Everything posted by நிலாமதி
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்..
கேடடால் சொல்லுவினம் இலங்கை சாப்பாட்டு சாமான்கள் வரத்து இல்லை என கரீபியனில் இருந்து இறக்கும் மீன்களைக் காட்டி சிலோன் விளை என்பார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய பிறந்த நாள் இனிதாக மகிழ்வாக அமையட்டும்.
-
உனக்குமட்டுமா?உலகம்.
அன்பும் பாசமும் ஆளட்டும் உலகை அனைத்து உயிர்களும் ஒருதாய் பிள்ளை இப்படி மனிதம் வாழ்ந்தால் என் இந்த தொல்லை. அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எங்களைக் கேட்டே கடன் எடுத்தவை ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் மெ. சுமேரியர் ...(நிவேதாவுக்கு ) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கையில்குழந்தைகளுடன் ....?
-
இரத்த சரித்திரம்
தொடருங்கள் படிக்கும் ஆவலுடன் உள்ளோம்.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவராலயம் வரை சேதி எட்டி இருக்கென்றால் பாருங்கோவன் ....சிறீ யின் சிறப்பு செய்தியை 😃
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
தவறான இந்த பதிவை நீக்கவும் ஒரு இறைமை உள்ள ஒரு நாட்டினை இது பரிகாசிப்பது போல உள்ளது , ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்றாலும் மிக நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இருக்கும் போது உங்கள் பதிவு எங்களை இலங்கையர்களை நோகடிப்பதாக உள்ளது,, நீக்கிவிட்டு தவறான செய்திக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் உங்கள் செயல் ஊடக தர்மம் அல்ல,, இல்லை இவர் சொல்வது உண்மை. எனது மாமா ஒராள் கட்டுநாயக்காவில்தன வேலை செய்கிறார். அவர் இதை உறுதிப்படுத்திவிட்டார். ஆனால் இலங்கை எதுவம் சொல்லவில்லை இவ்வாறு மக்கள் யு tube காணொளிக்கு பதில் போடுகிறார்கள் 😃
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
நான் நினைக்கிறேன் ஏப்ரல் முதலாம் திகதி முடிய போய் மீண்டும் அடுத்த ஏப்ரலில் இல் தான் வரும் 😄
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி ...என்றும் நோய் நொடியின்றி மகிழ்வோடு வாழ்க .
-
கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மரம் விழுந்தாலும் எஞ்சிய வேர்களுடன் எழுந்து நிற்கும் கிளைகள். மிகவும் நல்ல எடுத்துக் காட்டு .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தனிக் காட்டு ராஜாவுக்கும் கொழும்பானுக்கும்.- மனிதாபிமானப் பன்னாடை
காலத்தோடு ஒட்டிய கவி வரிகள். பகிர்வுக்கு நன்றி உக்ரெயின் யுத்தம் தொடங்கி..., இன்னும் பத்து நாள் ஆகவில்லை...! நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...! இன்றோடு இருபத்தாறு நாட்களாகி விட்ட்ன 🙂.- கொஞ்சம் ரசிக்க
ஒரு வகை குருவிக் கூடடம், நீரருந்தும்போது ஒரு குருவி நீருக்குள் ஆழ்ந்து விட்ட்து அதைக் கண்ட கழுகார் அதைக் கரையில் கொண்டு வந்த்தும் குருவிபறந்தோடி ஒருமரப்பொந்தினுள் அடைக்கலம் புகுந்தது .கழுகார் அதை எப்படியும் பிடித்துவிட சுற்றி சுற்றி வந்தது கழுகு சற்று திரும்ப குருவி சிட்டாய் பறந்துசென்றது. அன்று அதுக்கு மரணம் விதிக்கபடவில்லை. விதி( நியமம்) வழி வாழ்க்கை- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
எல்லோரும் மூளையை கசக்கி யோசித்தாயிற்று இன்னும் சொல்லவே இல்லை அது என்ன கடி என்று .அலர்ஜி அல்லது மனப்பிரமை என்று தான் எண்ணுகிறேன்.- இரை .......!
