Everything posted by vasee
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
50 புள்ளி வட்டி விகித குறைப்பு எதிர்பார்த்தவாறு 100 புள்ளிகள் அதிகரிப்பினை S&P 500 இல் ஏற்படுத்தியுள்ளது, இந்தவட்டி விகித அதிகரிப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்ட 25 புள்ளி அதிகரிப்பிற்கு பதிலாக 50 புள்ளி அதிகரிப்பு என்பது அமெரிக்க பொருளாதார மந்தநிலையினையினை குறிக்கிறது, அதனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தவிலை அதிகரிப்பு ஒரு தற்காலிகமானதாக தெரியவில்லை (எனது கருத்து மட்டும்) குறித்த நாளில் ஏற்பட்ட விலை அதிகரிப்பின் விலை தளம்பல் ஏற்படவில்லை, ஆனால் பொதுவாக இவ்வாறன நிகழ்வு வார இறுதி விலை உச்சத்துடன் வார இறுதியினை எட்டும் ஆனால் விலை தற்போது மெதுவாக இறங்குகிறது இவ்வாறு நிகழ்வது சற்று வித்தியாசமாக உள்ளது, ஆனால் Bullish flag போலொரு சந்தை அமைப்பினை ஒரு மணி நேர வரைபடத்தில் காட்சி அளிக்கிறது இந்த Bullish flag மேல் நோக்கி உடைத்தால் தற்போது உள்ள 5700 இலிருந்து 5800 வரை உயர வாய்ப்புள்ளது.
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது, ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
மொஸ்கோவிற்கு வடமேற்கே அமைந்துள்ள இரு இரஸ்சிய ஆயுத கிடங்கின் மேல் உக்கிரேன் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது, இந்த தாக்குதல் பற்றிய அறிவிப்பினை இரஸ்சியா இது வரை அறிவிக்கவில்லை என கூறப்படுகிறது (எவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டது என) அண்மையில் பின்லாந்திலிருந்து வந்த உக்கிரேன் டரோனை இரஸ்சியா சுட்டு வீழ்த்தியிருந்தது , இந்த தாக்குதல் நீண்ட தூர ஏவுகனை அல்லது பால்டிக் நேட்டோ நாடொன்றிலிருந்து உக்கிரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது, ஆயுத கிடங்கு தீப்பற்றி எரியும் காணொளிகள் இணையதில் வலம் வருகிறது.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
நீங்கள் கூறுவது சரிதான், இதனை Military logistic என கூறுவார்கள், தற்போது உலகலவில் இந்த இரண்டு நாடுகளிலே பெரியளவிலான இந்த வசதிகள் உள்ளது அதில் அமெரிக்கா முதல் இடத்திலும் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது, ஆனாலும் இந்த கட்டுமானங்கள் உறுதியாக போரின் போக்கை தீர்மானிகின்றன ஆனால் இந்த கட்டுமானத்தில் ஒப்பீட்டளவில் பாரிய வித்தியாசம் உள்ள புலிகள் அமைப்பு இலங்கை இராணுவத்தின் மிக சிறந்த கட்டுமானங்கள் கொண்ட படையினை சமாளிப்பதற்காக அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை சிறப்பாக பயன்படுத்தியமை குறிப்பிடலாம் (துருப்புகளையும் பின் கள வசதிகளையும் விரைவாக நகர்த்தும் திறன்). கேர்ஸ்க் ஊடுருவலுக்கு கூறப்பட்ட தொழினுட்பம், திட்டம் அடங்கலாக அனைத்து கட்டுமானமும் நேரடியான நேட்டோவின் மாதிரி, ஆனால் அதனை இரஸ்சியா பலவீனமாக்கிய விடயத்திலேயே எனது நேட்டோ தொடர்பான சந்தேகம் உள்ளது.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
