Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11188
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. சுற்றம் சூழ வளர்க்க படுவதே ஒரு சிறப்பு. மணல் வீடு கடடலாம் வா
  2. ஆயிரம் கதை சொல்லும் அகதி நிலை !
  3. உள்ளி பச்சையாக போடும் போது வயிற்றுக்கு தீங்கு வராதா ?
  4. தாய் ஒரு சுமை தாங்கி.
  5. ரத்தம் குறைவானவர்கள் ( ஹீமோகுளோபின் ) ஈரல் சமைத்து உண்டால் பயன் கிடைக்கும்.
  6. நியமான வாழ்வியல் எது ?நன்றாக கிரகித்து அசல் எது நகல் ( நசல்) எது? இது எல்லாம் சாத்தியமா என்று கேள்வி கேட்க தெரிந்த கழுதை வயதிலும் நாடகங்கள் நீலப்பட ங்கள் ஹீல்ஸ் (REELS) இவைகளில் காட்டப்படும் அனைத்தும்நியமான வாழ்வியல் தான் என்று நம்பி அதே போல் வாழ முற்பட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் நாங்களே திண்டாடும்போது ......எதுவுமே தெரியாத அனுபவமே இல்லாத குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால்அவர்களின் மனதில் நியமான வாழ்வியல் என்பது எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றி தீயவர்கள் நல்லவர்கள் யாரானாலும் தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் விலை உயர்ந்த பொருட்களில் இருந்து எல்லாவற்றையும் உடைத்து சேதப்படுத்தலாம் எத்தனை நூறு பேரை சுட்டால் என்ன வாகனங்களினால் நெரி த்தால் என்ன? தனக்கு எதுவுமே ஆவதில்லை.அப்படி ஏதாவது நிகழ்ந்தாலும் நானே பலசாலி எழுந்து திரும்பவும் அவர்களை தாக்கி வெற்றி பெறுவேன். இப்படி பலபல எண்ணங்களை அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுவதால் அவர்களின் இந்த விளையாட்டுகள் தான் நிஜமான உண்மை வாழ்வியல் என அவர்கள் மனதில் உறுதியாகிறது. இந்த கொடூர மனநிலையை பாடசாலையில் விளையாடும் நேரங்களில் தனக்கு முன்னால் ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி தனித்தனியாக விளையாடி கொண்டு இருக்கும் சிறுவர்களிடம் காண்கிறேன். இதற்கு காரணம் சேர்ந்துவிளையாடும் போது எதிரில் உள்ளவர் கட்டளைகளை ஏற்க மறுக்கிறார்கள் அல்லது வெற்றியாளர் ஆகிறார் என்பது ஏற்றுக் கொள்ள மறுக்கும் மன நிலை தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அவர்களின் அருகில் போய் "ஏன் தனியாக விளையாடுகிறாய் வா" எல்லோருடனும் சேர்ந்து விளையாடுவோம் என்று கேட்டால் தள்ளு தள்ளு இவர்களை சுட்டு கொண்டு இருக்கிறேன் என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்லுகிறார்கள். இவ்வளவுக்கும் இவர்கள் எட்டுவயதை இன்னும் எட்டி பிடிக்காதவர்கள். இந்த சிறுவர்களின் மனதில் பாலியல் சம்பந்தமான எண்ணங்களும் மிகவும் ஒருகொடூரமான கற்பனையில்உலா வர தொடங்கி விட்டது.என்பதும் மிகவும் ஒரு கசப்பான செய்தி.இவர்களின் எதிர் காலத்தைஒரு கணம் சிந்தித்தால் பதட்டத்தில் உடல் நடுங்குகிறது.காரணம் வளர்ந்து வரும் காலங்களில் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் இவர்கள்தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் எதுவும் செய்வார்கள்.உயிரையும் எடுப்பார்கள். ஆறு வயது சிறுவன் தன் பள்ளிஆசிரியரை சுட்டு கொலை செய்ததில் இருந்து இளம் சமூகம் செய்யும் கொடூர நிகழ்வுகளை மட்டும் தான் தினமும் காதால் கேட்க தொடங்கி விட்டோம். இப்படியான விளையாட்டுகளை அதிக பணம் செலவு செய்து வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் விளையாட்டுக்களில் பார்ப்பதற்கும் நிஜத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை சொல்லி கொடுக்க மறந்து விடுகிறார்கள். அதனால் முதலில் பெரியவர்கள்தங்களின் முகமூடிகளையும் மாஜ கண்ணாடிகளையும் கழட்டி வைக்காத வரை ஒன்றும் அறியாத குழந்தைகள் வாழ்வியல் பயங்கர பாதாளத்தை நோக்கி மட்டுமே செல்லப்போகிறது.... நன்றி முகநூல்
      • 1
      • Thanks
  7. அது "சைனா காரனுக்கு செய்த வடை போல ."...இவங்கள் மாறி தண்டம் கடட சொல்லியிருப்பார்கள். 😃
  8. தை பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கமே தமிழினத்துக்கு தை பிறந்து ஒரு வழி பிறக்கட்டும்
  9. யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி ! 5 பக்கங்கள் தாண்டி பல் வேறு அலசல்களுடன் வெற்றி நடை போடுகிற்து. 🏆
  10. மோகன் நிர்வாகத்திலிருந்து சற்று ஒதுங்கிய பின் பொறுப்புக்கள் (நியானி இணையவன் நிழலி நுணாவிலான் ) கொடுத்த பின் , யார் விருப்ப புள்ளி இடடாலும் some body react a post என்று தான் வருகிறது கிடட தடட ஒரு வருடகாலமாக. * நீங்கள் அடிக்கடி வராதபடியால் தெரியவில்லை.
