Everything posted by vasee
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
2018 இல் 3.00 ஆரம்பித்து பின்னர் அடிப்படை support 0.28 விலையில் பயணம் செய்து பின்னர் கிரிப்டோக்களின் அதீத வளர்ச்சிக்காலமான கோவிட் காலகட்டத்தில்(2021 ஆரம்ப காலத்தில்) 1.60 எட்டியுள்ளது. பின்னர் மீண்டும் 0.28 support வரை கீழிறங்கி (0.30) தற்போதுள்ள நிலையில் உள்ளது. இதனை தொழினுட்ப ஆய்வடிப்படையில் தெளிவாக கூறுவதாயின் கோவிட் காலத்திலிருந்த விலையின் இறங்குமுகத்தின் தொடர்ச்சி இன்னமும் மாறவில்லை. HH = higher high (Uptrend) HL = higher low (Uptrend) LH = Lower high (Downtrend) LL = Lower low (Downtrend) கோவிட் காலத்திலிருந்து தற்போது வரை Downtrend இலேயே உள்ளது, கடைசி Lower high 0.73, ஆனால் விலை 0.30 இற்கும் 0.52 இடையில் விலை ranging எனும் நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இந்த ஆண்டு நடுப்பகுதி வரை சென்றுள்ளது. இதனை Accumulation என கூறுவார்கள் இந்த ஆண்டு ஜூலை பகுதியில் ஏற்பட்ட 0.73 விகித அதிகரிப்பு மேலே உள்ள வரைபடத்தில் உள்ள Low volume sell off ஆகும் தற்போதுள்ள விலை நிலையினை Jump the creek இணையாக கூறலாம். அடுத்து நிகழ உள்ளது Mark up விலை 0.73 கடக்கும் போது speculators இணைந்து கொள்வார்கள், அதன்பின் விலை சடுதியாக அதிகரிக்கும். இவ்வாறுதான் நிகழும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை ஆனால் அதற்கான வாய்புகள் அதிகம். The three skills of top trading இந்த புத்தகத்தினை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( கிட்டதட்ட 100 அவுஸ்ரேலிய காசளவில் வாங்கலாம்) இது ஒரு தத்துவார்த்தமான புத்தகம் மட்டுமே. ஆரம்பத்தில் அவசரமாக எழுதியதால் சரியாக வரைபடத்தினை அவதானிக்கவில்லை. தற்போது 3.00 அதிகபட்ச விலையாக உள்ளது அந்த விலையினை மீறினால் ஒப்பீட்டளவில் நல்ல எதிர்காலம் என கூறலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தெரியவில்லை, தற்போது மேலோட்டமாக வரைபடத்தினை பார்த்தேன், தற்போதய uptrend line இலிருந்து விலை கீழிறங்கியுள்ளது, இதனை மட்டும் கருத்தில் கொண்டு விலை வீழ்ச்சியடையும் என கூற முடியாது விலை 0.45 விட்டு கீழிறங்கும் போது downtrend (Market structure) ஆரம்பமாகும். தற்போதுள்ள நிலையில் 0.58 resistance, 0.45 support நீண்டகால கணிப்பீடல்ல இது technical analysis அடிப்படையில் கூறப்பட்டது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
intrinsic value என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தொடர்ந்து எழுதுங்கள், நீங்கள் கூறிய அந்த 4% அதிகரிப்பு விலை ஒரு தற்காலிக அதிகரிப்பாகவே இருக்கும், பின்னர் விலை பழைய விலையினை விட குறைவதற்கும் வாய்ப்புள்ளது (பொதுவான நடைமுறை). பெரிய நிதிநிறுவனங்கள் தமது கையிருப்பிலுள்ள பங்குகளை விலை குறையாமல் விற்பதற்கு இந்த நல்ல செய்திகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. Buying climax இந்த வரைபடத்தில் விலை மாற்றத்தினை குறிக்கும் Candle ( open price, high price, low price, close price ஆகிய 4 தரவுகலை கொண்ட), Candle நீளம் சிறிதாக இருக்கும் ( குறைந்த அளவு விலை மாற்றம்) ஆனால் கைமாறிய எண்ணிக்கை அதிகமாக இருக்கும் (Volume).