- கொஞ்சம் ரசிக்க
பாகப் பிரிவினை 😀- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் இணையவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஈழப்பிரியன் அண்ணா நான் பெரிய திரையில் தான் எழுதுகிறேன். மோகனின் விளக்கத்துக்கு பின் தெளிந்தேன். எனக்கு கருத்து எழுதும் பகுதியில் சின்ன திரையும் புதியபதிவு போடும்பகுதியில் பெரிய திரையும் இரண்டும் இருக்கின்றன. இவ்வாறுதான் அமைக்க பட்டு இருக்கிறது.- ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே
ஈழத்திருநாடே என் அருமைத் தாயகமே, உன் நிலைகண்டு வருந்துகிறேன் கொடிய நோய் கொடுத்த துயர் மறையும் முன்னே கொடும் பசி வாட்டுகிறதே பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் துயர் கூடுகிறதே. கோல் உயர்ந்தால் குடி உயரும் கோலேந்திய ராஜ பக்சேக்களின் சுயநலமும் சொத்து சேர்ப்பும் தமிழ் ஈழத்தின் மீதான கொடும் போரும் உலகை துணைக்கழைத்து சாம்பல் மேடாக்கிய ஈழ விளைநிலமும் மக்களின் சாபமும் கண்ணீரும் அளவுக்கு மீறிய கடனும் கடனுக்கு வட்டி கட்டிட மேலும் கடனும் சீனனுக்கு கொடுத்த தாரை வார்ப்பும் என் நில மக்களை வாட்டி வதைக்கிறதே தலைநகரில், கடையில் வாங்கி உலையில் போடும் மக்கள் பேப்பர் கட்டுக்களாய் பணத்தை வாரி வீசினாலும் அரைவயிறு நனைகிறதா ? பதுக்கி வைத்த சொத்துக்களையெல்லாம் உனது கூட்டுக குழுவுடன் சற்று தானம் செய்தல் ஓரளவு உயர்வாய். மனசு வருமா ? நாட்டை நடத்த தெரியாமல் வீண் வீம்பும் , ராணுவத்துக்கு செலவிடட பணமும் அளவுக்கு மிஞ்சிய ராணுவ படையும் பலமும் (?) .. உன் சொந்த மக்களை இந்நிலைக்கு கொண்டு சென்றது உன்னை தேர்வு செய்த சிங்க( ள)இனமே உன்னை வெறுக்கையில் உன் ஆடசியின் நீட்ச்சி தேவையா ? வரலாற்றில் இல்லாத வறுமையும் துயரமும் ஏன்? உன் அடக்குமுறை போரில் அடிமைபட்டுக் கிடந்த என் ஈழத்தமிழினம் எப்படியாவது வாழ்க் கற்று விட்ட்து . மண்ணை கிண்டி வலையை வீசி விறகடுப்பில் வெந்து வாழ்க்கையை ஓட்டும் ஆனால் தற்பெருமைத் தலைநகரில் கட்டிடக் கூடுகளில் சஞ்சரிக்கும் புறாக்களாக வாழும் கொலோம்போ மக்கள் தான் பாவம். கிராமத்தான் ஓரளவு வாழ்ந்து விடுவான் ஏனையவ்ர் நீண்ட கியூ வரிசையில் விரக்தியின் விளிம்பில் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசையில் நிற்கும் மனிதனின் மனதில் உதிக்கும் ஒரு வெறுப்பு அது ராஜபக்சேக்களின்கொடுங்கோல் சுயநல ஆடசியை மன்னிக்காது. வரலாறாய் வரிப்படுத்தப்படும். நான் புலம்பெயர்ந்து ஆண்டுகள் முப்பது ஆனாலும் என் நாட்டு மக்களை எண்ணும்போது ஏற்படட துக்கம் என்னை மேலுள்ளவாறு கிறுக்க வைத்துவிட்ட்து. .- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் மோகன் . நிலாமதி பணிவுடன் எழுதுவது ..எனக்கு பதிவு எழுதும் பக்கத்தில் எழுத்துக்களை பெரிது சிறிது ஆக்கும் பொத்தானும் (button ) நிறமூட்டும் அடையாளமும் வருவது இல்லை. அதை மீட்டேடுக்க என்ன செய்யலாம் ?எங்கு சென்று திருத்த வேண்டும். என அறியத்தரவும்.- மன வைராக்கியம்
