்பித்து அடுத்த 25 புள்ளியில் முடி வடையும் 25 புள்ளிகள் கொண்ட பெட்டி, இது market makers stop hunt அளவாக கூறப்படுகிறது. https://forex-station.com/attach/file/3481774 இந்த இணையத்தளத்தில் உள்ள பி டி எப் இல் இந்த வர்த்தகம் தொடர்பான விபரம் உள்ளது.
  13. நேற்றைய ஆசிய பெட்டியின் குறைந்த விலையில் AUDJPY வாங்கியுள்ளேன் (Support).
  14. நீங்கள் கூறுவது புரிகிறது, நாமம் போடுவது , பட்டை போடுவது, பூணூல் போடுவது போல, இலங்கையர் என்பதும் ஒரு அடையாளம்தான். என்னதான் ஒவ்வொருவரும் தனித்துவமாக இருந்தாலும் (கப்பிதான் போல ஐலன்ட் இருக்கமுடியாது) குடும்பம் என்று வரும் போது அதிகாரம் உள்ளவரது கருத்துக்களை அனுசரித்து போக வேண்டும் இல்லாவிட்டால் குடும்பம் நடத்த முடியாது என கூறுவார்கள் . அப்படி பேச்சை மறுத்தால் ஒரு சிறிய வன்முறையின் மூலம் வழிக்கு கொண்டு வரலாம் அது போலத்தான் நாடும், இதனைத்தான் ஆதிக்கம் என கூறவருகிறேன், சில வேளை உங்களுக்கு புரிந்த விடயம் எனக்கு புரியவில்லை போல இருக்கிறது, அவ்வாறாயின் தவறு எனதுதான். நான் கூற விளைவது சட்டம் ஒழுங்கு பற்றியது நிங்கள் கூறுவது அடையாளம் பற்றியது, இரு விடயங்களும் வேறு வேறானவை, அடையாளப்பிரச்சினைக்குள் வர விரும்பவிலை.
  15. "1" என குறிப்பிடப்பட்டிருக்கும் நீர் நீல நிறத்தில் உள்ள பெட்டி கடந்த வார ஆசிய சந்தை (டோக்கியோ) நேரம் ஆகும் மறுநாள் இரு தடவையும் புதன் கிழமை இரண்டு தடவையும் திங்கள்கிழமை ஆசிய சந்தையின் உயர் விலை பகுதிக்கு விலை வரும் போது விலை மீண்டும் உயர்கிறது இறுதியாக வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விலை தொடர்ந்து விலை உயர்வடைந்து செல்கிறது, இது ஒரு வகையான அமைப்பு, இவ்வாறு நிகழ்வதற்குக்காரணம் திங்கள் ஆசிய சந்தை விலை கடந்தவாரம் Accumulation விலை வடிவில் உள்ளதே காரணம், குறித்த வாரத்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் சக்தியாக இந்த விலைப்பகுதி இருக்கும். நீர் நீல நிறத்தில் உள்ள பெட்டி ஆசிய சந்தை நேரம், சிகப்பு நிற பெட்டி அமெரிக்க சந்தை நேரம் அதற்கு இடைப்பட்ட இடம் லண்டன் சந்தை நேரம். மெல்லிய சாம்பல் நிற பெட்டி இலண்டன் நேரப்பகுதிக்குள் வருகிறது ஆனால் இது வேறு ஒரு விடயத்தினை குறிப்பதற்கானது அதனை பின்னர் கூறுகிறேன்.
  16. நான் விளையாட்டாக மேலே குறிப்பிட்ட விடயம் இந்தியா கூறுவதனை கேட்பதுதான் எமது அரசியல்வாதிகளின் அரச்சியல் என. நாம் இலங்கையராகவோ இந்தியர்களாகவோ இருக்கலாம் அல்லது குடியேறிய அந்தந்த நாட்டினை சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம் அது எமது அடையாளப்பிரச்சினை அது தனிப்பட்டவர்களின் விருப்பம், ஆனால் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள், மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதுதானே அடிப்படை. இதில் சமூக காரணிகளான பால், சாதி, இன, மத, நாடு? (வேறு ஏதாவது விடுபட்டிருக்கலாம்) வேறுபடுத்தி ஒருவரில் ஒருவர் ஆதிக்கத்தினை செலுத்தக்கூடாது, அப்படி செய்யும் போது அதனை தட்டி கேட்பதற்கு ஏதுவான நிலை (சட்டம்) இருக்க வேண்டும்.