உலகத்தின் மிக வேகமான இந்தியன் எனும் ஒரு படம் வெளியாகியிருந்தது, அது ஒரு நியுசிலாந்து நபரின் கதையினை கூறும் படம், அவர் அமெரிக்காவிற்கு கார்? பந்தயத்திற்காக செல்வார், அங்கு ஒரு காரை வாங்கி அதனை தவறான பாதையில் செலுத்துவார் அதனால் ஏற்பட இருந்த விபத்தினை ஒருவாறு தவிர்த்து விடுவார், அவர் தனது தவறுக்கு காரணம் வீதி முறைமை இரு நாடுகளிலும் வேறு வேறாக இருந்தது என கூற (நியுசிலாந்தில் இடது புற வாகன செலுத்தும் முரைமை) பக்கத்திலிருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டிலும் எந்த முறைமையிலும் வாகனம் செலுத்தலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மையத்தில் இருக்கவேண்டும் என கூறுவார். உல்கில் இராணுவத்தினரை வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் மதிப்பிடலாம்; அளவு, பாதீட்டின் செலவீட்டின் அடிப்படையில், மொத்த சனத்தொகை விகிதாசாரத்தில் என எவ்வாறு வேண்டுமானாலும் மதிப்பிடலாம். அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன். இந்த நிலை ஒவ்வொரு அடுத்த நிலை உயர்வுக்கும் அதற்கேற்ப அதன் கனரக ஆயுதங்கள் கட்டமைப்பினால் உருவாக்கப்படும் இராணுவம் அதன் பலம் தீர்மானிக்கப்படும். பெரிய இராணுவ அமைப்புக்களை கொண்ட ஒரு இராணுவத்தினை சிறிய இராணுவம் தோற்கடிக்க முடியாதா என்றால் முடியும் அதற்கு உத்தியினை காரணமாக கூறலாம், இஸ்ரேல் பலங்கொண்ட எதிரி நாடுகளை தோற்கடிக்க வான் மேலாதிக்கத்தினை பெற தாழ்வாக பறந்து எதிர்களின் இரடார் சாதனங்கலை அழித்தவுடன் எதிரிப்படையின் விமானப்படையினை அழித்து வான் மேலாதிக்கத்தினை பெற்று அதன் மூலம் 6 நாள் போரில் வெற்றி பெற்றது அதே உத்தியினை அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தியிருந்தது. நீங்கள் இணையத்தில் தேடல் செய்ததிலிருந்து வளமையான பெரும்பான்மையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளீர்கள், யதார்த்தத்தினை அறிந்து வைத்திருந்தால் பல வழிகளில் உதவியாயிருக்கும்தானே?😁
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
பெரும்பாலும் இந்த மீனவர்கள் கூலிக்கு வேலை செய்பவர்கள், இந்த தமிழக அரசியல்வாதிகள்தான் முதலாளிகளாக இருப்பார்கள், இந்த முதலாளிகள் மீன் வளங்களை அழித்து சிறிய மீனவர்களின் வாழ்வாதாரத்தினை கேள்விக்குறியாக்கியமையால் தற்போது கூலிக்கு எல்லை தாண்டி மீன் பிடித்தலில் ஈடுபட்டு இலங்கை கடல் வளத்தினை அழிக்கிறார்கள், இவர்களுடன் சேர்த்து அந்த தமிழக அரசியல்வாதி முதலாளிகளுக்கும் தண்டனை (முதலாளிக்கு அதிக தண்டனை விதித்தால் பிரச்சினை முடிவுக்கு வரலாம்) வழங்கவேண்டும்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
இந்திய இணைய ஊடகத்தில் வெளியான கணொளியும் இலங்கையர்களது கருத்துக்களும்.