ஒரு மனிதனின் வாழ்க்கைச் சக்கர சுழற்சியின்போது இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். ஒரு அழகிய கிராமத்திலே சற்று வசதி படைத்த குடும்பத்தில் ஒரு கணவனும் மனைவியும் ,அவர்களது இல் வாழ்வின் வசந்தமாக வந்துதித்தாள் கவினா ...காலம் உருண்டோட அவள் பள்ளி செல்லும் காலம் வந்தது . இனிய பள்ளிக் காலம் தன் ஓடடத்தில் அவளை பத்தாம் வகுப்புக்கு நகர்த்தியது. இவர்களின் வீட்டுக்கு உதவிக்கு வரும் வேலப்பனின் சகோதரி மாணிக்கம் குடும்பத்துக்கு அழகான ஐந்து குழந்தைகள் . வேலப்பன் தூரத்து உறவென்றாலும் கஷ்டத்தின் நிமித்தம் தன் வயல் வேலைகளோடு இவர்களுக்கும் உதவி செய்பவன். மாணிக்கம்,கணவன் கதிரேசனின் , வாத்தியார் சம்பளத்தோடு ஐந்து குழந்தைகளுக்கு அன்பான தாயக பராமரிப்பவள். இவர்களும் கவினா வோடு ஒரே பள்ளிக் கூ டத்தில் படிப்பவர்கள். கவினா ஒற்றைப் பெண் குழந்தையாதலால் இவர்களுடனே பள்ளிக்கு செல்வாள். மாணிக்கத்தின் மூத்தமகன் கிருபாகரன் இவளை விட மூன்று வயது கூடியவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். கவிதா கணக்கில் படு மக்கு . பாடம் சொல்லிக் கொடுக்க வேலப்பன் மூலம் கவினா வின் தாய் செய்தி சொல்லி அனுப்பி, அவனும் பாடம் சொல்லிக் கொடுக்க முன் வந்தான். அந்த வருடம் கவினா கணக்கு பாடத்தில் நல்ல புள்ளிகள் பெற்றாள் . ஆசிரியரின் பாராட்டும் பெற்றாள் .அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு முக்கியமான வருடம். தொடர்ந்தும் கணக்கில் முன்னேறினால் தான் உயர்தரம் விஞ்ஞானம் பிரிவில் படிக்க முடியும். தொடர்ந்தும் கிருபன் வந்து பாடம் எடுக்க ஒழுங்கு செய்தனர். அந்த சிறு பண உதவி அவனுக்கு பஸ் போக்குவரத்து போன்ற செலவுக்கு உதவியது . பத்தாம் வகுப்பு இறுதி பரீடசையும் வந்தது ...கவனமாக படிக்க வேண்டும் என இடைக்கிடை கிருபன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது தாயார் வந்து போவார்.சில சமயம் தேநீரும் சிற்றுண்டியும் பரிமாறுவாள். பரீடசை முடித்து . நல்ல பெறுபேறு கிடைத்தது . கணித்துக்கு டி.. சித்தியும் மற்றும் 4சீ 3 எஸ் .எடுத்தாள் . அவர்கள் உயர்கல்விக்கு எங்கே சேர்ப்பது என் யோசித்து கொண்டு இருந்தார்கள். கவினா வுக்கு கிருபன் வீட்டுக்கு வராதது பெரும் ஏக்கமாக எதோ ஒன்றை இழந்தவள் போல இருந்தாதாள் . வழக்கம்போல அவ்வூர் கோவில் திருவிழா காலம் வரவே ..