தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர் தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம் பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர் வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும் இன்னும் பல தேவைகளுக்கு நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில் மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை குளிர் பானக கடை என்பன கடைவிரித்து காத்திருப்பார்கள். அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர் சில ர் யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு அவர்களுக்கிடையில் வயது முதிர்ந்த , நீண்ட தா டியும் பரடடைத் தலையும் கையில் ஒரு ஊன்று கொள்ளும் , தோளில் ஒரு துணி மூடடையும் கொண்ட முருகேசனும் உட்கர்ந்திருந்தார் . அவரூ க்கு பழக்கமான சிலர் என்ன முருகேசா! நீ வேதமா ? சைவமா? எனக் கேட்ப்பார்கள். அவரும் அப்பா வேதம் அம்மா சைவம் அதனால் நான் முருகேசனானேன். என்பார் ...
அப்போது அங்கு ஒரு வெண்ணிறக் காரில் ஒரு வயதான அம்மாள் , தன உதவி பெண்ணுடன் கும்பிட வந்திருந்தார். வாயிலின் அருகே இருந்த முருகேசனின் தட்டில் இருபது ரூபாய் ...வந்து விழுந்த்து ...ஏற்கனவே சில சில்லறைகளை வைத்திருந்தார் . அந்த இருபது ரூபாயை எடுத்து தனியே பாத்திரம் பண்ணி வைத்தார் . இரண்டு நாளாக உணவு சாப்பிட வில்லை . வெறும் தேநீர் மட்டும் அருந்தி பேசிக் களையை போக்கி இருந்தார். . மதிய வெயில் பசி மயக்கம் கண்ணைக் கட்டிடவே மெது வாக அருகில் இருந்த சாப்பாட்டுக்கு கடையை நோக்கி சென்றார் . இவர் தோற்றத்தை பார்த்த்தும் வாயிலில் நிற பையன் ... அப்பாலே போ என விரட்டினான் . தம்பி ..நான் சாப்பிட வந்திருக்கிறேன் என்றதும் ஒரு ஓரமான பலகை யைக் காட்டி அங்கு உட்க்கார்ந்து கொள் என்றான். பணியாளர் (வெயிட்டர் ) அருகே வரவே ..தம்பி எனக்கு ஒரு பார்சல் ..எவ்வ்ளவு என்றான். "மீன் சாப்பாட்டு பார்சல் ஐம்பது ரூபாய்" ..."மரக்கறி பார்சல் முப்பது ரூபாய் " என்றான். அருகே அமர்ந்திருந்த ஒரு இளைஞன் .. அவர் வைத்திருந்த இருபது ரூபாயைக் கண்டு ...தம் பி அவருக்கு ஒரு மீன் பார்சல் கொடு என்றான்.
பின் அந்த முதியவருடன் பேசத்தொடங்கினான். "ஐயா உங்களுக்கு என்ன ஆனது என் இந்த நிலமை ? என்று கேட்ட்க அவர் கண் கலங்கியது .. அவர் தன்னைப்பற்றி கூறத்தொடங்கினார் . தம்பி நான் கனடா நாட்டுக்கு சென்று ..மனைவி இருமகன்களுடன் வாழ்ந்து வந்தேன் . கஷ்ட பட்டு வேலை செய்தேன். இராப்பகலாய் கண் விழித்து இரண்டு வேலைகள்செய்து பிள்ளை களைப் படிக்க வைத்து ஆளாக்கி கலியாணம் கட்டி வைத்தேன். பின் நானும் மனைவியும் ..முதுமை காரணமாக தாய் நாட்டுக்கு வந்து வாழ ஆசைப்பட்டு . வீடடை விற்று மக்களுக்கு கொடுத்து விட்டு ,மீதிகாசுடன் ..சில வருடங்கள் நலமாக வாழ்த்து வந்தோம். எனக்கு ஓய்வூதியம் பணம் வந்தது ...அதில் சேமித்து ஒரு வீடடை வாங்கினேன். எமக்கு துணையாக ஒரு பையனை வளர்த்தோம். காலம் மிக வேகமாக ஓடியது என் மனைவிக்கு வ யிற்றில் புற்று நோய் வந்து அவதிப்பட்டு, வைத்ய சாலையும் வீடுமாக அலைந்தேன். வளர்ப்பு மகனையும் படிப்பித்து ஒரு வேலையில் யில் அமர்ந்ததும் ..ஒருகலியாணம் கட்டி வைத்தேன். அவனுக்கு இரு பெண் குழந்தைகள் . காலப்போக்கில் மனைவி இறந்து விடடாள் . வந்த மருமகள் மிகவும் கர்வம் பிடித்தவள் . என் முதுமை காரணமாய் .ஒரு கண் பார்வையை இழந்தேன். மற்றையது ஓரளவு பார்வை தெரிகிறது .. ..மனைவி இல்லாத அருமை புரிந்தது .. என்னை கவனிக்கவே மாடடாள் மருமகள். குளிக்க உடைமாற்ற எனக்கு உதவி தேவைப்பட்ட்து ...கை நடுங்க ஆரம்பித்து விட்ட்து ஆதர வின்றி ..கோவிலைக் காட்டி ..இந்த கோவிலே தஞ்சம் என் வாழ்கிறேன். என உணவை மெல்ல மெல்ல உண்டுகொண்டே சொல்லி முடித்தார்.