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தொடர்ந்து எழுதுங்கள், கோவிட் காலத்தில் உலக நாடுகள் பெரியளவில் quantitative easing ஈடுபட்டமையால் சந்தையில் நிரம்பி வழிந்த காசில் பல முதலீடுகள் asset inflation உருவாக்கி விட்டிருந்திருந்தது, எதில் முதலிட்டாலும் இலாபம் எனும் நிலை உருவாகி அதனால் கிறிப்டோக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு போல அடுத்த ஒரு வருடத்திற்கு நிகழாது எனவே தோன்றுகிறது. அவுஸ்ரேலியா தனது முதலாவது வட்டி விகித குறைப்பினை எதிர்வரும் ஆண்டு ஆவணி மாதமளவில் ஏற்படுத்தும் என கருதுகிறார்கள், ஆனால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது, அத்துடன் தற்போது மேற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுருக்கம் உழைப்பாளர்களின் ஒரு அலகு உறபத்திக்கான செலவினை அதிகரித்துள்ளது, இது பல நிறுவனந்கள் வேலை நீக்க அதிகரிப்பினை தூண்டும் என கூறப்படுகிறது. இந்த QE மற்றும் QT பயன்படுத்தும் பணமுறி வாங்கல் விற்றல் நடவடிக்கையால் நாடுகளின் மத்திய வங்கிகள் பெரும் இழப்பினை சந்திப்பதாக கூறுகிறார்கள், இது போல 1916 இல் நிகழ்ந்ததாக கூறுகிறார்கள், அதன் தொடர்ச்சியாக பெரும் பொருளாதார பேரிடர் ஏற்பட்டது (இவ்வாறு நிகழும் என எந்த பொருளியல் நிபுணர்களும் இது வரை கூறவில்லை அதனால் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பில்லை). இவற்றினை பார்க்கும் போது தற்போது நிகழும் அரசியல் பூகோள சூழ்நிலைகள் மாறாவிட்டால், புதிய முதலீடுகள் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பல விடயங்கள் மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப நிகழ்வதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனை மாற்றமில்லை, சிங்களவர்களின் சிந்தனை அப்போதிருந்தது போலவே இப்போதும் இருப்பதாக தோன்றுகிறது, ஆனால் சிங்களவர்கள் மட்டுமல்ல அனைத்து மனிதர்களின் இயல்பு அது அதனால்தான் நிதிச்சந்தையில் Technical analysis நிகழ்வதற்கான வாய்ப்பு உருவாகிறது என கூறுகிறார்கள், கொள்கைகள் 18 வருட சுழற்சியில் இயங்குவதாக கூறுகிறார்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இரஸ்சிய நாணய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த இரஸ்சிய நிதியமைச்சரின் கருத்தான "இரஸ்சியா தங்கம் மற்றும் வேறு நாட்டு நாணயங்களை மீண்டும் வாங்க உள்ளது" எனும் அறிவிப்பாகும். உக்கிரேன் யுத்தத்தின் பின் இரஸ்சிய பொருளாதாரம், பொருளாதாரத்தடையாலும் போரினால் ஏற்படுகின்ற செலவினாலும் மிகவும் பாதிப்படைந்தமையால் தற்காலிகமாக வேறுநாட்டு தங்கம் மற்றும் நாணயங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தது மட்டுமின்றி தனது இருப்புகளை விற்றிருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் ஓய்வூதிய நிதியத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது, போரினால் ஏற்பட்ட அதிகரித்த செலவினை ஈடுகட்ட இரஸ்சிய அரசு ஓய்வூதிய நிதியினை(NWF) பாவித்ததாக கூறுகிறார்கள். இரஸ்சிய நிதியமைச்சரின் கருத்து வெளியானபோது இரஸ்சியா தனது நாணயத்தின் பெறுமதியினை திட்டமிட்ட முறையில் வலுவிழக்க முயற்சிக்கிறதா எனும் எண்ணம் ஏற்பட்டது(Dirty float). காரணம் ஒபெக் மற்றும் ஒபெக் + நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியினை குறைப்பதாக அறிவித்தன அது உலக பொருளாதாரம் சமகால நிகழ்வுகளால் ஏற்படும் பொருளாதார சரிவினால் எரிபொருள் உற்பத்தியாளர் நட்டமடையாமல் காப்பதற்காக (அடிப்படை உற்பத்தி செலவு) என கூறப்பட்டாலும் கிட்டதட்ட நாளொன்றிற்கு 5% உற்பத்திகுறைப்பினை மேற்கொள்ள உத்தேசித்துள்ளன ஆனால் உலக பொருளாதார சுருக்கம் 2-3 விகித அளவிலேயே ஏற்படும் என கருதுகிறார்கள். உற்பத்தியினளவினை தேவைக்கு அதிகமாக குறைக்கும் போது ஏற்படும் தட்டு பாட்டால் எரிபொருள் விலை அதிகரிக்கும். ஆகவே இது ஒரு சந்தை ஏகபோக(Monopoly) நடவடிக்கையாகவே கருத