-
‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’
இலங்கையர்கள் அவ்வளவு நல்லவர்களா? இனவாதம் என்றால் கிலோ என்ன விலை என இலங்கையர்கள் வினவும் நாள் வந்துவிட்டதா? கோத்தபாய பெரும்பான்மை ஆட்சிக்கு பலிக்கடாக்களாக இஸ்லாமியர்களின் மீதான இனவாதம் காரணமாக இருந்த்து, கோத்தபாய தூக்கி எறியப்பட்டதற்கான காரணம் வேறு. இலங்கையில் இனவாதம் இல்லாவிட்டால் எதனால் அதிகார பரவலாக்கத்தினை எந்த கட்சி ஆட்சி ஏறினாலும் செய்ய முடிவதில்லை, அப்படி செய்தால் இனவாதம் புரையோடிப்போயிருக்கும் இலங்கையில் அக்கட்சிக்கு இடமில்லாமல் போய் விடும். இதற்கு காலம் காலமாக நிகழ்ந்த இனக்கலவரங்கள்தான் காரணம் என நம்புகிறேன், எந்த ஒரு சிறுபான்மை இனமும் இலங்கையில் பொருளாதார உச்ச நிலை எய்தும் போது அவர்கள் தட்டி வைக்கப்படுகிறார்கள், இதற்கு இறுதி உதாரணம் இஸ்லாமியர்கள். சமூக நீதியினை ஒரே சமூகக்கண்ணோட்டத்தில் (ஒட்டு மொத்த இலங்கையர்கள்) அணுகும் பக்குவம் பெரும்பான்மை மக்களுக்கு வரவேண்டும், தற்போது சிறுபான்மை மக்கள் கோரும் அடிப்படை உரிமைகளை இனவாதமாகத்தெரிந்தால் அது சிறுபான்மையினரின் தவறல்ல, சிந்தனை மாற்றம் இன்னமும் ஏற்படாத பேரினவாததின் தவறே. தேர்தல்களால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை, மக்கள் மனங்களில்தான் மாற்றம் ஏற்படவேண்டும், ஆனால் முயற்சிப்பதில் தப்பில்லை.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
நேட்டோ நாடுகளில் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகள் முதல் 10 அதிக இராணுவம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இல்லை என நினைக்கிறேன், நேட்டோவின் ஆயுதங்கள் தரமான ஆயுதங்கள் எனும் மாயை இரஸ்சிய உக்கிரேன் மோதலினால் உடைந்து போய்விட்டது, தற்போது நேட்டோவின் பலம் தொடர்பான நாடி பிடித்து பார்க்கும் படலமாகவே இந்த நீண்ட தூர ஏவுகணைகளை உக்கிரேனுக்கு வழங்குவது எனும் முடிவாக தெரிகிறது, அதே வேளை உண்மையில் நேட்டோவும் பெரிய பலமான நிலையில் தற்போது இல்லை, அடிப்படையில் இந்த நீண்ட தூர ஏவுகணைகள் இரஸ்சிய உக்கிரேன் போரில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்போவதில்லை. உக்கிரேன் உளபிரிவுத்தளபதி புடனோவ் அண்மையில் ஒரு கருத்து தெரிவித்துள்ளார், இரஸ்சியா காற்றில் மிதந்து செல்லும் குண்டுகளை நவீன மயப்படுத்தி (மிக துல்லியமாக நீண்ட தூரம் பறந்து சென்று தாக்கவல்ல) அதன் உற்பத்தியினை துரிதப்படுத்துகிறார்கள் என, அவை ஸ்கந்தர் ஏவுகணையினை விட அதிக சேதத்தினை உக்கிரேன் துருப்புக்களுக்கு ஏற்படுத்தும் என. மேற்கின் இந்த ஏவுகணைகளை விட மலிவான அதிக எண்ணிக்கையிலான நீண்டதூர மிதக்கும் குண்டுகள் போரில் ஏற்படுத்தும் பாதிப்பில் சிறு பகுதியினைத்தான் இந்த நீண்ட தூர ஏவுகணைகள் ஏற்படுத்தக்கூடும். ஆனால், பிரிக்ஸ் அதனோடு இணைந்த பொருளாதார முன்னெடுப்பு இரஸ்சியாவிற்கும் ஏனைய பிர்க்ஸ் நாடுகளுக்கு முக்கியமாக உள்ளது அதே வேளை உக்கிரேனின் தோல்வியின் பின்னரான நிலையினை எவ்வாறு நேட்டோ எதிர் கொள்ளப்போகிறது? அவர்களது ஈகோவினை பாதிக்ககூடாது என்பதற்கான முயற்சியாக தற்போதய நடவடிக்கையினை பார்க்கிறேன். 3 ஆம் உலகப்போரல்லாம் வராது ஆனால் இதுவும் ஒரு மேற்கின் கேர்ஸ்க் ஊடுருவல் போல ஒரு ஊடக போராக இருக்கும் இதனையும் இரஸ்சியா பயன்படுத்துகிறதோ என தோன்றுகிறது.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
என்ன சண்டியராக இருந்தாலும் வீட்டில வேறமாதிரித்தான் இருக்கவேண்டும்.😁
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
சும்மா ஒரு வாதத்திற்காக கூறியது, இரஸ்சியர்கள் ட்ரம்பையோ அல்லது கமலாவையோ கண்டு கொள்வதாக தெரியவில்லை.😁
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
மற்றவர்கள் மதிகும்படி பல நல்ல நல்ல காரியங்கள் செய்வதால்.😁 பந்தி முடியிற நேரம் வந்திருக்கியல், சரி பரவாயில்லை! திரும்ப ஊர் போக கொஞ்சம் லேட்டாகும் அவ்வளவுதான்😁.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
இந்த பிரச்சினை ஒரு தொற்று வியாதி😁, அது அவர்கள் வாழும் நாட்டிலிருந்து எடுத்துக்கொண்டுள்ளார்கள் (Rule based world order), ஒரு சர்வதேச சட்டம் என்று ஒன்று இருக்கு அதனை மதித்தால்தானே, மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழி😁 (தனக்கு தேவைப்படும் போது மட்டும் தொட்டுக்கொள்வதற்கு சர்வதேச சட்டம் என்ன ஊறுகாயா?)