  17. Forex factory https://www.forexfactory.com/ இந்த இணையத்தளத்தில் 3 பிராந்திய வர்த்தக நேரத்தினை காணலாம், இதில் ஆசிய சந்தைநேரம் சந்தையின் குறித்த நாளிற்கான Accumulation / distribution ஆக பார்க்கப்படுகின்றது, இது தொடர்பாக பின்னர் விரிவாக குறிப்பிடுகிறேன், தற்போது AUDJPY இனை வர்த்தகம் (Buy) செய்வதற்கான வாய்ப்புகள் (தற்போதய நிலையில்) நேற்றைய நாளின் உயர் விலை 99.860, இன்றைய ஆசிய சந்தை நேரத்தின் பின்னரே சந்தையின் போக்கினை நேற்றைய நாளின் உயர் விலை அடிப்படையில் தீர்மானிக்கலாம் 99.250(break out) இந்த விலையில் ஆசிய சந்தை நேரத்தில் சந்தை எவ்வாறு செயற்படுகிறது என்பதனடிப்படையில் வர்த்தக முடிவு எடுக்கலாம்
  18. இல்லை, தனிநாடோ அல்லது சமஸ்டியோ பற்றி நான் கூறவில்லை, ஒரு நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் இருக்கும் உரிமைகளுடன் அனைத்து மக்களும் வாழ வேன்டும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் ஜனநாயக விழுமியங்களை பேண வேண்டும். ஒருவர் மீது அடக்குமுறையினை சாதி, மத, இன என்ற அடிப்படையில் அடக்குமுறைகள் கூடாது (Discrimination). எனது கருத்தினை ஐலன்ட் தவறாகவே புரிந்து கொள்வதனால் அதனடிப்படையான கருத்தினடிப்படையில் உள்ளது உங்கள் கருத்து.
  19. இந்த பதிவில் கூறப்பட்டதனை போல Break out trade எடுப்பத்துதான் எனது நோக்கம் அதில் AUDJPY ascending triangle breakout ஆகி விட்டது, அதன் 99.250 எல்லை ஆசிய சந்தை உயர் விலையும் ஒன்றே, தற்போது விலை 99.800 அளவில் உள்ளது, விலை மீண்டும் 99.250 வரும்போது எவ்வாறு செயற்படுகிறது என்பதனை பொறுத்து வர்த்தகம் செய்யவுள்ளேன்.
  20. இல்லை சட்ட ரீதியான பாதுகாப்பினை! நான்நினைக்கிறேன் நீங்கள் தனிப்பட்ட ரீதியில் எனது கருத்தினை எடுத்துக்கொண்டுவிட்டீர்கள் என, உங்கள் கருத்தும் நல்ல கருத்துத்தான்.
  21. பெரும்பாலும் இந்த பெயரளவு சமஸ்டி என்பதால் இலங்கை அரசிற்கு பாதகத்தினை விட சாதகமே அதிகம் என நினைக்கிறேன், உதாரனமாக வட கிழக்கு சிறுபான்மை மக்களிடம் வித்க்கப்படும் வரியில் வரும் வருமானத்தினை அப்பகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசிடமே கையேந்த வேண்டியிருக்கும் (பொதுவாக) கிட்டதட்ட இப்போதுள்ள நிலமைதான் ஆனால் பெயரளவில் சமஸ்டி என்றிருக்கும். இங்கு இலங்கையிலுள்ள பிரச்சினை என்னவென்றால் என்னதான் அபிவிருத்தியினை பெரும்பான்மை பிபுலம் கொண்ட அரசின் மூலமாக பெற்றாலும் அதே அரசினால் ஒரே இரவில் நடுத்தெருவிற்கு வரவேண்டிய் நிலை ஏற்படும், உதாரணமாக 83 இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜே ஆரின் ஆசியுடன் தமிழர்கள் மேல் மேற்கொண்ட கலவரத்தில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் (மில்லியனா பில்லியனா என சரியாக நினைவில்லை) தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது, இவ்வாறு அரசினால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சட்ட ரீதியான பாதுகாப்பினை பெறமுடியாத நிலை காணப்படுகிறது. என்னைப்பொருத்தவரை இப்படி மீனை பெறுவதனை விட தூண்டிலை பெற அனைத்து பாதுகாப்பற்ற சிறுபான்மையின மக்களும் முயற்சிக்க வேண்டும், அத்துடன் உரிமைகளை (பாதுகாப்பும் சம உரிமையும்) மக்கள் இரந்து பெறும் நிலையில் ஒரு நாடு கீழிறங்குவது மிகவும் ஆபத்தான நிலைக்கு ஜனநாயகத்தினை தள்ளுகின்ற நிலையாகும்.