இடமுண்டு. இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் ரூபிளின் பெறுமதி அதிகரிப்பினை தடுப்பதற்காகவே நிதியமைச்சினால் தனது சொத்து இருப்பு அதிகரிப்பிற்காக தங்கம் மற்றும் வேறு நாட்டு நாணயத்தினை வாங்கும் அறிவிப்பு ஏற்படுத்தப்பட்டதோ என கருதினேன். நாணயத்தின் பெறுமதியினடிபடையில்(Purchasing Power Parity) இந்தியாவிற்கு அடுத்த நிலையில் 5ஆவது நிலையில் இரஸ்சிய பொருளாதாரம் உள்ளதாக கூறுகிறார்கள். நாணயத்தின் உண்மையான பெறுமதியினை கணிப்பதற்கு முதலீட்டாளர் பாவிக்கும் கருவிPurchasing Power Parity https://www.statista.com/statistics/274326/big-mac-index-global-prices-for-a-big-mac/ பிக் மக் இன்டெக்கில் இரஸ்சியா இல்லை, இரஸ்சியாவில் மக்டொனால்ட் தற்போது இல்லை என கருதுகிறேன் ஆனால் கூடை பொருள்களினடிப்படையில் கணிக்கப்படும் கணிப்பு மிகவும் நம்பகமான நடைமுறை என கருதப்படுகிறது. ஆனால் 1.ஏற்றுமதி இறக்குமதி நிலுவை: இரஸ்சியாவின் ஏற்றுமதினளவினை விட இறக்குமதி அதிகம் அதனால் நாணய பெறுமதி குறைவாகவே இருக்கும். 2.அதிகரித்த வட்டி விகிதம் இரஸ்சிய பணமுறி கிட்டத்தட்ட 11.72%(Yield) இந்த நிலை பணவிக்கத்தினை உருவாக்கும் இதனால் பணத்தின் பெறுமதி குறையும். 3.தொடரும் போர் எந்த ஒரு பொருளாதாரமும் போரினால் பதிப்படையும் இந்த நிலையில் தொடருகின்ற போர் இரஸ்சிய நாணயத்திற்கு உவப்பானதல்ல. 4.பாதீட்டு பற்றாக்குறை போர் மற்றும் பொருளாதார தடையினால் இரஸ்சியாவினது செலவுகள் அதிகரித்தமையால் ஏற்படும் பாதீட்டு பற்றாக்குறை பணத்தின் பெறுமதி குறையும். இந்த காரணிகள் ரூபிளிற்கு பாதகமான விடயங்கள் (மேற்கு ஊடகங்களில் வந்த செய்திகளினடிப்படையில்) மேலோட்டமாக இந்த தரவுகளினடிப்படையில் பார்க்கும் போது ரூபிளில் முதலிடுவது சாதகம் அற்றது என கருதுகிறேன் (தவறான கருத்தாக இருக்கலாம்). ஆனால் முதலீட்டாளர்கள் பல தரவுகளினடிப்படையில் செயல்படுவதால் சந்தை நடவடிக்கையினை(Price action) அவாதனித்து முதலிடுவது பாதுகாப்பானது என கருதுகிறேன். எரிபொருளில் முதலிடுவது தற்போதய பூகோள அரசியல் நிலவரங்களின்டைப்படையில் சாதகமாக தோன்றுகிறது(என்ணெய் உற்பத்தி குறைப்பு, மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய நிலவரங்கள்) (தவறான கருத்தாக இருக்கலாம்).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தற்போது AUDJPY இல் மட்டும் வர்த்தகம் செய்வதால் கவனிக்கவில்லை(Prop trading). தங்கத்தில் பல பூகோள நிகழ்வுகள் தாக்கத்தினை செலுத்தபோகிறது.. அமெரிக்க பண்முறிகளை இங்கிலாந்து உள்ளடங்கலாக விற்க ஆரம்பித்து விட்டன. அதிகளவில் அமெரிக்க பணமுறிகளை கொண்ட ஜப்பான் நாட்டு நாணயத்தினை முதலீட்டாளர்கள் விற்பதனை நிறுத்தியுள்ளார்கள். பிட்சினால் அமெரிக்காவினது AAA இலிருந்து AA+ குறைத்குள்ளது. இது தொடர்பான வ்ரிவான கருத்தினை எதிர்வரும் வாரம் பதிவிடுகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
XRP இல் உங்களுக்கு இலாபம் கிடைத்துள்ளது, நல்ல விடயம் தொடர்ந்து எழுதுங்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
அமெரிக்க கடன் உச்ச எல்லை நீட்டிக்கப்பட்டதை அடுத்து 1 ரில்லியன் பெறுமதியான பணமுறியினை அமெரிக்க கருவூலம் வெளியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஜெனட் ஜெலன் அமெரிக்கா நாணயம் உலக சேமிப்பு நாணயநிலையில் சரிவு ஏற்படலாம் என கூறியுள்ள நிலையில் (8% சரிவு 2022 இல் ஏற்பட்டுள்ளது), அமெரிக்காவினது பொருளாதார தடை அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட 1 ரில்லியன் பெறுமதியான (859 பில்லியன் ஏறத்தாழ) பணமுறிகளை சீனா சந்தையில் விற்கமுற்படலாம் எனும் அச்சத்தில் முதலீட்டாளர்கள் உள்ளார்கள். வட்டி