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இரஸ்சியா இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம்! ட்ரம்ப் அனுமானிக்க முடியாதவர், அவர் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.
-
ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்: மீட்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வேதனை
உண்மைதான்! இராணுவத்தில் நிலவரம் எப்போதும் பாதகமாக இருப்பதனாலேயே அதிக கட்டுப்பாடு கொண்ட துறையாக இருக்கிறது, வட இந்தியர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் அவர்கள் ஒரு வித்தியாசமானவர்கள்.நாங்கள் ஒரு புதிய உற்பத்தியினை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம், நான் தலைமை பொறுப்பு எடுப்பதில்லை இருந்தும் என்னை இந்த மாதிரியான சிக்கலில் மாட்டி விடுவார்கள், அப்படித்தான் அந்த உற்பத்தி முயற்சியில் வேலை செய்யும் போது என்னுடன் ஒரு வட இந்தியர் ஒரு பாகிஸ்தானியருடன் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர்களின் மத அனுட்டானங்களின் பிரகாரம் பலதடைவை வழிபட வேண்டும் அதனை உணர்ந்தமையால் அவர்கள் கழிவறைக்கு செல்வதாக கூறி ஒவ்வொரு முறையும் கூறும் போது எனக்கு அதனை பற்றி சொல்லத்தேவை இல்லை நீங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என கூறியிருந்தேன். ஒரு கட்டத்தின் பின் இருவரையும் காணவில்லை ஒரு மணித்தியாலம் ஒன்றைரை மணித்தியாலம் என நேரம் செல்ல செல்ல முழு வேலையின் அழுத்தங்களையும் நானே பார்க்க வேண்டியதாக இருந்தது (பல பரிசோதனைகள் செய்யவேண்டும்), ஆனால் அந்த இருவரையும் காணவில்லை! எமக்கு உதவியாக இருந்த இயந்திரவியலாளர் நிலமையினை உணர்ந்து எனக்கு உதவ முயன்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துவிட்டார். இந்த மாதிரியானவர்கள் இந்திய இராணுவத்தில் பயிற்சிக்காலத்திற்குக்கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள். முன்னர் 86 களில் புலிகள் அமைப்பில் இணைய விரும்புகின்றவர்களை முதலில் சென்றியில் விடுவதுண்டு பின்னர் அந்த நிலைகளின் பக்கமாக துப்பாக்கியால் சுடுவார்களாம் அதில் பெரும்பாலானோர் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்களாம், அதில் நிற்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்களாம். போர் அழுத்தம் நிறைந்த ஒன்று ஆனால் தலமை தாங்குபவர்கள் அந்த அழுத்தத்தின் தீவிரத்தினை அணி வீரர்களுக்கு கடத்தக்கூடாது என்பார்கள் அப்படி கடத்தினால் அணிவீரர்கள் மனதளவில் அழுத்ததிற்குள்ளாவார்கள் அது அவர்களை இலகுவாக சோர்வடைய செய்துவிடும், மோசமான தளபதிகள் தமது இயலாமையினை அணிவீரர்களின் மேல் இறக்கி வைத்துவிடுவார்கள்.
