-
Posts
11187 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
வெளிநாட்டுக்காரன்..!!! இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு.. ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் ஊற்றவேண்டும் என்று படித்தது இங்கேதான். நாம சாப்பிட்ட,குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுவிவைக்கவேண்டும் என படித்ததும்இங்கேதான். எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை,காரமில்லை சுவையில்லை என குறை சொல்லகூடாது என்றும் படித்ததும்இங்குதான். வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்துஎழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சதுஇங்கேதான். சத்தம் இல்லாமல் கதவை மூடவும் திறக்கவும் படித்தது இங்கேதான். தனது கனவு தேவதையாக தலையணையை கட்டிப்பிடித்து உறங்கி பழக படிச்சதும் இங்கேதான். பொறுமை என்ற 3 எழுத்திற்குஅர்த்தம் என்ன என்பதை படித்ததும் இங்கேதான். நூறு கிடைத்தாலும் 10ரூ கடன்வாங்கி 110ஆக நாட்டுக்கு அனுப்ப படிச்சதும் இங்கேதான். மின்சாரத்தையும், தண்ணீரையும் சோப்பையும்,பற்பசையையும் சிக்கனமாக உயயோகிக்க படித்ததும் இங்கேதான். பள்ளிக்கூடத்தில் 10அல்லது 15வருடங்களில் படிக்காத பல மொழிகளைப் படித்ததும் இங்கேதான். வாழ்க்கையில் இன்ப துன்பங்களை தாங்கி வாழ பழகிபடிச்சதும் இங்கேதான். உலகத்தில் எங்கேயும் படிக்க கிடைக்காத பொருளாதார சாஸ்திரத்தை படித்ததும் இங்கேதான். தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி, வெள்ளைபூண்டு,மஞ்சள்பொடி,மிளகாய் பொடி மல்லி பொடி ஆகியவைகளை சூடாக்கிய எண்ணெயில் போட்டுவதக்கி, மீன் போட்டால் மீன்குழம்பும் சிக்கன் போட்டால் சிக்கன் குழம்பும் மட்டன் போட்டால் மட்டன் குழம்பும் மோர் ஊற்றினால் மோர் குழம்பும் ஒன்றும் போடவில்லை என்றால் அது தக்காளி குழம்பும் என்கிற வெளிநாட்டு வித்தையை வேற ஏதாவது யுனிவர்சிட்டியிலோ அல்லது ஹோம் சயின்ஸ் பாடத்திலோ படித்திருக்க முடியுமா?? வெளிநாட்டு வாழ்க்கை அது ஒரு கதை,யாரும் சொல்லாத கதை. சொல்ல மறந்த கதை..!! வெளிநாடு வாழ் தமிழர் பதிவிட்ட பதிவு இது.. படித்து,பிடித்து,பகிர்கிறேன் உங்களிடம்..
-
நேற்று என்பது பழைய பேப்பர் மாதிரி இன்று என்பது நியூஸ் பேப்பர் மாதிரி நாளையென்பது கொஸ்டின்(கேள்வி)பேப்பர் மாதிரி வாழ்க்கை என்பது அன்செர் பேப்பர் மாதிரி கவனமாக எழுதி வெற்றி வாகை சூட்டுங்கள்.
-
நீண்ட கால வாசகனுக்கு இதுவரை ஏன் எழுத முடியவில்லையோ தெரியாது. முழு வீச்சில் இறங்கி விடீர்கள் . தொடருங்கோ நாங்களும் தொடர்ந்து ரசித்து வாசிக்கிறோம். ஊரில் இருந் போது விளம்பழத்தை வழித்துபோட்டு பால் விட்டு கரைத்து சீனியும் கொஞ்ச சோறும்போட்டு அம்மா செய்து தருவார் அமிர்தம் போல இருக்கும். நல்ல விருப்பம்.
-
இந்தக் கால சிறார்கள். கணனியிலும் போனிலும் முன்னேறிவிட்டார்கள்.(தனிமை படுத்தப்பட்டு விடடார்கள் ). விளையாட்டு வேடிக்கை கலகலப்பு பள்ளிச்சிநேகிதம் எல்லாம் தொலைந்து விட்ட்து.வேறொரு உலகில் வாழ்கிறார்கள். நமக்கெல்லாம் அது ஒரு இனிய கனாக்காலம்.
-
மது அருந்தும் போட்டியில் முதலிடம் பிடித்தவர் சில மணி நேரத்தில் மரணம்!