விகித அதிகரிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது, முதலீட்டினை பொறுத்தவரை முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளின் ஆபத்தான முதலீடுகளை தவிர்க்க முதலீடுகளை பன்முகப்படுத்த வேண்டும் என கருத்து நிலவுகிறது, சில நிதி நிறுவனங்கள் தமது முதலீட்டினை பொதுமக்கள் வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக கூறுகிறார்கள், இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி அமெரிக்காவில் உள்ள யாழ்கள உறவுகள் கூறவேண்டும். பிரிட்ஜ் வோட்டர் நிதிநிறுவனத்தின் முகாமையாளர் அமெரிக்காவின் சில வறுமையான பகுதிகளில் உயர்நிலை பள்ளிகளில் இருந்து விலகுவோர் எண்ணிக்கை 22% ஆக அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார், அத்துடன் அங்குள்ள குழந்தைகளின் போசாக்குநிலையினையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்? (கெனடிக் அல்லது கனடிக் என கூறியதாக நினைவுள்ளது) இது உண்மையான நிலவரமா? அல்லது மிகைப்படுத்தப்படுகிறதா என அமெரிக்காவில் வாழும் யாழ்கள உறவுகள் உறுதிப்படுத்த வேண்டும். முதலீட்டினை பொறுத்தவரை உகப்பான காலம் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து தவறாக இருக்கலாம், அத்துடன் இது ஒரு பொருளாதார நிதி அறிவுரை அல்ல.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
ஒரு உதாரணத்திற்காகவே அவுஸ்ரேலிய உள்நாட்டு பொருளாதாரத்தினை மேலே குறிப்பிடப்பட்டது, ஆனால் அனைத்து நாடுகளும் தற்போது இதே பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றன அதற்கு காரணம் Spillover effect என பொருளாதாரத்தில் வரையறுத்துள்ளார்கள், உலக மயமாதலின் பக்க விளைவு எனவும் கூறுவர். ஒரு குறிப்பிட்ட நாடு உலகத்தில் உள்ள விடுதலை அமைப்புகள் உள்ளடங்கலாக உள்ள அமைப்புகளை தனது சுய இலாபத்தினடிப்படையில் பயங்கரவாத நாடு, பயங்கரவாத அமைப்பு என வரையறுக்கின்றது. அந்த குறிப்பிட்ட நாட்டினை பொருளியலாளர் பொருளாதார பயங்கரவாதி என செல்லமாக அழைக்கிறார்கள், குறிப்பாக உலகில் பொருளாதார ரீதியில் ஏற்படும் அழிவுகளுக்கு காரணமாக பெரும்பாலும் இருந்து வந்ததனாலேயே அவ்வாறு அழைக்கிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள போரினால் எதிர்பாராவிதமாக எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கத்தினை விட அதிக அளவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சியினால் பண திர்வத்தன்மையில் நெருக்கடி உருவாகிறது என பொருளியலாளர்கள் பலர் அபாய குரலெழுப்புகிறார்கள், ஆனால் எவ்வாறு கோவிட் காலத்தில் எடுத்த கடும் முடிவு போலவே (பொருளாதார தூண்டல்) தற்போது அதனை கட்டுப்படுத்துவதில்(பணவீக்கம்) ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் அதனால் ஏற்பட போகும் பக்க விளைவை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. அல்லது அதனை வேண்டும் என அலட்சியபடுத்துகிறார்களா என தெரியவில்லை, 1930 இல் உலகில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் தோற்றம் பெற்ற உலகமயமாதல் அதே போன்றதோர் நெருக்கடியுடன் முடிவுக்கு வருமோ எனும் ஒரு அச்ச நிலை உருவாகியுள்ளது. தற்போது பல நாடுகளின் பொருளாதாரம் சரிவடைந்து செல்கிறது, அவுஸ்ரேலியாவில் இந்த காலாண்டிற்கான எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 0.50% பதிலாக 0.20% எனும் நிலையினை அடைந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகள் எதிர்மறை வளர்ச்சி வீதம் ஏற்பட்டால் அதனை பொருளாதார சரிவு என அழைக்கிறார்கள், வருமான வளர்ச்சியினை விட பணவீக்க அதிகரிப்பு அதிகமாக