உடல் எனும் இயந்திரம்.
இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது.
விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்துக் கொள்ளலாம்.இல்லையேல் தனக்கும் கேடு அவரை நம்பி உடனிருந்து வாழ்பவர்களுக்கும் சிரமத்தை கொடுக்கும். தன் உடல் நிலையின் அலட்சியத்தால் சிரம படும் ஒருவரின் கதை . படித்து பாருங்கள்.
பாலகுமார் ஒரு ஐம்பது வயது ஆண்மகன் குடும்பம் அழகான இரு பெண் குழந்தைகள் என கனடாவுக்கு வந்து ஆரம்ப காலத்தில் மிக மிக கஷ்டப்பட்டு ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்ந்து தன் வாழ்வை ஓடிக் கொண்டிருந்தான் . குழந்தைகள் நாளும் பொழுதும் வளர்ந்து பாடசாலை முடித்து பல்கலை படிப்புக்கு அனுமதி பெற்று இருந்தாள் மூத்தவள். மற்றையவள் பாடசாலை இறுதி வருட மாணவியாக கற்றுக் கொண்டிருந்தாள் . மனைவியும் அவர்களின் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வேலையில் இருந்தாள். தன் கடின முயற்சியில் தன்னிடம் இருந்த பொருட்களை விற்று (நகைகளை விற்று) முதலீடு செய்து நண்பரிடம் பணம் வாங்கியும் வங்கியில் லோன் பெற்று ஒரு தொழில் அதிபரானார் அவரிடம் இருபது பேர் வேலை செய்யும் அளவுக்கு நான்கு வருடங்களில் நிறுவனம் நல்ல நிலையில் வைத்திருந்தார் . மனைவியும் வீட்டு வேலைகளுக்கு மத்தியில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க கணவனுக்கு துணையாக இருந்தாள்.
இப்படி அமைதியாக காலம் சென்று கொண்டிருந்தது . கடந்த சில நாட்களாக தனக்கு காலில் ஒரு வித வலி ஏற்படுவதாக முறையிட்டுக் கொண்டு இருந்தான். வேலை கடுமையாக இருக்கும் ஓய்வெடுத்தால் சரியாகும் என எண்ணிக் கொண்டு இருந்தான். ஒரு தடவை ஒரு பேச்சு வார்த்தையின் போது மருத்துவர் சித்தப்பாவிடம் கால் வலி பற்றி முறையிட்டான். அவரும் முழு உடல் பரிசோதனை செய்யும் படி அறிவுறுத்தினார். அவர் கவனிக்காது வேலையும் வீடும் என இருந்து விட்டார். ஒரு வார தொடக்க நாளில் காலையில் துயில் எழுந்து கழிவறை சென்ற போது லேசான மயக்கம் போல உணர்ந்து நிதானிக்க முன் சரிந்து விழுந்தார் . மனைவி சத்தம் கேட்டு வந்து ஆம்புலன்ஸ் அழைத்து வைத்தியசாலைக்கு சென்று உரிய பரிசோதனைகள் செய்து இதய வழிப்பாதையில் இரத்த அடைபட்டு ஏற்பட்டு இருந்தது .
உடல் பலவீனமாக இருந்தால் இரண்டு நாட்களில் சத்திர சிகிச்சைக்கு ஏற்பாடானது . அன்று இரவு மீண்டும் ஒரு தாக்கம் ஏற்படவே மறு நாள் அவசரமாக சத்திர சிகிச்சை செய்தார்கள் .சத்திர சிகிச்சை முடிந்து சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கி வீடு சென்றார். ஓரளவு உடல்நிலை தேறி வரும் நாட்களில் அவரது மனநிலை , தன் நிறுவனம், வேலை ஆட்கள், புது ஆடர்கள் என்ற சிந்தனையில் இருந்தார். மேலும் ஒரு வாரம் சென்றது. மறுநாள் காலை காப்பி கப்பை கையில் எடுத்தவர் தடுமாறி போட்டுவிட்டார் கை நடுங்க தொடங்கிவிட்டது .மீண்டும் என்ன சோதனையா வாழ்க்கை என்று எண்ணி வைத்தியசாலையில் அனுமதித்த போது அவருக்கு "ஸ்ட்ரோக் " ஏற்பட்டு வலது கையும் காலும் தாக்கப்பட்டு மூளை செயலிழப்பு ஏற்பட்டது . அவரது நிலை எதிர்பாராமல் முடங்க வேண்டி ஏற்பட்டது . இளம் வயது தானே என அலட்சியம் இருந்து விட்டால் விளைவுகள் பாரதூரமாக விடும். இனி அவர்கள் எதிர்காலம் ....?
இந்த இயந்திர உலகம் நம்மை இயந்திரமய வாழ்க்கை வாழ வைக்கிறது. நின்று நிதானித்து நம்மையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இளம் வயது தானே என அலட்சியப்படுத்தினால் கவலைப்பட வேண்டும். இதை ஒரு படிப்பினையாக எடுத்து கொள்ளுங்கள்