நிலாமதி replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு .... -
இனிய யாழ் களத்துக்கு நல் வரவு தில்லை அவர்களே . நிறைய பதிவுகள் வைத்திருப்பீர்கள் போல ஒவ்வொன்றுக்கும் அந்தந்த பொருத்தமான பகுதியில் இணைத்து விடவும் தேவையேற்படின் உறவோசை பகுதியில் உங்கள் விளக்கங்களை கேட்டு எழுதினால் விடை தருவார்கள். உங்கள் பிளாக் இன் பெயர் விபரம் தந்தால் அங்கும் சென்று பார்ப்பார்கள்.
-
Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்
நிலாமதி replied to P.S.பிரபா's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
நீண்ட நாட்கள் உங்களை காணவில்லை என எண்ணியிருந்தேன். அழகான காடசிப் படங்களுடன் வந்துள்ளீர்கள் மிக்க நன்றி -
யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நலமோடும் மகிழ்வோடும் வாழ்க
-
இயற்கை வரைந்த ஓவியம் அழகு
-
பெயர் பெற்ற ஒருபாலம் கண நேரத்தில் சீட்டுக் கட்டுபோல சரிந்தது பேரிழப்பு. ஏன் வரிகளுக்கிடையே அகலமான இடை வெளி ? அதை சரி செய்தல் நன்றாக இருக்கும்.
-
சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.😁 வேடிக்கையாக சொன்னாலும் உண்மை அது தான். இருக்கிற நிம்மதியும் போய் விடும்.குடும்பம் பிரிந்த கதைகளும் உண்டு. கெடட சகவாசம் வந்து சேர்ந்து விடும். அது ஒரு மாயை . நிகழ் தகவு அருமையான சொற்பதம். அழகாக கோர்த்து கதை சொல்லும் விதம் பாரடடதக்கது. அதிகம் உங்கள் ஆக்கங்கள் வரவேண்டும்.
-
கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இவர் மக்களுக்கு வழிகாட்டிகளா ? கோழைகள்.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நிலாமதி replied to goshan_che's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
யாழ் களத்தில்மீள வந்தது வந்தது கண்டு மகிழ்ச்சி ..........தொடருங்கள் பயணக் கட்டுரையை.- 364 replies
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with:
-
உழுது களைத்த உழவன்
-
அழகான ஒரு கனா காலம். லேஞ்சி மட்டுமல்ல பேனாவும் நட்ப்பை முறிக்குமாம் என்பார்கள்.
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
நிலாமதி replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
எனக்குத் தெரியும் சொல்ல மாட்டேனே ..... ......மைத்திரி. 😄😁 -
பின்னர் ஒரு நாளில் ஊர் மண்ணை போய் சேர மீண்டு வரும் சொர்க்கம் என்று எண்ணி எண்ணி இருக்க அந்த நாள் என்றும் வருவதில்லை இது தான் உண்மை . ( வந்தவர் எல்லாம் தங்கி விடடால் இந்த மண்ணில் இடம் எது .... வாழ்கை என்பது வியாபாரம் வருவதும் போவதும் செலவாகும். .....போனால் போகட்டும் போடா........... )
-
எல்லோரும் தேடுகினம் ....கண்ணில அகப்படுகிறான் இல்லையே... போலீசார் அவரை கவனிப்பார்கள். வேண்டாம் விபரீத ஆசை .( சிற்றுவேஷன் கவிதை போல இருக்கு ) 😃
-
அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
நிலாமதி replied to நியானி's topic in யாழ் உறவோசை
ஒரு சின்ன ஆலோசனை ..நீங்களே அங்கு சென்று பதியலாம் . -
வரவேற்கத்தக்க முயற்சி . தொடருங்கோ ... ஆதரவாளர்கள் இருக்கிறோம்.
-
நல்ல அடி தான் பொறுத்த இடத்தில (பிடரி). உங்களுக்கும் சுவாரசியமான கவிதை வருது தொடருங்கோ
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிலாமதி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
முதுகிலும் சுமை கையிலும் பாசச்சுமை. .பெண் என்பவள் தாய்மையின் சுமை தாங்கி -
என் இந்தியப் பயணம்
நிலாமதி replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
“ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” கேட்க்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் நாற்பது என்றால் நாற்பது பவுன்ஸ ஆ ? அங்கு பொதி வண்டி தள்ளி வருபவர்களுக்கு எவ்வ்ளவு டிப்ஸ் கொடுக்க வேண்டும். ?