உள்ளது, இதனைதான் களுதை தேந்து கட்டெறும்பாவது என கூறுகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் வங்கியில் பெற்றுள்ள வீட்டுக்கடனின் பெறுமதியினை விட வீட்டின் விலை குறைவடையும் போது நிலமை மோசமாகிவிடும் வீட்டிற்கான கட்டணம் செலுத்துவதில் சிரமம் காணப்படும் நிலையில் வீட்டினை விற்கவும் முடியாது எனும் நிலை ஏற்படலாம். வீட்டினை விற்றாலும் வங்கிக்கு கடனாக பணம் செலுத்தும் நிலையில் இருப்பார்கள் இதனால் பலர் வங்குரோத்தாகும் நிலை ஏற்படலாம். ஆனால் தற்போது அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை https://www.corelogic.com.au/news-research/news/2023/corelogic-home-value-index-further-evidence-australias-housing-downturn-is-over தொடர்ச்சியாக கடந்த ஆண்டில் வீட்டின் விலை சரிந்திருந்தது ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விலைகள் சிறிதளவு ஏற்றம் காணப்படுகிறதாக கூறுகிறது இந்த ஆய்வு. ஆனால் பல மாறா வட்டி வீட்டுக்கடன் இந்த ஆண்டு நடுப்பகுதியில் மாற்றம் ஏற்படும் வட்டிக்கு வரவுள்ளது (இந்த மாதத்தில்) அதனால் எதிர்வரும் மாதங்களில்தான் உண்மை நிலவரம் தெரியவரும். போர் தொடரும் நிலையில் நிலமை மேலும் மோசமாகவே வாய்ப்புள்ளது,இது அச்சுறுத்துவதற்கான பதிவல்ல ஆனால் இது தொடர்பான முன் தெளிவு அவசியமாவதாக கருதுகிறேன், உலகின் பல்வேறு பாகக்களில் வாழும் யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துகளை முடிந்தால் கூறவும். இது ஒரு பொருளாதார அறிவுரை அல்ல.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இல்லை, அவர் மாறமாட்டார் எனவே கருதுகிறேன். கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வழங்கிய ஆயுதம், இரஸ்சியாவின் கண்ணிவெடிகளில் இரஸ்சிய இராணுவம் சிக்குவதாக கூறிய இரஸ்சிய அறிக்கையினை வைத்து தானாகவே ஒரு செய்தியினை தயாரித்துள்ளது போல தெரிகிறது, இந்த செய்தியினை எந்த தரப்பும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என கருதுகிறேன். நாங்கள் அணிந்து கொண்டிருக்கும் நிறக்கண்ணாடியூடாக பார்த்தால் அந்த காட்சிகள் அந்த குறிப்பிட்ட நிறத்திலே தெரியும் அதனைதான் Biased என கூறுகிறார்கள். உங்கள் நகைசுவை புரிகிறது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கடந்த வாரத்திற்கு முந்தய வாரத்தில் ஒருவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எடுத்தவுடனேயே கோபத்துடன் கூறினார் நீங்கள் கூறினீர்கள் 2025 வரை வட்டி விகிதம் அதிகரிக்காது என ஆனால் தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கிறது, வீட்டு கடன் கட்டுவதில் சிரமாக உள்ளதாகக்கூறினார். ஆம் அவர் எனது அபிப்பிராயத்தினை கேட்டிருந்தார் அது கோவிட் கட்டுபாடுகள் முடிவடைந்த கால கட்டம், அவர் என்னிடம் கேட்ட கேள்வி வட்டி விகிதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அவுஸ்ரேலிய அரசுகளும் வங்கிகளும் வட்டி விகித அதிக்ரிப்பு 2025 பின்னரே ஏற்படும் என கூறுகின்றன ஆனால் எனக்கு தெரியாது ஏனவே கூறியிருந்தேன், அத்துடன் கோவிட் பொருளாதார தூண்டலின் காரணமாக பணவீக்கம் ஏற்படும் என நான் கருதுவதாக கூறினேன் எனது கருத்து தவறாக இருக்கலாம் என கூறியிருந்தது எனது நினைவில் இருந்தது. அவர் Fixed / variable வீட்டு கடன் தொடர்பாக ஆர்வம் காட்டுவதாக் காண்பித்தார், அதனால் நானும் அது தொடர்பாக எந்த அறிவுரையும் கூறவில்லை. ஆனால் அவர் தனது வீட்டை விற்று அதனைவிட ஒரு பெரிய வீட்டினை வாங்கியிருந்தார் தற்போது வீட்டுக்கடன் மிக பெரியளவில் ஏற்பட்டு விட்டது வட்டி விகித அதிகரிப்பினால் அவ்ர் நிலை மோசமாக