பெற்றோருடன் சென்றவள் ,கிருபனிடம் தான் அவனை விரும்புவதாக யாருக்கும் தெரியாமல் கடிதம் ஒன்றைக் கொடுத் தாள். மறு நாள் பதிலாக அவன் உங்கள் வீட்டு நிலைமையும். எங்களுக்கும் சரிவராது . நாங்கள் நட் ப்பாகவே இருப்போம் என்றான். காலம் மெல்ல நகர்ந்து சென்றது கிருபன் கல்லூரி முடித்து ஒரு வேலை யில் சேர்ந்தான் . அதற்காக தினமும் பஸ் பயணம் செல்வதுண்டு . கவினா வும் உயர் கல்விக்காக பஸ் வண்டியில் செல்ல விரும்பி வீட்டில் கார் வசதி இருந்தாலும் சாக்கு போக்கு சொல்லி கிருபனை காண்பதற்காகவே பஸ் இல் பாடசாலைக்கு சென்று விடுவாள். ஆனாலும் கிருபன் இல்லாத வாழ்க்கையை கற்பனை பண்ண முடியவில்லை . அவன் நினைவாகவே இருப்பாள். ." என்ன பிரச்னை என்றாலும் நான் பார்த்து கொள்வேன். எனக்கு உன் பதில் என்ன? என்றாள்" .அவனும் இளைஞன் தானே ...இருவரும் காதலின் சங்கீதம் பாட ஆரம்பித்தனர். சில நாடகள் சென்றன கவினா வின் போக்கில் சில மாறுதலைக் கண்டு கண்டித்தார். தாயார் . அப்படி ஏதுமில்லை என்று சாதித்தாள் கணவனிடம் கூறிய போது பெண் பிள்ளைக்கு படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் . கலியாணத்தை கட்டி வைப்போம் என்கிறார். இதை மெதுவாக பேச்சு வாக்கில் சொன்னாள் தாயார் . அதற்கு அவள் "நான் சின்ன வயசிலே இருந்து அவனைத் தான் என் மனதில் நினைத்து இருக்கிறேன் எனவே வேறு எதற்கும் சம்மதிக்க மாடடேன்" என்றாள் . மகளின் பிடிவாதத்தை எண்ணியவாறு ...ஒரு நாள் கிருபனை தன்னை வந்து சந்திக்கும்படி வீட்டுக்கு அழைத்தார்கள் . அவனும் எதோ நடக்க போகிறது . என் எண்ணியவாறு அங்கு சென்றான். அவனைக் கண்டதும் கதிரையில் உடகாரும் என்றார். கேள்வி க்கணைகளாக தொடுத்தார் ... "உமக்கு என்ன வருமானம் இருக்கிறது? ".." என் பிள்ளையை எப்படி காப்பாற்று வீர்? .". என் பணத்தின் மீது ஆசை இருந்தால் ஏதாவது , பிச்சை போடுகிறேன் எடுத்து கொண்டு சென்று விடும் " .... உமக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள் அவர்களை எப்படி கரை சேர்ப்பீர் ? . இதெல்லாம் சரிவராது ..உமது வேலையைப்பாரும் ..உமது பெற்றோருக்கு ஒரு நல்ல நிலையை அமைத்து கொடும். என்று அதட்டியவாறே மகள் கவிதாவை அழைத்தார். அவளும் பயத்துடன் தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் அவன் மறுத்து விடடான். அவ்வளவு நேரமும் பொறுமையாக , எல்லாவற்றையும் பொறுமையாக கேடடான் . எந்த வித பிரச்சினை வந்தாலும் நான் உன்னைக் கைவிடேன் என்றவள் மெளனமானாள் . நீ யாருடா? என்பதுபோல் பார்த்தாள் . நா நுனி வரை உங்கள் மகள் தான் என்னை பின்னும் முன்னும் துரத்தி காதலித்தாள் . என்னோடு பார்க்கில் வந்து சந்திப்பாள் முதலில் உங்கள் மகளை எச்சரியுங்கள் என்று சொல்ல நினைத்து மெளனமானான் . சரி நீர் போகலாம்" என்றதும் திருப்பியும் பாராமல் வீடு வந்து சேர்ந்தான். அன்று இரவே கொழும்புக்கு ..நேர்முக தேர்வு இருப்பதாக சொல்லி , செல்ல ஆயத்த மானான். விடிந்ததும் தனக்கான ஆடைகளை யும் முக்கிய பொருட்களை யம் எடுத்துக் கொண்டு முதல் ரயில் வண்டியில் பயணமானான் . தன்னுடன் ப டித்த ஒரே ஒரு நண்பனை நம்பி, ...