  11. விலங்குகள் இணை பிரிவதில்லை . விவாக ரத்து செய்வதில்லை .😃
  12. கந்தையா அண்ணாவின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
  13. பிஞ்சிலே பழுத்தது . எப்படி லோட் ..பண்ணிய துப்பாக்கி கிடைத்தது? வீடடார் முழு கொலைகாரர்களாக இருப்பார் கள் போல இருக்கு. .வேர்ல்ட் ரெகார்ட் தம்பி. நல்லா வருவாய் .
  14. என்னைப்போல செய்ய சொல்ல உங்களைப்போலவே செய்து இருக்கீங்களே....😊
  15. இவாவுக்கு ஒழுங்காக சொல்லத்தெரியல்லை 😄
  16. இன்று ஒரே ஒரு பச்சை தான் போட முடிகிறது. யாராவ்து பச்சை கடன் தாருங்களேன் நாளைக்கு தரலாம் ? சிறீ ...அத்தனைக்கும் பச்சைபோடத்தான் ஆசை ஆனால் முடிந்துவிட்ட்து என்று சொல்கிறதே 😀
  17. raging ....பகிடி வதை ராகிங் தனி மனித ஒழுக்கத்தை மீறும் போது, பாலியல் வசைபாடல்கள் இடம்பெறும்போது ,பகிடி எல்லையைக் கடக்கும் போது அது கண்டிக்க படவேண்டிய வன் செயல் ஆகிறது.
  18. மிகவும் பயனுள்ள சிந்திக்க வேண்டிய பதிவு . நாம் வாழ்க்கையை வகுத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு சிரமம் இருக்காது . இயந்திர உலகம் எல்லோரும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகள் அவர்களது வேலைக்கு மத்தியில் வயதானவர்களை கவனிப்பது சிரமம். , தங்கள் குழந்தைகளைபராமரிப்பது , தங்கள் வேலைக்கு ஓடுவது என்று இயந்திரமாகவே மாறிவிடடார்கள் . எனவே மற்ற்வர்களுக்கு பாரமாய் இராது இயன்றவரை இயங்கி வாழ்தலே சிறந்தது. இந்த சிந்தனையை யாழ்களத்துக்கு எடுத்துவந்த உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்
  19. யாழ் கள உறவுகள் யாவருக்கும் மகிழ்வான நலமான செல்வ வளமான புத்தாண்டு அமைய இறையருள் வேண்டுகிறேன்.
  20. கடந்து வந்த பாதையினை நினைத்து பார்க்கிறேன். வழக்கம் போலவே மிக ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் வருடம் 2022 ஆரம்பித்திருந்தது . கொரோனாவின் தாக்கமும் நாட்டில் இருந்தது . சித்திரை யில் சற்று தணிந்து ....மெல்லமெல்ல மறைய தொடங்கியது. முக கவசம் சற்று விலகியது இருப்பினும் சிலர் தற்பாதுகாப்புக்காக அணியத்தொடங்கினர் . வாழ்க்கை தன போக்கில் சென்றது . வீட்டுக் காரர் பென்சனியர் ஆனார். அவரது பொழுது பேரப்பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி செல்வதும் வருவது ஆக, .மாலை வேளை செல்லப்பிராணியுடனும் பேரப்பிள்ளை களுடனும் சைக்கிள் ஒடடமும் உலாத்துமாக இருந்தது. ஆவணியில் என் மூழங்ககாலுக்கான சத்திர சிகிச்சை திகதி நிர்ணயம் செய்யப்பட்டு நல்லபடியாக முடிந்தது. நானும் வலிகள் பல கடந்து ...மீண்டு தற்போது நலமாயிருக்கிறேன். அன்போடு என் கணவர் கவனித்து கொண்டார். தற்போது சமையலுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று ...சமையலறையில் செல்ல சண்டைகளுடன் பொழுது அமைதியாக போகிறது. அதிக நேரம் யாழ் களத்தில் ....கணனியில் செல்கிறது. இது வரை காத்த இறை வனுக்கு நன்றி சொல்லி இன்னுமொரு வருடத்தை தரயிருக்கும் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி கூறுகிறேன். குறிப்பு: கள உறவுகளும் இதை தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.
      • 3
      • Like
  21. வருட ஆரம்பத்திலிருந்து சித்திரை வரை கொரோனவை ஒத்த நோயின் தாக்கம் மக்களிடையே பரவும். சிறார்கள் தொலைபேசி கணணி விளையாட்டுகளுக்கு அடிமையாகி கண் பார்வையை மேம்படுத்த கண்ணாடி அணிவர். கண் வைத்தியர்களுக்கான தேவை அதிகரிக்கும். போதைப்பழக்கம் மிகவும் மோசமாகி படிப்பாளிகள் கூட அடிமையாவர். இதனால் பெண்கள் சீரழிக்கப்படுவது அதிகமாகும் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும். உணவுப்பஞ்சம் ஏற்படும் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுவர்.கொலை கொள்ளை களவு போன்ற வன் செயல்கள் அதிகரிக்கும். கால நிலைமாற்றத்தால் வெள்ளம் கடும் வரடசி என மாறுபட்டு மக்கள் அவதிப்படுவர். விளைநிலங்கள் இராசயன உரம் பாவிப்பதால் மாசுபடும். உணவில் அதிகம் நஞ்சுத்தன்மை கலக்கும். எவவகையிலும் பணமே உலகை ஆளும். மனிதபிமானம் , இரக்கம் அன்பு காதல் என்பன போலியாகும். பிள்ளைகள் பெற்றவர் சொல் க்கு கட்டுப்பட மாட்ட்ர்கள். அழிவின் பாதைக்கு மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள். கடவுளின் கருணை இவ்வுலகை காத்திடும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.