உள்ளது. பின்னர் என்னிடம் மீண்டும் எனது கருத்தினை கேட்டார் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதா என, இந்த முரை தெளிவாக இல்லை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என கூறிவிட்டு வந்துவிட்டேன். கடந்த வாரம் வட்டி விகிதம் அதிகரிக்கப்படாது என அனைவரும் எதிர்பார்க்க மத்திய வங்கி 25 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மே மாத இறுதியில் எதிர்பார்க்கப்பட நுகர்வோர் விலைசுட்டெண் 0.40 அதிகரித்திருந்ததே இதற்கு காரணம் ஆனால் மக்கள் அதனை கவனிக்க தவறியிருந்தார்கள். அதில் வீட்டு விலை, உணவு, போக்குவரத்து அந்த விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது. இந்த மாத நடுப்பகுதியில் முக்கிய 4 வங்கிகளும் இந்த வட்டி விகித அதிகரிப்பினை அமுல்படுத்தவுள்ளது. consumer confident, China PMI என்பன சரிவு ஏற்பட்டாலும் பணவீக்கம் குறைவதாக இல்லை அதற்கு காரணம் பெற்றோலிய பொருளின் விலையேற்றம் போக்குவரத்து உணவுப்பொருலின் விலையில் நேரடித்தாக்கம் ஏற்படுத்துகிறது. China PMI சுட்டெண் சரிவினால் மூலப்பொருளின் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் அவஸ்ரேலியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளிவரும் நிகர்வோர் விலைசுட்டெண்ணும், இந்த வாரத்தில் வெளிவரவுள்ள வேலையின்மை தரவுகளும் எதிர்கால வட்டி விகிதத்தினை தீர்மானிக்கும் சக்தியாகவுள்ளது, இந்த இரண்டு விடயங்களும் கடந்த மாதத்தில் அதிகரித்து வருவது கலைக்குரிய அம்சமாகவுள்ளது. வேலைகளை தக்க வைத்தல் அத்துடன் பக்க வருவாயினை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும், இது எல்லோருக்கும் ஒரு கடினமான காலமாக உள்ளது. தேவையற்ற ஆடம்பர போலி கவுரத்திற்கான செலவுகளை குறைத்தல், தேவையற்ற பெரிய கடனை சுமப்பதால் குடும்பத்தில் நிம்மதி இழப்பு, அதிகரித்த வேலையினால் முக்கியமான் குடும்ப நேர இழப்பு ஏற்படும்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இரஸ்சிய ஊடகங்களில் வெளியான பென்டகன் குண்டு வெடிப்பு புரளியால் பங்கு சந்தை பாதிப்பு, AI துணைகொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களை யாழில் தடை செய்யப்பட்ட RT போன்ற ஊடகங்கள் காவி வந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த RT ஊடக்த்தினை யாழில் தடை செய்யப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரித்தவர்களில் நானும் ஒருவன். தற்போது யாழின் முடிவு சரியானதுதான் என்பதை காலம் உணர்த்தியுள்ளது. https://nypost.com/2023/05/22/ai-generated-photo-of-fake-pentagon-explosion-sparks-brief-stock-selloff/- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சாகவச்சேர் காவல்நிலைய தாக்குதல் தொடர்பாக பசீர் காக்கா எழுதிய ஆக்கம் முன்னர் படித்திருப்பேன் என கருதுகிறேன், அதில் உள்ள தகவல் அனைத்தும் மறந்துவிட்டேன், அதில் குறிப்பாக ஒரு விடயம் மட்டும் நினைவில் உள்ளது, காவல்நிலையத்தில் இருந்த தொலைபேசி இணப்பை துண்டிக்க ஒரு கொழுவி ஒன்றில் ஈனைக்கப்பட்ட கயிற்றின் மூலம் முயற்சிப்பார் ஆனால் அவரால் அதனை அறுக்க முடியவில்லை எனவும் (தான் அப்போது ஒல்லியாக இருந்தமையால் முடியவில்லை என நகைசுவையாக குறிப்பிட்டிருந்தார்) வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவரின் துணையுடன் பின்னர் அதனை செய்து முடித்தாக நினைவுள்ளது.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