கொழும்பை அடைந்ததும் நண்பனைத் தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டுக்கு ...வந்து அவனது தந்தையின் அனுமதியுடன் ...அவர்களது தென்னந்தோப்பில் தொழிலாளி யாக சேர்ந்தான். இயந்திரத்தில் தேங்காய் மடடையை தும்பாக்கி கயிறு தயாரிப்பது ...கால் விரிப்பு ..மெத்தை போன்ற பொருட்களை தயாரிப்பது என்று, எல்லாத தொழில்களையும் கற்று தனது நேர்மையாலும் கடும் உழைப்பினாலும் நண்பனின் தந்தைக்கு அடுத்த முதலாளியாக இருந்தான். நண்பனுக்கு வெளி நாட்டு ஆசை வரவே ..தந்தை படிக்க லண்டனுக்கு அனுப்பி விடடார் . நண்பனின் குடும்பத்தில் அவனும் ஒருவனாக வாழ்ந்தான். நண்பனின் தங்கை திருமணமாகி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தார் . அக்காலத்தில் அவனுக்கு கீழே நாற்பது பேர் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகாரியானான். முதலாளிக்கு அடுத்த படியாக அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது, வேலையைப்பிரித்து கொடுப்பது போன்ற ஒரு சின்ன முதலாளியாக வலம் வந்தான். அவனது நேர்மை ஓயாத உழைப்பு நாணயம் வேலையாட்களிடம் பண்பாக வேலை வாங்குவது, என்பவை அவருக்கு அவனிடம் மிகவும் பிடித்த குணங்கள் . அவர்க ளின் பொருட்களை தொகையாக வாங்கி விற்கும் வாடிக்கையாளர்களை இவனுக்கும் நண்பராக் கினான். ஒரு நாள் நண்பனின் அப்பாவிடம் நாங்களே ஒரு உற்பத்தி பொருட்களை விற்கும் ஒரு கடையை ஆரம்பித்தால் என்ன என அறிவுரை கேடடான் . அதற்கும் அவர் எனக்கும் வயதாகிறது . ஒரே ஒரு மகனும் லண்ட னில் படிக்குபோது நட் ப்பான பிள்ளையைக் கட்டி விடடான் . ஒரு தொகைப்பணம் தருகிறேன் நீரே அதை முதலீட்டு உம்மிடம் காசு உள்ள போது திருப்பி தாரும் என்று சொன்னார். கிருபனின் நாணயம், விடாமுயற்சி தொழில் பற்று, நுட்பம் .வேலையாட்கள் இடம் பழகும் விதம் என்பன அவனை மேலுயர்த்தியது. இரண்டு பெரிய ஸ்டோர் களுக்கு அதிபதியானான். வெளிநாடடவர் சுற்றுலாவில் வரும் போது இவனின் பொருட்களை விரும்பி வாங்கவும் , தென்னையின் ஒவ்வொரு பகுதியும் செதுக்க பட்டு வடிவமைத்து விற்பனை .பொருளாயின. தனது தாய் தந்தையின் வீடடை ஒரு அழகான வீடாக்கினான். ..தங்கைகளுக்கு திருமணம் என எல்லாக் கடமையும் முடித்து ..சற்று தன்னை எண்ணி பார்த்தான் . வயதும் 35 ஐ தாண்டி ண்டி விட்ட்து. கவினா குடும்பத்தின் பணத்திமிர்த்தனம் கண் முன்னே வந்தது . தான் பாவிக்கும் வாகனத்தை விட அழகான இன்னொரு காரை வாங்கி கொண்டு , தன் கிராமத்து நோக்கி பயணமானான் . மீண்டும் கொழும்புக்கு தன் தாய் தந்தையை தன்னோடு தலைநகருக்கு கூட்டி வர நினைத்து சென்றான். நீண்ட பயணத்தில் கவினா அவர்களது வீட்டில் தனக்கு நடத்த அவமரியாதையை எண்ணினான். உனது நிலையை