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
இதுதான் நல்லவனா இருந்தா பிரச்சினை, இரஸ்சியாவே பயமுறுத்துகின்ற நிலைக்கு நேட்டோவை கீழிற்க்கிய செலன்ஸ்கி, இரஸ்சியாவிற்குள்ளேயே நேட்டோ இராணுவ தளபாடங்களை கொண்டு போய் விட அதனை வைத்து அவர்கள் நேட்டோ ஏதோ ஏப்பை சாப்பை போல படம் காட்டுகிறார்கள். ஆனாலும் நேட்டோவிலும் தவறுள்ளது எந்த ஆயுதங்கொடுத்தாலும் பெரிதாக பில்லடப் கொடுத்து கொடுக்க அந்த தளவாடங்களை சோவியத் கால ஆயுதங்களால் அழித்து அதனை படம் பிடித்து இணையத்தில் போட்டு அவர்களது தொல்லைக்கு இப்ப அளவே இல்லாமல் போகிறது. எனக்கு இப்ப உண்மையிலேயே நேட்டோ பீதியில் உள்ளதா என சந்தேகமாக இருக்கிறது. இந்த அழிவினை வெளியில் இருந்து பார்ப்பதால் அதன் தீவிரம் தெரியவில்லை எங்களுக்கு, கேர்ஸ்க் ஊடுருவலுக்கெதிராக இரஸ்ஸிய படையினர் அண்மையில் ஆரம்பித்த பதில் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இடங்களில் சில உக்கிரேனிய துருப்புக்களின் இறந்த உடல்கள் 2 அல்லது 3 வாரத்திற்கு மேலான உருக்குலைந்த நிலையில் இருக்கின்றன, அப்பகுதியில் இருந்த உக்கிரேன் சக துருப்பினருக்கு அதனை அடக்கம் செய்ய முடியாத அளவு நெருக்கடி இருந்திருக்க வேண்டும். போரில் ஈடுபடுபவர்களுக்கும் அங்குள்ள மக்களுக்கும்தான் இழப்பு, நெருக்கடி, வலிகள் ஆனால் அதனை வைத்து பனம் பார்க்கும் இந்த அரசியல்வாதிகளை பாருங்கள் எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாமல் இலாப நட்டக்கணக்கு பார்க்கிறார்கள்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
இது ஒன்றும் சிக்கலான விடயம் இல்லை, அமெரிக்க தலையீடுகளில் ஒரே விதமான மாதிரி இருக்கும்; அது பணம் பார்ப்பதுதான். நீங்களே ஒரு வர்த்தகர்தான், உங்களுக்கு தெரியாததா? இலாபமில்லாமல் அமெரிக்கா ஏன் இதில் தலையிட போகிறார்கள்? அமெரிக்க அரசியல்வாதிகள் கூறும் உக்கிரேன் ஒரு சிறந்த முதலீடு என்று அதற்கு அவர்கள் கூறும் காரணி 12 ரில்லியன் பெறுமதியான தங்க சுரங்கங்கள் மேற்கு உக்கிரேனில் உள்ளது அதனை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டால் பிரச்சினை முடிந்து விடும். அதற்கு உக்கிரேனின் நிலையினை மோசமாக்கிய பின்னர் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றன் மூலம் அதனை செய்யலாம், அல்லது வேறு வகைகளில் செய்ய முயற்சிக்கலாம், அதனால் நீண்ட தூர ஏவுகணைகளை கொடுத்து மேலும் உக்கிரேனின் நிலையினை துருதமாக மோசமாக்குவதனூடாக முதலீட்டு இலாபத்தினை விரைவாக பெறமுடியும். இந்த முயற்சியில் அனைவருக்கும் இலாபம் இரஸ்சியாவிற்கு இரஸ்சியர்கள் வாழும் கிழக்கு உக்கிரேனையும், மேற்கு உக்கிரேனில் உள்ள 12 ரில்லியன் வளங்கள் அமெரிக்க மற்றும் மேற்கு கூட்டணிக்கு, உக்கிரேனுக்கு நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
SPX 500 உயர்வதற்கான ஆரம்ப அறிகுறி தெரிகிறது, வாங்குவதற்கான ஏது நிலைகளை அவதானித்து கொண்டுள்ளேன்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