2 வாரங்களுக்கு ஒரு முறை உங்களது பங்கு இலாபத்தினை நிறுவனம் வளங்குகிறது, அதனை DEEL எனும் நிறுவனத்தினூடாக வளங்குகிறது, டீல் நிறுவனத்திற்கு உங்களது அடையால உருதிப்படுத்தல் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் விரும்ம்பும் மார்க்கம் மூலமாக உங்கள் பணத்தினை பெறலாம், Bank transfer Support 180+ currencies Revolut Only available in USD PayPal Only available in USD Wise Instant and supports 7+ currencies Payoneer Only available in USD Coinbase Supports 5 cryptocurrencies Binance International Only available in BUSD முதலில் பணத்தினை பெறுவதற்கான ஆணையினை நிறுவனத்திற்கு வழங்கியபின் 24 மனித்தியாலத்திற்குள் டீல் நிறுவனத்தினிடமிருந்து உங்களது பணம் தயாராக உள்ளது எனும் தகவல் வழங்கும் அந்த தகவல் கிடைத்தவுடன் உங்கள் வங்கிக்கணக்கிற்கோ அல்லது நீங்கள் விரும்பும் மேலே குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒரு முறையில் உங்கள் பணத்தினை பெற்றுகொள்ளலாம்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எச்சரிக்கை! எந்தவித அரசியல் பின்புலமுமற்ற(Non - Biased) பார்வையாளர்களுக்கு மட்டும். இந்த காணொளியில் அமெரிக்க வங்கிகளின் நிலையினையும் அதனை மூடி மறைக்க முற்படும் அரசியல்வாதிகளை நகைச்சுவையாக கூறுவதால் சில பார்வையாளர்களை பாதிக்கக்கூடும்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கட்டணம் 235 யுரோ செலுத்தியுள்ளேன், தவறுதலாக 180 அமெரிக்க டொலர் என குறிப்பிட்டுள்ளேன், யாழ் கள உறவுகள் இந்த மாதிரியான நிதிநிறுவனங்களின் தகுதிகாண் போட்டியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியாயின் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Proprietary trading firms பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன், இவை தமது காசினை உங்களுக்கு தற்காலிகமாக வழ்ங்குவார்கள் உங்களது வர்த்தகத்திற்காக பின்னர் அதில் ஏற்படும் வருமானத்தில் ஒரு பகுதியினை எடுத்து கொண்டு மிகுதியினை உங்களுக்கு இலாபமாக கொடுப்பார்கள், முன்னர் அவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் வேலைக்கமர்த்தி பயிற்சி கொடுத்து வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள். தற்போது இணையத்தில் பல நிறுவனங்கள் இணையத்தினூடாக இந்த வேலையினை வழங்குகின்றார்கள். அவர்களுடைய பணநிர்வாகத்தினடிப்படையில் வர்த்தக மாதிரி போட்டியில் ஈடுபட்டு உங்களது இயலுமையினை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு தமது நிதியினை வர்த்தகம் செய்வதற்காக வழங்குவார்கள். ஆரம்பத்தில் உங்கள் இயலுமையினை தெரிவிக்கும் தகுதிகாண் போட்டிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பல போட்டியாளர்கள் ஆர்வமாக கலந்து கொள்வதால் ஒரு நிறுவனம் ஒரு போட்டி மாதிரியினை உருவாக்கி ஆண்டு ஒன்றிற்கு அதில் வேலை செய்யும் வேலையாளர்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் பணத்தினை வழங்கியுள்ளது, ஆனால் அதே நிறுவனம் இவ்வாறு போட்டியில் கலந்து தோற்று போவர்களிடம் இருந்து பெறும் பணமாக 220 மில்லியனுக்கு மேலாக குறித்த ஆண்டில் பெற்றது அந்த நிறுவனம். முழு நேர வேலையாக நிதிச்சந்தை வர்த்தகத்தினை ஈடுபட விரும்புவர்கள் சரியான புரிதல் இல்லாமையால் தமது பணத்தினை தகுதி காண் போட்டியில் இழக்கிறார்கள் என்பதால் ஆரம்பத்தில் பல நிறுவனங்கள் புதிது புதிதாக ஆரம்பிக்கப்பட்டன, அதில் சில வெறுமனே ஏமாற்று நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டன அவை காணமல் போயும் உள்ளன. ஒரு சில நிறுவனங்கள் உண்மையாக இருக்கலாம், அப்படி உண்மையான நிறுவனமாக இருக்கும் என நான் கருதும் ஒரு நிறுவனத்தில் மிக சிறிய கணக்கு ஒன்றிற்காக 180 அமெரிக்க டொலர் போட்டி