இளைஞனும் அவருக்கும் தனக்குமான உணவுக்கு காசைக் கட்டி விட்டு இருவரும் வெளியேறினார். அவர் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட ...அந்த இளைஞன் .சற்று பொறுங்கோ என் சொல்லி ...அருகில் இருந் காரை எடுத்து வந்து ..இதில் ஏறுங்கோ என சொல்ல தாத்தா மறுத்தார் . வற்புறுத்தி .. எற வைத்து சில மணி நேர ஓட்ட்த்தின் பின் ...ஒரு கருணை இல்லத்தின் முன்னே நின்றது ...இறங்கி இவரையும் அழைத்து கொண்டு இவரும் முன் வாயிலில் இருந்தா காரியாலயத்தில் ..எதோ ...பேசி விட்டு திரும்ப வந்து
தாத்தா இனி இது தான் உங்கள் வீடு என சொல்லி அவருக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படி பணித்தான். அங்குள்ள உதவியாளர் அவருக்கு குளித்து புத்தாடை உடுத்தி முக சவரம் தலைமுடி கத்தரித்து .. அவருக்கு ஒரு தனியான அடைக்க படட அறை ஒழுங்குபடுத்தி ...ஆதரவளித்தனர் .
சில மணி நேர இடைவேளையின் பின் ...அந்த இளைஞன் மீண்டும் வந்து இவரை பார்த்தன். அவரது இருப்பிடமும் வசதியும் திருப்பி அளிக்கவே. மீண்டும் மேலிடத்தில் உள்ள காரியாலயத்தில் சென்று . இன்னும் சில வசதிகள் அவருக்கு தேவைப்படுவதாகி சொல்லி ...ஏற்பாடு செய்து வீடு திரும்ப இருளாகி விட்ட்து . தன் காரை பின்னோக்கி ரெவெர்ஸ் செய்யும் போது ,முன் முகப்பு வெளிச்சத்தில் மின்னியது "அம்மா கருணை இல்லம் :" வீடு சென்று உணவு உண்டு ... மனைவி குழந்தைகளுடன் உரையாடி விட்டு ... உறங்க சென்று தாயின் படத்தை நோக்கி கும்பிட ஒரு வெண்ணிற பூ ..உதிர்ந்தது அவன் முன்னே. "மகனே ஒரு நல்ல காரியம் செய்தாய் " எனும் மலர்ந்த புன்னகையுடன் அவர் அம்மா படத்தில் புன்னகைத்தாள்.
ஒரு தாயின் கருவில் உருவாகி பூமில் வாழும் மனிதன் ஒரு மரத்துக்கு இணையாகிறான். ஒரு விதை மரமாகி, கிளைபரப்பி பூத்து காய்த்து கனிந்து மீண்டும் விதையாகி மண்ணில் சருகாகி வீழ்கிறான். விதைகளுக்கு தெரிவதில்லை இலைச் சருகுகள் தான் தம்மை வளர்த்த விளை நிலங்கள் என்று.