இந்த போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தெரிகிறது, ஆனால் செலன்ஸ்கியின் ஒற்றை (America one way trip)😁 வழிப்பயனத்தினை பிளிங்ரன் நிறுத்தி விட்டார் போலிருக்கிறது? பிளின்ரன் கையோடு உக்கிரேன் முன்னால் தலை இராணுவ அதிகாரியினையும் அழைத்துக்கொண்டு அல்லவா உக்கிரேன் வந்துள்ளார் (செலன்ஸ்கியுடன் முரண்பட்டவர்), சிஙக்த்டினை வாலில் கட்டி கூட்டி வந்த நரி போல.😁 மறு வளமாக போலந்து தான் இன்னமும் எந்த படையினரையும் திரட்டவில்லை என தற்போது குத்துக்கரணம் அடித்துள்ளது, அப்படி எண்றால் இது நாள் வரை 160 ஆவது இயந்திரமாக்கப்பட்ட படைப்பிரிவு என அறிக்கை விட்டதெல்லாம் பொய்யா? ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது, தேரை இழுத்து தெருவில விட்டிட்டாங்கள் என்பதுதான்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
என்ன கதாசிரியர் நீங்கள், தேர்தல்களால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதனை குறிப்பிடுவதற்காகவே அந்த ஆரம்ப விபரிப்பு. பாருங்கள் அமெரிக்காவின் தலைவிதியினை; ட்ரம்ப், பைடன் ? ஏன் அமெரிக்காவில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சமா? நான் இரவு வேலை செய்த ஒரு நாள் , நீண்ட நேர வேலை மற்றும் குடும்பத்தினரை ஏற்றி இறக்கும் வேலை என அதிக நேரம் போய்விடும் ஒரு 4 மணிநேரம் நித்திரை கொண்டால் சிறந்த நாளாக இருக்கும் அப்படிப்பட்ட நாளில் எனது அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு வந்து நித்திரை கொள்ள ஆரம்பித்தேன், பக்கத்து வீட்டுக்கார முதியவர் அழைப்பு மணியினை அடித்தார், என்னவென்று விசாரிதேன் தனது மனைவி மற்றும் மகளை காணவில்லை என கூறினார், இது வழமைக்கு மாறான விடயம் என்றார் நான் அவரது மகளுக்கு அவரிடமிருந்து தொலைபேசி இலக்கத்தினை வாங்கி தொடர்பு கொண்டேன் அவர் சொன்னமாதிரி பதீல்லை. என்ன காவல்துறையிடம் புகார் செய்யப்போகிறீர்கலா என கேட்டே (ஒரு பேச்சுக்கு) அவர் ஓம் என்றார், சரி என காரில் அவரினை ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றேன். காவல்துறை அதிகாரி விசாரித்துவிட்டு முதியவரை காட்டி கூறினார் அவருக்கு மாறாட்டம் வந்துள்ளது பார் கையில் வீட்டு தொலைபேசி, ரி வி ரிமோட் என அனைத்தையும் வைத்திருக்கிறார், எனக்கு அப்போதுதான் புரிந்தது. உலக அமைதி விடயத்தில் எரியிறதை எடுத்தால் புகைவது தானாக நின்றுவிடும்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
ஏற்கனவே பதில் கூறிவிட்டேன் உங்களுக்கு விளங்கவில்லை என கருதுகிறேன்.
-
38 நாடுகளின் பயணிகளுக்கு விசா சலுகை; எங்களுக்கு இல்லையா? - பாகிஸ்தான் போர்க்கொடி
இலஙகைக்கு இந்தியாவிலிருந்து போதை பொருள் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது, அத்துடன் ஈஸ்ரர் தாக்குதலை இந்திய ரோ அமைப்புத்தான் செய்ததாக இலங்கை குற்றபுலானாய்வாலர் கூறுவதாக ஒரு அமைச்சர் கூறியதாக நினைவுள்ளது. சார்க் அமைப்பில் உள்ள ஒரு நாட்டின இலங்கை புறக்கணிப்பதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம்.