  22. சிகப்பு பெட்டியினால் சுட்டிக்காட்டப்பட்ட பகுதி திங்கள் (வாரத்தின் முதல் நாள்) ஆசிய சந்தை வியாபார நேரம், இதன் நேரம் டோக்கியோ சந்தை நேரம் ஆகும், ஆனால் ஆசிய சந்தை சிட்னி சந்தை நேரத்தில் ஆரம்பிக்கும் அதிலிருந்து 2 மணி நேரத்தின் பின்னர் ஆரம்பிக்கும் GMT + 12 ஆக இருக்கும் என கருதுகிறேன். இந்த வாரத்தில் இந்த சிகப்பு பெட்டியில் விலைகள் Support & resistance போல் செயற்படும், AUDJPY இனை தவிர்த்து மற்ற இரு சந்தைகளும் இந்த சிகப்பு வலயத்திற்குள்ளேயே இருக்கின்றது, AUDJPY இந்த வலயத்தினை கடந்து மேலேறி உள்ளது, தங்கமும் AUDJPY வாங்கும் உத்தேசத்தில் இருந்தாலும் இந்த வார முதல் நாள் ஆசிய சந்தைநிலவரத்தினடிப்படையிலேயே வர்த்தகம் செய்வதுண்டு, இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்னர் இணைக்கிறேன்.
  23. இந்த வாரம் இரண்டு வகையான சந்தைகளில் (நாணய சந்தை, பொருள் சந்தை - commodity) இல் மட்டும் ஈடுபட உள்ளேன், US S&P 500 தற்போது பக்கவாட்டாக நகர்கிறது இதனை Choppy market action என கூறுவார்கள், இந்த வகை சந்தைகளில் வர்த்தகம் ஈடுபடுவது இலாபகரம்ற்றது அத்துடன் இது ஒரு Accumulation or Distribution பண்பை கொண்டுள்ளது இதில் range break trade சாதகமான விளைவை ஏற்படுத்தும். AUDJPY & GOLD chart pattern breaks out trade இல் ஈடுபடுவதுதான் நோக்கம், பொதுவாக திங்கள் கிழமை ஆசிய சந்தை நிகழ்வு குறித்த வார த்திற்கான சந்தை போக்கினை தீர்மானிக்கும் என்பார்கள் அதனடிப்படையில் எனது வர்த்தகத்தினை மேற்கொள்வது வழமை, எனது முறைமையான வர்த்தக முறையினை (எனது சொந்த முறைமை அல்ல) பின்னர் விள்க்குகிறேன், அது தொடர்பான தொழினுட்ப உதவி தேவைப்படுபவர்கள் கோரினால் அதனை பதிவிட முயற்சிக்கிறேன், ஆனால் வர்த்தகத்தில் வெற்றி தோல்வி எனபதனை நிகழ்தகவினடிப்படையில் அணுக வேண்டும் என்பார்கள். அனைத்து முறைமையும் அனைவருக்கும் பொருந்துவதில்லை, இந்த உத்தியினை பயன்படுத்துவதற்கு முன்னர் இதனை back test and forward test செய்து அதன் தரவினை பயன்படுத்தி risk ruin simulator இன் அடிப்படையில் உங்கள் risk இனை தீர்மானிக்கவும் (இந்த கணிப்பில் உங்களது கணக்கு பேணப்படுவதனை உறுதி செய்த பின்) இந்த கணிப்பி இணையத்தளத்தில் பல பக்கங்களில் உள்ளது கூகிளில் தேடலாம். பொதுவாக எனது முறைமையினை கூறாமைக்கு காரனம் சுயநலம் அல்ல, இதில் உள்ள risk இனை உணராமல் மற்றவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதற்கு நான் காரணம் எனும் எண்ணத்தில்தான், ஆனால் இதனை முயற்சிப்பவர்கள் அது அவர்களது தனிப்பட்ட முடிவு மற்றும் அதனால் ஏற்படும் இலாப நட்டங்களுக்கு நானோ அல்லது யாழ் இணயமோ பொறுப்பல்ல.
  24. இஸ்லாமியர்களி இந்த தந்திரோபாயம் இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் சிறப்பாக செயல்பட்டது என்பது உண்மைதான், ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் எக்காலத்திற்கும் பொருந்தும், சிங்கள கட்சிகளை நேரடியாக ஆதரிக்காமல் அவர்க்ளை கையாளும் இந்தியாவினை கொள்கைகளை செய்வதுதான் தமிழ் அரசியல்வாதிகளின் மாஸ்ர பிளான்😁. சாமியினை (இந்தியா) நேரடியாக கும்பிடாமல் எதுக்கு ஆசாமியினை(தனித்தனி கட்சிகளை) கும்பிட வேண்டும்?😁 இந்தியா; சஜித்திற்கு ஆதரவு கொடுக்கச்சொன்னால், சஜித்திற்கு ஆதரவு கொடுப்பதை விட்டு விட்டு அஜித்திற்கு (தமிழ் பொது வேட்பாளர்/ அனுர குமார?) ஆதரவு கொடுப்பதை பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசக்கூடாது. 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.