உயர்த்தியப்பின், உன் கடமைகள் முடிந்த பின் , பெண் தருகிறோம் என்றாவது ஒரு நம்பிக்கையை தரவில்லை . எவ்வ ளவு இழிவாக பேசி னர்கள். காலம் உருண்டோடியது . கவினா வும் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானதாக கேள்விபட்டுருந்தான். கணவன் ஒரு புடவைக்கடை,உரிமையாளராக இருந்தான். மார்கழி மாதத்து இளம் மழைத்துளிகள் ஆரம்பித்த ஒரு நாளில் வந்திறங்கினான் ஊருக்கு . தாய் தந்தையரை அழைத்து கொண்டு ஒரு வாரத்தில் தான் புதிதாக வாங்கிய வீட்டுக்கு கூ ட்டிச் சென்று குடிபுக நினைத்து அழைத்து வர எல்லா ஏ ற்பாடுகளுடனும் வந்து இருந்தான். பயண களைப்பில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவனை ,தயார் தேநீருடன் உறக்கம் கலைத்தாள். அவர் தமது ஊர் கோவிலில் அவனுக்காக நேர்த்தி வை த்தாகவும் அதை அவனைக் கொண்டு செலுத்துவதாக வேண்டி இருந்த்தாவும் கூறி கோவிலுக்கு சென்றார்கள் . அருகே கிராமத்து சிறுவர்கள் புதிதாக ஒரு கார் நிற்பதை பார்க்க வென்று கூடடமாய் வந்தார்கள். மதிய வேளை க்கு அண்மித்த நேரம் சூரியன் தன் கொடும் கதிர்களால் அனல் வீசிக் கொண்ட பொழுதில் அவ்வழியே தாயுடன் கவினா இரண்டவது குழந்தைக்கு தடுப்பூசி போடச் சென்று வந்து கொண்டிருந்தாள். தூரத்தே , இவனைக் கண்டதும் மலைத்து நின்றாள். அவன் இவளைக் கண்டதும் வந்து நலம் விசாரித்தான். தாயார் முன்னையை பொலிவிழந்து வயதானவராய் தோன்றினார். கொடிய வெய்யிலாக இருக்கிறது. வீடு வரை கொண்டுவந்துவிட கேட்டும் மறுத்து விடடாள். அவள் கண்கள் நீர்கோர்த்து கொண்டது. இன்னும் கொஞ்சக் காலம் இவனுக்காக காத்திருக்கலாமோ ..? என எண்ணியவாறு நடக்க தொடங்கனாள் . கடந்த காலம் அவளுக்கு திரைப் படம் பார்ப்பதுபோல் மனதில் தோன்றியது . கவினாவின் பெற்றோர்களின் வசதி வாய்ப்பு காரணமாக , வந்த தற்பெருமை , அவன் கேடட ஏளனபேச்சு அதனால் வந்த மன வைராக்கியம் தன்னை இவ்வ்ளவு தூரம் உயர வைத்திருக்கிறதே என் எண்ணிக் கொண்டே வீடு நோக்கி விரைந்தனர். அவ்னது பெற்றோர்களும் மகனின் வேண்டுகோளுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் தமது மகனின் கனவு இல்லத்தை நோக்கி பயணமானார்கள். மனித வாழ்க்கை பல ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருக்கும். சந்தர்ப்பங்கள் தான் ஒருவனை திசை திரும்புகின்றன. அந்த திசைகள் பல சமயங்களில் உயர்ச்சியையும் ஒரு சில சமயங்களில் வீழ்ச்சியையும் தருவதுண்டு. மனதில் உளி என விழும் வார்த்தைகள் தான் இலட்சியம் எனும் சிலையை செதுக்கும் கற்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பிருந்தால் என்றும் எதையும் சாதிக்கலாம்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி . உங்கள் ஆக்கங்களையும் எதிர்பார்க்கிறோம். - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.