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
ட்ரம்ப், கமலா இருவரில் யாருக்கு வாகு போடுவீர்கள் என கேட்ட எனது 9 வயது குழந்தையிடம், அது அமெரிக்க் தேர்தல் அதில் நாங்கள் வாக்கு போட இயலாது என கூறினேன். உண்மையில் உலகில் உள்ள அனைவருக்கும் அமெரிக்க தேர்தலில் வாக்கு போடும் உரிமை வழங்க வேண்டும்😁, விரும்பியோ விரும்பாமலோ உலகின் தலைவிதியினை நிர்ணயிக்கும் சக்தியாக அமெரிக்கா உள்ளது, இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் அது போல ஒரு யுத்தம் தோன்றக்கூடாது எனும் நோக்கில் ஐநா போன்ற பல அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன, சில நேரத்தில் ஒப்புக்கு சப்பாணியாக (?) இந்த் அமைப்பினூடாக அனுமதியினை (திணிப்பினை) பெற்று பிற நாடுகளை ஆக்கிரமித்த அமெர்க்கா தற்போது தன்னிச்சையாக எதுவும் செய்யும் நிலைக்கு வந்துள்லது, ஒரு புறம் இந்த அமைப்புகளை தான் விரும்பும் நாடுகளுக்கெதிராக தீர்மானம் எடுத்தால் அதனை கண்டிக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது, குறிப்பாக இஸ்ரேலின் மனித உரிமை மீறல் விடயத்தில் அமெரிக்காவின் பங்கும் அதில் இஸ்ரேலினை பாதுகாக்க எடுக்கும் முயற்சியினையும் குறிப்பிடலாம். தற்போது உலகை ஒரு 3 ஆம் உலகப்போரினை நோக்கி நகர்த்தும் நிலை ஏற்படுவதற்கு காரணமான ஐ நாவின் கையறு நிலை தோன்றுவதற்கு ஒரு நாட்டின் நலன் சார் நேச நாட்டுக்கொள்கைகள் காரணமாகி விட்டது. அமெரிக்காவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தநிலையில் மாற்றம் ஏற்படது, ஆனால் அமெரிக்க ஒற்றை உலக ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக பல் துருவ உலக ஒழுங்கில் ஐநாவின் பங்கு முதன்மை படுத்தப்பட்டால் அதற்கான சூழல் உருவாகலாம்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
உங்கள் கருத்திற்கு நன்றி இந்த வகையான கருத்தாடல்களை ஆங்கிலத்தில் "Whataboutism" என அழைப்பார்கள், ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை, நல்ல மாணவன் ஆசிரியர் கூறாத விடயங்களையும் புரிந்து கொள்வான், ஏகலைவன் மாதிரி, நீங்களும் ஒரு ஏகலைவந்தான்! நான் கூற வந்த விடயம் தற்போதய போரினால் உலகம் எதிர்கொள்ளும் அபாயமும், சமாதானதிற்கான சவால்களும் அதில் தென்படும் சில சாதகமான அம்சங்களும். உங்களைப்போல உங்களிடமும் கேள்வி 1. எப்படி அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளை ஆக்கிரமிகும் போது அதனை பயங்கரவாதத்திற்கெதிரான போர் என நம்பும் உங்களால்; இரஸ்சியா உக்கிரேனை ஆக்கிரமிக்கும் போது மட்டும் ஆக்கிரமிப்பாக தெரிகிறது? 2. இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கில் இலங்கை படையினர் மேற்கொள்ளும் படுகொலைகள் இனப்படுகொலையாக தெரிந்த போது தற்போது போர் நிகழும் இரஸ்சியர்கள் வாழும் டொன்பாஸ், லுகான்ஸ் பிராந்தியத்தில் உக்கிரேனியர்களின் படுகொலை உக்கிரேனின் இறையாண்மையாகத்தெரிகிறது. நான் தனிப்பட்ட ரீதியில் உங்களுக்காக வைக்கப்பட்ட வாதம் அல்ல, இது உங்கள் நோக்கத்தினை புரிந்து கொண்டு (திரிகளை சூடாக்குவதற்கு) வைகும் பதில், அதனால் மனம் கோண வேண்டாம்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து