கட்ட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து அதில் தேர்வு பெற்றுள்ளேன். இந்த நிறுவனத்தில் பொருளாதார முக்கியத்துவம் உள்ள செய்திகள் வரும்போது உங்கள் வர்த்தகம் மூடப்படாமல் இருந்தாலும் உங்கள் ஒப்பந்தம் முறிக்கப்படாது, வார இறுதியிலும் உங்கள் வர்த்தகத்தினை மூட வேண்டும் எனும் விதிமுறை இல்லை என்பதால் எனது வகை வர்த்தகத்திற்கு ஏற்ற மாதிரியுள்ளது, ஆனால் பங்கு பிரிப்பு மட்டும் 50/50 எனும் அடிப்படையில் பாதகமாக உள்ளது ஆனால் இது ஒரு உண்மையான நிறுவனம் என நான் கருதுவதால் இந்த நிறுவனத்தில் இணைந்துள்ளேன். பகுதிநேர வேலையாக இணைந்துள்ளேன். ஒவ்வொரு 10% அதிகரிப்பினை கணக்கில் ஏற்படுத்தும் போது அந்த கணக்கினை இரட்டிப்பாக்குவார்கள்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
வேறு ஒரு திரியில் இதனை பற்றி குறிப்பிடும்போது இது மன்னாரில் என தவறாக குறிப்பிட்டுள்ளேன், இந்த கட்டுரையில் புத்தளத்தில் என்பதனை பார்க்கும் போது தவறினை உணருகிறேன்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பொதுவாக மேலைநாடுகளில் வலதுசாரி ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் ஊடகங்கள் போலவே இலங்கையிலும் இருந்துள்ளது ஊடகங்கள்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
உண்மையில் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது இந்த முயற்சிக்காக ஏற்படும் நேரவிரயம், சிலநேரங்களில் சங்கடமாக உணர்வதுண்டு மற்றவர்களின் நேரத்தினை நாங்கள் உப்யோகிக்கிறோம் ஆனால் பதிலுபகாரமாக எதுவும் செய்யாமலே என்பதால், அதே வேளை எங்கே பாதியில் நிறுத்திவிடுவீர்களே என்ற ஒரு பயமும் உள்ளது, பாதியில் நிறுத்தினாலும் அதனை புரிந்து கொள்வோம்.- பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
எனது மைத்துனர் ஒருவர் இங்கு வைத்தியராக வேலை செய்கிறார் அவர் இரண்டு தொழில்கள், பல வீடுகள் என முதலிட்டுள்ளார், அவர் தனது நிதி ஆலோசகரை ஒன்றுக்கும் உதாவாதவர் என கூறுவார், காசினை வாங்கிவிட்டு பெரிதாக எந்த ஆலோசனையும் வழங்குவதில்லை என கூறுவார். அதன் உண்மைதன்மை தெரியாது, உங்களது முதலீடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நிதி ஆலோசகர் தேவைப்படமாட்டார் என்றே கருதுகிறேன். நான் அறிந்தவரை நிதி ஆலோசகர்கள் சொந்த முதலீட்டு அனுபவம் குறைவானவர்களாக உள்ளனர், சரியான நிதி ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பது கடினம் என்றே கருதுகிறேன்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சிறு வயதில் இந்த பத்திரிகையினை எனது தந்தையார் வாசிப்பதை பார்த்திருக்கிறேன், சரியாக நினைவில்லை யாழ்ப்பாணத்தில் வெளியான ஆங்கில பத்திரிகை என நினைக்கிறேன். விக்டர் ஐவன் என்பவர் ஆசிரியராக இருந்தவர் என்பதாக ஒரு நினைவுள்ளது (ஆங்கிலம் தெரியாது எனது தந்தையாரின் மூலம் அறிந்திருப்பேன்) என நினைக்கிறேன் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவராக இருக்கலாம் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). இந்ததொடரினை ஆரம்பத்தில் ஒரு பக்க சார்பான வரலாற்று ஆவணமாக இருக்கும் என்ற எண்ணத்தில் கடந்து போய்விட்டேன், தற்செயலாக வாசிக்க ஆரம்பித்த பின்னர்தான உணருக்றேன் இது ஒரு சிறப்பான ஒரு முக்கியமான தொடர் என்பதினை. பல தெரியாத வரலாற்றினை எந்தவித சமரசமின்றி பதிந்துள்ளார் ஆசிரியர். பொதுவாக வென்றவர்களின் வரலாற்றினை கூறும் வரலாற்றில் இந்த வரலாறு மட்டும் தனித்து நிற்பதாக உணருகிறேன். அதற்காக மற்ற வரலாற்று ஆவணங்கள் குறைந்தவை அல்ல, அவையும் சிறந்த ஆவணங்களே. - பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.