இரஸ்சிய உக்கிரேன் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்திய கூறுகள் குறைவாகவே இருப்பதாகவே நான் கருதுகிறேன். அமெரிக்க வெளியுறவுச்செயலர் உக்கிரேனிற்கு சென்று செலன்ஸ்கியுடன் பேச உள்ளதாகவும் அதில் இரஸ்ஸியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணைகள் பயன்பாடு தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் இரஸ்சியாவிற்கெதிரான போரினை உக்கிரேனின் இறையாண்மையினை பேன அதற்கான ஆயுத ஆளணி வசதிகள் செய்வதனை விடுத்து இரஸ்சியாவினை கோபமூட்டுவதன் மூலம் ஒரு அணுவாயுத போர் ஆபாய நாடாகக்காட்டுவதன் மூலம் எதோ ஒரு அணுகூலத்தினை பெற முயல்வது போல தோன்றுகிறது. தற்போது போலந்தினால் பயிற்றுவிக்கப்படும் உக்கிரேனிய அகதிகளை கொண்ட படையணி ஒரு இலகு காலாற்படைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது மற்றும் போலந்தின் இலகு காலாற்படைக்கான ஆயுத தளபாடங்கள் என்பன மீண்டும் ஒரு கேர்ஸ்க் போன்ற வேறு தாக்குதல்களை மனதில் வைத்து மேற்கொள்ளப்படுகிறதோ எனும் சந்தேகம் ஏற்படுகிறது. அதே போல் பிரான்ஸினால் பயிற்றுவிக்கப்படும் படையணி கனரக படைப்பிரிவாக பயிற்றுவிக்கப்பட்டு அதற்குரிய பிரான்ஸ் ஆயுதங்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது, அத்துடன் கிழக்கு உக்கிரேனில் உக்கிரேன் நிலைகள் தொடராக வீழ்ந்து வருகின்ற நிலையிலும் உக்கிரேன் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதற்கு கூறப்படும் ஒரு காரணம் உக்கிரேனிடம் 5 பிரிகேட் படையினர் தயார்நிலையில் இருக்கலாம் என கருதிகிறார்கள், இருந்தும் அவற்றினை கிழக்கு போர் முனையில் பயன்படுத்தப்படவில்லை என கருதுகிறேன். இவற்றினை எல்லாம் பார்க்கும் போது இரஸ்சியாவிற்குள் நீண்ட தூர ஏவுகணை பயன்பாடு, மற்றும் கேர்ஸ்க் போன்ற தாக்குதல்கள் வேறு முனகளினூடாக சம நேரத்தில் மேற்கொண்டு இரஸ்சியாவினை அச்சநிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதன் மூலம் ஏதேனும் இலக்குகளை அடைய மேற்கு முயற்சிக்கலாம். கேர்ஸ்க் ஊடுருவல் வாரத்தில் 2 அமெரிக்க பி - 52 விமானங்கள் இரஸ்சிய எல்லைக்குள் நுழைய முயற்சித்தாக கூறுகிறார்கள் இந்த முயற்சியின் மூலம் இரஸ்ஸிய தகவல் தொடர்பு நிலைகளை அமெரிக்க தரப்பு ஏற்கனவே அறிந்திருக்கும் என கூறுகிறார்கள், இது ஒரு அணுவாயுத தாக்குதலை இரஸ்சியாவின் மேல் நிகழ்த்துவதற்கு முக்கியமாக தேவையான தரவாக இருக்கும் என கருதுகிறார்கள். இந்த போர் 3 ஆம் உலகப்போரினை ஏற்படுத்த போவதாக கூறுகிறார்கள் ஆனால் அப்படி நிகழும் என நான் கருதவில்லை, இந்த மாதத்தின் பின்னர் உக்கிரேனிய படைப்பிரிவினருக்கான சம்பளம் கொடுப்பதற்கு நிதி கூட இல்லை என கூறுகிறார்கள் (உண்மை தன்மை தெரியவில்லை), உக்கிரேனின் நிலை மிக மோசமாகிக்கொண்டிருக்கிறது மறு வளமாக எதிர் வரும் நாள்களில் இரஸ்சியாவின் நிலையும் மோசமாகலாம் அதனால் உக்கிரேனும் இரஸ்சியாவும் சமாதானத்தினை விரும்புகின்றன ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் தட்சணை வாங்கிற பூசாரி அனுமதிக்க மாட்டார் என்பது போல அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் போரினை தொடர விரும்புகின்றன. இந்தியா முழு முயற்சியுடன் இந்த சமாதான முயற்ச்சியில் ஈடுபட்டால், உலகிற்கு நன்மை உண்டாகலாம், இந்த சமாதான முயற்சிக்கு இந்தியாவினை விட பொருத்தமான நாடு வேறு எதுவும் தற்போது இல்லை என கருதுகிறேன்.